’தினகரன்; வேலூர் பதிப்பு நியூஸ் எடிட்டர் பெருமாள் குறித்து நாம் ஏற்கனவே எழுதியிருக்கிறோம். வேலூர் பதிப்புக்கு இவர் தான் இன்சார்ஜ். தனது கீழ் பணிபுரிந்த ஊழியரின் பணத்தை ஏ.டி.எம்.மில் திருடி அதன்பின் திருடிய தொகையை பல தவணைகளில் கொடுக்க ஒப்புக்கொண்டதையும் எழுதியிருந்தோம்.
இப்பொழுது மீண்டும் பாலியல் புகாரில் சிக்கியிருக்கிறார். இந்த முறை தனது கீழ் பணிபுரியும் உதவி ஆசிரியர் பெண்மணியிடன் தரக்குறைவாக நடந்து கொண்டிருக்கிறார் என்பது குற்றச்சாட்டு.
’தினகரன்’ வேலூர் பதிப்பில் ஆரணி பகுதியைச் சேர்ந்த கோகிலமான ஒரு பெண் கடந்த ஓரிரு வருடங்களாக உதவி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்குத் தொடர்ச்சியாக நியூஸ் எடிட்டர் பெருமாள் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார். அத்தோடு மட்டுமல்லாமல் இவரது செல்போனுக்குத் தொடர்ச்சியாய் ஆபாசமான குறுஞ்செய்திகளை நேரம்காலம் பார்க்காமல் அனுப்பி வந்துள்ளார்.
குடும்ப சூழ்நிலை காரணமாய் வேலைக்கு வந்த உதவி ஆசிரியரால் இதனை எதிர்கொள்ள முடியவில்லை. ஒருகட்டத்துக்கு மேல் பெருமாளின் தொல்லைகள் பொறுக்க முடியாமல் அதனை வேலூர் மேனேஜரிடம் தெரிவித்துள்ளார். மேனேஜரும் நியூஸ் எடிட்டரும் பல விஷயங்களில் கூட்டாளிகள் என்பதால் அவர் இதனைக் கண்டு கொள்ளவில்லை என்பதோடு பெருமாள் க்கு வக்காலத்தும் வாங்கியிருக்கிறார். வேறு வழியின்றி உதவி ஆசிரியப் பெண்மணி ’தினகரன்’ சென்னை அலுவலகத்தில் எச்.ஆர்.சாந்தியிடம், நியூஸ் எடிட்டர் பெருமாள் தனக்கு அளித்த பாலியல் தொந்தரவுகளை அதற்கான ஆதாரங்களுடன் இணைத்து புகாரை அளித்துள்ளார்.
அதற்குப்பின் எச்.ஆர்.சாந்தியின் அறிவுரையின் படி, பிரச்னை கைமீறிச் சென்றுவிடாமல் இருப்பதற்காக, நியூஸ் எடிட்டர் பெருமாளின் ராஜினாமாவை ’தினகரன்’ வேலூர் பதிப்பு மேனேஜர் வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் பெருமாள் அலுவலகத்தில் இன்னும் கோலோச்சிக் கொண்டு தான் இருக்கிறார்.பணி செய்யும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை விசாரிப்பதற்காக உருவாக்க வேண்டிய விசாகா கமிட்டி ’தினகரனில்’ இன்னும் உருவாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெருமாள் |
’தினகரன்’ எடிட்டர் கம் மேனேஜிங் டைரக்டர் ஆல் இன் ஆல் அழகுராஜா ஆர்.எம்.ஆர். தற்பொழுது தமிழ்நாட்டில் நிலவும் வெயில் காரணமாக, வெளிநாட்டுக்கு உல்லாச சுற்றுப்பயணம் சென்றிருக்கிறாராம். அவர் வந்தவுடன் தான் என்ன முடிவெடுக்கப்படும் என்பது தெரியும். கோவிந்தராஜ் என்னும் ஒரு திறமையாளரை புறக்கணித்து விட்டு தனக்குத் தோதான இவரை, மேனேஜரின் விருப்பத்தின் பேரில் நியமித்தவர் தான் ஆர்.எம்.ஆர். தான் பதவி கொடுத்து அழகு பார்த்தவர்களை அவ்வளவு எளிதில் கைவிட மாட்டார் என பங்காளிகள் நம்புகிறார்கள்.
பாலியல் தொந்தரவு செய்த நியூஸ் எடிட்டர் பெருமாளை வீட்டுக்கு அனுப்பி குறைந்த பட்ச நடவடிக்கையையாவது நிர்வாகம் எடுக்குமா..?
ஆனால், குற்றவாளிகள் பதவியில், பாதிக்கப்பட்டவர்கள் வீதியில் என்பதுதான் ’சன் நெட்வொர்க்’கின் கடந்தகால வரலாறு.
No comments:
Post a Comment