Thursday 19 April 2012

குமுதம் முதலாளியின் தோழமையும் கங்காணியின் தொழிலாளர் விரோதப்போக்கும்...





இது ஊடகங்களில் குமுதம் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் கோதை ஆச்சி அவர்கள் 17-04-2012 அன்றும் மறுநாளும் கொடுத்த விளம்பரம்.
வரது அறிவிப்பு இப்படி தோழமையுடன் இருக்க அதற்கு முரணாக வரதராஜன் செயல்பாடு இருக்கிறது.அவராலும் அவரது குடும்பத்தினராலும் நிறுவனத்தில் ஒருகாலத்தில் வேலைக்குச் சேர்க்கப்பட்டு இன்று முற்றாக மாறிப்போயிருக்கும் திரு.வரதராஜனின் ஆளுகையின் கீழ் குமுதம் வந்த பிறகு எத்தனை பேரை வேலையை விட்டு நீக்கியிருக்கிறார்,எத்தனை பேரை பழி வாங்கியிருக்கிறார்,எத்தனை பேரைப் பந்தாடியிருக்கிறார் என்ற பட்டியலைத் தயாரித்தோம்.
ந்தப்பட்டியல் முழுமையானதல்ல.ஆனால் முதல் கட்டம் என்று சொல்லலாம்.ஒவ்வொருவருக்குப் பின்னும் நிறைய சம்பவங்கள் இருக்கிறது.சிலவற்றை மட்டும் பார்ப்போம்.அடுத்த பட்டியல் விரைவில்..
இதோ குமுதத்தில் பழி வாங்கப்பட்டவர்களின் பட்டியல.
1)திருவேங்கிமலை சரவணன்,
2)வி.சந்திரசேகர்.
ந்த இருவரும் பணியில் இப்பொழுது இல்லை.


                                        திருவேங்கிமலை சரவணன்
இதில் வேடிக்கை என்ன தெரியுமா?உலோகநாயகி திருவேங்கிமலை சரவணன் மீது காவல்துறையில் புகார் கொடுக்கும் பொழுது உடன் சென்று வந்தவர் வி.சந்திரசேகர்.வரதராஜனுக்கு அவ்வளவு ஆதரவாக நின்றவர்.
இவரை வரதராஜனுக்குப் பிடிக்கவில்லை.மும்பைக்குப் பந்தாடி விட்டார்.சரி ஒரு பஞ்சாயத்து பேசிப்பார்ப்போம் என்று வி.சி.லீவு போட்டு வரதுவிடம் பேசிப்பார்த்தார்.ஆனால் படியவில்லை.சரி இனி நமக்கு இது ஆகாது என வேலையை ராஜினாமா செய்து விட்டுப் போய்விட்டார்.
பேசிப்படியாதது இந்தக் கதை என்றால் காலில் விழுந்து பேரம் படிந்த கதை ஒன்று இருக்கிறது.
அது பிரியா கல்யாணராமன் என்ற பிரகாஷ் கதை தான்.வீதிக்கு வராத அதைப் பார்ப்போம்.


                                             பிரியா கல்யாணராமன்
பிரியா கல்யாணராமன் இந்தப்பக்கமும் அப்புறம் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் தரப்பிடமும் பேசிக் கொண்டிருக்கிறார் என்கிற தகவல் வரதராஜனுக்குத் தெரிந்தது. (பிரியா கல்யாணராமன் டபுள் கேம் விளையாடும் பேர்வழி என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.!அவர் இந்தப்பக்கம் பேசியது,இன்னும் கொஞ்சநாளில் எப்படியும் உண்மையான முதலாளியிடம் வந்து விடும்.அதனால் யாருக்கும் தெரியாம பேசிக்கிட்டிருப்போம் என முடிவு செய்தார்.) இது தெரிந்தவுடன் அவரை வழிக்குக் கொண்டுவர வேண்டுமென்றே டெல்லிக்குத் தூக்கியடித்தார்.
பிரியா கல்யாணராமன் எப்படி என்றால் காரியம் ஆக வேண்டுமென்றால் பாவாடையும் கட்டிக் கொள்வார்,பேண்ட்டும் போட்டுக் கொள்வார். தேவைப்பட்டால் கோவணமும் கட்டிக் கொள்வார்.அதுவும் காணாது என்றால் அதற்கும் கீழேயும் இறங்குவார்.இப்படிப்பட்ட நபர் டெல்லிக்கு எப்படி போவார்..?
ரதராஜனைப் பார்த்தார்.எப்படியோ சமரசம் செய்து கொண்டார்.எல்லாம் சரி.அவர் என்ன கட்டிக் கொண்டார் என்று கேட்கின்றீர்களா..?
(இதையெல்லாமா வாய்விட்டுக் கேட்பது..அநாகரிகமாக இல்லை.உங்களுக்கு.)
3)ரஞ்சன்
அதைப்போல குமுதம் இணை ஆசிரியரான திறமைசாலி ரஞ்சனை பப்ளிகேஷனுக்கு மாற்றினார்.இவர் நிறம் மாறத் தெரியாத மனுஷர்.காலம் வரும்டா மவனே..பொறு என்று நினைத்தபடியே அங்கு அமர்ந்துள்ளார்.
4)ரவிஷங்கர்,5)சுதீர் 6)மணிவண்ணன்


                                                ரவிஷங்கர்
                                                சுதீர்
அதே போல சினிமா செய்தியாளர் ரவிஷங்கர்,சுதிர் ஆகியோரை பழி வாங்கும் விதமாக குமுதம் ரிப்போர்ட்டருக்கு மாற்றினார்.அதே போல இன்னொரு செய்தியாளர் மணிவண்ணன் சேலத்திற்கு மாற்றப்பட்டார்.இப்பொழுது நேற்றிலிருந்து (20-04-2012)ரவிஷங்கரும் வேலையை விட்டு ராஜினாமா செய்து விட்டார் என்று தெரிகிறது.(இது குறித்த தனிப்பதிவு விரைவில்)
குமுதம் கதை இது தான்.
இனி குமுதம் ரிப்போர்ட்டரில் பழி வாங்கப்பட்டவர்கள்.
7)இளங்கோவன்-ஆசிரியர்
8)எம்.பாண்டியராஜன்-பொறுப்பாசிரியர்
9)எஸ்.மோகன் (மோகனரூபன்)உதவி ஆசிரியர்
10)வல்லம் மகேசு- உதவி ஆசிரியர்
11)ப்ரியா தம்பி- உதவி ஆசிரியர்
12)வெற்றிவேல்-நிருபர்
13)மீடியா ராமு-போட்டோ கிராபர்
14)சுரேஷ்- போட்டோ கிராபர்
இவர்கள் அனைவரும் வரதராஜனாலும் கோசல்ராமினாலும் ரிப்போர்ட்டரில் பழி வாங்கப்பட்டவர்கள்,நெருக்கடி கொடுத்து வீட்டிற்கு விரட்டப்பட்டவர்கள்.


இதில் ஆசிரியர் இளங்கோவன்,இணை ஆசிரியர் எம்.பாண்டியராஜன் கதை ஏற்கனவே அறிந்தது தான்.மற்றவர்கள் கதையைப் பார்ப்போம்.
உதவி ஆசிரியர் மோகன் விஷய ஞானம் உள்ளவர்-முன்பு தினகரனில் இவர் உதவி ஆசிரியராய் இருந்த பொழுது அங்கு ரிப்போர்ட்டராய் வேலைபார்த்தவர் கோசல்ராம் .நிலைமை மாறுது.இருவரும் இரு வேறு காலகட்டங்களில் ரிப்போர்ட்டரில் பணியில் சேருகின்றனர்.கோசல்ராம் லாட்டரி அடித்தது போல் குருமா ஆசிரியராக பணியில் மிகப்பெரிய ஏற்றம் பெறுகிறார். மோகனிடம் தன் பவரைக் காட்ட நினைக்கிறார்.
மோகனின்  மாத சம்பள செக்கை வாங்கி வைத்துக் கொண்டு,என் அறைக்கு வந்து வாங்கிட்டுப் போங்க என்கிறார்.நான் எதுக்கு இவரிடம் போய் சம்பளம் வாங்க வேண்டும் என்று சுயமரியாதையுடன் மறுத்து விட்டார் மோகன்.அந்தப்பக்கம் இவர் எனக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என வரதராஜனிடமும் வத்தி வைக்கிறார்.
இவ்வாறு தொடர்ச்சியாக 3 மாதமும் சம்பள செக்கை கோசல்ராம் வாங்கி வைத்து விட்டார்.தன்னிடம் மோகன் வந்து வாங்கிச் செல்வார் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.
ஆனால் இறுதி வரை மோகன் சுயமரியாதையுடன் செக்கினை வாங்கவில்லை இந்த பேப்பர் திருடனிடமிருந்து.இன்னும் செக்குகள் வரவில்லை.அங்கே இன்னும் கொஞ்ச நஞ்ச யோக்கியர்கள் யாராவது இருந்தால் அவர் சம்பளச் செக்கினை கொடுக்கச் சொல்லுங்கப்பா...


ப்ரியா தம்பியின் கதை வேறு மாதிரி.


                                              ப்ரியாதம்பி
இவரைக் கோசல்ராம் இண்டர்வியூ செய்து வேலைக்குச் சேர்த்தார். அலுவலகத்தில் தனது பணி தொடர்பாக வரது கோஷ்டியைச் சேர்ந்தவர்,சேராதவர் என்று பாரபட்சம் இல்லாமல் மற்றவர்களிடம் பேசினார்.இது கோசலுக்கு ஆகவில்லை.எனது அலுவலகத்தில் எனக்குப் பிடிக்காதவர்களிடம் பேசுவதா என்று கொந்தளித்தார்.ஆனால் பப்பு வேகவில்லை.அதன்பின் அவரை ஓரங்கட்டும் வேலை ஆரம்பித்தது.
அந்தசமயம் ரிப்போர்ட்டருக்கு பொறுப்பாசிரியராக வெளங்காத வெங்கிட்டு வந்தார்.இவர் முன்பு இங்கிருந்து ஒடிப்போனவர் தான்.அவர் ப்ரியாவை முற்றிலும் கட்டம் கட்டத் திட்டம் தீட்டினார்.
உங்க வேலை மேல எனக்குத் திருப்தி இல்லை என்றார்.
ஏன்யா என்னை வேலைக்கு எடுத்த வரதராஜனும் கோசலும் முட்டாளா..?நீ தான் அறிவாளியா..?உனக்குத் திருப்தி இல்லைன்னா நான் என்ன செய்யணும் என்று நேருக்கு நேராக கோபத்துடன் கேள்வி கேட்டார்..!
அது வரதாபாய்க்கு போனது.பொறுங்க அவசரப்படாதீங்க என்று சொல்லியபடியே ப்ரியாதம்பி பணியில் நீடிக்க முடியாத படிக்கு நெருக்கடி கொடுத்தார்.
போயா நீயும் உன் உப்புமா வேலையும் என்று தூக்கித் தூரப்போட்டு துணிச்சலோடு கிளம்பிப் போய்விட்டார்.
நிருபர் வெற்றிவேல் உருப்படியான நிறைய விஷயங்களைப் பதிவு செய்தவர்.திறமைசாலிகளைக் கண்டால் கோசலுக்குப் பிடிக்காது என்பதை உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.எல்லாம் இந்த தாழ்வு மனப்பான்மை படுத்தும் பாடு.
அதை மனதில் வைத்து என்ன சார் செய்தி கொடுக்குறீங்க குப்பை என்று கரித்துக் கொண்டே இருந்தார்.ஒரு கட்டத்தில் நீ தான்யா குப்பை என்று சொல்லிவிட்டு தனக்கு ஏற்கனவே விருப்பமுள்ள திரைத்துறைக்குப் போய் விட்டார்.
இது தவிர வேட்டைபெருமாள்.உதவி ஆசிரியர்.
திறமைசாலியான இவரையும் கோசலுக்கு பிடிக்காமல் போனது.தன்னை மதிக்க வில்லை என்னும் தாழ்வு மனப்பான்மையும் இதுக்குக் காரணம்.வரதராஜன் கவனத்திற்கு இது கொண்டு செல்லப்பட்டது. தாமத வருகை எனக்காரணம் காட்டி மாதம் 3 ஆயிரம் ருபாயையும் பிடித்தம் செய்து விட்டார்கள். வழக்கம் போல் பப்ளிகேஷனுக்கு மாற்றப்பட்டார்.


                                                  வேட்டைபெருமாள்
                                                  விஜயானந்த்
இவரைப்போன்று தான் நிருபர் விஜயானந்தின் பழி வாங்கலும்.
அலுவலக ரகசியங்களை வெளியில் பரப்புகிறார் என்று சென்னையில் இருந்து ராமநாதபுரத்திற்கு மாற்றப்பட்டார்.
அடுத்து சீனியர் ரிப்போர்ட்டர் ஏகலைவன்.




2007 வரைக்கும் ரிப்போர்ட்டரில் இருந்தார்.நிறைய பிரேக் ஸ்டோரி கொடுத்தவர்.இவரையும் கோசலுக்குப் பிடிக்காது.பிறகு குமுதம் வெப் டிவிக்கு மாற்றினார்கள்.அங்கு செய்திப்பிரிவையும் பார்த்துக் கொண்டார்.இவர் தலைமையில் வெப் டிவி நல்ல வளர்ச்சி கண்டது.அந்த சமயத்தில் டாக்டர் ஜவஹர் பழனியப்பனைச் சந்தித்தார்.அப்புறம் என்ன..?
பப்ளிகேஷனுக்கு பந்தாட்டம் தான்.இவரும் இவர்களின் கொட்டம் அடங்கும் நாள் அதிவிரைவில் என அமைதியாக இருக்கிறார்.
குமுதம் ஹெல்த்
15)ஆந்தைகுமார்.
இவரது பழி வாங்கல் குறித்து ஏற்கனவே தனிப்பதிவு ஒன்றினை எழுதியுள்ளோம்.
http://kalakakkural.blogspot.in/2012/01/110.html
குமுதம் சிநேகிதி
16)வளர்மதி-செய்தியாளர்
17)எழில்செல்வி
18)லெனின்ஷா
19)உமாசக்தி-உதவி ஆசிரியர்
20)இந்துலேகா-  


                                             வளர்மதி


இவர்களும் சிறுசிறு காரணங்களைக் காட்டில் வெளியே துரத்தப்பட்டவர்கள்.நெருக்கடி கொடுத்து அனுப்பப் பட்டவர்கள்.மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டு அனுப்பப் பட்டவர்கள்.


மற்ற பிரிவுகளில் வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களை இன்னொரு பதிவில் பார்ப்போம்.ஆனால் ஒரு சிலரைத் தவிர யாரும் நீதிமன்றம் செல்லவில்லை.மற்றவர்கள் எல்லோரும் அமைதியாய் இருக்கிறார்கள்.அல்லது எதிர்க்காமல் விலகிப்போய் விட்டார்கள்.இதுவும் வரதாபாய்க்கு துணிச்சலாய்ப்போனது.தொடர்ச்சியாய் தனது லீலைகளை அரங்கேற்றி வருகிறார்.இவ்வாறு பணி நீக்கம்,பந்தாட்டம் என்பதையெல்லாம் தாண்டி இதில் மிக வேதனையான விஷயமும் ஒன்று உள்ளது.


                                        தொழிலாளர் விரோதி...


வ்வாறு நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஒரு சிலருக்கு கடைசி மாதச் சம்பளத்தைக் கூட முறையாகக் கொடுப்பது இல்லை.ஊழியர்கள் சம்பளம் வாங்க வரும் பொழுது கேட்டிற்கு வெளியே வாசலிலேயே,சாலை ஓரத்தில் பிளாட்பாரத்தில் நிறுத்தப் படுவார்கள்.இவர்கள் ஒவ்வொருவரும் 5 வருடம் 10 வருடம் வேலை பார்த்தவர்கள்.
இவர்கள் சாலையில் நிற்கும் அவலத்தை சர்க்யூட் கேமரா மூலம் தனது அறையில் அமர்ந்தபடி வரதராஜன் ரசிப்பார்.பின்பு இன்னொரு நாள் வரச்சொல்லி திருப்பி அனுப்பி விடுவார்.பல நாள் அலைச்சலுக்குப் பின் தான் சம்பளம் கிடைக்கும்.
சென்ற வாரம் இந்த மாதிரி பழி வாங்கப்பட்ட நண்பர் ஒருவரை அலுவலகம் அருகில் உள்ள தேநீர்க்கடையில் நம்முடன் வந்த இன்னொருவருடன் தற்செயலாகச் சந்தித்தோம்.
எல்லாம் சரி.எப்படியோ போகட்டும்.உழைத்த ஊழியர்களின் சம்பளத்தையாவது கவுரமாகக் கொடுத்து அனுப்பக் கூடாதா என்று நம்முடன் வந்த நண்பர் அவரிடம் கேட்டார்.


அதற்கு அவர் சொன்ன பதில்.அட போங்க சார். நான் இந்த நிறுவனத்துக்கு உழைத்தேன் என்று மாதம் 23 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு செட்டியார் சொத்தினையே ஆட்டையைப் போடத்துடிக்கிறார் வரதுக்குட்டி.அவர் எப்படி எங்களை மதிப்பார்..?
அப்பனுக்கும் தனக்கும் வேலை கொடுத்துக் கூடவே அபரிதமான சம்பளத்தையும் கொடுத்து அதுக்கும் மேலே கோடி கோடியாய் அள்ளியும் கொடுத்த செட்டியார் குடும்பத்தையே உள்ளே விடாமல் ரோட்டில் நிக்க வைக்கிறான்.
இதில் நாங்கள்லாம் எந்த மூலைக்கு என்று ஆற்றாமையில் புலம்பினார்.


இந்த நிலை என்று மாறும்...? 


பாரதி சொன்னது போல் உழைக்கும் பத்திரிகையாளர்கள் எல்லாம் ரவுத்திரம் பழகு..!



1 comment:

'பசி'பரமசிவம் said...

ஆ.போ.வ வுக்கு உரிக்க உரிக்கத் தோல் வந்து கொண்டே இருக்கிறதே!
முழுத் தோலையும் எப்போது உரித்துக் காட்டப் போகிறீர்கள்?