Monday 14 November 2011

புதிய தலைமுறை தொலைக்காட்சி-அம்பி வேண்டாம்டா இந்த விபரீத விளையாட்டு!


சீனிவாசன்





புதிய தலைமுறை என்கிற தமிழ் செய்தி சேனல் தமிழ்நாட்டில் உண்மை உடனுக்குடன் என்ற தலைப்பில் புதிதாக வந்துள்ளது.

உண்மை உடனுக்குடன் இருக்கிறதா என்பது கொஞ்ச நாள் கழித்துத் தெரிந்து விடும்.ஆனால் அனைத்து நிகழ்ச்சிகளிலும் மையஇழை ஓடுவதை சேனலை உன்னிப்பாகக் கவனித்தால் தெரியும்.

ஆனால் அங்கு புதிதாக வேலைக்குச் சேர்ந்துள்ள நிறைய தமிழர்களுக்கு நல்ல சம்பளம் கிடைத்துள்ளது.மேலும் ஊடக சர்வாதிகாரத்தை ஒழித்து புதியதாக ஒரு நிறுவனம் இத்துறையில்  நுழைந்திருப்பதும்,ஆரம்பத்திலேயே நிலை பெற்றிருப்பதும் வரவேற்கத்தக்கது.அதுக்காகவேனும் கொஞ்சம் பாராட்டுவோம்.

இனி செய்திக்கு வருவோம்.

சேனலில் சீனிவாசன் என்கின்றவர் தான் செய்திப்பிரிவுக்கு இயக்குனர்.இவர் தமிழ்நாட்டிலிருந்து நீண்ட நாட்களுக்கு முன்பேயே டெல்லியில் குடிபெயர்ந்தவர்.அங்கு ஹெட்லைன்ஸ் டுடே குழுமத்தில் வேலை பார்த்தவர்.ஆஜ்தக் சீனிவாசன் என்று தான் இவரை ஊடகத்துறையில் அழைப்பார்கள்.டெல்லிக்கு போனாலும் சரி,லண்டனுக்குப் போனாலும் சரி அவரது பார்வை மட்டும் இன்னும் மாறவில்லை. விண்வெளிக்குப் போனாலும் மாறாது.




மேலும் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிப்பவர்களிடம் நேர்காணல் செய்வதும்,அவர்களை வேலைக்குத் தேர்ந்தெடுப்பதும்,ஊதியத்தை நிர்ணயிப்பதும் இவரது பணி தான்.இவர் நினைத்தால் யாரையும் வேலைக்குச் சேர்க்கலாம்.நல்ல பதவியைக் கொடுக்கலாம்.சம்பளத்தை அள்ளிக்கொடுக்கலாம்.அல்லது காரணமின்றி நிராகரிக்கலாம்.

இப்பொழுதைக்கு இந்த அறிமுகம் போதும்.இனி சீனிவாசன் குறித்த உண்மைகள் உடனுக்குடன்..

1) நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்து நேர்காணலுக்கு வருபவர்களிடம்,முதலில் சில கேள்விகளைக் கேட்டு அதன்பின் இட ஒதுக்கீடு குறித்து ஒரு கேள்வியைக் கேட்பார். நேர்காணலுக்கு செல்பவர்கள் இட ஒதுக்கீட்டை  ஆதரித்துப் பேசினால் அதன் பின் சீனிவாசன் பார்வையே வேறு மாதிரி இருக்கும்.

மூன்று மாதம் முன் ஒரே நேரத்தில் தனது அறையில் இருவரை நேர்காணல் செய்தார் சீனிவாசன்.

முதலில் நம்மைப் போல கறுப்பாக இருக்கும் ஒருவரை நேர்காணல் செய்ய ஆரம்பித்தார்.

அப்பொழுது ஒரு சிறு வேலையைக் குறிப்பிட்டு அதனைச் செய்யத் தெரியுமா? என்று கேட்டிருக்கிறார்.பதில் அளித்த அவர்,நீங்கள் சொல்வது எனக்குத் தெரியாது ஆனால் ஒரு வாரத்தில் கற்றுக் கொள்கிறேன்,அதன்பின்பு நான் அதனை சிறப்பாகச் செய்வேன் என்று பதில் அளித்துள்ளார்.
நோ.நோ.எனக்கு நல்லாத் தெரியும்.(!)உங்களால அவ்வளவு விரைவாக கற்றுக்கொள்ள முடியாது.நீங்கள் கற்றுக் கொள்ள எப்படியும் இரண்டு மாதம் ஆகும் என்று பதில் சொல்லியிருக்கிறார்.

அதன் பின் அதே கேள்வியை பக்கத்தில் இருந்த அம்பி ஒருவனிடம் கேட்டிருக்கிறார்.அவனுக்கும் அது குறித்துத் தெரியவில்லை.ஆனால் அவன் நமக்கு எதுக்குடா வம்பு என்று நினைத்துக்கொண்டு,தெரியாது சார்,பட் எப்படியும் இரண்டு மாதத்தில் கற்றுக் கொண்டு விடுவேன் என்று பதில் சொல்லியிருக்கிறான்.

உடனே சீனிவாசன் நோ,நோ,உங்க டேலண்ட் உங்களுக்குத் தெரியாது.நீங்கள்ளாம் இவா மாதிரி இல்ல,எப்படியும் 2 டேஸ்ல கத்துக்கிடுவீங்க என்று இளித்துக் கொண்டே பதில் சொல்லியிருக்கிறார்.

இது தான் மனுவின் பேரனான‌,புதிய தலைமுறை சீனிவாசனின் பழைய பார்வை.


2)அடுத்து சில கேள்விகளுக்குப் பின் ஈழப்போராட்டம் குறித்து ஒரு கேள்வியைக் கேட்பார்.நேர்காணலுக்குச் செல்பவர்கள் அதனை ஆதரித்து பதில் சொன்னால் அதன்பின்பு,பிழைக்கப் போனவங்கள்ளாம் நாடு கேட்பது எப்படி சார் சரியாகும்?என்று எதிர்க்கேள்வி கேட்பார்.

நேர்காணலுக்கு செல்பவர்களுக்கோ,வேலைக்கு நம்மை இவன் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்,இதில் இவனுக்கு ரத்தமும் கண்ணீரும் தோய்ந்த நம் ஈழ வரலாற்றைச் சொல்லி சண்டை போடுவதா,சண்டையிட்டால் வேலை கிடைக்காதே என்ற சிறு தயக்கம் மனதில் இருக்கும்.


அதனை நன்கு பயன்படுத்திக் கொண்டு ஆயிரம் சொல்லுங்க!சிலோன்ல பிரபாகரன் செஞ்சது தப்பு சார் என்று அடுத்த ஆயுதத்தை வீசுவார். நேர்காணலுக்கு செல்பவர் பதில் வாதம் புரியாமல் கம்மென்று இருந்தால் தப்பிக்கலாம்.சீனியின் அபத்தத்திற்கு கொள்கை முலாம் பூசி வேறு வடிவத்தில் நியாயப்படுத்தினாலும் பிழைக்கலாம்.

அதை விடுத்து,ஒன்றாம் தேதியில் கிடைக்கும் சம்பளத்தை மறந்து,வேலை என்னடா பெரிய மயிரு வேலை என்று மிகவும் நேர்மையாக எதிர்வாதம் செய்ய ஆரம்பித்தால் அவ்வளவு தான் தொலைந்தார்கள்.அதன் பின் வேலை கிடைப்பது என்பது குதிரைக்கொம்பாக மாறிவிடும். அதனையும் மீறி வேலை கொடுத்தாலும் முதலிலேயே கட்டம் கட்டி விடுவார். திறமை இருந்தாலும் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்காது.இப்படிப் பலியானவர்கள் பலர்.

மேலும் தமிழ் ஊடகத்தில் இருந்து வேலைக்கு நேர்காணலுக்குச் செல்பவர்களிடம் நீங்கள்ளாம் என்ன பண்றீங்க?உங்களுக்கு ஜர்னலிசம் பத்தி சுத்தமாத் தெரியாது.என்பதும் இவர் உதிர்த்த முத்துக்கள்.பல கோடிகளைக் கொட்டி ஜர்னலிசத்தைக் கரைத்துக் குடித்த அம்பிகள் விமரிசையாக நடத்திய விண்நாயகன் இதழ் வாங்க ஆளின்றி மூடிய கதையை அந்த மூடனுக்கு யார் சொல்வது?

கச்சத்தீவு,கூடங்குளம் என்று நாட்டைச் சூழ்ந்திருக்கும் அனைத்திலும் உண்மைக்கும் மக்களுக்கு எதிரானதுமானதுமான கருத்து தான் இவரது கருத்து. (இவரைப்பற்றி இன்னும் பல பக்கங்கள் எழுதலாம்.இப்பொழுதைக்கு இது போதும்)

ன்று புதிய தலைமுறை என்று எம் தாய் மண்ணின் தலைநகரில் தொலைக்காட்சி நடத்தும் கல்வித் தந்தையிடம் மாதம் தோறும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டு,ஏசி அறையில் தெனாவட்டாக அமர்ந்து கொண்டு,

காலம் காலமாக உரிமை மறுக்கப்பெற்று,பல்லாண்டுகள் போராடி,பலர் உயிர் ஈந்து போராடிப்பெற்ற இட ஒதுக்கீட்டையும்,அதன் மூலம் நாடு முழுவதும் பணிக்குச் சேர்ந்தவர்களையும் இழிவாகப் பேசுவதற்கு எவ்வளவு கொழுப்பு வேண்டும்?

ஈழத்தில் உரிமை இழந்து உடைமை இழந்து நிராயுதபாணியாய் மாறி,இறுதியில் உயிரைக் கொடுத்தாவது இழந்ததை மீட்போம் என்று வீரப்போர் புரிந்து,உலக நாடுகளின் துரோகத்தால் இன்று அதனையும் இழந்து காற்றில் கலந்திருக்கும் எம் சகோதர சகோதரிகளின் ஈகத்தை இழிவாகப் பேசுவதற்கும்,பிரபாகரன் செஞ்சது தப்பு சார் என்று போற போக்கில் சேற்றை அள்ளி வீசுவதற்கும் எவ்வளவு திமிர் வேண்டும்?

நரேந்திரமோடி செஞசது சரியா தப்பா என்று  போன தேர்தலிலேயே குஜராத் மக்கள் பதில் சொல்லிட்டாங்க சார்,இனி யார் சொல்லி என்ன ஆகப்போகுது சொல்லுங்க என்று இரண்டாயிரம் இஸ்லாமியர்களின் படுகொலையைக் கடந்து போகச் சொல்வதற்கு எவ்வளவு மதவெறி வேண்டும்?

வேறு வழியில்லாமல் வேலைக்கு நேர்காணலுக்கு வந்தவனிடம் பாபர் மசூதி இடிப்பு,இந்தி எதிர்ப்பு,ஈழம்,இட ஒதுக்கீடு,காஞ்சி மடம் என்று அனைத்திலும் நச்சுக்கருத்தினைச்  சொல்லி விட்டு,இது தான் என் கருத்து,இதில் உனக்கு உடன்பாடிருந்தால் தால் தான் இங்கு நிம்மதியா இருக்க முடியும் என்று சொல்லாமல் சொல்லும் திமிர் வேறு யாரிடம் இருக்க முடியும்?

ம்பி இந்தத்திமிர் உன்னிடம் மட்டும் இருப்பதல்ல,காலம் காலமாக உங்களிடம் இருப்பது.காற்று நுழையாத இடத்திலும் நுழையும் உங்கள் திறமை புதிய தலைமுறை தொலைக்காட்சியின் தலைமை பீடத்தில் சகல இடத்திலும் நுழைந்ததில் வியக்க எதுவும் இல்லை.

ஆனாலும் அனைத்திலும் போராடிப்பெற்ற நாங்கள் உனக்கு சொல்லவும் ஒன்று இருக்கிறது.

அம்பி நோக்கு வேண்டாம்டா இந்த விபரீத விளையாட்டு.சொல்றதச் சொல்லிட்டோம்

அப்புறம் உன் இஷ்டம்பா!


13 comments:

KAYALVIZHI said...

they will not change even after 100 years.even if 100 Periyars come they will continue their arrogancy and will increase their superiority complex and apart from that will continue to insult us,.

நிவாஸ் said...

விடுங்க சகோ

இவ பண்ற இந்த வேலை நமக்கு புதுசோ என்ன?
அரசியல், கிரிக்கெட், சினிமா, மென்பொருள்துறை, செய்தித்துறைன்னு எல்லாத்திலேயும் அவா பண்ற நரித்தனம் நமக்கு தெரியாதோ என்ன?

அவாளால என்ன முடியுமோ அத அவா செய்யட்டும், நம்மவாள என்ன முடியுமோ அத நாம செய்வோம்

தலைகீழா நின்னாலும் இனிமே அவா நினைப்பது மட்டும் நடக்கபோவதில்லை!

அவா அடங்கப்போவது மட்டும் உறுதி

Anonymous said...

ஊர் உலகத்தை எல்லாம் குறை சொல்லி எழுதுவாரே ஒரு நபர் லக்கிலுக்குனு சொல்லிக்கிட்டு எங்கே போனார் அந்த ஆள்? அங்கே தான் குப்பை கொட்டுகிறார்.

அ.ராமசாமி said...

உண்மையை உரத்துச் சொல்லியிருக்கிறீர்கள்

ராம்ஜி_யாஹூ said...

why no word about k Balachander's son/son in law

Unknown said...

அந்த சேனலே ஒரு குப்பை

thamizhan said...

டெக்கான் கிரானிக்கில் குணசேகரன் அங்கு இப்போ சேர்ந்திருக்கிறாரே. அவர் தி.க. குடும்பம்தானே... இதன் பின்னணி அல்லது இதற்கு நீங்கள் தரும் விளக்கம்?

editorpon said...

இந்த பார்ப்பனர்கள் எங்கு தான் இல்லை. நமக்கு தலைமை தாங்கிகுகிற எல்லா இடத்திலும் அவன் தான் உட்கார்ந்து உள்ளான். படிப்பது இராமயணம், இடிப்பது பெருமாள் கோவில். இவன் என்ன? தலைமைக் கழகத்தில் சென்னை தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளரை பாருங்கள். வெட்கக்கேடு. என்ன செய்வது? நம் தலையெழுத்து.
பொன். இரா.

சாத்தப்பன் said...

@தமிழன்,புதிய தலைமுறையில் இப்பொழுது புதிதாக வேலைக்குச் சேர்ந்துள்ள குணசேகரன் கொளத்தூர் மணியின் ஆதரவாளர் போலத் தன்னைக் காட்டிக் கொண்டாலும் வீரமணியின் தி.க.வீரமணியின் பிறந்த நாள் வீடியோவை எல்லாம் முகநூலில் வெளியிட்டு புளகாங்கிதம் அடைபவர்.
அவர் வீரமணியைப் போல் எந்தப் பக்கம் சென்றாலும் பிழைத்துக் கொள்வார்.டோண்ட் ஒர்ரி.

Anonymous said...

the latest thamilan awards shows the ugly face of puthiyathalaimurai.
many brahmin "celebrities" are given awards.
1.ms swaminathan
2.sevalaya muraleedaran
3.venu srinivasan,tvs group
4.viswanathan ananth
5.v.shantha, adyar cancer institute

Neo brahmins:

1.Jeyakanthan

award to a.r.rahman given by another brahmin K.Balachandar.

udayaar veetu neyye...brahmin kaiyye! enjoy pannungo aval ellam!

Anonymous said...

தமிழகத்தில் பத்திரிக்கையாளர்களின் நிலை வேறு எந்த எந்த ஊரிலும் இருக்குமா என்று தெரியவில்லை. இங்கு வேலைக்கு ஆள் சேர்ப்பதும் விலக்குவதும் சந்தை கடையை விட மோசம். எதில் எந்த ஒழுங்கும், தார்மீக நெறிகளும் பின்பற்றப்படுவதில்லை. விண்ணப்பம் போட்டு, திறமைசாலிகளை தேர்வு வைத்து, நேர்முக தேர்வில் கலந்துரையாடி பொறுக்கி எடுப்பதெல்லாம் இல்லை. சொந்த ஜாதிக்காரன், சொந்த மாவட்டத்துக்காரன், சொந்த ஊர்காரன்-இவர்களில் யாரவது ஒருவரை ஒரு பத்திரிக்கையாளர் தனது நிர்வாகத்துக்கு பரிந்துரைப்பார். அவரது செல்வாக்கை பொறுத்து அவர் பரிந்துரைத்த நபருக்கு வேலை கிடைக்கும். இவர்கள் இருவரும் கூட்டு சேர்ந்து கொள்வார்கள். அதே போல பத்திரிக்கையாளர்கள் வேலையை விட்டு நீக்கப்படும் விதமும் மகா அக்கிரமம். எந்த நொடியும் எந்த பதிரிக்கயளரும் எந்த காரனதுகாகவும் வேலையே விட்டு தூக்கபடுவார். விசாரணை, நீதிமன்றம், தற்காலிக பணி நீக்கம் என்று எந்த நடைமுறையும் கிடையாது. வாட்ச் மென் இடம் சொல்லி பதிரிக்கயாலரின் அடையாள அட்டையை வாசிலிலேயே பிடுங்கி வைத்து கொண்டு துரத்தி விடுவது, நேரடியாக கூப்பிட்டு, நீங்கள் இந்த மாசமே ராஜினாமா செய்து விடுங்கள், இல்லாவிட்டால் டிஸ்மிஸ் செய்து விடுவோம் என்று அறிவிப்பது என்று எல்லாமே அடாதடிதான்.

இதுதவிர நிர்வாகத்தின் விருப்பத்தை புரிந்து கொண்டு நீக்கு போக்காக நடந்துகொள்ளும் பதிரிக்கயாளர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்களை பகைத்துக்கொள்ளும் அப்பிராணிகளுக்குத்தான் வம்பு. இது தவிர எந்த பத்திரிக்கை முதலாளி எந்த நிறுவனத்தில் பங்கு வைத்திருக்கிறார், பினாமி கம்பெனி எது என்று தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. ஒரு பத்திரிக்கை வேண்டாம் என்று இன்னொரு பத்திரிக்கைக்கு போனால் அவனும் இவனும் கலந்து பேசி இரண்டு இடங்களிலும் வேலை பார்க்க முடியாதபடி பண்ணி விடுகிறார்கள். இந்த சூழலில் நேர்மையாக எழுதுகிறேன் என்று வீறு கொண்டு எழுந்தால் செருப்படி படுவதும் கஞ்சிக்கு லாட்டரி அடிப்பதும், கானா போனமாக போறதுக்கும் எல்லா வாய்ப்பும் உண்டு.

இந்த அவலங்களை பற்றி கொஞ்சம் விரிவாக எழுதுங்களேன்

kobikashok said...

very nice dear friend

Anonymous said...

super , update correct photo