Monday, 5 September 2011

இவரா உத்தமர்?


டி.எஸ்.ரவீந்திரதாஸ்.
இவரைப்பற்றி ஒரு உங்களுக்குக் கூட  தெரியாத சிறு அறிமுகம்.

இவர் ஆரம்பத்தில் சென்னைப் பத்திரிக்கையாளர் சங்கத்தில் நிர்வாகியாக செயல்பட்டு வந்தார்.அந்த சங்கத்தில் நிர்வாகியாக இருந்து கொண்டே எடிட்டர் கில்டு என்ற ஒரு அமைப்பை தனியாக ஏற்படுத்தி அதன் தலைவராக சக பத்திரிக்கையாளர்களிடம் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டார்.இதனால் சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இவருக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.இதைத் தொடர்ந்து சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தில் நடந்த தேர்தலில் இவர் தோற்கடிக்கப் பட்டார்.தன் தோல்வியை இவர் அரசியலாக்கினார்.

அதன் பின் சங்கத்தை விட்டு வெளியேறி அதன் பின் ஆரம்பிக்கப் பட்டு ஓராண்டே நிறைவடைந்த தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்(TUJ) என்னும் சங்கத்தில் ஐக்கியமாகிறார்.ஐக்கியமான ஓரிரண்டு ஆண்டுகளில் அந்த அமைப்பைக் கைப்பற்றி அதன் தலைவராகிறார்.அன்றிலிருந்து இன்று வரை இவரே இதன் நிரந்தரத் தலைவர்.இவர் தலைவரான பிறகு இந்த சங்கத்தை அரசியல் கட்சி போல் நடத்துகிறார். தனக்குத் தலையாட்டும் நபர்களுக்கு எல்லாம் அலுவலகச் செயலாளர்,தலைமை நிலையச் செயலாளர் உட்பட பல்வேறு பொறுப்புக்களை அரசியல் கட்சி போல் வாரி வழங்குகிறார்.இதன் பிறகு இவரின் முழு நேரப்பணி சங்கத் தொழில் ஆகி விடுகிறது.அரசியல் கட்சிகளைப் போல் நாலு மாதத்திற்கு ஒரு முறை,ஆறு மாதத்திற்கு ஒருமுறை,வருடத்திற்கு ஒரு முறை என மாவட்ட,மாநில மாநாடுகளை நடத்தி வசூல் வேட்டையில் இறங்கினார். 

மாநாடு நடத்திய பொழுது இவரது வசூல் வேட்டைக்கு உதவியாக இருந்தவர்கள் எல்லாம் ருசி கண்ட பூனையாய் ஆளுக்கு ஒரு சங்கம் அமைத்து அவர்களே வசூலிக்கத் தொடங்கி விட்டார்கள் என்பது தனிக்கதை.
இவர் தலைமையின் கீழ் தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்(TUJ) செயல்படத் தொடங்கிய பிறகு இவர் தமிழ்நாடு முழுவதும் சென்று சங்க அடையாள் அட்டையை பணம் கொடுக்கும் எல்லோருக்கும் வாரி வழங்குகிறார்.இன்று தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் போலி பத்திரிக்கைகள்,போலி பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள் உருவாக இவரே அஸ்திவாரமிட்டார். தமிழ்நாடு முழுவதும்  போலி பத்திரிக்கையாளர்கள் அங்கீகாரம் பெற இவர் வழங்கிய அட்டைகளே காரணமாக அமைந்தது.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சங்கத்தின் பெயரால் அவர்களை அண்டிப்பிழைப்பதும்,காரியம் சாதித்துக் கொள்வதும் இவருக்கு வாடிக்கையான ஒன்று.கடந்த திமுக ஆட்சியின் பொழுது இவர் மீது சென்னை மாநகர மத்தியக் குற்றப் புலனாய்வுத் துறையிடம் குமார் ஸ்ரீனிவாஸ் என்பவர் மோசடிப்புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.இது தொடர்பாக இவர் மீது பதியப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

படப்பை அருகில் வீட்டுமனை வழங்குவதாகக் கூறி 200 க்கும் மேற்பட்ட  பத்திரிக்கையாளர்களிடமே இவர் பல லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளார்.அந்தப் புகாரும் இன்னும் நிலுவையில் உள்ளது.
என் மீது கை வைத்தால் அரசுக்கு எதிராய் பத்திரிக்கையாளர்கள் கிளர்ந்தெழுந்து போராடுவார்கள் என்று கூறியே காவல்துறை அதிகாரிகளை இதுவரை மிரட்டி வந்தார்.இப்பொழுது ஆட்சி மாறியதால் புழலுக்குச் செல்லும் சூழ்நிலை இருப்பதால் புதிய ஆட்சியைப் மாநாடு நடத்திப் பாராட்டி மகிழ்விக்க வசூல் வேட்டையில் இறங்கியுள்ளாராம்.


வரைப்பற்றி மக்கள் தூதன் என்ற பத்திரிக்கையின் ஆகஸ்டு மாத இதழில் தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்(TUJ)சங்கத்தைப் பற்றி ஒரு கட்டுரை வெளியாகி உள்ளது.


அதில் இவரது  மோசடிகளைப் பற்றி விளக்கமாகவும் விரிவாகவும் எழுதப்பட்டுள்ளது.இதை பத்திரிகை துறை சார்ந்த அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதால் இந்தச் செய்தியை கலகக்குரல் நன்றியுடன் எடுத்து வெளியிடுகிறது.மேலும் இவரின் மோசடி பற்றி நமக்குக் கிடைத்த செய்திகளையும் உறுதிப்படுத்தி வெளியிடுகிறோம்.


2 comments:

vmsubbiah said...

unmaiyai ulagam ariya seytha kalakkuralukku..... nantri..... v.m.subbiah, reporter.

Anonymous said...

தமிழக ஊடகவியலாளர்கள் பதில் சொல்ல வேண்டிய கேள்வி !. சென்னை பிரஸ் க்ளப்பில், அடையாள அட்டை வைத்துக்கொண்டு,தண்ணி அடிக்கும், தகராறுகளில் ஈடுபடும், தரங்கெட்ட பத்திரிகையாளர்களை ஒண்ணும் பண்ணமுடியாத இந்த நான்காம் தூண்கள் சமுதாயத்தில் என்ன செய்யப் போகிறார்கள் !. தங்களின் விருப்பு,வெறுப்புக்கு ஏற்றார்போல சமூக நீதி,அநியாயம்,அக்கிரமம்,ஊழல்,அராஜகம் குறித்து பதிவு செய்யும் சில பன்னாடைகளும் தங்களை பத்திரிக்கையாளன் என்று சொல்லுவதை எப்படியாவது தடுத்திடுங்கள் ! அதற்காக நீங்கள் சில தவறு,பொய்,தகிடுதித்தம் செய்தாலும் இந்த மக்கள் சமூகம் மற்றும் நல்ல பத்திரிக்கையாளர்கள் உங்களை போற்றி துதிப்பர் !