’தின இதழ்’ நாளிதழ் ஆரம்பிக்கப்படும் பொழுது அதன் பின்னணி, நோக்கம் குறித்து எழுதியிருந்தோம். குறுக்கு வழியில் மோசடியாக பலநூறு கோடிகளைச் சம்பாதித்து அதனைப் பாதுகாக்கவும் பலவாறாகப் பெருக்கும் நோக்கத்திலும் தான் 'தின இதழ்' நாளிதழை ஆரம்பித்துள்ளனர் என்றும் சொல்லியிருந்தோம்.
இந்த நிலையில் தனது மருத்துவக் கல்லூரிக்கு சி.எம்.டி.ஏ. சான்றிதழை மோசடியாக தயாரித்த குற்றத்திற்காக ’தின இதழ்’ நாளிதழ் முதலாளியும், மருத்துவக் கல்லூரித் தலைவருமான ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் செய்தியை’தின இதழ்’ முதன்மை ஆசிரியர் குமார் இன்றைய நாளிதழில் ஏனோ (!) வெளியிடவில்லை.
29-05-2015 |
30-05-2015 |
மத்திய, மாநில அரசுகளுக்கு வரன்முறையில்லாமல் ஜால்ரா அடித்தும், தான் செய்த குற்றத்திலிருந்து ’உரிய’ வழிமுறைகளில் தப்ப முடியாமல், ஏதோ ஒரு காரணத்தினால் சிறைச்சாலைக்குச் சென்றிருக்கிறார்.
கலாநிதிமாறன், பச்சமுத்து, வைகுண்டராஜன் போன்ற பங்காளிகளிடம் கொஞ்ச நாள் டியூஷன் போயிட்டு வாங்க சார்..!
கைதாகாமல் தப்பிப்பது எப்படி?
ஆனால் தொழில் ரகசியத்தை அவர்கள் சொல்வது சந்தேகம் தான். எதற்கும் முயற்சியுங்கள்.
No comments:
Post a Comment