Sunday, 20 November 2011

பிதாவே இந்தப் பாவிகளை மன்னியாதேயும்தற்பொழுது புரசைவாக்கம் பத்திரிக்கை நிறுவனத்தை ஆக்கிரமித்துள்ள வரதாபாய் அடாவடித்தனம்,கட்டப் பஞ்சாயத்து,பிளாக்மெயில் இவற்றுக்கெல்லாம் தலைவனாகத் திகழ்பவர்.இவருக்குக் கீழே இவரைப் போன்றவர்கள் மட்டுமே பணியாற்ற முடியும். தன்னைப் போன்று கட்டப்பஞ்சாயத்து,பிளாக்மெயில் ஆசாமிகளையே முக்கியப் பொறுப்புகளில் வரதாபாய் நியமித்துள்ளார்.இந்த வரதாபாய் தொடங்கியது தான்  ரிப்போர்ட்டர்.

இதைத் துவங்கியதன் நோக்கமே அரசியல்வாதிகளையும் உயர் அதிகாரிகள்,பெரும் தொழில் அதிபர்கள் ஆகியோரை மிரட்டி பணம் பறிக்க வேண்டும் என்பதற்காகவே.இவரது மிரட்டலுக்கு ஆளான தென்னக ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் ரயில்வே நிலைங்களை வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தும் ஒரு காண்ட்ராக்டை வழங்கினாராம்.இந்தக் காண்ட்ராக்ட்டைப் பெற  ரிப்போர்ட்டரில் அவரைப்பற்றி அவதூறுச் செய்திகள் அடிக்கடி வெளியிடப்பட்டதாம்.காண்ட்ராக்ட் கிடைத்த பிறகு அந்த அதிகாரியை ஓகோவென்று புகழ்ந்து எழுதினார்களாம்.

பத்திரிக்கைத் தொழிலை மட்டுமே தெரிந்த பத்திரிக்கை தர்மத்தைக் கடைப்பிடிக்கும் நேர்மையாளர்கள் இங்கு பணியாற்றுவது என்பது மிகவும் அரிதான விஷயம் தான்.தாங்கள் உண்டு,தங்கள் வேலையுண்டு என்று வேலை பார்க்கும் நேர்மையாளர்கள் ஓரிருவர் மட்டுமே அங்கு உள்னர்.  

வரதாபாய் குமுதம் நிறுவனத்தில் செய்த ஊழலைப்பற்றியும் குமுதத்தின் பெயரைப் பயன்படுத்தி இவர் நடத்திய அஜால் குஜால் வேலைகள் பற்றியும் எழுத  ரிப்போர்ட்டரைப் போன்று ஒரு தனி பத்திரிக்கையே நடத்தலாமாம்.

ஊர் உலகத்திற்கெல்லாம் நேர்மை,நீதி,நியாயம் என்று போதிக்கும் அந்தப் பத்திரிக்கை பெரும்பாலும் ஏமாற்று,மோசடி,பித்தலாட்டக்காரக் கும்பலால் நிரம்பி வழிகிறது.செய்தி வெளியிட்டாலும் காசு,வெளிவராமல் தடுத்தாலும் காசு பார்ப்பது அந்தப் பத்திரிக்கையில் வழக்கமான ஒன்று.

அதில் சாண் வில்ஸ்,முழம் வில்ஸ் என்ற ஜான் வில்கின்ஸ் என்ற புஷ்கின் ராஜ்குமார் என்பவர் செய்தி ஆசிரியராகப் பணியாற்றுகின்றாராம்.(அலுவலகத்தில் உள்ளவர்கள் இவருக்கு வைத்துள்ள பெயர்-டப்பாச்சோறு.சாப்பாடு கொண்டு வரும் டப்பாவில் பல்வகை பதார்த்தங்களும் உணவு வகைகளும் இடம்பெறுவதைப் போல,இவர் லஞ்சமாக பணமோ பொருளோ யார்   என்ன கொடுத்தாலும் வாங்கிக் கொள்வதால் இந்தப்பெயராம்)அவரைப் பற்றிக் கேவலமான பல உண்மைச் செய்திகள் நம் காதுகளில் மட்டுமல்ல ஊர் உலகம் அனைத்தின் காதுகளிலும் நாரசாரமாய் விழுகின்றது.அதனைக் குற்றச்சாட்டாக இங்கு பதிவு செய்கின்றோம்.


1) செய்தி ஆசிரியரான தாங்கள் அடிக்கடித் தங்கள் மகனை அழைத்து வந்து தங்கள் இருக்கையில் அமரவைத்து நிருபர்கள் கூட்டத்தை நடத்துகின்றீர்களாமே? உங்கள் மகன் நிருபர்களைப் பார்த்து,இவர்கள் எல்லாம் ஒழுங்காக பீல்டுக்குப் போவார்களா அப்பா என்று ஏளனமாகக் கேட்பானாமே?இதைக் கண்டு நிருபர்கள் அவமானத்தில் வெட்கித் தலை குனிவார்களாமே?இது உண்மையா?

2) உங்கள் பெயரில் எப்பொழுதும் கட்டுரை,நேர்காணல்,துக்கடாச் செய்தி கூட  எழுதாமல் புஷ்கின் ராஜ்குமார் என்னும் உங்கள் மகன் பெயரில் தான் எழுதுவீர்களாமே?வசூல் வேட்டை,பிளாக்மெயில் போன்றவற்றிற்காக இப்படிச் செய்கின்றீர்களாமே?வெளியிடப்படும் செய்தியால் பாதிக்கப்படும் யாராவது புஷ்கின் என்பவர் யார்,ஏன் இப்படி எழுதுகிறார் என்று கேட்டால் நம்ம சக ஊழியர் தான்,கொஞ்சம் அமவுண்ட் செலவாகும்,கொடுத்தா எழுதுவதை நிப்பாட்டிடலாம் என்று வசூல் செய்வீர்களாமே?

அதிமுக அவைத்தலைவர் ஆதிராஜாராம் அவரைப் பற்றி ஒரு செய்தி வெளியான உடன், புஷ்கின் யார் என்று உங்களிடம் கேட்டதற்கு,அலுவலகத்தில் எனது சக ஊழியர் தான். காந்தி தாத்தா ஜாஸ்தியா கொடுங்க.சரிக்கட்டிடலாம் என்று இளித்துக் கொண்டே சொன்னீர்களாமே?உண்மையா?

3) உங்கள் மகனின் பிறந்த நாளின்பொழுது நாட்டுக்கே பட்ஜெட் போடும் பதவியில் இருப்பவரின் வாரிசு கார்த்தி ஒன்றே கால் லட்ச ருபாயில் எல்சிடி டிவி உங்களுக்கு வாங்கிக் கொடுத்தாராமே?உண்மையா?
மேலும் அதிமுக தென்சென்னை எம்.பி.சிட்லபாக்கம் ராஜேந்திரன் 5 பவுன் தங்க நகை வாங்கிக் கொடுத்தாராமே?உண்மையா?

மேலும் தி.நகர்.அதிமுக எம்.எல்.ஏ.கலைராஜன் விலை மதிப்புள்ள பரிசினை உங்களுக்கு  வாங்கிக் கொடுத்தாராமே? உண்மையா?

4) நீங்கள் எப்பொழுதும் வாரம் ஒருமுறை உங்கள் காருக்கு மொத்தமாக தண்டையார்பேட்டையில் திமுக பிரமுகருக்குச் சொந்தமான பல்க்கில் ஓசியில் பெட்ரோல் நிரப்பிக் கொள்வீர்களாமே?உண்மையா?

5) உங்கள் பத்திரிக்கையின் ஆலோசனைக் கூட்டத்தில் நிருபர்கள் அரசியல்வாதிகள் பற்றிச் சொல்லும் ஊழல் செய்திகளை உடனே சம்பந்தப்பட்டவருக்கு பாஸ் செய்து பேரம் பேசி அவர்களைப் பற்றிச் செய்தி வராமல் தடுப்பதற்காக பல்க் அமவுண்ட் கறந்து விடுகின்றீர்களாமே?உண்மையா?

6) முன்னாள் திமுக அமைச்சர் பரிதி இளம்வழுதியின் பல கோடி ஊழல் பற்றிய செய்திக் கட்டுரை லேஅவுட் வரை வந்து கடைசியில் நிறுத்தப் பட்டதாமே? உண்மையா? கைமாறிய தொகை எவ்வளவு?

7) அதைப்போலவே அப்பொழுதைய திமுக அமைச்சர் தா.மோ.அன்பரசன் பற்றிய செய்தியின் பாலோ அப் ஒன்றும் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டதாமே?உண்மையா?கைமாறிய தொகை எவ்வளவு?

8) முன்னாள் ஆளுநர் பர்னாலா மகனின் நண்பரான நஜிமுதினிடம் தாங்கள் பெருந்தொகை பேரம் பேசியதாகவும் அது முடியாமல் போகவும் உடனே தாங்கள் எழுதிய,சொல்வதெல்லாம் உண்மை பகுதியில் அவரைப் பற்றி சில விஷயங்களில் மிகவும் கேவலமாக,உண்மைக்குப் புறம்பாகவும் எழுதியதாகச் சொல்கிறார்களே?அது உண்மையா?

9) கொடைக்கானலுக்கு உல்லாசச் சுற்றுலா சென்ற பொழுது ஏற்பட்ட தகராறில் ஒருவரைக் கார் ஏற்றிக் கொலை செய்ததாகவும்,குறிப்பிட்ட அந்த வழக்கில் இருந்து குறுக்கு வழியில் தப்பி விட்டதாகவும் சொல்கிறார்களே?அது உண்மையா?

10) மாதம் 30 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்க்கும் உங்களுக்கு தற்பொழுது பல கோடி ரூபாய் சொத்து மதிப்பு உள்ளது என்று சொல்லிக் கொள்கின்றார்களே?உண்மையா?
11) பில்லி சூனியம்,ஏவல் போன்றவற்றில் நீங்கள் எக்ஸ்பர்ட் என்று சொல்லி சிலரிடம் பணம் பறிப்பதும்,உச்சகட்டமாக உங்க கும்பல் பாஸ்  வரதராஜனிடமே கறந்ததாகவும் சொல்கிறார்களே?உண்மையா?

இது போன்று இன்னும் பல நுறு குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் இப்பொழுதைக்கு மேற்கண்ட 11 குற்றச்சாட்டுக்களை மட்டும் இங்கு பொதுவெளியில் பதிகிறோம்.
.

இந்த உண்மைகள் எல்லாம் வாரம் தவறாமல் செவ்வாய்க்கிழமை தோறும் தாங்கள் முழங்காலிட்டு,மண்டியிட்டு பாவமன்னிப்பு கோரும் சென்னை பூக்கடை ஆலயத்தில் உள்ள அன்னை புனித அந்தோணியாருக்கே தெரியும்.

ஆகவே நாம் கோருகிறோம்.

பிதாவே இந்தப் பாவிகள் தாம் என்ன செய்கிறோம் என்று அறிந்தே செய்கிறார்கள்.இந்தப் பாவிகளை மன்னியாதேயும்.

2 comments:

துரைடேனியல் said...

Ippadiyellam nadakkutha?

unmayaicholvom said...

வரதராஜன் சேர்மேன் அவர்களை சில கறுப்பு ஆடுகள் ( ஏழரைநாட்டு சனி) சுற்றிவருகின்றன, முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சசி&கோ வை விரட்டியது போல நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அடியாட்களாகவும் செய்திக்கு முக்கியம் தராமல் கட்டபஞ்சாயத்து செய்து காசு பார்க்கும் கும்பலை ( சசி & கோ போல )ஜான் வில்கின்ஸ் என்ற ஒரிஜனல் பெயரைபோடமல் புஷ்கின் ராஜ்குமார் என்று செய்தி போட்டுவிட்டு ( காசு பெயரவில்லையென்றால் மட்டும் )செய்தியானவரிடமே நான் ஜான் வில்கின்ஸ் ரிப்போர்ட்டர் பேசுகிறேன் என்ன அண்ணே உங்களைபற்றி இப்படி செய்திவருதே , நீங்க எவ்வளவு நல்லவர் இப்படி தப்புதப்பா செய்திவருதே, இனி நாண் செய்திவராமல் பார்த்துகொள்கிறேன், என்று ரியல் எஸ்டேட் வியாபரத்தில் ஃபிளாட் போட்டு விற்பது போல குமுதம் ரிப்போர்ட்டரில் பக்கம் இந்த விலை என்று விற்பவர்களும் , எடுப்பு வேலைக்கு வந்த ஒருவரை சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு ரிப்போர்ட்டராக் மாற்றி ( தற்போது அவர் அடியால் ரேஞ்சுக்கு இருப்பதாக கேள்வி)அலுவலகத்தில் வைத்துகொண்டு ,, இம் என்றால் சிறை வாசம்( எந்த வேலையும் கொடுக்காமல் அவராக வெறுத்து வேலையை விட்டு போக செய்யும் ஒரு தந்திரம்) , ஏன் என்றால் வெளியேற்றம் இப்படித்தான் தற்போது உள்ள குமுதம்.. விவேக் காமடிதான் ஞாபகம் வருகிறது, ”எப்படி இருந்த குமுதம் இப்போ இப்படி ஆகி போச்சே” --- ,,, நல்லவர்கள் , நன்றாக வேலை பார்க்கிரவர்கள் இனி எங்களுக்கு தேவையில்லை ஜால்ராக்களும், சொல்வதைகேட்டு தலையாட்டும் பொம்மைகளூம் போதும் என்று கருதிவிட்டார் சேர்மேன் திரு வரதராஜன் , ஆனால் ஒன்று தற்போது இவரை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் ” காற்றுள்ளபோதே தூற்றிகொள்பவர்கள் ” ,என்பதைமட்டும் நினைவில்கொண்டால் போதும்.