Thursday 30 May 2013

விகடனில் டம்மியாக்கப் பட்ட இரா.சரவணன்...!



விகடன் பிரசுரத்தில், கடைசியாக வெளியான அருமையானஇயர்புக் வரைக்கும் (ஏக பாராட்டுகளாம்.இதைப் படிச்சு 4 விஷயம் தெரிஞ்சுக்கணும்னு வாங்கினவ‌ன் தொலைஞ்சான்.) ஆசிரியராய் இருந்த இரா.சரவணனுக்கு, இப்பொழுது இறங்கு முகம்! அவர் பதவி டம்மியாக்கப்பட்டிருக்கிறது. 


இரா.சரவணன்


அவருக்கு மேல் ஜூனியர் விகடன்  பாண்டிச்சேரி நிருபர்(தான் என்றாலும், உதவிப் பொறுப்பாசிரியராக ஆக்கப்பட்ட) கலைச்செல்வன், நியமிக்கப்பட்டிருக்கிறார்.


தமிழருவி மணியனை ஒட்டி பின்னால் கை கட்டி நின்று கொண்டிருப்பவர் தான் கலைச்செல்வன்.


விகடன் பிரசுரம் தொடர்பாக, இனி இரா.சரவணன், தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது. கலைச்செல்வனிடம் கேட்டுவிட்டுத்தான் அவர் செயல்பட முடியும். அவர் ஒப்புதலை மீறி எதுவும் செய்துவிட முடியாது.

கலைச்செல்வன் இந்தப்பதவிக்கு வந்தது எதிர்பாராத நிகழ்வு என்று சொல்கிறார்கள்.கடலூர் தானே புயல் நிவாரண நிதியைத் திரட்டிய விகடன், அது தொடர்பான பணிகளை கவனிப்பதற்காககலைச்செல்வனை நியமித்தது. அது முதல் தன் செல்வாக்கை வளர்த்துக் கொண்ட கலைச்செல்வன் முதலாளி சீனிவாசனிடமும் நெருங்கி விட்டார்.

தானே சீரமைப்புப் பணிகள் விகடன் சார்பில் முடிந்தபின், மேலிடம் மெச்சக்கூடிய சில 'பணி'களையும் செய்துள்ளார். இதனால் அவரின் பணித்திறமையை(!)ப் பாராட்டி, கலைச்செல்வனுக்கு விகடன் பிரசுரத்தில் பொறுப்பை அளித்துள்ளார்கள். 



ஆனால் அலுவலகம் கூட‌ வர வேண்டிய அவசியம் கூட இல்லை என்று விதிகளைத் தளர்த்தி உள்ளார்கள்.மின்னஞ்சல் மூலம் பணிகளைச் செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்கள்.

பாவம், மதுரை பக்கம் ஒழுங்காக வேலைபார்த்துக்கொண்டு இருந்த குள.சண்முகசுந்தரத்தை, குடும்பத்தைவிட்டு சென்னைக்கு வரச்சொல்லி, உட்கார வைத்தவர்கள், புதுவையில் இருந்து வேலையைச் செய்யச் சொல்லி கலைச்செல்வனுக்கு சலுகை அளித்துள்ளார்கள்.(ஆளுக்குத் தகுந்த மாதிரி சலுகை என்பது இது தான்.)

இதுவரை, சுயேச்சையாய் செயல்பட்டுவந்த இரா.சரவணனுக்கு இதன் மூலம் ஒரு செக் வைக்கப்பட்டிருக்கிறது.

போயஸ் தோட்டத்திலும் கோபாலபுரம் வீட்டிலும் பூட்டிய அறைக்குள்ளே நடப்பதாக நீங்கள் விடும் பீலா போன்ற தகவல் அல்ல இது என்பது உங்களுக்கு கண்டிப்பாய் தெரிந்திருக்கும்.

(விகடன் பப்ளிகேஷன்ஸ் வெளியிடுற புக் எல்லாம் கொள்ளை விலை சார்..யார் சார் விலையை நிர்ணையிக்கிற 'மவராசன்'..?உலக வங்கிக்கு வேலைக்குப் போகலாம் பாஸூ.!)

******


Wednesday 29 May 2013

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் புதிய இம்சை அரசன்..!




புதிய தலைமுறை தொலைக்காட்சியில் புகுத்தப்பட்ட அதிரடி ஆட்டங்கள் இன்னும் அங்கு நின்றபாடில்லை. மீண்டும் அங்கே, ஆட்டம் அரங்கேறியிருக்கிறது. பிரேம் சங்கரால் மட்டும்தான் பிரச்னையை உண்டுபண்ண முடியுமா? ஒழுங்காக வேலைபார்ப்பவனை உளைச்சலுக்கு ஆளாக்கமுடியுமா? அதிகாரம் வந்தால், கொழுப்பும் தானாக வந்துவிடப் போகிறது.

உள்ளடக்கத்தில் பல தரப்பாலும் பாராட்டப்பட்டு, சுயபாராட்டும் வெளிப்பாராட்டுமாக சமூக அக்கறை கொண்ட ஊடகமாக, பு.த. தொலைக்காட்சி கட்டமைக்க‌ப்படுகிற‌து .இந்த ஒளிவட்டத்துக்குப் பின்னால், வெளியில் தெரியாத எத்தனையோ உதவி ஆசிரியர்கள், முகம் காட்டியும் காட்டாமலும் உழைக்கும் செய்தியாளர்களின் உழைப்பு இருக்கிறது என்பது பெரிய அளவுக்குத் தெரிவதில்லை. அதற்குக் காரணம், ஊடக உலகத்தின் நடைமுறைகள்!

காரணத்தோடுதான் இந்தக் கதை....

பிரேம்சங்கர் அன் கோவின் நீக்கத்தை அடுத்து, அதே கோதாவுடன் களம் இறங்கியிருப்பவர், ஷண்முகசுந்தரம், புதிய பிரச்னைகளின் மையம்!

பு.த. தென்மாவட்டங்களின் பொறுப்பாளர் சிறப்புச் செய்தியாளர் ராமானுஜம்.

இவர் இதுவரை கேள்விப்பட்டு இராத அளவுக்கு செயலில் வேலைகளைச் செய்துவருபவர், ஷண்முகசுந்தரங்கள் எட்டிப்பார்க்காத இடங்களில் எல்லாம் சென்று, தானே உழைத்து பல அருமையான செய்திகளைக் கொண்டுவந்தவர்.

இந்த ராமானுஜம். டிஎன்ஏ என்ற வடஇந்திய நாளிதழ், டைம்ஸ் ஆஃப் இண்டியா ஆகியவற்றில் பெங்களூரிலும் பின்னர் சென்னை டைம்ஸ் நாளிதழில் தலைமைச் செயலகத்திலும் இன்றைக்கு அதே நாளிதழில் பணியாற்றும் பலரைவிட சமூகத்துக்குப் பயனுள்ள செய்திகளைக் கொண்டுவந்தவர்.

பிரேம் சங்கரின் அறிமுகத்துடன் பு.த.வில் சேர்ந்தாலும், ராமானுஜம் தன்னுடைய தனித்தன்மையை இழந்ததில்லை. அவரின் செய்திகளிலும் மற்றவர்கள் மூலம் அவர் கொண்டுவந்துள்ள செய்திகளிலும் யாரும் ஆதாரத்துடன் இதைப் பார்க்கமுடியும். 

கதைக்கு வருவோம்.

புதிய தலைமுறை ஷானா சுந்தரம்,மதுரை பகுதிக்கு மட்டுமான செய்தியாளராக ராமானுஜத்தை தொடரச் சொல்லி விட்டு தென் மாவட்டங்களின் பொறுப்பாளர் பதவியை விட்டு விலக்கி இருக்கிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.

 நிர்வாகத்தால் வழங்கப்பட்ட வேலையை மட்டுமே செய்யும் ஒரு பணியாளனை, இம்சை செய்வது, எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஏற்றுக்கொள்ளமுடியாது. நேர்மையாக உழைத்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தால் வாழக்கூடிய ஊடகப் பணியாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கான உதாரணங்களைப், பதிவுசெய்யவேண்டியதும் காலத்தின் தேவையாக இருக்கிறது. 

பிரேம்சங்கருக்கு நெருக்கமானவர் என்ற கோதாவில், மற்றவர்களைப்போல அடுத்தவன் வயிற்றெரிச்சலை வாங்கிக்கொட்டியதாக இதுவரை ராமானுஜத்தின் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை.

உண்மையில் ராமானுஜத்துக்கும் பிரேம் சங்கருக்கும் நட்பா என்று பார்த்தால் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.பிரேம் அந்தப்பதவியில் இருந்ததால் பணியின் பொருட்டு ராமானுஜம் தொடர்பு வைத்திருந்தார்.பிரேம் இடத்தில் ஒரு கழுதையை நிர்வாகம் பதவியில் வைத்திருந்தாலும் அவருடன் தொடர்பு வைத்திருப்பார்.அவ்வளவு தான். அதற்காய் பிரேமுடன் தொடர்பு வைத்திருப்பவர்களை எல்லாம் நீக்க வேண்டும் என்றால் ஷண்முகசுந்தரம்,பிரேமை வேலைக்கு எடுத்த சத்திய நாராயணனைத் தான் முதலில் நீக்க வேண்டும்.

ஏற்கனவே, இம்சை அரசர்களாகவும் குடைச்சல் மன்னர்களாகவும் இருந்ததால்தான், புதிய தலைமுறையில் ஒரு கேங்- கும்பல்தனம் உருவாகி, உருப்படாமல் போனது. ஒருவழியாக அது சரியாகத் தொடங்கியது என அத் தொலைக்காட்சியில் ஒழுங்காகப் பணியாற்றும் பலரும் மூச்சுவிடும்போது, இன்னொரு இம்சை வந்து ஆட்டம் போடத் தொடங்கினால்...?

ஷண்முகசுந்தரம் பிரேமுடன் தொடர்பு கொண்டவர்களையெல்லாம் நீக்குவதற்குப்,பழி வாங்குவதற்குப் பதிலாக திறமையற்ற‌வர்கள்,ஏமாற்றப் பேர்வழிகளை நீக்கட்டும்.அவர்கள் சென்னையில் முக்கிய இடங்களில் இன்னும் புதிய தலைமுறையின் நிருபராய் தொடர்ந்து கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படிபுதுசா வந்த ஐயா ஷானா சுந்தரம் என்னத்த சாதிச்சாருன்னு பட்டியல் போட்டாக்கூடராமானுஜம்தான் முன்னணியில் இருப்பார்!

சரி எப்படிதான் இப்படிப்பட்ட ஆளுங்கள்லாம் சேனல் தலைமைக்கு வரமுடிகிறது எனக் கேட்டீர்கள் என்றால்அது பற்றியும் புது இம்சை பற்றியும் தனி பதிவு அளவுக்கு செய்திகள் இருக்கின்றன. தேவைப்பட்டால் அதை பிறகு பார்ப்போம்.

நொண்டியடிக்கும் தந்தி டிவி...!



தந்தி டிவி யைப் பார்ப்பவர்களுக்கு, யாரோ அதை உருப்படவிடக்கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதைப் போலத் தோன்றாமல் இருந்தால், அது ஆச்சர்யம்! 

இந்தப் பெருமைக்கு(!) முக்கிய காரணம், அதில் சி.இ.ஓ.வாக இருக்கும் சந்திரசேகரன்தான் என்கிறார்கள், பரவலாக!

தொலைக்காட்சித் துறையில் நீண்டகால அனுபவம் இருந்தாலும், இவருக்கு செய்தித் தொலைக்காட்சியைப் பற்றி கிஞ்சிற்றும் தெரியாது என்பது அவரே ஒப்புக்கொள்ளக்கூடிய நிஜம். 

இப்படிப்பட்ட 'திறமைசாலிகள்', திறம்பட்ட செய்தித்துறை ஆட்களை எடுத்துவந்து, செய்திப் பிரிவுக்கு தலைமைக்கு நியமிப்பார்கள். தங்கள் திறமையின்மை வெளியே தெரியாத அளவுக்கு நடந்து கொள்வார்கள்.

ஆனால், இவரோ, சன் டிவி யில் ஒழுங்காக ஒரு செய்தியை எழுதத் தெரியாதவர்களையெல்லாம் கூட்டிவந்து, பதவி கொடுத்து நியமித்து இருக்கிறாராம். என்.டி.டிவி. ஹிண்டு என்ற பெயரில் இருந்தபோதில் இருந்து, இப்போதுவரை, சந்துருவின் அட்டகாசத்தைத் தாங்கமுடியாமல், நேர்காணலுக்கு வரும் செய்தித்துறை மூத்தவர்கள் எல்லாரும் அப்படியே திரும்பிவிடுகிறார்கள்.

(இவர் பாலிசி என்னவென்றால் திறமையானவர்கள் யாரும் வந்து நம்ம இடத்தைப் பிடிச்சிடக் கூடாது என்னும் அதீத முன்னெச்சரிக்கை..)

இதற்கு ஆதாரமாக பல வாக்குமூலங்கள் உண்டு. குறைசம்பளம் கொடுக்கும் மெகா டிவி யில்கூட, எதையும் கறாராகப் பேசி வேலைக்கு வைக்கிறார்கள். ஆனால், மாதமானால் சரியான தேதிக்கு சம்பளம் தரும் தந்தி டிவி யில், ஆளெடுப்பதில் எந்த அடிப்படையும் இல்லாமல் இவர் வைத்ததுதான் சட்டம் என்கிற நிலைமைதான் என்கிறார்கள், பாதிக்கப்பட்டவர்கள். இவருக்குத் தோதாக இவரது உறவினர் குமார் என்ப‌வர் எச்.ஆர். பதவியில் இருக்கிறார். இவர் விருப்பத்தை உள்ளூரப் புரிந்துகொண்டு அவர் நிறைவேற்றி வருகிறாராம்.

சந்துரு


ந்த கூட்டணி, திறமையானவர்கள் யாரையும் சேனல் பக்கம் அண்ட விடுவதில்லை. இவரை ஒரு வரம்புக்குள் கட்டுத்தப்படுத்துவதற்காக, செய்தித்துறையைக் கவனிப்பதற்காக, பாலசுப்ரமணிய ஆதித்தனால் புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர் மதிவாணன் நேரடியாகப் பேசி நல்ல சம்பளம் கொடுத்து அழைத்து வரப்பட்டார் .

இவருக்கு எக்சிக்யூட்டிவ் எடிட்டர் பதவி அளிக்கப்பட்டது. 

இவருக்கு மேலே ஜெயசீலனும் மெய்யப்பனும் இருந்தாலும் அவர்களை மீறித் தனக்கு அதிகாரம் இருப்ப‌தாகக் காட்டிக்கொண்டார்.பாலசுப்ரமணிய ஆதித்தனின் நேரடிச் சேர்க்கை என்பதால் அனைவரும் வேறு வழியில்லாமல் அமைதி காத்தனர்.

ஆனால், நடந்தது என்ன? என்ன நடந்துவிட முடியும்

(இதற்கான விடை கடைசி வரிகளில் இருக்கிறது.)

வந்த புதிதில் அப்படி இப்படி என புறங்கையைக் கட்டிக்கிட்டு (ஆக்ட் குடுத்தார்னு நினைச்சீங்கன்னா, அதுக்கு நாம பொறுப்பு இல்லை.) இருந்த இவர்,எடிட்டருக்கான பணிகளில் அக்கறை செலுத்தாமல் பிற பணிகளில் அதிக ஆர்வம் காட்டியபடி இருந்திருக்கிறார்.

மதிவாணன் சார், எடிட்டர்னா செய்தி எழுதத் தெரியணும்.

பல பேருக்கு இது தெரியறதே இல்லை. 

உங்களுக்கு நீண்டகாலத்துக்கு முன்னால சொல்லப்போனா உங்கப்பா காலத்து ஆட்கள்ல இருந்து உதவி ஆசிரியர்கள் வரைக்கும் ஏதோ அவங்க திறமைக்கு ஏத்தாப்போல எழுதுற செய்தியைத் திருத்தம் போடவாவது குறைந்த பட்சம் தெரியணும் சார்.


மதிவாணன்


இதுக்கு முன்னால் அது தெரியாம இருந்தா அதுல ஒரு பிரச்னையும் இல்லை. இப்ப தெரிஞ்சிருக்க வேண்டியது கட்டாயம் இல்லையா..?

(ஆதித்தன் கிட்ட வாங்குற காசு, செரிக்க வேணாமா..?) 

இப்படி லந்து செய்துக்கிட்டிருந்த மதிவாணன், தாம்தூம் தையத்தக்க என பல வண்ணக் கனவுகள் கண்டவர், நடு ஆபிசில் நின்றுகொண்டு அனைவரையும் திட்டுபவர் கொஞ்ச நாளில் ,என்ன மாயமோஉள்ளுக்குள்ளே என்ன நடந்ததோ இப்பொழுது சர்வம் சாந்தி மயம்போல நடந்துகொள்கிறாராம்.

இவர் அமைதியாக இருந்தாலும்,மொத்தத்தில் தந்தி டிவி யை நொண்டி அடிக்க வைப்பதில் சந்துருவும் மதிவாணனும்,காலைப் பிடித்து பின்னுக்கு இழுப்பதில் அவர்களை அறியாமலேயே கூட்டணி வைத்துச் செயல்படுகிறார்கள்.

உங்களைச் சொல்லிக் குத்தமில்லை.

சட்டியில இருந்தாதானே அகப்பையில் வரும்,இந்த மாதிரி பழமொழிகளை, காரணம் இல்லாமலா பெரியவங்க சொல்லிவச்சுட்டுப் போனாங்க...!

Thursday 23 May 2013

G tv -ல் பத்திரிகையாளர்களின் 3 நாள் போராட்டத்துக்கு வெற்றி...!





மடிப்பாக்கம் வேலாயுதம்...

இவரைப் பற்றி உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை.

கட்டப்பஞ்சாயத்து,கள்ள‌ச்சாராயம்,ரியல் எஸ்டேட் பேர்வழிகள்,அரசியல் தரகர்கள் ஆகியோர் 1990 கால கட்டங்களில் கல்வித்தந்தைகள் ஆனார்கள் என்பது ஊரறிந்த உண்மை.

அவர்களில் ஒரு பிரிவினர் தங்கள் செல்வாக்கைத் தொடர்ந்து வளர்க்கவும் அரசியலில் தக்கவைக்கவும் இப்பொழுது ஊடக அதிபர்களாக வலம் வரத் திட்டமிட்டு அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்கள். இதில் ரியல் எஸ்டேட் துறையில் இருந்து வெற்றியை நோக்கிப் பயணிப்பவர் தான் மடிப்பாக்கம் வேலாயுதம்.

ரியல் எஸ்டேட் புள்ளியான‌ இவர், எத்தனை நாளைக்குத் தான் அடுத்தவரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடப்பது, நாமே ஒரு அதிகார மையமாக உருவானால் என்ன என்று சிந்தித்து புதிய தலைமுறையின் வழியில் உதித்தது தான் ஜி டிவி எஸ்பிவி சேனல்.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் பொழுது விழுப்புரம் தொகுதிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேடபாளராய் நிறுத்தப்பட்டு அவருக்கு எதிராக எழுந்த மோசடிக் குற்றச் சாட்டுகள் காரணமாய் மாற்றப்பட்டார். 

ரியல் எஸ்டேட் துறையில் இவர் மோசடி செய்தார் என்று நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதும் பின்பு அந்த வழக்குகள் பேசித் தீர்க்கப்பட்டதும்  நாடறிந்த உண்மை.

பொதுவாக,  ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து நபர்கள், 'கல்வித் தந்தைகள்' போன்றவர்கள் தங்களின் துறையில் ஒரு கொடூர முகம் கொண்டிருந்தாலும் ஊடக உலகில் 'புத்தரின் கருணை'யைப் போன்ற முகம் காட்டுவார்கள். ஆனால் இதிலும் விதிவிலக்கு தான் மடிப்பாக்கம் வேலாயுதம்.

ஆம். இதிலும் நேர்வழியைக் கடைப்பிடிக்கவில்லை. ஆம். இவரது தொலைக்காட்சி குறித்து பலசெய்திகள் பகிர்வதற்கு இருந்தாலும் அவரது தொழிலாளர் விரோதப் போக்கை மட்டும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
**

இவர் ஜி டிவி ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை தொழிலாளர்களுக்கு ஒழுங்காக‌ குறித்த காலத்தில் சம்பளம் ் அளித்ததே இல்லை. தீபாவளி,பொங்கல் உட்பட எதற்கும் போனஸ் கொடுத்ததும் இல்லை. எல்லா நிறுவனங்களிலும் தீபாவளிக்கு முன்பு போனஸைத்தான் எதிர்பார்ப்பார்கள். ஆனால்,  தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்புதான் இங்கு சம்பளமே தருவார்கள்.அதைப்போல அனைவருக்கும் ஊழியர் அடையாள அட்டை தரப்படுவதும் இல்லை.குறிப்பிட்ட ஒரு சிலருக்குத் தான் தருவார்கள்.

ஆரம்பத்தில் இருந்து, சம்பள தாமதம் தொடர்ந்து இருக்கிறது.ஆனால் அது சமீபத்தில் உச்சத்திற்குச் சென்று விட்டது. கடந்த மூன்று மாதங்களாக முறைப்படி யாருக்கும் சம்பளம் தரவில்லை.கடைசியாக ஜ‌னவரியில்தான் அங்குள்ள ஊழியர்கள் சம்பளம் வாங்கினார்கள். அதற்குப் பிறகு, 2 மாதம், 3மாதம், 4 மாதம்.. சம்பள பாக்கி எனும் நிலை உருவானது.

அவர்கள் சம்பளம் கேட்டு நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் அது செவி மடுக்கவில்லை. ஒவ்வொரு நிர்வாகத்திலும் ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையில் ஒருவர் இருப்பாரே அதைப் போல ஜிடிவியிலும் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் எஸ்.கே மதிவாணன். இவர் அங்கு மேனேஜிங் எடிட்டராம். (நல்லா பண்றாரு மேனேஜ்...)
***

தமிழ் தொலைக்காட்சிகளில் பல மதிவாணன்கள் இருப்பதால், இவரை உதார் மதிவாணன் என்றே அடையாளம் சொல்கிறார்கள். அது என்ன, உதார்?

மதிவாணன்


வேலை செய்வதைவிட வாய் உதாரிலேயே எல்லாரையும் சமாளித்துவிடுவாராம். தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊழியர்கள் செய்த மொத்த உழைப்பாலும் ரேட்டிங்கில் முன்னணி இடத்துக்கு சேனல் வந்ததும், அது தன்னால்தான் என்று வாய்கூசாமல் பீற்றிக்கொண்டார்.

'தினமணி' சந்தானகிருஷ்ணன், 'தினமலர்' நூருல்லா, 'ஃபெலிக்ஸ்' ஜெரால்டு, மோசஸ் ராபின்சன், ஏழுமலை வெங்கடேசன் என பல ஊடகக்காரர்கள் கட்டி வளர்த்த  ஜிடிவியில், அவர்களால் தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலையில் வெளியேறிவிட்டனர்.

காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையாக, சேனல் ஓரளவுக்கு முன்னணியில் போகத் தொடங்கிய போது, இவர் வேலைக்கு வந்தார் ஆனாலும், என்ன? மதிவாணன் தான் எல்லாம் என வேலாயுதம் நம்பியதால், யாரும் இவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.

 வேலாயுதம் 

அப்படி மதிவாணன் சாதித்தது என்ன என பட்டியல் போட்டால், மற்ற பல செய்தியாளர்க‌ளின் சாதனைகளைக் கிட்ட நெருங்கமுடியாது. இவர் முதன்முதலில் வேலை பார்த்தது விஜய் செய்திகளில். அதன் பிறகு சன் நியூஸில், பிறகு கொஞ்ச நாள் ஆளைக் காணவில்லை. மக்கள் தொலைக்காட்சி உட்பட பல இடங்களில் முயற்சிசெய்தும் இவரின் திறமையைக் கண்டு, அவர்கள் தெறித்துப்போனார்கள்.

........................ஒருவழியாக, நீண்ட இடைவெளிக்குப் பின் ஜிடிவி யில் மேனேஜிங் எடிட்டர் பதவியில் ஒட்டிக்கொண்டார்.
ஜிடிவியில் வந்ததில் இருந்தே இவர் செய்துவந்த காரியம், மற்றவர்கள் சரியில்லை எனச் சொல்லிச் சொல்லியே, மேலிடத்தில் செல்வாக்கு பெற்று, அதிலேயே வண்டியை ஓட்டிவருகிறார்.

ஜிடிவியில் இவரின் திறமைகளைப் பற்றிச் சொன்னால், பல சுவாரஸ்யமான கதைகளைச் சொல்கிறார்கள், செய்திப் பிரிவில் உள்ளவர்கள்.

ஒரு செய்தியை மட்டும் பார்ப்போம்.

சில மாதங்களுக்கு முன்பு 'தங்கம் கிராம் விலை ரூ. 3 ஆயிரத்தைத் தொட்டது'. சரியாக எழுதப்பட்ட அந்தச் செய்தியைத் திருத்துவதாக நினைத்துக்கொண்டு, குறுக்கிட்ட உதார் மதிவாணன், செய்திப்பிரிவுக்குள் வழக்கமாக‌ சத்தம் போட்ட படியே சென்றவர், பெரிய தவறைக் க‌ண்டுபிடித்தது போல, 'சவரன் விலை 3 ஆயிரம் ஆனது' என்று திருத்திக் கொடுத்தார்.

இதைக் கண்டு தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக செய்திப்பிரிவு ஆசிரியர்கள் சவரனுக்கும் கிராமுக்கும் வித்தியாசம் தெரியாதது மட்டுமல்ல, நம்மையும் தப்புன்னு சொல்றான். இதை எங்க போய் முட்டுவது என்று புலம்பினர். இது தான் உதாரின் செய்தி அறிவு.

அந்த உதார் தான் மேனேஜிங் எடிட்டர் என்பதால் அவரிடம் கடந்த திங்கட்கிழமை அன்று 17 உதவி ஆசிரியர்கள் தங்களுக்கு 3 மாதமாய்ச் சம்பளம் வராததை முறையிட்டனர்.

இங்கு எல்லாவற்றுக்கும் நான் தான் என்று அடிக்கடி சொல்லிக் கொள்ளும் அவர் இதில் மட்டும் கல்லுளி மங்கன் என்று சொல்வார்களே, அதைப்போல, அந்த விசயத்துக்கு சம்மந்தம் இல்லாதவரைப் போல அமைதியாகவே இருந்தவர், ஒரு கட்டத்தில் பொறுக்காமல், அடிஉள்ளத்தில் இருந்தபடி, நிர்வாகத்திற்கு ஆதரவாகவும் பேசினார்.

இதனால் ஆவேசமான ஊழியர்கள் சிலர், '' பத்திரிகையாளர் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள்,  என்ன சார்,நிர்வாகத்தின் கைக்கூலியைப் போல் நடந்து கொள்கின்றீர்களே..?' என்று கேள்வி கேட்டதும், ' ஆம் நான் கைக்கூலி தான்' என்று கூச்சமே இல்லாமல்  ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

மேற்கொண்டும் அங்கு வாதத்தை வளர்க்க விரும்பாத பாதிக்கப்பட்ட ஊழியர்கள், கறாராக, மூன்று மாத சம்பளத்தை மூன்று நாட்களுக்குள் கொடுக்க வேண்டும். அதனை வலியுறுத்தி   20-05-2012 முதல் மூன்று நாள் தொடர் வேலை நிறுத்தம். அப்பொழுதும் கொடுக்காவிட்டால் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளிப்போம் என்றும் அங்கேயே அறிவித்த‌னர்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த உதார், அப்படியெல்லாம் செய்துடாதீங்க..தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று  தடாலடியாக அதீத பணிவைக்காட்டினார்.

முதலாளிக்கு இவ்வளவு பணிவைக் காட்டும் உதாருக்கு, ஊழியர்களுக்கு ஊதியம் தராததில் அவருக்கு எவ்வித உறுத்தலும் குற்ற உணர்வும் இல்லை.

****
இன்றுடன் (23-05-2012)மூன்று நாள் கெடு முடிவடைய இருந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சொரணையுள்ள‌ ஊழியர்கள் மெரினா கடற்கரையில்  கூடி ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் ஊழியர்களின் போராட்டத்திற்கு அஞ்சிய நிர்வாகம் சென்னை ஊழியர்களுக்கு ஒரு மாத நிலுவை ஊதியத்தையும்,இதர மாவட்ட ஊழியர்களுக்கு இரண்டு மாத ஊதியத்தையும் இன்று மாலை அளித்துள்ள‌து.

சென்னை அல்லாத பிற மாவட்ட ஊழியர்களுக்கு மட்டும் எப்படி இரண்டு மாத ஊதியம்...? சூடுசொரணை கொண்ட அவர்கள் ஒட்டுமொத்தமாய்ப் பேசி, மாவட்டச் செய்திகளை அனுப்பாமல் செய்திச் சேனலை ஸ்தம்பிக்க வைத்தனர்.

3 நாட்களும் ஓடியது என்ன செய்தி..?

வேறென்ன பழைய செய்தி தான்..!

சில நூறு கோடிகளைச் செலவழித்து தங்களின் கறைபடிந்த முகத்தினை மாற்றி அதற்குப்பின் 'ஒளிவட்டம்' கட்ட விரும்புபவர்கள், உழைக்கும் ஊழியர்களுக்கு சில ஆயிரங்களைக் கூட கொடுக்க மனமில்லாமல் அவர்களை மாதக் கணக்கில் அலைக்கழிக்கிறார்கள்,இழிவாய் நடத்துகிறார்கள் என்பது தான் கொடுமையான உண்மை.

ஆனாலும் அதனையும் மீறிப் போராடி முதல் கட்ட வெற்றியை ஈட்டிய ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள். 

உழைப்பும் இந்த போராட்ட உணர்வும்தான் என்றும் நிற்கும். 

Tuesday 21 May 2013

சன் நியூஸ் மகாலட்சுமி மீது வழக்குப் பதிவு-கைது செய்யப்படுவாரா..?

மகாலட்சுமி


கோவை அருகே உள்ள சூலூரைச் சேர்ந்தவர்  பனிமலர்.திராவிட குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர்.இவரது குடும்பத்திற்கு சூலூரில் மிக நல்ல பெயர் உண்டு.
கல்லூரிப் படிப்பு முடித்ததும் சென்னைக்கு வந்த இவர் ஊடகத்துறையில் உள்ள ஆர்வம் காரணமாய் சன் குழுமத்தில் செய்தி வாசிப்பாளராய் வேலைக்குச் சேர்ந்தார்.

அப்பொழுது அங்கு செய்தி வாசிக்கும் மகாலட்சுமி உடன் நட்பும்,மகாலட்சுமியின் உடன்பிறந்த தம்பி சதீஷ் நாராயணன் உடன் காதலும் ஏற்பட இரு வீட்டார் சம்மதத்துடனும்  திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் திருமணம் கடந்த 2012 பிப்ரவரி 27 ஆம் நாள் திருமணம் நடைபெற்றது.

சதீஷ் நாராயணன் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்குப் பின் பாலிமர் டிவியில் வேலைக்குச் சேர்ந்த பனிமலர் அதன் பின் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணியில் சேர்ந்தார்.

இந்த நிலையில் இன்று காலை (19-05-2012) சென்னை அமைந்தகரை காவல் நிலையத்தில் பனிமலர் தனது கணவர் சதீஷ் நாராயணன் மீதும் அவரது சகோதரியும் சன் நியூஸ் செய்தி வாசிப்பாளருமான மகாலட்சுமி,மகாலட்சுமியின் தாயார் மீதும் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் த்ன்னைத் தனது கணவரும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து கடுமையாகத் தாக்கியதோடு மட்டுமல்லாமல் மிகுந்த இழிவாக நடத்தியதாகவும் இன்னும் சில கடுமையான குற்றச்சாட்டுகள் அடங்கிய புகாரினைக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் மகாலட்சுமி மற்றும் அவரது சகோதரரும் பனிமலரின் கணவருமான சதீஷ் நாராயணன் அவரது தாயார் ஜான்சி ராணி ஆகியோர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 498a,506/2 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள‌து.கைது நடவடிக்கை விரைவில் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கறிஞராய் இருப்பவர் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் பணியைச் செய்யலாமா என்னும் கேள்வி மகாலட்சுமியை நோக்கி எழுந்திருக்கும் நிலையில்,செய்தி வாசிப்பாளர் அகிலா கொடுத்த புகாரின் படி கைது செய்யப்பட்ட சன் நியூஸ் எடிட்டர் ராஜா பிரச்சனையில் அவருக்கு ஆதரவாய் வழக்கறிஞர் தொழில் நெறிமுறைக்கு மாறாக மகாலட்சுமி நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் அவரது குடும்பத்தில் இருந்தே காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

http://www.periyardk.org/news_detail.php?id=71

Tuesday 14 May 2013

கலைஞர் தொலைக்காட்சியில் இருந்து சுகிதா,ஜெனிபர் ராஜினாமா..!

 சுகிதா


புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பீர்முகம்மது விரைவில் தந்தி தொலைக்காட்சியில் ஐக்கியமாகிறார்.புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இருந்து பீர் முகம்மதுவும் சேட்டன் பிரேம்சங்கரும் நீயா பண்ணினா ராஜினாமா..!  நான் செய்தால் டிஸ்மிஸ் என்னும் எச்சரிக்கையின் அடிப்படையில் நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டது குறித்த பின்னணி அடுத்த பதிவாக வெளிவரும்.

பீர்முகம்மது 


அதே வேளையில் புதிய தலைமுறையில் பிரேம்சங்கர் கோஷ்டியில் இருந்து கொண்டு அதிகாரத்திலும் ஆட்டத்திலும் கொடி கட்டிப் பறந்த மகாலிங்கம் மற்றும் குழுவினர் கடும் அச்சத்திலும் விரக்தியிலும் உள்ளனர்.எதும் சரியான வாய்ப்புக் கிடைத்தால் மடத்தைக் காலி செய்யும் திட்டத்திலும் உள்ளனர்.

புதிய தலைமுறையில் நியூஸ் (operation ) பொறுப்பேற்றுக் கொண்ட ஷண்முகசுந்தரம்..((இவருக்கு தமிழ் எழுத்தான ச பிடிக்காதாம்.வட நாட்டு ஷ தான் பிடிக்குமாம்.ஷங்கர் மாதிரி ஷண்முகசுந்தரம்.என்ன கருமமோ..!)..) தனது பழைய கூடாரமான கலைஞர் தொலைக்காட்சியில் இருந்து ஒரு சிலரை புதிய தலைமுறைத் தொலைக்காட்சிக்கு அழைத்து வருகிறார்.

அதன்முதல் படியாக கலைஞர் தொலைக்காட்சியில் இருந்து ஸ்பெஷல் கரஸ்பாண்டண்ட் சுகிதா,செய்தி வாசிப்பாளர் ஜெனிபர் உட்பட 4 பேர் இரு தினங்களுக்கு முன் விலகல் கடிதம் கொடுத்துள்ளனர்.அவர்கள் புதிய தலைமுறையில் இதைவிட அதிக ஊதியத்துடன் விரைவில் சேருவார்கள் எனத் தெரிகிறது.
****


Tuesday 7 May 2013

புதிய தலைமுறையில் ஆன்ட்டி கிளைமாக்ஸ் - சந்தியா ராஜினாமா..!


சந்தியா 


புதிய தலைமுறை தொலைக்காட்சி யில் ஊழியர்களிடையே நடக்கும் அதிகாரப் போட்டியையும் அதன் காரணமாய் ஊழியர்களிடையே நிலவும் குழு மனப்பான்மையையும் நாம் நமது முந்தைய பதிவுகளில் சுட்டிக் காட்டியிருந்தோம்.

அதிகாரப் போட்டியில் சேட்டன் பிரேம்சங்கர் தலைமையிலான அணி அதிக ஆதிக்கம் செலுத்துகிறது,இது அங்கிருக்கும் ஊழியர்களிடையே மிகுந்த மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் சொல்லியிருந்தோம்.

ஆனால் எதிர்பாராவிதமாக சமீபகாலமாய் திடீர் திருப்பம்.சேட்டன் அணி கடும் பின்னடைவைச் சந்தித்துள்ள‌து என்றும், இந்தப் பின்னடைவில் பிரேமின் மனைவி சந்தியா உட்பட பலருக்கு அதிகப் பாதிப்பு  என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதை ஒட்டிய பதிவு தான் இது.ஆனால் செய்திக்குப் போகும் முன் ஒரு சின்ன முன்னோட்டம்.

புதிதாய்த் தந்தி டிவி வந்த பின்பு இங்கிருந்து அங்கும்,அங்கிருந்து இங்கும் ஊழியர்களை இழுக்கும் போட்டி இரு தொலைக்காட்சிகளுக்கும் இடையே நிலவி வந்தது.

அதன் ஒரு கட்டமாய் புதிய தலைமுறை ஊழியரான மதிவாணன் என்பவருக்கு மிக அதிக ஊதியம் கொடுத்து தந்தி டிவி வேலையில் சேர்த்தது.இதில் பு.த.உயர் மட்டம் கொஞ்சம் ஜெர்க்.


மதிவாணன் 


தந்தி டிவி அத்துடன் நிற்காமல் இன்னொரு புதிய தலைமுறை பிரபலத்தையும் இழுக்கப் பேச்சு நடத்தியது.அவருக்கும் ஆசை தான் ஆனால் கொஞ்சம் யோசித்தார்.இந்தப் போட்டியினால் புதிய தலைமுறையில் வேலை பார்க்கும் சிலருக்கு ஒரு எண்ணம் வந்தது.நாம் அதிக சம்பளத்துக்கு கோரிக்கை வைத்தால் நிர்வாகம் நம் கோரிக்கைக்கு செவி மடுக்கும்.கேட்ட சம்பளத்தைக் கொடுத்து விடும் என்பது.

இந்த நிலையில் தான் புதிய தலைமுறையில் அதிகாரத்தில் கொடி கட்டிப் பறக்கும் பிரேம்சங்கரின் மனைவி  சந்தியா ஒரு திட்டம் போட்டார். (இவர்  தான் இலங்கை சென்று வந்த பின்  உண்மையைத் தேடி  என்ற பெயரில் இலங்கைக்கு ஆதரவாய் ஒரு சார்பான ஆவணத் தொகுப்பு வீடியோ ஒன்றை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வெளியிட்டார்.)

நிர்வாகத்துடன் கூடுதல் சம்பளம் கேட்டு பேசுவது என்று .அவரின் நெனப்பு என்னவென்றால் நமது கணவர் புதிய தலைமுறையில் மிக முக்கியப் பொறுப்பிலும் நல்ல நிலையிலும் இருக்கிறார்,இது போக தந்தி டிவியுடன் ஆள் இழுப்பு போட்டி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் நாம் அதிக சம்பளத்துக்கு கோரிக்கை வைத்தால் கண்டிப்பாய் நிர்வாகம் செவிமடுக்கும் என்பதே.
அதன்படி சந்தியா புதிய தலைமுறையின் முதலாளி சத்திய நாராயணனைச் சந்தித்தார்.




இருவரின் உரையாடலும் இப்படி அமைந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்ன விஷயமா பார்க்க வந்திருக்கீங்க சொல்லுங்க..!

குட் மார்னிங் சார்.எனக்குத் தந்தி டிவியில இருந்து ஆபர் வந்திருக்கு.அங்க போகலாம்னு நினைக்கிறேன்.சம்பளமும் கொஞ்சம் அதிகம்.என்று சொல்லி விட்டு சத்திய நாராயனனின் முகம் பார்த்தார்.

சந்தியாவின் நினைப்பு என்னவென்றால்,தந்தி டிவிக்குச் செல்கிறோம் என்று நாம் சொன்னவுடன் எம்.டி.,உடனே பதைபதைத்து அங்க ஏன் போறீங்க ? அந்தச் சம்பளத்தை இங்க வாங்கிக்கோங்க என்று சொல்வார் என்பது தான்.

அதனால் தான் தந்தி டிவியில் சம்பளமும் அதிகம் என்று சொல்லிவிட்டு சத்திய நாராயணனின் முகத்தை அர்த்தத்துடன் ஏறிட்டுப் பார்த்தார்.

ஆனால் எதிரில் இருக்கும் சத்திய நாராயணன் என்ன லேசுப்பட்டவரா..?


நாட்டின் விவசாயத்தை மலடாக்கிய சுவாமிநாதனுடன்  சத்திய நாராயணன் 


தன் கல்லூரிகளில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களிடமிருந்து  கட்டணம் என்ற பெயரிலும் நன்கொடை என்ற பெயரிலும்  சில லட்சங்களை எப்படி வசூல் செய்வது ?,எப்படி புதிய புதிய கல்லூரிகளைச் சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து துவக்குவது,அதில் எப்படி மாணவர்களைச் சேர்ப்பது தன்னிடம் இருக்கும் கணக்கு வழக்கற்ற பல்லாயிரம் கோடிகளைக் கொண்டு இன்னும் புதுப்புதுச் சேனலைத் துவக்கி  எப்படிச் சமூகத்துக்கு அறம் போதிப்பது என்று பல திட்டங்களை இதுவரை உட்கார்ந்த இடத்திலிருந்து கொண்டே தீட்டி அதில் வெற்றியும் பெற்றவரல்லவா..!

இத்தனை பெரிய சாம்ராஜ்யத்தைக் குறுக்கு வழியில் நிலைநாட்டிய கூட்டத்தில் ஒருவரான‌ அவர் இதுவரை எத்தனை பேரைத் தன் வாழ்நாளில் சந்தித்து அவர்களை வெற்றி கொண்டிருப்பார்..?

அவருக்குத் தெரியாதா ..?

எதிரில் நிற்கும் சந்தியாவின் உண்மையான நோக்கம் தந்தி டிவிக்குச் செல்வதல்ல.தந்தி டிவியின் பெயரைச் சொல்லி நம்மிடம் அதிக ஊதியத்துக்குப் பேரம் பேசுவது என்று.இரண்டாவது சந்தியா இல்லையென்றாலும் அவரின் பணி இடத்தை நிரப்புவது சுலபம் என்று.மூன்று சந்தியாவை நீக்குவது மூலம் பிரேமுக்கு செக் வைப்பது என்று.  

ஆகவே சந்தியா,தந்தி டிவியில் சம்பளம் அதிகம் சார் என்று சொல்லிவிட்டு சத்திய நாராயணனின் முகத்தைப் பார்த்தவுடன் பாரிவேந்தரின் இளவரசர் தன் முகத்தில் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல்,

ஓக்கே.ஆல் த பெஸ்ட்.நீங்க எப்ப ரிசைன் பண்றீங்க ? என்றார்.

இதைக் கேட்டவுடன் சந்தியாவுக்கு நினைச்சது ஒன்னு இங்கு நடப்பது ஒன்னு என்று புரிந்து போனது.காலுக்கு கீழே தரை நகர்வது போல் இருந்தது.ஆனாலும் என்ன சொல்வது என்று தெரியவில்லை.இப்படி நடக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் வேறு வழியில்லாமல் திஸ் மன்த் என்ட்ல ரிசைன் பண்றேன் சார் எனச் சொல்லி விட்டு இறுக்கத்துடன் வெளியே வந்தார்.

சொன்னபடியே கடந்த மாத இறுதியில் புதிய தலைமுறை வேலையை ராஜினாமாவும் செய்து விட்டார்.

ஆனால் எந்த டிவியிலும் இன்னும் வேலைக்குச் சேரவில்லை.

இது பிரேம் சங்கருக்கு மட்டுமல்ல‌ அவரது குழுவில் உள்ள பலருக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

இது மட்டுமல்ல இதற்கடுத்து இன்னும் பல அதிரடிகளும் இன்னும் பல உள்ளரசியலும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நிகழ்ந்துள்ள‌து.

அது அடுத்த பதிவில்...