Friday 30 September 2011

காலையில் ஆசிரியர் நீக்கம்-மாலையில் நோட்டீஸ்


சென்ற வாரம் நாம் எழுதியிருந்தது போல புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் பத்திரிக்கை நடத்தும் ஆக்கிரமிப்பு கும்பல் தனக்குப் பிடிக்காதவர்களைப் பட்டியல் போட்டு வேலையில் இருந்து தொடர்ச்சியாக நீக்கி வருகிறது.

இந்தவாரம் தனது புலனாய்வு பத்திரிக்கையில் (ஒரு மண்ணாங்கட்டி ஆய்வும் கிடையாது.பிடிக்காதவர்களைத் திட்டி எழுதுவது,காசு கேட்டு பிளாக் மெயில் செய்து படியாவிட்டால் எழுதுவது,நிறையப் பொய்,கொஞ்சம் உண்மை கலந்து எழுதுவது.இது தான் புலனாஆஆஆஆஆய்வு) இதுவரை ஆசிரியராகப் பணியாற்றி வந்த இளங்கோவனை கேட்பார் யாரும் இன்றி கேள்விகள் எதுவும் இன்றி வேலையில் இருந்து தற்காலிகமாக நீக்கி விட்டார்களாம்.மிகவும் இழிவாக வாசலில் வைத்தே இந்த உத்தரவை வழங்கினார்களாம்.ஆனால் இது குறித்துக் கவலைப்படாமல் அன்று மாலையே வக்கீல் மூலம் இதனை எதிர்த்து நோட்டீஸ் அனுப்பி விட்டாராம்.அதே போல ஆக்கிரமிப்புத் தலைவனுக்கு விசுவாசமாக இருந்த கோசலையின் ராமனுக்கு குழும ஆசிரியர் என்று ஒரு பதவியை உருவாக்கி கொடுத்திருக்கின்றார்களாம்.


கோசலையின் ராமனுக்கு அளிக்கப்பட்ட குழும ஆசிரியர் என்னும் புதுப் பதவியைப் பார்த்து பத்திரிக்கை உலகமே சிரிப்பாய்ச் சிரிக்கிறதாம்.

No comments: