Tuesday 24 February 2015

நாளிதழ் முதலாளிக்கு எதிராய் ஈரத்துணி கட்டி போராட்டம்...!


வேலை பார்த்தவன் கஞ்சிக்கு வழியில்லாமல் திண்டாட கேக் வெட்டிக் கொண்டாட்டம் ஒரு கேடா ராதா கிருஷ்ணா..?

குறுக்கு வழியில் பல நூறு கோடிகளைக் குவித்த பேர்வழிகள் தங்க‌ளின் மீதான குற்றங்களை மறைக்கும்  வண்ணமும்,சுருட்டிய பணத்தைப் பாதுகாக்கும் வண்ணமும்,அரசியல் அதிகாரத்தை அடையும் பொருட்டும் என பல்வேறு காரணஙக்ளுக்காய் பத்திரிகை ஆரம்பிப்பது கடந்த சில வருடங்களில் தமிழ் நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

சன் குழுமம்,புதிய தலைமுறை,நியூஸ் 7, மடிப்பாக்கம் வேலாயுதத்தின் G  தொலைக்காட்சி,புதிய வாழ்வியல் இதழ்,வின் தொலைக்காட்சி,ஜன்னல் என இந்த வரிசை முடிவற்றது.

இந்த வரிசையில் இடம்பெற்ற நாளிதழ் தான் 'தின இதழ்.' பல்வேறு சுயநிதிக்கல்லூரிகளை ஆரம்பித்துச் சுரண்டியதற்குப் பாதுகாப்புத் தேடும் பொருட்டு கல்வி வியாபாரியால் ஆரம்பிக்கப்பட்டது தான் 'தின இதழ்'.

தனது நாளிதழில் தமிழ்நாட்டை ஆளும் அரசுக்கு எதிராகவும்,மத்தியில் ஆளும் அரசுக்கு எதிராகவும் ஒரு வரி கூட எழுத மாட்டார். 'தமிழரசு' பத்திரிகையின் தினசரிப் பதிப்பாக வருகிறது என்றால் மிகையில்லை. இவரது பத்திரிகையின் நோக்கம் எதுவென்று எளிதில் புரியும்.

Sri muthukumaran institute of technology.Meenakshi amman dental college.


ற்ற பேர்வழிகள் தாஙகள் ஆரம்பித்த நிறுவனங்களில் சம்பளத்தை ஓரளவிற்கு கணிசமாகவும் சரியான நேரத்திலும் கொடுத்தாலும் தின இதழ் முதலாளி ராதாகிருஷ்ணனோ அதிலும் ஏமாற்றுப் பேர்வழி. வேலை செய்யும் தொழிலாளிக்கு அடிமாட்டு தொகையில் தான் சம்பளம் கொடுப்பார்.அதையும் ஒழுங்காய் கொடுக்க மாட்டார். ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து எந்த மாதமும், பத்தாம் தேதிக்குள் சம்பளம் கொடுத்த வரலாறு இல்லை.அதிலும் கடந்த சில மாதங்களாய் 20 ஆம் தேதி வரைக்கும் கூட இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இந்த மாதமோ மிக கொடுமை.

இந்தப் பதிவு எழுதும் 24 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகி விட்டது. ஆனால் கடந்த 2015 ஜனவரி மாதச் சம்பளம் வேலை பார்த்த சுமார் 80 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. சுயநிதிக்கல்லூரிகளின் மூலம் பல நூற்றுக்கணக்கில் கோடிகளைக் குவித்து வைத்திருக்கும் இந்த பேர்வழிகளுக்கு மாதம் முழுவதும் வேலை பார்த்த ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க மனம் வருகிறதா பாருங்கள்.அனைத்து ஊழியர்களின் ச்மபளமும் மொத்தமாக அதிக பட்சம் 30 லட்சத்துக்கு குறைவாகத்தான் வரும்.

தங்களது பள்ளி,கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடம் கட்டாய நன்கொடைகளை செர்க்கையின் பொழுதும்,வருடம் முழுமைக்குமான கல்விக் கட்டணங்களை முதல் நாளிலேயே வாங்கும் இந்த சுயநிதிக் கொள்ளையர்கள் தாங்கள் நடத்தும் பத்திரிகையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேலை பார்த்த சம்பளத்தை அடுத்த மாதம் முடிவடைய இருக்கும் தருவாயிலும் கொடுக்காமல் ஏமாற்றுவது எப்படிப்பட்ட பித்தலாட்டக்காரர்கள் என்பது விளங்கும்.

வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி சொற்ப சம்பளத்துக்காய் மாதம் முழுதும் வேலை பார்த்த ஊழியர்கள் எப்பொழுது சம்பளம் வரும் என கடந்த 20 நாட்களாய் வயிற்றெரிச்சலில் இருக்கின்றனர்.ஆனால் அலுவலகத்தில் பதில் சொல்லத்தான் ஆள் இல்லை. எடிட்டர் குமாரோ வேலை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறாரே தவிர பத்திரிகையை நடத்தும் பேர்வழி கவனத்துக்கு சம்பளப் பிரச்சனையைக் கொண்டு போகவே இல்லை. அவரைத் தவிர 'தின இதழ்' முதலாளி தொடர்பில் அலுவலகத்தில் யாரும் இல்லை.

இதனால் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நிறுவனத்தின் ஊழியர்கள் இன்று மாலை கூடி ஒரு முடிவு எடுத்திருக்கிறார்கள். பெரும்பாலோனோரின் ஒப்புதல் இதற்கு பெறப்பட்டிருக்கிறது. வரும் வெள்ளிக்கிழமைக்குள் (27 ஆம் தேதி) சம்பளம் கொடுக்கவில்லை என்றால் ஈரத்துணியை வயிற்றில் கட்டி  தொடர்ச்சியாகப் போராடி அரசின் கவனத்திற்கு தங்கள் பிரச்சனைகளுக்குத் கொண்டு செல்வது என முடிவெடுத்திருக்கிறார்கள்.

இதிலாவது தீர்வு கிடைக்குமா..? அல்லது ஏமாற்றுப் பேர்வழிகள் ஈரத்துணியுடன் இவர்களை  பட்டினியில் சாக விடுவார்களா..?

பொறுத்திருந்து பார்ப்போம்.


குறிப்பு

தின இதழ் எடிட்டர் குமார் நேற்று மட்டும் லே அவுட் ஆர்டிஸ்டுகளுக்கு சில ஆயிரம் ஊதியம் தன் கையில் இருந்து அவசர உதவியாய்க் கொடுத்திருக்கிறார். அது என்ன லே அவுட் ஆர்ட்டிஸ்டுகள் மீது மட்டும் தனிப்பாசம் என அனைவருக்கும்  ஆச்சரியம்.
அது வேறொன்றுமில்லை. ஜெயலலிதா பிறந்த நாள் விளம்பரம் பக்கம் பக்கமாய் இரண்டு நாட்களாய் வருகிறது.அதில் பெரும்பாலானவற்றை எடுத்தவர் எடிட்டர் குமார். அதற்காய் இவருக்கு கமிஷன் 20% இது மட்டும் லட்சத்தை தொடுமாம். விளம்பரம் வெளிவராவிட்டால்  கமிஷன் போய் விடும்.  வடிவமைக்கும் லே அவுட் ஆர்டிஸ்டுகள் சம்பளம் வராத‌ கடுப்பில் இருக்கும் பொழுது அவர்களை  கொஞ்சம் மகிழ்ச்சிப்படுத்தவே அவர் கையில் இருந்து உதவி. அதனால் தான் இந்த திடீர் பாசம்.

எலி அம்மணமாய் ஓடுகிறது என்றால் சும்மாவா....?

Thursday 12 February 2015

புதிய தலைமுறை- வீதியில் வீசப்பட்ட ஊழியர்கள்...!



சென்னை பீட்டர்ஸ் சாலை,சரவண பவன் ரெஸ்டாரண்ட் முதல் மாடி.

ஊடகவியலாளர்கள் பார்த்தசாரதி,பெஞ்சமின்,அன்பரசு சந்திப்பு.

"ரொம்ப நாள் கழிச்சி பார்க்குறோம். என்ன நடக்குது பத்திரிகை உலகத்துல ? "

"ஆமாம்.நிறைய பேசணும்." பெஞ்சமின்

இங்க அண்ணாச்சி நம்ம பர்சைக் காலி பண்ணிடுவாரே..? அடுத்த பில்டிங் செல்ப் சர்வீஸ் போயிருக்கலாம். அன்பரசு பர்ஸ் கனம் குறித்துக் கவலைப்பட்டார்.

"காசு கொஞ்சம் அதிகம் தான். ஒரு காபி குடிச்சுட்டு  ஒரு மணி நேரம் ஏ.சி.யில உட்கார இதை விட்டா வேறு இடம் கிடையாது. அங்க நின்னுக்கிட்டே இருக்கணும்."

"விகடன் எம்.டி. பாலசுப்ரமணியம் இறந்ததுக்கு போனீங்களா..? " பெஞ்சமின் ஆரம்பித்து வைத்தார்.

அஞ்சலி...


"ஆமாம். பெரும்பாலும் ஊடக நெறிகளின் படியும் பணி புரியும் தொழிலாளர்களின் மீது கரிசனத்துட‌னும் வாழ்ந்த சில முதலாளிகளில் அவரும் ஒருவர். அவருக்கு நம்ம அஞ்சலியை செலுத்திடுவோம். அவர் குறித்து விகடன் ஊழியர்கள் உட்பட ஊடகவியலாளர்கள் அனைவரும் நிறைய பதிவு செய்துட்டாங்க. இணையம் உட்பட எல்லா ஊடகங்க‌ளிலும் வந்திருக்குது."

"ஆமாம்.அந்திமழையில் ஜி.கவுதம் ஒரு இரங்கற்பா எழுதியிருந்ததையும் படிச்சேன்."

"விகடன் முதலாளி மறைவை ஒட்டி 'தமிழ் இந்து'நாளிதழ் வெளியிட்ட ஒரு கட்டுரை சர்ச்சை ஏற்படுத்தியதுன்னு சொன்னாங்களே..? "அன்பரசு.

"ஆமாம். சமஸ் சில வாரங்களுக்கு முன் செய்த அவரது நேர்காணல் ஒன்றை விகடன் பாலசுப்ரமணியம் இறந்த மறுநாள் வெளியிட்டு 'எனக்குப் பிடித்த பத்திரிகை குமுதம்-விகடன் பாலசுப்ரமணியம் கடைசிப் பேட்டி அப்படின்னு தலைப்பு வைத்திருந்தாங்க."

"இது கண்டிக்கப்ப‌ட வேண்டிய குசும்பு தான். ஒருத்தர் மறைவுக்குப் பின் வரும் அவரது பேட்டியில் வெற்றுப் பரபரப்பை உண்டாக்கும் கோக்குமாக்கான தலைப்பைத் தவிர்த்திருக்கலாம். "

"நிச்சயமா. தமிழ் இந்து ஆசிரியர் அசோகனும்  நடுப்பக்க பொறுப்பாளர் சமசும் இதன்னால விகடன் மேல்மட்ட ஆட்கள் எல்லோர் கிட்டயும் கடுமையா திட்டு வாங்குனாங்க."

"இதன் காரணமா சமஸ் துக்க வீட்டிலும் ஒரு ஓரமா அமைதியா, கவுண்டமணியிடம் திட்டு வாங்கின நடிகர் செந்தில் மாதிரி ஒருவித பாவமான‌ முகத்துடன் இருந்தார். இதை விட இன்னொரு முக்கியமான விஷயம் விகடனின் நீண்ட நாள் ஊழியர்,ஆ.வி.ஜு.வி.போன்றவற்றின் முன்னாள் ஆசிரியர் அசோகன் கடைசி வரைக்கும் இறப்பு வீட்டுக்கு வரலைன்னு சொல்றாங்க.

"உண்மை தானா..? நம்பவே முடியலை..எதுக்கும் சரி பார்த்துக்கங்க..எதிரிகளானாலும்  இறப்புக்கு வந்து அஞ்சலி செலுத்துவது தானே நம்ம மரபு. இங்கோ வேலை கொடுத்த முதலாளி கூட...!"

"அது நம்மைப் போன்றவர்களுக்கு. இன்னொரு முக்கிய விஷயம்.இன்னைக்கு 'தி இந்து' ஆசிரியர் பொறுப்பு அசோகனுக்கு கிடைத்ததற்கும் மறைந்த பாலசுப்ரமணியம் தான் காரணம்."

"அப்படியா..? "

தனது ஊழியர்களுடன் விகடன் எம்.டி.மறைந்த பாலசுப்ரமணியம்


"ஊழல் காரணமாக விகடனில் அசோகனுக்கும் சீனிவாசனுக்கும் பிரச்சனை வந்த பின்னால் அசோகனை மொத்தமா வெளியே தள்ள இப்ப இருக்கும் முதலாளி சீனிவாசன் முடிவு செய்யுறார்.அப்ப பாலசுப்ரமணியம் தான் அவரைக் காப்பாற்றி பதிப்பாளரா இருந்துட்டு போகட்டுமுன்னு சீனிவாசன் கிட்ட சொல்லி காப்பாத்துறார்.

அதுக்கு பிறகு சில காலத்தில் 'தி இந்து' தமிழ் ஆரம்பிக்கும் பொழுது தன்னை ஆசிரியர் பொறுப்புக்கு ப‌ரிந்துரைக்க பாலசுப்ரமணியத்திடம் அசோகன் சொல்றார். அவரும் என்.ராமிடம் தனக்கு இருக்கும் நட்பை பயன்படுத்தி இவரைப் பரிந்துரை செய்யுறார்.அதனால் தான் இவரை விட திறமையானவர்கள் நிறையப் பேர் பரிசீலனையில் இருந்தாலும் இவருக்கு லக் அடிக்குது. அதற்குப்பிறகு விகடன் பதிப்பாளரை விட்டு வெளியேறுறார். இன்றைக்கோ தனது இந்த நிலைக்கு காரணமானவர் மறைவுக்கு கூட போகலை. "

" நீங்க சொல்றதை நம்பவே முடியலை. எதுக்கும் சரி பார்த்துடுங்க.என்னடா உலகம் இது.நன்றி கெட்ட மனிதர்கள்." பார்த்தசாரதி சலித்துக் கொண்டார்.

ளுக்கொரு காபியை ஆர்டர் செய்து விட்டுப் பேச்சைத் தொடர்ந்தார்கள்.



"எந்த தொலைக்காட்சியைப் பார்த்தாலும் இமான் அண்ணாச்சி வர்ற‌ விளம்பரத்துக்கு போட்டியா 'ஜன்னல்- சமூகத்தின் சாளரம்' அப்படின்னு புதிய பத்திரிகை விளம்பரம் வருதே ? அது யாருங்க..புதுசா கிளம்பியிருக்காங்க.? " அன்பரசு அலுத்துக் கொண்டார்.

"யோக்கிய சிகாமணிகளா இங்க வரப்போறானுங்க.புதிய தலைமுறை,மாறன் குடும்பம்,ஜி டிவி,நியூஸ் 7 மாதிரியான கும்பல்கள் மாதிரி தான் இருக்கும். தாங்கள் செய்யும் அயோக்கியத்தனத்தில் இருந்து தங்க‌ளைப் பாதுகாக்க ஆரம்பித்திருப்பாங்க."

அதானே..?

"'ஜன்னல்' பத்திரிகை முதலாளிகள் இதுக்கு முன்னாடி ரியல் எஸ்டேட்,சீட்டு,எம்.எல்.எம். மாதிரி வணிகம் செய்துக்கிட்டிருந்தவங்க.அது தான் இவர்கள் பிழைப்பு.

அதில் கணக்கு வழக்கு இல்லாத பணம். மதுரையில் விசாலட்சுமி மில் ரொம்பப் பழமையானது.அதை நூற்றுக்கணக்கான கோடி கொடுத்து வாங்கியிருக்காங்க.அது மட்டுமல்லாமல் ராமநாதபுரம் மன்ன‌ருக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலம் குற்றால மலையை ஒட்டி இருக்குது.அதையும் வாங்கியிருக்காங்க. நான் சொன்னது ஒரு சில பரிமாற்ற‌ங்கள் தான்.

இவ்வளவு கறுப்பு பணமும் சொத்தும் குறுக்கு வழியில் பத்து வருடஙக்ளுக்குள் வந்தது தான்.அதுக்கு ஒரு பாதுகாப்பு வேண்டாமா என்ன..? அதனால் தான் இப்ப முதலில் வார பத்திரிகை ஆரம்பித்திருக்காங்க.அடுத்து நாளிதழ்,தொலைக்காட்சி,அரசியல் பத்திரிகை என தொடர்ச்சியா ஆரம்பிக்குற திட்டம் இருக்காம்."

" நாட்டைத் குட்டிச்சுவரா ஆக்காமல் விட மாட்டாங்கன்னு சொல்லுங்க. " அன்பரசு

"ரி இவங்க கதை இருக்கட்டும். இதைப் போல புதியதாக இரண்டு நாளிதழ்கள் வரப்போறதா சொல்றாங்களே..?"

ஆமாம்.திருமாவளவன் மற்றும் வைகோ சார்பா ஆளுக்கொரு  தினசரி கொண்டு வராங்க.

"திருமா ஆதரவு நாளிதழுக்கு எஸ்.சரவண‌குமார் ஆசிரியர் ஆகப்போறாருன்னு சொல்றாங்க. ஆனால் கொஞ்சம் தாமதமாகலாம். வைகோ சார்பு நாளிதழை அவர் கட்சியைச் சேர்ந்த இமயம் தொலைக்காட்சி உரிமையாளர் ஜெயராஜ் ஆரம்பிக்கப் போறார்."

"வைகோ செய்தியை தந்தி உட்பட எல்லா முதலாளியும் வரிந்து கட்டித்தானே வெளியிடுவாங்க. அப்புறம் எதுக்கு தனி நாளிதழ்.?" பார்த்தசாரதி.

"அவருக்கும் தந்திக்கும் இப்ப பஞ்சாயத்து இருக்கு.தந்தியின் ராஜபக்க்ஷே ஆதரவு பேட்டியை எதிர்த்து ஆர்ப்ப்பாட்டம் செய்தார்."

நாய் நிகழ்ச்சி நடத்திய‌ ஹரிஹரன்


"ஆமா. தந்தி தொலைக்காட்சி எடுத்த நேர்காண‌லில் இனப்படுகொலை பற்றி ஒரு கேள்வியும் ராஜபக்க்ஷேவிடம் கேட்கலையே..ஏன்..? அவன் சொன்னதை அப்படியே வெளியிட அவனுக்கு பி.ஆர்.ஓ.இருக்காங்க. அதுக்கு எதுக்கு தந்தி டிவியும் ஹரிஹரனும்..?" பெஞ்சமின் கொந்தளித்தார்.

"ஹரிஹரன் நாய், நிகழ்ச்சி நடத்த தான் லாயக்குன்னு தெரியுது. அப்புறம் ஆர்ப்பாட்டம் பண்ணாமல் என்ன செய்வாங்க.?"

"இதுக்கு எதிரா ஆர்ப்பாட்டம் அறிவித்த வைகோ வழக்கமான சடங்கா அது நடக்குமுன்னு எதிர்பார்த்தார். ஆனால் யாரும் எதிர்பாராமல் தினத்தந்தி வளாகத்தில் செருப்பு வீசப்பட்டது. இதனால் தந்தி நிர்வாகத்துக்கு கடும் கோபம்."

"யார் வீசுனாங்க..? "

தந்தி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில்


"வைகோ,வேல்முருகன் கட்சி ஆட்களை கை காட்டித் தப்பிக்கப் பார்த்தார்.வேல்முருகன் எங்களுக்குத் தெரியலைன்னு பதில் சொன்னார். மொத்தத்தில் இப்ப ரெண்டு பேர் செய்தியும் தந்திக்காரன் போடுவதில்லை."

"இதனால் வைகோ ரொம்ப அப்செட். அதனால் இதர பெரிய ஊடகங்கள் மீது அதிக அக்கறை காட்டுறார்."

"அதனால் தான் தொலைபேசி இணைப்பு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட மாறன் கூட்டாளிகளை பத்திரிகை ஊழியர்கள் கைதுன்னு திரித்து சொல்லிக் கூச்சமில்லாமல் கண்டனம் தெரிவித்தாரோ..? "

அரசியல்வாதிகளிடம் உண்மையை மட்டும் எதிர்பார்ப்பது மடைமை. அது மட்டுமல்லாமல் கே.டி.க்கள் பயன்படுத்திட்டுத் தூக்கி எறியும் இயல்பு உள்ள‌வர்கள்.அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது எதுக்கும் பயனளிக்காது.
 இதனால் தான் தனக்குன்னு புது நாளிதழ் வருவதிலும் அதிக அக்கறை செலுத்துறார்.

தந்தி ஆர்ப்பாட்டத்தில் நடந்த கல் வீச்சுக்கு வேல்முருகனைக் குற்றம் சாட்டினாலும் அவர் கூடத் தொடர்பில் தான் இன்னும் இருக்கார். 'இம‌யம்' தொலைக்காட்சிக்காக வைகோ நேர்காணலையும் வேல்முருகன் செய்திருக்கார்.

வைகோ வை நேர்காணல் செய்யும் வேல்முருகன்.
பக்கா அரசியல்வாதிகள் முன்பு அடக்க ஒடுக்கமாக வியப்புடன், சூழல் 'போராளி' கோ.சுந்தர் ராஜன்.


" ம்ம்ம்.அரசியல் வாதிகள் யாரும் யாருடனும் சேர்ந்துக்கிடலாம். ஆனால் 'பூவுலகின் நண்பர்கள்' என்.ஜி.ஓ.நடத்துற‌வங்க, பாழாய்ப்போன அரசியல்வாதிகள் பின்னாடி எதுக்குப் போறாங்க..?

என்.ஜி.ஓ.ஆரம்பிக்கும் பொழுது தங்களை வித்தியாசமா காட்டிக்கிட வேண்டியது. அப்புறம் ஊடகங்களின் துணையுடன் ஒரு அடையாளம் கிடைத்தவுடன், எதற்கும் விலை போகத் தயாராய் இருக்கும்,மக்கள் பிரச்சனைகளின் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் அரசியல் வாதிகளுடன் தனிப்பட்ட உறவைப் பேணுவது என திட்டமிட்டு நடந்து கொள்கிறார்கள். இதுக்கு முன்னாடி வைகுண்டராஜன் டிவி அலுவலகம் சென்று வந்தார் என நாம் ஒரு புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியிட்டிருந்தோம். இப்படியே போனால் அதிகார வர்க்கத் தொடர்பு அடுத்து எளிதில் கிடைக்கும்.

"நல்லாத் தான் இருக்கு சூழலைக் காக்கும் நிகழ்ச்சி நிரல்."

ழக்கம் போல் தாமதமாய் வந்த காபியை எடுத்துப் பருகிக் கொண்டே பெஞ்சமின் ஆரம்பித்தார்.

 "தினமலர் நாளிதழ் மாற்றத்தைக் கவனிச்சிங்களா..?"

"ஆமாம். 'தினமலர்' தனது வாசகர்களை 'தமிழ் இந்து' கவர்ந்து விடக்கூடும் எனும் எண்ணத்தில் தினமும் ஒரு துறை குறித்த செய்திகளை ஒரு பக்க இணைப்பா வழங்குது. மகளிர்,சினிமா,கல்வி,பெண்கள்,அறிவியல் பகுதி என பலதுறைகள் குறித்தும் எளிய நடையில் மிக அருமையா இருக்குது. தொடர்ந்து படிக்கிறேன்."

"அப்படியா ? நானும் பார்க்குறேன். "

அவர்களும் புதியதாய் சில பத்திரிகைகள் ஆரம்பிக்கப்போறாங்கன்னு சொல்றாங்களே..?

ஆமாம். 'அலப்ஸ்' அப்படின்னு பேராம்.இன்னொரு பத்திரிகை 'புதிய அலை' என்றும் சொல்றாங்க.

அதுக்காய் கவுதம சித்தார்த்தனைத் தேர்ந்தெடுத்திருக்காங்க. சிறு பத்திரிகை நடத்தி வந்த அவர் 'குமுதம் தீராநதி'யில் பணியாற்றினார். இப்ப 'தினமலரில்' இணைந்திருக்கிறார்.

"அலப்ஸ் பேரப்பாரு.'தினமலர்' காரன் வைக்குற தலைப்பு மாதிரி கேவலமா இருக்கு."

ம்.அவங்க பங்குக்கு அவங்க ஆரம்பிக்கட்டும்.

'தி இந்து'  தமிழ் நாளிதழ் செய்தி எதுவும் உண்டா..?

"வெள்ளி,சனி,ஞாயிறு அன்று விலை 6 ரூ.ஆக்கிட்டாங்க. விற்பனையில் முதல் நிலையில் இருக்கும் தினத்தந்தி,தினகரனே விலை குறைவு தான். இவங்க கொடுக்கும் பக்கங்களை விட அதிகம் தர்றாங்க. ஆனா தினமணியுடன் போட்டி போடும் 'தி இந்து'  விலையை உயர்த்தியிருக்குது. இந்த நிலையிலேயே இப்படின்னா விற்பனை இன்னும் அதிகமாச்சுன்னா இவங்க வச்சது தான் விலைன்னு ஆகிடும். "

"விளம்பரம் அதிகம் வராததினால் தான் இந்த நிலை என நினைக்கிறேன். அதுக்கு நம்ம பாக்கெட்ல எதுக்கு கை வைக்கணும்.?"

காபி காலியானது .




'விகடன் விருதுகள்' பார்த்தீர்களா..?

ஆமாம். பார்த்தேன். எது நடந்தாலும் எவ்வளவு திட்டினாலும் கொஞ்சமும் கூச்சமே இல்லாமல் அவங்க கம்பெனி சீரியலுக்கு அவங்களே அவார்டு கொடுக்கும் கேவலம் மட்டும் நிக்கவே இல்ல. இந்த முறையும் அவங்க நிறுவன தெய்வமகள் சீரியலுக்குத் தான் விருது.

அதுவும் இல்லாமல் 'விஜய் டிவி' திவ்யதர்ஷினிக்கு தொடர்ந்து நான்கு வருசமா சிறந்த தொகுப்பாளினி விருது கொடுத்துக்கிட்டிருக்காங்க. விகடன் ஒட்டுமொத்த டீமும் இதுல  பாரபட்சம் இல்லாமல் சொக்கிப்போய்க் கிடக்காங்க போல தெரியுது. கொஞ்சம் தெளிந்து மற்ற தொகுப்பாளினிகள் நடத்துற நிகழ்ச்சியையும் பார்க்கணும்.

அதுவும் இல்லாமல் 'சிறந்த தொலைக்காட்சி சேனல்' அப்படின்னு 'சன் மியூசிக்' சேனலுக்கு அவார்டு கொடுத்திருக்காங்க. 'சிறந்த பொழுதுபோக்கு சேனல்' அப்படின்னு கொடுத்திருந்தா சரியா இருந்திருக்கும்.

10 க்கும் மேற்பட்ட செய்தி தொலைக்காட்சிகள் இருக்கும் பொழுது 'சன் மியூசிக்' சிறந்த சேனலாத் தேர்ந்தெடுத்திருப்பது அபத்தமா இருக்கு. பொழுதுபோக்கும் சேனலை விட பிற துறைகள் குறித்த சேனலுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.



"க்கீரன் படிச்சீங்களா..வர வர ஆபாச மேட்டர் தான் கவர் ஸ்டோரியா வருது."

"ஆமாம் நடிகை விந்தியா காதல் தோல்வி, நடிகை ஸ்ரீ திவ்யா செல்பி அப்படின்னு."

"அதிலும் நடிகை ஸ்ரீ திவ்யா அரை குறை ஆடை செல்பி மேட்டர் எழுதி நாட்டுக்கு கொணர்ந்த‌து யாரு தெரியுமா..?"

" யாரு..? "

நிருபர் மனோ சவுந்தர்.



ஆமாம். அவர் குறித்துக் கேள்விப்பட்டிருக்கேன். அந்தாளுக்கு எதுக்கு இந்த ஆபாச வேலை. இதுக்கு வேற வேலைக்கு போகலாமே..?

"அவரை விட புதிய தலைமுறை இதழில் நிருபராய் பணியாற்றும் அவர் மனைவி வினி ஷர்ப்னா பெரிய புர்ர்ரட்சியாளர் தெரியுமா..? "

ஓ.

ஆமாம். முகநூலில் எழுதுவார். படிச்சா புல்லரிக்கும்.சுகிதா ராஜினாமா தொடர்பா கலகக்குரலில் எழுதிய  ஒரு செய்திக்காய் இவனுங்களுக்கெல்லாம் புத்தி வராதுன்னு நம்மைக் கடுமையா எழுதினார்.

 தான் காதலித்து மணம் செய்து கொண்ட‌ கணவர், இன்னொரு பெண்ணின் அந்தரங்கம் குறித்து புகைப்படத்தோடு கேவலமா எழுதிய‌துக்கு எதிரா எப்படி பொங்குவாரு..? 'நக்கீரன்  கோபால்' தலைமையில் தான் மனோவை இவர் திருமணம் செய்து கொண்டார். பெண்ணின் அந்தரங்கத்தை வெளியிட்டு அவரை அசிங்கப்படுத்தியதுக்காய் ஒன்னு கண‌வரைச் சாத்தணும் அல்லது இப்படிப்பட்ட ஆளைத் திருமணம் செய்துக்கிட்டதுக்காய் தன்னைத் தானே சாத்திக்கணும்.
மனோ சவுந்தர்

எல்லாம் சரிதான்.
நடிகையின் அந்தரங்கத்தை எழுதி வெளியிட்டதற்கு என்ன தண்டனை..?
ரெண்டு பேரும் பேசி முடிவுக்கு வாங்க.



// ஸ்ரீதிவ்யா இது தொட‌ர்பாய் புகார் கொடுத்தால் கண்டிப்பாய் காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என சைபர் கிரைம் பிரிவு காவல்துறை அதிகாரி கருத்து தெரிவித்தார் என மனோ எழுதியிருக்கார்.//

" நடிகை ஸ்ரீ திவ்யா புகார் கொடுத்தால் கண்டிப்பாய் எழுதிய மனோவையும் வெளியிட்ட‌ கோபாலையும் தான் காவல்துறையினர் அரஸ்ட் பண்ணி லாடம் கட்டுவாங்க. ஆனால் நடிகை ஸ்ரீ திவ்யா கொடுக்க மாட்டாங்க அப்படிங்குற கொழுப்பில் தான் இப்படிப்பட்ட செய்திகள் வருது. "பெஞ்சமின் கடுப்பைக் காட்டினார்.



" குமுதம் இதழில் குஷ்பூ,பாக்யராஜ்,வைரமுத்து,அனிருத்,ராஜேஷ்குமார் என பிரபலங்கள் அணிவகுப்பு அதிகமா இருக்குதே..? கவனித்தீங்களா..?"  பார்த்தசாரதி

"ஆமாம். தனது வாசகர்களை தக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் புதிய வாசகர்களையும் குமுதம் அதிகரிச்சுக்கிட்டே இருக்குது.  விகடன் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் தான் இருக்குது. ஆனால் ஆ.விகடன் மீட்டிங்ல  தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதாக சொல்லிக்கிட்டே இருக்காங்க. விகடன் எடிட்டோரியலில் இருப்பவர்களும் அதை அப்பாவியா நம்பிக்கிட்டு  இருக்காங்க."



புதிது புதிதா ஆரம்பிக்குற பத்திரிகைகள் பத்திரிகைகள் பத்தி பேசினோம். 25 வருடமா வந்துக்கிட்டிருந்த 'இந்தியா டுடே' தமிழ் பதிப்பு நிறுத்தப்படுதுன்னு சொல்றாங்களே..?

"ஆமாம்.நீண்ட நாளா சொல்லிக்கிட்டிருந்தாங்களாம். இப்ப முடிவு கட்டி மூட்டை கட்டப்போறாங்களாம்."

ம். அங்கே வேலை செய்யும் பத்திரிகையாளர்களுக்கு என்ன நிவாரணம் கொடுத்தாங்கன்னு தெரிய‌லை. தமிழ்,மலையாளம்,தெலுங்கு உட்பட எல்லா பதிப்பும் சேர்த்து பல்வேறு பிரிவுகளிலும் ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதனால் நிர்க்கதியாய் இருக்காங்க..

அசோசியேட் எடிட்டர் கவிதா முரளிதரனை வேலைக்கு எடுத்து 3 மாதம் கூட ஆகலை. பூட்டப்போற கம்பெனிக்கு ஆசிரியர் பொறுப்புக்கு எதுக்கு ஆள் எடுக்கணும் ? அவங்க வேலையையும் பாழாக்கிட்டாங்க.

இனி பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் என்ன செய்யப்போறாங்கன்னு தெரியலை. தொழிற்சங்க நிர்வாகங்கள் இதற்கு எதுவும் நடவடிக்கை எடுக்கப் போறாங்களான்னு தெரியலை."

ஒரு பத்திரிகை மூடிட்டது பத்திக் கவலைப்படுறோம். அதைப்போல நிகழ்ச்சி ஒன்னு நிறுத்தப்பட்டு பணி செய்த ஊடகவியலாளர்கள் வெளியே எறியப்பட்டது குறித்து யாருக்கும் கவலை இல்லை.இன்னும் சொல்லப்போனால் செய்தியே வெளியே வரலை.

என்னாச்சு..?



'புதிய தலைமுறை' தொலைக்காட்சியில் 'ரவுத்திரம் பழகு' அப்படின்னு ஒரு நிகழ்ச்சி.

" பெயரே ரொம்ப டெரரா இருக்கே..? "

"ஆமாம்."

திடீருன்னு அந்த நிகழ்ச்சியை ஊத்தி மூடிட்டாங்க. அது மட்டும் இல்லாமல் நிகழ்ச்சியில் பணி புரிந்த 30 க்கு மேற்பட்டவர்களை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க.

என்னய்யா அநியாயமா இருக்குது..? அந்த நிகழ்ச்சியை நிறுத்திட்டா என்ன..? அவங்க தொலைக்காட்சியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகுது. கைவசம் 3 சேனல் இருக்குது. எத்தனையோ வேலைகள் இருக்குது. அதில் இவர்களைச் சேர்த்துக்கிடலாமே..? இவ்வளவு நாள் வேலை பார்த்தவங்க இப்ப நடுத்தெருவில் நிற்பாங்களே..?

"அதான்.பிற‌ ஊடகங்களில் நிம்மதியா வேலை பார்த்துக்கிட்டிருந்தவங்களை அதிகச் சம்பளம் பேசி ஆசை காட்டி அழைத்துட்டு வந்துட வேண்டியது. ,புதிய இடத்தில் கிடைத்த அதிக சம்பளத்தில் தங்கள் வாழ்க்கை முறையை சொகுசா மாற்றிக்கிட்ட கொஞ்ச காலத்தில், அவர்களை தூக்கி எறிந்துட வேண்டியது. நிம்மதியாய் செய்துக்கிட்டிருந்த வேலையும் போய் நிர்க்கதியாய் நடுத்தெருவில் நிற்குறாங்க."

"ஐ.டி.ஊழியர்கள் மட்டுமில்ல.ஊடகத்துறையிலும் இது தான் நிலை. அதிலும் புது ஊடகக் காரர்களான புதிய தலைமுறை போன்ற மன்னராங் கம்பெனிகள் வந்த பின்பு இது அதிகமாய் காணப்படுகிறது.

டி.சி.எஸ்.போன்ற நிறுவனங்களில் காணப்படும் ஆட்குறைப்பு பற்றி ஊடகங்களில் நிபுணர்கள் நரம்பு புடைக்க விவாதிக்கிறார்கள். ஆனால் ஊடகங்களில் நடக்கும் இது போன்ற அநியாயங்களை விவாதிக்க நாதி இல்லை. புதிய தலைமுறை வேலை பறிப்பு நடந்து 2 மாதங்கள் ஆகப்போகுது.ஒரு சத்தமும் இல்லை."

அதானே ? அதிலும் 'புதிய தலைமுறை'யில் நிகழ்ச்சிகளுக்கு வைக்கும் பெயரைப் பாருங்கள்.'ரவுத்திரம் பழகு','நேர்பட பேசு','புதுப்புது அர்த்தங்கள்'.
ஆனால் நடப்பதோ நேர் எதிர்.

'ரவுத்திரம் பழகு' நிகழ்ச்சியில் வேலை பார்த்தவங்க உண்மையில் ரவுத்திரமா நடநதிருந்தா ஒரு முடிவு தெரிந்திருக்கும்.

காபிக்கு பணமும் டிப்சும் கொடுத்து சபை கலைந்தது.

Sunday 8 February 2015

தினமலர் முதலாளி மருமகனின் மோசடி.. !

(2012 டிசம்பர் பதிவு. எழுத்துப்பிழை சரிசெய்யப்போய் தவறுதலாய் மறுபிரசுரம் ஆகி விட்டது.)


ஊர் உலகத்திற்கெல்லாம் நேர்மை,நியாயம்,அறம் இன்னபிற  போதிக்கும் தினமலர் பத்திரிகையின் முதலாளி மருமகன் மீது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள  மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவர் மீதும் அவரது சகாக்கள் மீதும்  கடையநல்லூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமலர் நிறுவனர் ராமசுப்பையருக்கு  வேங்கடபதி,லட்சுமிபிபதி,ராக‌வன்,கிருஷ்ணமூர்த்தி,சத்தியமூர்த்தி என ஐந்து ஆண் வாரிசுகள் இருக்கின்ற‌னர்.தினமலரின் பத்து பதிப்புக்களும் இவர்களுக்குள் பிரிக்கப்பட்டிருக்கின்றன.ஒவ்வொருவரின் கட்டுப்பாட்டிலும் இரண்டு பதிப்புக்கள் இருக்கின்றன.
மூத்தவரான வேங்கடபதியின் கட்டுப்பாட்டிலும் உரிமையிலும் திருநெல்வேலி,நாகர்கோவில் தினமலர் பதிப்புகள் உள்ளன.அவருக்கு இரண்டு மகள்கள்.அவரின் மூத்த மருமகன் மீது தான் இப்பொழுது மோசடிக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமசுப்பைய்யர் தபால்தலை வெளியிட வருகை தரும் கருணாநிதியை வரவேற்க காத்திருக்கும் தினமலர் முதலாளிகள் 


நில மோசடி,பிளாக்மெயில்


புகார் மனு


முதல் தகவல் அறிக்கை

தினகரன் செய்தி


இந்தச் செய்தியை நாம் நினைத்தது போல் பொய்மையின் உரைகல்லான  தினமலர் வெளியிடவில்லை.

யாரையும் குறை சொல்லவும் குற்றம் காணவும் விமர்சிக்கவும் குறைந்தபட்ச யோக்கியதையும் அருகதையும் தகுதியும் தினமலர் நாளிதழுக்கு இருக்கிறதா என்ன..?