Friday 18 November 2011

உயர்நீதிமன்ற உத்தரவுக்குப்பின் குமுதம் அலுவலகத்தில் டாக்டர் ஜவஹர் பழனியப்பன்பணிகளைத் தொடங்கினார்.








சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு குமுதம் அலுவலகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று காலை முதல் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் தனது பணிகளைத் தொடங்கினார்.அவருடன் அவரது தாயார் கோதை ஆச்சியும் வந்திருந்தார்.

முன்னதாக இவரது வருகையின் பொழுது பி.வரதராசன்(சன் ஆப் பார்த்தசாரதி) இவரைச் சந்திக்க முதலில் மறுத்ததாகவும் அறைக்கதவைப்பூட்டிவிட்டு வேறு ஒரு இடத்தில் சென்று அமர்ந்து விட்டதாகவும்,அதன் பின் நீண்ட நேரம் கழித்து சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.குமுதம் ரிப்போர்ட்டரைச் சேர்ந்த கோசல்ராம் மற்றும்
ஜான் வில்கின்ஸ் ஆகியோர் டாக்டரைச் சந்திக்கவில்லை.

முன்னதாக டாக்டர் ஜவஹர் பழனியப்பன் மற்றும் நடப்பதற்கே சிரமப்படும் அவரது 80 வயதான தாயார் கோதை ஆச்சியின் வருகையின் பொழுது அவர்கள் கஷ்டப்பட வேண்டும் என்று திட்டமிட்டே லிப்டை இயக்காமல் நிறுத்தி விட்டார்களாம்.மேலும் நடக்கும் வளாகம் முழுவதும் இரண்டு நாட்களாக தண்ணீரைக் கொட்டி வைத்திருந்தார்களாம்.

டாக்டர் ஜவஹர் பழனியப்பன் அலுவலகத்திற்கு வந்ததால் சிலர் முகம் இருண்டும் பலர் முகம் மகிழ்ச்சியாகவும் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

கவுண்ட் டவுண் ஸ்டார்ட்.இனி என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments: