Sunday 4 November 2012

த்தூ.....ஆனந்த விகடன்..!


ஒரு போராளீயின் கண்ணீர் வாக்குமூலம்,நேற்று நான் போராளி இன்று பாலியல் தொழிலாளி
தழ்களில் வரும்நேர்காணல்,திரைவிமர்சனம்,கட்டுரை,செய்திப்பதிவு,துணுக்கு 
போன்ற ஏதாவது ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதனை தனித்தனியாக, ஊர் பாஷையில் சொல்லப் போனால், அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராயும்  போஸ்ட்மார்ட்டம் பகுதிக்கு  நாம் இந்த வாரம் (07-11-2012) தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த நேற்று நான் விடுதலைப் போராளி இன்று நான் பாலியல் தொழிலாளி ஒரு பெண் போராளியின் வாக்குமூலம் என்ற தலைப்பில் மாணவ நிருபர் ம.அருளினியன் செய்ததாக வெளிவந்திருக்கும் ’நேர்காணலை’ எடுத்துக் கொள்வோம்.

அது இது தான்.


ஆனந்த விகடன்,அருளினியன்,ஜூனியர் விகடன்,சிங்கள இனவாதம்,




பெண் போராளி,விடுதலைப்புலிகள்,தலைமை நிருபர்


30 ஆண்டுகாலம் ஈழத்தில் நடைபெற்ற இன விடுதலைப் போராட்டம் குறித்தும்,தற்பொழுது அது எதிர்நோக்கியுள்ள நிலை குறித்தும் அதில் பங்கு பெற்ற ஒரு 'போராளி' இப்பொழுது அனுபவிக்கும் துயரத்தையும் பகிர்வதாகச் சொல்லும் இந்த நேர்காணல் 6 பக்கங்களில் விரிவாக அதி முக்கியத்துவத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் நேர்காணல் அளித்தவர் ஒரு முன்னாள் ’பெண் போராளி’ என்றும் சொல்லப்பட்டுள்ளது.ஆனால் பாதுகாப்புக் கருதி அவரது புகைப்படம் வெளியிடப்படவில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இந்த நேர்காணல் தொலைபேசி வாயிலாகப் பெறப்பட்டதா..? அல்லது மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டதா..?அவ்வாறு தொலைபேசி அல்லது  ின்னஞ்சல் மூலம் பெறப்பட்டது எனில் அதன் நம்பகத்தன்மை என்ன..? இல்லை நேரடியாக யாழ்ப்பாணம்  சென்று எடுக்கப்பட்டதா..? அவ்வாறு நேரடியாகச் சென்று எடுக்கப்படதாயின் அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பங்கு பெற்றமைக்கு சான்றுகள் எதும் தந்தாரா போன்ற ஆதாரங்கள் இல்லை.அது போக இந்த 'அதிமுக்கியத்துவம்' வாய்ந்த, நேர்காணல் ஒளிப்பதிவு,ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளதா..?

இப்படி எண்ணற்ற கேள்விகள் எஞ்சி இருக்கின்றன.ஆனால் விடை  தெரியாத வினாக்கள். அப்படியாயின் நேர்காணலுக்கு என்ன ஆதாரம்..?

ஆகவே இந்த நேர்காணலை முதற்கண் சந்தேக நோக்கிலேயே அணுக வேண்டியுள்ளது.இப்படி ஒரு நேர்காணல் உண்மையிலேயே விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளியால் கொடுக்கப்பட்டதா? அல்லது தங்கள் சொந்த வன்மத்துக்காகவோ நிருபராலோ அல்லது அதிகார வர்க்கத்தின் மறைமுகத் திட்டங்களுக்காக சிலரால் திட்டமிட்டு வலிந்து உருவாக்கப்பட்டதா? என்னும் கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இனி அதன் சில பகுதிகளை ஆராய்வோம். முதல் 2 பத்தி அறிமுகத்தில் கழிந்து விடுகிறது.ஆகவே அதை விட்டு விடுவோம்.
முதலாவது கேள்வி இது.


விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து மிக உயர்வாக சொல்லியிருக்கிறார். உண்மை என்னவென்றால் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் போராளிகள் யாரும் பிரபாகரன் என்று அழைப்பதில்லை. அண்ணன் என்றோ தலைவர் என்றோ தான் அழைப்பார்கள்.அவர் பெயர் சொல்லி அழைப்பதில்லை.அவர்கள் தங்களில் ஒருவராகத் தான் அவரைக் கருதினார்கள். அதுவும் இவர் மூத்த போராளி.அந்த அடிப்படையில் பார்த்தால் இந்தக் கேள்வியும் பதிலும் உண்மையான நேர்காணல் தானா என்னும் சந்தேகத் தொனியை எழுப்புகிறது.
அடுத்ததாக 2 ஆவது கேள்வி இது.

இலங்கை,சிங்களம்,இனப் போராட்டம்,

இந்தக் கேள்வியே செயற்கையாகத் திட்டமிட்டதாகத் தெரிகிறது.முந்தைய கேள்வியிலேயே விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்து உயர்வாகவும் பெருமிதமாகவும் சொல்கிறார்.அதே போன்ற கேள்வி தான் இதுவும்.பதிலும் ஏறக்குறைய அதுதான். ஆனால் கூடுதலாக இடம் பெற்ற தகவல் என்னவென்றால் பிரபாகரன் இறந்து விட்டார், ஈழப் போர் முடிந்து விட்டது.இனி ஈழம் சாத்தியமில்லை.

ஆக மொத்தத்தில் இந்தக் கேள்வியில் பிரபாகரன் இறந்து விட்டார் என்பதை போராளி  வார்த்தையாக வலியச் சொல்கிறது.அல்லது திணிக்கிறது.
இத்தனைக்கும் வழக்கமாக ஊடகவியலாளர் எவர் ஒருவரும் முன்னாள் போராளிகளைச் சந்தித்தால் கேட்கும் முதல் கேள்வி கடைசி நேரத்தில் என்ன தான் நடந்துச்சுங்க..? பிரபாகரன் இப்ப எங்க இருக்கிறார் என்பது தான்.ஆனால் இதில் அப்படி ஒரு கேள்வியை நிருபர் கேட்கவே இல்லை.சுற்றி வளைத்துக் கேட்பது போன்ற தொனியை கேள்வியாக்கி உள்ளார்.
ஏனென்றால் அது படிப்பவர்களுக்கு நிருபரின் எண்ணத்தை பளிச்சென்று காட்டிக் கொடுத்து விடும் என்ற முன் எச்சரிக்கையாம்.

இதற்கு அடுத்து வந்த கேள்விகள் மிக நீண்ட தூரம் தூரப்போய் பயணிக்கிறது.

இந்த இடத்தில் சில விஷயங்களை நினைவு கூறுதல் அவசியம்.

முள்ளிவாய்க்கால் கொடூரம்


பேட்டி அளித்தவராகச் ’சொல்லப்படுபவர்’ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சார்பில் ஈழத்தின் பெரும் போர்களில் பங்கெடுத்தவர்,பல்லாயிரக்கணக்கில் தமிழர்களைப் பலி கொண்ட முள்ளிவாய்க்கால் போரில் இறுதி வரை களத்தில் இருந்தவர் என்பதையும்,உலகையே அதிர வைத்த முள்ளிவாய்க்காலில் கடைசிக் கட்டத்தில் அரங்கேறிய கொடூரம் இன்னும் முழுமையாக வெளிப்படாமல் எவ்வளவோ அந்தக் கடலில் புதைந்து இருக்கிறது என்பதையும் நேர்காணல் வெளிவருவது தமிழின் முன்னணி இதழில் என்பதையும் விடுதலைப்புலிகளை ஆதரித்து பெரும்பாலான நேரத்தில்(வணிக நோக்கம் என்றாலும்) எழுதிய இதழ் என்பதையும் இங்கு நினைவில் கொள்ளுங்கள்.

உண்மையான நேர்காணல் என்றாலோ,சமூகப் பொறுப்புடைய பத்திரிகையாளர் என்றாலோ அடுத்த கேள்விகள் எப்படி நிருபரிடம் இருந்து வந்திருக்க வேண்டும்..?

முள்ளிவாய்க்காலில் கடைசிக் கட்டத்தில் என்ன தான் நடந்தது..? மக்கள் இறுதி நாட்களில் என்னென்ன துயரத்தை எதிர்கொண்டார்கள்..?மக்கள் மீது என்ன வகை குண்டுகளை வீசினார்கள்.?பிரபாகரன் இறந்ததாகச் சொல்கின்றீர்களே எப்படி நிகழ்ந்தது என்று துப்பாக்கியில் இருந்து வெளிவரும் தோட்டாக்களைப் போல ஒன்றன்பின் ஒன்றாக சரமாரியாக வெளிப்பட்டிருக்க வேண்டுமா இல்லையா..?

ஆனால் எந்தக் கேள்விகளும் இல்லை.அப்படியே கடந்து செல்கின்றார்.ஒரு பத்திரிகையாளனாக நமக்கு மிக மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.யோசிக்க வைக்கிறது.அதே சமயம் நேர்காணலின் உண்மைத் தன்மை குறித்து சந்தேகம் வலுக்கிறது.

சரி அடுத்த பகுதியைப் பார்ப்போம்.


இந்தக் கேள்வியையும் அதன் பதிலையும் பார்க்கும் பொழுது நமக்கும் சில கேள்விகள் எழுகிறது.சிங்கள அமைச்சர்கள்,உயர் அதிகாரிகள் எங்களைக் கற்பழித்தார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு வருகிறது.அவர்கள் பெயரைச் சொல்வதில் என்ன தயக்கம்.ஒரு காமுகனை பெயர் சொல்வதில் என்ன பின் வாங்கல்?.பேட்டி கொடுத்தவரின் பெயர் வெளியிடப்படவில்லை.இத்தனைக்கும் குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்கள் சிங்கள அமைச்சர்கள்.இதழ் அச்சாவது இந்திய நாட்டில்.வெளிவருவது உண்மையை உரக்கச் சொல்வதாகச் சொல்லும் விகடன் குழும இதழில்.சர்வதேச விசாரணை அமைப்புக்களுக்கு அளிக்க வேண்டிய விஷயத்தை ஏன் விகடன் அமைதியாக கையாளுகின்றது.?பெண்ணின் குரலை மட்டுமாவது வெளிக்காட்டலாமே?
உண்மை எனில் அதை உரக்கச் சொல்வதில் என்ன தயக்கம்.?ஆனால் வெளியிடப்படவில்லை.

இந்தக் கேள்விகளையும் பதில்களையும் பார்க்கையில் அதே சந்தேகம் மறுபடியும் எழுகிறது.முன்னாள் போராளி எனத் தெரிந்தும் ஈழத்தில் இருக்கும் தமிழ்த் தலைவர்கள் யாரும் உதவ முன் வரவில்லை என்று சொல்கிறார். யார் யாரைச் சந்தித்தேன்,யார் உதவ மறுத்தார்கள் என்று சொல்லியிருக்கலாமே?

நான் பாலியல் தொழிலாளியாக மாறி விட்டேன் என்று தைரியமாகச் சொல்லும் ’போராளி’யால் எந்த தலைவர்கள் தனக்கு உதவி செய்யவில்லை என்று சொல்வதற்கு எந்த தயக்கமும் இருந்திருக்காது. தைரியமாகச் சொல்லலாம்.
ஆனாலும் சொல்லவில்லை. அவர் சொல்லவில்லையெனில் அதைக் கேட்பது பத்திரிகையாளனின் கடமையல்லவா.? அயோக்கியர்களை அம்பலப்படுத்தில் என்ன தவறு?

ஆனால் பத்திரிகையாளர் எதுவும் கேட்கவில்லை.(போராளி என்று ஒருவரை நேர்காணல் செய்திருந்தால் தானே கேள்விகள் கேட்பதற்கு என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது)

செங்கொடி,முத்துக்குமார்,அப்துல்கலாம்,பேரறிவாளன்

//சிறிது காலத்தில் அவர்களாகவே என்னை விடுவித்தனர்.//
1995 இல் இருந்து இயக்கத்தில் இருக்கும் ஒரு மூத்த பெண் போராளியை,சிங்கள ராணுவத்துடன் பல்வேறு போர்களில் பங்கெடுத்த ஒரு போராளியை உலகின் மிக மோசமான  ராணுவம் அவ்வளவு விரைவாக விடுவித்து விடுமா என்ன.? இயக்கத்தில் இருந்த பல போராளிகள் இப்பொழுது புனர்வாழ்வு முகாமில் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

மேலும் 1995 இல் இயக்கத்தில் சேருகிறார்.சக போராளி ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்கிறார்.
2009 ஆம் ஆண்டு போர் முடிவுறுகிறது.அதன்பின் அகதிகள் முகாமில் சிறிது காலம் இருந்திருக்கிறார்.அந்தக் காலம் ஒரு 6 மாதம் என வைத்துக் கொள்வோம்.
இரண்டு குழந்தைகள் இருப்பதாய்ச் சொல்கிறார்.

இந்த சமயத்தில் அவரது குழந்தைகள் கண்டிப்பாய் பெரியவர்களாக இருந்திருப்பார்கள்.ஆனால் இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் பாலுக்காய் அழுவதாகவும் எழுதியிருக்கிறார்.

குழந்தைகள் பிறந்ததில் இருந்து வளரவே இல்லையா..?கட்டுக்கதைகளில் தான் இது சாத்தியம்.
என்னங்கடா உங்க லாஜிக்..?

இது அடுத்த கேள்வி.இதிலும் நிறையக் கேள்விகள் எழுகின்றன.

உள்ளூர் அரசியல் கட்சிகள் தனக்கு உதவி மறுத்ததைக் கூட வெறுப்புடன் மட்டும் சொல்பவர், தமிழ்நாட்டுக் கட்சிகளைக் குறித்துக் கேட்டவுடன் வெறுப்புடன் கூடுதலாக அனலாய்க் கோபமும் கொள்வது ஏன்..?



//அடுத்த வேளை உணவு இல்லாமல்//

இதற்கு முந்தைய கேள்வியில் பாலுக்காய் கஷ்டப்படும் குழந்தைகள் இப்பொழுது எப்படி உணவுக்காய் ஏங்குவார்கள்.இப்பொழுதும் பாலுக்காகத் தானே ஏங்க வேண்டும்..? திரைப்படத்தில் ஒரே பாட்டில் பணக்காரனாவது போல் ஆ.விகடன் நேர்காணலில் ஒரே கேள்வியில் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்களா..?
எழுதும் திரைக்கதையை சரியா எழுதுங்க.!

//விளக்குமாறால் அடிப்பேன்.//

ஈழத்தவர் யாரும் விளக்குமாறு என்று சொல்வதில்லை.

தம்புதடியால் அடிப்பேன் என்று தான் சொல்வார்கள்.


இதை விட இந்த நேர்காணல் உருவாக்கப்பட்டதற்கு இன்னொரு முக்கிய ஆதாரம்.


//ஈழத் தமிழர்கள் நாங்கள் தோற்றுவிட்டோம் என்கிற நிர்வாண கசப்பான உண்மையைக் கூட இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.//

இந்த வார்த்தை போராளியின் வார்த்தையாக வெளிவந்திருக்கிறது.ஆனால்




இந்த வார்த்தைகள் ஆனந்த விகடன் மாணவ நிருபர் அருளினியன் 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் என்னத்தச்சொல்ல என்னும் தலைப்பில் எழுதிய பதிவில் இருக்கிறது.

//நாம் ஈழ தமிழர் தோற்கடிக்கப்பட்டு விட்டோம் என்ற NAKED TRUTH புரியாத வரை என்னத்த சொல்ல.//

ஆக இது மூத்த பெண் போராளி என்று சொல்லப் படுபவரின் வார்த்தையா அல்லது நிருபர் அருளினியனின் கற்பனையா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

அடுத்த கேள்வியையும் அதற்கான பதிலையும் குறித்து நாம் இறுதியில் பார்ப்போம்.

இந்த நேர்காணலில் பொதுவான விஷயங்களாக நாம் அறிவது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை பொதுவாகப் புகழ்வது போல் தோன்றினாலும் ஈழப் போராட்டத்தின் தோல்வியை மிக மோசமான ஒப்பீடுகளுடன் விமர்சிக்கிறது.வன்மம் தோய்ந்த வார்த்தைகளால் அவதூறு செய்கிறது.

இதைவிட இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால்,சிங்கள இனவாதம் குறித்தும் இறுதிக் கட்டப் போரில் அது பயன்படுத்திய மனித நாகரீக நெறிமுறையற்ற போர்முறைகள் குறித்தும் இன்றும் அங்கு நிலவும் கொடுமைகள் குறித்தும் மறந்தும் பேச மறுக்கிறது.(சிங்கள அமைச்சர்கள் குறித்து மட்டும் ஒருவரி விமர்சனம் இருக்கிறது.)

தமிழ்நாட்டுத் தலைவர்கள் குறித்தும் ஈழத்தில் உள்ள தமிழ் தலைவர்கள் குறித்தும் விமர்சன எல்லையைத் தாண்டி மிக இழிவான வார்த்தைகளில் விமர்சனம் செய்கிறது.ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் இது போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுவது இல்லை.அதைப் போல இனி அங்கு போருக்கு சாத்தியம் இல்லை என்று உறுதியாகச் சொல்கிறது.

மேற்கண்ட விஷயங்கள் அனைத்தும் பொதுவாக யாருடைய வார்த்தைகள் என்றால் சிங்கள இனவாதம் மற்றும் அதற்கு இந்தியா மற்றும் இலங்கையில் துணை போகும்,அதற்கு சாமரம் வீசும் நபர்களுடையவை.

சரி இனி இதை பிறிதொரு கோணத்தில் பார்ப்போம்.

விடுதலைப்புலிகளையும் அவர்களின் அரசியலையும்,தமிழ்நாட்டில் அதனை முன்வைத்துச் செயல்படும் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் அவர்களின் தவறுககளையும் யாரும் விமர்சிக்க கூடாதா என்ற கேள்வி எழலாம்.விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு.கண்டிப்பாய் விமர்சிக்கலாம்.

இவ்வாறு விமர்சிப்பவர்கள் இருவகை.

இவ்வாறு விமர்சிப்பவர்கள் தமிழ்நாட்டிலும் ஏன் புலம்பெயர் தமிழர்களிலும் ஒரு பிரிவினரும் இருக்கின்றனர்.விடுதலைப்புலிகளின் அரசியலை விமர்சிக்கும் அதே சமயம், சிங்கள இனவாதத்தையும்,அதற்குத் துணை போகும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஏகாதிபத்தியத்தையும் மிகத் தீவிரமாய் எதிர்க்கின்றனர்.

                வைகோ,நெடுமாறன்,திருமாவளவன்,சீமான், மணியரசன்,போன்றோர்களின் செயற்பாட்டை விமர்சிப்பது தவறு என்று ஒருக்காலும் சொல்லி விட முடியாது. கண்டிப்பாய் விமர்சிக்க வேண்டும்.ஆகவே தவறல்ல.விமர்சனத்திற்கு உட்படாத மனிதர்,அரசியல் என்று யாரும் கிடையாது.அதுவும் இவர்கள் அரசியல்வாதிகள்.கண்டிப்பாய் விமர்சனம் செய்யத் தான் வேண்டும்.ஆனால் விமர்சன நோக்கம் உண்மையாய் இருக்க வேண்டும்.

ஆனால் சிலர் இருக்கின்றனர்.விடுதலைப்புலிகளின் செயற்பாட்டை மட்டும் விமர்சிப்பர்.அதே சமயம் சிங்கள அரசின் இனவாதத்தை கமுக்கமாக கண்டுகொள்ளாமல் சென்று விடுவர்.இந்திய அரசின் செயற்பாட்டைப் பற்றியோ சொல்லவே வேண்டாம்.இவர்கள் நோக்கம் விடுதலைப்புலிகளை விமர்சித்துப் பிழைப்பு நடத்துவது.அதற்கு விடுதலைப்புலிகளின் பின்னடைவைப் பயன்படுத்திக் கொள்வது.வெளித்தோற்றத்தில் மக்கள் மீது அக்கறை இருப்பதைப் போல் காட்டிக் கொள்வது.

டக்ளஸ் வகையறாக்கள் இதில் முதலிடம் பிடிப்பர்.தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்றொழித்த இலங்கை அரசின் ஊது குழலாய்ச் செயல்படும் இவர்களின் நோக்கம் பிழைப்புவாத அரசியல்.தங்களின் சுயநலனுக்காய் சிங்கள அரசையும் அதற்குத் துணை போகிறவர்களையும் நத்திப் பிழைப்பது.இதனை கண்டிப்பாய் மாற்றுக்கருத்து என்றும் மக்கள் நலன் சார்ந்த அரசியல் என்றும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்தக் கட்டுரையைப் படிக்கும் பொழுது டக்ளஸ் வகையறாக்களின் குரலுக்கும் வார்த்தைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் சிறிதும் குறைவில்லாமல் இருக்கிறது.
மலத்தில் தோய்த்த இவர்களது வார்த்தைகள்,பொதுவாய் சமூகத்தில் பெரிய எதிர் வினையை உண்டாக்குவது இல்லை.

ஆனால் இதுவரை ஈழ விஷயத்தில் நடுநிலைச் செய்திகளை மற்ற இதழ்களைக் காட்டிலும் ஓரளவுக்கு  வெளியிட்டு வந்த ஆனந்த விகடன் போன்ற தமிழின் முக்கிய இதழில் அதி முக்கியத்துவத்துடன் வந்திருப்பதால் பரபரப்பையும் திகைப்பையும் ஒருசேர உண்டாக்கியுள்ளன.
*
இவரது நேர்காணல் உண்மைத்தன்மை சிறிதும் இல்லாமல் இருப்பதால் அவரைப் பற்றியும் அவரது பின்னணி குறித்தும் நாம் அறிய வேண்டியுள்ளது.
நேர்காணலைச் செய்தவர்பெயர் ம.அருளினியன்.விகடன் மாணவ நிருபர். 22 வயது தான் ஆகிறது.பத்திரிகைத் துறையிலும்  அரசியல் துறையிலும்  எந்த அனுபவமும் இல்லாத பின்னணியும் இல்லாத ஒருவர் தான் இந்தக் காரியத்தைச் செய்துள்ளார்.ஈழத்தைச் சேர்ந்தவர்.

அவரைப் பற்றியும் அவரது பின்னணி குறித்தும் அறிவதற்கு முன்னர் அவரது எழுத்துக்களை நாம் அறிவோம்.

யாழ் இந்துக் கல்லூரி,சிவ.மகாலிங்கம்.


விகடன் மாணவ நிருபர் ம.அருளினியன் 

இவர் ’அருளினியன் பதிவுகள்’ என்றொரு பெயரில் பிளாக்கில் எழுதுகிறார்.(அதை அவர் எந்தக்கட்டத்திலும் அழிக்க வாய்ப்பு இருக்கிறது.)
2010 ஆம் ஆண்டில் இருந்து தனது கருத்துக்களை அதில் எழுதுகிறார் .அதனை படித்துப் பார்த்தால் நமக்கு அவரைப் பற்றி ஒரு சித்திரம் வருகிறது.

ஆனந்த விகடன் நேர்காணலில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அது தான் அவரது கருத்து.அவரது பதிவுகளைப் படித்தால் அவை அனைத்தும் நேர்காணலில் போராளியின் வார்த்தைகளாகச் சொல்லப்பட்டிருக்கிறது என எண்ண முடிகிறது.

Add caption

ஒன்று மட்டும் வித்தியாசம் இருக்கிறது.தனது பதிவுகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை மிக கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த நேர்காணலில் வெளிப்படையாய் விமர்சிக்கவில்லை.
புகழ்வது போல் இகழ்வதும்,நடுநிலையாய்ப் பேசுவது போ நடித்து தங்கள் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதும் கைக்கூலிகளுக்கு கைவந்த கலை.

அவர் பதிவுகளின் சுருக்கமாக நாம் அறிவது இதுதான்.

சிங்கள இனவாதத்தை வார்த்தைகளால் கூட எதிர்க்காதவர்.விடுதலைப்புலிகளை கடுமையாக விமர்சிப்பவர்.தமிழ்நாட்டுத் தலைவர்களை மிக மிகக் கடுமையாக விமர்சிப்பவர். இந்தியாவில் விதிக்கப்படும் மரண தண்டனை முறையை எதிர்க்கிறார்.ஆனால் பேரறிவாளன் குற்றமற்றவரா என்று எனக்குத் தெரியாது என்கிறார்.

//பேரறிவாளன் உட்பட மூவரும் அப்பாவிகளா எனக் கூறும் அளவிற்கு எனக்கு அரசியலும் தெரியாது,இந்தியாவின் நீதித்துறையின் நம்பகத்தன்மையின் அளவும் தெரியாது//

அதே சமயம் அப்துல் கலாம் மிகப்பெரிய அறிவாளி என்று கண்டுபிடித்து துதிபாடுகிறார்.அவர் தான் ஈழ மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்.
(அதென்ன பாஸ்? பேரறிவாளன் தனக்கும் ராஜீவ் காந்தி கொலை வழக்குக்கும் தொடர்பில்லை என்று எத்தனையோ ஆதாரங்கள் கொண்டு அவரே புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.அதைப் படித்தும் அவர் குறித்து உங்களுக்கு ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.ஆனால் அப்துல் கலாம் உலக மகா அறிவாளின்னும் அவர் தான் எங்கட மக்களுக்கு அறிவு கொடுக்க வரணும்னு எதை வைத்து கண்டுபிடித்தீங்க..?

அதே சமயம் (இரண்டு ஆண்டுகளுக்கு முன்வரை) ஆங்கிலம் வடிவாத் தெரியாததால் யாழ்ப்பாணத்தில் பெண்டுபிள்ளைகளை கரெக்ட் செய்ய முடியவில்லை என்றும் அங்கலாய்க்கிறார்.முகநூலில் மட்டும் தோராயமாக  தனது 1000 புகைப்படங்களைப் பதிந்துள்ளார்.

http://www.facebook.com/aruliniyan.mahalingam?fref=ts

ஈழத்தவர் அனுபவிக்கும் கொடுமை குறித்த புகைப்படங்கள் அதில் நம் கண்ணுக்குத் தட்டுப்படவில்லை.



சுருக்கமாகச் சொன்னால் விடுதலைப்புலிகளின் எதிர்ப்பு.எந்த அரசியல் அனுபவமும் தெளிவும் புரிதலும் அற்ற 22 வயது.அவரது எழுத்துக்களும் இப்பொழுது தான் எழுதப் பழகுகிறார், ஆரம்பித்துள்ளார் என்பதை அறிவிக்கிறது.
குப்பிழான்,வலிகாமம்,யாழ்ப்பாணம்,யாழ் இந்துக் கல்லூரி,
Add caption

மொத்தத்தில் ஒரு போக்கிரித்தனமான கேரக்டர் என்று எண்ணத் தோன்றுகிறது.

இவரைப் பற்றி அறிய இவரது குடும்பப் பின்னணியையும் அறிய வேண்டும்.இவரது குடும்பம் போர்கள் பல கண்டு மாவீரர் ஆன குடும்பம் அல்ல.
இவரது சொந்த ஊர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள வலிகாமம் அருகேயுள்ள குப்பிழான் கிராமம்.இவர் ஆரம்பப் பள்ளிக் கல்வி பயின்றது விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்.உயர் கல்வி பயின்றது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி.படித்து முடித்த பின் இங்கு பெங்களூர் வந்து கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்.விகடன் நிறுவனத்தில் மாணவ நிருபராய்ப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

யாழ் இந்துக் கல்லூரியில் படித்தது.

இவருடன் உடன் பிறந்தவர்கள 3 பேர்.ஒரு தங்கை ஒரு தம்பி,ஒரு அண்ணன்.இவர்களில் தம்பியைத் தவிர இருவரும் வெளிநாட்டில் வசிக்கிறார்கள்.தங்கை ஆக்ஸ்போர்டு பல்கலையில் படித்துக் கொண்டிருக்கிறார்.



இவரது தந்தை சிவ.மகாலிங்கம் சைவசமய பேச்சாளர்.ஆன்மீக கட்டுரைகள் எழுதுபவர்.பலாலி ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர்.அதன்பின் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரியின் விரிவுரையாளர். இப்பொழுது ஓய்வு பெற்ற பின்  வயதான காலத்தில் சொந்த ஊரான குப்பிழான் பாடசாலை அபிவிருத்தி மன்றம் தலைவர் பொறுப்பில் இருக்கிறார். யாழ்ப்பாணம் தமிழ்ச்சங்க உதவித் தலைவராகவும் பதவி வகிக்கிறார்.ஓய்வு நேரத்தில் இதுவரை ஞான விளக்கு,சிவஜோதி,முருக மந்திரம் என 3நூல்கள் எழுதியுள்ளார்.



இவர் 2009 ஆம் ஆண்டு எழுதிய ஞானதீபம் என்ற நூல் 2009 ஆம் ஆண்டு வெளிவந்ததில் சிறந்த நூல் என்று யாழ் இலக்கிய வட்டம் தேர்ந்தெடுத்து இலங்கை இலக்கிய விருதினை வழங்கியுள்ளது. விருதினைப் பெற்றுள்ளது. 12-06-2011 அன்று நல்லை ஞானசம்பந்தர் ஆதின மடத்தில் இதனை அவர் பெற்றுக் கொண்டார்.

இலங்கை இலக்கியப் பேரவை விருது வாங்கிய பொழுது

சுருக்கமாக இப்படிப் பார்க்கலாம்.


2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற  இனப்படுகொலையை உலகமே மனம் பதைபதைத்து பார்த்துக் கொண்டிருந்த பொழுது தமிழ்நாட்டில் அதற்கு எதிர்வினையாய் 15 பேர் மாண்ட பொழுது,கூப்பிடு தூரத்தில் உள்ள குழப்பானில் இருந்து கொண்டு சிவ.மகாலிங்கம் ஒய்வை அனுபவித்துக் கொண்டும்,சைவ சமய நூல் எழுதுவதிலும் ,விருதுகள் வாங்குவதிலும் பட்டிமன்றங்களுக்குச் சென்று சைவ சமயத்தைப் பரப்புவதிலும் மூழ்கியிருந்தார்.
படைப்பு மனம் எவ்வளவு கொடூரமாய் இருந்திருக்கிறது பாருங்கள்.அவர் மகனும் இப்பொழுதைய விகடன் மாணவ நிருபருமான ம.அருளினியன் கொழும்பு சார்ஜா மைதானத்தில் இங்கிலீசு வடிவாத் தெரியாததனால் பொம்பளப் பிள்ளைகளைக் கரெக்ட் பண்ண முடியலைன்னு வருத்தத்தில் அரற்றிக் கொண்டு இருந்திருக்கிறார்.

அங்க தமிழன் கொத்துக் கொத்தாய்ச் செத்துக் கிட்டிருந்தான்.

எல்லாம் முடிந்த பின் தமிழ்ச்சமூகத்திற்கு அறம் போதிக்கவும் அரசியல் சொல்லிக் கொடுக்கவும் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்.அவரை விகடன் வாரி அணைத்துக் கொண்டது.

சரி இவரது குடும்ப அரசியல் பின்னணி என்ன..?

பொதுவாக இவரது குடும்பம் டக்ளஸ் தேவானந்தாவின் மீது அன்பு உள்ளவர் என்று சொல்கிறார்கள்.இவர்களது தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆவார்.
2 விஷயங்களை குறிப்பாகச் சொல்லலாம்.
விகடன் நிருபர் ம.அருளினியனின் தந்தை சிவ.மகாலிங்கம் கல்லூரி விரிவுரையாளர் பதவியில் இருக்கும் பொழுதே அதை விடக் கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்பதற்காய் அதைப் பாதியில் விட்டு விட்டு இந்து சமய கலாச்சார தினைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் பதவியைப் பெற்றுள்ளார். இந்தப்பதவியை அவருக்குப் பெற்றுத் தந்தது டக்ளஸ்  தேவானந்தா என்று ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் காலகட்டத்தில டக்ளஸ் தேவானந்தா 2004 - 2005 காலப்பகுதியில் இலங்கை இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் அமைச்சர்பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அவரின் கீழ் உதவிப் பணிப்பாளராய் சிவ.மகாலிங்கம் பணியாற்றியுள்ளார்.

இவர் உதவிப் பணிப்பாளராய் 2005 ஆம் ஆண்டில் இருக்கும் பொழுது அவரே முன்னிட்டு பொறுப்பெடுத்து தெய்வச் சேக்கிழார்-ஐந்தாவது உலகச் சேக்கிழார் மாநாட்டு மலரை தயாரித்துள்ளார்.அதற்கு இந்து சமய அலுவல்கள் அமைச்சும் நிதி உதவியும் வழங்கியுள்ளது. இவரது பரிந்துரையை ஏற்று அதன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதற்கு நிதி உதவி அளித்ததோடு மட்டுமல்லாமல் வாழ்த்துச் செய்தியும் தந்துள்ளார்.
அதில் சிவ.மகாலிங்கம் ஆன்மீகம் குறித்து ஒரு கட்டுரையும் எழுதியுள்ளார்.


அதைப் போல யாழ் தமிழ்ச்சங்கத்தில் இவர் செல்வாக்காய் இருக்கும் பொழுது இந்தியாவில் கொலை செய்து விட்டுத் தப்பி ஓடிய,இன்றும் தேடப்பட்டுக் கொண்டிருக்கும் டக்ளஸ் தேவானந்தாவை யாழ் தமிழ்ச்சங்க கட்டிடத்திற்கு 2009 ஆம் ஆண்டு வரவழைத்ததில் முக்கியப் பங்கு வகித்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2009 ஆம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தா யாழ் தமிழ்ச்சங்கம் வருகை தந்த பொழுது 

ஒட்டு மொத்தத்தில் பார்த்தால் இவரையும் இவரது குடும்பத்தையும் சுற்றி சந்தேகத்தின் நிழல் நன்கு படிந்துள்ளது.

விகடன் நிருபரின் அப்பா சிவ.மகாலிங்கம் வாழ்நாள் முழுவதும் அரசுப்பணியிலும் அது முடிந்த பின் சைவம் தழைத்தோங்குவதற்கும் அல்லும் பகலும் உழைத்திருக்கிறார் என்பது தெரிகிறது.

அவரது அருமைப் புதல்வர் ம.அருளினியன் பெங்களூரு வந்து வாழ்க்கையை அனுபவிக்கிறார்.இவர் எடுத்ததாகச் சொல்லும் நேர்காணலை நாம் இந்தப் பின்னணியில் தான் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.ஆகவே அதன் உண்மைத் தன்மை குறித்தும் நடுநிலை குறித்தும் அவரது எழுத்துக்கள்,குடும்பப் பின்னணி நமக்கு உணர்த்துகிறது.
இத்தனை சொன்ன பின்னும் உங்கள் மனதில் ஒரு சிறிய எண்ணம் இருக்கலாம்.இந்த நேர்காணல் உண்மையானது தான்.ஆனந்த விகடனும் அதன் நிருபரும் உண்மையைத் தான் வெளிக் கொணர்ந்துள்ளார்கள் என்று துளியாவது எண்ணலாம்.
உங்களுக்கு ஒரு கூடுதல் ஆதாரம் தர வேண்டியுள்ளது.நேர்காணலின் இறுதிக் கேள்வியும் பதிலும் இது தான்.வலிய இந்தக் கேள்வி கேட்கப்பட்டிருகிறது என்பதை உணர முடியும்.


நான் எனது உடலைத் தான் விற்கிறேன்.ஆன்மாவை அல்ல.//
இதே வார்த்தையை அவர் 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எழுதிய தனது பதிவில் எழுதியுள்ளார்.


//ஈழத் தமிழரை வைத்து அரசியல் செய்யும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விட பெங்களூரில் எம்.ஜி.ரோட்டில் விபச்சாரம் செய்யும் பெண் எவ்வளவோ மேல்.அவள் உடலைத் தான் விற்கிறாள்.ஆன்மாவை அல்ல.//

இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது.தனது வன்மத்தில் தோய்த்த வார்த்தைகளை மூத்த பெண் போராளியின் பெயரில் நேர்காணல் என்று வெளியிட்டமைக்கு வேறு என்ன ஆதாரம் உங்களுக்கு வேண்டும்.?

ஆக இது ஒரு வன்மம் நிறைந்த திட்டமிட்ட டேபிள் ஒர்க் என்று நாம் நிருபணம் செய்துள்ளோம்.இது எப்படி நிகழ்ந்தது?

மாணவ நிருபரின் திட்டமிட்ட கைக்கூலித் தனத்திற்கு வக்கிரத்திற்கு ஆனந்த விகடன் ஆசிரியர் குழு அறியாமையினால் துணை போயிற்றா..?
இந்த அறியாமைக்கு பின்னணியில் எந்தெந்த நிருபர்கள் அலுவலகத்தில் இருக்கிறார்கள்?
அல்லது யாருடைய ’நிர்ப்பந்தங்களாலோ’ நிர்வாகம் அறிந்து இச்செயலில் ஈடுபட்டதா..?
’அறியாமை’யினால் இந்த நேர்காணல் வந்தது என்றால் சில கேள்விகள் எழுகின்றன..?

இதற்கு சில வாரங்களுக்கு முன் நிருபர் ம.அருளினியன்,யோ.கர்ணன் என்பவரை இறுதிக் கட்டம் வரை முள்ளிவாய்க்கால் போரில் பங்கெடுத்த போராளி என்று தவறாகவும் இட்டுக் கட்டியும் குறிப்பிட்டார் அவர் பல காலம் முன்பே இயக்கத்தில் இருந்து விலகி விட்டதாக அவரே சொல்லியிருக்கிறார்.விகடன் முன்னாள் நிருபர் அருள் எழிலன் இது குறித்து பேஸ்புக்கில் ஒரு நிலைத்தகவலும் இட்டிருக்கிறார்.அப்பொழுதே சுதாரித்திருக்க வேண்டும்.இவர் குறித்து எச்சரிக்கையுடன் அணுகி இருக்க வேண்டும்.


மேலும் பரந்துபட்ட மக்கள் திரள் கொண்ட ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்திய இயக்கத்தை விமர்சிக்கிறோம் என்ற பெயரில்  எந்தவித அரசியல் அறிவும் இல்லாத ஒரு லும்பன், தற்குறி,கைக்கூலியான நிருபர் போகிற போக்கில் எழுதுவதை எப்படி நிர்வாகம் அனுமதித்தது..?

கழிசடையான திரைப்படங்களைக்கண்டு ஒரு பக்கம் விமர்சனம் எழுதுவதற்கே மிகவும் அக்கறையுடனும் பொறுப்புடனும் தலைமை,மூத்த நிருபர்களை மட்டும் அனுமதிக்கும் நிர்வாகத்திற்கு இது ஏன் தெரியவில்லை.? 
தங்கள் இனத்துக்காக உயிரைத் துச்சமெனத் துறக்கத் துணிந்த பெண் போராளிகளைப் பாலியல் தொழில் செய்கிறார்கள் என்று எழுதுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?
இது சமூகத்தில் எவ்வளவு பெரிய விளைவுகளையும் உளவியல் ரீதியாக அவர்களிடத்திலும் எவ்விதப் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று அறியவில்லையா..?
உள்ளூரில் உள்ள நபர்களே விகடன் மாணவ நிருபர் திட்டத்தில் இணைய முடியாமல் சிரமப்படும் பொழுது எங்கோ யாழ்ப்பாணம் அருகில் இருப்பவருக்கு எப்படி இடம் கிடைத்தது..?அவர் பின்னணி அறியாமல் உண்மையில் இடம் கிடைத்ததா..? அல்லது அறிந்ததனால் கிடைத்ததா..?அல்லது யாராகிலும் திட்டமிட்டு நுழைத்தனரா..?

ஆனால் எது ஒன்றானாலும் விகடன் தன் தவற்றிற்கு பகிரங்க மன்னிப்புக் கேட்பதுடன் நிருபரை வேலையை விட்டு வெளியேற்றுவது தான் சரி.

அதை விடுத்து அடுத்த வாரம் வைகோ பேட்டியையோ,சீமான் பேட்டியையோ வெளியிட்டோ உங்கள் நடுநிலையை நிருபிக்கலாம் என்றோ, எதிர்ப்பை நீர்த்துப் போகச் செய்யலாம் என்று நினைத்தால் அது அயோக்கியத்தனம்.அதை விட செட்டப் செய்யப்பட்ட எதும் ஒலி நாடாவை வெளியிட்டீர்கள் என்றால் இன்னும் அம்பலப்படுத்தப் படுவீர்கள்.

இதுவரை விகடன் குழும இதழ்கள் ஈழ ஆதரவைக் காட்டியும் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் போஸ்டர்களை பல வண்ணத்தில் அடித்தும் எத்தனையோ லட்சம் பிரதிகள் கூடுதலாக விற்பனை செய்தது.இதற்கும் மேலாக விகடன் பிரசுரம் மூலம் ஈழப் போரின் கொடூர உண்மைகளை,அவர்களின் ரத்தம் தோய்ந்த வரலாற்றை லட்சக்கணக்கில் விற்றுக் காசாக்கி கொண்டது.

இன்றோ நம்பகத்தன்மை சிறிதும் இல்லாமல்,மூன்றாந்தர பத்திரிகைகளுக்குப் போட்டியாக மலினமாய் நடந்து கொண்டுள்ளது.

சாதாரண கட்சியின் வட்டச் செயலாளருக்கு எதிரான செய்தி என்றாலே ஒன்றுக்கு பலமுறை யோசித்து,வக்கீல் நோட்டீஸ் வருமோ என்று பயந்து நடுங்கும் விகடன்,எந்தவித நிருபணமும் இல்லாமல் அதிகார்பூர்வமாய் பதில் சொல்வதற்கு பொறுப்பான யாருமில்லாத இயக்கத்தைப் பற்றி எந்தவிதப் பொறுப்பற்ற தனமாய் போக்கிலித் தனமாக வெளியிட்டுள்ளது.
உங்களுக்கும் டாஸ்மாக்கில் ஓசி சாராயம் குடித்து விட்டு ஆள் இல்லாத தெருவில் நாக் கூசும் வார்த்தைகளால் வாய்க்கு வந்த படி பேசுபவனுக்கும் என்ன வித்தியாசம்.?

அல்ல. இந்த நேர்காணல் நிர்வாகம் திட்டமிட்டு வெளியிட்டது எனில் நாம் சொல்வதற்கு எதுவும் இல்லை.நீங்கள் பகிரங்க மன்னிப்புக் கோராத பட்சத்தில்,நிருபரையும் அலுவலகத்தில் இதற்கு பின்னணியாகச் செயல்பட்டவர்களையும் நீக்கம் செய்யாத பட்சத்தில், நாம் அப்படியே முடிவுக்கு வர வேண்டியதிருக்கும்.அப்பொழுது விகடன் குறித்து வாங்கும் வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

பதில் சொல்லுமா விகடன்.? 


தொடர்புடைய இணைப்புக்கள்

http://kuppilan.net/?p=1659

30 comments:

ஆதித்த கரிகாலன் said...

எலோரும் இந்தக் கட்டுரையின் உண்மைத்தன்மை பற்றி கண்ணை மூடிக்கொண்டு விமர்சிக்க நீங்கள் மட்டுமே ஆதாரங்களுடன் நிருபித்துள்ளீர்கள். மிக்க நன்றி

Anonymous said...

புலம் பெயர்ந்த நாடுகளில் விகடனை தெருத்தெருவாக கொழுத்தும் தம்பிகளுக்கு வாழ்த்துகள்... உங்கள்பணியை தமிழ்நாட்டிலும் தொடரலாம் என்பது எனது தாழ்மையான கருத்து... வாழ்த்துகள்.

Anonymous said...

வலிக்குதே .... உலக வரலாற்றிலேயே, பெண்மைக்கு புதிய பெருமைமிகு பரிணாமத்தை சேர்த்த, எம் குல மாதரை இழிவு படுத்தியவன்,பதில் சொல்லியே தீரவேண்டும்,வருந்தவும் வேண்டியிருக்கும்.

Anonymous said...

anna salai அலவலகத்தில் என்ன நடக்குது? ஊரிலுள்ள பெண்களுக்கு பாலியல் தொழிலாளி பட்டம் கொடுக்கிறார்கள்? அந்த தொழில் தொடர்பான முகவர்கள் யாரும் அங்கு இருக்கிறார்களா? விசாரித்து சொல்லவும்..

Anonymous said...

//ஈழத் தமிழர்கள் நாங்கள் தோற்றுவிட்டோம் என்கிற நிர்வாண கசப்பான உண்மையைக் கூட இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.//

இந்த வார்த்தை போராளியின் வார்த்தையாக வெளிவந்திருக்கிறது.ஆனால்

இந்த வார்த்தைகள் அருளினியன் 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் என்னத்தச்சொல்ல என்னும் தலைப்பில் எழுதிய பதிவில் இருக்கிறது.// விகடனுக்கு ஏன் இந்த பாலியல் தொழில்.. கஸடம் என்றால் இதழின் விலையை ஏத்த வேண்டியதுதானே?

Anonymous said...

நான் எனது உடலைத் தான் விற்கிறேன்.ஆன்மாவை அல்ல.// பெண்போராளி தம்மிடம் சொன்னதாக விகடன்

நான் எனது உடலைத் தான் விற்கிறேன்.ஆன்மாவை அல்ல.//
இதே வார்த்தையை அவர் 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எழுதிய தனது பதிவில் எழுதியுள்ளார் பேட்டி கண்ட அருளினியன் #

ஏன்டா எங்கட பெண் போராளிகளைப் பார்த்தா "விகடன்" ***களுக்கு என்னமாதிரி தெரியுது..? parani krishna rajani.austria

தினபதிவு said...

மிக அருமையான பதிவு
வணக்கம்
எமது சேவைகளின் சிறப்பு அம்சங்கள் வாரம் இரு நட்சத்திரபதிவர்கள்.
தினபதிவு தளத்தின் முகப்பில் தெரியும் இது உங்களுக்கான வாசகர்களை அதிகரிக்கும்.
தினபதிவு திரட்டி

Thozhirkalam Channel said...

மிக தெளிவாக சொல்லியிருக்கின்றீர்கள் சகோ...

தொடருங்கள்...

Anonymous said...

ஈழப்போராட்டத்தை, ஈழப்போராளிகளை, ஈழப்பெண்களை, ஈழப்பெண்போராளிகளை, இத்தனை லட்சம் மக்களின் படுகொலையை, எப்பெரும் தியாகத்தை, தங்கள் நலனுக்காக இப்படிப் பயன்படுத்துவது எத்தகைய அநீதி?

ஈழப்போராட்டத்திற்கு எதிரான புனைவுகள் இப்படித்தான் உருவாக்கப்படுகின்றன! ஊக்குவிக்கப்படுகின்றன!!

Anonymous said...

ஆனந்த விகடன் தமிழர்களின் வாழ்வுடன் ஒட்டுண்ணியாக இருந்து சீரழிக்கின்றது. விகடன் என்ற அபினி போதையில் இருக்கும் தமிழர்களும் இவர்கள் செய்யும் அசிங்கத்தை " டைம் பாஸ்" என்பதாகவே நினைத்துக்கொள்கின்றனர். காரணம் நாம் இன்னும் ( அவன் கொடுக்கும் அபினி ) போதையில் இருந்து விடுபடவில்லை. இந்தக் கேவலத்தைக் கண்டித்து ( ஊடக விபச்ச்காரத்தைக் கண்டித்து ) நாம் ஏன் கடிதங்கள் எழுதக்கூடாது ??

Anonymous said...

அருமை..ஆனந்த விகடன் பத்திரிக்கை காரவங்க யாரவது இருந்தா முக்காடு போட்டுகிட்டாவ்து இதை படிக்க சொல்லுங்கள்..
பத்திரிக்கையின் உண்மையான நோக்கம், வன்மம் கிழிந்து தொங்குது இங்க உங்கள் எழுத்தில்..

R.Puratchimani said...

ம் ம் ம் சிந்திக்க வைக்கின்ற பதிவு ..அருமை

Anonymous said...

தற்போதைய காலத்தில் எம் தமிழ் இனத்தை அழிக்க இலங்கை அரசு கொண்டுள்ள வழி கலாச்சார போக்கினையும் வாழ்வியல் போக்கினையும் மாற்றி அதன்படி எம்மை சிறு சிறு அலகுகளாக அழிப்பது தான் அவர்கள் உத்தி அதற்கு துணை போகும் கைக்கூலிகளில் ஒருவர் தான் இவர். மக்கள் மத்தியில் தமிழீழ கனவினை அழிக்க ஒழிக்க ஒடுக்க போராட்டம் என்பது ஒரு வேண்டாத வேலை என புகட்டுவதற்கு முனைகின்றார்கள். எம் கனவு ஈழம் எனின் அதற்கான வழி போராட்டம் தான் என்பதில் ஐயம் இல்லை. அதே போலவே தற்போதைய தருணத்தில் யாழ் மக்கள் மத்தியில் போராட்ட சிந்தனைகளை மறைக்க புதிதாக குறும் படகாலாச்சாரம் மற்றும் துடுப்பாட்ட கலாச்சாரம் கட்டவிழ்த்த்து விடப்பட்டுள்ளது. அதே போல வாசிப்பாளர்கள் மத்தியில் இதே போல சில கட்டுக்கதைகளை உருவாக்கி எம் இன விடுதலை போக்கினையும் உணர்வுகளையும் மழுங்கடிக்க ஒரு தமிழ் ஊடகவியலலானால் எடுக்கப்பட்ட ஒரு உத்தி.

கறுத்தான் said...

அய்யா! தங்களின் தளத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன் ................. அதீதமாக உணர்ச்சிவசப்பட்டு உளரும் தமிழக சூழலில் தாங்கள் நிதானமாக எடுத்து வைக்கும் வாதங்களும் ஆதாரங்களும் இன்றைய தமிழக சூழலுக்கு அவசியம் தேவை .......இன்று நீங்கள் அம்பலபடுத்தி உள்ள ஆனந்தவிகடனின் உண்மை முகம் நாம் ஊகத்தில் அறிந்தது தான் என்றாலும் இப்படி கையும் களவுமாக பிடிபடும் போதுதான் அவர்களை துரோகிகள் என்று மக்கள் மத்தியில் அம்பலபடுதமுடியும் .................வாழ்க உங்கள் பணி !......................வளர்க உங்கள் உறுதி !

Anonymous said...

to vikatan:

இதுக்கு பேர்தான் எழுத்து விபச்சாரம் ;இதை செய்த அனந்த விகடன் நிருபர் ஒரு விபசார தரகர் (மாமா )

to kalagakkural:

தங்களின் உழைப்பு உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது. தங்கள் பணியை த்ஜோர்டருங்கள் நங்கள் உங்களை தொடர்கிறோம்

Anonymous said...

விகடன் மாணவ நிருபர்கள் சிலர் எவ்வித அரசியலற்றும் தான் இருக்கின்றனர்.பூ.கொ.சரவணன் என்பவர் அருளினியன் பேட்ச் மாணவ நிருபர்.அவரது பின்னணி நம்மைப் போல் ஒரு சாதாரணமான குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு படித்து வந்தவர் போலத் தெரிகிறது.துறைக்குப் புதியவர்.நிறைய படிக்க ஆரம்பித்திருக்கிறார் எனவும்,நம்மால் முடிந்த நல்ல விஷயங்களைப் பண்ணனும் என்ற உண்மையான அக்கறையில் பஸ் ஏறி சென்னைக்கு வந்திருக்கிறார் என்பதையும் அறிய முடிகிறது.நல்ல எண்ணம் தான்.ஆனால் வந்த சிறிது நாளில் விடுதலைப்புலி எதிர்ப்பு முகநூலில் என்று ஆரம்பித்து விட்டார்.வ்கடனின் இன்றைய அவதுறு கட்டுரையைப் படியுங்கள் என்று நிலைத் தகவல் வேறு போட்டிருக்கிறார். நாம் அவருக்கு சொல்லிக் கொள்வது ஒன்று தான்.நீங்கள் இத்துறைக்குப் புதிது.எத்தனையோ ஜாம்பவான்களைக் கண்ட துறை இது. படித்தால் மட்டும் போதாது.சிந்தியுங்கள்.அது தவிர பெரும்பாலான நேரங்களில் அமைதியாக நடப்பதைக் கவனியுங்கள்.கண்காணியுங்கள்.ஆராயாமல் அவசரப்பட்டுத் துள்ளிக் குதிக்காதிர்கள்.கற்றுக் கொள்ள ஏராளம் இருக்கிறது.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

Anonymous said...

அய்யா, தங்களின் வலைதளத்தை நான் ரொம்ப நாட்களாக பார்த்து வருகிறேன்.. உண்மைகளை உரக்க சொல்கிறீர்கள்.. அது மட்டும் அல்லாமல் ஆய்வுகளுக்கு தரவுகளை தந்து அதற்கு வலு சேர்க்கிறீர்கள்.. ஒரு தமிழனாகம் மனிதனாக மிக்க நன்றி..விகடனில் இந்த கட்டுரை படித்ததும் நிச்சயம் இது போலி என்று தெரிந்தது.. ஆனால் உண்மையை எங்கு தெரிந்து கொள்வது என்று உங்கள் தளத்திற்கும், சவுக்கு தளத்திற்கும் சென்றேன்.. தேவைக்கும் அதிகமான தகவல்கள்.. மிக்க நன்றி.. எனது முகநூல் பக்கத்திலும், விகடன் முகநூல் பக்கத்திலும் உங்கள் லிங்க்-ஐ இணைத்துள்ளேன்.. மறுப்பு இருந்தால் ,உங்களுக்கு விருப்பம இல்லை எனில் தெரிவிக்கவும்.. நன்றி மீண்டும்..

Anand said...

நல்ல அவசியமான கட்டுரை.

Anonymous said...

கலகக்குரல் வலைப்பூவை நடத்துபவர்கள் ஊடகவியலாளர்கள் என்று சொல்கிறார்கள்.

//விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து மிக உயர்வாக சொல்லியிருக்கிறார். உண்மை என்னவென்றால் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் போராளிகள் யாரும் பிரபாகரன் என்று அழைப்பதில்லை.//

வலைப்பதிவர்கள் இவ்வாறாக எழுதினால் சரி. ஒரு ஊடகவியலாளர் இதுமாதிரி அபத்தமாக சந்தேகம் கிளப்பமுடியுமா என்று தெரியவில்லை.

நானும் ஊடகவியலாளர்தான். அம்மாவை ப
ுரட்சித்தலைவி என்றோ, கலைஞரை கலைஞர் என்றோ என்னுடைய கட்டுரையில் நான் விளித்து எழுதினாலும் கூட பத்திரிகையில் பிரசுரமாகும்போது ஜெயலலிதா என்றும், கருணாநிதி என்றும்தான் பிரசுரமாகும். ஜூ.வி., ரிப்போர்ட்டர் உள்ளிட்ட இதழ்கள் ஒரு காலத்தில் ‘கலைஞர்’ என்றே எழுதினாலும், இப்போது கருணாநிதி என்றே குறிப்பிடுகிறார்கள்.

பேட்டியளித்த போராளி ‘தலைவர்’ என்றோ, ’மாவீரன்’ என்றோ பிரபாகரனை விளித்திருந்தாலும் எடிட் செய்பவர்கள் பிரபாகரன் என்றுதான் மாற்றி எழுதுவார்கள்.//
கருணாநிதி கட்சிக்காரர் யுவகிருஷ்ணா என்பவர் முகநூலில் இப்படி ஒரு குற்றச்சாட்டு சொல்லியிருக்கிறார்.உங்கள் கருத்து அவசியம் எதிர்பார்க்கிறோம்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

fantastic job u have proven the culprit behind this article.

Anonymous said...

ஆனந்தவிகடன் குறித்து பெரியார் : -
''ஆனந்த விகடனு''க்கு த்லைக்கொழுப்பு ஏறி விட்டதால்,இப்படியே அதன் ஆணவம் வழிந்தோடுகின்றது.மானங்கெட்ட - சொரணை யற்ற தமிழர் பலர் அதற்கு ஈனத்தனமாய் அடிமை பட்டு கிடப்பதும் அதை ஆதரிப்பதும் அயோக்கியத்தனமான பணத்தாசையால் அதை வாங்கி சூதாட நினைப்பதுமே ''ஆனந்த விகட''னின் ஆணவத்திற்கு அஸ்திவாரமாய் இருந்து வருகிறது.விகடனே இனி உன் பித்தலாட்டதுக்கும் புனை சுருட்டுக்கும் புராண பிரச்சார ஏமாற்றலுக்கும் இடமில்லாமல் செய்கிறோம் என்று சொல்லுவதைத் தவிர வேறு பதில் சொல்லவேண்டியதில்லை;சொன்னாலும் உனக்கு மானம் வராது.
- குடியரசு,10.10.1937

கலகக்குரல் said...

//ஜூ.வி., ரிப்போர்ட்டர் உள்ளிட்ட இதழ்கள் ஒரு காலத்தில் ‘கலைஞர்’ என்றே எழுதினாலும், இப்போது கருணாநிதி என்றே குறிப்பிடுகிறார்கள்.//
இதற்கு சமீபத்தில் ஆ.வி.இதழில் வெளியான திமுக முன்னாள் அமைச்சர் நேருவின் நேர்காணலே பதில்.அவர் வார்த்தைக்கு வார்த்தை சொன்ன கலைஞர் என்பது அப்படியே அச்சாகி உள்ளது.அவர் சொன்ன தளபதி ஸ்டாலின் என்பது உட்பட அப்படியே பதிவாகி உள்ளது.
இது தவிர.
செப்டம்பர் 5,2012 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளியான மு.க.ஸ்டாலின் பேட்டி,
15-08-2012 தேதியிட்ட இதழில் வெளியான கனிமொழி பேட்டி ஆகிய அனைத்திலும் பதில் சொன்னவர்கள் கலைஞர் என்றே சொல்லியிருக்கிறார்கள்.
அதுவும் அப்படியே வெளியாகியுள்ளது.
கருணாநிதிக்கு ஒரு நியாயம்.பிரபாகரனுக்கு ஒரு நியாயமா..!
வேற மாதிரி யோசியுங்க சார்.!
வலைப்பதிவர்கள் இவ்வாறாக எழுதினால் சரி. ஒரு ஊடகவியலாளர் இதுமாதிரி அபத்தமாக சந்தேகம் கிளப்பமுடியுமா என்று தெரியவில்லை.//
யார் வலைப்பதிவாளர் போல் எழுதுகிறார்கள்,யார் ஊடகவியலாளர் போல் எழுதுகிறார்கள் யார் அபத்தமாய் எழுதுகிறார்கள் என்பதை இதைப்படித்த வாசகர்கள் முடிவு செய்வார்கள்.

Anonymous said...

அருமையான பதிவு...நன்றி

~ தமிழ் இந்தியன் ~ said...

அக்கட்டுரைய படித்துக்கொண்டிருந்தபோதும், படித்து முடித்த உடனேயும் என்னுள், விடுதளிக்காக நம் இனம், நம் சகோதரிகள் இவ்வளவு கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனரே , என்றஎண்ணம் மேலோங்கி என்னை வாட்டியது...... அவர்களின் வலியை கொஞ்சம் கூட உணராமல் எழுதுகிரிரே நீரில்லாம் ( மனிதன்தானா ) தமிழன்தானா...?

உமது குற்ற்றச்சாட்டுக்கள் மூல நீர் கூற வருவதென்ன........??? அங்கே இத்தகைய கொடுமைகளே நடக்கவில்லை என்பதையா, இல்லை இலங்கை கொடூரர்களின் அக்கரமத்தை, பால், இன வெறியை நியாய படுத்தவா....??? உன் போன்ற ஆட்களை காணும்போதெல்லாம் நான் சொல்ல நினைப்பது ச்சீ.... மூடிக்கிட்டிரு.


~ இந்தியன் ~

வாகை said...

நான் அந்தப் பேட்டியைப் படித்தப்போது ஏற்பட்ட சந்தேகத்தை வலுவான ஆதாரங்களோடு மெய்யாக்கிருக்கிறீர் பாராட்டுகள். இது போன்று வலுவான ஆதாரத்துடன் வெளியான முதல் பதிவு என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன்.

Anonymous said...

வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்!

ஆண்டுகள் இத்தனை கடந்தும் ஆறாத நினைவுகளால் வெந்துகொண்டிருக்கும் உள்ளங்களில் வேல்பாய்ச்சும் விகடனின் வேலையை நினைத்தால் மிகுந்த வேதனையாய் இருக்கிறது. பெண்போராளிகள் இந்த விகடனுக்கு அப்படியென்ன தீங்கிழைத்தார்கள் என்று விகடன் இப்படிபெண்களின் வாழ்க்கையில் விளையாடத் துடிக்கிறது? என்பதுதான் எங்களுடைய கேள்வி.

விகடனில் வந்த பெண்போராளி பற்றிய பேட்டிவிகடனின் கற்பனை என்பது அதன் எழுத்து நடையிலேயே புரிந்தாலும் அதற்கு நாங்களா கிடைத்தோம்? என்று சினக்க வைக்கிறது. ஆனந்தவிகடனை விருப்பத்தோடு தேடிப்படிக்கும் பல்லாயிரக்கணக்கான போராளிகளுக்கு விகடன் செய்தவேலை மிகவும் கேவலமானது.

வாழ்க்கையில் ஆயிரம் சவால்களை சந்தித்தாலும் சொந்தக் கால்களில் தன்னம்பிக்கையோடு நிமிர்ந்து நிற்கப் போராடும் முன்னாள் பெண் போராளிகளுக்கு விகடன் காட்டியிருக்கும் வேலை அபத்தமானது, அபாண்டமானது. கேவலம் பெண்போராளிகளது வாழ்க்கையை அல்லவா கேவலப்படுத்த முனைந்திருக்கிறார்கள்.

முன்பும் நாங்கள் பம்பைமடு தடுப்புமுகாமில் இருந்தநாட்களில், 2010 காலப்பகுதியல் என்று நினைக்கிறேன், விகடனின் கட்டுரை ஒன்று எங்களின் மனங்களில் தணலைக் கொட்டியது. பம்பைமடுமுகாமில் இருக்கும் பெண்போராளிகள் படையினரால் பாலியல்ரீதியாக உபயோகப்படுத்தப்படுவதாக பக்கம் பக்கமாய் எழுதியிருந்தது விகடன்.

இல்லாத ஒன்றை எழுதியதால் கொதிக்கவில்லை. எங்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பற்றிய விகடனின் அக்கறை இவ்வளவுதானா? என்ற வேதனையில் துடித்தோம். அதைப் படித்த ஒவ்வொரு பெண்ணும் தனதும் தன் தோழிகளதும் எதிர்காலம் குறித்து கண்ணீர் விட்டோம். விகடன் எதற்காக வீண்பழி சுமத்துகிறது. எங்களது எதிர்காலத்தையும் அல்லவா கேள்விக்குறியாக்குகிற துவிகடன் என்று வருந்தினோம்.

இதோ இப்போது மேலும் அசிங்கமாய் எங்களை விமர்சித்திருக்கிறது. இது ஒட்டுமொத்த போராளிகளையும் களங்கப்படுத்தி நோவடித்திருக்கிறது.

கேவலம் வயிறுவளர்ப்பதற்காக ஒருபோராளி உடலை விற்கிறாள் என்றுசொல்லும் விகடனின் முகத்தில் இந்தப் பிரசுரம் ஒருமாறாத கறை. வாழ்வின் முழுநாட்களும் இடப்பெயர்வுகளையும் வலியையும் வேதனையையும் காயங்களையும் இழப்புகளையும் கண்ணீரையும் சவால்களையும் எதிர்கொண்டபடி வாழ்க்கையில் இன்றுவரை போராடிக் கொண்டிருக்கும் என் போன்ற முன்னாள் போராளிகளுக்கு விகடன் செய்த துரோகத்தை ஒரு பொழுதும் மன்னிக்க முடியாது.

முன்னாள் போராளியான நானும் சொல்கிறேன். யாரிடமும் கருணைதேடியோ பரிதாபம் ஈனவோ இதை நான் எழுதவில்லை. ஈழத்தின் நிலை இதுதானடா விகடா என்று சொல்வதற்கத்தான் எழுதுகிறேன். இல்லாத கற்பனைகளில் மிதக்கும் விகடன் போன்றவர்களுக்கு ஒன்றைமட்டும் சொல்கிறேன், தயவு செய்து எங்கோ இருந்து கொண்டு எங்கள் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்.

ஈழத்து நிலத்தில் இன்னமும் காயாதவீரமும் ஈகமும் வாழ்கிறது. ஒவ்வொரு பெண்ணும் தன் நிழல்களை இழந்தபின்னும் கொதிக்கும் அகோர வெய்யிலில் தன்மானத்தோடும் தலை நிமிர்ந்தும்தான் நடக்கிறாள். அப்பாவை இழந்த பிள்ளைகளை அறிவில் சிறந்தவர்களாகவும் சமூகத்தில் உயர்ந்தவர்களாகவும் ஆக்கிக் காட்டுகின்ற அம்மாக்களான முன்னாள் பெண் போராளிகளின் தைரியத்தின்முன் இல்லாத பெயரில் கட்டுரை வெளியிட்டிருக்கும் விகடனின் எழுத்துவெறுந் தூசு.

படையினரையும் அமைச்சர்களையும் தமிழ் வயோதிபர்களையும் தமிழ் மாணவர்களையும் சிங்கள யாத்திரீகர்களையும் குற்றம்குறை சொல்வதற்கு அருளினியனுக்கும் ஆனந்தவிகடனுக்கும் ஆசையென்றால் அதற்கு முன்னாள் போராளிகள்தான் பலிக்கடாவா? அதற்கு எங்கள் ஆன்மாவை விற்பார்களா?

ஒரு மூத்த போராளி இப்படியான நிலைக்கு எந்த தருணத்திலும் இடமளிக்க மாட்டாள் என்பதையும் நாங்கள் எப்படி நிரூபிப்பது? இது ஒவ்வொரு பெண்போராளிகளையும் களங்கப்படுத்தும் நிலையை உருவாக்கியிருக்கிறது. ஒவ்வொரு பெண்போராளிகளது நெஞ்சும் குமுறுகிறது. இன்றைய காலத்தில் நாங்கள் எப்படி எங்களை நிரூபிப்பது? உயிர்கொண்டு நாங்கள் நடத்திய போராட்டத்தை போராடிய எங்களை உங்கள் பரபரப்பிற்காகவும் வியாபாரத்திற்காகவும் விற்பனை செய்யாதீர்கள்.

http://www.facebook.com/parani.krishnarajani/posts/477603692292508

Anonymous said...

நீங்க தான் குற்றம் சொல்லிக்கிட்டிருக்கீங்க.ஆனா அருளினியன்,விகடனின் அஜால் குஜால் பத்திரிகை டைம்பாஸ் ல இந்தவாரம் (1-12-2012) தமன்னா பத்திப் பேசாதீங்க என்ற தலைப்பில் ஒரு இன்டர்வியூ பண்ணியிருக்கார்.ஆபிசில இன்னும் நிறைய பண்ண‌ச் சொல்லியிருக்காங்கன்னு வெறியா சுத்துறாராராம்.என்னவோ போடா மாதவா. அவங்க திருந்த சான்சே இல்லைடா...

Scorpio said...

nan viduthalaip pulikalukku edhiraana sindhanai udaiyavan. adhu ille ippo vishayam... andha katturai padiththa pozhuthu varuththam eerpattathu uNmai. UnghaL vaathangaLum siRappaaaka uLLathu. Nalla logic irukku.Adhu Table work aaka irukka adhikam vaaippu uLLathu.

Anonymous said...

அருளினியன் ஒரு பெண் பித்தர் என்றும் அறிகிறோம்.இவனைக் கண்டாலே பெண்கள் காத தூரம் ஓடுகின்றார்களாம்.