Wednesday, 12 November 2014

'பிறக்காத பிள்ளைக்கு தாலாட்டு' - 'தினமலர்' &'தினகரன்' பொய்ப்பாட்டு...!
தினமலரில் அடிக்கடி ஒரு அறிவிப்பு வரும்.

"தினமலர் நிருபர் என்று சொல்லிக்கொண்டு யாரும் செய்தி வெளியிட அன்பளிப்பு கேட்டால் உடனே எங்களுக்கு தகவல் சொல்லுங்கள்.அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்."

இதைக் கண்டவுடன் படிப்பவர்கள் அனைவரும் தினமலர் லஞ்சத்தை அடியோடு எதிர்க்கிற‌து. தனது நிருபர்களிடம் இருந்தே அதை நடைமுறைப்படுத்துகிறது என நினைப்பார்கள்.

தினமலர் நிருபர்கள் எல்லா இடங்களிலும் கவர் வாங்குகிறார்கள் என்று சொல்ல முடிகிறதோ இல்லையோ, ஆனால் ஆங்கில ஊடகங்களின் நிருபர்களைப் போல அதிகார மட்டத்திடம் ஒரு Obligation எனச் சொல்லிக் காரியம் சாதிப்பவர்கள் தான். 

கவர் வாங்கும் பத்திரிகையாள‌ர்களை விட இவர்கள் சாதிக்கும் காரியத்தின் 'மதிப்பு' மிக அதிகம். விதி விலக்குகள் ஒன்றிரண்டு இருக்கலாம். விதிவிலக்குகள் தினமலருக்கு மட்டுமல்ல அனைத்துப் பத்திரிகைகளுக்கும் உண்டு .

'தினமலர்' நிருபர் செய்தி வெளியிட லஞ்சம் வாங்கினால் அதன் நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாகச் சொல்கிற‌து. அதன் முதலாளி ஆதாயம் எதிர்பார்த்து செய்தி வெளியிட்டால் யார் நடவடிக்கை எடுப்பது..?
*


பதவியேற்ற ஓரிரு நாளில் ஒவ்வொரு பத்திரிகையும் தங்கள் விருப்பு வெறுப்புக்களின் அடிப்ப‌டையிலும்,தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலும் யார் யாருக்கு அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம் கிடைக்கும் எனச் செய்திகளை வெளியிட்டு வந்தார்கள். 

வெற்றி பெற்றதில் யாரையாவது ஒருவரைச் சுட்டிக்கட்டி அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என ஊகச் செய்திகளை பிற ஊடகங்கள் வெளியிட்டன. நாட்டின் பிற ஊடகங்களே எதிர்பார்க்காத செய்தியை தமிழ்ப் பத்திரிகைகளான தினகரன் மற்றும் தினமலர் வெளியிட்டன. 

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றுப்போன இல.கணேசனுக்கு மத்திய அமைச்சர் பதவி,அதுவும் கேபினட் அந்தஸ்தில் கிடைக்கும்,மேலும் என்ன இலாகா கிடைக்கும் என அறுதியிட்டுச் சொல்லின. 

பொதுவாய் இல.கணேசன் என்றாலே பத்திரிகைகள் பம்முவதும்,ஆதரவுச் செய்திகளை அள்ளித் தெளிப்பதும் தெரிந்த விஷயம் தான்.ஆனாலும் தோற்றுப்போன ஒருவருக்கு அமைச்சர் பதவி என்று எழுதுவதற்கு எவ்வளவு பொய் நெஞ்சுரம் வேண்டும்.? 

அது இவர்களுக்கு நிறைய இருக்கிறது.

ஜூன் 10,2014 தினமலர் செய்தி


நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்ற பின்பு இரு வாரங்கள் கழித்து இந்தச் செய்தியை தினமலர் வெளியிடுகிறது. தோற்றுப்போன மனிதருக்கு அமைச்சர் பதவி என்று செய்தி வெளியிட்டால் படிக்கும் வாசகன் என்ன நினைப்பான் என்று துளியும் கருதவில்லை.அது தனது வாசகனை எடை போடுவது இப்படித்தான். தனது ஆதாயம் இருக்கிறது என்று எண்ணிய‌ பின்பு எதற்கும் துணிவது தானே அவர்கள் 'நியாயம்..'?

அமைச்சரவை விரிவாக்கம் எதிர்பார்த்தபடி நடைபெறவில்லை.ஆனாலும் தினமலர் ஓய‌வில்லை.இல.கணேசன் அமைச்சரானால் என்னென்ன காரியம் சாதிக்க வேண்டும் என பெரிய லிஸ்ட் வைத்திருக்கிறது போலும்.


அடுத்ததாக அக்டோபர் 13 அன்று டீக்கடை பெஞ்சில் இல.கணேசன் அமைச்சராகப் போகிறார் என பொய்யை மீண்டும் எழுதுகிறது. கவர்னர் பதவியையே துச்சமென மதித்தவர்,நாட்டுக்குச் சேவை செய்ய வெயிட்டிங் லிஸ்டில் காத்திருக்கிறார் என ஒளிவட்டம் சுற்றுகிறது.
**தினம‌லர் யோக்கியதைக்கு சற்றும் குறைந்ததல்ல,தினகரன் யோக்கியதை. 

தனது பிழைப்புக்காக ஒரு தட்டில் சாப்பிட்டவனுக்கு விஷம் வைக்கவும் தயங்காத மாறன் சகோதரர்கள் இன்று மிகப்பெரிய இக்கட்டில் இருக்கிறார்கள். திகாரில் களி எண்ணுவதை எப்படியாவது தவிர்க்க நினைக்கிறார்கள்.அதனால் தான் பாரதீய ஜனதாவை தங்கள் வசமாக்க ஆதரவுச் செய்திகளை அள்ளித் தெளிக்கிறார்கள். அதிலும் இல.கணேசனை குளிர்வித்தால் அவர் நெட்வொர்க் வழியாக‌ எதும் காரியம் கிட்டுமா என முயற்சிக்கிறார்கள். அதனால் தான் இச்செய்தி.
தேர்தல் முடிவடைந்து பதவியேற்பு நடைபெறும் முன்னர் இல.கணேசன் மத்திய அமைச்சர் ஆகிறார் என ஒரு செய்தி.  

ஆனாலும் காரியம் கைகூடவில்லை என்பதால் அதன் பின்பு சற்று இடைவெளி விட்டு இன்னொரு செய்தி.

ஜூன் 7,2014 தினகரன் செய்தி

இன்றோ மோடி தனது அமைச்சர‌வையை விரிவாக்கம் செய்து விட்டார். இல.கணேசனுக்கு திருவோடு தான் கிடைத்துள்ளது. இல.கணேசன் அமைச்சராவதை அவரை விட ராமசுப்பையர் மகன்கள்,பேரன்கள் மற்றும் கருணாநிதியின் பேரன்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருத்திருக்கிறார்கள் போலும்.

அதனால் வரிந்து கட்டி இல.கணேசனே மறந்து போனாலும் அவர் அமைச்சர் ஆகிறார்,ஆகப்போகிறார் என பரலோக ராஜ்யம் சமீபித்திருப்பதாய் பாதிரிகள் பிரசங்கம் போல,நம்முள் பரவசத்தை உருவாக்குகிறார்கள். குறி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்து இல கணேசனுக்கு ஐ.நா.சபை தலைவர் பதவி கிடைக்கும் என இரண்டு ஊடகங்களும் எழுதும் என எதிர்பார்க்கலாம். கொஞ்சம் அசந்தால் இவர்களே இல.கணேசனை கேபினட் கூட்டம் நடக்கும் பொழுது உள்ளே தள்ளிக் கதவைப் பூட்டி விடவும் தயங்க மாட்டார்கள்.

சேலம் சிவராஜ் சித்த வைத்தியசாலை விளம்பரங்களில் ஒன்றைக் கண்டிப்பாய்ப் பார்க்கலாம்.எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என. 

அதன் உள்ளர்த்தம் வேறெங்கும் போய் ஏமாந்து விடாதீர்கள்,எங்களிடம் மட்டும் வந்து ஏமாறுங்கள் என்பது தான். நிருபர் என்று சொல்லிக் கொண்டு யாரும் காசு கேட்டால் கொடுக்காதீர்கள்,எங்களை அணுகுங்கள் என்ற தினமலர் அறிவுப்பும் இப்படித்தான்.

இவர்கள் எழுதும் கிசுகிசுக்கள் பெரும்பாலும் இப்படித் தான் பிறக்கின்றன. ஆனால் அதன் பொய்மையை இந்தச் செய்தியைப்போல் உரிக்க முடிவதில்லை.

தனது நலனுக்காய் எந்த சமரசத்தையும் எவர் காலிலும் விழத் தயார் நிலையில் இருப்பவர்கள் தான் நமது பத்திரிகை முதலாளிகள்.அப்படிப்பட்டவர்கள் பொய்ச் செய்தியை வெளியிட்டுத் தரகு வேலை செய்வதற்கா அஞ்சப் போகிறார்கள்.? தனக்கு ஆதாயம் கிடைப்பதற்காய் கூச்சம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் அதனைச் செய்வார்கள். 

தினமலரும் தினகரனும் அதைத்தான் செய்கின்றன. வாசகன் தான் வழக்கம் போல் ஏமாளி.


Thursday, 6 November 2014

குள்ளநரி சிங்கமாச்சி; கோசல்ராம் கதை அசிங்கமாச்சி...!
கோசல்ராம்.

முதலில் 'சுதேசமித்ரன்' பணி . பிறகு 'விகடன் பேப்பர்'.அடுத்து  'தினகரன்' ஏரியா கிரைம் பீட்,அடுத்து 'குமுதம்' நிருபர். அடுத்து 'தினகரன்' கிரைம் பீட் இன்சார்ஜ்...அங்கிருந்து 'குமுதம்' குழம்பு ஆசிரியர்.

இப்படித் தன் பத்திரிகை அனுபவத்தில் தகுதி திறமை தவிர்த்து பிற தொடர்புகளை வைத்து உச்சத்திற்கு வந்தவர். கோசல்ராம். இப்பொழுதோ பணி எதுவும் இல்லாத நிலையில் தனது நண்பர் ரஙகராஜ் பாண்டே உதவியுடன் 'தந்தி டிவி'யில் கருத்துச் சொல்லி வருகிறார்.(அது எப்படி எல்லாப் பய பிள்ளைகளும் கரெக்டா ஒன்னு சேருரீங்க)

'குமுதம்' குழும ஆசிரியராய் இருந்த பொழுது வரதுக்குட்டியுடன் கைகோர்த்துக்கொண்டு இவர் செய்த அட்டூழியங்கள் அதிகம்.

ஆனால் அதே கோசல்ராம் காரியம் முடிந்தவுடன் வரதுவால் தூக்கி எறியப்பட்டார். இப்பொழுது அழுகையும் புலம்பலுமாய் முகநூலில், "நான் உன்னை எப்படி நினைச்சிருந்தேன்,நீ இப்படிப் பண்ணிட்டீயே" என வரதராஜனை நோக்கி இன்னும் பாசம் போகாமல் சோக ராகம் பாடி வருகிறார்.

அதை ஒட்டி அவர் எழுதிய பதிவும்,நமது எதிர் பதிவும் இங்கே;

அவருக்கு எப்பவுமே எழுதத்தெரியாது என்பதால் காசிமுத்து மாணிக்கம் கதையைப் பகிர்ந்துள்ளார்.நல்லது. வரதராஜனை சிங்கமாகவும்,அவரை பூனையாகவும்,அவரால் குமுதம் அலுவலகத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட ஊழியர்களை எலிகளாகவும் அந்தக்கதையில்  உருவகம் செய்யப்பட்டுள்ள‌து.இதுவே தவறு.வரதராஜன் என்றும் சிங்கம் அல்ல.அவர் என்றும் நரி தான்.ஆக அந்தக் கதையின் அடிப்படையே தவறு. அதுவும் போக  கோசலின் வார்த்தையிலேயே என்றும் உண்மை இல்லாத பொழுது  கதையில் என்ன உண்மை எப்படி இருக்க முடியும்..?

நாம் அவருக்கு பொருந்துவது போல ஒரு கதையை எழுதியுள்ளோம்.

ரந்து விரிந்த அந்த வனாந்திரத்திற்கு ஒரு வயதான சிங்கம் ராஜாவாக இருந்தது.ஒரு நாள் அந்த வயதான சிங்க ராஜா இறந்துபோனார். புதிய ராஜா பதவி ஏற்றுக்கொள்ள வேண்டுமே...!

 அதனால் வெளிக் காட்டில் வசித்துக்கொண்டிருந்த வாரிசு இங்கே ராஜாவாக பொறுப்பேற்றுக்கொண்டது. புதிய சிங்க ராஜாவு வேறொரு காட்டில் எப்பவும் பிசி. அதனால‌ இந்தக் காட்டு ராஜாங்கத்தையும் பார்த்துக்கொள்ள முடியல. காட்டில் வளர்க்கப்படாத அந்த .கான்வெண்ட் சிங்கத்திற்கு வேட்டைக் குணமும் காடு பற்றிய அறிவும் குறைவு. அதனால் காட்டோட நிலையை அறியாம, தனது ராஜா பதவியின் நிலையையும் அறியாம, தனது பதவியை நரியிடம் கொடுத்தது. அது குள்ள நரின்னு தெரியாம:

குள்ள‌நரியும் சிங்கத்தோட குகையிலேயே வந்து தங்கிக்கொண்டது. தனக்கு நாட்டாமை பதவி கிடைத்ததால் தனது நாட்டாமையைக் காட்ட ஆரம்பித்தது குள்ள‌நரி.

சிங்கத்தோட குகையில தங்கிட்டதாலவோ என்னவோ உடம்பு முழுக்க சிங்கச் சாயம் பூசிக்கொண்டு, சிங்கம் போலவே மாறி ‘நான்தான் ராஜா’ என்று தம்பட்டம் அடிக்க தொடங்கியது. காட்டோட கணக்கு வழக்கில் எல்லாம் கைவைத்து சுருட்டியது. ராஜாவுக்கு இருந்த சொத்தை சுருட்ட தொடங்கியது. வெளிக்காட்டில் இருந்த ராஜாவுக்கு குள்ள நரியோட திருவிளையாடல் எல்லாம் போனபடியே இருந்தது. ஆவேசமா புறப்பட்டு வந்த சிங்கம் குள்ள‌நரியோட திருட்டு கணக்கை எல்லாம் எடுத்து போலீஸில் புகார் கொடுத்துடுச்சி.குள்ள‌ நரி கைதாகி தப்பிச்சோம் பிழைச்சோம்னு வெளியில வந்து ‘அவமான பட்டதுக்கு’ காரணம் யார்னு கருவிகிட்டிருந்துச்சு. உடம்பெல்லாம் பூசிக்கொண்டிருந்த சிங்கச் சாயம் வெளுத்துபோச்சேன்னு புலம்பியது.

அப்பதான் சிங்கத்தோட குகையில இருந்த 21 காட்டு எலிகள்தான் நமக்கு எதிரா உள்ளடி வேலைய பார்த்திருக்கும்னு அதுவாக‌வே புரிஞ்சிகிட்டது.
திருடனுக்கு யாரை பார்த்தாலும் போலீஸாதான் தெரியும்.

அந்த மாதிரி எலிகளை எல்லாம் பார்த்து தனக்கு எதிரிகள் என புலம்ப ஆரம்பித்தது. அந்த எலிகளை எல்லாம் ஒழித்துக்கட்ட வேண்டும். அதை நாம் செய்தபடியும் தெரியகூடாது என்று யோசித்தது குள்ள நரி. சரியான ஒரு கங்காணி பூனை இருந்தால் நன்றாக இருக்கும் என்று பல இடங்களிலும் தேடி அலைந்தது. அப்போதுதான் ஏற்கனவே குள்ள நரியால் அடித்து விரட்டப்பட்ட பூனை எதிலே வந்தது. அந்த பூனை எல்லா தப்பு வழியிலும் போகக்கூயது என்று தெரிந்துதான் குகையில் இருந்து ஏற்கனவே அடித்து விரட்டி விட்டிருந்தது குள்ள‌நரி.

 இப்போது அந்த பூனை சரியாக இருக்குமே என்று பேசியது. உனக்கு கங்கானி வேலை. என் குகையில் உள்ள பழைய எலிகளை வேட்டையாடி விரட்டனும் என்று 21 எலிகளோட பட்டியல கொடுத்தது.

காலக்கொடுமை என்னவென்றால், இந்த கள்ள பூனை, பூனையாகவே இருந்திருந்தால் பரவாயில்லை. கங்காணி பதவியை வைத்து அடிக்கடி அதுவும் ‘நரிவேஷம்’ கட்ட ஆரம்பித்தது. எவ்வளவு பெரிய நரியோடு நட்பு எனக்கு கிடைச்சிருக்கு தெரியுமா என்று குகையிலும், வெளியிலும் ஆடத்தொடங்கியது. குகையில் இருந்த 21 எலிகளையும் அவமானப்படுத்தியது. ஒவ்வொன்னா அடிச்சு வெளியே விரட்டினபடியே இருந்தது.

வெளியில போயிருந்த சிங்க சாயம் பூசிய  குள்ள நரி குகைக்கு வந்ததும், இன்னைக்கு ஒன்ன காலிபன்னிட்டேன் என்று பெருமையா பட்டியல் வாசிக்கு. குள்ள நரியும் ஆஹா ஓஹோ என்று சலுகை என்ற எலும்புத்துண்டை எடுத்து வீசும். கள்ள பூனைக்கோ இப்படி வீசிய எலும்புத்துண்டு ருசி தாங்க முடியல. அதனால எலி வேட்டைய வேகமா நடத்தியது.

ஒரு கட்டத்தில் குகையில் இருந்த எலிகள் எல்லாம் காலி. குள்ளநரிக்கு சந்தோஷம்.

ஆனா இப்போ கள்ள பூனை மேல கவனத்தை வைத்தது குள்ள நரி.

எவ்வளவு எலும்புத் துண்டை தின்னு கொழுத்திருக்கு. தவிர நம்ப விஷயத்தை எல்லாம் எவ்வளவு தெரிஞ்சி வச்சிருக்கு. இனியும் இதை விட்டு வைக்கக்கூடாது என்று கணக்கு போட்டது.

இந்த குள்ள நரி இப்படித்தான் என்று கள்ள பூனைக்கும் தெரியும். அதனால‌ காட்டு போலீஸில் இருந்த நரியோட எதிரிங்ககூட கைகோர்த்து வேவு வேல பார்க்க ஆரம்பிச்சது. ஆஹா..அடிமடியிலேயே கைவைக்க ஆரம்பிச்சிடுச்சுப்பா கள்ளப் பூனை என்று குள்ள நரி ஆவேசமானது. அந்த கள்ளபூனை வந்தா குகைக்கு வெளியவே நிறுத்தி விரட்டி அனுப்பிடுங்க. இது நரி ராஜா உத்தரவுன்னு சொல்லுங்கன்னு ஆர்டர் போட்டிருச்சு.

வழக்கம்போல கங்காணி பந்தாவோட வந்த பூனை வாசல்லலேயே நின்று அவமானப்பட்டு போச்சு. அப்படி துரத்தப்பட்ட பழைய கங்கானி பூனைதான் இப்ப குட்டிகுட்டி  கதையா அடுத்தவங்க கிட்ட கேட்டுக்கிட்டு சொல்லிச் சொல்லி  குள்ள நரியோட நாட்டாமைய  நாறடிச்சுகிட்டிருக்காம்.


****
சூடுபட்ட கள்ளப்பூனையும்,குள்ளநரியும்பாதிக்கப்பட்ட  21 எலிகளோட பட்டியல்

ரஞ்சன்- குமுதம் எடிட்டர்.
ரவிஷங்கர்- குமுதம் சினிமா சீனியர் நிருபர்
தளவாய் சுந்தரம்- குமுதம் சீனியர் நிருபர்.
கோபால்- குமுதம் புகைப்படக் கலைஞர்.
சித்திரிம் மத்தியாஸ்- குமுதம் புகைப்படக் கலைஞர்.
திண்டுக்கல்-மருதநாயகம்
கரூர்-உன்னி கிருஷ்ணன்

கோடீஸ்வர ராவ்- குமுதம் (தெலுங்கு) குமுதம் ஜோதிடம் ஆசிரியர்
மற்றொரு கோபால் ஜோதிடம் (தமிழ்) உதவி ஆசிரியர்.

இளங்கோவன். குமுதம் ரிப்போர்ட்டர் எடிட்டர்.
பா.ஏகலைவன்- ரிப்போர்ட்டர் சீனியர். தலைமையிடம்
ஆந்தை குமார். ரிப்போர்ட்டர் சீனியர் தலைமையிடம்
திருமலை- ரிப்போர்ட்டர் சீனியர்-மதுரை
கா.சு. வேலாயுதம்- ரிப்போர்ட்டர் சீனியர்.
வேட்டை பெருமாள்-ரிப்போர்ட்டர். ரிப்போர்ட்டர் உதவி ஆசிரியர்
மோகன்- ரிப்போர்ட்டர் உதவி ஆசிரியர்.
பாலஜோதி- ரிப்போர்ட்டர் உதவி ஆசிரியர்
மலைமோகன்  ரிப்போர்ட்டர் உதவி ஆசிரியர்.
விஜயானந்த்- ரிப்போர்ட்டர் நிருபர்.
கலைவாணன்-பாண்டி ரிப்போர்ட்ட‌ர் நிருபர்
மீடியா ராமு- ரிப்போர்ட்டர் புகைப்படக் கலைஞர்.
முருகேசன்-ரிப்போர்ட்டர் நிருபர்.

 மேலே  பட்டியலில் உள்ள அனைவரும் குமுதம் முதலாளி ஜவகர் பழனியப்பனுக்கு வேண்டப்பட்டவர்கள் என்றதாலேயே 21 எலிகளாக பட்டியல் எடுக்கப் பட்டார்கள். இவர்கள் ஒவ்வொருவரையும் உளவியல் ரீதியாய் சித்ரவதை செய்தும் பல வழிகளில் அவமானபப்டுத்தியும் அவர்களை வெளியேற்ற கோசல்ராம் செய்த அட்டுழியம் எழுத்தில் வடிக்க முடியாதது.

அதே போன்று சேஷையா ரவி, வெங்கிட் ஆகிய இருவரும் கோசலுக்கு நெருங்கிய நண்பர்கள். விகடனில் இருந்து அவரே அழைத்து வந்தார். கடையில் அந்த இருவரும் அவமானப்பட்டு ஓடிப்போனார்கள்.நெருங்கிய நண்பர்களான வெங்கட்,சேஷையா ரவி விஷயத்தில் கோசலின் ஆட்டம் அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும்.

இவ்வளவு சூடு பட்ட பின்பு தான் கள்ள‌ப்பூனைக்கு புத்தி வந்திருக்கிற‌து.

 குள்ள நரியும் பூனையும் எப்பொழுதும் நண்பராக முடியாது என.

அடுத்து தான், எப்பவும் ராஜா ஆக முடியாது என குள்ள‌நரிக்கு என்று புரியுமோ,எப்பொழுது பாடம் கற்பிக்கப்ப‌டுமோ.?..


பொறுத்திருப்போம்.

Wednesday, 29 October 2014

தினகரன்-அடியாள் ஆர்.எம்.ஆர்.,அடாவடி-வீதியில் 200 தொழிலாளர் குடும்பங்கள்...!


தினகரனை மாறன் குடும்பம் வாங்கிய சிறிது காலத்தில் நடந்த சம்பவம் இது.

மாறன் குடும்பம் வாங்கிய பின்பு ரவீந்திரன் என்பவர் நியூஸ் எடிட்டராய் சென்னை தின்கரனில் பணிபுரிந்து வந்தார். இவர் தினமணியில் இருந்து இங்கு வேலைக்குச் சேர்ந்தவர். இவர் ஒருநாள் அலுவலகத்திலேயே ரத்த வாந்தி எடுத்து விடுகிறார். உடன் பணியாற்றியவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு செல்ல முடிவு செய்து அலுவலகத்தில் இருந்த காரை அழைக்கின்றன்ர்.

ஆனால் நிர்வாகத் த‌ரப்பிலோ காரைத் தர மறுத்து விடுகின்றனர். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் நாங்கள் காரை கொடுக்க மாட்டோம் என பிடிவாதமாய் மறுத்து விடுகின்றனர். கடைசியில் ஆட்டோ பிடித்து தான் அவரை அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றினர். (இன்று அவர் 'தி இந்து' வில் பணியாற்றுகிறார்.)

உலகின் பணக்காரர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ள கலாநிதி மாறனின் நிறுவனத்தில் தான் இப்படி நடக்கிறது. இது போல தொழிலாளர்கள் உயிரை துச்சமென மதித்த அவர்களுடன் விளையாடிய பல சம்பவங்கள் அங்கு நடைபெற்றிருக்கின்றது. ஆம்.அதிகார துஷ்ப்ரயோகம்,முறைகேடு மூலம் மட்டும் மாறன்களின் சாம்ராஜ்யம் கட்டி எழுப்பப்படவில்லை. எல்லா கார்ப்பரேட் நிறுவனங்களைப் போல் இவர்களின் வளர்ச்சியிலும் தொழிலாளர்களின் வியர்வை மட்டுமல்ல ரத்தமும் சிந்தப்பட்டிருக்கிறது.

அதன் நீட்சியாய் மொத்தமாய் தமிழ்நாடு முழுவதும் 200 ஊழிய‌ர்களை விரட்டி அத்தனை குடும்பங்க‌ளையும் நடுத்தெருவிற்கு கொண்டு வந்து விட்டது நிர்வாகம். எடிட்டோரியல்.சர்குலேஷன்,அச்சாக்கம் என அனைத்துத் துறைகளிலும் இவர்கள் நிறைந்திருக்கின்றனர்.

dinakaran
அடியாள் ஆர்.எம்.ஆர்.


நேற்று திடீரென்று ஏறத்தாழ 200 ஊழிய‌ர்களை,பல்வேறு காரணங்களைச் சொல்லி வரும் அக்டோபர் 30 ஆம் நாளிலிருந்து பணி நீக்கம் என திடீர் என உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் சொல்லியிருக்கின்றனர்.

ஒருவரிடம் அவர் 50 வயது தாண்டியதை சொல்லி பணி நீக்கம் செய்துள்ளனர். இதுதான் காரணம் என்றால் நீக்கப்பட வேண்டிய முதல் நபர்கள் கலாநிதி மாறனும் ஆர்.எம்.ஆரும்.தான். நீக்கப்பட்டவர்கள்  பட்டியலில் பழைய தினகரன் ஆட்கள் கணிசமான அளவில் இருக்கின்றனர்.

முதன்மை நிருபர் சுரேஷ்


ஒரு தொழிலாளியை பணி நீக்கம் செய்ய வேண்டுமென்றால் ஒரு மாதம் முன்பே அவருக்கு முன் அறிவிப்பு கொடுக்க வேண்டும். அதைத்தொடர்ந்து அவருக்கு மூன்று மாத ஊதியத்தையும் அளிக்க வேண்டும். ஆனால் இது எதையுமே செய்யாமல் தன்னிச்சையாய் நிர்வாகம் இத்தனை பேரையும் வீதியில் நிறுத்தியுள்ளது.

 இந்த முடிவு அனைத்தும் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர்.எடுத்தது. இவருக்கு இந்த ஆலோசனையைச் சொல்லுவதற்கென்றே சென்னை பதிப்பு முதன்மை நிருபர் சுரேஷ்,மற்றும் ஆர்.எம்.ஆரின் துதிபாடிகள் சுற்றியிருக்கின்றனர்.முதன்மை நிருபர் சுரேஷ் என்பதை விட,மாலைச்சுடர் காலத்தில் இருந்து 18 வருட காலமாய் காவல்துறையின் விசுவாசி என்பது மிகச்சரி.

ஆர்.எம்.ஆரின் அல்லக்கைகள் இந்த பணி நீக்கத்தை அலுவலகத்தில் நியாயப்ப‌டுத்தவும் செய்கின்றனர். தினகரன் நாளிதழ் நட்டத்தில் இயங்குவதாகவும்,ஆகவே அதற்கு இதுபோன்ற நடவ்டிக்கைகள் தவிர்க்க முடியாதது என்றும் பேசிக்கொள்கின்றனர். அவர்கள் கூற்றுப்படி உண்மையில் நட்டமா என்பது தெரியவில்லை. அப்படியே நட்டம் இருந்தாலும் அதில்,வேலை செய்பவர்களுக்கு எந்தப்பங்கும் இல்லை. பங்கு போட வேண்டிய அவசியமும் இல்லை.

நட்டம் இருந்தாலும் அதைத் தவிர்க்க வழியுள்ளது. அனைத்துப் பதிப்புகளிலும் ஆர்.எம்.ஆரால் நியமிக்கப்ப‌ட்ட மேலாளர்கள் தான் கோலோச்சுகின்றனர். இவர்களும் ஆர்.எம்.ஆரும் இணைந்து அடிக்கும் கூட்டுக்கொள்ளையை நிறுத்தினாலே நிறுவனம் லாபத்தில் இயங்கும் என்பது தான் உண்மை. நாட்டை மட்டுமல்ல,நாட்டைச் சுரண்ட பக்கபலமாய் இருந்த தாத்தாவையே சுரண்டிய மாறன்களிடமே ஒருவர் ஆட்டையைப் போட முடியுமென்றால் அவர் எப்பேர்ப்பட்ட கே.டி.யாய் இருக்க வேண்டும். அதுதான் ஆர்.எம்.ஆர்.

அதுவுமற்று தினகரனை இவர்கள் நடுநிலையான நாளிதழாய் நடத்தினால் விளம்பர வருவாயும் வருமானமும் அதிகரிக்கும். ஆனால் இவர்கள் தங்கள் அரசியல் வாழ்வை காப்பாற்றவும்,அதன் மூலம் செய்த அதிகார துஷ்பிரயோகத்தையும் செய்த பல நூறு கோடி மோசடிகளை மறைக்கவும் தான் இதழை நடத்துகின்றனர்.

ஆகவே நட்டம் எனக்கூறப்படுவதற்கு எந்தவிதத்திலும் தொழிலாளர்கள் பொறுப்பாக முடியாது.

இந்தப் பணி நீக்கத்தால் பாதிக்கப்பட்டோர் சென்னை மட்டுமல்ல அனைத்துப் பதிப்புகளிலும் இருக்கின்றனர். இன்று அவர்கள் அழுத அழுகையும் புலம்பலும் சொல்லி மாளாது. வெளிறிய முகமும் எதிர்காலத்தை தொலைத்த அச்சமும் அவர்களிடம் காணப்பட்டது.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே 
செல்வத்தைத் தேய்க்கும் படை. 

கருணாநிதி உரை.

கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்

என்னும் திருக்குறளை நினைத்துக் கொண்டு கண்ணீர் சிந்தினாலோ,மனதை ஆற்றுப்படுத்தினாலோ ஒன்றும் காரியம் ஆகாது.

ஆகவே பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு 'தினகரன்' தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டாலோ,அல்லது மாறனின் போட் கிளப் வீட்டையோ,ஆர்.எம்.ஆரின் அடையாறு வீட்டையோ முற்றுகையிட்டாலோ தான் விடிவு பிறக்கும். இல்லை என்றால் எதுவுமே விடியாது.

 தொடர்புடைய இணைப்புகள்

http://kalakakkural.blogspot.in/2012/12/4.html

http://kalakakkural.blogspot.in/2014/03/blog-post_21.html

http://kalakakkural.blogspot.in/2013/08/blog-post_25.html

Tuesday, 28 October 2014

குமுதம் 'மேல்மாடி' காலி..? இதுவா உங்க சோலி..!


குமுதத்தில் வெளியான‌  பழைய நகைச்சுவை.

இரண்டு நண்பர்கள்.

முதலாமவன்,"இன்று திருவீதி உலா பார்க்க‌ போகலாமா ? என இரண்டாமவனைப் பார்த்துக் கேட்டான்.

இரண்டாமவனும் மிக்க மகிழ்ச்சியுடன் 'ஓ.பேஷா போலாமே" எனச் சம்மதித்தான்.

இருவரும் வேடிக்கை பார்க்க சென்றனர்.

முதலாமவன்," நம்ம‌ ராஜா குதிரையில் வருவது மிகவும் கம்பீரமாய் இருக்கிறதல்லவா..? எனக் கேட்டான்.

ராஜா யாரு..? குதிரை யாரு ..? என இரண்டாமவன் திருப்பிக் கேட்டான்.

முதலாமவனுக்கு அதிர்ச்சி.

"மேலே உட்கார்ந்திருப்பது ராஜா,கீழே இருப்பது குதிரை" என்றான்.

மேலேன்னா என்ன? கீழேன்னா என்ன ? என்று அடுத்த கேள்வியைப்போட்டான்.

முதலாமவன் அதிர்ச்சியாகி,மிகவும் கோபத்துடன்,அவனைக்கீழே தள்ளி,இவன் மேலே அமர்ந்து கொண்டு,இப்பொழுது நான் மேலே,நீ கீழே என்று இறுக்கமாய்ச் சொன்னான்.

'நீ' அப்படின்னா என்ன..? 'நான்' அப்படின்னா என்ன..? என்று அடுத்த கேள்வியைத் தொடுத்தான் இரண்டாமவன் .

இப்பொழுது முதலாமவன் மிரண்டு போய் ஆளை விட்டால் போதும் என த்லை தெறிக்க ஓட்டம் பிடித்தான்.

கேள்வி கேட்ட இரண்டாமவனைப் போலத்தான் இன்றைய குமுதம் எடிட்டோரியல் டீம் இருக்கிறது.


ன்று வெளியானகுமுதம் வார இதழில் ஜெ... என்ற தலைப்பில் அட்டைப்பட கவர் ஸ்டோரி. குமுதம் அட்டை முழுவதும் லேமினேஷன்.நகரெங்கும் வண்ண போஸ்டர்.

'குமுதம்' இதழை தனது கட்டுப்பாட்டில் வைத்து நடத்திக் கொண்டிருக்கும் வரதராஜன் போயஸ் கார்டன் இருக்கும் திசை நோக்கியும்,மோடியின் வீடு இருக்கும் இடம் நோக்கியும் சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கிய பின் தான் தனது அலுவலக சேரில் அமர்வார் என்பதால் நாம்  இந்தக் கட்டுரையை ஜெ.எதிர்ப்பு என்னும் கண்ணோட்டத்தில் துளியும் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் அதிகம் விற்பனையாகும் ஜனரஞ்சகமான இதழ் என்பதால் ஜெயலலிதா ஆதரவு நிலையை சுவாரசியமாகவும் அனைவரும் படிக்கும் வண்ண‌மும் சொல்லியிருப்பார்கள் என்று எதிர்பார்த்தோம்.

'மன உறுதி குன்றாத ஜெ...' 'பீனிக்ஸ் பறவை போல் திரும்ப உயிர்த்தெழுவார்' என்றோ அல்லது வழக்கு மேல்முறையீட்டில் 'ஜெ.வெல்வது உறுதி' என்ற வடிவத்தில் கட்டுரையோ அல்லது ஜெ.ஆதரவு நிலைய வித்வான்களின் கருத்தையோ,பொதுமக்கள் ஜெ.வுக்கு ஆதரவு நிலையில் முன்பை விட உறுதியாய் இருக்கிறார்கள் என்றோ 'மக்களின் முதல்வர் ஜெ...'என்ற ரீதியிலோ எதையாவது எழுதியிருப்பார்கள் அல்லது யாரையாவது விட்டுச் சொல்லச் சொல்லியிருப்பார்கள் என்று நினைத்து தான் வாங்கினோம்.

உள்ளே இடம் பெற்றிருந்தது 8 பக்க கவர் ஸ்டோரி.அதில் என்ன இடம்பெற்றிருந்தது என்னவென்றால் ஜெ.சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த பிறகு வெளியிட்ட அறிக்கை,நடிகர் ரஜினி காந்த்,மத்திய அமைச்சர் மேனகா காந்தி  ஜெயலலிதாவுக்கு அனுப்பிய கடிதங்கள்,பதிலுக்கு ஜெ.அனுப்பிய நன்றிக் கடிதங்கள் இது தான்.இதைத் தாண்டி ஒரு வார்த்தை கூட இல்லை.


ஜெ.அனுப்பிய அறிக்கை உட்பட அனைத்தும் 19 ஆம்தேதி,20 ஆம் தேதி தமிழ்,ஆங்கிலம் என அனைத்து ஊடகங்களிலும் (கலைஞர் தொலைக்காட்சி ,முரசொலி தவிர) வரி விடாமல் வெளிவந்து விட்டது. ஜெயா டிவி அரை மணிக்கு ஒருமுறை இரண்டு நாட்கள் இதனை ஒளிபரப்பியது. ரஜினி கடிதம் பின்னணி,மேனகா கடிதம் பின்னணி என சில ஊடகங்கள் அதனையும் கிசுகிசு எழுதி வெளியிட்டு விற்பனை செய்து விட்டன.

இந்த நிலையில் எட்டு நாட்கள் கழித்து வந்த வார இதழில் அதனை அப்படியே மறுபிரசுரம் செய்வதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்.? சரி.சிந்திக்க மூளையில்லாததால் அப்படியே பிரசுரம் செய்து தொலையட்டும்.

ஒவ்வொரு,அறிக்கை, கடிதம் முன்போ,பின்போ எடிட்டோரியல் கருத்தாக ஏதாவது நான்கு வார்த்தை எழுதியிருக்கலாம்,அதுவும் இல்லை.

வெறும்  இரண்டு வரி சொந்தமாய் எழுத முடியவில்லை.இதற்கு எதற்கு எடிட்டோரியல் டீம்..? இன்று எத்தனை பத்திரிகையாளர்கள் இதனைப் பார்த்து காறித் துப்பியிருப்பார்கள்..?

எட்டு  நாட்கள் முன்பு பேக்ஸில் வந்த அறிக்கையையும் மின்னஞ்சலில் வந்த புகைப்படங்களையும் அப்படியே லே அவுட் செய்வதற்கு எதற்கு எடிட்டோரியல் ஆட்கள்..? அவர்களுக்கு லட்சக்கணக்கில் தண்டச் சம்பளம்,அதுவும் செட்டியார் காசில்..?

 லே அவுட் ஆர்ட்டிஸ்ட் மட்டும் போதுமே..? அதுவும் அந்த லே அவுட்டும் மகா கேவலம்.

மூன்று ரூபாய்க்கு விற்பனை ஆகும் நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையே அம்மாவின் புராணம் பாடுவது தாண்டி சில நேரம் சுவராசியமாய் இருக்கிறது.

ஒரு ஜனரஞ்சக இதழ் எப்படி எல்லாம் இருந்திருக்க வேண்டும்..? எட்டு பக்கங்களை எப்படி எல்லாம் பதிவு செய்திருக்கலாம்..? ஜெயலலிதாவுக்கு ஆதரவாய் இரண்டு வரி ஸ்டேட்டஸ் முகநூலிலும் டிவிட்டரிலும் எழுதுபவர்களே எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்..? எவ்வளவு சுவராசியமாய் எழுதுகிறார்கள்.

பதினைந்து ரூபாய் கொடுத்து வாங்கும் வாசகனை மடையனாய்க் கருதுவது தானே இது..? இந்த அட்டையைப் பார்த்து அதிமுகவினரும் அதிகம் வாங்கியிருப்பர்.

இந்த லட்சணத்தில் "பிரசுரமாகும் கதை,கட்டுரை மற்றும் படைப்புகள் அனைத்திற்கும் பதிப்பாளரே உரிமையாளராவார்.மறு பிரசுரவும் செய்யவும் மற்ற‌ வேறு வகையில் படைப்புகளை பயன்படுத்தவோ நிர்வாகத்தினரின் முன் அனுமதி பெர்ரே செய்ய வேண்டும்" என்ற அறிவிப்பு வேறு.

இவர்களே அடுத்தவர்கள் அறிக்கை,கடிதத்தை வெளியிட்டு பக்கம் நிரப்புகிறார்கள்.இதில் முன் அனுமதி வேறு பெற வேண்டுமாம்.உங்க காமெடிக்கு அளவே இல்லையா..?

குமுதம் கூமுட்டைக‌ள் கூட்டத் தலைவர் ப்ரியா கல்யாணராமன் 


.தி.மு.க.கட்சியினர் தனது தலைவி கைதை ஒட்டியும்,அவர் சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலை ஆக வேண்டியும் விதவிதமான வடிவங்களில் ஆர்ப்பாட்டம்,போராட்டம்,மறியல் என பல்வேறு கூத்துக்களை நடத்தினர்.இதில் சுயநலம்,விசுவாசம்,பக்தி,அடிமைத்தனம்,அராஜகம் என பல பொருள்கள் இருக்கின்றன.
ஆனால் அவர்களில் சிலர் நடத்தியது கோமாளிததனமாய் இருந்தாலும் வித்தியாசமாய் இருந்தது. ஏனென்றால்அவர்கள் கல்வி கற்கா விட்டாலும் சுயமாய் சிந்திக்கத் தெரிந்தவர்கள்.

ஆனால் குமுதம் எடிட்டோரியல் டீமோ கல்வி கற்றிருந்தாலும் சுயமாய் சிந்திக்கத் தெரியாத கூமுட்டைகள்.

ஜெ.அறிக்கை

ரஜினி கடிதம்

மேனகா காந்தி கடிதம்

நடிகர் ரஜினி,மேனகா காந்திக்கு ஜெ.நன்றி


Monday, 27 October 2014

இந்தியா டுடே ஆசிரியராக கவிதா முரளிதரன் தேர்வு....!

கவிதா முரளிதரன்

றத்தாழ ஒரு வருடங்களுக்கும் மேலாக 'இந்தியா டுடே' தமிழ் பதிப்பு ஆசிரியர் இல்லாமல் இருந்து வந்த நிலையில் புதிய ஆசிரியர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

நாம் ஏற்கனவே சொன்னபடி அந்தப்பதவிக்கு முயற்சித்த கவிதா முரளிதரன் தான் ஆசிரியர். இவர் இதற்கு முன் நியூஸ் டுடே,இந்தியா டுடே,The Week,Deccan chronicle.ஆகிய பத்திரிகையில் வேலை பார்த்தவர்.

இவர் இப்பொழுது 'தி இந்து' தினசரி நாளிதழில் (C.O.B) ஆக வேலை பார்த்து வருகிறார். தனது பதவி விலகல் கடிதத்தை கொடுத்து விட்டார்.இந்த மாத இறுதியில் அங்கிருந்து விலகி,இந்தியா டுடேயில் வேலைக்குச் சேர இருக்கிறார்.

'தி இந்து' தினசரி நாளிதழை ஒப்பிடும் பொழுது இந்தியா டுடே வார இதழில் வேலைப் பளுவும்,நெருக்கடியும் குறைவு என்பதும்,ஊதியம் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

'தி இந்து' நாளிதழில் வேலைக்குச் சேரும் பொழுது பேசிய படி ஊதியம் அளிக்கவில்லை என்பதையும் ஒரு காரணமாகச் சொல்கிறார்கள்.ஆனால் இந்த தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை.

ஆனால் யார் வந்தாலும் அந்த நிறுவனம் தனது வழக்கமான இந்துத்துவ,ஆபாசத்திற்கு கடை விரிக்கும் பாலிசியை மாற்றாது என்பது மட்டும் நிச்சயம்...!

நாமும் நமது எதிர்ப்புக்குரலைத் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருப்போம்.


Friday, 24 October 2014

'தி இந்து'-முடிந்தது மூடத்தனம்;தொடங்கியது விஷமத்தனம்...!
                                              'உண்மை நின்றிட வேண்டும்'

இது 'தி இந்து' தமிழ் இதழில் நடுப்பக்கம் வெளிவரும் தலையங்க முகப்பு வாசகம்.

இனிமேல் இதனை 'பொய்மை வென்றிட வேண்டும்' என மாற்றி அமைக்கலாம்.ஏனென்றால் அதன் நடுப்பக்கத்தில் வெளியாகும் கட்டுரைகள் அந்த லட்சணத்தில் தான் இருக்கிறது.

அரசியல் சமூக விமர்சகர் க.திருநாவுக்கரசு என்பவர் எழுதிய 'பெரியாரின் வாரிசுதான் ஜெயலலிதா' என்பதை கருத்துப்பேழை என்னும் தலைப்பில் நடுப்பக்க கட்டுரையாக வெளியிட்டுள்ளது.

the hindu,tamil the hindu


இந்தக் கட்டுரையின் நோக்கமாக கீழ்க்கண்டவற்றை வகைப்படுத்த‌லாம்.

பெரியாரை சர்வாதிகாரி என நிறுவுவதும்,அதன் தொடர்ச்சியாக அவரது வாரிசு என்று ஜெயலலிதாவை பிரகடனப்படுத்தி இப்பொழுது ஜெயலலிதாவின் கைதுக்குப் பிந்தைய மரணங்கள்,ஆர்ப்பாட்டங்கள்,எதிர்ப்புக்குரல்கள் என்ற பெயரிலான காணச் சகிக்காத கூத்துக்கள் என அனைத்தையும் கண்டிப்பதும்,இவை அனைத்துக்கும் அன்று பெரியார் தொடக்கி வைத்த சர்வாதிகாரம் தான் விதை எனத் தொடர்பு படுத்துவதும் தான்.

பெரியார் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல,ஆனால் அதில் உண்மை இருக்க வேண்டும்.

கட்டுரையானது தனது நோக்கத்தை நிறைவேற்றியிருக்கிறதா அதற்கான தரவுகளை அளித்திருக்கிறதா என்று பார்ப்போம்.
*
முதல் சில பத்திகள் அதாவது கட்டுரையின் சரிபாதி வரைக்கும் ரஷ்யாவின் ஸ்டாலினை இந்திய குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணன் சந்தித்தது,காந்தி மீது விமர்சனம் என நீள்கிறது.

அதன்பின் தான் தமிழகச் சூழலை கட்டுரையாளர் எழுதுகிறார். அதன்பின் பெரியாரின் சர்வாதிகாரம் குறித்து ஒரு உதாரணத்தை கட்டுரையாளர் சொல்கிறார்.

//உதாரணமாக, முதல் சுயமரியாதை மாநாட்டின் தலைவராக சௌந்திர பாண்டியனைப் பெரியார் முன்மொழிந்தபோது, ‘‘இனிமேல் வந்து இங்கு அவரை ஒருவர் பிரேரேபிக்கவோ ஆட்சேபிக்கவோ உண்மையாக யாருக்கும் அதிகாரமும் யோக்கியதையும் கிடையாது. பிரேரேபணையோ ஆமோதிப்பதோ ஆதரிப்பதோ கொஞ்சமும் அவசியமே இல்லை’’ என்கிறார்.//

இது தான் சர்வாதிகாரி பெரியார் என்பதை நிறுவ‌ கட்டுரையாளர் தரும் உதாரணம்.இதில் தான் கட்டுரையின் அடித்தளம் இருக்கிறது எனவும் சொல்லலாம்.

70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொதுவாழ்வில் பணியாற்றிய பெரியாரை போகிற போக்கில் ஒரு சிறு உதாரணம் மட்டும் சொல்லி அவர் ஜனநாயக மறுப்பாளர் எனச் சொல்கிறார்.அவரது ஒட்டுமொத்த பணியையும் இதனை வைத்து எடை போடுகிறார்.இப்படி எடை போடுவது சரியல்ல என்பதை விடவும் அப்படிக் காட்டப்பட்டதாவது உண்மையா என்று பார்ப்பதும் முக்கியமானது.

 கட்டுரையாளரின் மேற்கொள்  ஒப்பீட்டளவில் நூலிழை ஆதாரம் எனக்கொள்ளலாம். ஆனால் சீர்தூக்கிப் பார்த்தால் அது நூலிழை அல்ல,திரிக்கப்பட்ட வன்மக் கயிறு என்பதை அறியலாம்.

திரு.சவுந்திரபாண்டியனை முன்மொழிந்த பெரியார், கட்டுரையாளர் சொல்லியபடி தனது கட்சியினர் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் அதிகார மமதையுடன் நடந்து கொண்டாரா..? ஜனநாயக மறுப்பாளராய் விளங்கினாரா? என்று பார்ப்போம்.

//இப்பொழுது இந்த மகாநாட்டுக்கு தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தன்னை எனது நண்பர் திரு.சவுந்திர‌பாண்டியன் அவர்களைப் பிரேரிக்கும்படியாக நமது வரவேற்பு அக்கிரசனார் அவர்கள் கட்டளையிட்டிருக்கிறார்.இப்போது அவர்களை உங்கள் சார்பாக பிரேரிக்கப் போகிறேன்.

இப்படிப் பிரேரிப்பதில் ஒரு விஷேஷமிருக்கிறது.என்ன.?திரு.சவுந்திரபாண்டியன் அவர்களை சுமார் ஒன்றரை மாதத்திற்கு முன்பாகவே வரவேற்புக் கமிட்டியாரால் தேர்ந்தெடுக்கப்பட்டு,அவர்களின் சம்மதத்தையும் வெகு நிர்ப்பந்தத்தின் பேரில் பெற்று,உங்களுக்கும் எல்லோருக்கும் வெளிப்படுத்தியாய் விட்டது.இனிமேல் இங்கு வந்து அவர் ஒருவர் பிரேரிக்கவோ,ஆட்சேபிக்கவோ உண்மையாக யாருக்கும் அதிகாரமும் யோக்கியதையும் கிடையாது.//

ஆதாரம்- திராவிடன் 19.2.1929

நூல்-செங்கல்பட்டு (தமிழ்) மாகாண சுயமரியாதை மகாநாடு 1929 (பக்கம் 105)இது தான் பெரியார் சொல்லியது.ஏறத்தாழ இந்த மாநாட்டுக்காய் ஒன்றரை மாதங்களுக்கு முன்பே யார் தலைவர் என வரவேற்புக் கமிட்டியால் முடிவு செய்யப்பட்டு அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டு,அனைவரின் ஒப்புதலையும் பெற்று ,சவுந்திரபாண்டியன் சம்மதத்தையும் அவரின் நிர்ப்பந்தப்படுத்திப் பெற்று விட்ட பிறகு அதனை இப்பொழுது யாரும் ஆட்சேபிக்க யாருக்கும் அதிகாரமோ,யோக்கியதையோ கிடையாது என்கிறார் பெரியார்.

இதில் என்ன தவறு இருக்க முடியும்..? இதில் எங்கு ஜனநாயக மறுப்பு இருக்கிறது..? சர்வாதிகார முடிவு இருக்கிறது..? இதனை விட எவரொருவர் ஜனநாயகமாய் இயங்க முடியும்..? எல்லாம் முடிந்த பின்பு இப்பொழுது ஆட்சேபிப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்கிறார்.இது சரியானது தானே..?

ஆனால் பெரியார் சொன்னதில் முதலில் ஒரு பத்தியை வெட்டி விட்டு அவர் சொன்னது இதுதான் என்று சொல்வது தான் அரசியல் சமூக விமர்சகனின் நேர்மையா.? கடைந்தெடுத்த அயோக்கியன் கூட இப்படிச் செய்ய மாட்டானே..? இவரிடம் பாடம் படிக்கும் மாணவர்கள் கதியை நினைத்தால் தான் பரிதாபமாய் இருக்கிறது.

அதே சமயம் பெரியாரின் அரசியல் வாரிசு என 'தி இந்து' பிரகடனப்படுத்தும் ஜெயலலிதா தனது கட்சி சார்பில் நடக்கும் மாநாட்டில் இப்படி என்றாவது செய்துள்ளாரா..? யாரையாவது இந்த வழிமுறையைப் பின்பற்றித் தேர்ந்தெடுத்துள்ளாரா..?தி இந்து ஒரு ஆதாரம் காட்டட்டும்.
வழக்கம் போல் திரித்து ஒரு ஆதாரத்தை உருவாக்கி கட்டுரை வெளியிட வேண்டாம்.
*

தில் இன்னொரு முக்கியச் செய்தியும் இருக்கிறது.

முதல் சுயமரியாதை மாநாட்டின் தலைவராக திரு.சவுந்திரபாண்டியன் தேர்ந்தெடுக்கப்ப‌ட்ட மாநாட்டில் பெரியார் உப தலைவராகப் பணியாற்றி இருக்கிறார்.

ஆதாரம்- திராவிடன் 12.2.1929

நூல்-செங்கல்பட்டு (தமிழ்) மாகாண சுயமரியாதை மகாநாடு 1929 (பக்கம் 14)

ஒரு ஜனநாயக மறுப்பாளர்,சர்வாதிகாரி என 'தி இந்து' வால் விமர்சிக்கப்படும் தன்னால் நியமிக்கபப்ட்ட இன்னொருவருக்கு கீழ் பணியாற்றுவாரா..?

இந்தபண்புஜெயலலிதா,கருணாநிதி,வாசன்,விஜயகாந்த்,ராமதாஸ்,ஸ்டாலின், என தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமல்ல உலக அரசியலில் எங்கும் பார்க்க முடியுமா..?

ஜெயலலிதா நத்தம் விஸ்வநாதன் கீழ் பணியாற்றுவாரா..? இல்லை கருணாநிதி தான்பொன்முடி கீழ் பணியாற்றுவாரா..?

இவ்வளவு ஏன்..?

ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகளான என்.ராமும்,என்.ரவியும் ஒருங்கிணைந்தே பணியாற்ற‌ முடியவில்லை.ஆயிரம் பஞ்சாயத்துகள்.

'தி இந்து' ஆசிரியர் அசோகன் வெங்கடேஸ்வரன் கீழ் பணியாற்றுவாரா..?

'தி இந்து' நடுப்பக்க பொறுப்பாளர்,தன்னைக் காந்தியவாதி என அழைப்பதில் பெருமிதம் கொள்ளும் சமஸ் யாராவது தனது சக நிருபரின் கீழ் பணியாற்றத்தான் முடியுமா..?
***

//டைசியாக எனக்கு இக்கவுரவப் பதவியை அளித்த வரவேற்புக்கழக அங்கத்தினர்களுக்கும்,நண்பர்களுக்கும் மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.//

இது மகாநாட்டுத் தலைவராகப் பணியாற்றிய திரு.சவுந்திர பாண்டியன் பேசிய உரையின் கடைசிப்பகுதி.

ஆதாரம்- திராவிடன் 17.2.1929

நூல்-செங்கல்பட்டு (தமிழ்) மாகாண சுயமரியாதை மகாநாடு 1929 (பக்கம் 77)

தனது நீண்ட உரையில் எங்கும் பெரியாருக்கு நன்றி சொல்லவில்லை.வாய்ப்பளித்த சர்வாதிகாரிக்கு யாரும் நன்றி சொல்லாமல் சேவகம் செய்யாமல் உரையை முடிக்க முடியுமா என்ன..?

ஜெயலலிதாவை வழிபடாமல்,4 வார்த்தைகளில் 2 வார்த்தைகள் தொழாமல் பன்னீர்செல்வம் உரையை முடிக்க முடியுமா என்ன..?

அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் வாங்கியவுடன் என்.ராமைப் புகழாமல் பாராட்டாமல்,நன்றி சொல்லாமல் அசோகனோ,அசோகனுக்கு நன்றி சொல்லாமல் சமஸோ,வெங்கடேஸ்வரனோ இன்ன பிறரோ இருந்தனரா..என்ன‌..?

திறமைக்கு வேலை கிடைத்துள்ளது.ஏன் நன்றி சொல்ல வேண்டும் என்று இவர்கள் சுயமரியாதையுடன் இருந்தனரா..?

**
‘‘னநாயகம் பித்தலாட்டமான காரியம் மட்டுமல்ல, முட்டாள்தனமானதும்கூட’’ என்று பெரியார் சொன்னது ஜெயலலிதாவின் சர்வாதிகாரத்திற்கு மூலமாக இருக்கிறது என்பதை அரசியல் விமர்சகர் கண்டுபிடித்துள்ளார்.  பெரியாரின் வாசகம் என்ன காலத்தில் சொல்லப்பட்டது,அதன் வரலாற்றுப்பின்னணி என்ன என்பதை சொல்லி அதை எழுத வேண்டும் என்னும் குறைந்த பட்ச நேர்மை,எதை எதையும் தொடர்பு படுத்த வேண்டும் என்னும் அறிவும் இல்லை.

இதற்குப்பின் இந்தக் கட்டுரையில் விவாதிக்க ஒன்றும் இல்லை.

அடுத்ததாக ஜெயலலிதாவை பெரியாரின் வாரிசு என பிரகடனப்படுத்தியது குறித்து.

ஜெயலலிதா போனறு அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்கள் செய்யும் சர்வாதிகாரச் செயல்களை, ஒரு சமூகப் போராளியுடன் ஒப்பிடுவது எப்படிச் சரியாகும்..? அப்ப‌டி ஒப்பிடுவதில் என்ன நேர்மை இருக்க முடியும்..?

இந்த விஷயத்தில் மட்டுமல்ல எந்த விஷயத்திலும் பெரியாரின் வாரிசாக ஜெயலலிதா விரும்பியது இல்லை.அப்படி நடந்து கொண்டதும் இல்லை.அவ்வாறு சொல்வதையும் அவர் விரும்பியது இல்லை.அவரே விரும்பாத விஷயத்திற்கு 'தி இந்து' முட்டுக் கொடுக்கிறது.

கருணாநிதியாவது பெரியார்,அண்ணா தொடர்ந்து தன்னை திராவிட இயக்க வாரிசாக காட்டிக்கொள்ள (ஒரு சில நேரங்கள் தவிர்த்து) விரும்புகிறார். அதைப் பெருமையாக கருதுகிறார். அதற்கு உண்மையாக இருக்கிறாரா ?இல்லையா ? என்பது வேறு விஷயம்..?இனிவரும் காலங்களில் அவருக்குப் பின் வருபவர்களிடம் அதை எதிர்பார்க்க முடியாது.

இப்படி இருக்கையில் அனைத்துக் கொள்கைகளிலும் பெரியாருடன் வெளிப்படையாக முரண்படும் ஜெயலலிதா எப்படி 'ஜனநாயக மறுப்பில்' மட்டும் வாரிசு ஆக முடியும்..?

(ஜனநாயக மறுப்பாளர் என்பது திரிக்கப்பட்டது என்று நாம் மேலே ஆதாரங்களுடன் நிரூபித்திருக்கிறோம்)
**
கொரியர் பாய் சமஸ்


//ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டது முதல் பிணையில் விடுவிக்கப்பட்டது வரை தமிழகத்தில் நடந்த கூத்துகளையெல்லாம் என்னவென்று சொல்வது? ‘//

ஜெயலலிதா கைதுக்குப் பின் 193 பேர் மரணம் அடைந்ததாக ஜெ.அவரது அறிக்கை சொல்கிறது.அவர‌து கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,விடுதலைக்கு வேண்டியும் நாடு முழுவதும் யாகம்,மொட்டை அடித்தல்,முளைப்பாரி,பால் காவடி,என இத்தியாதிகள்... 'தி இந்து' அரசியல் விமர்சகர் வார்த்தைகளில் சொல்லப்போனால் தமிழகத்தில் 'கூத்துகள்' நடந்துள்ளன.அதைப்பற்றி ஒரு வார்த்தை விமர்சித்து எழுதவும் வெளியிட  தி இந்துவுக்கும் அரசியல் விமர்சகருக்கும் திராணி இல்லை.

ஜெ.ஊழல் வழக்கில் சிறை சென்றது போல் வேறு யார் இதற்கு முன் சென்றுள்ளார்கள்,இருவருக்குமான ஒற்றுமை என்ன..? ஜெ.ஊழல் செய்தமைக்கு என்ன காரணம்..? ஜெ.கைதை ஒட்டி நடைபெற்றதாக கருதப்படும் இத்தனை பேரின் மரணம் உண்மையானதா..? அப்படியாயின் இதற்கு காரண‌ம் என்ன..? இத்தனை குடும்பங்கள் நிர்க்கதியாய் இருப்பதற்கு யார் காரண‌ம்..? இதற்கு என்ன தீர்வு என்று அலசி ஆராய கட்டுரையாளருக்கு விருப்பமில்லை.அல்லது தைரியம் இல்லை.

என்ன சம்பவத்திற்காக,எதன் எதிரொலியாக இந்தக் கட்டுரை தீட்டப்பட்டதோ,அந்த அரைப்பக்க கட்டுரையில் 'கூத்துக்கள்' என்ற ஒரு வார்த்தையில் அரசியல் விமர்சகர் கடந்து சொல்கிறார். அதற்குப்பின் எந்ததொடர்பும் அற்று பாரதியை மேற்கோள் காட்டி முடிக்கிறார் அரசியல் விமர்சகர்.

இந்தக் கட்டுரைக்கு வலுச்சேர்க்கும் வண்னம் பெரியாரும் ஜெயலலிதாவும் இணைந்து இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப்புகைப்படத்தை பார்த்தால் இருவரும் இணைந்து களங்கள் பல கண்டு சிறைகள் பலவற்றிற்கு ஒன்று போல் சென்றிருப்பது போல் ஒரு எண்ணத்தை 'தி இந்து' படிக்கும் வாசகனுக்கு இயல்பாக ஏற்படுத்துகிறது. இந்தப்புகைப்படம் 'சூரியகாந்தி' என்னும் திரைப்படத்தின் வெற்றி விழாவில் எடுக்கப்பட்டது. அதையாவது குறிப்பிட்டிருக்கலாம்.

இழிவான நோக்கம் ஒன்று இருக்கும் பொழுது என்ன வழிமுறையை பின்பற்றவும் விஷமிகள் யோசிக்கவா போகிறார்கள்..?

ஒட்டுமொத்தமாய் இந்தக் கட்டுரை.எதை எழுத வேண்டுமோ அதை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்து விட்டு,எந்தச் சம்ப‌ந்தமும் இல்லாமல் பெரியாரின் வாரிசு என்று ஜெயலலிதாவை பிரகடனப்படுத்தி,அதிலும் நேர்மையற்று அவர் சொன்னதை மறைத்து அவரை அவதூறு செய்வதில் முடிந்திருக்கிறது.
***

"பெரியாரின் வாரிசுதான் ஜெயலலிதா" இந்த தலைப்பானது கத்துக்குட்டி வாசகன் முதல் விமர்சகர்கள்,எதிர்த்தரப்பினர் என அனைத்து தரப்பினரையும் இந்தக் கட்டுரையைப்படிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் வைக்கபப்ட்டுள்ள‌து.ஆனால் அதற்கான எந்தத் தரவுகளும் இல்லை.

ஆபாச தலைப்பு வைத்து,அதனை மலிவான சுவரொட்டி அடித்து ஊர் முழுவதும் ஒட்டி திரை அரங்குக்கு ரசிகர்களை வரவழைப்பது திரைப்பட விநியோகஸ்தர்கள்,திரை அரங்கு உரிமையாளர்களின் ஒரு காலத்திய கேவலமான உத்தி.அவர்களின் அத்தகைய உத்தியைத்தான் தனது கட்டுரையை அனைத்து வாசகனும் படிக்க வேண்டும் என்னும் நோக்கில் கட்டுரையாளர் வைத்துள்ளார்.

ஜெயலலிதாவை விமர்சிப்பதாகவும் கணக்கில் வர  வேண்டும். அதே சமயம் மென்மையாக கூட விமர்சிக்க கூடாது.அதே சமயத்தில் 70 ஆண்டுகளுக்கு முன்பே தனது பரம வைரியும்,தனது கஸ்தூரி அய்யங்கார் நிறுவனத்தை விமர்சித்த  பெரியாரை இழிவு படுத்தவும் வேண்டும். எழுதியவர் ஆய்வாளர் என்ற பெயரையும் பெற வேண்டும் இப்படிப் பல நோக்கில் எழுதப்ப‌ட்டதால் எதிலும் உண்மையை நிறுவ முடியவில்லை.கட்டுரையாளர்,வெளியீட்டாளர் நோக்கமும் நிறைவேறாமல் அம்பலப்பட்டு அசிங்கப்பட்டு இருக்கிறது.

அதுவும் போக இன்னொன்றும் இருக்கிறது.இது போல தவறான செய்திகளுடன் எதுவும் கட்டுரைகள் பிற பத்திரிகைகளில் வெளியானால், அந்த எழுத்தாளர் படைப்புகள் அதன் பிறகு வெளியிடுவது நிறுத்தி வைக்கப்படும்,(சிறிது காலத்துக்காவது).

ஆனால் இன்னும் ஒரு வாரத்தில் பாருங்கள் க.திருநாவுக்கரசு அடுத்து ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதி அதனை கூச்சமற்று நடுப்பக்கத்தில் 'தி இந்து' வெளியிடும்.இது தான் இவர்கள் நேர்மை.

****


'தி இந்து' வில் வெளியாகும் கட்டுரைகள்,அதன் சிறப்பு நிருபர் தொடங்கி,அவர்களால் கவிஞர்,எழுத்தாளர்,விமர்சகர்,ஆய்வாளர் என ஒளிவட்டம் சூட்டப்படும் யார் எழுதிய கட்டுரையானாலும் சரி, அது யார் எழுதியதென்றாலும் அந்தக்கட்டுரையையும் அதே விஷயத்தை தினகரன்,தினத்தந்தி யில் அதன் முகம் தெரியாத உதவி ஆசிரியர் எழுதியதையும் ஒப்பிடுங்கள்.

முகம் தெரியாத உதவி ஆசிரியர் எழுதியது அனைத்து வகையிலும் சிறப்பாய் இருக்கும் என அறுதியிட்டுச் சொல்லலாம்.ஏனென்றால் அவர் பார்வையில் கட்டுரை சிறப்பாய் வர வேண்டும் என்னும் நோக்கமும்,உண்மையாய் எழுத வேண்டும் என்னும் எண்ணமும் மட்டும் தான் இருக்கும்.

தனது மேதமையைக் காட்ட வேண்டும் என்றோ,தனக்குத் தெரிந்ததை எல்லாம் கொட்டி விட வேண்டும் ,சமூகத்துக்கு ஏதாவது கருத்துச் சொல்லியே தீர வேண்டும் என்ற அரிப்போ,வெற்றுப் பரபரப்பை உருவாக்க வேண்டும் என்பதோ அவர்களிடம் இருக்காது.

(ஆனால் 'தி இந்து' அப்ப‌டியாகத்தான் இருக்கிறது.இதில் எங்கு போய் தினமலருடனும் தினகரனுடனும்,தினத்தந்தியுடனும் போட்டி போட..? முண்டியடித்து தினமணி இடத்தைப் பிடிக்கலாம்.)

அந்தக் கட்டுரைகளும் இப்பொழுது விஷமத்தனம் செய்ய ஆரம்பித்து விட்டது. ஒரு நடுப்பக்க கட்டுரை எவ்வளவு பொறுப்புடனும்,எவ்வளவு தரவுகளுடனும் எழுதப்ப‌ட்டு வெளியிடப்பட வேண்டும். அதனை ஆசிரியர் குழுவோ,அதன் பொறுப்பாளரோ எத்தனை கவனமுடன் ஒப்பு நோக்கி சொல்லப்பட்ட ஆதாரங்கள்,மேற்கோள்கள் சரியா எனப் பார்க்க வேண்டும்..?

பெரியாரின் மகாநாட்டு உரையைக் கண்டிப்பாய் கட்டுரையாளர் படித்திருப்பார்.ஆனாலும் அதில் ஒரு பத்தியை வெட்டி எடுத்து,மீதம் உள்ளவற்றை வைத்து அவர் ஜனநாயக மறுப்பாளர் எனச் சொல்வது எவ்வளவு விஷமத்தனம்..? இவர்கள் தாங்கள் செய்வதை அறிந்தே செய்கிறார்கள்.என்ன உள்நோக்கம்..?

ஆதாரம் எதுவும் இல்லாமல் வார்த்தைகளை உருவிப் போட்டு விமர்சிப்பது எவ்வளவு நாளைக்கு நிற்கும்..? அது தவறென்று அம்பலப்படுத்த எவ்வளவு நேரம் ஆகும்..?

 உண்மையை மறைத்து பொய்யை உற்பத்தி செய்து எழுதுவதற்கு 'அரசியல் சமூக விமர்சகர்' பட்டம் ஒரு கேடா..? இப்படிப்பட்ட பொய்யர்கள் எழுதுவதை எவ்வித ஒப்புக்கும்,ஆய்வுக்கும் உட்படுத்தாமல் கொரியர் பாய் வேலையைச்செய்யும்,அப்படியே பிரசுரிப்பதற்கு op-editor பதவியும் லட்சத்தைத் தாண்டிய சம்பளமும் தண்டமாய் அழ வேண்டுமா..?

அதைப்போல இப்படிப்பட்ட ஆட்களை வேலைக்கு எடுத்து விட்டு அவர்களை வைத்து வேலை வாங்கத் துப்புக்கெட்ட எடிட்டரோ தினசரிக்கு லாயக்கில்லாத நிலையில் இருக்கிறார்.

போர்க்களத்தில் முதலில் கொல்லப்படுவது அறமும் உண்மையும் தான் என்பது அறியப்பட்ட உண்மை. இனிமேல் போர்க்களத்திற்கு மட்டுமல்ல,'தி இந்து'வில் வெளியாகும் கட்டுரைகளுக்கும் அது பொருந்தும் .

தொடர்புடைய இணைப்புக்கள்

http://kalakakkural.blogspot.in/2014/03/blog-post_10.html

http://kalakakkural.blogspot.in/2014/07/blog-post_14.html

http://www.vinavu.com/2014/10/16/media-brokers-bat-for-corrupt-jaya/

Wednesday, 15 October 2014

திரைக்கதை எழுதும் நிருபர்கள்....!
டந்த சம்பவத்தை அப்படியே ரிப்போர்ட் செய்வதற்குப் பதில் அதில் கற்பனையைக் கலந்து எழுதுவதில் கிரைம் பீட் நிருபர்களுக்கு நிகர் அவர்களே தான்.

பெரும்பாலும் இவர்கள் காவல்துறையினர் அளிக்கும் செய்தியை அப்படியே நகல் எடுத்து வாசகர்களுக்கு அளித்தாலும் தங்க‌ள் கற்பனையையும் சென்டிமென்ட்டையும் கலக்கத் தவறுவதில்லை. சம்பவம் நடக்கும் பொழுது அருகில் இருந்து பதிவு செய்தது போல் அவ்வளவு 'துல்லியமாய்' விவரணைகள் இருக்கும். இதில் மாலைமலர்,தந்தி நிருபர்கள் ஒருவகை என்றால்,தினமலர் நிருபர்கள் இன்னொரு வகை.

அது தொடர்பான சிறு பதிவு.

இரண்டு நாட்களுக்கு முன் வேளச்சேரி சாலையில் நள்ளிரவு குடிபோதையில்,அதி வேகத்தில் கார் ஓட்டி 3 பேரைக் கொலை செய்த சம்பவத்தை அனைத்து நாளிதழ்களும் பதிவு செய்துள்ளன.

சம்பவத்தில் வயதான பெண்மணி உட்பட உறங்கிக் கொண்டிருந்த மூவர் பலியாகினர். நள்ளிரவு நேரத்தில்,அதிக குடிபோதையில் வாகனம் ஓட்டும் அனைவரும் மிதமிஞ்சிய வேகத்தில் தான் ஓட்டுவர்.அதிலும் இந்த சம்பவத்தைப் பார்க்கும் பொழுது வாகனத்தை கட்டுப்பாடற்ற‌ வேகத்தில் ஓட்டி வந்துள்ளது தெரிகிறது. மோதிய வேகத்தில் ஒருவர் பலியானதும்,மீதமுள்ள இருவர் சற்று நேரத்தில் பலியானதும் அதன் மிதமிஞ்சிய வேகத்தை நமக்குச் சொல்கிறது.

உழைக்கும் மக்கள் என்பதாலும் நள்ளிரவு என்பதாலும் யாரும் விழித்திருக்க வாய்ப்பும் இல்லை. மேலும் பெரும்பாலான விபத்துக்களைப் போல கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்திருக்கிறது. ஆகவே சம்பவத்தை எதிர்கொள்ளவோ,அதில் இருந்து யாரும் தப்பிக்க எண்ணுவதற்கோ துளியும் வாய்ப்பு இல்லை.

இந்த விபத்தில் ஒரு கைக்குழந்தை தப்பித்து விட்டது. காரை ஏற்றிக் கொலை செய்த சம்பவ இடத்தில் குழந்தை இல்லாததே இதற்கு காரண‌ம். 
இதனை மாலை மலரும்,தினமணியும் சரியாகப் பதிவு செய்துள்ளன. தினமலரோ அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியது கைக்குழந்தை என எழுதுகிறது. 

பிற நாளிதழ்களோ,கர்ப்பிணிப்பெண் கார் தன் மீது மோத வருவதைக் கண்டு தனது கைக்குழந்தையைத் தூக்கி எறிந்து அவன் உயிரைக் காப்பாற்றினார் என உருக்கம் காட்டியுள்ளன.

இது குறித்து ஒவ்வொரு நாளிதழும் என்ன மாதிரி செய்தி வெளியிட்டிருக்கிறது என்று பார்ப்போம்.

வழக்கமாய் இது போன்ற கதைகளை உருவாக்குவதில் எக்ஸ்பர்ட்டான 'மாலை மலர்' இந்த முறை வாய்ப்பைத் தவறவிட்டு விட்டது.

மாலை மலர்


தமிழ் முரசு


'தமிழ் முரசோ' கர்ப்பிணிப்பெண் தன் உயிர் போனாலும் பரவாயில்லை என்று துணிச்சலாய் தனது கைக்குழந்தையைத் தூக்கி காப்பாற்றினார் என்று திரைக்கதை வடிவமைத்துள்ளது.

மாலை நாளிதழ்களைப் பார்த்த காலை நாளிதழ்கள் என்ன செய்யும்..?

தினகரனும்,தினத்தந்தியும் அச்செய்தியை நகல் எடுத்து கர்ப்பினிப்பெண் காப்பாற்றிய குழந்தைக்கு கட்டம் கட்டி செய்தி வெளியிட்டுள்ள‌னர்.'தி இந்து' நாளிதழோ கொஞ்சம் மாற்றி இச் செய்திக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் ஒருவர் சொன்னதாய் வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி,தினமலர்,தினகரன்,தமிழ் முரசு உள்ளிட்டு அனைத்துப் பத்திரிகைகளும் உறக்கத்தில் தான் இந்த கொடூரம் நடந்ததாக கூறியுள்ளனர்.தலைப்பும் அப்படியே வைத்துள்ளனர்.

 உறங்கிய பெண் எழுந்து குழந்தையைத் தூக்கி எறிந்தாரா என்ன..?  அவ்வளவு நேரம் குடிகாரர்கள் காத்திருந்தனரா என்ன..?

தினமணி


தினமலர்

தினத்தந்தி
தினகரன்

தி இந்து

சம்பவ இடத்துக்குச் சென்று நடந்த சம்பவத்தைப் பலரிடம் விசாரித்து நடந்தது என்ன என்பதை விசாரித்து,அதனை ஒன்றுக்கு பலமுறை யோசித்து அதன் உண்மைத்தன்மையை சரிபார்த்து வெளியிடும் போக்கு துளியும் இல்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

இந்த கொடூரமான சம்பவத்திலும் தாய்மை,பாசம்,செண்டிமென்ட் என இவர்களுக்கு உருக்கம் தேவைப்ப‌டுகிறது வணிக நோக்கத்தில்,அது உண்மைக்குப் புறம்பானதாக இருந்தாலும்.

இவர்கள் அனைவரும் நிருபர் வேலையை விட்டு விட்டு திரைக்கதை எழுதப்போனால் அங்கிருப்பவர்களுக்கு பிழைப்பு இல்லை என்பதால் தான் அதைச் செய்யாமல் விட்டு வைத்திருக்கிறார்கள்.

***

தொடர்புடைய‌ செய்திஇது தொடர்பாக இன்னொரு செய்தி வெளியிட்டுள்ளது 'தி இந்து' நாளிதழ்.

தினமலர்,தி இந்து

அதில் இந்தச் சம்பவம் குறித்து அங்கிருந்த பலரிடம் கருத்து வாங்கி வெளியிட்டுள்ளது. விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கருத்து கூறியுள்ளனர்.அதில் ஒருவர் அங்குள்ள சாலை வசதி குறித்து குறை கூறியுள்ளார்.இது ஒரு பத்தி வருகிறது.அந்தக் கருத்தில் தவறும் இல்லை.

ஆனால் மூன்று பேரைக் காவு வாங்கிய  சம்பவத்துக்கும் சாலை வசதிக் குறைபாட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் சாலை வசதி சரி இல்லாததினால் தான் இந்த விபத்து நடந்தது என்று பொருள்படும் படி தலைப்பு வைத்துள்ளது தி இந்து.

யாரோ ஒரு 'அறிவுக்கொழுந்து' தான் இந்த வேலையைச் செய்திருக்க வேண்டும். அவருக்கும் இத்தலைப்பைச் சரி பார்த்து ஒப்புதல் அளித்த இன்னொரு அறிவுக்கொழுந்துக்கும் கண்டிப்பாய் நல்ல சம்பளம் இருக்கும்.

தொடர்புடைய இணைப்புகள்

http://tamilmurasu.org/inner_tamil_news.asp?Nid=64300

http://www.dinamalar.com/news_detail.asp?id=1091339

http://www.dailythanthi.com/News/State/2014/10/13104716/Platform-Sleeping-3-killed-in-car-Arrested-drunk-driver.vpf

http://www.maalaimalar.com/2014/10/13111155/3-killed-in-car-collided-in-ve.htmlMonday, 6 October 2014

வன்னியர், தேவர் சாதி வெறியை எதிர்த்து நில்; நாயர் சாதி வெறிக்கு மண்டியிடு: விகடன் பாலிசி....!
சுதேச‌மித்திரனில் வேலை பார்த்த நண்பர் முன்பு நம்மிடம் பகிர்ந்த செய்தி இது.

திருநெல்வேலி மாவட்ட‌ எல்லையும் குமரி மாவட்ட‌ தொடக்கமுமான குமாரபுரம் அருகில் உள்ள ஒரு சிற்றூரில் 'குமரி மன்னன்' என்று ஒரு நண்பர் இருந்தார். உள்ளூரில் சொல்லத்தக்க அள‌வுக்கு நிலபுலன்கள் இருந்தாலும் வெளியூர் சென்று இன்னும் அதிகம் சொத்து சேர்க்க வேண்டும் என்ற ஆசை உண்டானது.அவரது ஊரில் வெளியூர் சென்று பொருளீட்டுபவர்கள் பெரும்பாலோனார் இருந்ததாலும் அவருக்கும் அந்த எண்ணம் ஏற்பட்டது.

1995 வாக்கில் அவர் கேரளாவுக்குச் சென்றார்.சிறிது காலம் கழித்து அவரிடம் இருந்து ஊருக்கு கடிதம் வந்தது. அனுப்புனர் பெயரில் குமரி மன்னன் என்ற பெயருக்குப் பதில்,'மன்னன் பிள்ளை' என்று இருந்தது.நண்பருக்கு ஆச்சரியம் உண்டானது. சிறிது காலம் கழித்து ஊருக்கு வந்த நண்பரிடம் இது குறித்து கேட்டதும் அவர் சொன்ன பதில்,

'குமரி மன்னன்' என்பதெல்லாம் இங்கு தான் கதைக்கு ஆகும்.அங்கு போனால் பிள்ளை பட்டம் தான் நம் பிழைப்புக்கு ஆகும்.அதனால் தான் சாதிப்பெயரைச் சேர்த்துக் கொண்டேன் என்பது.

கேரளாவின் சாதி வெறிக்கும் அங்கு இன்றும் சாதி அடுக்குமுறையின் படி தான் மனிதர்கள் மதிக்கப்ப‌டுகிறார்கள்,அவர்கள் பிழைப்பைத் தீர்மானிப்பதில் சாதிக்கு முக்கிய இடம் இருக்கிறது என்பதற்கு நண்பர் சொன்ன இச்சம்பவம் எளிய எடுத்துக்காட்டு. தமிழ்நாட்டை விட மலையாளத்தில் ஆதிக்க சாதி வெறியர்கள் உச்சாணிக்கொம்பில் இருந்து அனைத்து மட்டங்களிலும் அதிகாரத்தைச் சுவைக்கிறார்கள் என்றும் புரிந்து கொள்ளலாம்.

மலையாள நாட்டில் தான் இந்த‌ நிலை என்று இல்லை.ஆதிக்க சாதி மலையாளிகள் எங்கு சென்றாலும் தங்கள் சாதியை நேரடியாகவும் மறைமுகமாகவும் தூக்கிச் சுமக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு.
*
மிழ்நாட்டின் திரைத்துறையில் கவுதம் என்றொரு இயக்குனர் 'மின்னலே' என்றொரு திரைப்படத்தை இயக்கினார்.படத்திற்கு ஓரளவு வரவேற்பு.

ஓரளவு வரவேற்பு கிடைத்ததும்,அதன்பின் கால ஓட்டத்தில் தமிழகத்தின் முக்கிய திரை இயக்குனராய் அறியப்பட்ட பின்பு அவரது பெயர் 'கவுதம் வாசுதேவ் மேனன்' என்று உருமாறியது. மேனன் என்பது தம்பியைப் போல நாயர் சாதி.

அடுத்த வேளைச் சோத்துக்கு வழி இல்லாமல் கோடம்பாக்கத்தில் உதவி இயக்குனராய் அலைந்து திரிந்த பொழுது எட்டணா காசுக்குப் பிரயோஜனபப்டாத‌ சாதி, சிறிது சிறிது தன்னை நிலை நிறுத்த தொடங்கிய பின்பு ஒட்டிக் கொண்டு விட்டது. இது கேரளாவின் ஒடுக்கப்ப‌ட்ட புலையர்,ஈழவ மக்களிடம் இல்லை.அவர்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் இருந்தாலும்,முன்பை விட அவர்கள் பொருளாதார,சமூக ரீதியாய் முன்னேறியிருந்தாலும் இன்னும்  தங்களை சாதியுடன் அழைத்து பெருமிதப்படும் அளவுக்கு எண்ணவில்லை.இது தான் யதார்த்தம்.

கவுதம் வாசுதேவ் மேனனின் வளர்ச்சியில் எந்தப்பங்கும் வகிக்காத அவர் சாதி,வளர்ந்த பின் அவர் பெயருக்குப் பின்னுட்டு வந்து விடுகிறது.இன்னும் சொல்லப்போனால் இத்துறையில் அவர் நீடிப்பதற்கும் இடத்தைத் தக்க வைப்பதற்கும் அவரது சாதி எந்தப்பங்கையும் வகிக்க முடியாது. ஆனால் சாதியைத் தூக்கிச் சுமப்பதை பெருமிதமாய்க் கருதுகிறார்கள்.

சாதி வெறிக்கு திரைத்துறை மட்டுமல்ல எழுத்துத் துறையும் விதிவிலக்கா என்ன..? அதிலும் சீரியலுக்கு வசனம் எழுதுவது திரைத்துறைக்கு அடுத்த படி தானே..?

அதே போன்ற எடுத்துக்காட்டைத் தான் நாம் சென்ற பதிவில் சொல்லியிருந்தோம்.

பிரியா என்றொரு பெண்மணி தனது பெயருக்குப் பின் தம்பி என்னும் நாயர் சாதிப்பிரிவைச் சேர்த்துக் கொண்டு நம்பர் ஒன் இதழ் என்று சொல்லிக் கொள்ளும் ஆ.விகடனில் "பேசாத பேச்செல்லாம்" தொடர் எழுதுவதையும் எழுதியிருந்தோம்.

 இணையத்தில் முற்போக்கு பேசுபவர்களின் போலித்தனத்தையும் த‌டித்தனத்தையும் நன்கு அறிந்ததாலேயே, பெண் போராளி என்பதாலும் மலையாளி என்பதாலும் இவரது சாதி வெறியை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்றும் அத்தொடரிலேயேஎழுதியிருந்தோம்.

நாம் நினைத்த படிதான் நடந்தது.

பிரியா தம்பி தொடர்அருமை என வியாழன் காலை முகநூலைத் திற‌ந்து பதிவிட்டு டேக் செய்பவரில் இருந்து யாரும் அதைக் கண்டுகொள்ள‌வில்லை. ஜேசுதாசின் ஜீன்ஸ் உடை குறித்த கருத்துக்கு பொங்குபவர்கள் இதனை வேண்டுமென்று திட்டமிட்டுக் கண்டுகொள்வது இல்லை.

இதையெல்லாம் நாம் எதிர்பார்த்து தானே இங்கு எழுதுகிறோம்.

இதோ இன்னொரு ஆதாரத்தை அளிக்கிறோம்.இது பிரியாவின் திருமண சான்றிதழ் நகல்.

2006 ஆம் ஆண்டு சென்னை சாந்தோம் பதிவுத்துறைத் தலைவர் அலுவலக வளாகத்தில் பதிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு பதிவுத்துறை இணையப் பக்கத்தில் கூடக் கிடைக்கிறது.

இதில் பிரியா என்ற பெயரில் தான் சான்றிதழ் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் மேலாக அவரது தந்தை மற்றும் தாயாரின் பெயருக்குப் பின்னும் எந்த சாதிப்பட்டமும் இதர 'பெருமை'களும் இல்லை. பிரியாவின் தந்தைக்கு வயது கிட்டத்தட்ட 60 பிள‌ஸ் ஆக இருக்கும்.அந்தக்காலத்து ஆள். பழமையில் ஊறிய தந்தைக்கு இல்லாத சாதி வெறி,மூளை முழுவதும் 'புரட்சி'கர சிந்தனைகள்  நிரம்பி வழியும் பிரியாவுக்கு இருக்கிறது.இந்த லட்சண‌த்தில் ஊருக்கு 'உபதேசம்'.

அரசு பதிவு ஆவணங்களில் பதியப்படும் பெயர் நாம் அதற்காய் கொடுக்கும் ஆவணங்களை வைத்துத் தான் பதியப்படும். அப்படியானால் பிரியா சாந்தோம் அலுவலகத்தில் சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களும் பிரியா என்ற பெயரில் தான் இருந்திருக்கிறது.அதனால் தான் அவர்கள் அளித்த ஆவணம் பிரியா என்று வந்திருக்கிறது.

நாம் கேட்பது இது தான்.

2006  இல் 'பிரியா' என்ற பெயரில் அரசு ஆவணங்களில் இருக்கும் அவரது பெயர் எப்ப‌டி 'பிரியா தம்பி' ஆனது.?

எந்த கல்லூரியில் தம்பி என்ற பட்டம் கொடுத்தார்கள். ஒருவேளை இந்தக்கல்லூரியில் கிடைத்ததா..?(!) இது அப்பட்டமான சாதி வெறி இல்லாமல் வேறென்ன.? இன்னும் அவரது சாதி வெறிக்கு என்ன ஆதாரம் வேண்டும்..? பிரியா நாயர் எழுத்தை வியக்கும் முற்போக்கு வெண்ணைகள் தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.
***

சாதிப்பெயரைச் சுமப்பவர்கள் குறித்து டாக்டர் அம்பேத்கர் கருத்து இது;"ந்த சாதிப் பெயர்களைத் தொடர்வதற்கு வேறொரு ஆட்சேபøணயும் இருக்கிறது. மனிதர்களையும் பொருட்களையும் பற்றி மக்களின் எண்ணத்திலும் உணர்விலும் மனப்பாங்கிலும் ஏற்படும் மாறுதலே சீர்திருத்தம் என்பது. சில குறிப்பிட்ட பெயர்கள் சில குறிப்பிட்ட கருத்துகளோடும் உணர்வுகளோடும் இணைந் தவையாக உள்ளன. இந்தக் கருத்துகளும் உணர்வுகளுமே மனிதர்களைப் பற்றியும் பொருள்களைப் பற்றியும் தனிமனிதனின் மனப்போக்கு என்ன என்பதையும் தீர்மானிக்கின்றன.

பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகிய பெயர்கள் ஒவ்வொன்றும் திட்ட வட்டமான, நிலையான ஒரு கருத்தை ஒவ்வொரு இந்துவின் மனதிலும் ஏற்படுத்தி இருக்கின்றன. பிறப்பை அடிப்படையாகக் கொண்ட ஏணிப்படி அமைப்பே அந்தக் கருத்து.

இந்தப் பெயர்கள் நீடிக்கின்ற வரை பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகி÷யாரை பிறப்பின் அடிப் படையில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பிரிவுகளாக ஏணிப்படி வரிசையில் எண்ணிப் பார்க்கிற போக்கும், அதற்கு ஏற்றபடி நடந்து கொள்கிற போக்கும் இந்துக்களிடம் தொடரத்தான் செய்யும்.

இந்துக்களின் சிந்தனை யில் இந்தப் போக்கு இல்லாமல் போவதற்குப் பயிற்றுவித்தாக வேண்டும். ஆனால், பழைய சாதி முத்திரைகள் தொடர்ந்து நீடித்து மனிதனின் மனதில் பழைய கருத்துகளையே நினைவுபடுத்திக் கொண்டிருக்கையில் இது எப்படிச் சாத்தியம்?

மக்களின் மனதில் புதிய கருத்துகள் பதிய வைக்கப்பட வேண்டுமென்றால், மக்களுக்குப் புதிய பெயர்களைச் சூட்டியாக வேண்டும். பழைய சாதிப் பெயர்களையே தொடர்வது சீர்திருத்தத்தைப் பயனற்றது ஆக்கிவிடும்.

பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சமூகப் பிரிவினைகளான பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் போன்ற முடைநாற்றம் வீசுகிற பெயர்களால், தகுதியை அடிப்படையாகக் கொண்ட நான்கு வர்ணத்தை அழைப்பது சூழ்ச்சியே ஆகும்."

டாக்டர் அம்பேத்கர்,'ஜாதியை அழித்தொழிக்கும் வழி ' நூல்

-கருப்புப் பிரதிகள் வெளியீடு.

**

ப்படி யோசித்துப் பாருங்கள். தமிழ்நாட்டில் உள்ள சாதிப் பெயருடன் யாராவது எழுத வந்திருந்தால் இன்று கள்ள மவுனம் காக்கும் இணையத்தில் உலவும் இந்த முற்போக்கு முகரைகள் என்ன கொதி கொதித்திருப்பார்கள்.?

ஆனால் ஆதிக்க சாதி வெறியை சுமந்து கொண்டு தொடர் எழுதும் பிரியாவை கண்டிப்பதில்முற்போக்காளர்கள்,பெண்ணியவாதிகள்,எழுத்தாளர்கள்,கருத்தாளர்கள்,சமூக ஆர்வலர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வோர்,அப்படி அழைப்பதையே வெளிப்படையாகவும்,மறைமுகமாகவும் விரும்புபவர்கள் தடித்த தோலுடன் அமைதி காக்கின்றனர்.

இணையத்தில் நிலவும் 'முற்போக்கு' இதுதான்.

 பிரியா நாயரோ தன் சாதியைப் பெருமிதமாக வெறியாகச் சுமந்து வருகிறார்.அந்தச் சாதி காலம் காலமாக அனைவரையும் ஒடுக்குவதையே நிகழ்ச்சி நிரலாய்க் கொண்டுள்ளது. நாம் உரத்தும் தெளிவாகவும் சொன்னபின்னும் நாயர் சாதி வெறிக்கு விகடன் ஒளிவட்டம் சூட்டுகிறது . நாம் தம்பி என்பது சாதி என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிய பிறகும் தொடர்ந்து சாதிப்பெயருடன் தொடரை வெளியிடுகிறது.

குமுதம் இதழிலோ,டைம்பாஸ் இதழிலோ சாதி வெறிக்கு பரிவட்டம் சூட்டியிருந்தால் நாம் கேள்வி கேட்கப்போவதில்லை.

ஏனென்றால் கேவலமான குமுதம் இதழின் இன்னும் சீரழிந்த வடிவம் தான் டைம்பாஸ். குமுதத்தின் விற்று முதலில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தி அதனை நம் நிறுவனத்துக்கு அறுவடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் விகடன் குழுமத்தால் ஆரம்பிக்கப்பட்டது தான் டைம்பாஸ்.

ஆனால் ஆனந்த விகடன் அப்படியல்ல.குமுதத்தின் வணிகத்தன்மையில் ஒரு பாதியைக் கொண்டிருந்தாலும்,இன்னொரு பகுதியோ சிற்றிதழ்களின் உள்ளடக்கம், தீவிரத்தன்மையைத் தன்னகத்தே கொண்டு 'மாறுபட்ட' இதழாகத் தன்னைக் காட்டிக்கொள்ளத் தொடர்ந்து முயற்சிக்கிறது. அப்படியான வாசகர்களை நிலைநிறுத்த முயற்சிக்கிறது. அதனால் தான் அது தற்பொழுது தாங்கி வரும் சாதி வெறியை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஒரு பக்கம் சாதி வெறி எதிர்ப்பு குறித்த கட்டுரை. இன்னொரு  பக்கம் சாதி வெறிக்கு மேள தாளத்துடன் மேடை.

சாதி வெறிக்கு மேடை போடும் இவர்கள், ராமதாசைச் 'சாதி வெறியர்' என்று சொல்ல என்ன யோக்கியதை இருக்கிறது ? சாதி தாஸ் என என்ன தகுதி இருக்கிறது..? அதற்கான அருகதை இவர்களுக்கு துளியாவது இருக்கிறதா..?

வன்னியர்,தேவர்,நாயர்,பேசாத பேச்செல்லாம்

 சாதி வெறியுடன் செயல்படும் பிரியா சேச்சி தான் தமிழ்நாட்டில் சாதி வெறியுடன் செயல்படுபவர்களை விமர்சிக்கிறார்.முதலில் உங்கள் முகத்தை கண்ணாடியில் பாரும்மா..!சாதி வெறியை ஊக்குவித்தது என்னும் கரும்புள்ளி விகடனுக்கு வரலாற்றில் உண்டு.

சாதி வெறியர் பிரியா ஆ.விகடனில் புரட்சிகரத் தொடர் எழுதியது போதாது என்று ,இப்பொழுது 'டாக்டர் விகடனுக்கு' பொறுப்பாசிரியராய் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றும் . தகவல்கள் வருகின்றன.

ஆ.விகடனுக்கும் ,டாக்டர் விகடனுக்கும் ரா.கண்ணன் தான் ஆசிரியர்.அவரது ஒப்புதலும் விரைவுபடுத்தலும் இல்லாமல் இது சாத்தியப்பட்டிருக்காது. இன்னும் சிறிது காலத்தில் விகடன் பொறுப்பாசிரியராய்க் கூட வரலாம். யார் கண்டது..?

ஆனாலும் நாம்

தொடர்ந்து பேசுவோம்.

Monday, 15 September 2014

சாதி வெறிக்கு சாமரம் வீசுகிறதா விகடன்..?


மிழ் பத்திரிகை உலகில் கடந்த சில ஆண்டுகளாக பத்தி,கட்டுரை எழுதும் எழுத்தாளர்கள் அருகிக் கொண்டே இருக்கிறார்கள். உண்மையான எழுத்தாளர்களுக்குப் பஞ்சமா? இல்லை, அதைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களை எழுத வைப்பது இவர்களுக்கு சிரமமாய் இருக்கிறதா?

 தெரியவில்லை.

 அதனால்தான் தங்களுக்குத் தெரிந்தவர்களையும், நெருக்கமான வட்டங்களில் இருப்பவர்களையும், முகநூலில் நாலு வரி ஸ்டேட்டஸ் எழுதி கவனிக்கும் படியான லைக் வாங்குபவர்களையும்,பேஸ்புக்கில் ஆதரவாக கமெண்ட் போடுபவர்களையும் எழுத்தாளர்களாக்குகிறார்கள். இதனை நாம் ‘குமுதம்‘,‘ஆனந்த விகடன்‘ போன்ற இதழ்களில் இருந்து புதிதாய் வந்துள்ள ‘தி இந்து‘ வரை உணர முடியும்.

இங்கு நாம் விவாதிக்க இருப்பது அப்படி ஒரு தொடர் குறித்து அல்ல. அப்படி ஒரு தொடரை எழுதுபவர் குறித்து.

 தமிழ்நாடு கேரளாவை விட கல்வி கற்கும் விகிதாச்சாரம் உட்பட ஒரு சில விஷயங்களில் பின் தங்கி இருக்கலாம். பல விஷயங்களில் கண்டிப்பாய் முன்னேறித்தான் இருக்கிறது என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியும்.
 அதில் ஒன்று சாதி.

 சாதியை ஒழிப்பதிலும், சாதி வெறியை மட்டுப்படுத்துவதிலும் இன்னும் தமிழகம் பயணிக்க வேண்டிய தூரங்கள் எவ்வளவோ இருக்கலாம். ஊடகங்கள் உட்பட எல்லாத் துறைகளிலும் சாதி இங்கும் அடிநாதமாய் இருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி.கேரளாவை விட இந்த மண் பதப்பட்டும், மக்கள் பண்பட்டும் முற்போக்காய்த்தான் இருக்கிறார்கள். கேரளாவை விடத் தமிழ்நாட்டில் சாதி மறுப்புத் திருமண‌ங்கள் அதிகம் நடைபெறுகிறது என்பது புள்ளி விவரங்கள் காட்டும் கணக்கு.

 அதனால்தான் இங்கு சாதிச் சங்கங்கள் ஆரம்பித்த பெரும்பாலான தலைவர்கள் கூடத் தங்கள் பெயருக்குப் பின் சாதிப்பெயரைப் போடுவதில்லை. ஊடகத்தில் இருப்பவர்களுக்கு உள் மனதில் சாதி வெறியும், பற்றும் இருந்தாலும் வெளிப்படையாய் தான் இன்ன சாதி என்று பெருமை பீற்றித் திரிவதில்லை.

 இந்த சூழல் இருப்பதால்தான், தமிழ்நாட்டில் நடிக்க வந்த பார்வதி மேனன் என்னும் மலையாள நாயர் சாதிப்பெண் கூட “எனக்கு மேனன் சாதி வேண்டாம்,பார்வதி மட்டும் போதும்“ எனச் சொல்லும் சூழல் இங்கே இருக்கிறது.

 இந்தச் ‘சாதி ஒழிப்பைப்‘ பாராட்டி ஒரு மாதத்திற்கு முன் ஆனந்த விகடனில் செய்தி  வந்தது. திரைப்பட  நடிகைகள் அழகாகவும், திற‌மையாகவும் இருக்கிறார்களா ? என்றுதான் இங்கு எதிர்பார்ப்பார்களே தவிர, முற்போக்காய் இருக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. ஆனாலும் நாட்டுக்கேற்ப நடிகை பார்வதி தனது சாதியைத் துறந்தார்.

 இது ஆனந்த விகடனுக்கு மட்டுமல்ல, சாதிச் சமயமற்ற சமூகம் எதிர்பார்க்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எல்லோரும் இவரைப் பின்பற்றி ஜாதிப்பெயரை மாற்றுங்கள் என்று ஆனந்த விகடன் வேண்டுகோள் விடுத்தது.

 ஆனால் திரைப்பட நடிகை பார்வதி துற‌ந்த மேனன் சாதிப் பெயரை,  தன்னை முற்போக்காய் காட்டிக்கொள்ளும் ஒரு பெண் எழுத்தாளினி அதே கேரளாவில் இருந்து ... அதே சாதியை ஏந்தி இங்கே வந்து,  சாதிச் சமயமற்ற சமூகத்தை எதிர்பார்க்கும் விகடனில் கடைபரப்பியிருப்பது நமக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ள‌து.

 பார்வதியைப் பாராட்டியதோடு மட்டுமல்லாமல்,மற்ற நடிகைகள் தங்கள் ஜாதியைத் துறக்க வேண்டும் என வலியுறுத்திய ‘ஆனந்த விகடன்‘ வார  இதழ் இந்தப் பெண்ணின் சாதி வெறிக்கு, சாதிப் பெருமிதத்துக்குத் தளம் அமைத்து கொடுத்திருப்பது நமக்கு கூடுதல் அதிர்ச்சி அளிக்கிறது.

 பிரியா தம்பி என்பவர் “பேசாத பேச்செல்லாம்“ என்னும் தொடரை விகடனில் எழுதி வருகிறார். “பெண்கள் உடை,வாழ்க்கை,பாலியல் சுதந்திர‌ம்,ஆண்-பெண் சமத்துவம் என பெண்கள் வெளிப்படுத்த முடியாத,பேச வாய்ப்பற்றவர்களின் குரலாக பிரியா தம்பியின் குரல் ஒலிக்கிறது“ என்று அவரைப் பாராட்டுபவர்களும் அவரது சிந்தையை ஒட்டியவர்களும் சொல்கிறார்கள்.

இன்னொரு பக்கமோ அதன் எதிர்வினை கடுமையாய் இருக்கிறது.

முதலில் பிரியா தம்பி யாரென்றால் ?

இவர் சுதந்திரத்துக்கு முந்தைய திருவாங்கூர் சமஸ்தானத்திலிருந்து தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டுவிட்ட தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

அதாவது பூர்வீக மலையாளி.

‘தமிழ் முரசு‘ மாலை நாளிதழில் சிறிது காலம் வேலை பார்த்தவர். சிறிய இடைவெளிக்குப் பின் ‘குமுதம் ரிப்போர்ட்டர்‘ வாரமிருமுறை இதழில் மிகச் சிறிது காலம் பணி புரிந்திருக்கிறார். (இரண்டு ஊடகங்களிலும் சேர்ந்து மொத்தம் 2 வருடங்கள் இருக்கலாம்.)

 முகநூலில் இவரது நிலைச் செய்திகளைத் தொகுத்து ஒரு நூல் ‘கயல்கவின் பதிப்பகம்‘ சார்பில் 'மின்னுவும் அம்மாவும்' என்னும் நூல் வெளிவந்திருக்கிறது. இப்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘தாயுமானவன்‘ என்னும் சீரியலுக்கு வசனம் எழுதுகிறார் என்பதையும் அறிகிறோம்.

இதுதான் அவரது பின்னணி.இவரைத்தான்  2 லட்சத்து சொச்சம் விற்கும் ஆனந்த விகடன் வாரந்தோறும் அவர் நினைத்த‌தை எல்லாம் எழுதித் தள்ளும் வாய்ப்பை அளித்திருக்கிறது.

பிரியா நாயர் எழுதும் டைரிக்குறிப்புகள்


 இவர் எழுதும் தொடரின்  முதல் அத்தியாயத்தில் ஒரு பத்தியை இங்கு நினைவு படுத்துகிறோம்.

//கோயில்களுக்குப் போய் வந்த அண்ணன்கள், நமக்குப் பாசிமாலை வாங்கி வருவது, நம் மேல் உள்ள அன்பால் என எவ்வளவு காலங்கள் பொய்யாக நம்பித் திரிந்திருக்கிறோம். நம் கழுத்தில் போட்ட அந்த மாலையை அந்த அண்ணன் தடவிப்பார்க்கும்போது எவ்வளவு அப்பாவியாகச் சிரித்தபடி நின்றுகொண்டிருந்தோம்.//

 இது ‘பேசாத பேச்செல்லாம்‘ முதல் வாரம்.

(குஷ்புவின் கருத்துக்கு கொதித்த தமிழ், திராவிடக் கலாச்சாரக் காவலர்கள் இந்த அபத்தத்துக்கு எதிராய் ஏன் கொதிக்கவில்லை ?  எவரும் விகடனில் பிரியா நாயர் தொடரைப் படிப்பதில்லையா? தெரியவில்லை. )

நாம் இப்பொழுது பிரியா தம்பி (நாயர் ) கட்டுரை குறித்து இங்கே விவாதிக்க விரும்பவில்லை. அது அவரது சொந்தக்கதை, சோகக்கதை. (கற்பனை,தனி மனித விருப்பு வெறுப்பு கணிசமான அளவு உண்டு.) அவர் தனது நாட்குறிப்பில் கூட அதை எழுதியிருக்கலாம். ஆனால் விகடனுக்கு எழுத்தாளர் பஞ்சம் இருப்பதால் நாம் அதைப்படித்துத் தொலைய வேண்டியிருக்கிறது.

நாம் இங்கே பேச வருவது அவர் தன் பெயருடன் ஏந்தி வரும் ‘தம்பி‘ என்னும் சாதி வெறி குறித்தே.

 பிரியா என்பது அவரது பெற்றோர் இட்ட பெயர். 'தம்பி' என்பது?

 “பாலு என்பது பெயர். தேவர் என்பது நீங்க வாங்கின பட்டமா?“ என பாரதிராஜாவின் ‘வேதம் புதிது‘ படத்துப் பொடியன் சத்யராஜைக் கேட்ட மாதிரி....  கேட்கிறோம்.

“பிரியா என்பது பெயர். தம்பி என்பது நீங்க வாங்கின பட்டமா?”

 கேள்வியோடு பதிலையும் நாமே சொல்லிவிடுகிறோம்.

தம்பி என்பதுஅவரது நாயர் சாதி.நாயர்,மேனன்,நம்பியார்,தம்பி, பணிக்கர் என நாயர் சாதியினர் பலவாறாக அழைக்கப்பட்டாலும் அவர்கள் நாயர் தான். பிரியா தன் பெயருடன் இணைத்திருப்பது சாதி. அதையே பெருமிதத்துடன் சேர்த்து  இந்தப் பெரியார் மண்ணில் வலம் வருகிறார்.வாசிப்பவர்கள் அனைவருக்கும் புரியும் படியாக இங்குள்ள தமிழ்நாட்டு  சூழலுக்கு ஏற்ப சொல்லுகிறோம்.

தேவர் ஜாதியில் கள்ளர்,மறவர்,அகமுடையர் என மூன்று பிரிவுகள் இருக்கின்றன. பிரமலைக் கள்ளர்களும்,கொண்டையங்கோட்டை மறவர்களும் தங்கள் பெயருக்குப் பின் தேவர் என வைத்துக் கொள்கின்றனர். மதுரை,ராமநாதபுரத்தைச் சேர்ந்த‌ அகமுடையார்கள் தங்கள் பெயருக்குப் பின் ‘சேர்வை‘ என இணைப்பதையே விரும்புகின்றனர். அவர்கள் சேர்வை என அழைத்துக் கொண்டாலும்  தேவர் ஜாதியின் கீழ்தான் அடங்குவர்.

இன்னொரு எடுத்துக்காட்டு.

நாஞ்சில் வேளாளர்,சைவ வேளாளர்,துளுவ வேளாளர் என பல பிரிவுகளாய் இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரே வேளாளர்கள் தான்.

அதைப்போலதான் நாயர் பிரிவில் பணிக்கர்,மேனன்,நாயர்,தம்பி என பல பிரிவுகள் இருக்கின்றனர்.சிலர் நாயர் எனவும், சிலர் மேனன் எனவும்,சிலர் தம்பி எனவும் ஜாதியை வைத்துக் கொள்கின்றனர். ஆனால் அனைவரும் நாயர் தான். அந்த மரபுப்படி ப்ரியா நாயர் தம்பியை இணைத்து ப்ரியா தம்பியாகக் காட்சியளிக்கிறார்.

 அந்தப் பெயரில்தான் ஆனந்த விகடனில் தொடர் எழுதுகிறார். இதனை விகடன் நிர்வாகம் அனுமதிக்கிறது. அவரது எழுத்தைப் பாராட்டும் பெண்ணியவாதிகள், பின்-முன் நவீனத்துவாதிகள்..... மேலும் ஏனைய முற்போக்காளர்கள், சக எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் பெரும்பாலானோர் இந்தச் சாதி வெறியை அறியாமலும்,சிலர் தெரிந்தும் கண்டுகொள்ளாமலும் கடந்து செல்கின்றனர்.
 ---

பிரியா நாயர் (தம்பி)

பிரியா தம்பியின் இச்செயலை நாம் கடுமையாய்க் கண்டிக்கிறோம். அவரது இந்தச் சாதி வெறி சாதியைப் பொதுவெளியில் வெளிப்படுத்த தயங்கும்  தமிழ் மண்ணில் ஒரு புதிய தொடக்கத்தை  ஊடக உலகில் உருவாக்குமோ என அஞ்சுகிறோம்.

 இதைத்தாண்டி இந்த பெயர் விஷயத்தில் நாம் பிரியா நாயரிடம் கேட்பதற்கு வேறு எதுவும் இல்லை. அவர் பேசும் சாதி ஒழிப்பு உள்ளிட்ட இதர முற்போக்கான விஷயங்களில் அவர் நேர்மையாய் இருக்கிறாரா ? என்பதே எமக்குத் தேவை. அவரது நண்பர்கள்,இதர முற்போக்காளர்கள் இதைக் கேள்விக்குட்படுத்த மாட்டார்கள்தான். இவர் ஒரு பெண் 'போராளி' என்பதாலும், அந்தப் 'போராளி' மலையாளியாக இருப்பதாலும் அவர்களும் அமைதி காப்பார்கள் என்பது நமக்குத் தெரியும்.

 ஆனால் ‘விகடன்‘ நிர்வாகத்திடம் நாம் கேள்வி கேட்க முடியும். 

ஏனென்றால் சமீப காலங்களில், தர்மபுரி இளவரசன்- திவ்யா காதல் உள்ளிட்ட மிக முக்கியமான பிரச்சனையில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரானதாகத்  தன்னை அது சித்தரித்துள்ளது.

தர்மபுரி இளவரசன்- திவ்யாவின் காதல் பிரச்சனையில் பிற‌  இதழ்கள் ஒரு வாரம் இளவரசன் தரப்புக்கு ஆதரவான செய்தியையோ,நேர்காணலையோ வெளியிட்டால்.... அடுத்த வாரம் திவ்யா  குடும்பத் தரப்பு ஆதரவான செய்தியை வெளியிட்டு ‘சமன்‘ செய்து விடுவார்கள். ஆனால் ஆனந்த விகடனோ இந்தச் சாதி விஷயத்தில் (இதில் மட்டும்) நிலைப்பாடு ஒன்றினை நிலையாக எடுத்து தன்னை ஜாதி வெறிக்கு எதிரானதாய்க் காட்டி வந்திருக்கிறது. அதனால்தான் கேட்கிறோம்.

 //தர்மபுரியில், மூன்று கிராமங்களை எரித்து, பல்லாயிரம் மக்களின் வாழ்வாதாரத்தை நிர்மூலமாக்கிய சாதி வெறி, திவ்யா-இளவரசன் காதலையும் வன்முறையாகப் பிரித்திருக்கிறது.//

 /சாதி வெறி எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை, தன் சொந்த‌ அனுபவத்தில் திவ்யா புரிந்துகொண்டிருப்பார். இப்போது அவர் பேச வேண்டும். தன் அன்புக் கணவனை, பாசத்துக்குரிய அப்பாவைப் பறிகொடுத்த அநியாயத்துக்கு நீதி கேட்க வேண்டும். அப்படி திவ்யா துணிவுடன் களமிறங்கினால், அவருக்குப் பின்னால் இளைஞர் கூட்டம் திரண்டு நிற்கும்./

 -இவையெல்லாம் 17 ஜூலை 2013 இதழில் விகடன் மூத்த நிருபர் அருள் எழிலன் என்பவர் சுழற்றிய சாட்டை.

 இது மட்டுமல்லாது, சாதி வெறியை கடுமையாய் விமர்சித்து, “சாதி உங்களுக்கு என்ன செய்தது?“ என்னும் கட்டுரையை அதன் உதவிப் பொறுப்பாசிரியர்  எழுதி வெளியிட்டுள்ளது. ‘குமுதம்‘ போன்ற இதழ்களில் இதை நாம் எதிர்பார்க்க முடியாது.  ஆகவேதான் நாம் விகடனிடம் வினா எழுப்புகிறோம்.

நீங்கள் எழுதிய கருத்துக்கு நீங்கள் உண்மையாக இருங்கள்.

 இந்த ‘நாயர்‘ என்போர் யார்?

நாயர் என்பது ஒடுக்கப்பட்ட சாதியோ, காலமெல்லாம் இழிவை ஏந்தி வந்த சாதியோ அல்ல. மிகவும் பிற்படுத்தப்பட்ட ஈழவர், புலையர்,சாணார் ஆகியோருக்கு  அது  ஓர் ஆதிக்க சாதி.

அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நம்பூதிரிகளுக்கு வேட்டை நாய்களாக  விளங்கிய சாதி. நம்பூதிரிகள்-நாயர் பிணைப்புக்கு என்ன காரணம் என்னும் 'களங்க‌' வரலாற்றை நாம் விளக்கிச் சொல்ல விரும்பவில்லை.நீங்களே தேடிக் கன்டுபிடியுங்கள். இணையத்தில் கூடக் கிடைக்கிறது.

ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் நம்பூதிரிகளுக்கு நாயர் குடும்பங்களின் மீது அதிக ‘செல்வாக்கு‘ உண்டு.

அந்தச் ‘செல்வாக்கு‘ பெற்றெடுத்த கள்ளக்குழந்தைகளே இந்த நாயர் வகையறாக்கள். கேரளத்தின் ஈழவர்கள்,புலையர்களுக்கு எதிராய் இவர்கள் நிகழ்த்திய கொடூரங்களை யாராலும் வரலாற்றின் பக்கங்களிலிருந்து மறைக்க முடியாது. குறிப்பாக புலையர் பிரிவு மக்களுக்கு தங்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதையும்,கல்வி நிலையங்களில் கல்வி அளிப்பதையும் இவர்கள் அடியோடு எதிர்த்தனர். சாதி எதிர்ப்புப் போராளி அய்யன்காளி மற்றும் நாராயண குருவின் போராட்டங்கள் இவர்களுக்கு எதிரானதே.

 மலையாள சினிமாவின் தந்தையான‌ டேனியல் தனது முதல் படத்தில் ‘சரோஜினி‘ என்ற நாயர் பெண்ணாக ஒரு புலையர் சாதியைச் சேர்ந்த பெண்ணை நடிக்க வைக்கிறார்.

 “தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்தவர் உயர் சாதிக்காரியாக வேடம் கட்டுவதைக் கூட‌ச் சகித்துக்கொள்ள முடியாது'' என்று நாயர் சமூகம் சீறுகிறது. திரைப்படக் காட்சியை நிறுத்தியதோடு ரோசியாக மாறிய ரோசம்மாவைக் கொல்லவும் அந்த நாயர் கும்பல் விரட்டுகிறது. கடைசி வரை அவர் தன் முகத்தை திரையில் பார்க்கவே இல்லை.

 வைக்கத்தில் தீண்டாமையை அமல்படுத்தியது, பெரியாரின் போராட்டத்திற்கு எதிர்வினையாற்றியது இந்த நாய்ப் படை. கேரளம் மட்டுமல்ல. நம் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு எதிராகவும் தன் சாதிய வெறியை,ஆதிக்கத்தை நிலை நிறுத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டில் கடைக்கோடி மாவட்டமான குமரி மாவட்டத்தில் நடந்த தோள்சீலைப்போராட்டம் குறித்து சிலருக்குத் தெரிந்திருக்கும்.பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.இன்னும் சிலரோ மறந்திருக்கலாம். அப்பொழுது குமரி மாவட்டம் சென்னை மாகாணத்தில் இல்லை.திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. குமரி மாவட்டத்தில் வாழும் நாடார்கள்(சாணார்கள்),புலையர்,ஈழவர் உள்ளிட்ட‌ இன்னும் சில ஜாதியினர் நாயர்கள்,நம்பூதிரிகளைக் காண நேர்ந்தால் பதினெட்டு எட்டுக்களுக்கு அப்பால் தள்ளி நிற்க வேண்டும். இதைவிடக்கொடுமை என்னவென்றால் பிறந்த குழந்தையிலிருந்து இறக்கும் வரை எல்லா பெண்களும்....எவனுடைய மனைவியாக, மகளாக, சகோதரியாக, தாயாராக, பாட்டியாக, இருந்தாலும் "மார்பகத்தை காட்டிக் கொண்டு தான் இருக்கவேண்டும்.மேலாடை அணியக் கூடாது"

 மார்பகம் அளவுக்கு ஏற்ற மாதிரி வரி; பெரிய மார்பகமென்றால் வரி அதிகம். வரி கட்ட முடியாவிட்டால், முலைகள் அறுத்து எறியப் பட்டன.  நாயர் சாதி வெறி பிடித்த ராணி பார்வதிபாய் , நாடார் பெண்டிருக்கு தோள் சீலை அணிவதற்கு எந்தவித உரிமையும் இல்லை என்று மனு நீதி வழங்கினார். கல்குளம், விளவங்கோடு தாலுகாக்களில்  இந்த மனுநீதி கொடுரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. புதுக்கடை, நட்டாலம்,களியக்காவிளை பகுதிகளில் இதன் பாதிப்பு அதிகளவில் இருந்தது. இந்தக் கொடுமையை எதிர்த்து அம்மக்கள் பல காலம் போராட வேண்டியிருந்தது. தோள் சீலைப் போராட்டம் என்று கொடும் நிகழ்வாய் வரலாற்றில்  பதிந்துள்ள இந்தக் கொடுமைக்கு எதிராய் அம்மக்கள் நீண்ட நெடிய போராட்டம் நடத்திய பின்தான் அவர்களுக்கு விடிவு கிடைத்தது. உலகில் எங்கும் இத்தகைய கொடுமைகளை நாம் கண்டிருக்க முடியாது.

நாகர்கோவிலுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே கொட்டாரம் என்ற ஊரைத் தாண்டினால் இடைப்படும் தாலியறுத்தான் சந்தை என்ற பகுதி இன்றும் திருவாங்கூர் சமஸ்தானத்தில் நாயர்கள் நடத்திய  கொடூரங்களுக்கு நினைவுச் சின்னம்.

இத்தகைய கொடுமையைச் செய்தது திருவாங்கூர் சமஸ்தான மன்னர்கள். அந்த‌ மன்னர் குடும்பத்தில்  திருமண உறவு கொண்டவர்கள் தான் இந்த தம்பி வகையறா நாயர்கள். அங்கு தாய் வழி உறவு நடைபெறுவதால் இவர்களால் ஆட்சி அதிகாரத்துக்கு வர இயலவில்லை. ஆனால் இவர்கள் மன்னரின் ஆட்சி பரிபாலனம் நடக்கும் இடம் மட்டுமல்ல  எங்கும் சுதந்திரமாகச் சென்று வர முடியும்.

 திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த பிரியா தம்பி,ஆனந்த விகடனில் தமிழ்ப் பெண்களின் பாலியல் சுதந்திர‌ம் குறித்து அங்கலாய்க்கிறார். எந்த உடை பெண்களின் சுதந்திரம் என்று அறிவுரை சொல்கிறார். அவர்களுக்கு விருப்பமான உணவினைச் சாப்பிட முடியவில்லை என்று  ஏக்கம் கொள்கிறார். மணம் முடித்த கணவனுடன் பிடித்த மாதிரி உறவு கொள்ள இயலவில்லை என்று இந்தச் சமூகத்தைச் சபிக்கிறார். பிடித்த ஆணுடன் எல்லோரும் அங்கீகரிக்கும் வண்ணம் வாழ இயலவில்லையே என ஏக்கம் கொள்கிறார்.

உங்கள் வரையில்  இவை எல்லாம் சரி.

நமது கேள்வி... இத்தகைய பெண் போராளி சில காலங்களுக்கு முன் வரை, திருவாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்ந்த சில குறிப்பிட்ட சாதி மக்கள் மார்பில் துணி இருப்பதைக்கூட பொறுக்காமல் நம்பூதிரி கட்டளையிட்டதை சிரமேற்கொண்டு  முலை வரி விதித்த அந்த நாயர் சாதியை,வரி கொடுக்க இயலாத பெண்களின் மார்பை அறுத்தெறிந்த நாயர் சாதியை, நாஞ்சில் நாடு- வேணாடு பகுதிகளில் ஆதிக்க சாதி வெறி பிடித்தலைந்த அந்தச் சாதியை,கேரளத்தின் புலையர் பெண்க‌ள் கழுத்தில் தங்க நகை அணியும் உரிமையை மறுத்து அவர்களைக் கல் மாலை அணியக் கட்டாயப்படுத்திய நாயர் சாதியை  தன் பெயருக்குப் பின் எவ்வித உறுத்தலுமின்றி பெருமிதத்துடன் ஏந்தி இருப்பது எப்படி?

 சாதியைப் பெயரின் பின்னால் சுமந்து திரிவதை பெருமிதமாகக் கருதும் ஒரு நபர்அந்தச் சாதி இழைத்த வன்முறைகளுக்கு மறைமுகமாக அல்ல, நேரடியான ஓர்அங்கீகாரத்தையே வழங்குகிறார் என்பதுதான் உண்மை .

உழைக்கும் தமிழர்கள் 42  பேரை வெண்மணியில் எரித்தவனின் ஊரிலிருந்து வரும் ஒருவன் தன்னை ஒரு ‘நாயுடு‘ என இன்றும் நம்மிடம் நெஞ்சை நிமிர்த்துவானென்றால்....  பொதுவெளியில் அதனைப் பெருமையாகவும் பெருமிதமாகவும் பீற்றித் திரிவானென்றால்
அவன் எவ்வளவுதான் முற்போக்கு பேசினாலும்.... பொறம்போக்குதான்.

அப்படியானால்....

பிரியா நாயரை எந்தக் கணக்கில் சேர்க்கலாம்?

விகடன்தான் பதில் சொல்லவேண்டும்.

கல்வி-கலவி,உடை-உணவு என அனைத்திலும் பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என அங்கலாய்க்கும் பிரியா ஏந்தியிருக்கும் ‘தம்பி‘ ஜாதி பெண்களுக்கு எதிராக நினைத்துக் கூடப் பார்க்க முடியாத சொல்லொண்ணாக் கொடுமையை இழைத்திருக்கையில் ..... அதைப் பெருமிதமாக, தனது அடையாளமாக கொள்ளும் இந்தப் பெண் போராளியின் பெண்ணியம் தொடர்பான எழுத்தில் துளியளவு நேர்மையாவது இருக்க வாய்ப்பிருக்கிறதா..?

( நாம் பிரியா நாயரின் சாதி பெருமிதத்தை அம்பலப்படுத்தியதனால்,இனி வரும் காலங்களில் தோள் சீலைப்போராட்டம் குறித்தும்,புலையர்,ஈழவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை உணர்ச்சிகரமாய் எழுதி தன் சுய சாதி எதிர்ப்பை அவர் பதிவு செய்யவும் வாய்ப்பு இருக்கிற‌து.)


இப்படிப் பாருங்கள்.

நாயர் சாதிக்கு முலை வரி செலுத்திய,செலுத்த மறுத்துப் போராடிய வம்சத்தில் வந்த ஒரு பெண்மணி ஆனந்த விகடன் வாங்குகிறார். அதில் பிரியா தம்பி(நாயர்) யின் பெயர் பார்த்தவுடன் அவரையும் அறியாத ஆச்சரியம் பிளஸ் சந்தேகம் பிளஸ் எச்சரிக்கையுடன் உடனே அந்தக் கட்டுரையைப் படிக்கிறார்.

அதில் பிரியா நாயர் பெண்களின் பாலியல் சமத்துவம் குறித்த ஆவேசமான எழுத்துக்களைப் படித்தார் என்றால்  அவர் விமர்சனம் எப்படி இருக்கும்..? அவரது வாயிலிருந்து நல்ல வார்த்தைகள் வருமா என்ன..?


 பிரியா தம்பி தொடர் படிக்கும் குமரி மக்களும்,வரலாறு அறிந்தவர்களும் ஆனந்த விகடன் பத்திரிகையின் நேர்மையைப் பற்றி என்ன நினைப்பார்கள் ? அதன் ஆசிரியர் குழுவின் வரலாற்று அறிவு குறித்து எப்ப‌டி மதிப்பிடுவார்கள் ?

 வன்னிய,தேவர்,நாடார்,கவுண்டர் சாதி வெறியை விமர்சிக்கும் ஒரு முற்போக்கு எழுத்தாளர் தன் பெயருக்குப் பின் ஐயர் என்றோ,ஐயங்கார் என்றோ சேர்த்துக் கொண்டால் அந்த எழுத்தில் நம்பகத்தன்மையும் நேர்மையும்  எதும் துளியாவது இருக்குமா என்ன..?

இறுதியாக.... சில கேள்விகள். பிரியாவுக்கு அல்ல....அவருக்கு மாலை மரியாதையுடன் மேடை போட்டு, மைக்செட் கட்டிக் கொடுத்திருக்கும் ஆனந்த விகடன்  இதழுக்கு.

  1) பிரியா தம்பி தனது நாயர் சாதிப்பெயரைச் சேர்த்துக் கொள்ள அனுமதிப்பது போல......   பறையர்,படையாச்சி,பிள்ளை,ஐயர்,நாடார்,தேவர்,கவுண்டர் என‌ மற்றவர்களும் தனது பெயருடன் சாதியைச் சேர்த்துத் தொடர் எழுத  நீங்கள்  அனுமதிப்பீர்களா..?

 2) சாதிப்பெயரை நீக்குவது என்பது சில நேரங்களில் பத்திரிகை நிர்வாகத்தால் முடியாத ஒன்றாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக நம்பூதிரிபாடோ,ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தோ, மூப்பனாரோ  தனது பெயருக்குப் பின் சாதிப்பெயரை வைத்திருக்கிறார்கள் என்பதற்காய் அவர்கள் நேர்காணலையோ,கட்டுரையையோ விகடனால் நிராகரிக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் நாடறிந்த தலைவர்களாய் இருந்தவர்கள். அந்தப் பெயரில்தான் நாட்டின் அனைத்து ஊடகங்களும் அவர்கள் கருத்தை வெளியிடுகின்றன. இந்த விஷயத்தில் விகடன் தன்னிச்சையாக ஒன்றும் செய்ய முடியாது. 

அப்படிச் செய்ய முடிந்தால் அங்கு பேட்டி கிடைக்காது.ஆனால் பிரியா தம்பி நாடறிந்த( அல்லது ஊரறிந்த) எழுத்தாளரோ, தலைவியோ அல்ல. எனவே ரிட்டன் காப்பி அதிகரித்துவிடும் என்ற கவலை விகடனுக்குத் தேவையில்லை. சொல்லப்போனால் இதுபோன்ற அறிவுக்கொழுந்துகளின் படைப்புகள் குறைந்தால்  விற்பனை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது.

****

சாதி உங்களுக்கு என்ன செய்தது?

விகடன் உதவிப் பொறுப்பாசிரியர் பாரதி தம்பி என்பவர் எழுதிய சிறப்பான கட்டுரை இது.

 இதில் வன்னிய,தேவர்,ரெட்டியார்,நாடார் உட்பட அனைத்து சாதி வெறியையும்  அவர் கடுமையாய் விமர்சித்திருப்பார்.

 //சுபா என்ற 13 வயது அருந்ததியர் சிறுமி ஊர் வழியே சைக்கிள் ஓட்டிக்கொண்டுப் போனார். ‘சக்கிலிச்சி எங்க முன்னாடி சைக்கிள் ஓட்டுறியா?’ என்று சைக்கிளை எட்டி உதைத்தனர். அலங்கோலமாக ஆடை கலைந்து கீழே விழுந்தாள் அந்தச் சிறுமி. அழுது எழுந்து ஓடியவள் அவமானம் தாங்காமல் தூக்குப்போட்டு செத்துப்போனாள். //

 //இரண்டு வாரங்களுக்கு முன்பு, தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள தெற்கு மணக்கரை கிராமத்தில், கோயில் திருவிழாவில் எழுந்த ஒரு சிறு பிரச்னையைச் சாக்காக வைத்து தலித்துகளின் குடியிருப்பைத் துவம்சம் செய்தது தேவர் தரப்பு. 20-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டன. //

//மதுராந்தகம் அருகே உள்ளது நுகும்பல் கிராமம். இதற்கு முன்பு பெரிய பிரச்னை எதுவும் இல்லாத ஊர். இரண்டு வாரங்களுக்கு முன்பு ‘வன்னியர் மண்ணில் அந்நியருக்கு இடம் இல்லை’ என்று ஒரு ஃப்ளெக்ஸ் போர்டு வைக்க… பிரச்சனை வெடித்தது. இறுதியில் 22 தலித் மக்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.//

 அவர் எழுதியது பெரும்பாலும் தமிழ்நாட்டில் உள்ள இடைநிலை ஆதிக்க சாதி வன்மத்துக்கு எடுத்துக்காட்டு. மேற்கண்ட சம்பவத்தைப் பொறுத்தவரை கல்வி அறிவு இல்லாத மக்கள் எப்போதும் தங்கள் சாதி வெறியை வெளிப்படையாய் காட்டி விடுகின்றனர்.அவர்களால் அதனை மறைக்க முடியாது.அவர்கள் அறிவின் லட்சணம் அவ்வளவுதான்.

ஆனால் கற்றறிந்த ஒருவனின் அல்லது ஒருத்தியின் சாதி வெறி வேறுமாதிரி வெளிப்படும்...... பிரியா நாயரின் தம்பிப் பெருமிதம் போல்.

வன்னிய, தேவர்,நாடார்,கவுண்டர் சாதிக்கு எதிராய் முரசு கொட்டும் விகடன், தொலைதூரத்தில் இருக்கும் அகர்வால்,சோப்ரா,கபூர் சாதி நடிகைகளை சாதிப்பெயரை நீக்கச் சொல்லி அறைகூவல் விடுக்கும் விகடன் அதை விடப் பல மடங்கு கொடுமையானதும்,நம் மாநிலத்தின் வரலாற்றில் தன் நச்சுக் கரங்களை அழுத்தமாய் பதித்துள்ள நாயர் சாதி வெறிக்கு அறிவுத் தள‌த்தில்
 ரத்தினக் கம்பளம் விதிப்பது எந்த விதத்தில் சரி..?

விகடன் ஆத்மசோதனை செய்துகொள்ளட்டும்.

(தொடரில் எழுதப்படும் விஷயங்கள் குறித்து வாய்ப்பிருப்பின் பிறகொரு முறை விவாதிப்போம்.).

 நாம் ஆனந்த விகடனுக்கு விடுக்கும் வேண்டுகோள் இது தான்.

 தமிழ்நாட்டின் சாதி விஷயங்களே இன்னும் நிறையப்பேருக்குத் தெரியாத பொழுது மலையாள நாயர் சாதி குறித்தும் அதன் ஆதிக்கம் குறித்தும் பெரும்பாலோனோரைப்போல் உங்களுக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை.

தம்பி என்பது நாயர் சாதி என்பதும், வரலாறு நெடுக அது கேரளத்தின் ஒடுக்கப்ப‌ட்ட மக்களையும்,தமிழ்நாட்டின் பெண்களையும் அள‌வுக்கு இழிவாகவும் கொடுமையுடனும் நடத்தியிருக்கிற‌து என்பது குறித்தும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை தான்.

ஆனால் தெரிந்த பின்பும் அனுமதிப்பது மிகத்தவறான ஒன்று.

ஆகவே,தங்களது இதழில் வெளியாகும் ‘பேசாத பேச்செல்லாம்‘ தொடரை,பிரியா என்ற பெயரில், நாயர் சாதிப்பெயரை நீக்கி  இனி வரும் வாரங்களில் வெளியிடுவதுதான் நேர்மையானது.

உங்கள் வலியுறுத்தலையும் மீறி “சாதிப்பெயர்தான் எனக்கு முக்கியம்“ என்று நாயர் சேச்சி வலியுறுத்தி நின்றால் .....

 “சாதிப்பெருமிதமா ? விகடன் மூலம் பிரபல்யமா ?“ என்று நீங்கள் மீசை முறுக்கினால்... கண்டிப்பாக அந்த நிமிடமே ‘தம்பி‘ காணாமல் போய்விடுவார்.
சந்தேகமிருந்தால்  விகடன் இதைப் பரீட்சித்துப் பார்க்கலாம்.

ஒடுக்குமுறைக்கு எதிராய் நிற்கப்போகிறீர்களா..? ஆதிக்க சாதிவெறிக்கு சாமரம் வீசப் போகின்றீர்களா..?

நல்லவற்றை பாராட்டுவதும், அல்லாதவற்றை விமர்சிப்பதும் தமிழ் கூறும் நல்லுலகம் மட்டுமல்ல கலகக்குரலும் செய்யும் செயல்தான்.

உங்கள் முடிவு என்ன..? காத்திருக்கிறோம்.

தொடர்ச்சி.http://kalakakkural.blogspot.in/2014/10/blog-post.html


தொடர்புடைய இணைப்புக்கள்

http://www.thamizhman.in/ayyan-kali/

http://www.nairmatrimony.com/matrimonials/Thampi-Matrimonials/

http://www.religion-online.org/showarticle.asp?title=1119http://bala-bharathi.blogspot.in/2012/09/blog-post_15.html

http://en.wikipedia.org/wiki/Thampi_and_Thankachi

http://bharathithambi.com/?p=435

பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் மையம் வெளியிட்ட 'பண்பாட்டு வேர்களைத் தேடி' நூல்