Thursday 22 September 2011

நெஞ்சு பொறுக்குதில்லையே! அத்தியாயம் 3







கோட்டை நிருபர்கள் அறையில் அடிதடி

பெயர்.முத்துக் கிருஷ்ணன் என்கின்ற மாமா முத்துக் கிருஷ்ணன்.வயது சுமார் 55.

இவரை அதிர்ஷ்டம் முத்துக்கிருஷ்ணன் என்றால் தான் பொதுவாக அடையாளம் தெரியும்.இவர் பத்திரிக்கைத் துறையில் பல நிறுவனங்களில் தலைமை நிருபராகத் தலைமைச் செயலகத்திலேயே பல ஆண்டுகளாக வலம் வருபவர்.இன்று வரை இவருக்கு ஒரு செய்தியையும் உருப்படியாகக் கொடுக்கத் தெரியாது.ஆனால் இவருக்கு எல்லா அதிகாரிகளையும் அமைச்சர்களையும் நன்றாகவே தெரியும்.பர்மா பஜாரில் வரும் புதிய பொருட்களை வாங்கிக் கொடுத்தே பல அதிகாரிகளைத் தன் கைக்குள் வைத்திருப்பவர்.

மதுரையில் இருந்து வெளிவரும் ஒரு நாளிதழின் தலைமைச் செயலக நிருபராகப் பணியாற்றி வருபவர் சீனிவாசன்.இவர் தானுண்டு தன் வேலையுண்டு என்று யார் வம்புக்கும் போகாமல் தனது வேலையைச் செய்து கொண்டிருப்பவர்.இவர் பணியாற்றும் பத்திரிக்கையின் உரிமையாளர் முத்துக்கிருஷ்ணனுக்கு நெருக்கமாம்.இந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி சீனிவாசனுக்குப் போட்டியாக அதே பத்திரிக்கையின் தலைமைச் செயலக நிருபராக அடையாள அட்டை பெற்றுக் கொண்டாராம்.இதனால் கோபம் அடைந்த சீனிவாசன் முத்துக்கிருஷ்ணனிடம் வாக்குவாத்த்தில் ஈடுபட்டுள்ளார்.வாக்குவாதம் முற்றிய நிலையில் கோட்டைப் பத்திரிக்கையாளர் அறையில் வைத்தே பளார் பளார் என 4 அறை கொடுத்தாராம் சீனிவாசன்.

சீனிவாசன் கொடுத்த அடியில் நியாயம் அருகிலிருந்த நிருபர்கள் முத்துக்கிருஷ்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.பாலிமர் தொலைக்காட்சியின் தலைமை நிருபர் என்று சொல்லும் நீ இன்னொரு பத்திரிக்கையின் தலைமை நிருபர் என்று எதற்கு கார்டு வாங்கினாய்?என்று அடி வாங்கிய முத்துக்கிருஷ்ணனிடமே அருகிலிருந்த நிருபர்கள் ஆளாளுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.விட்டால் போதும் என்று ஓட்டம் பிடித்தானாம் முத்துக்கிருஷ்ணன்.
அறுக்க மாட்டாதவனுக்கு எதுக்கு 58 அறுவான்னு சொல்வாங்க அது போல எழுதப்படிக்கத் தெரியாத இந்த முத்துக்கிருஷ்ணனுக்கு எதுக்கு 2 பத்திரிக்கையில் தலைமை நிருபர் என்ற அடையாள அட்டை?

முத்துக்கிருஷ்ணனுக்குத் தலைமை நிருபர்ன்னு அடையாள அட்டை கொடுத்த இந்த இரண்டு நிறுவன முதலாளிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்தால் தான் இத்ற்குத் தீர்வு கிடைக்கும்.

No comments: