Wednesday, 7 December 2011

கோடிகளை ஸ்வாகா செய்த கேடி தமிழக அரசியல் முதலாளி சுந்தர்ராமன் கைது!


                                                                                திரிசக்தி சுந்தர்ராமன்.திரிசக்தி சுந்தர்ராமன்.தமிழக அரசியல் என்னும் பத்திரிக்கையின் உரிமையாளர் மற்றும் வெளியிடுபவர்.
அரசியலில் நீதி,நேர்மை எல்லாம் அருகி விட்டது.ஊழல் செய்பவர்களும் மோசடிக்காரர்களும் தான் இங்கு பதவியில் இருக்கின்றனர்.அரசியலைத் தூய்மைப்படுத்தவும்,புதியதோர் உலகினைப் படைக்கவும் தமிழக அரசியல் இதழ் தொடங்கப்பட்டுள்ளது"-தமிழக அரசியல் இதழ் தொடக்க விழாவில் வெளியீட்டாளர் சுந்தர்ராமன் பேசிய பேச்சு.

கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டு அரசியலில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவதாகக் கூறிக்கொண்டு புதியதோர் உலகம் செய்வோம்என்றும் வல்லமை தாரோயோ இந்த மா_நிலம் பயனுற வாழ்வதற்கேஎன்றும் கொள்கைமுழக்கமாகக் கூறிக்கொண்டு தமிழக அரசியல் என்னும் இதழை ஆரம்பித்தார்.

இதன் தொடக்க விழாவிற்கு அரசியல் பிரமுகர்கள்,ஐ.ஏ.ஏஸ் மற்றும் ஐ.பி.எஸ்.அதிகாரிகள்,கவிஞர்கள் எழுத்தாளர்கள் ஆகியோரை கலந்து கொள்ளச் செய்து மிகவும் ஆடம்பரமாக ஒரு விழாவைச் சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதீய வித்யா பவனில் ஆரம்பித்தார். ஆரம்ப விழாவில் பத்திரிக்கை உலகில் ஏமாற்றுப் பேர்வழிகளாக அடையாளம் காணப்பட்ட பலர் மேடையை அலங்கரித்தனர்.இது விழாவிற்கு வந்திருந்த பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.இருப்பினும் அதை யாரும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.


                                                                     நூல் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில்....

இதன் பிறகு இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது.அதில் மோசடிப் பேர்வழிகள் என அடையாளம் காணப்பட்ட எஸ்.பி.லட்சுமணன் ஆசிரியராகவும்,ஜி.கே.இந்திரன் என்ற குபேந்திரன செய்தி ஆசிரியராகவும் பெயர்கள் இடம்பெற்று இருந்தது.இந்தப் பெயர்களைக் கண்டு பத்திரிக்கையை வாசித்த பலருக்கும் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விழா முடிவுக்குப் பிறகு சுந்தர்ராமனைச் சந்தித்த மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த நபர்களைப் பற்றி சுந்தர்ராமனுக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டு அவரிடம் எடுத்துக் கூறியுள்ளார்.

இந்தத் தகவலைக் கேட்ட சுந்தர்ராமன் அலட்டிக் கொள்ளவில்லை,இவர்களை எனக்கு நல்லாத் தெரியும்,இவனுங்க எல்லாத்துக்கும் ஒத்து வருவான்,நேர்மையா இருப்பவன் நமக்குச் சரிப்பட்டு வர மாட்டான் எனக் கூறியுள்ளார்.இதைக்கேட்டு அந்த மூத்த பத்திரிக்கையாளர் வாயடைத்துப் போனாராம்.இப்படி ஆரம்பித்தது தான் தமிழக அரசியல்.

இந்த தமிழக அரசியலைத் தொடர்ந்து தேவதை,திரிசக்தி பக்தி,ஜோதிடம்,ரசனை,கொலுசு, இதழ்கள் மற்றும் திரிசக்தி பதிப்பகம் என பல்வேறு கிளைகளைப் பரப்பினார்.  தொடங்கினார்.இது போக வாரத்தில் மூன்று நாட்கள் ஆன்மீக சொற்பொழிவு,தன்னம்பிக்கை,இலக்கியம்,புத்தக வெளியீட்டு விழாக்கள் என கலந்து சிறப்புரையும்,சமூகத்திற்கான அறிவுரையும் வழங்கி  சமூகத்தைத் சீர்திருத்த வந்த பிதாமகனாகக் தன்னைக் காட்டிக் கொள்வார்.

தோடு மட்டுமல்ல நன்கொடை வழங்குவதிலும் தன்னை வள்ளலாக வெளி உலககுக்குக் காட்டி வந்தார்.இவ்வளவு ஏன் சென்னை பிரஸ் கிளப்(சென்னை பத்திரிக்கையாளர் மன்றம்) க்கு பல லட்சம் நன்கொடையாகக் கொடுத்து ஒரு அரங்கையே கட்டிக் கொடுத்து திரிசக்தி அரங்கு  என்று தன் பெயரையே வைத்துக் கொண்டார் என்றால் இவர் செல்வாக்கு எவ்வளவு உய்ரத்தில் இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.

(ஊருக்கெல்லாம் நன்கொடை அள்ளிக் கொடுப்பவர் பத்திரிக்கையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு 3 மாதமாக சம்பளம் கொடுக்கவில்லை என்பது அங்கு பணியாற்றும் உண்மையான ஊழியர்களின் வேதனை)தினமணி வைத்தியநாதனுடன் சுந்தர்ராமன்.

(அடுத்தவங்க அயோக்கியத்தனத்தை எழுதும் வைத்தி உன் பக்கத்துல இருக்கிறவங்க செய்த அயோக்கியத்தனத்தை மூடி மாறைக்காம அம்பலப்படுத்து ராஜா)

இப்படிப்பட்ட சீர்திருத்தவாதிதான் நேற்று நள்ளிரவு  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு  புழல் சிறையில் இன்று அடைக்கப்பட்டிருக்கிறார்.

ஊருக்கும் உலகுக்கும்,ஏன் உச்சநீதிமன்றம் முதல் உள்ளூர் நிர்வாகம் வரை அறிவுரையும் ஆலோசனையும் வழங்கும் த்மிழக அரசியல் பத்திரிக்கையின் வெளியீட்டாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்றால் முல்லை பெரியாறுக்காகவோ இல்லை அன்னா ஹசாரே மாதிரி ஊழலை ஒழிக்க என்று கூறி  உண்ணாவிரதம் இருந்ததனால் என்பதற்காக அல்ல.

தனியார் வங்கியில் சுமார் ரூபாய் 10 கோடியை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

குற்றச்சாட்டு 1

இவருடைய தமிழக அரசியல் பத்திரிக்கைக்குத் தேவையான அச்சு இயந்திரங்கள் வாங்குவதற்கு என்று கூறி பெங்களூரில் உள்ள அச்சு இயந்திரம் சப்ளை செய்யும் ஒரு நிறுவனத்திடம் இருந்து சுமார் 6.11 கோடி ரூபாய்க்கு கொட்டேஷன் வாங்கி தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி,சென்னை திருவான்மியூர் கிளையிடம் கடன் பெற்றுள்ளார்.

பெங்களூர் நிறுவனத்தின் பெயரில் வங்கி கொடுத்த காசோலையை பெங்களூர் நிறுவனத்திடம் கொடுக்காமல் அந்த நிறுவனத்தின் பெயரிலான வங்கிக் கணக்கை இவரே சென்னை,ராஜா அண்ணாமலைபுரத்தில்  உள்ள ஐசிஐசிஐ வங்கியில் மோசடியாக ஆவணங்கள் அளித்து ஒரு கணக்கைத் தொடங்கி அதில் தமிழ்நாடு மெர்க்கண்டல் வங்கி கொடுத்த 6.11 கோடி ரூபாய் காசோலையைச் செலுத்தி இவரே மோசடியாகப் பணத்தை எடுத்துள்ளார்.

மோசடியாகப் பணத்தைக் கடன் வாங்கியதோடு மட்டுமல்லாமல் இது வரை ஒரு தவணையும் முறையாகச் செலுத்தவில்லை.

குற்றச்சாட்டு 2

தமிழக அரசியல் அலுவலக வளர்ச்சிக்கு என  1 கோடி ரூபாய் ,இடம் வாங்க 1.8 கோடி ரூபாய்,கட்டிடம் கட்ட 82.5 லட்சம் என மேலும் பல   கடன்களையும்  பெற்றுள்ளார்.இதனையும் ஒரு தவணை கூடச்  செலுத்தவில்லை.

இது தான் இவர் மீதுள்ள முக்கியக் குற்றச்சாட்டுக்கள்.

இதனையடுத்து தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் மண்டல மேலாளர் ரவீந்திரன்  சென்னை காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் அளித்த புகாரின் அடிப்படையில்  நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்ட தமிழக அரசியல் வெளியிடுபவர். திரிசக்தி சுந்தர்ராமன் இன்று பிற்பகல் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவரது இந்த நிலைக்கு பத்திரிக்கையில் அவருக்கு அருகில் இருந்த கூடாநட்பு கேடாய்  முடிந்தது என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.

புதியதோர் உலகம் செய்வோம் என்பது இது போன்ற மோசடி உலகம் தானா?

சுந்தர்ராமா நீதிமன்றத்தில் நீயே சொல்லு!


No comments: