பி.வரதராஜன்,தனக்கு குமுதம் பப்ளிகேஷன்ஸ் லிமிடெட்டில் வானளாவிய அதிகாரம் இருக்கிறது,நான் நினைத்தால் எதுவும் செய்ய முடியும் என்பதை சும்மனாச்சும் ஊருக்கு நிலைநிறுத்துவதற்காக தான்தோன்றித்தனமாகவும் முட்டாள்தனமாகவும் பல தடாலடி முடிவுகளை எடுக்கிறார் என்பதை ஏற்கனவே எழுதியிருந்தோம்.
ரோகிணி
அதன் படி இந்த வாரம் குமுதம் ஆஹா எப்.எம்.மில் இருந்து ரோகிணி என்பவரை நீக்கியுள்ளனர்.இவர் செய்த மாபெரும் தவறு என்ன தெரியுமா?
சென்ற வாரம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள குமுதம் அலுவலகத்திற்கு குமுதம் நிறுவனரின் மனைவியும் தற்பொழுதைய மேலாண் இயக்குனருமான கோதை ஆச்சியும் அவரது மகன் டாக்டர் ஜவஹர் பழனியப்பனும் வந்தனர்.
இவர்கள் வருகையை முன் கூட்டியே அறிந்த பி.வரதராஜன்(சன் ஆப் பார்த்தசாரதி) லிப்டை இயங்காமல் நிறுத்தி வைத்து விட்டார்.ஆட்களை ஏற்பாடு செய்து ஏணிப்படி முழுவதும் தண்ணீரையும் கொட்டி வைத்து விட்டார்.டாக்டர் முன் கூட்டியே வந்ததால் அவர் நடந்தே மாடிக்குச் சென்று விட்டார்.
நடக்கவே சிரமப்படும் 85 வயதான கோதை ஆச்சி தாமதமாக வந்ததால் ஏறுவதற்கு தடுமாறி தயங்கியபடி ஏறாமல் நின்று விட்டார்.அந்த சமயத்தில் ஆஹா எப்.எம்.மின் ஊழியர்கள் ரோகிணி அங்கு தற்செயலாக வந்துள்ளார்.அவரிடம் கோதை ஆச்சி,”லிப்ட் வேலை செய்யலை.ஏணிப்படி முழுவதும் தண்ணீராக வேறு இருக்கிறது,அதனால் என்னால் மேலே ஏற முடியவில்லை.படி ஏறுவதற்கு கொஞ்சம் உதவி செய்ய முடியுமா?என்று தயக்கத்துடன் கேட்டுள்ளார்.
ரோகிணியோ நாம் பணியாற்றும் நிறுவனத்தில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் இந்த நிறுவனத்தை உருவாக்கியவரின் மனைவி கோதை ஆச்சி,நாம் இப்பொழுது நின்று கொண்டிருக்கும் கட்டிடத்தைக் கட்டியவரின் மனைவி.அதோடு மட்டுமல்லாது மிகவும் வயதான 85 வயது முதியவர்.இவருக்கு உதவி செய்வதில் என்ன தப்பு என்ற நல்லெண்ணத்தில் அவரைக் கைத்தாங்கலாக மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.அதுதான் அவரின் வேலைக்கு உலை வைக்கப் போகிறது என்பது தெரியாமல்.
இவர் கோதை ஆச்சியை மாடிக்கு அழைத்துச் செல்வதை கேமரா மூலம் மாடியில் உள்ள தனது அறையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பி.வரதராஜன் ஆத்திரத்தில் கெட்ட வார்த்தையை உதிர்த்தபடியே கடுப்பானாராம்.அதன்பின் தனது எச்.ஆர்.ஐ அழைத்தாராம்.உடனே பறந்து வந்தார் பிரியங்கா.(நீங்கள் நினைக்கும் அதே,அதே பிரியங்கா தான்)
சிறிது நேரத்தில் ரோகிணிக்கு வேலை நீக்க உத்தரவு டைப் செய்யப்பட்டு கையில் கொடுக்கப் பட்டதாம்.அதைப் படித்த ,மனிதநேயமற்ற இங்கே வேலை பார்க்குறதுக்குப் பதிலா வீட்டில் சும்மா இருக்கலாம் என்று சிரித்துக் கொண்டே கிளம்பி விட்டாராம்.
ரோகிணி
ரோகிணிக்கு ஒரு சல்யூட்
பொதுவாக வரதராஜன் எப்பொழுதுமே மனிதாபிமானமற்றவராகவும் தொழிலாளர் விரோதியாகவுமே இருந்துள்ளார்.அதனால் தான் வயதான மூதாட்டிக்குச் செய்த சிறு உதவியைக்கூட அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.அதனால் தான் இந்த வேலை நீக்க உத்தரவை வழங்கியுள்ளார்.
.இந்த சம்பவத்துக்குப் பின் கோதை ஆச்சி கடந்த இரண்டு நாட்களாக அலுவலகம் வந்த பொழுது காக்கை குருவியைத் தவிர ஏணிப்படி பக்கம் ஒருவர் கூட ஒரு மணி நேரத்திற்கு எட்டிப் பார்க்க வில்லையாம்.
தினசரி ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறையிலிருந்து அடிக்கடி டீ குடிக்க வெளியே செல்பவர்கள்,சிகரெட் பிடிக்க வெளியே செல்பவர்கள் உட்பட யாரும் ஒரு மணி நேரம் பல்லைக் கடித்துக் கொண்டு இருக்கையை விட்டு எழுவதில்லையாம்.
நாம் வெளியே வந்தால் கோதை ஆச்சிக்கு வணக்கம் தெரிவிக்க வேண்டும்,அல்லது அவருக்கு உதவி செய்ய வேண்டும்,இதனை கேமராவில் பார்க்கும் வரதராஜன் உடனே நம்மை வேலையில் இருந்து நீக்கி விடுவார் என்ற அதிகபட்ச பயம் தான் காரணமாம்.இதில் விதிவிலக்கான பத்திரிக்கையாளர்கள் யாரும் அங்கு இல்லை.
நாட்டில் நடக்கும் ஊழல்,முறைகேடு,அதிகார துஷ்பிரயோகம்,அத்துமீறல்,அநியாயம் என்பவற்றை எல்லாம் தட்டிக் கேட்கும் கதாநாயகர்கள் என்பது போன்ற பிம்பத்துடன் பொதுவெளியில் வலம் வரும் பத்திரிக்கையாளர்கள் நிஜத்தில் இப்படித்தான் இருக்கிறார்கள்.
குமுதம் ஊழியர்களின் செயலுக்காக அவர்களைத் திட்டுவதா அல்லது அவர்கள் நிலையை நினைத்து வருத்தப் படுவதா தெரியவில்லை.
3 comments:
நாட்டில் நடக்கும் ஊழல்,முறைகேடு,அதிகார துஷ்பிரயோகம்,அத்துமீறல்,அநியாயம் என்பவற்றை எல்லாம் தட்டிக் கேட்கும் கதாநாயகர்கள் என்பது போன்ற பிம்பத்துடன் பொதுவெளியில் வலம் வரும் பத்திரிக்கையாளர்கள் நிஜத்தில் இப்படித்தான் இருக்கிறார்கள்.
ரொஹினி போட்டோ கொடுத்த கென்னடி , மற்றும் கணேஷ் போட்டோகிரபர்களுக்கு நன்றி.. மேலும் பிரியங்கா,வரதராஜன் கைது போட்டோ,, இப்படி அனைத்து புகைபடங்களையும் வழங்கி கலககுரலுக்கு அதாரத்துடன் உதவி செய்ததற்கு,,,,,,,,,,,,,,,,,
தயவுசெய்து திரு வரதராஜன் அவர்களை அப்படி சொல்லாதீர்கள், அவர் எப்படிபட்டவரோ ஆனால் எத்தனை உடல் ஊனமுற்றவர்களை ஆதரித்து வேலை வழங்கி உதவியுள்ளார். இரண்டு கண் தெரியாத ஒரு பெண், அவருக்கு ஆ ஹா எஃப் எம் ல் வேலை வழங்கியுள்ளார், அது போல நிறைய ஆட்களுக்கு உதவி செய்துள்ளார்..
Post a Comment