Thursday 22 September 2011

நெஞ்சு பொறுக்குதில்லையே! அத்தியாயம் 2






இவர் பெயர் செல்வராஜ் என்கின்ற ஆப்டர் நூன் செல்வராஜ்.வயது சுமார் 55

இவர் நியூஸ் ஆனந்தனின் கவர் கூட்டாளி.இவரும் தன்னை பத்திரிக்கையாளர் என்று சொல்லிக் கொண்டு அடையாள அட்டை வைத்திருப்பவர்.குறிப்பிட்டுச் சொல்லும் படி எந்தப் பிரபல பத்திரிக்கையிலும் பணியாற்றியது இல்லை.எல்லாமே நாம்கேவாஸ் பத்திரிக்கை தான்.(அர்த்தம் தெரியாதவர்கள் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்)இவர் எங்கு வேலை பார்த்தாலும் சம்பளம் முக்கியம் இல்லை.அந்தப் பத்திரிக்கையின் அடையாள அட்டையும்,அந்தப் பத்திரிக்கை சார்பாக வழங்கப்படும் அங்கீகார அடையாள அட்டையும் மட்டும் போதுமானது.

இவருக்கான அடையாளமே சபாரி டிரஸ் தான்.இவர் அணிந்துள்ள எந்த டிரஸ்ஸூமே பணம் கொடுத்து வாங்கியதில்லை.ஏதாவது ஒரு அரசியல் வாதியிடமோ,பணம் வைத்திருப்பவர்களிடமோ அல்லது ரோட்டரி கிளப்,லயன்ஸ் கிளப் நபர்களிடமோ காம்ப்ளிமெண்டா வாங்கியதாக இருக்கும்.அந்த டிரஸ் கொடுத்த நபரிடமே நாலு தடவை அலைந்து திரிந்து தைக்க கூலியும் வாங்கிடுவார்.

பொதுவாக பத்திரிக்கைத் துறையில் சபாரி டிரஸ் போட்ட நபர் என்றாலே கவர்,காம்ப்ளிமெண்ட்டுக்காக அலைபவர் என்பதும் நான்கெழுத்து கோர்வையாக எழுதவோ  படிக்கவோ தெரியாத நபர் என்பதும் தான் அர்த்தம்.

இப்படிப்பட்ட நபர்கள் ஓசியில் பிரியாணி பொட்டலம் கிடைக்கிறது என்றால் பத்து கிலோ மீட்டர் என்றாலும் பஸ்ஸில் பயணம் செய்து சாப்பிட்டு விட்டு திரும்பி வருவார்கள்.பஸ்ஸூக்கு பத்து ரூபாய்,ஆனால் பிரியாணி 50 ருபாய் என்று அதற்கொரு வியாக்கியானம் சொல்வார்கள்.

இவர் நியூஸ் ஆனந்தனுடன் சேர்ந்து கவர் கலெக்‌ஷனுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்.இப்படித்தான் கடந்த சட்டமன்றத் தேர்தலின் பொழுது நியூஸ் ஆனந்தனுடன் திண்டுக்கலுக்கு சென்று கம்பி எண்ணி விட்டு வந்தவர்.இவர்கள் இருவரும் கம்பி எண்ணிய செய்தி தினத்தந்தி நாளிதழில் புகைப்படத்துடன் அனைத்துப் பதிப்புக்களிலும் தமிழகம் முழுவதும் வெளியாகியது.இப்படிப்பட்ட சிறப்புக்களைக் கொண்ட இவர்கள் இப்பொழுதும் சென்னை கோட்டையில் அமைச்சர்களின் அறைகள் முதல் அதிகாரி அறைகள் வரை வலம் வந்து,வசூல் செய்து  கொண்டு தான் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட நபர்களுக்கும் செய்தித்துறை அடையாள அங்கீகார அட்டை கொடுத்து முதல்வர் பேட்டியில் முன் வரிசையில் அனுமதிக்கின்றனர்.இவரை இன்னும் வேலையில் வைத்திருக்கும் அந்த முதலாளியையும் இவனுக்கு அரசு அடையாள அங்கீகார அட்டை இவர்களை ஊக்குவிக்கும்  செய்தித்துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்தால் தான் இவர்கள் திருந்துவார்கள்.



No comments: