Sunday 25 September 2011

குமுதத்தில் குள்ளநரிகள் அட்டகாசம்.






குமுதம் குழுமத்தை ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றிவிட்ட குள்ளநரிக் கும்பல் தற்பொழுது தனக்கு வேண்டாதவர்களையும்,இதுவரை தங்களது ஊழலுக்கு இடைஞ்சலாய் இருந்தவர்களையும்,உண்மையான முதலாளிக்கு விசுவாசமாய் இருந்தவர்களையும் வேலை நீக்கம்,இடைக்கால பணி நீக்கம்,அவமதிப்பு எனப் பல வழிகளில் தொந்தரவு செய்கின்றதாம்.இன்னும் பலரைப் பட்டியல் போட்டுப் பழி வாங்கக் காத்திருக்கிறதாம்.

பணி செய்பவர்கள் அலுவலகத்தில் உள்ளே நுழைகையில் திருடர்களைப்போல பரிசோதித்து அனுப்புகின்றதாம்.மேலும் அலுவலகத்தில் செல்பேசியும் வேலை செய்வது இல்லையாம்.அனைவரும் திருடர்களைப் போல் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனராம்.

சென்ற வாரம் அபகரிப்பு குள்ளநரிக் கும்பலின் தொந்தரவுக்கு உள்ளாகி பணி நீக்கம்,இடை நீக்கத்திற்கு உள்ளானவர்கள் மூன்று பணியாளர்களாம்.

தேசிகன்
இவர் நிறுவனத்தின் சர்க்குலேஷன் பிரிவின் வைஸ் பிரசிடெண்ட் பொறுப்பில் நீண்ட காலம் பணியாற்றி வந்தவர்.
ஆனால் இவர் எப்பொழுதும் அபகரிப்பு கும்பலை மதிக்காமல் பணியாற்றியதாலும்,முதலாளிக்கு விசுவாசமாய்ப் பணியாற்றியதாலும்,இவரைப் பழிவாங்கக் காத்திருந்த அபகரிப்பு கும்பல் இப்பொழுது அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டதாம்.

ஜெயராமன்
இவர் விற்பனைப்பிரிவின் மேலாளர்

இவரும் அபகரிப்பு கும்பலுக்கு இடைஞ்சலாகப் பணியாற்றியதால் வீட்டுக்கு அனுப்பப் பட்டுள்ளாராம்.

சாய்

இவர் தலைமை வடிவமைப்பு நிர்வாகி.

இவர் செய்த ஒரே தவறு.அபகரிப்பு கும்பல் தலைவர் படத்தை தனது கணிப்பொறியில் வைத்திருந்தது தான்.(இது என்னடா மகாக் கொடுமை!)அலுவலகத்தில் வெளியிட்ட ஒரு மலருக்காக அவர் படத்தை வைத்திருந்தாராம்.ஆனால் இதைக் காரணம் காட்டி அவரை வாய்மொழி உத்தரவுடன் வீட்டுக்கு அனுப்பி விட்டதாம்.
இவ்வாறு நாளுக்கு நாள் குள்ளநரிக் கும்பலின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.பழி வாங்கப்பட்ட பணியாளர்கள் நீதிமன்றம் செல்லத் தயாராகி வருகின்றார்களாம்.

அபகரித்து உலகத்தையே கைப்பற்றிய ஆனானப்பட்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யமே மண்ணாகிப் போய் விட்டது.இந்த லும்பன் கும்பலின் கொட்டம் அடங்காமலா போய் விடும்?

1 comment:

'பசி'பரமசிவம் said...

பார்ப்பனன் அல்லாத ஒரு தமிழனின்[எஸ்.ஏ.பி]கடும் முயற்சியில் உருவாகி வளர்ந்து, தமிழில் ‘முன்னணி’ வார இதழாகத் திகழ்ந்த குமுதம் இன்று ஒரு பார்ப்பனன் [பா.வரதராசன்]கையில் சிக்கிவிட்டது.

எஸ் ஏ.பி. யின் மகன் குமுதத்தை மீட்பதில் தன் சக்தி
முழுவதையும் வெளிப்படுத்த வேண்டும்.