Thursday, 22 September 2011

நெஞ்சு பொறுக்குதில்லையே! அத்தியாயம் 1


இவரது பெயர் ஆனந்தன் என்கின்ற நியூஸ் ஆனந்தன்.வயது சுமார் 60.
இவர் ஒரு காலத்தில் ஓரிரு பத்திரிக்கை நிறுவன்ங்களில் வேலை பார்த்தார்.இப்பொழுது எந்த பத்திரிக்கை நிறுவனத்திலும் வேலை பார்க்கவில்லை.இருந்தாலும் தன்னை பத்திரிக்கை நிருபர் என்று சொல்லிக் கொண்டு மற்றவர்களை மிரட்டியும் ஏமாற்றியும் பணம் பறிப்பதையே தனது தொழிலாக்க் கொண்டிருக்கிறார்.
இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். எவ்வளவோ செய்திகளை இவர் எழுதியிருக்கலாம்.ஆனால் இவரைப் பற்றி எழுதுவதற்கு நிறையச் செய்திகள் இருக்கிறது.

முதலில் ஒன்றைப் பார்ப்போம்.

சென்னை அருகில் உள்ள மாங்காடு கோயில் நிகழ்ச்சிக்குச் இவர் சென்ற பொழுது அதன் அறங்காவலரிடம்(மணலியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர்) பத்திரிக்கைக்காரங்க வந்துருக்கோம்ல,கோயிலுக்கு இவ்வளவு செலவு பண்றீங்கள்ல,எங்களுக்கு ஒரு சவரன் தங்கம் கொடுத்தீங்கன்னா கோயிலைப் பத்தி இன்னும் சிறப்பா எழுதுவோம்ல என்று அவரிடம் உரத்த குரலில் கேட்டுள்ளார்.இதைச் சற்றும் எதிர்பார்க்காத அறங்காவலர் அதிர்ச்சிக்குள்ளானார்.
இது தான் ஆனந்தன்.இதுக்கே நீங்கள் முகத்தைச் சுழித்தால் எப்படி?முழுவதையும் படியுங்கள்!
இந்த ஆனந்தன் எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும் அந்த நிகழ்ச்சிக்குத் தொடர்புடைய முக்கிய நிர்வாகியிடம் உரத்த குரலில் அதிகார தோரணையில் பணமாகவோ பொருளாகவோ கேட்டுப் பெறுவதை வழக்கமாகக் கொண்டவர். இவரது செயலால் சக பத்திரிக்கையாளர்கள் பலமுறை அவமானப்பட்டுள்ளனர்.அதனால் இவரைக் கண்டாலே நேர்மையான பத்திரிக்கையாளர்கள் காத தூரம்       ஓடுவதுண்டு.இவர் எந்தக் கூச்ச நாச்சமும் இன்றி யாரிடம் வேண்டுமானாலும் எந்த சூழ்நிலையிலும் இப்படிக் கேட்பதை வாடிக்கையாகக் கொண்டவர்.
அரசியல் கட்சித்தலைவர்கள்,முதல்வர்,அமைச்சர்கள் நட்த்தும் பத்திரிக்கையாளர் சந்திப்புக்களில் முதல் வரிசையில் அமர்ந்து கொள்வார்.எதில் இருப்பவர் மிகவும் நெருக்கமானவர் என்பதைப்போல் காட்டிக் கொண்டு உரத்த குரலில் கேள்விகளைக் கேட்பார்.சந்திப்பு முடிந்த பின் காதைச் சொறிந்து கொண்டு கவர் கிடைக்கும் வரை.பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்த இட்த்திலேயே நின்று கொண்டிருப்பார்.
கடந்த கால இவரது திருவிளையாடல்களை எழுதினால் பல புத்தகங்கள் போடலாம்.சில குறிப்பிடப்பட்டவற்றை மட்டும் பார்ப்போம்.

நான்கைந்து வருடங்களுக்கு முன்பு.ஒரு அநாதரவான பெண்மணியிடம்,அனைத்து மந்திரிகளும் என் சட்டைப் பாக்கெட்டில்,நான் உனக்கு நான் அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்று சொல்லி 4 லட்சம் ரூபாய் பணம் வாங்கி கொண்டு ஏமாற்றி விட்டார்.வட்டிக்கு வாங்கி இவருக்கு பணம் கொடுத்த அந்தப் பெண்மணியோ இவரிடம் பல தடவை கேட்டும் பணத்தையும் வாங்க முடிய வில்லை,வேலையையும் வாங்க முடியவில்லை.ஆகவே வேறு வழியின்றி இவரது வீட்டின் அருகில் மண்ணெண்னெய் ஊற்றித் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டு விட்டார்.ஆனால் இவருகுத் தெரிந்த சில காவல்துறையினர் உதவியுடன் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். 

இது போக நாடு விட்டு நாடும் இவரது லீலைகள் நடைபெற்றது.சிறிது காலம் இவர் மலேசியாவில் ஒரு பத்திரிக்கையில் வேலை பார்த்தார்.அங்கு வேலை பார்க்கும் பொழுது இவர் செய்த பகீரத மோசடியால் மலேசிய பத்திரிக்கை நிறுவனம் இவர் மீது அங்கு காவல்துறையில் புகார் கொடுத்தது.ஆனால் இதனை முன் கூட்டியே மோப்பம் பிடித்த இவர் அங்கிருந்து எப்படியோ தப்பித்து ஓடி வந்து விட்டார்.இன்றும் இவர் மலேசியா செல்ல முடியாது.வழக்கு காத்திருக்கிறது.

அதன் பின் இவரது இன்னொரு மோசடி மிகப் பிரபலம்.

இதற்கு முந்தைய அதிமுக ஆட்சியில் பொன்னையன் நிதி அமைச்சராக இருந்தார்.அப்பொழுது பொன்னையன் நான் சொன்னால் எந்த வேலையையும் உடனே முடித்துக் கொடுப்பார் என்று சொல்லி பலரிடம் பணத்தைக் கறந்து விட்டார்.ஆனால் ஒரு மோசடியில் வசமாகச் சிக்கி விட்டார். இவரும் ஆனந்த முரசு என்ற பத்திரிக்கையை நடத்தி வந்த கணபதி என்பவரும்,செய்தித் துறை அதிகாரி ஒருவரும் கூட்டாகச் சேர்ந்து ஆசிரியர் பயிற்சிப் பள்ளிக்கு பொன்னையனிடம் சொல்லி அனுமதி வாங்கித் தருவதாகக் கூறி 40 லட்ச ருபாயை மோசடி செய்து விட்டனர்.பணம் கொடுத்தவர் இந்த மூவர் கும்பலிடம் பல முறை கேட்டும் அனுமதியும் கிடைக்க வில்லை,பணமும் திரும்பக் கிடைக்க வில்லை.

தொடர்ந்து இவர்களை நெருக்கவே, இவர் தான் அமைச்சர் பொன்னையனிடம் பணத்தைக் கொடுத்து விட்டேன் என்று சொல்லி தப்பிக்கப் பார்த்தார்.ஆனால் எப்படியோ அமைச்சர் தரப்புக்கு இந்தத் தகவல் சென்று விடுகிறது. அமைச்சர் பொன்னையனோ தான் யாரிடமும் பணம் வாங்க வில்லை என்று மறுத்ததோடு, பாதிக்கப்பட்டவர்களிடம் புகார் வாங்கி இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிடுகிறார்.விளைவு,அமைச்சரின் நடவடிக்கையால் இவரும்,ஆனந்த முரசு கணபதியும் கைதாகின்றனர்.இவர்களின் இன்னொரு கூட்டாளியான செய்தித் துறை அதிகாரியோ முன் ஜாமீன் பெற்றுத் தப்பித்து விட்டார்.

ஆனால் ஜெயிலுக்குச் சென்ற பின்னும் இவரது கொட்டம் அடங்கவில்லை.அமைச்சர்கள் அறை,சட்டமனற உறுப்பினர்கள் அறை,தொழிலதிபர்கள் அலுவலகம்,கவுன்சிலர்கள் என எங்கு சென்றால்,யாரைச் சந்தித்தால் பணம் கிடைக்கும் என பட்டியலிட்டுக் கொண்டு இவரைப் போன்ற செயல்பாடு கொண்ட மற்ற சில பத்திரிக்கையாளர்கள் சிலரை அழைத்துக் கொண்டு வாடகைக் காரில் வசூல் வேட்டைக்குக் கிளம்புவார்.அந்த முக்கியப் பிரமுகர்களிடம் இவர்கள் சொல்லும் காரணங்கள்,ஏதோ ஒரு பிரபல பத்திரிக்கையின் பெயரைச் சொல்லி,அதில் பணியாற்றும் நிருபர் ஒருவர் விபத்துக்கு உள்ளாகி உயிருக்குப் போராடி மருத்துவமனையில் இருக்கிறார்.மருத்துவச் செலவுக்கு பணம் தேவை என்பது தான்.அவர்களும் இவர் சொல்வதை உண்மை என்று நம்பி பணத்தைக் கொடுப்பார்கள்.குறைந்த பட்சம் சில ஆயிரங்களாவது கிடைக்கும்.  

இப்படி பலவிதமான காரணங்களைச் சொல்லி அவவப்பொழுது வசூலுக்குச் சென்று விடுவார்கள்.வசூலாகும் பணத்தில் கார் வாடகை போக மீதம் உள்ள தொகையை உடன் இருப்பவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரித்துக் கொள்வார்கள்.

அதிலும் தேர்தல் அறிவிப்பு வந்து விட்டால் இவருக்கும் இவரது கூட்டாளிகளுக்கும் இன்னும் கொண்டாட்டம் தான்.வழக்கம் போல் தன்னுடன் இருவரை அழைத்துக் கொண்டு வாடகைக்கார் பிடித்து சென்னை மட்டுமல்ல,தமிழகம் முழுவதும் பயணம் செய்து களத்தில் நிற்கும் வேட்பாளர்களைச் சந்தித்து,பத்திரிக்கையில் உங்களுக்கு ஆதரவாகச் செய்தி வெளியிட்டு வெற்றியடையச் செய்கிறோம் என்று சொல்லி இவர்களின் வசூல் வேட்டை கொடி கட்டிப் பறக்கும்.ஆனால் இவர்களின் கெட்ட நேரம்.சென்ற சட்டமன்றத் தேர்தலின் பொழுது வசமாக மாட்டிக் கொண்டார்கள்.
சென்ற சட்டமன்றத் தேர்தலின் பொழுது இவரும்,இவருடன் இவரது கூட்டாளிகள் இரண்டு பேரும் சேர்ந்து கொண்டு, தென் மாவட்டங்களில் வேட்பாளர்களிடம் கதை விட்டு வசூலை முடித்துக் கொண்டு,அதன்பின் திண்டுக்கல்லில் இவர்களின் பித்தலாட்டத்தைத் தொடங்கினார்கள்.
திண்டுக்கல்லில் தேமுதிக கட்சியின் வேட்பாளரிடம் நாங்கள் தினமும் மலரும் நாளிதழில்  இருந்து வருகிறோம்.உங்களுக்கு ஆதரவாகச் செய்தி வெளியிட்டு வெற்றிபெறச் செய்கிறோம் என்று வழக்கமான கதையை எடுத்து விட்டுள்ளார்கள்.இவர்களது பேச்சாலும் நடவடிக்கையாலும் சந்தேகம் அடைந்த  அவரோ, உஷாராகி, உள்ளுர் நிருபர்களிடம் விசாரித்ததில் இந்தக் கும்பல் பணம் பறிக்கும் கும்பல் என்று கண்டுபிடித்து விட்டார்.அதன் பின் காவல்துறையிடம் புகார் அளிக்கவே,இவரும் இவர் உடன் சென்ற இன்னொரு போலி நிருபரும் கைதாகி ஜெயிலுக்குச் சென்றனர்.தாடி வைத்திருந்த இன்னொரு போலி நிருபர் தப்பித்து விட்டார்.
ஆனாலும் இந்தக்கும்பலின் கொட்டம் இன்னும் அடங்கவில்லை.வழக்கம் போல கண்ணில் படும் அனைவரிடமும்,எல்லா மந்திரியும் என் சட்டைப் பையில்,எதும் காரியம் இருந்தாச் சொல்லுங்க முடிச்சுடலாம்,என்று வலம் வருகிறது. 

இவரின் இப்படிப்பட்ட செயலால் மற்ற பத்திரிக்கையாளர்கள் மனம் வருந்துவதோடு இவனையெல்லாம் எப்படி இதற்கு முன் இவன் வெலை செய்த நிர்வாகங்கள் வேலைக்கு வைத்துக் கொண்டிருந்தனர்? இப்படிப்பட்ட ஜென்மங்கள் பத்திரிக்கைத் துறைக்கே அவமானச் சின்னங்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.இப்படிப்பட்ட ஆட்களை வேலைக்கு வச்சுருந்தான் பார்,அந்த முதலாளியை சொல்லணும, இவனுங்களை மாதிரி ஆளுங்களுக்கு வேலை கொடுக்குற முதலாளி தான் இதுக்குப் பதில் சொல்லனும்.இவனுங்க மேல நடவடிக்கை எடுத்தாத் தான் இவனுங்க திருந்துவானுங்க..

இதனைப் படிக்கும் முதலாளிகளின் காதில் அவர்களின் வசவு கேட்கட்டும்.


No comments: