Wednesday 25 April 2012

நக்கீரன்,ஜூனியர் விகடன்,குமுதம் ரிப்போர்ட்டர்-பெயிலான வாத்தியாரு பெஞ்சு மேல ஏறு...!



புலனாய்வு இதழ்களை விமர்சனம் செய்யும் நமது புதிய பகுதி இது.

அன்றாட நாளிதழ்களைத் தாண்டி புதிய செய்திகளையும் புலனாய்வு செய்திகளையும்,விறுவிறு பின்னணிகளையும் தாங்கித் தருகிறார்கள் என்ற நம்பிக்கையில் காசு கொடுத்து புலனாய்வு இதழ்களை வாங்கும் வாசகனை மூடன் என்று நம்பி தங்கள் விருப்பத்திற்கு ஏற்பவும்,விருப்பு வெறுப்புக்கு ஏற்பவும் செய்தி வெளியிடுகிறார்கள் புலனாய்வு புடலங்காய் இதழ்கள்.அதனை சுட்டிக் காட்ட வேண்டியதும் நல்லவற்றைப் பாராட்ட வேண்டியதும் விமர்சனம் செய்வதும் நமது கடமை.
ஆகவே வாரம் ஒரு முறை புலனாய்வுவுவுவு இதழ்களை தோலை உரித்து தோரணம் கட்ட முடிவு செய்துள்ளோம்.

இனி ரெடி ஸ்டார்ட்...

இந்த மூன்று இதழ்களும் 23—4-2012 திங்கள் மாலைக்குள் இறுதி செய்யப்பட்டு அச்சுக்குச் சென்றுள்ளது.அதனை மனதில் வைத்து இந்தச் செய்திக் கட்டுரையைப் படியுங்கள்.

குமுதம் ரிப்போர்ட்டர்.


துரை பிரச்சனை,சேலம் பிரச்சனையைத் தொடர்ந்து மூன்றாவது இதழாக திமுக உட்கட்சி பிரச்சனையை அட்டைப் படக் கட்டுரையாகத் தாங்கி வந்துள்ளது.வழக்கம் போல் ஸ்டாலின் ஆதரவுச் செய்திகளும் யூகச்செய்திகளும் இதில் அதிகம் இடம் பெற்றுள்ளது.

இன்னொரு அட்டைப்படச் செய்தியாக தமிழ்நாடு,நெல்லையைச் சேர்ந்த சத்தீஸ்கர் மாவட்ட ஆட்சியரை மாவோயிஸ்டுகள் கடத்தியது இடம்பெற்றுள்ளது.இதனை திருநெல்வேலி செய்தியாளர் அ.துரைசாமி எழுதியுள்ளார். திங்களன்று காலை தினத்தந்தியில் வந்த செய்தியை வெட்டி ஒட்டி இடத்தை நிரப்பியிருக்கிறார்கள்.இதனை எந்த நாட்டில் இருந்தும் யாரும் செய்ய முடியும்.(அன்றைய தினத்தந்தியில் மிக நன்றாக கவர் செய்திருந்தார்கள்) மாவட்ட ஆட்சியரின் பேஸ்புக் பதிவு  தொடர்பாக மனுஷ்யபுத்திரன் என்பவரின் பதிவு தொடர்பற்று நிற்கிறது. புதிதாக ஒரு தகவலும் இல்லை. இதற்கு திருநெல்வேலியிலிருந்து புடலங்காய் ரிப்போர்ட்டர் எதற்கு?

இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை விசிட் தொடர்பாக இரா.முருகேசன் எடுத்துள்ள சுரேஷ் பிரேமசந்திரன் நேர்காணல்,ராணுவ வீரர் சுட்டுக் கொலை செய்த தில்சன் வழக்குத் தீர்ப்பு,மதுரை பொருளாளர் மிசா பாண்டியன் நேர்காணல் போன்றவை பரவாயில்லை ரகம்.

அக்னி சாட்சியில் அப்துல் கலாமின் அரசியல் ஆலோசகர் வி.பொன்ராஜ் என்பவர் எழுதிய என் பார்வை என் கோணம் பதிவாகியுள்ளது.பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகமான (DRDO) வில் நடைபெறும் ஊழலையும் .அதில் சொல்லியிருந்தால் நன்றாய் இருந்திருக்கும்.பரவாயில்லை போகட்டும்.
எம்.ஜி.ஆர்.இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமாருக்கு ஆதரவாக அவரது பெரிய படத்துடன் சாத்தூராரைச் சமாளிக்க மும்மூர்த்திகள் என்ற பதிவு எழுதப்பட்டுள்ளது.எழுதியவர் பெயர் இல்லை.ரிப்போர்ட்டர் டீம் என்ற பெயரில் ஒளிந்து கொண்டு மேட்டர் வந்துள்ளது.ஆட்சி மேலிடத்தின் கடைக்கண் பார்வைக்காக எழுதியிருப்பார்கள் என நினைக்கத் தோன்றுகிறது.டெஸ்க்கில் உட்கார்ந்து கொண்டே 5 நிமிடத்தில் செய்தி எழுத எதற்கு டீம் என்று தெரியவில்லை...?

                                               
                                                 உள்பக்க செய்தி
அதே ரிப்போர்ட்டர் கடைசி பக்கத்தில் உதயகுமாரின் முழுப்பக்க விளம்பரமும் வந்துள்ளது.இந்தச் செய்திக்கும் அதற்கும் தொடர்பு இருக்கிறது என்றோ இந்தக் கையில விளம்பரம் அந்தக்கையில் மேட்டர் என்றோ,ஆகவே இது பெய்டு மேட்டர் என்றோ நீங்களாகக் ”கற்பனை” செய்து கொண்டால் அதற்கு எங்களால் தடை விதிக்க முடியாது.

                                          கடைசிப்பக்க விளம்பரம்

மொத்தத்தில் இந்த இதழ் ரிப்போர்ட்டர் வழக்கம் போல தான்.பெரிய முன்னேற்றமோ,பின்னடைவோ இல்லை.

நக்கீரன் 




மிரட்டலுக்குப் பயந்து ரஜினி அழுதாரா? என்று அட்டையில் கவர்ச்சிப் பூச்சுடன் வியாபாரத்தை தொடங்கியுள்ளது. சென்ற வாரம் ஜூனியர் விகடன் இதே பிரச்சனையை வைத்துக் கல்லா கட்டிய பிறகு தாமதமாக இதனைக் கையில் எடுத்திருக்கிறது. ஆனால் வழக்கம் போல் உள்ளே ஒன்றும் இல்லை. ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தின் நஷ்டம் குறித்த ஊரறிந்த செய்தி இரண்டு பத்தி மட்டும் தான். ஜுனியர் விகடன் பேட்டியில் சுப்ரமணியம் சொன்னதுக்கு மறுப்புச் சொல்லும் விதமாக ரஜினியை மிரட்டவில்லை,ரஜினி அழவில்லை என்று இன்னொருவரின் மறுப்பை வாங்கி வெளியிட்டு அதனை அட்டையில் வைத்து கனஜோராக விற்பனையை  நடத்தியுள்ளது.

சொன்னா நம்ப மாட்டீங்க என்னும் அரசியல் கிசுகிசு பகுதியில் அனைத்துக் கட்சிகள் பற்றியும் சில புரணிகள். எப்பொழுதுமே அதிர்ந்தும் பேசாத தயாளு அம்மாள் இப்பொழுது அழகிரிக்கு ஆதரவாக கருணாநிதியைத் திட்டித் தீர்த்தார் என்று மற்ற இதழ்களில் வந்த செய்தியை இதில் புலனாய்ந்து கூடுதலாக எழுதியிருப்பார்கள் என்று எதிர்பார்த்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

மு.க.ஸ்டாலின் இண்டெலக்சுவல் ரசிகர் மன்றத் தலைவரும் எழுத்தாளருமான சோலை தனது கட்டுரையில் வழக்கத்தை விடவும் அதிகம் போற்றிப் புகழ்ந்து எழுதியுள்ளார்.துதிபாடல் விண்ணைப் பிளக்கிறது.போதாக்குறைக்கு இவர்களின் நாறிப்போன வாரிசுச் சண்டைக்கு கிருஷ்ண தேவராயர் காலத்து உதாரணம் வேறு.

அடுத்ததாக உதயநிதியின் திரைப்பட வளர்ச்சி(!) பிடிக்காமல் அவரது திரைப்படத்தின் திருட்டு சிடியை அதிமுக,அழகிரி திமுக,மதுரையில் வழங்குகின்றார்கள் என்று இரண்டு பக்க மேட்டரும் வந்துள்ளது.முடியல...சென்னை மண்டலத்தில் கிண்டி டூ தாம்பரம் என்ற பிரகாஷின் ராத்திரி ரவுண்ட் அப் பரவாயில்லை ரகம்.

சட்டிஸ்கரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர் கடத்தல் செய்தியும் நிஜமான ரோஜா படக்கதை என்ற பெயரில் இடம் பெற்றுள்ளது.வழக்கம் போல் திங்களன்று வெளிவந்த நாளிதழ் செய்தியை வைத்து மேட்டர் முடிக்கப் பட்டுள்ளது.ஆனாலும் சட்டீஸ்கரில் இருக்கும் நமது சோர்ஸ்களை விசாரித்து எழுதினோம் என்ற பில்ட் அப்பை படித்தால் எப்ப தான் இவர்கள் திருந்துவார்களோ! என்ற எண்ணம் நமக்கு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.


நக்கீரனில் பாராட்டும்படியான செய்தி எதுவும் இல்லையா? என்று உங்களின் கேள்விக்கு ஒரு ஆறுதல் செய்தி இருக்கிறது.

போர்க்குற்றங்கள் குறித்து இந்தியக்குழு எதுவும் பேசவில்லை என்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூரின் ஒப்புதல் நேர்காணலைப் பாராட்டலாம்.இதனை தலைமை நிருபர் ஆர்.இளைய செல்வன் செய்துள்ளார்.

மற்றபடி என்னத்தச் சொல்ல..?


ஜூனியர் விகடன்.



வழக்கம் போல திமுக தான் கவர் ஸ்டோரி.வாரிசுச் சண்டையை சுவாரசியமாகவும் படிக்கும் படியும் எழுதியிருக்கிறார்கள்.கொஞ்சம் பொறுமையா இருப்பா என்று ஸ்டாலினிடம் கருணாநிதி சொன்னதை அருகில் இருந்து கேட்டு எழுதிய கழுகாரின் புலனாய்ய்ய்வு நம்மைப் புல்லரிக்க வைக்கிறது.காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் பற்றிய செய்தியையும் தங்களுக்குத் தெரிந்த அளவில் பதிவு செய்திருக்கிறார்கள்.

கழுகார் பதில்கள் வழக்கம் போல் ரசிக்கும் படியாகவும் காட்டமாகவும் இருக்கின்றன. ஆ.ராசாவுக்கு திமுக அமைச்சர் பதவி கொடுத்தது,காங்கிரஸ் கொடுத்ததா?என்று சிதம்பரத்துக்கு எதிர்க் கேள்வி எழுப்பியுள்ளார் கழுகார்.


ஆனால் சாதியக்கட்டுமானங்கள் வலுவாய் இருந்த 58 ஆண்டுகளுக்கு முன்பே பழைய காங்கிரஸ் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பரமேசுவரன் தமிழ்நாட்டில் அறநிலையத்துறை,போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவி வகித்துள்ளார்.

                                                 மரியாதைக்குரிய கக்கன்
உள்துறை,மின்துறை அமைச்சராக கக்கன் பதவி வகித்துள்ளார்.இது இப்பொழுது கூட யாராலும் நடைமுறைப்படுத்த முடியாதது ஏன் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதது.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் கக்கன் இருந்துள்ளார்.சோனியா காங்கிரசின் மீதுள்ள கடுப்பில் பழைய வரலாற்றை கழுகார் மறந்து விட்டார் போலும். இது சோனியா காங்கிரஸ் அது காமராஜர் காலத்து காங்கிரஸ் என்று விளக்கமும் சொல்லலாம்.
கோவில்பட்டி அருகில் உள்ள தென்காசி தொகுதியைச் சேர்ந்த அருணாசலம் கூட சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அமைச்சராகப் பதவி வகித்தது கழுகாருக்குத் தெரியாமல் இருந்தது மிகப்பெரிய ஆச்சரியம்.

வாங்க கலப்பட டீ சாப்பிடலாம் என்று உடல்நல அக்கறையுடன் எழுதப்பட்ட டி.எல்.சஞ்சீவிகுமாரின் செய்திப்பதிவு நன்றாக இருக்கிறது.பாராட்டுவோம்.ஆனால் ஒரு செய்திப்பிழையும் இருக்கிறது.40 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பி.எச்.டேனியல் எழுதிய நூலின் பெயர் எரியும் பனிக்காடு என்று இருக்கிறது.பி.எச்.டேனியல் எழுதிய நூலின் பெயர் Red tea அதனைத் தமிழில் எரியும் பனிக்காடு என்று மொழி பெயர்த்தவர் இரா.முருகவேள்.அதில் தான் மேற்குறிப்பிட்ட வாசகம் சரியாக வருகிறது.சஞ்சீவிகுமார் மொழிபெயர்ப்பு நூலினையே படித்திருக்க வாய்ப்புண்டு.இதனைச் சரி செய்திருக்கலாம்.ஆனாலும் பரவாயில்லை.



எஸ்.ராமகிருஷ்ணன் தனது பதிவில் இந்தவாரம் தமிழ்நாட்டில் நடைபெற்ற உண்ணாவிரதத்தை நன்கு பதிவு செய்துள்ளார்.ராமஜெயம் கொலை பற்றிய பாலோ அப்,சீமான் நேர்காணல்,விஜயகாந்த் சுற்றுப்பயண செய்தி ஆகியவை பரவாயில்லை.

ந.வினோத்குமாரின்,உயிரைக் கொடுத்த பத்திரிகையாளர் என்ற பாகிஸ்தான் செய்தி ஆசிரியர் பற்றிய மரணப்பதிவு இதுவரை எந்த தமிழ்ப் பத்திரிகையிலும் வெளிவரவில்லை.பாராட்டுக்கள்.அதனைப் போல முல்லை பெரியாறு பிரச்னையில் துளைகளை முட விடாமல் சதி என்ற செய்தியும் எதிலும் வரவில்லை.

மாவோயிஸ்டுகள் கடத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த சுக்மா மாவட்ட ஆட்சியர் பற்றிய பதிவினை 3 நிருபர்கள் இணைந்து எழுதியுள்ளனர்.பிற இதழ்களுக்குப் பரவாயில்லை.விரட்டும் ஜெ.கிடைக்காத ஜாமீன் என்ற ராவணன்,திவாகரன்,நடராஜன் மீதான வழக்கு அலசலும் ஓ.கே.ஆனால்ம் ராணுவ வீரர் தில்சன் கொலை வழக்குத் தீர்ப்பு பற்றிய பதிவு இல்லாதது ஏமாற்றமே..!

மொத்தத்தில் சிற்சில குறைகள் இருந்தாலும் ஜுனியர் விகடனை 10 ரூபாய் காசு கொடுத்து வாங்கியதற்கு வருத்தப் பட வேண்டியதில்லை.



Monday 23 April 2012

சென்னை பிரஸ் கிளப்பில் போதை வெறியாட்டம்...! பீர் பாட்டில் வீச்சு..! உயிர்தப்பிய புகைப்படக்காரர்!




சென்னை ஏப்ரல் 24,
சென்னை பிரஸ் கிளப்பில் கடந்த சனிக்கிழமை இரவு நேரத்தில் போதையில் இருந்த டுபாக்கூர் நிருபர் பத்திரிகை புகைப்படக்காரர் ஒருவர் மீது பீர் பாட்டிலை வீசிய சம்பவம்  பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பையும் அசிங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து உண்மையான பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசப்படுவதாவது...
சென்னையின் பரபரப்பான சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் அமைந்துள்ளது பிரஸ் கிளப்.இதில் பத்திரிகையாளர்கள்,மற்றும் பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் கட்டப்பஞ்சாயத்து பேர்வழிகள்,தரகு வேலை பார்ப்பவர்கள்,பிளாக்மெயில் பேர்வழிகள் மற்றும் கார்ப்பரேட் மெம்பர்ஷிப் என்ற பெயரில் பணமுதலைகள் ஆகியோர் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர்.
இந்த அமைப்புக்கு கடந்த 10 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறவில்லை.மேலும் முறையாக பொதுக்குழுவோ,செயற்குழுவோ கூட்டப்படவில்லை.கணக்கு வழக்குகளும் பராமரிக்கப்படவில்லை.மேலும் தற்பொழுது சிலர் பிரஸ் கிளப்பை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து நிர்வாகம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
உழைக்கும் பத்திரிகையாளர்கள் இங்கு வருவது அபூர்வம்.பெரும்பாலும் பிழைக்கும் பத்திரிகையாளர்கள் இங்கு முகாமிட்டுள்ளனர். சென்னை பிரஸ் கிளப்பிற்கு அரசினால் ஒதுக்கப்பட்ட இடத்தில் அரசின் முறைப்படியான   சிஎம்டிஏ அனுமதி பெறாமல் கல்வி வியாபாரி ஒருவரின் துணையுடன் கட்டிடமும் கட்டப்பட்டது.




அவ்வாறு கட்டப்பட்ட கட்டிடத்தில் நிர்வாகம் செய்யும் கும்பலின் ஆசியுடன் தினசரி பகல், இரவு பாராமல் எப்பொழுதும் ஒரு கும்பல் சீட்டாடிக் கொண்டும், கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டும் அக்கப்போர் பேசிக் கொண்டும் மது அருந்திக் கொண்டும் இருப்பது வழக்கம். கடந்த சனிக்கிழமை இரவு 10 மணி அளவில் நடைபெற்ற சமப்வம் தான் இப்பொழுது பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. 
கடந்த சனிக்கிழமை 21-04-2012 அன்று காலை 12 மணியில் இருந்து ஒரு கும்பல் வழக்கம் போல் மது அருந்தியபடி சீட்டாடிக் கொண்டு இருந்திருக்கிறது.இதில் நிலாவேந்தன்,அசதுல்லா,ராஜேந்திரன் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் எந்த ஒரு நிறுவனத்திலும் பணிபுரியாமல்,எந்த ஒரு பத்திரிகைக்கும் செய்தி கொடுக்காமல் தஙக்ளைச் செய்தியாளர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் கும்பலைச் சேர்ந்த இவர்கள்.இவர்கள் பத்திரிகையாளர்களுக்கான அரசு அங்கீகார அடையாள அட்டையும் பெற்றிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
                                                       துகளக் ரமேஷ் 
இதில் காலையில் இருந்து போதையின் உச்சத்தில் இருந்த ராஜேந்திரன் வருபவர்களிடம் எல்லாம் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.துகளக் ரமேஷ் என்பவரிடமும் என்னய்யா உன்ன போட்றவா,நம்ம எதுக்கும் பயப்படாத ஆளு என்று வீரவசனம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.இவரது பேச்சை சட்டை செய்யாத ரமேஷ் அந்த இடத்தைக் காலி செய்தார்.
                        ராஜேந்திரன்
இந்த சூழ்நிலையில் இரவு சுமார் 10 மணியளவில் பத்திரிகை புகைப்படக்காரர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பகுதியில்,ராஜேந்திரன் பீர்பாட்டிலை எடுத்து வீசியுள்ளார்.
இதனால் ஆத்திரமுற்ற அங்கிருந்த புகைப்படக்காரர்கள் ஒன்று சேர்ந்து ராஜேந்திரனை ரவுண்டு கட்டினர்.ஆனால் அசதுல்லா அதனைத் தடுத்து இவர் நம்மாளு தான் பிரச்சனை வேண்டாம் விட்ருங்க என்று சமரசம் செய்துள்ளார்.

                 ராஜேந்திரன்,நிலாவேந்தன்,அசதுல்லா
ஆனாலும் புகைப்படக்காரர்கள் எரிச்சலாகி மவனே நீ எங்க கிட்டயிருந்து தப்பிக்க முடியாது உனக்கு இருக்குடா கச்சேரி என்று ரவுத்திரமாக இருக்கின்றனர்.
அதன்பிறகு மன்னிப்பு சமாதானம் என அடுத்த ரவுண்டு ஆரம்பமாகி நள்ளிரவு வரை தொடர்ந்துள்ளது கச்சேரி.
சென்னை பிரஸ் கிளப்பில் குடிபோதையில் தகராறு-பத்திரிகையாளருக்கு கத்திக்குத்து-பிரஸ் கிளம் இழுத்து மூடப்பட்டது என்று தினத்தந்தியில் எட்டு காலச் செய்தி வருவதற்கு முன் கொஞ்சமேனும் சூடு சொரணையுள்ள  பத்திரிகையாளர்கள் ஒன்று சேர்ந்து மோசடி கும்பல்,கட்டப்பஞ்சாயத்து கும்பல்,வெட்டிக் கும்பலிடமிருந்து கிளப்பை மீட்க வேண்டும்.
                                                                    பெத்தபெருமாள்
இந்தக் கும்பலை வைத்து நிர்வாகம் செய்யும் பெத்தபெருமாள் தான் முடிவு செய்ய வேண்டும்.
பத்திரிகையாளர்களே சிந்திப்பீர் ..!ஞாநி ஓட்டம் என்று அறிக்கை கொடுத்த அடிமுட்டாளை என்ன செய்வது...?
ஞாநி சொன்னதில் தவறு எதும் இருக்கிறதா..?



Thursday 19 April 2012

குமுதம் முதலாளியின் தோழமையும் கங்காணியின் தொழிலாளர் விரோதப்போக்கும்...





இது ஊடகங்களில் குமுதம் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் கோதை ஆச்சி அவர்கள் 17-04-2012 அன்றும் மறுநாளும் கொடுத்த விளம்பரம்.
வரது அறிவிப்பு இப்படி தோழமையுடன் இருக்க அதற்கு முரணாக வரதராஜன் செயல்பாடு இருக்கிறது.அவராலும் அவரது குடும்பத்தினராலும் நிறுவனத்தில் ஒருகாலத்தில் வேலைக்குச் சேர்க்கப்பட்டு இன்று முற்றாக மாறிப்போயிருக்கும் திரு.வரதராஜனின் ஆளுகையின் கீழ் குமுதம் வந்த பிறகு எத்தனை பேரை வேலையை விட்டு நீக்கியிருக்கிறார்,எத்தனை பேரை பழி வாங்கியிருக்கிறார்,எத்தனை பேரைப் பந்தாடியிருக்கிறார் என்ற பட்டியலைத் தயாரித்தோம்.
ந்தப்பட்டியல் முழுமையானதல்ல.ஆனால் முதல் கட்டம் என்று சொல்லலாம்.ஒவ்வொருவருக்குப் பின்னும் நிறைய சம்பவங்கள் இருக்கிறது.சிலவற்றை மட்டும் பார்ப்போம்.அடுத்த பட்டியல் விரைவில்..
இதோ குமுதத்தில் பழி வாங்கப்பட்டவர்களின் பட்டியல.
1)திருவேங்கிமலை சரவணன்,
2)வி.சந்திரசேகர்.
ந்த இருவரும் பணியில் இப்பொழுது இல்லை.


                                        திருவேங்கிமலை சரவணன்
இதில் வேடிக்கை என்ன தெரியுமா?உலோகநாயகி திருவேங்கிமலை சரவணன் மீது காவல்துறையில் புகார் கொடுக்கும் பொழுது உடன் சென்று வந்தவர் வி.சந்திரசேகர்.வரதராஜனுக்கு அவ்வளவு ஆதரவாக நின்றவர்.
இவரை வரதராஜனுக்குப் பிடிக்கவில்லை.மும்பைக்குப் பந்தாடி விட்டார்.சரி ஒரு பஞ்சாயத்து பேசிப்பார்ப்போம் என்று வி.சி.லீவு போட்டு வரதுவிடம் பேசிப்பார்த்தார்.ஆனால் படியவில்லை.சரி இனி நமக்கு இது ஆகாது என வேலையை ராஜினாமா செய்து விட்டுப் போய்விட்டார்.
பேசிப்படியாதது இந்தக் கதை என்றால் காலில் விழுந்து பேரம் படிந்த கதை ஒன்று இருக்கிறது.
அது பிரியா கல்யாணராமன் என்ற பிரகாஷ் கதை தான்.வீதிக்கு வராத அதைப் பார்ப்போம்.


                                             பிரியா கல்யாணராமன்
பிரியா கல்யாணராமன் இந்தப்பக்கமும் அப்புறம் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் தரப்பிடமும் பேசிக் கொண்டிருக்கிறார் என்கிற தகவல் வரதராஜனுக்குத் தெரிந்தது. (பிரியா கல்யாணராமன் டபுள் கேம் விளையாடும் பேர்வழி என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.!அவர் இந்தப்பக்கம் பேசியது,இன்னும் கொஞ்சநாளில் எப்படியும் உண்மையான முதலாளியிடம் வந்து விடும்.அதனால் யாருக்கும் தெரியாம பேசிக்கிட்டிருப்போம் என முடிவு செய்தார்.) இது தெரிந்தவுடன் அவரை வழிக்குக் கொண்டுவர வேண்டுமென்றே டெல்லிக்குத் தூக்கியடித்தார்.
பிரியா கல்யாணராமன் எப்படி என்றால் காரியம் ஆக வேண்டுமென்றால் பாவாடையும் கட்டிக் கொள்வார்,பேண்ட்டும் போட்டுக் கொள்வார். தேவைப்பட்டால் கோவணமும் கட்டிக் கொள்வார்.அதுவும் காணாது என்றால் அதற்கும் கீழேயும் இறங்குவார்.இப்படிப்பட்ட நபர் டெல்லிக்கு எப்படி போவார்..?
ரதராஜனைப் பார்த்தார்.எப்படியோ சமரசம் செய்து கொண்டார்.எல்லாம் சரி.அவர் என்ன கட்டிக் கொண்டார் என்று கேட்கின்றீர்களா..?
(இதையெல்லாமா வாய்விட்டுக் கேட்பது..அநாகரிகமாக இல்லை.உங்களுக்கு.)
3)ரஞ்சன்
அதைப்போல குமுதம் இணை ஆசிரியரான திறமைசாலி ரஞ்சனை பப்ளிகேஷனுக்கு மாற்றினார்.இவர் நிறம் மாறத் தெரியாத மனுஷர்.காலம் வரும்டா மவனே..பொறு என்று நினைத்தபடியே அங்கு அமர்ந்துள்ளார்.
4)ரவிஷங்கர்,5)சுதீர் 6)மணிவண்ணன்


                                                ரவிஷங்கர்
                                                சுதீர்
அதே போல சினிமா செய்தியாளர் ரவிஷங்கர்,சுதிர் ஆகியோரை பழி வாங்கும் விதமாக குமுதம் ரிப்போர்ட்டருக்கு மாற்றினார்.அதே போல இன்னொரு செய்தியாளர் மணிவண்ணன் சேலத்திற்கு மாற்றப்பட்டார்.இப்பொழுது நேற்றிலிருந்து (20-04-2012)ரவிஷங்கரும் வேலையை விட்டு ராஜினாமா செய்து விட்டார் என்று தெரிகிறது.(இது குறித்த தனிப்பதிவு விரைவில்)
குமுதம் கதை இது தான்.
இனி குமுதம் ரிப்போர்ட்டரில் பழி வாங்கப்பட்டவர்கள்.
7)இளங்கோவன்-ஆசிரியர்
8)எம்.பாண்டியராஜன்-பொறுப்பாசிரியர்
9)எஸ்.மோகன் (மோகனரூபன்)உதவி ஆசிரியர்
10)வல்லம் மகேசு- உதவி ஆசிரியர்
11)ப்ரியா தம்பி- உதவி ஆசிரியர்
12)வெற்றிவேல்-நிருபர்
13)மீடியா ராமு-போட்டோ கிராபர்
14)சுரேஷ்- போட்டோ கிராபர்
இவர்கள் அனைவரும் வரதராஜனாலும் கோசல்ராமினாலும் ரிப்போர்ட்டரில் பழி வாங்கப்பட்டவர்கள்,நெருக்கடி கொடுத்து வீட்டிற்கு விரட்டப்பட்டவர்கள்.


இதில் ஆசிரியர் இளங்கோவன்,இணை ஆசிரியர் எம்.பாண்டியராஜன் கதை ஏற்கனவே அறிந்தது தான்.மற்றவர்கள் கதையைப் பார்ப்போம்.
உதவி ஆசிரியர் மோகன் விஷய ஞானம் உள்ளவர்-முன்பு தினகரனில் இவர் உதவி ஆசிரியராய் இருந்த பொழுது அங்கு ரிப்போர்ட்டராய் வேலைபார்த்தவர் கோசல்ராம் .நிலைமை மாறுது.இருவரும் இரு வேறு காலகட்டங்களில் ரிப்போர்ட்டரில் பணியில் சேருகின்றனர்.கோசல்ராம் லாட்டரி அடித்தது போல் குருமா ஆசிரியராக பணியில் மிகப்பெரிய ஏற்றம் பெறுகிறார். மோகனிடம் தன் பவரைக் காட்ட நினைக்கிறார்.
மோகனின்  மாத சம்பள செக்கை வாங்கி வைத்துக் கொண்டு,என் அறைக்கு வந்து வாங்கிட்டுப் போங்க என்கிறார்.நான் எதுக்கு இவரிடம் போய் சம்பளம் வாங்க வேண்டும் என்று சுயமரியாதையுடன் மறுத்து விட்டார் மோகன்.அந்தப்பக்கம் இவர் எனக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என வரதராஜனிடமும் வத்தி வைக்கிறார்.
இவ்வாறு தொடர்ச்சியாக 3 மாதமும் சம்பள செக்கை கோசல்ராம் வாங்கி வைத்து விட்டார்.தன்னிடம் மோகன் வந்து வாங்கிச் செல்வார் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.
ஆனால் இறுதி வரை மோகன் சுயமரியாதையுடன் செக்கினை வாங்கவில்லை இந்த பேப்பர் திருடனிடமிருந்து.இன்னும் செக்குகள் வரவில்லை.அங்கே இன்னும் கொஞ்ச நஞ்ச யோக்கியர்கள் யாராவது இருந்தால் அவர் சம்பளச் செக்கினை கொடுக்கச் சொல்லுங்கப்பா...


ப்ரியா தம்பியின் கதை வேறு மாதிரி.


                                              ப்ரியாதம்பி
இவரைக் கோசல்ராம் இண்டர்வியூ செய்து வேலைக்குச் சேர்த்தார். அலுவலகத்தில் தனது பணி தொடர்பாக வரது கோஷ்டியைச் சேர்ந்தவர்,சேராதவர் என்று பாரபட்சம் இல்லாமல் மற்றவர்களிடம் பேசினார்.இது கோசலுக்கு ஆகவில்லை.எனது அலுவலகத்தில் எனக்குப் பிடிக்காதவர்களிடம் பேசுவதா என்று கொந்தளித்தார்.ஆனால் பப்பு வேகவில்லை.அதன்பின் அவரை ஓரங்கட்டும் வேலை ஆரம்பித்தது.
அந்தசமயம் ரிப்போர்ட்டருக்கு பொறுப்பாசிரியராக வெளங்காத வெங்கிட்டு வந்தார்.இவர் முன்பு இங்கிருந்து ஒடிப்போனவர் தான்.அவர் ப்ரியாவை முற்றிலும் கட்டம் கட்டத் திட்டம் தீட்டினார்.
உங்க வேலை மேல எனக்குத் திருப்தி இல்லை என்றார்.
ஏன்யா என்னை வேலைக்கு எடுத்த வரதராஜனும் கோசலும் முட்டாளா..?நீ தான் அறிவாளியா..?உனக்குத் திருப்தி இல்லைன்னா நான் என்ன செய்யணும் என்று நேருக்கு நேராக கோபத்துடன் கேள்வி கேட்டார்..!
அது வரதாபாய்க்கு போனது.பொறுங்க அவசரப்படாதீங்க என்று சொல்லியபடியே ப்ரியாதம்பி பணியில் நீடிக்க முடியாத படிக்கு நெருக்கடி கொடுத்தார்.
போயா நீயும் உன் உப்புமா வேலையும் என்று தூக்கித் தூரப்போட்டு துணிச்சலோடு கிளம்பிப் போய்விட்டார்.
நிருபர் வெற்றிவேல் உருப்படியான நிறைய விஷயங்களைப் பதிவு செய்தவர்.திறமைசாலிகளைக் கண்டால் கோசலுக்குப் பிடிக்காது என்பதை உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.எல்லாம் இந்த தாழ்வு மனப்பான்மை படுத்தும் பாடு.
அதை மனதில் வைத்து என்ன சார் செய்தி கொடுக்குறீங்க குப்பை என்று கரித்துக் கொண்டே இருந்தார்.ஒரு கட்டத்தில் நீ தான்யா குப்பை என்று சொல்லிவிட்டு தனக்கு ஏற்கனவே விருப்பமுள்ள திரைத்துறைக்குப் போய் விட்டார்.
இது தவிர வேட்டைபெருமாள்.உதவி ஆசிரியர்.
திறமைசாலியான இவரையும் கோசலுக்கு பிடிக்காமல் போனது.தன்னை மதிக்க வில்லை என்னும் தாழ்வு மனப்பான்மையும் இதுக்குக் காரணம்.வரதராஜன் கவனத்திற்கு இது கொண்டு செல்லப்பட்டது. தாமத வருகை எனக்காரணம் காட்டி மாதம் 3 ஆயிரம் ருபாயையும் பிடித்தம் செய்து விட்டார்கள். வழக்கம் போல் பப்ளிகேஷனுக்கு மாற்றப்பட்டார்.


                                                  வேட்டைபெருமாள்
                                                  விஜயானந்த்
இவரைப்போன்று தான் நிருபர் விஜயானந்தின் பழி வாங்கலும்.
அலுவலக ரகசியங்களை வெளியில் பரப்புகிறார் என்று சென்னையில் இருந்து ராமநாதபுரத்திற்கு மாற்றப்பட்டார்.
அடுத்து சீனியர் ரிப்போர்ட்டர் ஏகலைவன்.




2007 வரைக்கும் ரிப்போர்ட்டரில் இருந்தார்.நிறைய பிரேக் ஸ்டோரி கொடுத்தவர்.இவரையும் கோசலுக்குப் பிடிக்காது.பிறகு குமுதம் வெப் டிவிக்கு மாற்றினார்கள்.அங்கு செய்திப்பிரிவையும் பார்த்துக் கொண்டார்.இவர் தலைமையில் வெப் டிவி நல்ல வளர்ச்சி கண்டது.அந்த சமயத்தில் டாக்டர் ஜவஹர் பழனியப்பனைச் சந்தித்தார்.அப்புறம் என்ன..?
பப்ளிகேஷனுக்கு பந்தாட்டம் தான்.இவரும் இவர்களின் கொட்டம் அடங்கும் நாள் அதிவிரைவில் என அமைதியாக இருக்கிறார்.
குமுதம் ஹெல்த்
15)ஆந்தைகுமார்.
இவரது பழி வாங்கல் குறித்து ஏற்கனவே தனிப்பதிவு ஒன்றினை எழுதியுள்ளோம்.
http://kalakakkural.blogspot.in/2012/01/110.html
குமுதம் சிநேகிதி
16)வளர்மதி-செய்தியாளர்
17)எழில்செல்வி
18)லெனின்ஷா
19)உமாசக்தி-உதவி ஆசிரியர்
20)இந்துலேகா-  


                                             வளர்மதி


இவர்களும் சிறுசிறு காரணங்களைக் காட்டில் வெளியே துரத்தப்பட்டவர்கள்.நெருக்கடி கொடுத்து அனுப்பப் பட்டவர்கள்.மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டு அனுப்பப் பட்டவர்கள்.


மற்ற பிரிவுகளில் வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களை இன்னொரு பதிவில் பார்ப்போம்.ஆனால் ஒரு சிலரைத் தவிர யாரும் நீதிமன்றம் செல்லவில்லை.மற்றவர்கள் எல்லோரும் அமைதியாய் இருக்கிறார்கள்.அல்லது எதிர்க்காமல் விலகிப்போய் விட்டார்கள்.இதுவும் வரதாபாய்க்கு துணிச்சலாய்ப்போனது.தொடர்ச்சியாய் தனது லீலைகளை அரங்கேற்றி வருகிறார்.இவ்வாறு பணி நீக்கம்,பந்தாட்டம் என்பதையெல்லாம் தாண்டி இதில் மிக வேதனையான விஷயமும் ஒன்று உள்ளது.


                                        தொழிலாளர் விரோதி...


வ்வாறு நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஒரு சிலருக்கு கடைசி மாதச் சம்பளத்தைக் கூட முறையாகக் கொடுப்பது இல்லை.ஊழியர்கள் சம்பளம் வாங்க வரும் பொழுது கேட்டிற்கு வெளியே வாசலிலேயே,சாலை ஓரத்தில் பிளாட்பாரத்தில் நிறுத்தப் படுவார்கள்.இவர்கள் ஒவ்வொருவரும் 5 வருடம் 10 வருடம் வேலை பார்த்தவர்கள்.
இவர்கள் சாலையில் நிற்கும் அவலத்தை சர்க்யூட் கேமரா மூலம் தனது அறையில் அமர்ந்தபடி வரதராஜன் ரசிப்பார்.பின்பு இன்னொரு நாள் வரச்சொல்லி திருப்பி அனுப்பி விடுவார்.பல நாள் அலைச்சலுக்குப் பின் தான் சம்பளம் கிடைக்கும்.
சென்ற வாரம் இந்த மாதிரி பழி வாங்கப்பட்ட நண்பர் ஒருவரை அலுவலகம் அருகில் உள்ள தேநீர்க்கடையில் நம்முடன் வந்த இன்னொருவருடன் தற்செயலாகச் சந்தித்தோம்.
எல்லாம் சரி.எப்படியோ போகட்டும்.உழைத்த ஊழியர்களின் சம்பளத்தையாவது கவுரமாகக் கொடுத்து அனுப்பக் கூடாதா என்று நம்முடன் வந்த நண்பர் அவரிடம் கேட்டார்.


அதற்கு அவர் சொன்ன பதில்.அட போங்க சார். நான் இந்த நிறுவனத்துக்கு உழைத்தேன் என்று மாதம் 23 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு செட்டியார் சொத்தினையே ஆட்டையைப் போடத்துடிக்கிறார் வரதுக்குட்டி.அவர் எப்படி எங்களை மதிப்பார்..?
அப்பனுக்கும் தனக்கும் வேலை கொடுத்துக் கூடவே அபரிதமான சம்பளத்தையும் கொடுத்து அதுக்கும் மேலே கோடி கோடியாய் அள்ளியும் கொடுத்த செட்டியார் குடும்பத்தையே உள்ளே விடாமல் ரோட்டில் நிக்க வைக்கிறான்.
இதில் நாங்கள்லாம் எந்த மூலைக்கு என்று ஆற்றாமையில் புலம்பினார்.


இந்த நிலை என்று மாறும்...? 


பாரதி சொன்னது போல் உழைக்கும் பத்திரிகையாளர்கள் எல்லாம் ரவுத்திரம் பழகு..!



Thursday 12 April 2012

கிருஷ்ணா டாவின்சியின் நினைவேந்தல் கூட்டம்..!



குமுதம் பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவராகப் பணியாற்றிய கிருஷ்ணா டாவின்சி உடல் நலக்குறைவால் கடந்த 04-04-2012 வியாழன் அன்று மரணம் அடைந்தார்.

அவரது நினைவினைப் போற்றும் வகையில் நினைவேந்தல் கூட்டம் வரும் ஞாயிறு(ஏப்ரல் 15,2012) மாலை 5.30 மணியளவில் லயோலா கல்லூரி,லாரன்ஸ் சுந்தரம் அரங்கில் நடைபெறுகிறது.

பத்திரிகையாள நண்பர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுங்கள்..!

தொடர்புக்கு-திரைப்பட இயக்குனர் ராம் :பேசி:96772-02004

Wednesday 11 April 2012

புதிய தலைமுறையின் ”நேக்கு-நோக்கு” தமிழன் விருதுகள்..!





அப்பாடா ஒரு வழியாக புதிய தலைமுறை தொலைக்காட்சி தமிழன் விருதுகளை அறிவித்து விட்டது.

எத்தனை அமர்க்களம்...!எத்தனை ஆர்ப்பாட்டம்..!எத்தனை விளம்பரங்கள்..

”பாழாய்ப்போன தமிழன் மீது இவர்களுக்கேன் திடீர் அக்கறை..?அவன் எப்படிப்போனால் இவர்களுக்கென்ன என்ன என்று நாம் யோசிக்கும் பொழுதே,அப்படியெல்லாம் தமிழன் மீது அக்கறையுடன் செயல்படும் ஆட்கள் தொலைக்காட்சியின் உயர்பொறுப்பில் இல்லையே” என்று மண்டை காய்ந்து கொண்டிருந்தோம்.

இந்தநிலையில் தான் புதிய தலைமுறை தமிழன் விருதுகளை அறிவித்துள்ளது. விருதுப் பட்டியல் இதோ:



சமூக சேவை: சாதனைத் தமிழர் - டாக்டர் சாந்தா

சமூக சேவை: நம்பிக்கை நட்சத்திரம் – முரளிதரன் (சேவாலயா தொண்டு நிறுவனம்)

விளையாட்டு: சாதனைத் தமிழர் - விஸ்வநாதன் ஆனந்த்

விளையாட்டு: நம்பிக்கை நட்சத்திரம் - காயத்ரி கோவிந்தராஜ் (தடகள வீராங்கனை);

இலக்கியம்: சாதனைத் தமிழர் – ஜெயகாந்தன்

இலக்கியம்: நம்பிக்கை நட்சத்திரம் - சு.வெங்கடேசன்;

அறிவியல்: சாதனைத் தமிழர் - எம்.எஸ்.சுவாமிநாதன்

அறிவியல்: நம்பிக்கை நட்சத்திரம் - ரேவதி (இயற்கை வேளாண்மை);

வணிகம்: சாதனைத்தமிழர் – வேணு சீனிவாசன்

வணிகம்: நம்பிக்கை நட்சத்திரம் - முருகானந்தன் (குடிசைத் தொழில்);

கலை: சாதனைத் தமிழர் - ஏ.ஆர்.ரஹ்மான்

கலை: நம்பிக்கை நட்சத்திரம் - சந்திரா (தப்பாட்ட கலைஞர்)







இந்த விருதுகளில் ஆயிரத்தெட்டு அபத்தங்கள் உள்ளது.அதில் நாம் சிலவற்றை மட்டும் எழுப்புகிறோம் இங்கு..

 

1)மக்கள் இந்த விருதினைத் தேர்ந்தெடுத்ததாகச் சொல்லுகின்றார்கள்.இது யாருக்குத் தெரியும்.?வழக்கமாக இது போன்ற விருது விளையாட்டில் என்ன நடக்கிறது என்று உங்களுக்குத் தெரியும்.

2)இந்த விருதில் வெற்றி பெற்றுள்ளவர்களில் 6 பேரில் 4 பேர் "அவாள்களாக" இருக்கிறார்கள்.நம்பிக்கை நட்சத்திரத்திலும் ஒருவர் இருக்கிறார்.

இதனை இப்படிப் பார்ப்போம்.இப்பொழுது இந்த விருதுப்பட்டியலில் உடையார் சாதியைச் சேர்ந்த 5 பேர் இடம் பெற்றிருந்தால் நாம் என்ன சொல்லியிருப்போம்?

இது தமிழன் விருதா இல்லை உடையார் சாதி விருதா?உடையாரைத் தவிர தமிழரில் வேறு யாரும் சாதனை செய்யவில்லையா?ஏன் இம்புட்டு வெறி?

விருது கொடுப்பவர் உடையார் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் சாதி வெறியால் தனது சாதியைச் சேர்ந்தவருக்கு பச்சமுத்து (பாரிவேந்தர்ன்னு சொல்லணுமா)கொடுத்து விட்டார் என்று காறித்துப்புவோமா இல்லையா?

இப்படி நான்கு பேர் நம்மைக் கேவலமாகவும் இழிவாகவும் பேசுவார்கள் என்பதை அறிந்து தான் தனது சாதிக்காக கட்சி நடத்தும் பச்சமுத்துவே தனது சாதிக்காரன் எவனுக்கும் விருது கொடுக்கவில்லை.விருது கொடுக்குமாறு தேர்வுக்கமிட்டிக்கு கண்ணசைவு கூட கொடுக்கவில்லை போலும்.

பொதுவாக லாப நோக்குள்ள ஊடக வியாபாரத்தில் இப்படி ஒரு ”முற்போக்கு” அல்லது ”நடுநிலை” தேவைப்படுகிறது.

ஆனால் பச்சமுத்துவிடம் இருக்கும் ”முற்போக்கு” அல்லது ”நடுநிலை”  தேர்வுக்கமிட்டிக்கு இல்லை.அது கடுமையான சாதி வெறியுடன் இயங்கியுள்ளது என்பதை தான் விருதுப்பட்டியல் சொல்கிறது.

3)அனைத்துத் துறைகளிலும் விருதினைக் கொடுத்தவர்கள் ஏன் சமூகத்தின் முக்கியமான ஊடகத்துறையில் கொடுக்கவில்லை?யாருக்குக் கொடுத்தாலும் மீதம் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து நம் டவுசரைக் கழட்டி விடுவார்கள் என்ற அர்த்தமுள்ள பயமா?

4)அனைத்து விருதிலும் அபத்தம் உள்ளது.எடுத்துக் காட்டாய் ஒரு அபத்தம் பற்றிச் சொல்ல விரும்புகிறோம்.

அறிவியல் பிரிவில் எம்.எஸ்.சுவாமிநாதன்(அதாங்க நம்ம மான்கொம்பு சாம்பசிவன் மகன் சுவாமிநாதன்) என்பவருக்கு சாதனைத் தமிழர் விருது கொடுக்கப்பட்டுள்ளது.எம்.எஸ்.சுவாமிநாதன் அறிவியலில் ஒரு பிரிவான விவசாயத்தைச் சேர்ந்தவர்.

சரி போய்த் தொலையட்டும்.

அவரது பாழாய்ப்போன அறிவியலால் எத்தனை லட்சம் விளைநிலங்கள் மலடாய்ப்போய் விட்டது என்பதையோ,எத்தனை லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து விட்டார்கள் என்பதையோ நாம் இங்கு சொல்லப் போவதில்லை.

ஏனென்றால் எம்.எஸ்.சுவாமிநாதனின் அறிவியல் நாட்டை தொலைதூரத்திற்கு முன்னேற்றி விட்டது என்பது தான் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் புடலங்காய் கொள்கையாக இருக்கலாம்.

அதனை சரி என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும் நம்பிக்கை நட்சத்திரமாக அவரது கொள்கை உடைய ஒருவரைத் தானே தேர்ந்தெடுக்க வேண்டும்?

ஆனால் அதே நேரம் இத்துறையில் இவர்கள் நம்பிக்கை நட்சத்திரமாக முன் வைத்துள்ள ரேவதி, எம்.எஸ்.சுவாமிநாதனின் கொள்கையை கடுமையாக விமர்சிப்பவர்,அதனை ஒழித்துக் கட்ட வேண்டும் என்னும் கொள்கை உடையவர் என்பதெல்லாம் விருதுக்கமிட்டி அறிவாளிகளுக்குத் தெரியாதா..?

இவ்வாறு எம்.எஸ்.சுவாமிநாதனுடன் முரண்பட்டிருக்கும் ரேவதி அவருக்கு அடுத்த நிலையில் எப்படி இடம்பெற முடியும்.?

ரேவதியின் தேர்வு சரியானதென்றால் மான்கொம்பு சாமிநாதன் மகன் சுவாமிநாதனுக்குப் பதில் ரேவதியின் குரு இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் தானே இடம் பெற்றிருக்க வேண்டும்?


                                         இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்

(கொசுறு-அப்படியானால் புதிய தலைமுறை சேனலில் அப்பப்ப பிட் மேட்டர் கொடுக்க மட்டும் தான் நம்மாழ்வாரா..?)

என்னமோ போடா மாதவா ஒன்னுமே புரியலை..!

5) சமூக சேவை: நம்பிக்கை நட்சத்திரம் – முரளிதரன்(சேவாலயா தொண்டு நிறுவனம்) என்பவருக்கும் விருது.சேவாலயா நிறுவனம் அப்பழுக்கற்ற ஒரு நிறுவனம் என்பது உங்களுக்கு நன்கு தெரியுமா?அதை உறுதிப் படுத்தி விட்டீர்களா?

5)ஜெயகாந்தன் விருது விஷயத்தில் நிறைய பஞ்சாயத்து இருக்கிறது.

தமிழ் ஒரு நீச பாஷை என்று சொல்லியவர் ஜெயகாந்தன்.அப்படியானால் சமஸ்கிருதத்தில் தான் நீ பேச வேண்டும் என்று கோவையில் விஜயா பதிப்பகம் ஏற்பாடு செய்த மேடையில் செருப்படி வாங்கப்போனவர்.தனனைத் தமிழன் என்றே ஒத்துக் கொள்ளாதவர்.

அவருக்கும் தமிழன் விருது. சரி போய்த் தொலையட்டும்.

அடுத்த பஞ்சாயத்து.

20 ஆண்டுகளுக்கு முன்னால்,பெண் எழுத்தாளர்கள் எல்லோரும் பத்திரிகை ஆசிரியர்களை ”அட்ஜஸ்ட்” செய்து தான் தொடர்கதை சிறுகதை எழுதுகிறார்கள் என்று உளறிக் கொட்டியவர் ஜெயகாந்தன்.

அதற்கு சிவசங்கரி,கீதாபென்னட்,இந்துமதி, போன்றோர் கண்டனக்குரல் எழுப்பியிருந்தனர்.

இப்பொழுது அதே சிவசங்கரி கையால்வாங்கியிருக்கிறார் ஜெயகாந்தன்.

என்ன கருமமோ? இலக்கிய வியாதிகள் லட்சணம் இப்படித்தான் போலும்.

6)இலக்கியத்தில் சாதனைத் தமிழர் லட்சணம் இப்படி இருக்க,நம்பிக்கை நட்சத்திரத்தின் வண்டவாளத்தைப் பார்ப்போம்.


வெங்கடேசன் சார்..சாகித்ய அகாடமி விருது கஷடப்பட்டு டெல்லியில ஆளப் பிடிச்சு வாங்குனீங்க.ஆனா இந்த விருது இலகுவா (இலக்கிய சொல்லாடல் சரியாப்பா..) பட் செலவில்லாம கிடைச்சுடுச்சு இல்லையா சார்.இப்ப சந்தோஷம் தானே..?

காப்பிக்”க்கோட்டம் புகழ் சு.வெங்கடேசனின் களவுக்கோட்டம் என்னும் ஆயிரம் பக்க நாவல் பலரிடம் திருடியும்,ஆங்கிலத்தில் இருந்து அடுத்தவர் உழைப்பில் மொழிபெயர்த்தும் கட்டப்பட்டது என்று ஊரே சிரிப்பாய்ச் சிரிக்கிறது.(மதுரையில் சிபிஎம் காரங்களே இவர் மீது செமக் காண்டுல இருக்காங்களாம்.)இவருக்குத் தான் நம்பிக்கை நட்சத்திரம் விருது என்றால் தமிழ் இலக்கியத்தின் வருங்காலத்தை நினைத்து வாயால் சிரிக்க முடியவில்லை.

7)அடுத்ததாக வேணு சீனிவாசன்

தேர்வுக்குழுவினரின் வாதப்படியே வைத்துக் கொண்டாலும் அரை நூற்றாண்டுகளுக்கு முன்னால் வேண்டுமானால் வேணு சீனிவாசன் (டிவிஎஸ் குழுமம்) மிகப்பெரிய நிர்வாகியாக இருந்திருக்கலாம்.ஆனால் இப்பொழுது காலம் கடந்து விட்டது பேராண்டி...இப்ப எத்தனையோ சாதனைத் தமிழர் புதுசு புதுசா வந்துட்டான்.

ஆனா நீ (யாரு நம்ம அம்பி சீனிதான்)இன்னும் மும்பைக்கு வேலை தேடி சென்னையிலிருந்து கிளம்பிப் போன பழைய கால நெனப்புலயே இருக்க பேராண்டி..!அதான் தேடிப்பிடிச்சு விருது கொடுத்துருக்க.

இது புதிய தலைமுறை விருதா..!முதிய தலைமுறை விருதா..!

8)விருதுப் பட்டியலில் நாங்கள் சினிமாவையோ,அரசியல் துறையையோ பரிசீலிக்கவில்லை என்று ஆயிரத்தெட்டு தடவை அறிவிப்பு வேறு.

ஆனால் சாதனைத் தமிழர் ஏ.ஆர்.ரஹ்மான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அவர் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர் தானே..!சினிமாப் பாட்டுக்குத் தானே இசையமைத்துள்ளார்.அவருக்கும் விருது.அப்புறம் எதுக்கு அறிவிப்பு?அது கிடக்கட்டும் குப்பையில.

இன்னும் இப்படி எத்தனையோ எழுதலாம்.உங்களின் எங்களின் பொன்னான நேரம் தான் வீணாகும்.

புதிய தலைமுறையின் விருதுகள் குறித்து ஒரே வார்த்தையில் சொன்னால்,குப்பை.

நாட்டில் செய்தி தொலைக்காட்சிகளுக்கு உருப்படியாய் எத்தனையோ வேலை இருக்க நமக்கு இந்த வேண்டாத வேலை எதுக்கு சீனி?(சீனிவாசன் தான் செய்திப்பிரிவுக்கு இயக்குனர்.)என்ன சொன்னாலும் நீ கேக்க மாட்டிக்கியே ..யார் உனக்கு இப்படி ஐடியா கொடுத்தது ராசா..?உன்ன எப்படித் திருத்தறதுன்னு தெரியலையேப்பா எங்களுக்கு..!



பொதுவாக விருதுகளின் லட்சணம்...!




(சாப்ளின் சார் இந்த விருது அநியாயத்தை நிறுத்தவே முடியாதா..?)


  • மெரிக்காவில் ஒருமுறை சார்லி சாப்ளின் போல வேடம் அணிந்தவர்களுக்கான போட்டி ந்டைபெற்றது.அதில் யாருக்கும் தெரியாமல் சார்லி சாப்ளினே கலந்து கொண்டார்.ஆனால் அவருக்குக் கிடைத்ததோ மூன்றாம் பரிசு தான்.
  • தமிழகத்தில் நடந்த ஒரு கவிதைப்போட்டியில் பாரதியார் கலந்து கொண்டார்.அதில் அவருக்கு கிடைத்தது இரண்டாம் பரிசு.அவர் எழுதிய கவிதை என்ன தெரியுமா? செந்தமிழ் நாடென்னும் போதினிலே...அந்தக் கவிதைப்போட்டியில் முதல் பரிசு வென்ற கவிஞர் யாரென்று இன்று வரை யாருக்கும் தெரியாது.

இதற்கு மேல் விருதுகளின் லட்சணத்தைச் சொல்லவும் வேண்டுமோ..?





Monday 9 April 2012

பிரியம்வதாவைப் பாராட்டுவோம்..!




                                                                   பிரியம்வதா

சென்னையில் இருக்கிற இடத்தில் இருந்து கொண்டு உலகத்திற்கே புலனாய்வு புடலங்காய் ஆய்வுகளை வாரி வழங்கி வரும் பத்திரிகையாளர்கள்(!) மத்தியில்,

பத்து கிலோ மீட்டர் தொலைவான இடத்திற்குக் கூட நேரில் சென்று செய்தி சேகரிக்காமல் செல்போனிலேயே செய்தி முழுவதையும் முடித்து விடும் ”அசகாய சூரர்கள்” உலவும் தமிழ்நாட்டு பத்திரிகை உலகில்(தமிழ்,ஆங்கிலம் இரண்டு பயபுள்ளைகளும் தான்)

சர்வதேச மனித உரிமையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களே செல்ல அச்சப்படும் போரால் நிர்மூலமாக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் வடக்கு மாகாணத்திற்கு தன் உயிரைப் பணயம் வைத்து நேரில் சென்று உண்மையான புலனாய்வு செய்தியை ஹெட்லைன்ஸ் டுடே ஆங்கில தொலைக்காட்சியின் I WITNESSED GENOCIDE: INSIDE  LANKA'S KILLING FIELDS நிகழ்ச்சி மூலம் வெளியுலகு அறியச் செய்தவர் அதன் முதன்மைச் செய்தியாளர் பிரியம்வதா.

இதற்காக 2012 ஆம் ஆண்டிற்கான அகில இந்திய அளவிலான செய்தித் தொலைக்காட்சி (சிறந்த புலனாய்வு செய்தி) விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவருடைய இந்தப் பணிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பத்திரிகையாளர்கள் எல்லாம் பாராட்டி அவருக்கு விழா எடுக்காட்டாலும் பரவாயில்லை..வாழ்த்தாவது சொல்லுங்கப்பா...

மின்னஞ்சல் முகவரி

priyamvatha.p@gmail.com



Sunday 8 April 2012

கிருஷ்ணா டாவின்சிக்கு அஞ்சலி..!




குமுதம் பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவராகப் பணியாற்றிய கிருஷ்ணா டாவின்சி உடல் நலக்குறைவால் கடந்த 04-04-2012 வியாழன் அன்று மரணம் அடைந்தார்.

பொழுதுபோக்குப் பத்திரிகையான குமுதத்தில் சமூக அக்கறையுள்ள எத்தனையோ விஷயங்களைப் பதிவு செய்ய முடியும் என்று நிரூபித்தவர்..!

புதிதாகத் துறைக்கு வரும் இளம் பத்திரிகையாளர்களைத் தன்னலம் கருதாது ஊக்குவித்தவர்...!

அலுவலகத்தில் சக பத்திரிகையாளர்களுடன் வேறுபாடுகள் கருதாமல் இனிமையாகப் பழகியவர்...!

தனது அரசியல் நிலைப்பாடுகள் தவறானவை என்று தெரிந்தால் வெளிப்படையாக அதனை மாற்றிக் கொள்ளவும் தயங்காதவர்.

அவரது மறைவுக்கு கலகக்குரல் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது....

Thursday 5 April 2012

கலாநிதியின் சாக்ஸுக்குள் குமுதம்? குடியேறப் பார்க்கும் குள்ளநரி..!



                                  ஹன்ஸ் ராஜ் சக்சேனா

மார்ச் மாதம் பதினைந்தாம் தேதி.குமுதம் அலுவலகத்தில் இருந்து ஊழியர்கள் அனைவரும் வெளியேறிய நேரம். அப்பொழுது ஜீன்ஸ், கட்டம் போட்ட சட்டையில் ஒரு வெள்ளை உருவம் உள்ளே நுழைந்தது. தமிழக மக்கள் அனைவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு வரை நன்கு பரிச்சயமான உருவம் அது.

. ‘ ஐயோ என்னை ஜெயில்ல கொல்ல பாக்குறாங்க’ என்று தொலைக்காட்சிகளில் கதறிய உருவம். இப்பொழுது நினைவுக்கு வருகிறதா?

அவர் தான் ஹன்ஸ் ராஜ் சக்சேனா.



கலாநிதி மாறனின் வலது, இடது கரம். சன் பிக்சர்ஸின் தலைமை அதிகாரி. ஐந்து வருடங்கள் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்தவர். அ.தி.மு.க. அரசால கைது செய்யப்பட்டு சிறையில் சில காலம் களி தின்றவர். வெளியில் வந்ததும் யார் கண்ணிலும் படாமல் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்.

அவருக்கும் ஆட்டையப் போட்ட வரதராஜனுக்கும் தான் ஆகாதே..!, குமுதம் ரிப்போர்ட்டரில் சக்சேனாவை கிழி கிழி என்று கிழித்து தொங்கவிட்டார்களே. ‘சொல்வதெல்லாம் உண்மை’ தொடரில் சக்சேனாவின் அந்தரங்க லீலைகளையெல்லாம் சொல்லி நாறடித்தார்களே, அவர் எப்படி குமுதம் அலுவலகத்தில் என்று அதிசயிக்காதீர்கள். இது அதிசயம் ஆனால் உண்மை.

இவரை அழைத்து வந்தவர் யார் தெரியுமா?

இந்த சக்சேனாவைப் பற்றி சொல்வதெல்லாம் உண்மை தொடரில் அசிங்கமாய் எழுதிய ‘ கட்ட பஞ்சாயத்து’ செய்தி ஆசிரியர் ஜான் வில்கின்ஸன்.

இரவு ஏழு மணிக்கு உள்ளே வந்த சக்சேனா வெளியே போகும்போது மணி ஒன்பது. வரதராஜன் அறையில் இரண்டு மணி நேரம் இருவரும் ’சதி” ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.

ந்த சந்திப்புக்கு ஒரு வாரம் முன்பு நடந்த இன்னொரு சம்பவத்தைப் பார்த்துவிடுவோம்.  

குமுதம் குழுமம் போதை, வாந்தி டூர் கிளம்புவதற்கு இரண்டு நாட்கள் முன் ஜான் வில்கின்சன் சார் ஒரு அதிரடி செய்தி கொண்டு வந்தார். 

அது சக்சேனா பேட்டி. அந்தப் பேட்டியில் சன் டி.வியையும் கலாநிதிமாறனையும் படு கேவலமாகத் திட்டியிருந்தார்

பரபரப்பான பேட்டி என்ற உற்சாகத்தில் வந்த ஜான் சாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பேட்டியை கோசல் ச்சார் நிறுத்த்தி விட்டார். ஆ.போ.வரதராஜனுக்கு தெரிந்துதான் பேட்டியெடுத்தேன் என்று மற்றவர்களிடம் புலம்பி பார்த்தார் ஜான் சார்.( செய்தி ஆசிரியர் ஜான் சாரும் குருமா ஆசிரியர் கோசல் ச்சாரும் நேரடியாக பேசிக் கொள்ளமாட்டார்கள். அத்தனை நட்பு). 

கோசல் ச்ச்ர்ர் ஓரே வரியில் சொல்லிவிட்டார். ‘எம்டி சொல்லித்தான் நிறுத்துறேன்’ என்று. 

இவர்கள் சண்டை இப்படியிருக்க வரதாபாயின் திட்டமோ வேறு மாதிரி இருந்தது. அதனால் சாக்சை அலுவலகத்துக்கு அழைத்து வரச் சொல்லி இரண்டு மணி நேர மந்திராலோசனை நடத்தியிருக்கிறார்.

                                         

                                           ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் சக்சேனா


அந்த மீட்டிங்கில் என்ன பேசினார்கள்? விஷயமறிந்தவர்கள் சொல்லும் தகவ்ல் இதுதான்.

இனியும் அதிக நாள் தனது ஆக்கிரமிப்பு நீடிக்க முடியாது எனவும் அதனால் குமுதத்தில் தற்போதுள்ள குழப்பமான சூழலில் கிட்டியது வரைக்கும் போதும் என்றும் நினைக்கிறார் வரதாபாய்.அது முடியாத பட்சத்தில் அதிலிருந்து தப்பிக்க நினைக்கிறார்.அதற்கு உரிய ஆலோசனைகளையும் மீள்வதற்கான வழிகளையும் புதிய “நண்பர்” கம் ஆலோசகர் சக்சேனாவுடன் பேசியிருக்கிறார்.

வேறு வழி தட்டுப்படவில்லையென்றால் குமுதத்தில் தனக்கிருக்கும் பங்குகளையும் அவர் விற்க முயற்சித்துள்ளதாகத் தெரிகிறது. (இவர் இப்படிச் செய்வாரா என்று நீங்கள் யோசிக்க வேண்டாம்.ஏற்கனவே ஒரு கட்டத்தில் கனிமொழிக்கு விற்க முயற்சித்தவர் தான் இவர்.)
அதற்குத்தான் சக்சேனாவுடன் வரதாபாயின் சந்திப்பு. சக்சேனாவோ அவரது ”நண்பர்களோ” குமுதம் பங்குகளை வாங்குவதாகத் திட்டமும் இருக்கிறது..

இந்த சக்சேனா பற்றி ஒரு பழைய சம்பவம்.



ல வருடங்களுக்கு முன்பு. சன் டிவி வளர்ந்து கொண்டிருந்த சமயம். வடக்கின் பிரம்மாண்ட சேனலான ஜீ தமிழில் கால் ஊன்ற விரும்பியது. அதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளை செய்யத் துவங்கியது. இது தெரிந்ததும் கலாநிதிமாறனுக்கு கலக்கம். அந்த சேனலுடன் போட்டி போடும் அளவுக்கு பண பலமோ தொழில் நுட்ப பலமோ அப்போது சன் டிவியியிடம் கிடையாது.

அப்போதும் கலாநிதி மாறனின் மிக நெருங்கிய நண்பனாய் சக்சேனா இருந்தார். இருவரும் கல்லூரி காலத்திலிருந்தே நண்பர்கள். ஜீ டிவி தமிழ்நாட்டில் நுழைய முடிவு செய்த அந்த சமயத்தில் ஒரு நாள் இருவரும் சன் டிவி வளாகத்தில் கட்டிப் புரண்டு சண்டை போட்டார்கள். இனிமேல் சன் டிவிக்குள்ளேயே நுழையாதே என்று கலாநிதி கத்தி சக்சேனாவை வெளியில் துரத்தியது கூட நடந்தது.

மனமுடைந்து போன சக்சேனாவை ஜீ இழுத்துக் கொண்டது. அவரது சன் டிவி அனுபவங்களை(கில்லாடித்தனமான..) உபயோகித்துக் கொள்ள பெரும் சம்பளம் கொடுத்து அவரைத் தலைமைச் செயல் அதிகாரியாக நியமித்தது.

சன் டிவியை வீழ்த்திக் காட்டுகிறேன்’ என்ற சவடாலுடன் பணியில் சேர்ந்தார் சக்சேனா. பாவம் சோத்துச் சட்டிக்குள் பெருச்சாளியை வைத்து விட்டோம் என்பது அப்பொழுது ஜீ.டிவிக்குத் தெரியாது.அது தெரியும் பொழுது எல்லாம் கை மீறிப்போயிருந்தது.

கடைசியில் ஜீ டிவி பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டு கையைச் சுட்டுக் கொண்டது. அதன் பிறகு ஜீ டிவி பல வருடங்கள் தமிழகத்துக்குள்ளேயே வர இயலாதபடி எல்லாவற்றையும் கன கச்சிதமாகச் செய்து விட்டு சன் டிவி ஜோதியில் மீண்டும் ஐக்கியமாகிக் கொண்டார் சக்சேனா.

கலாநிதியும் அவரும் ஜோடியாக போஸ் தந்து ஜீ டிவி நிர்வாகத்தை வெறுப்பேற்றினார்கள்.

ஆமை புகுந்த வீடும் சக்சேனா புகுந்த ஜீடிவியும் உருப்படலை என்று அப்பொழுதே ஊடக வட்டாரத்தில் கிசுகிசுத்தார்கள்.

இப்போதும் அதே நாடகம் மீண்டும் அரங்கேறுகிறது. கலாநிதிக்கு எதிராக சக்சேனாவைப் பேட்டி கொடுக்க வைத்து குமுதம் வளாகத்துக்குள் சக்சேனா என்னும் குள்ள நரியின் மூலம் உள்ளே நுழையத் திட்டமிடுகிறார்கள்.

இது வரதாபாய்க்குத் தெரியுமா தெரியாதா? என்பது நமக்குத் தெரியாது.

ஆனால் ஜாமீனில் இருக்கும் தன்னுடைய நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகும் சூழலை மட்டும் அவர் நன்கு உணர்ந்திருக்கிறார்.அதனால் குமுதத்தில் உள்ள தனது பிடியை முடிந்தமட்டிலும் காப்பாற்றுவது அல்லது யார் தலையிலாவது நல்லவிலைக்கு கட்டிவிட்டு கிட்டியது வரைக்கும் போதும் என்று கழன்று கொள்வதுதான் வரதாபாயின் தற்போதைய முடிவு. ( நம்பிக் கூட இருப்பவர்கள்,அவருக்கு ஜால்ரா தட்டுபவர்கள் தான் பாவம்) அதற்கு அவருக்கு உதவ இப்பொழுது ”புதிய ஆலோசகர் மற்றும் நண்பர்” சக்சேனா உள்ளே நுழைந்திருக்கிறார்.

இனி இந்த விஷயத்தில் நடப்பது அவ்வளவு நன்றாக இருக்காது என்பது மட்டும் நிச்சயம்.

ன்னும் சில வாரங்களில் பல பகீர் உண்மைகள் வெளிவரப் போகிறது.  அதுவரை இந்த நாடகங்களைப் பார்த்துக் கொண்டிருப்போம்.

அதுவரை அந்தப்பழமொழியை ஆராய்ந்து கொண்டிருங்கள்...

ஆமை புகுந்த வீடும்.....




Tuesday 3 April 2012

குட்டிச் சுவரு-ஊடகங்களின் வண்டவாளம் இந்த தண்டவாளத்தில்....




பொதுவாக வார, நாளிதழ்களில் நேரடியாகச் சொல்ல முடியாத செய்திகளை, சில இதழ்கள் கழுகார், வம்பானந்தா, பீட்டர் மாமா, டீக்கடை பெஞ்ச், அலெக்ஸ் பாண்டியன் போன்ற பெயர்களில் ஒளிந்து கொண்டு எழுதுகிறார்கள்.

ஆளுக்குத் தகுந்த மாதிரி சமயத்தில் கற்பனைகளையும் புரட்டுகளையும் அவிழ்த்தும் விடுகிறார்கள்.

இதே ஸ்டைலை நாமும் பின்பற்றி பத்திரிகை அலுவலகங்களில் நடக்கும் உள் விவகாரங்கள், பத்திரிகையாளர்கள் கூடும் இடங்களில் நடக்கும் சுவாரசியமான விஷயங்களைக் குட்டிச் சுவரு என்னும் தலைப்பிலான இந்தப் பகுதியில் சொல்ல முடிவுசெய்து இருக்கிறோம். ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் இந்தப் பகுதி வெளிவரப்போகிறது.

ஆனால் இதில் கற்பனையும் இல்லை புரட்டும் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும்.

மலைக்குறவரும், குறத்தியும் பேசுகிற பாணியில் இந்த மாதம் வந்துள்ளது.

இதற்கு செய்தி அனுப்புபவர்கள் அனுப்பலாம்....

இனி ரெடி ஸ்டார்ட்....

ன் மாமா, இந்த புதிய தலைமுறை சேனல்காரன் புதுசா டெய்லி பேப்பர் ஆரம்பிக்கப் போறானாம்.” இன்று”ன்னு பேராம்.’

அப்படியா கண்னு நெசந்தானா?’

‘ஆமாம் சாமியோவ். சென்னை,கோவை,மதுரை,திருச்சியில,நெல்லையில இருந்து வெளிவரப் போகுதாம்’

பேப்பர் 1 ரூபாயாம்.இப்பவே ஆள் எடுக்குறானாம்

‘இவனுக்கு டெய்லி செட் ஆகுமா ஜிக்கி?’

அதப்பத்தி உனக்கு ஏன் மாமா கவலை..?’

‘கேடி பிரதர்ஸ் ஏற்கனவே ஒடிக்கிட்டிருந்த தினகரனை வாங்கி நடத்துனதால தான் அது சக்சஸ் ஆச்சு.புதுசா தமிழ்நாட்டுல நாளிதழ் ஆரம்பிச்சா மார்க்கெட்ல நிக்கறது கஷ்டம். அவனுக்கு நியூஸ் சேனல் கிளிக் ஆனதுன்னால அசட்டுத் துணிச்சல் வந்துடுச்சுன்னு நினைக்குறேன்.’

நம்மள மாதிரி அவுங்க என்ன அன்னக் காவடியா..? ஊர்ப்பட்ட காசு கையில வச்சுருக்கானுங்க. ஆரம்பிக்குறானுங்க...நமக்கென்ன..மாமா கண்டுக்காதா. பிரபல டெய்லியில உள்ள முக்கியமான நபரைக் கூப்பிட்டிருக்கானாம். நல்ல சம்பளம் ன்னு சொன்னதும் அவரும் தலையை ஆட்டியிருக்காராம்.’

ன்னொன்னு தெரியுமா ஜிக்கி,அதே புதிய தலைமுறையில் இருந்து வேந்தர் டிவி ன்னு ஒன்னும் வரப்போகுதாம்.நெறையப்பேரு அங்கயும் வேலைக்கு மனு போட்டுக்கிட்டிருக்காங்க’



அது மட்டுமல்ல ஜிக்கி ,என்.டி.டிவி.ஹிண்டு சேனல், ‘தந்தி டிவி’யா மாறி, அதும் விரைவில் வரப்போகுதுன்னு சொல்றாங்க. ஆபீஸ் நிர்வாகம் ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து சட்டபூர்வமா மாறிடுச்சாம்.’

’வேற யாரு புதுசா என்ன ஆரம்பிக்கப் போறாங்களாம் மாமா....?’

தினகரன் ஏரியாவில் இருந்தும் தோழின்னு ஒரு பத்திரிகை வந்துருக்குது.முன்னாடி சிநேகிதியில இருந்தவங்க தான் இப்ப தோழியில இருக்காங்களாம்.

ம்ம்..

‘விகடன் நிறுவனமும் புதுசா ஜூலையில இருந்து என்விகடன் அப்படின்னு ஒரு வாரப் பத்திரிகை ஆரம்பிக்கப் போகுதாம்.விலை 5 ரூபாயாம்.64 பக்கமாம்...’



‘என்ன கான்செப்ட்..?’

‘விகடன் பழைய சைஸ்.இப்ப விகடன்ல வர்ற 16 பக்க ஸ்பிளிட் அதுலயும் தொடருமாம்.’

‘வேலைக்கு எதும் ஆள் எடுப்பாங்களான்னு தெரியலையே மாமா..?’

‘ஜிக்கி, நம்ம சங்கத்துல இருந்து நாமளும் ஒண்ணு ஆரம்பிக்கணும் ..

ஆனா உண்மையை மட்டும் தான் அதுல எழுதணும்.’

நீயும் நானும் ஆரம்பிச்சா காசுக்கு எங்க போறது...இருக்குற பொழப்பப் பார்ப்போம்.

விகடன் ஆபீசுக்கு முன்னாடி போன வாரம் ஏஐடியூசி தொழிற்சங்கத்துக் காரங்க ஸ்ட்ரைக் பண்ணாங்களாம்,இது தெரியுமா உனக்கு...?’

ஆமா,நானும் கேள்விப்பட்டேன்.கம்பெனி என்ன பண்ணுச்சாம்...’

‘வழக்கம் போல கண்டுக்காம போயிடுச்சாம்..’

‘அடப்பாவமே. காது கொடுத்துக் கேக்கக் கூட நாதியில்லையா..?அது பத்தி ஜூனியர் விகடன்ல எதும் செய்தி வருமா..?’

ஊருக்குத் தாண்டி உபதேசம்.உனக்கும் எனக்கும் இல்லடி தங்கம்...’

ரிப்போர்ட்டர்ல குழும ஆசிரியருக்கும் செய்தி ஆசிரியருக்கும் முன்னாடி இருந்த உறவு போய் இப்ப ஊடல் ஆரம்பிச்சுடுச்சாம்.அதனால சுவத்தப் பாத்துத் தான் பேசுறாங்க தெரியுமா ஜிக்கி?’

அப்படியா மாமோவ்

‘ஒரே உறையில இரண்டு கத்தி இருக்க முடியாதுன்னு சொல்வாங்க.ஆனா வரதாபாய் சாமர்த்தியமா வச்சுக்கிட்டிருக்கார்’

ஒரு கத்தி கோசலு. இன்னொன்னு வில்கின்ஸ். ரெண்டு பேரும் போட்டி போட்டு பஞ்சாயத்து பண்ணுவாங்க. பஞ்சாயத்து பண்ற இடத்துல அப்ப்ப்போ முட்டிக்கும்

‘அதனால ரெண்டு பேரும் நேருக்கு நேர் பாத்துக்கிட்டா அக்னி நட்சத்திரம் கார்த்திக்-பிரபு மாதிரி ஒருத்தர ஒருத்தர் முறைப்பாங்கன்னு நீ நினைச்சா ரொம்ப தப்பு ஜிக்கி..’



‘பேசணும்ன்னு நினைச்சா ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பாக்க மாட்டாங்களாம்.
ஒருத்தர் அந்தப் பக்கம் திரும்பி பேசுவாராம். இன்னொருத்தர் இந்தப் பக்கம் திரும்பி பதில் சொல்வாராம். அதனால அலுவலக ஊழியர்கள் இப்படிப் பேசிக்குறாங்க..’

என்னவோ போ,  எல்லோரும் உள்ளுக்குள்ள அமைதியா இருந்துட்டு வெளியில வந்து தான் நல்லாப் பேசுறாங்க...’

‘அப்புறம் இன்னொரு செய்தியும் சொன்னாங்க...குமுதத்துல இன்கிரிமெண்ட் போட்ருக்காங்களாம். இதுல நிர்வாகத்துக்குச் சாதகமா இருக்குறவங்களுக்கு அதாவது வேலை பார்க்காம ஜால்ரா தட்டுறவங்களுக்கு நல்லா 25 சதவீதம் ன்னு சொல்லிக்கிறாங்க..மத்தவங்களுக்கு அதாவது வேலையை மட்டும் பார்க்குறவங்களுக்கு பேருக்கு கொஞ்சம் உயர்த்தியிருக்காங்களாம்

ரஞ்சன், ஏகலைவன் ரெண்டு பேருக்கு மட்டும் ஒண்ணும் உயர்த்தலையாம் அதையும் சொல்றாங்க...’

சோழியன் குடுமி சும்மாவா ஆடும்..?’

கொஞ்ச நாள் தான இந்த ஆட்டம்,அவங்கள கொஞ்சம் பொறுக்கச் சொல்லுங்க...

ன்ன கண்ணு இந்த தமிழக அரசியல் வர வர சரியில்லையே?’

எதை வச்சு சொல்ற மாமோவ்?’

‘என்னன்னு தெரியலை. வாங்கி ரொம்ப நாளாச்சு. இன்னைக்குத் தான் வாங்குனேன்.படிக்க முடியலை.’

இப்ப அந்தப் பத்திரிகையில விகேஷ்,குபேந்திரன் எல்லாம் இல்லையாமே...’

‘ஆமாம் அவங்க போய் ரொம்ப நாளாச்சு. இப்ப இன்பிரிண்ட்ல கூட பேர் எடுத்துட்டாங்க...’

ம்ம். ஓனர் ஜெயிலுக்கு போனதுக்கு அப்புறம் சேல்ஸ் சுத்தமா டவுனாயிடுச்சுன்னு நினைக்கிறேன்.’

’30,000 காப்பி தான் போகுதுன்னு மார்க்கெட்ல சொன்னாங்க மாமா..’

நக்கீரன் கூட 65,000 காப்பி தான் போகுதாம்..’

‘ம்.அதிமுக,திமுக.,ன்னு எவனும் நம்ப மாட்டேங்கிறான், அவனுங்களை. அதான் பிரச்னை...’

விகடன் எவ்வளவு சர்க்குலேஷன் போகுது..?’

‘ஆனந்த விகடன் 2,20,000 போகுதாம். ஜூனியர் விகடன் 2,30,000 விற்பனை ஆகுதாம்.’

இந்த குமுதம் எல்லாம்..?’

‘அதைத் தான் வரது ஒழிச்சுக் கட்டணும்னு முடிவு பண்ணிட்டாரே...’

நிறைய சேல்ஸ் டவுன் ஆயிடுச்சு, அதுவும் 2,25,000 தான் போகுது. ரிப்போர்ட்டர் வெறும் 70000 தானாம்.’

‘குமுதமும் விகடனும் ஒரே சேல்ஸ் தானா...?’

விகடன் சைஸ் மாத்துனதுக்கு அப்புறம் விலை ஏத்திட்டாங்கள்ல அதுல கவுந்துடுச்சு. குமுதம் எடிட்டோரியல் குளறுபடி, அப்புறம் வரது கைவண்ணம். அதான். ஸோ ரெண்டும் டவுனாயிடுச்சு..’

‘ராணியே ஒரு லட்சம் ஆயிடுச்சுன்னு பேசிக்குறாங்க...ஆனா அதுக்கும் குறையாத் தான் இருக்கும்ன்னு சிலர் சொல்றாங்க...’

                                 
 ”நீ கெட்டுக் குட்டிச்சுவராத் தான் போவன்னு சின்ன வயசுல அம்மாக்கள் சொன்னது எப்படிச் சரியாப்போச்சு பாருங்க..

பத்திரிகையில எல்லோரும் ஏசி அறையில உட்கார்ந்து வேலை பார்க்கோம்..கொஞ்சமும் யோசிக்காம‌ அடுத்தவங்களுக்குப் புத்தி சொல்றோம்..அம்மாக்கள் தீர்க்கதரிசிகள்..ஹி.ஹி..”
---

ந்த புதிய தலைமுறை குணசேகரன் இருக்கார்ல ஜிக்கி,முல்லை பெரியாறுல இருந்து தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரக்கூடாதுன்னு சொல்ற சேட்டன் பிரேம் சங்கரோட பிரண்டு?’

அவர விடு மாமா..ஏதோ காரியம் நடந்தாச் சரின்னு அவன பிரண்டு பிடிச்சாரு...எப்பப் பாரு அதையே சொல்லிக்கிட்டு..அவருக்கு என்ன..?’

‘கொள்கையெல்லாம் பேசுற மனுஷன், அப்படியே விட்டா வீரமணி மாதிரி ஆயிடுவாருன்னு நினைச்சு ஒரு பாசத்துல சொன்னேன்.உனக்குப் பிடிக்கலைன்னா இனி சொல்லலை  விட்டுர்றேன்...அவர் அமெரிக்காவுக்கு ஒரு மாசம் பயிற்சிக்காக போயிருக்காராம் தெரியுமா...?’

ஆமா ஆமா ஏதோ படிக்குறதுக்குன்னு சொன்னாங்க..’

குமுதத்துல பெருந்தலைகள் மீட்டிங் நடந்ததாம் மாமா, அப்ப வரது ஒரு கமெண்ட் அடிச்சாராம்.’

என்னன்னு?’

‘தானே புயலுக்கு நாமளும் தான் மாங்கு மாங்குன்னு நிதி வசூலிக்கிறோம்.20 லட்சம் தாண்டலை..அதுல்ல 10 லட்சம் நான் கொடுத்தது.ஆனா அவனுங்களும் வசூல் பண்றாங்க.அவங்களுக்கு மட்டும் எப்படி ஒரு கோடி கிடைச்சதுன்னு புலம்பினாராம்.’

‘அவனுங்கள ஊரு உலகம் நம்புது எசமான்,ஏன்னா அவனுங்க மேல சீட்டிங் கேசு எதும் கிடையாதுன்னு யாராவது பதில் சொன்னாங்களா.?’

‘ஒருத்தரும் சொல்லியிருக்க மாட்டாங்க.வெளியில வந்து நம்ம கிட்டத் தான் சொன்னாங்க.’
.
‘நல்லா நிதி வசூலிச்சு சிஎம் பாத்து கொடுக்குற மாதிரி ஒரு போட்டோ எடுத்து ஆபிசுல மாட்டி வசுக்கலாம்ன்னு நினைச்சா அது வேலைக்கு ஆகாது போலன்னு வரது புலம்பினாராம்.’

.விகடன்ல எடிட்டோரியல் மீட்டிங் நடந்துச்சாம்.அப்ப எடிட்டர் குமுதத்துல வர்ற புது தொடர் அறிவிப்பைச் சொல்லி நாம ரொம்ப கவனமா ஒர்க் பண்ணனும்னு எல்லோரையும் அலர்ட் பண்ணாராம்.’

அலர்ட்டா இருந்தாச் சரி தான்.

‘ஆனந்த விகடன்ல வட்டியும் முதலும்ன்னு பண்றாரே ராஜூ முருகன் அது யாரு மாமா..?’

‘அதுவா தஞ்சாவூர் கொரடாச்சேரி பக்கத்துக்காரர். நானும் படிச்சேன். மனுஷன் உருக்குறான்.படிச்சுட்டு கொஞ்ச நேரம் மனசு அல்லாடுது. நாம கூட அவங்க ஊருக்கு ரெண்டு வருஷம் முன்னாடி போயிருக்கோம்..’

‘அவர் தான விகடன்ல முன்னாடி லூசுப்பையன் பேஜ் பண்ணது.இப்ப என்ன பண்றார்.?.’

‘சினிமாவுல இருக்கார்.’

‘அப்படியா.அதே மாதிரி செழியன் பண்ணுன ஈரானிய இயக்குனர் மசன் மக்பல்ப் சந்திப்பும் ரொம்ப நல்லா இருந்துச்சு.’

‘அதே இஷ்யூல சமஸ் எழுதுன ‘ஐ.சி.யூ.ல இந்திய மருந்துகள்’ங்கிற சமஸ் கட்டுரையும் நல்லா இருந்தது.’

‘ஆமா தினமணி டெஸ்க்ல இருந்தவரு.அவரும் தஞ்சாவூர் தான்.ஆனா நல்லா இருந்தாலும் அது டிரான்ஸ்லேட் பண்ணுன மாதிரி இருந்துச்சு.படிக்குற நமக்கு அப்படி தோணாத மாதிரி அவர் பண்ணா நல்லா இருக்கும்.’

ன்.ராம் போனதுக்கு அப்புறம் டெக்கான், எக்ஸ்பிரஸ், டைம்ஸ்ல இருந்து ஹிந்துவுக்கு நிறையப்பேரு வேலைக்கு மனு போட்ருக்காங்க தெரியுமா...’

‘ஓ அப்படியா..வேலை கிடச்சா சந்தோஷம் தான்...’

‘அப்புறம் இந்த வைத்தி ஐயர் இருக்காருல்ல அவர் கூட தினமணிக்கு சென்னை, டெல்லினு பல ஊர்களுக்கு ஆள் எடுக்கறாராம்.’

‘சரி மாமோவ் எவ்வளவு நேரம் வேலைவெட்டி இல்லைனு இவனுங்க பொழப்பப் பத்தி பேசுறது’

‘கருவாட்டுக் குழம்பும், நீராகாரமும் வச்சுருக்கேன். இப்ப அடிக்குற வெயிலுக்கு இதமா இருக்கும். ஆளுக்கு ஒரு சொம்பு குடிச்சுட்டு செத்த நேரம் கண்ணசருவோம்.’