Tuesday 12 July 2011

நெஞ்சு பொறுக்குதில்லையே!

சனநாயக்த்தின் நான்காவது தூண் ஊடகம்.மற்ற மூன்று தூண்கள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டவும்,தட்டிக் கேட்கவுமான பணிகளை மேற்கொள்வது தான் இதன் முக்கிய பணி.சமூகத்தில் இல்லாமை இயலாமை,ஆதரவற்ற அடித்தட்டு மக்களின் பாதுகாவலனாக செயல்பட வேண்டியது நான்காவது தூணின் கடமையாகும்.
ஆனால் நடைமுறையோ இதற்கு நேர்மாறாகத் தான் இருக்கிறது.

இன்றைய ஊடக நிறுவனங்களும் அதில் பணியாற்றும் குறிப்பிட்ட சில கறுப்பு ஆடுகளும் தங்கள் சுயலாபத்துக்காக அதிகார வர்க்கத்தை பல்வேறு வழிகளில் அண்டிப் பிழைக்கிறார்கள்.இதன் முலம் உண்மைச் செய்திகளை மறைத்து தங்களின் லாப நோக்கத்திற்கான செய்திகளை மட்டுமே வெளியிடுகிறார்கள்.
இந்த அநீதிகளுக்கு எதிராகத் தான் இந்த கலகக் குரல்......