Wednesday 28 December 2011

இரண்டு விபச்சாரிகளின்(பத்திரிக்கைளின்)குழாயடிச் சண்டை


                  நன்றி-தினமணி கார்ட்டூன் 27-12-2011


                                       


                          நன்றி-தமிழ் முரசு-28-12-2011



   புரியாதவர்கட்கு உதவி செய்ய சில குறிப்புகள்.

1)பப்ளிசிட்டி வாத்தியார்-வைத்தியநாதன்
2)மனோகரா-மனோஜ்குமார்
3)கண்ணழகி-உங்க அறிவுக்கு எட்டிய வரை யோசியுங்க.நமக்கு அந்தளவுக்கு ஞானம் பத்தாதுங்க.கண்ணழகி கால் அழகி,தொடையழகி,தொப்புள் அழகி இப்படியெல்லாம் எழுதுறவனைத் தவிர வேறு யாருக்குத் தெரியும்?
4)மதிகெட்டான் கார்ட்டூன் மதி


இந்த சண்டையைப் பத்தி கேட்டுக்கிட்டு இருந்த நரிக்குறவர் ஒருத்தர் நைசா நம்மகிட்ட வந்தார்.அவர் பாட்டுக்குப் பேச ஆரம்பிச்சார்.


சாமியோவ் நீங்க படிச்சுக்கிட்டு இருந்ததை எல்லாம் கேட்டுக்கிட்டு இருந்தேனுங்க.எங்க சனங்க சரியாக் குளிக்காததால நாத்தம் அடிக்கும் சாமியோவ்.

ஆனா பத்திரிக்கை முதலாளிங்க சாமிங்க,பத்திரிகையில வேலை பார்க்குற சில ஆசாமிங்க,இவங்க எல்லாம் நீட்டா வெள்ளையும் சொள்ளையுமா இருக்காங்க.அவங்க செய்யுற வேலைங்களக் கேட்டா இந்த நாத்தம் அடிக்குதுங்க சாமியோவ்.

இப்ப படிச்ச கத மாதிரி இதுக்கு முன்னாடி நிறையக் கதை இருக்கு சாமியோவ்!ஒன்ணு சொல்றேன் சாமி!வீரப்பனப் பேட்டி கண்ட செய்தி படம் எல்லாம் நக்கீரனில் வந்தது சாமி.அதே செய்தி இந்தியா டுடே விலும் வந்தது சாமி.அந்தச் செய்தி ஜூனியர் விகடனுக்கு கிடைக்கலைன்னு ஆத்திரத்தில சாமி,இது வரை செய்தி தான் வியாபாரம் ஆச்சு.இப்ப செய்தியாளர்களே வியாபாரம் ஆகிட்டாங்க அப்படின்னு ஒரு செய்தி ஜு.வி.யில் போட்டாங்க சாமி.இதனால நக்கீரன் சாமிக்கு பெருத்த கோபம் வந்துச்சு சாமி.

உடனே சாமி, ஜு.வி.முதலாளியோட பையன்,அதான் சீனி சாமி ன்னு ஒருத்தர் இருக்காரே சாமி,அந்த சாமி தீபா வெங்கட் டுன்னு ஒரு நடிகை சாமியத் தள்ளிட்டுப் போச்சுன்னு நக்கீரனில் எழுதி பதிலுக்கு நாறடிச்சுட்டாங்க சாமி.

இன்னும் இது மாதிரி நிறையக் கத இருக்குது சாமி உங்க பத்திரிக்கை உலகத்துல.அதச் சொல்ல நிறய நேரம் வேணும் சாமி.எனக்கு இப்ப வேல இருக்கு சாமி.அப்பத் தான் நான் கா வயித்துக் கஞ்சியாவது இன்னிக்கு குடிக்க முடியும் சாமி!

எங்க மேல இருந்து வர்ற அழுக்கால வர்ற நாத்தம் பரவால்ல சாமி.இந்த மாதிரி ஒழுக்ககேடான விஷயம் எங்க சாதி சனத்துல கிடையாது சாமி.நாங்க மான மருவாத உள்ளவங்க சாமி.


இன்னொரு நாள் இந்தக் கருமத்தச் சொல்றேன் சாமி!வரட்டா சாமி!பாத்துப் போங்க சாமியோவ்.



                            

மலையாள தேசாபிமானியும் தமிழன் தலையில் கொள்ளி வைக்கும் தீக்கதிரும்





சர்வதேசியம் பேசினாலும் அநியாயம் என்றாலும் மலையாளிகளின் பக்கம் நிற்கிறது சி.பி.எம்மின் மலையாள தேசாபிமானி.

முல்லைப்பெரியாறு குறித்த தமிழக தமிழக அரசின் விளம்பரத்தை பணம் கொடுத்தாலும் போடமாட்டோம் என்று தூக்கியெறிந்துவிட்டது.

சி.பி.எம்.மின் தமிழ்நாட்டு தீக்கதிரோ, கேரள காங்கிரசு மலையாள முதல்வர் உம்மன்சாண்டியின் விளம்பரத்தை காசு வாங்கிக்கொண்டு 20-12-2011 அன்று அனைத்துப் பதிப்புகளிலும் வெளியிட்டதோடு மேலும் அந்த கைக்கூலித்தனத்திற்கு போனசாக முன் திட்டமிடலுடன் கூடிய வளர்ச்சி“என்ற மற்றொரு கேரள அரசு விளம்பரத்தையும் 25-12-2011 அன்று வெளியிட்டுள்ளது.


தமிழன் தலையில் கொள்ளி வைப்பது என்பது சி.பி.எம் மின் "முன்திட்டமிடல்" என்பது ”அப்பாவி தோழர்களுக்கு” எப்போது தான் புரியுமோ?


Monday 26 December 2011

குமுதம் தலைமை நிருபர் வி.சந்திரசேகரன் ராஜினாமா !




குமுதத்தில் நீண்ட காலம் பணியாற்றியவரும் தற்பொழுது அங்கு தலைமை நிருபராக இருப்பவருமான வி.சந்திரசேகரன் குமுதத்திலிருந்து ராஜினாமா செய்துள்ளார். முன்பு  பா.வரதராஜன் வட்டாரத்தில் இருந்தாலும் சமீப காலமாக இருவருக்கும் ஒத்துப் போகவில்லை.அதன் காரணமாக இவரை மும்பைக்கு இடமாற்றம் செய்து தொந்தரவு செய்தார்கள்.ஆனால் அங்கு பணியில் சேராமல் விடுப்பில் சென்றிருந்தார்.

வழக்கமாக டிசம்பர் மாதக் கச்சேரிகளை இவர் தான் கவர் செய்வார். ஆகையால் அதற்குள் எப்படியாவது மீண்டும் சென்னையில் உள்ள குமுதம் அலுவலகத்தில் பணியில் சேர முயற்சி செய்து கொண்டிருந்தார். 

ஆனால் சென்னையில் குமுதம் அலுவலகத்தில் உள்ள இவரது அறை நாணயம் விகடனில் இருந்து புதிதாய் வேலைக்குச் சேர்ந்த வெங்கட்டுக்கு ஒதுக்கப்படவே இனி வாய்ப்பில்லை என்று கருதி வேறு வழியின்றி  தனது வேலையை ராஜினாமா செய்து விட்டார் என்று குமுதம் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப் படுகிறது. 

Sunday 25 December 2011

என்று தணியும் இந்த‌ நக்கீரனின் பொய்யும் புரட்டும்?



கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எட்டு நாளில் தெரிந்துவிடும் என்பார்கள்.ஆனால் எத்தனை முறை அம்பலப்பட்டுப் போனாலும் கூச்ச நாச்சமின்றி படிக்கும் வாசகனை எப்பொழுதும் மடையனாக நினைத்துக் கொண்டு தொடர்ந்து எழுத்து விபச்சாரம் செய்வதில் முன்னணியில் நிற்பது தான் நக்கீரனின் புலனாய்வு.

உண்மை துணிவு உறுதி என கொள்கை முழக்கத்துடன் வெளிவந்த நக்கீரன் தனது ஆரம்ப காலத்தில் அவ்வாறு பயணித்தது உண்மை தான்.ஆனால் பாதை மாறி பயணம் மாறி பல காலம் ஆகி விட்டது.
இவ்வாறு விற்பனை செய்து வரும் நக்கீரனின் இந்த வாரக் கேவலமான வியாபார உத்தியினை மட்டும் பார்ப்போம்.

இந்த வார டிசம்பர் 24-27,2011 தேதியிட்ட அட்டையின் தலைப்பு என்ன தெரியுமா?

என்ன நடந்தது?விவரிக்கிறார் சசிகலா!



இந்த வார அட்டையைப் பார்த்தால் தான் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கான காரணங்களையும்,தனக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையிலான பிரச்சனையையும்,இதுவரை வெளிவராத பகீர்பின்னணி தகவல்களையும் சசிகலா மனம் திறந்து நக்கீரனிடம் பிரத்யேகமாக பேட்டி அளித்தது போல தலைப்பு வைக்கப் பட்டிருக்கிறது.
இதனைப் பார்க்கும் வாசகனும் இதனைப் பார்த்து விட்டு உடனே 10 ரூபயைக் கொடுத்து நக்கீரனை வாங்குகிறான்.இதைத்தான் நக்கீரனும் எதிர்பார்க்கிறது,தலைப்பு வைக்கிறது.

ஆனால் நக்கீரனின் உள்ளே படித்தால் சசிகலா பேட்டி அளித்தது போலவோ,அல்லது விவரிப்பது போலவோ,அல்லது சசிகலாவின் வட்டாரங்கள் சொல்லிய தகவல்கள் என்றோ பெயருக்குக் கூட ஒரு குறிப்பும் இல்லாமல் வெளிவந்திருக்கிறது.

வெளிவந்த செய்தி இது தான்.



இது தான் நக்கீரனின் நிருபர் "உமர் முக்தார்" புலனாய்வில் கிடைத்த தகவல்கள்.அவமானத்திற்கு என்ன பரிகாரம்,உறவு பற்றி உளவு என மேலும் 2 பக்கங்களையும் நிரப்பியிருக்கிறார்.இதைப் படித்தால் நக்கீரன் நிருபர் பக்கத்தில் இருந்து பார்த்து எழுதியது போல் எழுதப்பட்டுள்ளது.

ஜெயலலிதா சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியதில் எல்லா புலனாய்வு இதழ்களும் வரிந்து கட்டி கற்பனைகள் கலந்து தான் நினைத்ததை எழுதினாலும் இதில் நக்கீரனின் புளுகு தான் மிக உச்சகட்டமான அண்டப்புளுகு,ஆகாசப்புளுகு,நினைத்துப் பார்க்க முடியாத கற்பனை.குறிப்பாக கீழ்க்கண்ட வசனங்களைப் படியுங்கள்.

எனக்கு அரசியல்ங்கிறது தலையில வைக்கிற பூ மாதிரி தான். எப்ப வேணும்னாலும் தூக்கி எறிஞ்சிடுவேன். இவங்கதான் என்னைப் பிடிச்சி இழுத்து அரசியலில் இருக்கச் சொன்னாங்க.

“”பெரியம்மா ஏன் உங்களையும் வெளியே அனுப்பிட்டாங்கன்னு சொந்தபந்தங்கள் கேட்டபோது, கண்கள் கலங்க விளக்கியிருக்கிறார் சசிகலா.

“”திங்கட்கிழமை காலையில 7 மணிக்கு என்னை அக்கா(ஜெ) எழுப்பு னாங்க. அந்த நேரத்தில், சோவும் கார்டனுக்கு வந்திருந்தார். முதல்நாள் நைட்டுதான் என்கிட்டே அக்கா கோவமா பேசிட்டுப்போய் படுத்தாங்க. காலையிலும் அவங்க கோபம் குறையல. என்னைப் பார்த்து, “நீ இந்த வீட்டைவிட்டுட்டுப் போயிடுன்னு சொன்னாங்க. நான் பேசாம நின்னுக்கிட்டிருந்தேன். அப்ப அவங்க, “உனக்கு என்ன வேணுமோ அதை எடுத்துட்டுப்போயிடுன்னு கடுகடுன்னு சொன்னாங்க. அப்ப சோ என்னைப் பார்த்து ஒரு மாதிரி நக்கலா சிரிச்சிக்கிட்டே இருந்தாரு.

அக்கா என்கிட்டே, “உனக்கு என்ன வேணுமோ எடுத்துட்டுப் போன்னு சொன்னாங்க. அதுக்கு நான், இந்த வீட்டுக்கு வரும்போது எந்த சொத்துபத்தையும் கொண்டுகிட்டு வரலை. அதனால எதையும் எடுத்துட்டுப்போகவும் விரும்பலை. எனக்கு எந்த ஆஸ்தியும் தேவையில்லைன்னு சொன்னேன்

நான் வெளியே வர்றப்ப, பிரியா வீட்டுல மட்டும் போய் தங்கு. வேற எங்கேயும் தங்கக்கூடாதுன்னு அக்கா சொன் னாங்க.

ப்படி வாய்க்கு வந்ததை,பக்கத்தில் இருந்து பார்த்ததைப் போல எழுதிவிட்டு அட்டையில் தலைப்போ சசிகலாவின் நேர்காணல் இடம் பெற்றிருப்பதைப் போல வைத்திருக்கிறது.இப்படி வைத்ததனால் நக்கீரனுக்கு என்ன பிரயோஜனம்?

எப்பொழுதும் அடுத்த நக்கீரன் வரும் வரை கிடைக்க வாய்ப்பிருக்கும் நடப்பு நக்கீரன் இதழ் இந்த வாரம் வெளிவந்த சனிக்கிழமையே விற்பனை முழுவதும் முடிந்து விட்டது.

இது போதாதா நக்கீரனுக்கு?இது என்ன பிழைப்பு!வழிப்பறித் திருடரைப் போல எதற்கு வாசகனின் பாக்கெட்டில் இருந்து 10 ரூபாயைத் திருட வேண்டும்?

ந்தப் பிழைப்பு நக்கீரனுக்குப் புதிதல்ல.ஏற்கனவே பல முறை நடைபெற்றுள்ளது தான்.குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் ஈழத்தில் இறுதிக்கட்டப் போர் உச்சத்தில் இருந்த பொழுது,அதாவது 2009 ஆம் ஆண்டு எப்ரல் மாதத்தில் ஒட்டுமொத்த தமிழினமே பதைபதைத்து,துடிதுடித்து நின்ற பொழுது அதனை அனைத்துப் பத்திரிக்கைகளும் விற்றுக் காசாக்கினாலும் அவர்களிடம் குறைந்தபட்சம் ஒரு ”நேர்மை” இருந்தது.

ஆனால் ஆரம்பத்தில் இருந்து ஈழத்திற்கு ஆதரவாக செய்தி வெளியிட்டு விட்டு,உலக வல்லாதிக்க சக்திகள் அனைத்தும் தமிழினப் படுகொலையை ஒன்றிணைந்து நடத்திய பொழுது,இனம் அழிவில் விளிம்பில் நின்ற பொழுது,அந்த துரோகத்தையும் துரோகத்துக்கு துணை நின்றவர்களையும் அம்பலப்படுத்தாமல்,விமர்சிக்காமல்,கருணாநிதியின் அருகில் இருந்து கொண்டு அவரை நியாயப்படுத்திய படியே இனப்படுகொலையைச் செய்தியாக்கி காசு பார்த்ததில்,இதழியல் தர்மத்தை செல்லாக் காசாய் மாற்றியதில் நக்கீரனுக்குப் பெரும்பங்கு உண்டு.

இதில் உச்சகட்டமாக ஈழப் போரின் இறுதிக் கட்டத்தின் பொழுதுமக்கள்அனைவரும் மரணக் கொட்டடியில் நின்று கொண்டிருந்த தருணம்.


 அப்பொழுது (ஏப்ரல் 23,2009)வெளிவந்த நக்கீரன் அட்டை இதுதான்.

இந்த அட்டையைப் பார்த்தால் மரணத்துக்கு அருகில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இருப்பதாகவும்,அந்த நேரத்தில் தான் செய்ய வேண்டிய கடமைகள் குறித்து ஜெகத் கஸ்பரிடம் சொல்லியது போலவும்,அதனை நக்கீரன் வெளியிடுவது போலவும் இந்த அட்டையில் சித்தரிக்கப் பட்டிருக்கிறது.

இறுதிக் கட்டப்போர் ஈழத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது மன உளைச்சலுடனும்,ஆற்றாமையிலும்,தாங்க முடியாத துயரத்திலும்,வேதனையிலும் துவண்டு கொண்டிருந்த தமிழ் வாசகன் என்ன நினைத்து இதை வாங்குவான்?சாவின் விளிம்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பேட்டி அளித்திருக்கிறார்,அதில் என்ன சொல்லியிருக்கிறாரோ?அதனை நாம் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தானே வாங்கியிருப்பான். 

9 ரூபாய் பணம் கொடுத்து வாங்கி உள்ளே படித்தாலோ எப்பொழுதோ ஜெகத் கஸ்பரிடம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சொல்லியதாக கட்டுரை வந்துள்ளது.


இதை விட பெரிய அயோக்கியத்தனம் என்ன இருக்கிறது?வாங்கிய பின் வாசகன் எவ்வளவு ஏமாற்றத்துக்கு உள்ளாவான்?எவ்வளவு வெறுப்புக்கு உள்ளாவான்?நக்கீரனை எப்படிக் காறித் துப்பியிருப்பான்?இது என்ன இதழியல் தர்மம்?

ஆனால் நக்கீரனுக்கு இதைப் பற்றி என்ன கவலை?அந்த இதழ் விற்றுத் தீர்ந்தால் போதும்.அடுத்த இதழ் விற்பதற்கு வேறு பொய்யையும் புரட்டையும் புதிதாக யோசித்தால் போச்சு. இன்னொரு முறை ஏமாற மாட்டானா இளித்தவாய் வாசகன்?இப்படித்தான் இருக்கிறது நக்கீரனின் எழுத்தும் விற்பனையும்.

இந்த லட்சணத்தில் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற தலைப்பு வேறு.

ஒரு காலத்தில் அநியாயங்களையும் தவறுகளையும் தட்டிக்கேட்டு இதழ் உலகில் கோலோச்சிய நக்கீரன்,அனைவராலும் இது நம்ம இதழ் என்று கொண்டாடபட்ட நக்கீரன் தனது சுயநலச் செயல்பாட்டால் இன்று வாங்க ஆளில்லாமல் தேங்கிக் கிடக்கிறதுஆனாலும் நக்கீரன் திருந்தியபாடில்லை.

நக்கீரன் நடுநிலையுடனும் நேர்மையுடனும் செயல்படுவதன் மூலமே உண்மை துணிவு உறுதி யுடன் உண்மையில் பணியாற்றுவதன் மூலமுமே பழைய இடத்தையும் பெயரையும் மீட்டெடுக்க முடியும்.இது நக்கீரனுக்காக மட்டும் சொல்லப் படுவதல்ல.

ஆரோக்கியமான போட்டி இருந்தால் தான் மற்ற பத்திரிக்கைகளும் ஒழுங்காகவும் நேர்மையாகவும் செயல்படும்.

நக்கீரன் செய்யுமா?

Thursday 22 December 2011

சொரணையுள்ள மலையாள நாளிதழ்களும்,காசுக்காக‌ எச்சில் இலையில் சாப்பிடும் தமிழ் நாளிதழ்களும்





ஊடகங்கள் என்பவை மக்களுக்காய் இருக்க வேண்டும்,மக்களின் பிரச்சனைகளுக்காய் மக்களோடு மக்களாய் இயங்க வேண்டும்.ஊடகங்களின் செயல்பாட்டில் சமூக அக்கறை இருக்க வேண்டும்.ஆனால் நம் நாட்டில் இயங்கும் ஊடகங்கள் எவற்றுக்கும் இத்தகைய அறம் எப்பொழுதும் இருந்ததில்லை.லாபவெறி மட்டுமே இருந்திருக்கிறது. லாபவெறிக்கு முன் அவை மொழி இனம்,மக்கள் நலம்,சமூக அக்கறை எதைப்பற்றியும் எப்பொழுதும் கவலைப் பட்டதில்லை. 


அரசின் விளம்பரங்களுக்காய் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டங்களையும் செய்திகளையும் இருட்டடிப்பு செய்யும் ஊடகங்கள்,இப்பொழுது விளம்பர வருவாய்க்காக எதற்கும் துணிந்து விட்டன.அது மீண்டுமொரு முறை நிருபிக்கப்பட்டிருக்கிறது.

ஆம்.முல்லைப்பெரியாறு பிரச்சனை நாடு முழுவதும் கொழுந்து விட்டெறிந்து கொண்டிருக்க,தமிழர்கள் இடுக்கியிலும் குமுளியிலும் திருவனந்தபுரத்திலும் தாக்குதலுக்கு உள்ளாகிக் கொண்டிருக்க நம் பத்திரிகைகள் அதனைச் செய்தியாக்கும் பொழுது,நாம் நம் பத்திரிக்கைகள் நம் மக்கள் மீதான அக்கறையில் செய்தி வெளியிடுகின்றன என்று ”நம்பினோம்”.

ஆனால் அவர்களோ நம் ஓலத்தையும் துயரத்தையும் வெளியிட்டுக் காசு பார்த்த அதே வேளையில் மலையாளியின் காசில் அவர்களின் திமிரையும் பதிவு செய்து கொண்டிருக்கின்றன.ஆம்.நம் குரலை அவர்கள் ஒலித்த பொழுது நாம் நம் பத்திரிக்கைகள் நம்முடன் இருக்கின்றன.நமக்காய் குரல் கொடுக்கின்றன என்று நம்பினோம்.ஆனால் மலையாளி காசு கொடுத்தவுடன் அவர்களின் குரலையும் விளம்பரங்களாக்கி வெளியிட்டு தங்களை நிருபித்துள்ளன.

முல்லைபெரியாறு பிரச்சனையில் தமிழக அரசு தனது நிலையை விளக்கியும்,அணையில் தனது நிலைப்பாடு சரி என்பதை விளக்கியும் அதனை விளம்பரமாகத் தயார் செய்து அதனை நம் நாளிதழ்களுக்கு சில லட்சங்களைக் கட்டணமாக அளித்து வெளியிட்டது.அதுதான் இது.



இதனை அனைத்து தமிழ் நாளிதழ்களும் வெளியிட்டன.இதனையே தமிழக அரசு மலையாளத்தில் மொழிமாற்றம் செய்து கேரளப் பத்திரிகைகளுக்கு அளித்தது. கேரளப் பத்திரிக்கைகளுக்கு கட்டணமாய் லட்சக்கணக்கில் கொடுக்கத் தயாராய் இருந்தது.ஆனால் தன் மக்கள் நலனில் அக்கறை உள்ள கேரளப் பத்திரிக்கைகள் மானத்துடனும் மரியாதையுடனும் சொரணையுடனும் விளம்பரத்தை வெளியிட மறுத்து விட்டன.

லாபத்திற்காய் பத்திரிகைகள் நடத்தினாலும் தன் மக்கள் நலனில் இருக்கும் துளியூண்டு அக்கறையும் மலையாள பத்திரிகைகளின் மறுப்பிற்குக் காரணம் ஆகும்.தங்கள் அரசின் செயல்பாடு நீதிக்கும் நியாயத்துக்கும் எதிராய் இருந்தாலும் சொரணையுடனும்  மலையாளி என்ற வெறிடனும் நடந்து கொண்டு விளம்பரத்தை வெளியிட மறுத்த கீழ்க்கண்ட மலையாள நாளிதழ்களுக்கு நம் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

                  மலையாள மனோரமா



                       மாத்ருபூமி



                          மத்யமம்



                   கேரள கவ்முடி




                                      தீபிகா



                தேசாபிமானி-சிபிஎம் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகை

(கேரள சிபிஎம் காரர்கள் இனநலன் உள்ளவர்கள்.நம்மூர் சி.பி.எம்.காரர்கள் மாதிரி அல்ல)

தமிழக அரசின் விளம்பரத்தைப் போலவே கேரள அரசும் தனது நிலையை விளக்கி ஒரு விளம்பரத்தை அங்குள்ள நாளிதழ்களில் வெளியிட்டது.அந்த விளம்பரத்தை தமிழில் மொழிபெயர்த்து இங்குள்ள நாளிதழ்களுக்கு கொடுத்தது.அந்த விளம்பரம் இதுதான்.


மலையாள நாளிதழ்கள் தமிழக அரசின் விளம்பரத்தை வெளியிட மறுத்ததைப் போல,இங்குள்ள நாளிதழ்கள் கேரள அரசின் விளம்பரத்தை வெளியிட மறுப்பார்கள் என்று தயக்கத்துடன் கேரள அரசின் அதிகாரிகள் தமிழ் பத்திரிகைகளை அணுகி உள்ளார்கள்.

ஆனால் கீழ்க்கண்ட தமிழ் நாளிதழ்கள் எவ்விதத் தயக்கமோ,இன உணர்வோ இன்றிக் காசை வாங்கிக் கல்லாவை நிரப்பி விட்டு கடந்த 19 ஆம் தேதி விளம்பரத்தை வெளியிட்டு விட்டன.தினமலர் வெளியிடவில்லை.








                   (சி.பி.எம்.கட்சியின் தமிழ்நாட்டு அதிகாரபூர்வ பத்திரிக்கை)



இதன் மூலம் கேரள பத்திரிகைகளுக்கு இருக்கும் இன உணர்வும் மக்கள் மீதான நலனும் தமிழ்ப் பத்திரிக்கைகளுக்கு இல்லை.லாபவெறி தான் இருக்கிறது என்பது மீண்டும் ஒரு முறை நிருபிக்கப் பட்டிருக்கிறது.

இது தான் நம் தமிழ்ப் பத்திரிகைகளின் லட்சணம்.

மீண்டும் ஒரு முறை தலைப்பைப் படியுங்கள்.


Monday 19 December 2011

டைம்ஸ் ஆப் இந்தியா-பொறுக்கித் தின்பது தமிழனிடம்! விசுவாசம் மலையாளியிடம் !!






முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் உண்மைக்கும்,இதழியல் அறத்துக்கும் புறம்பாக சென்னையில் உள்ள மலையாளப் பத்திரிகையாளர்கள் குறிப்பாக டைம்ஸ் ஆப் இந்தியாவில் உள்ள மலையாளிகள் இன வெறியர்களாகச் செயல்படுவது குறித்து பத்திரிக்கையாளர் ராதிகா கிரி தி வீக் எண்ட் லீடர் என்னும் இணையப் பத்திரிக்கையில் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.

இந்தக் கட்டுரைக்காக ரூ.100 கோடி மான நஷ்ட கேட்டு டைம்ஸ் ஆப் இந்தியா நிர்வாகம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

இங்கே நம்மிடம் பிழைப்பு நடத்திவிட்டு ,நமக்கு எதிராகவும்,உண்மைக்குப் புறம்பாகவும் எழுதிவிட்டு அதனைச் சுட்டிக்காட்டினால் ரூ.100 கோடி கேட்கிறது.இதனை வன்மையாகக் கண்டித்து நாம் அனைவரும் குரல் எழுப்புவோம்.

முல்லை பெரியாறு அணை தொடர்பாக புதிதாக வெடித்துள்ள விவகாரத்தில்,ஆங்கில நாளிதழ்கள் செய்தி வெளியிடும் விதத்தைக் கூர்ந்து கவனித்தால் எனக்கு அது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்புகிறது.கேரளப் பத்திரிக்கையாளர்களின் தொழில் சார்ந்த அறம்குறித்த ஐயப்பாடுகளை அது எழுப்புகிறது.

மலையாளச் செய்தித் தாள்களில் பணிபுரியும் மலையாளி இதழாளர்கள்,முல்லைப்பெரியாறு விவகாரத்தில்,உண்மையைப் பற்றித் துளியும் கவலைப்படாமல்,அந்த மாநில அரசின் கருத்தையும்,கேரள மக்களின் உணர்வுகளையுமே பிரதிபலிக்கிறார்கள்.
போகட்டும் அதைக்கூட விட்டுவிடலாம்.

ஆனால் ஆங்கில   ஊடகங்களில் பணியாற்றும் மலையாளி பத்திரிக்கையாளர்கள் கூட இப்படிச் செய்கிறார்கள் என்னும் பொழுது அது நம்மை வருந்தச் செய்கிறது.

முல்லைப்பெரியாறா?

முல்லப் பெரியாறா?

இதை நீங்கள் எப்படி எழுதுகின்றீர்கள் என்பதை வைத்தே நீங்கள் எந்தப் பக்க ஆதரவாளர் என்பதைச் சொல்லி விடலாம்.

அண்மையில் கேரள அட்வகேட் ஜெனரல் கே.பி.தண்டபாணி ,அணை தொடர்பாக ஓர் அறிக்கையை கேரள நீதிமன்றத்தில் அளித்திருந்தார்.முல்லைப்பெரியாறு அணை ஒருவேளை உடைந்தாலும் கூட அதன் நீர் இடுக்கி அணையில் சேகரமாகி விடுமென்று அவர் அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.

அட்வகேட் ஜெனரலின் அந்த அறிக்கையை வெளியிடும் விஷயத்தில் பத்திரிக்கை தர்மம்,இதழ் அறம் தவறிவிட்டது,தகர்ந்து விட்டது.

இத அறிக்கை வெளியான மறுநாள் சென்னையில் உள்ள எந்த ஓர் ஆங்கில நாளிதழும் அதைச் செய்தியாக வெளியிடவில்லை.
ஆனால் அட்வகேட் ஜெனரலின் அந்த அறிக்கை,அறிவுக்கு முற்றிலும் முரணாண ஒன்று என்று கூறி மலையாளிகள் போர்க்கொடி தூக்கிய பொழுது அதை மட்டும் உடனே ஆங்கில எடுகள் செய்தியாக்கின.அதுவும் கூட அந்த அறிக்கை கிளர்த்திவிட்ட முரண்பாடுகளைத் தான் அவை செய்தியாக்கிப் பிரசுரம் செய்தன.

நான் அதில் கண்டு பிடித்த விஷயம் இதுதான்.

அட்வகேட் ஜெனரலின் அந்த அறிக்கைஅயை பிரசுரிக்கத் தகுந்தது என்று எந்த ஒரு கேரள நிருபரும் ஏன் நினைகவில்லை?
அந்த அறிக்கை சரியா தவறா?அதை அவர்கள் ஏற்கிறார்களா,இல்லையா என்பது இதில் வேறு விஷயம்.இதிலிருந்து ஒரு விஷயம் நமக்குப் புலனாகிறது.
மலையாளப் பத்திரிக்கையாளர்கள் முதலில் மலையாளிகளாக நடந்து கொள்கிறார்கள்.அதற்கு அடுத்த படியாகத் தான் தங்களைப் பத்திரிக்கையாளர்களாக அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்.

டைம்ஸ் ஆப் இந்தியாவின் சென்னைப்பதிப்பு நவம்பர் 24 ஆம்தேதி வெளியிட்ட டைம்ஸ் வியூ பகுதி தான்,கடந்த இரண்டு வாரங்களாக முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் என்னென்ன நடக்கிறது என்பதை அணூக்கமாக கூர்ந்து நோக்கும் ஆவலை எனக்குள் உண்டாக்கியது.

டாம் 999 சினிமா விஷயத்தில் தமிழக தியேட்டர்கள் ஆர்ப்பாட்டங்களூக்கு அடி பணிந்து விட்டன என்ற தலைப்பிலான அந்தச் செய்தியின் கீழ் ஒரு கருத்துக் கணிப்பு,ஆரம்பத்தில் அமைதியாகத்தான் தொடங்குகிறது.கருத்துச் சுதந்திரத்தை ஏதோ கட்டிக் காக்கப் போராடுவது போலத் தான் அது ஆரம்பிக்கிறது.

முல்லைப்பெரியாறு அணையைப் பொறுத்தவரை (இதைக்கேரளத்தவர்கள் முல்லப்பெரியாறு என்றே உச்சரிப்பது வழக்கம்.சென்னையில் பிரசுரமாகும் டைம்ஸ் ஆப் இந்தியாவும் இந்த பாணியைத் தான் பின்பற்றுகிறது)அது கேரளத்தவர்களூக்கு ஒரு உணர்ச்சிபூர்வமான பிரச்சினை .ஆனால் தமிழ்நாட்டுக்கு அப்படி இல்லை.

இந்த நிலையில் கேரள அரசும் பத்திரிக்கையாளர்களும் மக்களும் தாங்கள் திட்டமிட்டுப் பரப்பும் பொய்ப் புரளிகளை தமிழகத்திலும் பரப்பி முல்லைப்பெரியாறு பிரச்சனையை தமிழகத்திலும் ஓர் உணர்ச்சிபூர்வமான பிரச்சனையாக்க முயல்கிறார்களோ என்ற பயம் ஏற்படுகிறது.

ஆக இப்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் பார்வை மலையாளிகளின் பார்வை என்று சந்தேகத்திற்கு இடமின்றி யார் வேண்டுமானாலும் கூறிவிடலாம்.(அந்த மலையாளி பத்திரிக்கையாளர்கள் சென்னையில் வசித்து இங்குள்ள ஊடகங்களில் பணிபுரிபவர்களாக இருந்தாலும் அவர்களது பார்வை மலையாளிப் பார்வையாகத்தான் இருக்கிறது)


                         
சென்னையில் உள்ள டைம்ஸ் ஆப் இந்தியாவின் செய்தி அறையின் முக்கிய பொறுப்பில்  இருப்பவர்களும் மலையாளிகள் தான்.அதாவது நாயர் அல்லது மேனன்.இது பத்திரிக்கைத் துறையைப் பற்றித் தெரிந்த எல்லோருக்கும் தெரியும்.

அங்கே ரெசிடெண்ட் எடிட்டர்,பொலிட்டிகல் எடிட்டர்,மெட்ரோ எடிட்டர்,எல்லோருமே மலையாளிகள் தான்.
டைம்ஸ் ஆப் இந்தியாவில் இதற்கு முன் பணிபுரிந்த ஒருவர் சொன்னது.
அந்தப் பத்திரிக்கையின் செய்தி அறை முழுக்க மலையாளிகள் தான்.முழுக்க மலையாளத்திலேயே தான் பேசிக் கொள்வார்கள்.

டைம்ஸ் ஆப் இந்தியாவின் இன்னொரு முன்னாள் ஊழியர் கூறியது. டைம்ஸ் ஆப் இந்தியாவில் தமிழர்கள் எல்லோரும் மிக மிகச் சிறுபான்மையினர்.தமிழ்நாடு தொடர்பான பல விஷயங்கள் அங்கே புறக்கணிக்கப்படும் போதும் ஒதுக்கித் தள்ளப்படும் போதும்,அதைத் தட்டிக்கேட்டு நானும் எனது நண்பரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறோம்.

அது மட்டுமல்ல ஓணம் பண்டிகையின் பொழுது சென்னை டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகம் அலங்கரிக்கப்பட்டது.ஆனால் பொங்கல் பண்டிகையின் பொழுது அவ்வாறு அலங்கரிக்க மறுத்து விட்டார்கள்.நாங்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஒன்றும் நடகக்வில்லை.

டைம்ஸ் ஆப் இந்தியாவைப் படிப்பதைத் தவிர அதோடு வேறு எந்தத் தொடர்பும் இல்லாத மூததப் பத்திரிக்கையாளர் சென்னையில் ஆங்கில மீடியாக்கள் செயல்படும் விதத்தைப் பற்றிக் கூறும் பொழுது இப்படிக் கூறினார்.
“ஆங்கில மீடியாக்களில் மேல்மட்டங்களில் உயர்வகுப்பினர் தான் இருக்கிறார்கள்.இதன் காரணமாக தமிழர்களின் கலாச்சாரத்தை அவர்கள் புறக்கணிக்கிறார்கள்.தமிழ் மற்றும் ஆங்கில மீடியாக்களின் கவரேஜ்கள் இதனால் வேறுவேறாக இரண்டு மாதிரியாக இருக்கின்றன.

சாதாரண பின்புலத்தில் இருந்து வருபவர்கள் எப்படியோ தட்டுத்தடுமாறி ஆங்கில் செய்தித்தாள்களின் செய்தி அறைக்குள் நுழைந்து விட்டாலும் கூட அவர்களால் பெரிதாக எதையும் சாதிக்க முடிவதில்லை.அவர்களது குரல்கள் அடக்கப்படுகின்றன.

தமிழ்க்கண்ணோட்டம் என்பது அங்கே உயர் ஜாதியினரின் கண்ணோட்டமாகத் தான் இருக்கிறது. இதனால் தமிழகம் பற்றி இந்தியாவின் பிற பகுதிகளில் தவறுதலான புரிதல்கள் தான் இருக்கின்றன.

உதாரணத்துக்கு டெல்லி,மும்பை,கலகத்தா போன்ற இடங்களில் உள்ளவர்கள் இட்லி,தோசை,சாம்பார் போன்றவற்றை தமிழக சமையல் கலையுடன் தொடர்புபடுத்தி தமிழர்களில் பெரும்பாலோனொர் சைவ சாப்பாட்டுக்காரர்கள் என நினைத்துக் கொள்கிறார்கள்.தமிழர்களில் பெரும்பாலோர் இறைச்சி சாப்பிடும் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.

அது போல தமிழ்நாட்டின் கலைகள் என்றால் அது கர்நாடக சங்கீதமும்,பரத நாட்டியமும் தான் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.தமிழ்நாட்டின் வெறும் 10 சதவீதத்தினரின் கலைகள் தான் இவை.அப்படியானால் மீதம் உள்ள 90 சதவீதத்தினரின் கலை என்ன?பாரம்பரியம் என்ன?

இந்த இசை,கலை பாரம்பரியங்கள் ஆங்கில மீடியாக்களில் வெளிப்படுவதேயில்லை.அங்கு வேலை பார்ப்பவர்கள் அதைத் தெரிந்து கொள்ள அலட்டிக் கொள்வதேயில்லை.காரணம் அவர்கள் உயர்ஜாதியினர்.அல்லது வேறு மாநிலங்களில் இருந்து வந்த பத்திரிக்கையாளர்கள்.

குறிப்பாக எடிட்டோரியலில் இருப்பவர்கள் உயர் வ்குப்பினரோடு மட்டுமே ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கிறார்கள்.இதனால் உண்மையான தமிழகம் பற்றி அவர்கள் கவலைப்படுவதேயில்லை.

                     பி.சி.வினோஜ்குமாருக்கு நன்றி கலந்த வணக்கம்.

                           
                       ராதிகா கிரிக்கு நன்றி கலந்த வணக்கம்.

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு அணையின் பாதுகாப்பு குறித்த பொய்ப் பிரச்சாரத்தை மலையாளப் பத்த்ரிக்கைகளின் ஆதரவுடன் தான் ஆரம்பித்தது.கேரள அரசின் தலையாய நோக்கம் என்னவென்றால் இடுக்கி அணைக்கு நீரைப்பெறுவது.முல்லைப்பெரியாறு அணையை உடைத்தால் மட்டுமே அது சாத்தியம்.

இதே வழியில் கேரளப் பத்திரிக்கைகளூம் கேரள அரசின் பொய்ப்பரப்புரைக்கு ஆதரவு அளிக்க முன்வந்தன.முல்லைப் பெரியாறை அவை ஓர் உணர்ச்சிபூர்வமான பிரச்சினையாக்கின.இதன்முலம் கேரளத்தில் உள்ள ஒவ்வொரு மலையாளியையும் முல்லைப்பெரியாறு அணை என்பது தண்ணீர் வடிவத்தில் இருக்கும் ஒரு குண்டு என்று அவை நம்பவித்தன.
இந்தக்கூற்றில் அரசியல் ரீதியான உண்மை இல்லாவிட்டாலும் அணை எப்பொழுது வேண்டுமானாலும் உடையலாம் என கேரள மக்கள் நம்பத் தொடங்கி விட்டார்கள்.
பீதியைக்கிளப்பும் இந்த உணர்வு பூர்வமான விஷயத்தில் கேரளப் பத்த்ரிக்கையாளர்கள் அனைவரும் ஒத்த கருத்துடையவர்களாகவே இருக்கிறார்கள்.

இப்போது மலையாளிகளின் பிடியில் உள்ள ஆங்கில மீடியாக்களும் இந்த விஷயத்தில் கேரளத்தின் பார்வையையே பிரதிபலிக்கின்றன.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியில் இருந்து 136 அடியாக குறைக்கும் வேலை எம்ஜிஆர் தமிழக முதல்வராக இருந்த பொழுது நடந்தது.எம்ஜிஆர் பிறப்பால் மலையாளி.அப்பொழுது தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருந்தவரும் மலையாளி தான்.
தமிழகத்தில் இருந்த படி செயல்படும் டைம்ஸ் ஆப் இந்தியா முல்லைப்பெரியாறு அணையை முல்லப்பெரியாறு என்றே குறிப்பிட்டு மலையாள உணர்வைக்காட்டுகிறது.சென்னையில் உள்ள இந்து நாளிதழும் இதே உச்சரிப்பைத் தான் பயன்படுத்துகிறது.

கேரள அரசின் இப்பொழுதைய ஒரே நோக்கம் அணையை உடைத்து நொறுக்குவது தான்.அந்த நோக்கத்தை,கருத்தை மலையாளப் பத்த்ரிக்கையாளர்கள் எதிரொலிக்கிறார்கள்.

முல்லைப்பெரியாறு அணை பலவீனமாகி விட்டது,அது எந்த நேரத்திலும் உடையலாம் என்ற வதந்தி இன்று நேற்றல்ல நீண்ட காலமாகவே உள்ளது.

இது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் நம்மிடம் இப்படிக்கூறினார்.

1978 ஆம் ஆண்டு வாக்கில் அப்போது பட்ரோஸ் சும்மார் என்பவர் மலையாள மனோரமாவின் திருவனந்தபுரம் சீப்பாக இருந்தார்.மலையாளப் பத்திரிகையாளர்களால் பெரிதும் மதிகப்பட்டவர் அவர்.கேரள அரசுக்கே யோசனை சொல்லக் கூடியவர்.

அந்த காலகட்டத்தில் கேரள அரசு இடுக்கி அணையைக் கட்டி 1976 இல் அதைத் திறந்திருந்தது.ஆனால் நான்கு பருவமழைகள் பொய்த்துப் போனதால் இடுக்கி அணைக்குத் தேவையான நீர் சேகரம் ஆக வில்லை.

முல்லைப்பெரியாறு அணை,இடுக்கி அனைக்கு நீர் வரும் பாதையின் மேலே உச்சத்தில் இருந்தது.கேரளப்பகுதியில் அந்த அணை இருந்தாலும் தமிழக அரசுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டு,அந்த அணை மீது ஒரு சட்டபப்டியான கட்டுப்பாட்டை கேரளா வைத்திருந்தது.
இந்த நேரத்தில் பரமேஸ்வரன் நாயர் என்பவர் காங்கிரஸ் தலைவரிடம் நகைச்சுவையாக இப்படிக் கூறினார்.

நம்முடே சேட்டண்டிடத்து பரஞ்சு அவ்விடே ஸ்டோரேஜ் கொறைக்க பறையாமில்ல

(அண்ணன் எம்ஜிஆரிடம் பேசி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்கச் சொல்லலாம் அல்லவா?)

நாயர் கிண்டலாகச் சொன்னதை பரமேஸ்வரன் நாயர் சீரியசாக எடுத்துக் கொண்டார்.பேடி கிரியேட் செஞ்சுட்டு,சேட்டனிடத்துப் போயாலஎன்றார் அவர்.

(முதலில் பயத்தை ஏற்படுத்தி விட்டு பிறகு அண்ணனிடம் போகலாம்.)
இந்தப் பயத்தை முதலில் ஏற்படுத்தியது மலையாள மனோரமா இதழ் தான்.பிறகு அதனை மற்ற இதழ்கள் பொறுக்கிக் கொண்டன.

ந்த நீண்ட கால கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க 2006 பிப்ரவரியில் உச்சநீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு உத்தரவை வழங்கியது.அணை பலவீனமாக இல்லை.தமிழ்நாடு அரசு அணையின் நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்ற உத்தரவு அது.
தற்பொழுது ஒவ்வொரு மலையாளப் பத்த்ரிக்கையாளரும் ஒரு பட்ரோஸ் சும்மார் ஆக இருக்கிறார்கள்.இவர்கள் இதழியத்தைக் காக்க எழுதவில்லை.உண்மையைக் காக்க எழுதவில்லை.இந்தியாவின் பன்முகத்தன்மையை இவர்களது இந்தச்செயல் கிழித்துப்போடும் என்பதை இவர்கள் புரிந்து கொள்ளாமல் இப்படிச் செய்கிறார்கள்.

கொஞ்சம் தண்ணீருக்காகவும்,திருவிதாங்கூர் மகாராஜாவிடம் சட்டப்படி வாங்கிய ஒரு துண்டு நிலத்துக்காகவும் மலையாளப் பத்திரிகிக்கையாளர்கள் இவ்வாறு பத்திரிக்கை அறம் மீறிச் செய்யலாமா?.

இந்தக் கட்டுரையின் ஆங்கில வடிவம்.