Tuesday 8 November 2011

அன்றாட வரவு செலவுக் கணக்கை கோதை ஆச்சிக்கு பி.வரதராஜன் காட்ட வேண்டும்.சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு




திருமதி கோதை ஆச்சி தாக்கல் செய்த மனுவினை ஏற்று சென்னை 17 ஆவது சிட்டி சிவில் கோர்ட் திருமதி கோதை ஆச்சி அவர்கள் தவிர வேறு யாரும் குமுதம் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் வங்கிக் கணக்கை நிர்வகிக்க இடைக்காலத் தடை உத்தரவினை 30-09-2011 அன்று பிறப்பித்தது.

இந்த உத்தரவினை எதிர்த்து பா.வரதராஜனும் அவரது சகோதரர் பா.சீனிவாசனும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்தனர்.(in CRP.PD.No.3921 of 2011)

சென்னை 17 ஆவது சிட்டி சிவில் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு விசாரணையை மேற்கொண்டு நடத்த தடை விதிக்க வேண்டும், 17 ஆவது சிட்டி சிவில் கோர்ட் பிறப்பித்த இடைக்கால உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு அக்டோபர் 4,2011 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதியரசர் அக்பர் அலி முன்பு விசாரணைக்கு வந்தது.அப்பொழுது மாண்புமிகு நீதியரசர் அக்பர் அலி அவர்கள் பிறப்பித்த உத்தரவு.
.
30-09-2011 க்கு முன்பு வரை குமுதம் வங்கிக் கணக்கை யார் கையாண்டார்களோ அவர்களே மறு உத்தரவு வரும் வரை வங்கிக் கணக்கை கையாளலாம்.

ஆனால் அதே வேளையில் குமுதம் நிறுவனத்தின் நலனும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதால்,வங்கிக் கணக்கை கையாளும் நபர்,ரூ.2 லட்சத்துக்கு மேல் பணம் எடுக்க இந்தியன் வங்கி அனுமதிக்கக் கூடாது.

அந்த ரூ.2 லட்சத்தைக் கூட நிறுவன ஊழியர்களின் சம்பளம் மற்றும் நிறுவனச் செலவுக்காக மட்டுமே எடுக்க வேண்டும்.சொந்தச் செலவுக்காக எடுக்க அனுமதிக்கக் கூடாது.

அன்றாட வரவு செலவுக் கனக்கை திருமதி கோதை ஆச்சிக்கு காட்ட வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.திருமதி கோதை ஆச்சி சார்பில் மூத்த வழக்கறிஞர் திரு.அரவிந்த் பாண்டியன் ஆஜராகினார்.

மேலும் வழக்கினை 13 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


No comments: