Tuesday, 3 April 2012

குட்டிச் சுவரு-ஊடகங்களின் வண்டவாளம் இந்த தண்டவாளத்தில்....
பொதுவாக வார, நாளிதழ்களில் நேரடியாகச் சொல்ல முடியாத செய்திகளை, சில இதழ்கள் கழுகார், வம்பானந்தா, பீட்டர் மாமா, டீக்கடை பெஞ்ச், அலெக்ஸ் பாண்டியன் போன்ற பெயர்களில் ஒளிந்து கொண்டு எழுதுகிறார்கள்.

ஆளுக்குத் தகுந்த மாதிரி சமயத்தில் கற்பனைகளையும் புரட்டுகளையும் அவிழ்த்தும் விடுகிறார்கள்.

இதே ஸ்டைலை நாமும் பின்பற்றி பத்திரிகை அலுவலகங்களில் நடக்கும் உள் விவகாரங்கள், பத்திரிகையாளர்கள் கூடும் இடங்களில் நடக்கும் சுவாரசியமான விஷயங்களைக் குட்டிச் சுவரு என்னும் தலைப்பிலான இந்தப் பகுதியில் சொல்ல முடிவுசெய்து இருக்கிறோம். ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் இந்தப் பகுதி வெளிவரப்போகிறது.

ஆனால் இதில் கற்பனையும் இல்லை புரட்டும் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும்.

மலைக்குறவரும், குறத்தியும் பேசுகிற பாணியில் இந்த மாதம் வந்துள்ளது.

இதற்கு செய்தி அனுப்புபவர்கள் அனுப்பலாம்....

இனி ரெடி ஸ்டார்ட்....

ன் மாமா, இந்த புதிய தலைமுறை சேனல்காரன் புதுசா டெய்லி பேப்பர் ஆரம்பிக்கப் போறானாம்.” இன்று”ன்னு பேராம்.’

அப்படியா கண்னு நெசந்தானா?’

‘ஆமாம் சாமியோவ். சென்னை,கோவை,மதுரை,திருச்சியில,நெல்லையில இருந்து வெளிவரப் போகுதாம்’

பேப்பர் 1 ரூபாயாம்.இப்பவே ஆள் எடுக்குறானாம்

‘இவனுக்கு டெய்லி செட் ஆகுமா ஜிக்கி?’

அதப்பத்தி உனக்கு ஏன் மாமா கவலை..?’

‘கேடி பிரதர்ஸ் ஏற்கனவே ஒடிக்கிட்டிருந்த தினகரனை வாங்கி நடத்துனதால தான் அது சக்சஸ் ஆச்சு.புதுசா தமிழ்நாட்டுல நாளிதழ் ஆரம்பிச்சா மார்க்கெட்ல நிக்கறது கஷ்டம். அவனுக்கு நியூஸ் சேனல் கிளிக் ஆனதுன்னால அசட்டுத் துணிச்சல் வந்துடுச்சுன்னு நினைக்குறேன்.’

நம்மள மாதிரி அவுங்க என்ன அன்னக் காவடியா..? ஊர்ப்பட்ட காசு கையில வச்சுருக்கானுங்க. ஆரம்பிக்குறானுங்க...நமக்கென்ன..மாமா கண்டுக்காதா. பிரபல டெய்லியில உள்ள முக்கியமான நபரைக் கூப்பிட்டிருக்கானாம். நல்ல சம்பளம் ன்னு சொன்னதும் அவரும் தலையை ஆட்டியிருக்காராம்.’

ன்னொன்னு தெரியுமா ஜிக்கி,அதே புதிய தலைமுறையில் இருந்து வேந்தர் டிவி ன்னு ஒன்னும் வரப்போகுதாம்.நெறையப்பேரு அங்கயும் வேலைக்கு மனு போட்டுக்கிட்டிருக்காங்க’அது மட்டுமல்ல ஜிக்கி ,என்.டி.டிவி.ஹிண்டு சேனல், ‘தந்தி டிவி’யா மாறி, அதும் விரைவில் வரப்போகுதுன்னு சொல்றாங்க. ஆபீஸ் நிர்வாகம் ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து சட்டபூர்வமா மாறிடுச்சாம்.’

’வேற யாரு புதுசா என்ன ஆரம்பிக்கப் போறாங்களாம் மாமா....?’

தினகரன் ஏரியாவில் இருந்தும் தோழின்னு ஒரு பத்திரிகை வந்துருக்குது.முன்னாடி சிநேகிதியில இருந்தவங்க தான் இப்ப தோழியில இருக்காங்களாம்.

ம்ம்..

‘விகடன் நிறுவனமும் புதுசா ஜூலையில இருந்து என்விகடன் அப்படின்னு ஒரு வாரப் பத்திரிகை ஆரம்பிக்கப் போகுதாம்.விலை 5 ரூபாயாம்.64 பக்கமாம்...’‘என்ன கான்செப்ட்..?’

‘விகடன் பழைய சைஸ்.இப்ப விகடன்ல வர்ற 16 பக்க ஸ்பிளிட் அதுலயும் தொடருமாம்.’

‘வேலைக்கு எதும் ஆள் எடுப்பாங்களான்னு தெரியலையே மாமா..?’

‘ஜிக்கி, நம்ம சங்கத்துல இருந்து நாமளும் ஒண்ணு ஆரம்பிக்கணும் ..

ஆனா உண்மையை மட்டும் தான் அதுல எழுதணும்.’

நீயும் நானும் ஆரம்பிச்சா காசுக்கு எங்க போறது...இருக்குற பொழப்பப் பார்ப்போம்.

விகடன் ஆபீசுக்கு முன்னாடி போன வாரம் ஏஐடியூசி தொழிற்சங்கத்துக் காரங்க ஸ்ட்ரைக் பண்ணாங்களாம்,இது தெரியுமா உனக்கு...?’

ஆமா,நானும் கேள்விப்பட்டேன்.கம்பெனி என்ன பண்ணுச்சாம்...’

‘வழக்கம் போல கண்டுக்காம போயிடுச்சாம்..’

‘அடப்பாவமே. காது கொடுத்துக் கேக்கக் கூட நாதியில்லையா..?அது பத்தி ஜூனியர் விகடன்ல எதும் செய்தி வருமா..?’

ஊருக்குத் தாண்டி உபதேசம்.உனக்கும் எனக்கும் இல்லடி தங்கம்...’

ரிப்போர்ட்டர்ல குழும ஆசிரியருக்கும் செய்தி ஆசிரியருக்கும் முன்னாடி இருந்த உறவு போய் இப்ப ஊடல் ஆரம்பிச்சுடுச்சாம்.அதனால சுவத்தப் பாத்துத் தான் பேசுறாங்க தெரியுமா ஜிக்கி?’

அப்படியா மாமோவ்

‘ஒரே உறையில இரண்டு கத்தி இருக்க முடியாதுன்னு சொல்வாங்க.ஆனா வரதாபாய் சாமர்த்தியமா வச்சுக்கிட்டிருக்கார்’

ஒரு கத்தி கோசலு. இன்னொன்னு வில்கின்ஸ். ரெண்டு பேரும் போட்டி போட்டு பஞ்சாயத்து பண்ணுவாங்க. பஞ்சாயத்து பண்ற இடத்துல அப்ப்ப்போ முட்டிக்கும்

‘அதனால ரெண்டு பேரும் நேருக்கு நேர் பாத்துக்கிட்டா அக்னி நட்சத்திரம் கார்த்திக்-பிரபு மாதிரி ஒருத்தர ஒருத்தர் முறைப்பாங்கன்னு நீ நினைச்சா ரொம்ப தப்பு ஜிக்கி..’‘பேசணும்ன்னு நினைச்சா ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பாக்க மாட்டாங்களாம்.
ஒருத்தர் அந்தப் பக்கம் திரும்பி பேசுவாராம். இன்னொருத்தர் இந்தப் பக்கம் திரும்பி பதில் சொல்வாராம். அதனால அலுவலக ஊழியர்கள் இப்படிப் பேசிக்குறாங்க..’

என்னவோ போ,  எல்லோரும் உள்ளுக்குள்ள அமைதியா இருந்துட்டு வெளியில வந்து தான் நல்லாப் பேசுறாங்க...’

‘அப்புறம் இன்னொரு செய்தியும் சொன்னாங்க...குமுதத்துல இன்கிரிமெண்ட் போட்ருக்காங்களாம். இதுல நிர்வாகத்துக்குச் சாதகமா இருக்குறவங்களுக்கு அதாவது வேலை பார்க்காம ஜால்ரா தட்டுறவங்களுக்கு நல்லா 25 சதவீதம் ன்னு சொல்லிக்கிறாங்க..மத்தவங்களுக்கு அதாவது வேலையை மட்டும் பார்க்குறவங்களுக்கு பேருக்கு கொஞ்சம் உயர்த்தியிருக்காங்களாம்

ரஞ்சன், ஏகலைவன் ரெண்டு பேருக்கு மட்டும் ஒண்ணும் உயர்த்தலையாம் அதையும் சொல்றாங்க...’

சோழியன் குடுமி சும்மாவா ஆடும்..?’

கொஞ்ச நாள் தான இந்த ஆட்டம்,அவங்கள கொஞ்சம் பொறுக்கச் சொல்லுங்க...

ன்ன கண்ணு இந்த தமிழக அரசியல் வர வர சரியில்லையே?’

எதை வச்சு சொல்ற மாமோவ்?’

‘என்னன்னு தெரியலை. வாங்கி ரொம்ப நாளாச்சு. இன்னைக்குத் தான் வாங்குனேன்.படிக்க முடியலை.’

இப்ப அந்தப் பத்திரிகையில விகேஷ்,குபேந்திரன் எல்லாம் இல்லையாமே...’

‘ஆமாம் அவங்க போய் ரொம்ப நாளாச்சு. இப்ப இன்பிரிண்ட்ல கூட பேர் எடுத்துட்டாங்க...’

ம்ம். ஓனர் ஜெயிலுக்கு போனதுக்கு அப்புறம் சேல்ஸ் சுத்தமா டவுனாயிடுச்சுன்னு நினைக்கிறேன்.’

’30,000 காப்பி தான் போகுதுன்னு மார்க்கெட்ல சொன்னாங்க மாமா..’

நக்கீரன் கூட 65,000 காப்பி தான் போகுதாம்..’

‘ம்.அதிமுக,திமுக.,ன்னு எவனும் நம்ப மாட்டேங்கிறான், அவனுங்களை. அதான் பிரச்னை...’

விகடன் எவ்வளவு சர்க்குலேஷன் போகுது..?’

‘ஆனந்த விகடன் 2,20,000 போகுதாம். ஜூனியர் விகடன் 2,30,000 விற்பனை ஆகுதாம்.’

இந்த குமுதம் எல்லாம்..?’

‘அதைத் தான் வரது ஒழிச்சுக் கட்டணும்னு முடிவு பண்ணிட்டாரே...’

நிறைய சேல்ஸ் டவுன் ஆயிடுச்சு, அதுவும் 2,25,000 தான் போகுது. ரிப்போர்ட்டர் வெறும் 70000 தானாம்.’

‘குமுதமும் விகடனும் ஒரே சேல்ஸ் தானா...?’

விகடன் சைஸ் மாத்துனதுக்கு அப்புறம் விலை ஏத்திட்டாங்கள்ல அதுல கவுந்துடுச்சு. குமுதம் எடிட்டோரியல் குளறுபடி, அப்புறம் வரது கைவண்ணம். அதான். ஸோ ரெண்டும் டவுனாயிடுச்சு..’

‘ராணியே ஒரு லட்சம் ஆயிடுச்சுன்னு பேசிக்குறாங்க...ஆனா அதுக்கும் குறையாத் தான் இருக்கும்ன்னு சிலர் சொல்றாங்க...’

                                 
 ”நீ கெட்டுக் குட்டிச்சுவராத் தான் போவன்னு சின்ன வயசுல அம்மாக்கள் சொன்னது எப்படிச் சரியாப்போச்சு பாருங்க..

பத்திரிகையில எல்லோரும் ஏசி அறையில உட்கார்ந்து வேலை பார்க்கோம்..கொஞ்சமும் யோசிக்காம‌ அடுத்தவங்களுக்குப் புத்தி சொல்றோம்..அம்மாக்கள் தீர்க்கதரிசிகள்..ஹி.ஹி..”
---

ந்த புதிய தலைமுறை குணசேகரன் இருக்கார்ல ஜிக்கி,முல்லை பெரியாறுல இருந்து தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரக்கூடாதுன்னு சொல்ற சேட்டன் பிரேம் சங்கரோட பிரண்டு?’

அவர விடு மாமா..ஏதோ காரியம் நடந்தாச் சரின்னு அவன பிரண்டு பிடிச்சாரு...எப்பப் பாரு அதையே சொல்லிக்கிட்டு..அவருக்கு என்ன..?’

‘கொள்கையெல்லாம் பேசுற மனுஷன், அப்படியே விட்டா வீரமணி மாதிரி ஆயிடுவாருன்னு நினைச்சு ஒரு பாசத்துல சொன்னேன்.உனக்குப் பிடிக்கலைன்னா இனி சொல்லலை  விட்டுர்றேன்...அவர் அமெரிக்காவுக்கு ஒரு மாசம் பயிற்சிக்காக போயிருக்காராம் தெரியுமா...?’

ஆமா ஆமா ஏதோ படிக்குறதுக்குன்னு சொன்னாங்க..’

குமுதத்துல பெருந்தலைகள் மீட்டிங் நடந்ததாம் மாமா, அப்ப வரது ஒரு கமெண்ட் அடிச்சாராம்.’

என்னன்னு?’

‘தானே புயலுக்கு நாமளும் தான் மாங்கு மாங்குன்னு நிதி வசூலிக்கிறோம்.20 லட்சம் தாண்டலை..அதுல்ல 10 லட்சம் நான் கொடுத்தது.ஆனா அவனுங்களும் வசூல் பண்றாங்க.அவங்களுக்கு மட்டும் எப்படி ஒரு கோடி கிடைச்சதுன்னு புலம்பினாராம்.’

‘அவனுங்கள ஊரு உலகம் நம்புது எசமான்,ஏன்னா அவனுங்க மேல சீட்டிங் கேசு எதும் கிடையாதுன்னு யாராவது பதில் சொன்னாங்களா.?’

‘ஒருத்தரும் சொல்லியிருக்க மாட்டாங்க.வெளியில வந்து நம்ம கிட்டத் தான் சொன்னாங்க.’
.
‘நல்லா நிதி வசூலிச்சு சிஎம் பாத்து கொடுக்குற மாதிரி ஒரு போட்டோ எடுத்து ஆபிசுல மாட்டி வசுக்கலாம்ன்னு நினைச்சா அது வேலைக்கு ஆகாது போலன்னு வரது புலம்பினாராம்.’

.விகடன்ல எடிட்டோரியல் மீட்டிங் நடந்துச்சாம்.அப்ப எடிட்டர் குமுதத்துல வர்ற புது தொடர் அறிவிப்பைச் சொல்லி நாம ரொம்ப கவனமா ஒர்க் பண்ணனும்னு எல்லோரையும் அலர்ட் பண்ணாராம்.’

அலர்ட்டா இருந்தாச் சரி தான்.

‘ஆனந்த விகடன்ல வட்டியும் முதலும்ன்னு பண்றாரே ராஜூ முருகன் அது யாரு மாமா..?’

‘அதுவா தஞ்சாவூர் கொரடாச்சேரி பக்கத்துக்காரர். நானும் படிச்சேன். மனுஷன் உருக்குறான்.படிச்சுட்டு கொஞ்ச நேரம் மனசு அல்லாடுது. நாம கூட அவங்க ஊருக்கு ரெண்டு வருஷம் முன்னாடி போயிருக்கோம்..’

‘அவர் தான விகடன்ல முன்னாடி லூசுப்பையன் பேஜ் பண்ணது.இப்ப என்ன பண்றார்.?.’

‘சினிமாவுல இருக்கார்.’

‘அப்படியா.அதே மாதிரி செழியன் பண்ணுன ஈரானிய இயக்குனர் மசன் மக்பல்ப் சந்திப்பும் ரொம்ப நல்லா இருந்துச்சு.’

‘அதே இஷ்யூல சமஸ் எழுதுன ‘ஐ.சி.யூ.ல இந்திய மருந்துகள்’ங்கிற சமஸ் கட்டுரையும் நல்லா இருந்தது.’

‘ஆமா தினமணி டெஸ்க்ல இருந்தவரு.அவரும் தஞ்சாவூர் தான்.ஆனா நல்லா இருந்தாலும் அது டிரான்ஸ்லேட் பண்ணுன மாதிரி இருந்துச்சு.படிக்குற நமக்கு அப்படி தோணாத மாதிரி அவர் பண்ணா நல்லா இருக்கும்.’

ன்.ராம் போனதுக்கு அப்புறம் டெக்கான், எக்ஸ்பிரஸ், டைம்ஸ்ல இருந்து ஹிந்துவுக்கு நிறையப்பேரு வேலைக்கு மனு போட்ருக்காங்க தெரியுமா...’

‘ஓ அப்படியா..வேலை கிடச்சா சந்தோஷம் தான்...’

‘அப்புறம் இந்த வைத்தி ஐயர் இருக்காருல்ல அவர் கூட தினமணிக்கு சென்னை, டெல்லினு பல ஊர்களுக்கு ஆள் எடுக்கறாராம்.’

‘சரி மாமோவ் எவ்வளவு நேரம் வேலைவெட்டி இல்லைனு இவனுங்க பொழப்பப் பத்தி பேசுறது’

‘கருவாட்டுக் குழம்பும், நீராகாரமும் வச்சுருக்கேன். இப்ப அடிக்குற வெயிலுக்கு இதமா இருக்கும். ஆளுக்கு ஒரு சொம்பு குடிச்சுட்டு செத்த நேரம் கண்ணசருவோம்.’


4 comments:

முனைவர் பரமசிவம் said...

எத்தனை அருமையான தகவல் எல்லாம் தந்திருக்கீங்க!
யாரும் comment போடலையே!.
ஆச்சரியமாயிருக்குங்க!

Tharkkam said...

செய்திகளை திரட்டி உரையாடலாக்கி தருவதன் பின்னுள்ள உழைப்புக்கு வந்தனம். பத்திரிக்கை உலகின் பின்னணி தகவல்கள் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்கு நன்றி.

Jey said...

நல்ல தகவல்கள். தொடரட்டும் உங்கள் பணி.

Anonymous said...

நிறைய தகவல்கள் பத்திரிகை படிப்பது
பொல இருக்குது.
நன்றி உங்கள் பணி .
இணையம் வ்ந்த பின்பு பத்திரிகைகளின்
விற்பனையில் சரிவு .இதுவும் ஒரு காரணம்.

கரிகாலன்
www.karikaalan.blogspot.com