Monday, 4 May 2015

ஊழியரிட‌ம் மண்டியிட்ட தினகரன் எம்.டி. ஆர்.எம்.ஆர்..!தித்தால் உதைப்பதும் மிதித்தால் தலையைக் குனிந்த படி பொதி சுமப்பதும் கழுதைகளின் குணம் மட்டுமல்ல; பத்திரிகை முதலாளிகள் மற்றும் அவர்களது கங்காணிகளின் குணமும் தான்.

கங்காணி பற்றிப் பார்ப்பதற்கு முன் முதலாளியின் அராஜகத்தை அசை போடுவோம்.

ஏறக்குறைய 22 வருடங்களுக்கு முன்பு அதாவது 1992 வாக்கில் நடந்தது   'நக்கீரன்' ஆரம்பித்து 4 வருடங்கள் தான் இருக்கும்.  'தராசு' தான் முன்னணியில் இருக்கும் இதழ். ஜெயலலிதாவின் அராஜகத்தையும் ஆணவத்தையும் எதிர்த்து மிகத் தீவிரமாக எழுதுகிறது நக்கீரன். இன்னொருபுறம் 'நக்கீரன்' முதலாளி கோபால் அராஜகத்தில் இறங்குகிறார்.


நக்கீரன் கோபால்


ஊருக்குத் தானே உபதேசம். ?

'தராசு' பத்திரிகையில்  லே அவுட் ஆர்ட்டிஸ்டாக இருந்து தனியாக நக்கீரன் என்னும் பத்திரிகையை புதிதாக‌ ஆரம்பித்து புது பணக்கார முதலாளியாக கோபால் அப்பொழுது தான் பரிணமித்து வருகிறார்.

இனி தமிழ் பத்திரிகை சாம்ராஜ்யத்தின் முடிசூடா அதிபர் நாம் தான் என மனதுக்குள் ரெக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்த சமயம். இந்த நிலையில் அவரது ரெக்கையை பிடுங்கும் வண்ணம் சம்பவம் நிகழ்கிறது.

இவர் எப்படித் 'தராசு' வில் இருந்து துரை தலைமையில் ஒரு டீமை அழைத்து வந்து நக்கீரன் என்ற பெயரில் தனிப்பத்திரிகை விரித்தாரோ அதைப்போல், நக்கீரனில் இருந்து முத்துராமலிங்கம்,ஜி.கே.ராஜ்,சுந்தரமூர்த்தி,கவிதா பாரதி ஜான் ராஜையா ஆகியோர் தனி அணியாகப் பிரிந்து 'சத்ரியன்' என்ற பெயரில் தனிக்கடை போடுகின்றனர். இது கோபாலுக்கு கடும் சினத்தை ஏற்படுத்துகிறது. அவரது மூளை மழுங்குகிறது.

முத்துராமலிங்கம்

கவிதா பாரதி


விரலசைவில் பத்திரிகை உலகம் இயங்கும் என எதிர்பார்த்தவருக்கு, ஆரம்பத்திலேயே தீய்ந்த வாசனை வருகிறது. நேற்று வரை தானும்  இன்னொருவரிடம் குப்பை கொட்டிக்கொண்டிருந்ததை மறந்து விடுகிறார்.

தண்ணீரின் நடுவில் துரை


ஒரு அடியாள் படையைத் திரட்டி அனுப்புகிறார். அதில் 'நக்கீரன்' அப்பொழுதைய ஆசிரியர் துரை, அச்சக இன்சார்ஜ் சுந்தர் இவர்களுடன் இன்னும் நாலைந்து அடிப்பொடிகள் கீழ்ப்பாக்கம் அலுவலகத்தில் இருந்து 'சத்ரியன்' அண்ணா நகர் அலுவலகம் செல்கின்றனர். குடிபோதையில் இருக்கும் அடியாள் படை கீழ்த்தரமாக பேசுகிறது. அதனை கடுமையாக‌ ஜி.கே.ராஜ் எதிர்த்துப் பேச,மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சுந்தர், ஜி.கே.ராஜை வெட்ட முயற்சிக்கிறார். முடிந்தமட்டில் தடுத்தாலும் ஜி.கே.ராஜ் கையில் ஆழமான வெட்டு விழுந்து விடுகிறது. அதைத்தொடர்ந்து அலுவலகத்தில் இருக்கும் அனைவரும் சூழ்ந்துவிட, தப்பித்தால் போதும் என கோபால் அனுப்பி வைத்த கும்பல் ஓடி விடுகின்றது.

காவல்துறை வழக்குப் பதிவு செய்த நிலையில் நடப்பது ஜெ.ஆட்சி என கோபாலுக்கு புத்தியில் உறைக்கிறது. கோபால் உட்பட எல்லோரும் தலைமறைவாகி முன் ஜாமீன் எடுக்கின்றனர். அதன்பின் காலில் விழுந்ததனாலும் இன்னும் சில காரணங்களாலும்  காலப்போக்கில் வழக்கு நீர்த்துப்போகிறது. தம்பி தம்பி என உருகுவதில், கோபால் பாசத்தில் வானத்தைப்போல விஜயகாந்த என அங்கு பணி செய்த அனைவரும் சொல்வதுண்டு. ஆனால் தம்பிகளை வெட்ட ஆட்களையும்  கோபால் அனுப்புவார்.

கோபாலின் மீசை வழக்கம் போல் வெளியில் யாருக்கும் தெரியாமல் அப்போது மடங்கியது .

இனி இந்த பதிவுக்கு வருவோம்.தினகரனின் அடியாள் ஆர்.எம்.ஆர். குறித்து நாம் சில பதிவுகள் எழுதியுள்ளோம். சமீபத்தில் இவர், ஊதிய உயர்வு கோரிக்கைக்காக போராட்டம் நடத்திய மகேஷ் என்னும் ஊழியரை தாக்கியது குறித்து பதிவு எழுதியிருந்தோம். அதைத்தொடர்ந்து மகேஷ் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கும் சூழ்நிலை உருவானது.

ஆர்.எம்.ஆர். குறித்து நிறைய செய்திகள் சமூக ஊடகங்களில் வெளியாகின. இந்நிலையில் கலாநிதிமாறன் அவரை அழைத்து கடுமையாக திட்டியதாகத் தெரிகிறது. "சக்சேனா. ராஜா,பிரவீண் என எல்லோரும் புழல் போயிட்டு வந்துட்டாங்க.மிச்சமிருப்பது நீ ஒருத்தன் தான். உனக்கும் போக ஆசை வந்துடுச்சு போல,என்ன செய்வியோ தெரியாது,அவன் கை,காலில் விழுந்தாவது இந்த பிரச்சனையை முடிச்சுடு,முடியலைன்னா அப்படியே போயிடு" என எச்சரித்ததாகவும் சொல்கிறார்கள்.

அதன்பின் ஓரிரு நாளில்  சீப் ரிப்போர்ட்டர் சுரேஷ்,மகேஷை  போனில் அழைத்தாராம். மிகவும் மரியாதையாகவும் பணிவாகவும் பேசிய அவர், "தம்பி நடந்ததை மறந்துடு, இனி உனக்கு நல்ல காலம் தான். எம்.டி. சார் உன்னை வரச்சொன்னார்" எனச் சொன்னாராம்.

மறு நாள் சன் நெட்வொர்க் அலுவலகத்தில் ஆர்.எம்.ஆரைச் சந்திக்க மகேஷ் சென்றுள்ளார்.

தனது சேரை விட்டு எழுந்து மகேஷை வரவேற்ற ரமேஷ், நீ உட்காருப்பா முதலில் என சொல்லி விட்டு மகேஷ் சேரில் அமர்ந்த பின்பு தான் தனது சேரில் அமர்ந்தாராம்.

நடந்ததை மறந்துடு,அன்னைக்கு ஏதோ கோபத்துல ரொம்ப ஹார்ஷா நடந்துட்டேன்,எதையும் மனசுல வச்சிக்காதம்மா,உன்னோட பிரதரா என்னை நினைச்சுக்கோ.  வெரி சாரி. 10 டேஸ் ஊருக்குப் போய் ரெஸ்ட் எடுத்துட்டு வந்தாப் போதும்,இந்த மாச சம்பளத்தையும்,இன்கிரிமெண்டையும் அதிகமா கொடுக்கச் சொல்றேன்,ஒன்னாந்தேதியில் இருந்து நீ வேலைக்கு வந்தாப்போதும்.எனக் கையைப்பிடித்த‌ படியே சொன்னாராம்.

சொன்னபடி கடந்த மே 1 ஆம் தேதி மகேஷ் லே அவுட் ஆர்ட்டிஸ்டாக  'தினகரனில்' திரும்பவும் வேலைக்குச் சேர்ந்து விட்டார். ஆபிசில் இருப்பவர்கள் அனைவரும் மிரட்சியாய் பார்த்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் நமட்டுச் சிரிப்பு படியே இருக்கிறார்கள்.

வெறி பிடித்து கடித்து குதறிய அல்சேஷன் நாய் மகேசின் முன் வாலாட்டிக்கொண்டு நிற்கிறது.


No comments: