சுதீர்
வேட்டைபெருமாள்
தனக்கு எதிராய் இருப்பார்கள் என்று சந்தேகிப்பவர்களையும்,என்னிடம் அதிகாரம் இருக்கிறது.இதை வைத்து உன்னை என்ன செய்கிறேன் பார் என்ற தலைக்கனத்திலும் திமிருடனும் தான் தோன்றித்தனமாகவும் பல முடிவுகளை பி.வரதராசன் எடுத்து வருகிறார்.இதனால் தான் திறமை இருப்பவர்களும் சுயமரியாதைக்காரர்களும் அங்கு வேலையில் நிம்மதியாக இருக்க முடிவது இல்லை.
ஆகவே தான் இலக்கியமா?கிலோ என்ன விலை?எந்தக் கடையில் கிடைக்கும்?என்று கேட்பவர்கள் எல்லாம் குழும ஆசிரியர் என்ற கோதாவில் குமுதம் குழுமத்தில் இருந்து வெளிவரும் இலக்கியப் பத்திரிக்கைக்கு ஆலோசனையும்,அறிவுரையும் சொல்கிற கொடுமை எல்லாம் நடக்கிறது.
இப்படித் தொடர்ச்சியாக அழிச்சாட்டியம் நடக்கும் இடத்தில் சென்ற வாரம் நடந்த அட்டூழியங்கள் இது.
குமுதம் வார இதழின் இணை ஆசிரியராகவும், 3 இதழ்களுக்கு ஒரு முறை குமுதம் இதழின் பொறுப்பாசிரியராக இருந்து குமுதத்தைத் தயாரிக்கும் பொறுப்பில் இருந்தவருமான திரு.ரஞ்சன் அவர்கள் தனக்கு எதிராக இருப்பதாக கருதிய பி.வரதராசனும் அவரை அண்டிப்பிழைக்கும் கும்பலும் ரஞ்சன் அவர்களை பழிவாங்கும் நோக்கத்துடனும் வன்மத்துடனும் திடீரென்று வேலை இல்லாத பப்ளிகேஷனுக்கு மாற்றியுள்ளார்கள்.
ரிப்போர்ட்டரில் பணியாற்றி வந்த வேட்டைபெருமாள் என்பவரை பப்ளிகேஷனுக்கு மாற்றியுள்ளார்கள்.ஆள் இல்லாத டீக்கடையில் டீ ஆத்துவதைப் போல வேலையில்லாத இவர்களைப் பணியில் அமர்த்தியுள்ளனர்.
அதைப் போல சுதீர் ,ரவிஷங்கர் ராமனாதன் இவர்கள் இருவரும் குமுதம் பத்திரிக்கையில் சீனியர் கரஸ்பாண்டண்ட்களாக நீண்டகாலம் பணியாற்றுபவர்கள்.குமுதம் இதழ் தயாரிக்கும் இடத்தில் இருப்பவர்கள். இதில் சுதீர் நாயர் பி.வரதராஜன்,டாக்டர் ஜவஹர் பழனியப்பன் இருவருக்கும் பொதுவானவராகத் தன்னைக் காட்டிக் கொள்பவர்.
இவர்கள் இருவரையும் கடந்த வாரம் திடீரென்று அழைத்த பி.வரதராஜன் நீங்கள் இருவரும் இனிமேல் குமுதம் ரிப்போர்ட்டரில் பணியாற்றுங்கள் என்று உத்தரவிட்டுள்ளார்.இதன் பின் அவர்கள் கடந்த சனியன்று உலகமகா அறிவாளியும் குழும ஆசிரியருமான(முடியல)கோசல்ராமைச் சந்தித்துள்ளனர்.சந்தித்து விட்டு வெளிவந்தபின் நம்ம நேரம்,ஒன்ணாம் தேதி சம்பளம் வாங்குற கொடுமைக்கு இவன மாதிரி அறிவாளிகள் கிட்ட எல்லாம் வேலை பார்க்க வேண்டியதிருக்கு என்று தலையில் அடித்துக் கொண்டார்களாம்.
அதைப்போல திரு.வி.சந்திரசேகரனை மும்பை அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்துள்ளார்களாம்.இத்தனைக்கும் அங்கு அலுவலகமே இல்லையாம்.
(சிறிது காலம் முன்பு வரை இவர் வரதராஜனின் அதி தீவிர விசுவாசி.இப்பொழுது என்ன பஞ்சாயத்து என்று தெரியவில்லை)
இவனுங்க திருந்தவே மாட்டாய்ங்க போல !!
No comments:
Post a Comment