//ஆசிரியர் குழு
பெயர் கூட இல்லாமல் இதழ் வரும்.ஆனால் வைகோ
புகழாரச் செய்தியோ,அவருக்கு சொறிந்து
விடும் செய்தியோ இல்லாமல் ஜூனியர் விகடன் வெளிவருமா என்ன..?//
ஜூனியர் விகடனில் ஒவ்வொரு இதழிலும் வைகோவை புகழ்ந்தும் அவருக்குத் துதிபாடியும் ஏதாவது விஷயம் பதிவாகி விடுவது குறித்து நாம் கடந்த செய்திப் பதிவில் எழுதியிருந்தது தான் மேலே காணப்படுவது.
நம் செய்தி
யாருக்கு உரைத்ததோ இல்லையோ,ஆசிரியர் குழுவுக்கு
சிறிதும் உரைக்கவே இல்லை.தொடர்ச்சியாக இந்த
இதழிலும் வைகோ புராணம்.
(வருடக்கணக்கில் நடக்கும் அந்த வைபவம் ஒரே இதழில் நின்றுவிடுமா
என்ன..?)
”உளவுத்துறை அதிகாரியிடம் சீறிய வைகோ” என்று
தலைப்பிட்டு 2 பக்கங்களை வெளியிட்டு குதூகலம் ஆகியுள்ளனர்.வைகோ தொடர்புடைய செய்தி ஆயிற்றே.அப்புறம் எப்படி தவிர்ப்பது..?
வைகோ டை அடித்து கருகரு முடியுடனும்,புத்தம்புது கலர் கண்ணாடி அணிந்தும்
தோற்றமளிக்கும் புகைப்படத்தை வெளியிடும் வாய்ப்பை அடுத்த வாரம் வரைக்கும் ஒத்திப்
போட முடியுமா என்ன..?
அப்புறம் ’பொதுச்செயலாளர்’ கோபித்துக் கொள்ள மாட்டாரா என்ன..?ஆகவே நமது காசில் 2 பக்கங்கள் வைகோவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
படிப்பது காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் வாசகன் தலையெழுத்து.
படிப்பது காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் வாசகன் தலையெழுத்து.
இனி நாம் ஜூ.வி.,வெளியிட்ட அந்தச் செய்தியின் உண்மைத்தன்மை குறித்தும் அதில் இடம்
பெற்றுள்ள விஷயங்கள் குறித்தும்,இடம்பெறாத அயோக்கியத்தனங்கள் குறித்தும் ஆராய்வோம்.
முதலில் தலைப்பு..!
பொதுவாக நீதிமன்றத்தில்
வைகோ மட்டுமல்ல யாராலும் சீற முடியாது என்பது தான் உண்மை.ஆனால் அடிப்படை தெரியாமல் வைகோ சீறினார்,குரைத்தார் என வசன வித்தைகளைக் காட்டியுள்ளனர்.
வைகோ பெரிய பேச்சாளர் என்பது உண்மையாக இருக்கலாம்,ஆனால் அவரது நீதிமன்ற வாதங்கள் ஜூனியர் வழக்குரைஞர் திறமைக்கு ஒப்பானது தான் என்பதும் மேடையில் பேசுவது போல் தான் நீதிமன்றங்களிலும் பேசுவார் என்பது நேரில் பார்த்தவர்களுக்குத் தெரியும்.
வைகோ பெரிய பேச்சாளர் என்பது உண்மையாக இருக்கலாம்,ஆனால் அவரது நீதிமன்ற வாதங்கள் ஜூனியர் வழக்குரைஞர் திறமைக்கு ஒப்பானது தான் என்பதும் மேடையில் பேசுவது போல் தான் நீதிமன்றங்களிலும் பேசுவார் என்பது நேரில் பார்த்தவர்களுக்குத் தெரியும்.
அப்புறம் எங்கு சீறுவது..?
இனி ஜூ.வி.வெளியிட்ட செய்தியில் ஒவ்வொரு பத்தியாக விவாதிப்போம்.
முதல் மூன்று பத்திகளில் உள்ளவை பொதுவான செய்திகள்.அதில் விவாதத்திற்கும்
விமர்சனத்திற்கும் பெரிதாக ஒன்றும் இல்லை.
நான்காவது பத்தியைப் பார்ப்போம்.
குறிப்பாக இந்த வரியைப் பார்த்தால் போலீஸ் வட்டாரம் சொல்வதாக நிருபர் கிசுகிசு
பாணியில் எழுதியுள்ளார்.நீதிமன்றத்தில் நேரடியாக வாதப் பிரதிவாதங்களைப்
பார்த்திருந்தால் அங்கு போலீசு வட்டாரம் சொன்னதாக கிசுகிசு எழுத வேண்டிய தேவையில்லை.
தீர்ப்பாய அமர்வில் யார் என்ன பேசினார்கள்,நீதிபதி என்ன பதில்
சொன்னார்?என்ன சொல்லி அவரிடம் கவர் ஒப்படைக்கப்பட்டது என்று தெளிவாக
எழுதியிருக்கலாம். ஆனால் நிருபர் கிசுகிசு பாணியில் எழுதியிருப்பதைப் பார்த்தால்
அவர் தீர்ப்பாயத்தில் விசாரணை நடைபெறும் சமயம் சென்றாரா என்னும் கேள்வி நம்முன் எழுகிறது.
சரி ஐந்தாவது பத்தியை விட்டு விட்டு ஆறு மற்றும் ஏழாவது பத்திகளுக்குச் செல்வோம்.
இந்த 2 பத்திகளில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு நாளிதழ்கள்,இதர
ஊடகங்களில் வெளிவந்துவிட்டன.அப்படி வெளிவந்த செய்திகள் அனைத்தும் எந்த
நிருபராலும் உள்ளே சென்று பதிவு செய்து வெளியிடப்படவில்லை என்பதும் கவனிக்கப்பட
வேண்டிய ஒன்று.
வைகோ தீர்ப்பாய அமர்வில் கலந்துகொண்டபின் வெளியே வந்து நிருபர்களிடம் வீராவேசமாக
ஆற்றிய உரையைத் தான் அனைத்து ஊடகங்களும் தீர்ப்பாயத்தில் நடைபெற்ற
சம்பவங்களாகப் பதிவு செய்துள்ளன.
வைகோ என்னும் அரசியல்வாதி தான் தீர்ப்பாயத்தில் ஆற்றிய வீராவேசத்தை,அவரே
எடுத்துச் சொல்லும் பேட்டியைத் தாண்டி புதிய செய்திகள் எதுவும் ஜூ.வி.யில் இல்லை.
அவ்வாறு அவர் அளித்த மேற்கண்ட பேட்டி நாளிதழ்கள் அனைத்திலும் வெளிவந்து
விட்டது.அனைவரும் அதனையும் வாசித்து விட்டனர்.அதைத்தாண்டி புதிதாய்
இதில் ஒன்றும் இல்லை.
இப்படி வைகோ நிருபர்களிடம் அளித்த பேட்டியை வைத்து செய்தியாக்குவது நாளிதழ்கள்
பார்வையில் தவறாக இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் வாரமிருமுறை வெளியிடப்படும் ’புலனாய்வு’இதழுக்கு ஸ்டோரி செய்ய வேண்டிய அவசியம் என்ன.? அப்புறம்
புலனாய்வு புடலங்காய் இதழ் என்று எதற்கு பெயர்..?வாசகனுக்கு என்ன செய்தியைப் புதிதாகத்
தந்துள்ளது..?
யார் தேவைக்கும் விருப்பத்திற்கும் இந்த செய்தி ஜூ.வி.யில் பதிவு செய்யப்பட்டது..?
கடைசிப் பத்தியில் பெரிய விமர்சனம் ஒன்றும் இல்லை.
********
********
சீறிய வைகோ என்று 2 பக்கங்கள் பில்டப் காட்டிய நிருபர்
இரண்டாம் நாள் விசாரணையில் வைகோ செய்த துரோகத்தை இதில் அம்பலப்படுத்தவில்லை.அதைப் பார்ப்போம்.
அது என்னவென்றால் சிறைக்கைதிகள் உரிமை மையத்தின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் நீதிபதியிடம் ஒரு மனுவைத் தாக்கல் செய்கிறார்.அது விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு இந்தியாவில் தடை விதித்திருக்கின்றீர்கள்.ஆனால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அந்த அமைப்பின் உறுப்பினர்களுக்கு உரியதகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் தரப்புக் கருத்தினையும் கோராமல்,பதிவு செய்யாமல் நடத்தபப்டும் இந்த விசாரணை அமர்வு அர்த்தமற்றது என்றுஅவரது வாதம் அமைகிறது..இது சரியான வாதம் மட்டுமல்ல உண்மையும் கூட.
ஆனால் ’புரட்சிப்புயல்’ வைகோ என்ன பேசினார்
தெரியுமா..?
வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனின் கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன்.தீர்ப்பாயம் சிறப்பாய் பணியாற்றுகிறது என்று வாதிட்டு,மத்திய
அரசினால் கண்துடைப்பிற்காய் நியமிக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் செயலுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்.
இங்கு கவனிக்கப் படவேண்டியது என்னவென்றால்,மத்திய அரசு இந்தியாவில் இல்லாத விடுதலைப்புலிகள் அமைப்பிற்குத் தடை விதித்ததோடு
மட்டுமல்லாமல்,அதை நியாயப் படுத்துவதற்காக கண்துடைப்பாக ஒரு தீர்ப்பாயத்தை
அமைக்கிறது.இதனை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்ப வேண்டிய வைகோ,அதன் செயல்பாட்டைக்
கேள்விக்குள்ளாக்க வேண்டிய வைகோ அதனை நியாயப்படுத்திப் பாராட்டிப் புளகாங்கிதம்
அடைகிறார்.
அப்படியானால் வைகோ யாருக்கு வழக்குரைஞர்? விடுதலைப்புலிகளின் ஆதரவுத்
தரப்புக்கா..? இல்லை மத்திய அரசுக்கு ஆதரவாகவா..?
தீர்ப்பாயத்தில் உண்மையில் சீறியது வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தான்.வைகோ
செய்தது பச்சைத்துரோகம்.
இன்னும் சொல்லப்போனால் எதிர்த் தரப்பு வக்கீலை நல்ல விலை கொடுத்து வாங்கி
தங்களது வழக்கில் சிலர் வெற்றிபெறுவார்களே..!அது தான் இங்கும் நடந்துள்ளது.
அரசியலில் வைகோவின் பல பல்டிகளைப் பார்த்தவர்களுக்கு இது ஒன்றும்
புதிதல்ல.ஆச்சரியம் அடையவும் ஒன்றும் இல்லை.இது தான் தீர்ப்பாயத்தில் நடந்தது.
உண்மையில் ஜூவி.இதை எப்படிச் செய்தியாக்கியிருக்க வேண்டும் என்றால் தமிழனுக்கு வைகோவின்
துரோகம்..! பின்னணி என்ன..? இப்படித்தான் செய்தியாக்கியிருக்க வேண்டும்.
ஆனால் சீறினார்,பிளிறினார் என்று உண்மையை மறைத்து பொய்யையும் புரட்டையும்
கலந்து ஊதிப்பெரிதாக்குகிறது.வாசகனும் இதை நம்ப வேண்டியதிருக்கிறது.
இந்த செய்தியை எழுதிய நிருபர் ஜோ.ஸ்டாலின்.இவர் துறைக்குப் புதியவர் என்றாலும்
திறமையானவர்.மதுரையைச் சேந்தவர்.இவர் அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தைச்
சேர்ந்தவர். வைகோவுக்கு ஜால்ரா தட்ட வேண்டிய சிந்தனை இவருக்கு ஏற்பட வாய்ப்பு
இல்லை.நடுநிலைச் செய்திக்குப் பதிலாக முழுக்க முழுக்க வைகோவை பிரதானப் படுத்தி செய்தி வந்துள்ளது.
இது நிருபர் செய்த தவறு கிடையாது என்று அறிய முடிகிறது.பெரும்பாலும் நிருபர்கள் எழுதிய செய்தியை அவருக்கு மேலே உள்ளவர்கள் என்ன திருத்தம் செய்தாலும் அதை மறுக்கவோ,எதித்துப் பேசவோ இயலாத நிலை இங்கு நிலவுகிறது.இங்கும் அது தான் நடந்துள்ளது என்று அறிய முடிகிறது.வைகோ மீது தாங்கள் கொண்ட
கண்மூடித்தனமான விசுவாசத்திற்காக அலுவலகத்தில் ஆசிரியர் குழுவில் உயரிய இடத்தில்
உள்ளவர்கள் தான் இந்த அபத்தத்தைச் செய்துள்ளனர்.ஆனாலும் இந்தப் பழி என்னவோ
நிருபருக்குத் தான் போய்ச் சேரும்.
(தீர்ப்பாயத்தின் உள்ளே நடந்த காமெடி சவுக்கு இணையதளத்தில் பதிவாகியுள்ளது.)
இந்த
இதழில் மட்டுமல்ல,ஆ.வி.,ஜூ.வி.,என ஒவ்வொரு இதழிலும் வைகோ வின் செய்தித் தொடர்பாளராக மாறி எழுதித் தள்ளுகின்றனர்.
விகடன் முதலாளிக்கு மாறன் சகோதரர்கள்
ரட்சகர்கள் என்றால் விகடன் ஆசிரியர் குழுவிற்கு வைகோ தமிழ்நாட்டைக் காக்க வந்த பிதாமகர்.இது
நட்பு முரணா பகை முரணா என்பதைப் படிக்கும் நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.
நம்மைப் போல காசு கொடுத்து ஜூ.விகடன்
வாங்கிப் படிக்கும் வாசகனின் சகிப்புத்தன்மையைச் சோதிக்கும் வண்ணம் ஒவ்வொரு இதழையும்
வைகோவின் சங்கொலி இதழின் வாரமிருமுறைப் பதிப்பாய் மாற்றி வெளியிட்டு வருகின்றனர்.
தமிழருவி மணியனின்
எழுத்து அல்லது மேடைப் பேச்சு வழியாக வைகோ தான் வருங்கால முதல்வர் என்றோ, அல்லது நல்லகண்ணு
குரலில் மூன்றாவது அணிக்கு வைகோ தலைமை தாங்க வேண்டும் என்றோ, அல்லது ஏதாவது
விபத்தில் அடிபட்டவரை காப்பாற்றிய வைகோவின் மனிதாபிமானம் என்றோ,வைகோ தும்மி விட்டார் ஆகவே தமிழ்நாட்டில் விரைவில் புரட்சி
வருவதன் எதிரொலி என்ற ரேஞ்சில் ஜூ.வி.இதழ்களில் பதிவாகி விடுகிறது.
இது எதுவும்
இல்லாவிட்டாலும் வைகோ தான் தமிழ்நாட்டை ரட்சிக்க வந்த ரட்சகர் என்று ஒரு வாசகர் கடிதம் வெளியிட்டாவது விகடன் குழும இதழ்கள் குறிப்பாய்
ஜூ.வி.தனது அரிப்பைத் தீர்த்துக் கொள்கின்றன.
சமீபத்திய ஆனந்த
விகடனில் குல்தீப்நய்யாரின் பேட்டியில் பல்வேறு முக்கியமான செய்திகள் இருந்தும் என் சாய்ஸ் வைகோ தான் என்று தலைப்பு வைத்த மகிழ்ந்தது ஒரு உதாரணம்.ஆனால் காசு கொடுத்து விகடன் வாங்கிப் படிக்கும்
சாய்சாகவும் ஓட்டுப் போடுபவர்களின் சாய்சாகவும் வைகோ என்றும் இருந்தது இல்லை.அது ஜெயலலிதா,கருணாநிதி
என்று தான் மாறிமாறி வருகிறது.அதற்கு மாற்றாகவும் வைகோ இப்பொழுது கண்காணும் தூரத்தில்
கூட இல்லை.
சரி இவர்கள்
எழுதுவது போல் வைகோ அப்படி மாசு மருவற்றவரா என்று பார்ப்போம்.
வைகோ நான்கு வாரத்திற்கு முன் கட்சி ஆரம்பித்துள்ளார் என்றாலாவது அவர் நல்லவர்
வல்லவர் நாலும் தெரிந்தவர் என்று சொல்லி புளகாங்கிதப்படுவதில் அறியாமையோ ’அர்த்தமோ’ இருக்கும்.
ஆனால் வைகோ கட்சி ஆரம்பித்து 19 ஆண்டுகள் ஆகி விட்டது.
தி.மு.க.வில் தலைமைப் பதவிக்கு ஆசைப்பட்டு அது கிடைக்காமல் அரசியலில் தூய்மை,கொள்கையில்
நேர்மை,லட்சியத்தில் உறுதி என்ற பிராண்ட் வாசகங்களுடன் வெளிவந்தவர் தான் வைகோ.(அப்பொழுது
வை.கோபால்சாமி)
என்ன முழக்கங்களை முன்வைத்து கடந்த 19 ஆண்டுகளுக்கு முன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் பெயரில் கட்சி
ஆரம்பித்தாரோ அது அனைத்தையும் துறந்து இன்று அம்பலப்பட்டு நிற்பவர் தான் வைகோ.
தி.மு.க.,அ.தி.மு.க.,வலது,இடது கம்யூனிஸ்ட்,காங்கிரஸ்,பாஜக,பார்வர்டு பிளாக் உட்பட அனைத்துக் கட்சிகளுடனும் கூட்டணி சேர்ந்து தொகுதிகள் மட்டுமல்ல பதவி, அதிகாரம்,பணம் என அனைத்தையும் பங்கிட்டவர் தான் வைகோ.
((இத்தனையும் துறந்தாலும் வைகோவின் அரசியல் இத்தனை வருடங்களாக ஓடிக் கொண்டிருப்பதற்கு
முக்கிய காரணம் பத்திரிகையில் ஏதாவது ஒரு செய்தியில் தினசரி இடம்பிடித்து விடுவது
தான். ஊடகங்களின் முதலாளியிலிருந்து ஆசிரியர்,நிருபர்,புகைப்படக்காரர் என
அனைவரையும் தெரிந்து வைப்பவர், அவர்களுடன் தொடர்ந்து நல்லுறவு பேணுவதையும் வைகோ
ஒரு கலையாகவே செய்து வருவார்.
அதைப்போல வைகோ பிரபாகரனை வேண்டுமானாலும் பகைத்துக் கொள்வார்.ஆனால் ஊடக முதலாளிகளை மட்டும் பகைக்க மாட்டார்.புலிகளை ஆதரிப்பார்.ஆனால் ஹிந்து ராமுடன் கொஞ்சுவார்,செங்கொடியின் தியாக மரணத்தில் வழியும் கண்ணீரை நீளமான துண்டினால் துடைத்துக் கொண்டிருப்பார்.ஆனால் அடுத்த வாரம் செங்கொடியின் மரணத்தை இழிவுபடுத்திய தினமலர் வீட்டுத் திருமணத்தில் முதல் ஆளாய் பல்லிளித்துக் கொண்டு நிற்பார்.புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சகோதர நிறுவனம் கொழும்பில் தொழில் துவங்கியதைக் கண்டித்து ஒரு அறிக்கையும் வைகோ வெளியிடவில்லை.இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.))
அதைப்போல வைகோ பிரபாகரனை வேண்டுமானாலும் பகைத்துக் கொள்வார்.ஆனால் ஊடக முதலாளிகளை மட்டும் பகைக்க மாட்டார்.புலிகளை ஆதரிப்பார்.ஆனால் ஹிந்து ராமுடன் கொஞ்சுவார்,செங்கொடியின் தியாக மரணத்தில் வழியும் கண்ணீரை நீளமான துண்டினால் துடைத்துக் கொண்டிருப்பார்.ஆனால் அடுத்த வாரம் செங்கொடியின் மரணத்தை இழிவுபடுத்திய தினமலர் வீட்டுத் திருமணத்தில் முதல் ஆளாய் பல்லிளித்துக் கொண்டு நிற்பார்.புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சகோதர நிறுவனம் கொழும்பில் தொழில் துவங்கியதைக் கண்டித்து ஒரு அறிக்கையும் வைகோ வெளியிடவில்லை.இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.))
தினமலர் வீட்டுத் திருமணத்தில் வைகோ(செங்கொடி மரணமடைந்த மறு வாரம் நடைபெற்றது) |
பதவிக்காய் அனைத்துக் கட்சிகளுடனும் கூட்டணி வைத்தாலும் நேர்மையானவர்
தனித்தன்மையுடையவர் என்று வாதிடுபவர்களுக்காக..
என்ன இருந்தாலும் நேர்மையான அரசியல் கட்சியை நடத்துகிறார்,தன்னலமற்ற தலைவர் என்று யாரும் வாதிடலாம். இவரது கட்சியின் சார்பில் மத்திய நிதித்துறை
இணை அமைச்சராகப் பதவி வகித்த செஞ்சி ராமச்சந்திரன் உதவியாளர் பெருமாள்சாமி ரூ.4
லட்சம் லஞ்சம் வாங்கும் பொழுது டெல்லியில் சி.பி.ஐ.யால்
கையும் களவுமாகப் பிடிபட்டு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பெருமாள்சாமி வைகோவுக்கு நெருக்கமானவர்என்றும்,அவரது ஊருக்கு அருகாமை ஊரைச்
சேர்ந்தவர் என்றும்,தூரத்து உறவினர் என்றும், செஞ்சியின் அலுவலகத்தில் வரவு-செலவுக்(!)
கணக்குகளைச் சரிபார்க்கவும்,செஞ்சி தனி ஆவர்த்தனம் புரியாமல் கட்டுப்படுத்தவும் ’காவலாகவும்’ வைகோவால் நியமிக்கப்பட்டவர் என்றும் அப்பொழுதே பரவலாகப் பேசப்பட்டது.
சரி வைகோ லட்சியத்தில் எப்படி என்று
கொஞ்சம் உரசிப் பார்ப்போம்.
ராஜீவை நாடாளுமன்றத்தில் நேருக்கு நேர் கேள்வி கேட்டார் என்னும் பெருமைபொங்க
புகழப்படும் வைகோ தான் சென்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் அன்னை
சோனியாவின் கரத்தை வலுப்படுத்த வீதிவீதியாக வலம் வந்தவர்.
இன்று கூடங்குளத்தை எதிர்ப்பதாகச் சொல்லும் வைகோ தான் மீனவர்களின்
வாழ்வாதாரத்தைச் சூறையாடும் சேதுசமுத்திரத்திட்டத்தை முழுமூச்சாக
ஆதரித்தவர்.ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் வைகோவின் ’பங்கு’ இன்னும் கேள்விக்குறியாக உள்ளது.
ஒவ்வொரு வருடமும் ரம்ஜானை ஒட்டி இஸ்லாமியர்களுக்கு இப்தார் விருந்து அளித்து நோன்புக் கஞ்சி
குடிப்பதாக போஸ் கொடுக்கும் வைகோ தான்,குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் படுகொலைக்குக் காரணமான நரேந்திரமோடியின்
செயல்பாட்டை வாஜ்பாயின் செல்லப்பிள்ளையாக இருந்து நாடாளுமன்றத்தில் நியாயப்படுத்திப் பேசியவர்.
4 சீட்டுகளுக்காகவும்,.....மாறிமாறி அனைவருடனும் கூட்டணி வைத்தவர் தான் வைகோ.
இதற்கு மேல் என்ன கொள்கை,லட்சியம் புடலங்காய்..?
ஈழப் பிரச்சனையில்
வைகோவின் அர்ப்பணிப்பை அனைவரும் பாராட்டுகிறார்கள். நாமும் அவரது பேச்சினைக் கேட்டு ஒருகாலத்தில்
வியந்திருக்கிறோம்.ரசித்திருக்கிறோம்.
ஆனால் அவரது
ஈழ ஆதரவு செயல்பாட்டால் இதுவரை தமிழ்நாட்டில் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட முடியவில்லை என்பது தான்
உண்மை. தமிழ்நாட்டு அரசியலில் கலைந்து போன
அவரது அரிதாரத்தைப் பூசுவதற்கு அவரது ஈழ ஆதரவு பயன்பட்டுள்ளதே தவிர ஈழ
மக்களுக்கு அதனால் துளியும் நன்மை விளையவில்லை என்பது தான் உண்மை.
இங்குள்ள ஈழ ஆதரவு சக்திகள் கூட அவர் பின்பு ஓரணியில் திரளவில்லை என்பது தான் நிஜம்.
இங்குள்ள ஈழ ஆதரவு சக்திகள் கூட அவர் பின்பு ஓரணியில் திரளவில்லை என்பது தான் நிஜம்.
ஈழப்போருக்குப் பின் இந்தியாவிற்கு இரண்டுமுறை வந்த ராஜபக்ஷேவை
எதிர்த்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோ,இங்கிருந்து கூப்பிடு தூரத்தில்
இருக்கும் திருப்பதிக்கு ராஜபக்ஷே வந்த பொழுது கூட எல்லை தாண்டிச் சென்று போராடாத
வைகோ,இப்பொழுது எங்கோ உள்ள சாஞ்சி சென்று போராடுவதன் பின்னணியில் ஊடக வெளிச்சம் மட்டும் காரணமல்ல விரைவில்
நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கிறது என்னும் அரசியல் உண்மையை அறியாதவர்கள் தான் சாஞ்சி வரை சென்று வைகோ ராஜபக்ஷேவுக்கு எதிராய் போராடினார் என்று குதூகலம் அடைகிறார்கள்,ஆர்ப்பரிக்கிறார்கள்.
இவ்வளவு ஏன்..!வைகோ பொடாவில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறைச்சாலையில் 19 மாதங்கள் அடைக்கப்பட்டார்.அப்பொழுது சிறையில் இருந்தபடியே தொண்டர்களுக்கு மடல் வரைந்தார்.அந்த கடிதங்கள் தொகுக்கப்பட்டு 700 பக்கங்களுக்கும் மேலாக சிறையில் விரிந்த மடல்கள் என்னும் பெயரில் வெளிவந்துள்ளது.அதில் உலகத்து போராளிகள் அனைவர் வீரத்தையும் போர்க்குணத்தையும் அவர்களை வியந்தும் எழுதியிருப்பார்.அது மட்டுமல்ல வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட முத்துராமலிங்கத்தேவரில் இருந்து இன்னபிற தலைவர்கள் குறித்தும்,உலகத்து அத்தனை விஷயங்கள் குறித்தும் எழுதியிருப்பார். எழுதியிருப்பார்.குறித்தும் அதில் வர்ணனைகளுடன் விலாவாரியாய் எழுதியிருப்பார்.ஆனால் ராஜீவ் கொலை தொடர்பாய் அங்கு சிறையில அடைக்கப்பட்ட பேரறிவாளன்,சாந்தன்,முருகன்,ராபர்ட் பயஸ் குறித்து ஒரு வரி எழுதப்படவில்லை.
ஆனால் அதே வைகோ தான் முவர் தூக்கு தண்டனை நிறைவேற்றம் என உத்தரவு வந்த பொழுது போராடியதாக காட்சி நடத்தினார்.
சிறையில் இருந்த பொழுது போராளியாக கருதப்படாத அவர்கள்,4 வரியில் எழுத்தில் பதிவு செய்யத் தகுதி இல்லாத அவர்கள் உயிரைக் காக்க வீதியில் இறங்கிப் போராடியதாக காட்சி அமைத்தார்.
இது கசப்பான உண்மை.
இவ்வளவு ஏன்..!வைகோ பொடாவில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறைச்சாலையில் 19 மாதங்கள் அடைக்கப்பட்டார்.அப்பொழுது சிறையில் இருந்தபடியே தொண்டர்களுக்கு மடல் வரைந்தார்.அந்த கடிதங்கள் தொகுக்கப்பட்டு 700 பக்கங்களுக்கும் மேலாக சிறையில் விரிந்த மடல்கள் என்னும் பெயரில் வெளிவந்துள்ளது.அதில் உலகத்து போராளிகள் அனைவர் வீரத்தையும் போர்க்குணத்தையும் அவர்களை வியந்தும் எழுதியிருப்பார்.அது மட்டுமல்ல வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட முத்துராமலிங்கத்தேவரில் இருந்து இன்னபிற தலைவர்கள் குறித்தும்,உலகத்து அத்தனை விஷயங்கள் குறித்தும் எழுதியிருப்பார். எழுதியிருப்பார்.குறித்தும் அதில் வர்ணனைகளுடன் விலாவாரியாய் எழுதியிருப்பார்.ஆனால் ராஜீவ் கொலை தொடர்பாய் அங்கு சிறையில அடைக்கப்பட்ட பேரறிவாளன்,சாந்தன்,முருகன்,ராபர்ட் பயஸ் குறித்து ஒரு வரி எழுதப்படவில்லை.
ஆனால் அதே வைகோ தான் முவர் தூக்கு தண்டனை நிறைவேற்றம் என உத்தரவு வந்த பொழுது போராடியதாக காட்சி நடத்தினார்.
சிறையில் இருந்த பொழுது போராளியாக கருதப்படாத அவர்கள்,4 வரியில் எழுத்தில் பதிவு செய்யத் தகுதி இல்லாத அவர்கள் உயிரைக் காக்க வீதியில் இறங்கிப் போராடியதாக காட்சி அமைத்தார்.
இது கசப்பான உண்மை.
தமிழ்நாட்டில்
ராமதாஸ், கருணாநிதி, ஜெயலலிதா, போன்றவர்களின் அரசியல் தவறுகள்,சமரசங்கள், எவ்வளவோ அவையனைத்தும் வைகோவிடமும் உண்டு.அவர்கள் ஏதேனும் போராட்டம் அறிவித்தாலோ,போராட்டத்தில் கலந்து கொண்டாலோ, அதனை
விமர்சிக்கும்,அதில் உள்ளர்த்தம் கண்டுபிடித்து வாசகர்களுக்குத் தரும் ஜூ.வி., அவர்களின்
ஒவ்வொரு செயலையும் விமர்சிக்கும் ஜூ.வி., வைகோவின் ஒவ்வொரு செய்கைக்கும் போராளி
அரிதாரம் பூசுகிறது. அவரது ஒவ்வொரு அசைவையும் ரசிக மனப்பான்மையுடன் பதிவு
செய்கிறது.வியக்கிறது.
இதற்கு மேல் வைகோவிடம் பாராட்டத்தக்க அம்சங்கள் எமக்குத் தெரியவில்லை.
காலங்கள் கடந்த பின்னும்,ஒப்பனைகள் கலைந்த பின்னும் நாடக மேடை பிரிக்கப்பட்ட
பிறகும் இன்னும் தலைவரின் நவரசக்காட்சிக்கு வேறு வழியின்றி காத்திருப்பது, மதிமுக
தொண்டர்களுக்கு வேண்டுமானால் அவசியமாய் இருக்கலாம். ஜூவி.ஆசிரியர் குழுவிற்குத் தேவை
இல்லை.
எடுத்துக்காட்டாய் கடந்த 4 ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் அனைத்துக்
கட்சிகளுக்கும் எதிரான எத்தனையோ செய்திகள் ஜூவி.யில் பதிவாகி உள்ளன.ஆனால்
வைகோவிற்கு எதிரான ஒரு செய்தி கூடப் பதிவாக வில்லை.எத்தனையோ அரசியல்
சறுக்கல்கள்,சமரசங்கள் வைகோவிடம் ஏற்பட்டுள்ளது.அவரது கட்சியில் இருந்து பலர்
வெளியேறிவிட்டனர்.கட்சி பலகூறுகளாக உடைந்து விட்டது.இப்பொழுது கூட நாஞ்சில் சம்பத்
வெளியேறப் போவதாக செய்திகள் வருகின்றன.ஆனால் ஒரு செய்தி நெகடிவ்வாக ஜூ.வி.யில் பதிவாகவில்லை.
அனைவரையும் போட்டுத் தாக்கும் கழுகார் பதில்களில் கூட போறபோக்கில் கூட
நடுநிலையான விமர்சனங்கள் சொல்லப்படவில்லை.
வைகோவிடம் உங்களுக்குப் பிடிக்காதது எது என்ற கேள்விக்கு, அவர் அதிகமாக
உணர்ச்சிவசப்படுவது தான் என்று கழுகாரின் பதிலாக வருகிறது.
மதிமுக தொண்டனின் மனநிலையும்
ஜுவி ஆசிரியர் குழுவின் மனநிலையும் ஒரே மாதிரி இருப்பது ஆச்சரியமளிக்கிறது.காசு
கொடுத்து வாங்கிப் படிக்கும் வாசகனின் மனநிலையில் இது ஆத்திரமூட்டுகிறது.
ஜூவியை தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சியினரும் நடுநிலை வாசகர்களும் வாங்கிப்
படிக்கிறார்கள் என்னும் எண்ணமே ஆசிரியர் குழுவிற்கு இல்லை.
ஒரே ஒருமுறை கலைப்புலி தாணு கட்சியில் இருந்து விலகிய போது வைகோவிற்கு எதிரான
அவரது பேட்டி சிறிய அளவில் வெளியானது.மறுவாரம் அதற்கு பலமடங்கு விரிவாக அதி
முக்கியத்துவத்துடன் நாஞ்சில் சம்பத் பேட்டி வெளியானது.
ஜெயலலிதா,கருணாநிதி,ராமதாஸ்,ராமகிருஷ்ணன்,தா.பாண்டியன்னை,சோனியா,வாஜ்பாய் என அனைவரையும்
விமர்சிக்கும் ஜூ.வி. இதில் மட்டும் ஓடிஒளிவது ஏன்..?
ஆனால் அதே சமயம் ஒவ்வொரு இதழிலும் மிகப்பெரிய கட்சிகளான அதிமுக,திமுக., வை விட அதிக முக்கியத்துவம் கொடுத்து
புகழ்பாடும் செய்திகள்.
கொள்கையில் சமரசம் செய்தாலும் வைகோ மகத்தான மக்கள் தலைவர்.அவருக்கு மக்கள்
செல்வாக்கு நாடெங்கும் இருக்கிறது.அவரது குரலுக்குத் தமிழகம் கட்டுப்படுகிறது.ஆகவே
அவருக்கு முக்கியத்துவம் அளித்துப் பதிவு செய்வது வியாபார தந்திரம்,அவருக்கு
எதிராக ஒரு செய்தி பதிவானால் கூட ஜூ.வி.யை இழுத்து மூடத் தான் வேண்டும் என்று அவரது
ரசிகர்கள் பதில் சொன்னாலும் அந்த வாதமும்
ஏற்பதற்கில்லை.
தமிழ்நாட்டில் வைகோ கட்சிக்கு 1 நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே இருக்கிறார்.சட்டமன்ற உறுப்பினர் இல்லை.சில உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் இருக்கிறார்கள்.2.5% வாக்குகள்
தான் அவரது செல்வாக்கு.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்குத் தான் அவரது கட்சியின் செல்வாக்கு.
இவ்வளவு ஏன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வைகோவுக்கும் அவரது ம.தி.மு.க.,கட்சிக்கும் அதிகபட்சம் 10 தொகுதிகள் அளிக்கக் கூட ஜெயலலிதா தயாராக இல்லை.இதுதான் அவரது செல்வாக்கின் உண்மை முகம்.ஆனால் இவரைத் தான் விகடன் இதழ்கள் ஊதிப் பெரிதாக்குகின்றன. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் 3 அல்லது 4 சீட்டுகளுக்கு அதிகமாக யாரும் அவருக்கு அளிக்கப்போவதில்லை.அது தான் வைகோவின் லட்சியமும் கூட.
இவ்வளவு ஏன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வைகோவுக்கும் அவரது ம.தி.மு.க.,கட்சிக்கும் அதிகபட்சம் 10 தொகுதிகள் அளிக்கக் கூட ஜெயலலிதா தயாராக இல்லை.இதுதான் அவரது செல்வாக்கின் உண்மை முகம்.ஆனால் இவரைத் தான் விகடன் இதழ்கள் ஊதிப் பெரிதாக்குகின்றன. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் 3 அல்லது 4 சீட்டுகளுக்கு அதிகமாக யாரும் அவருக்கு அளிக்கப்போவதில்லை.அது தான் வைகோவின் லட்சியமும் கூட.
நடுநிலையாக
இருந்து அனைவரின் செய்திகளையும் பதிந்து கொள்ள வேண்டிய ஜூவி வாசகர் பணத்தில் இப்படி சங்கொலியின் இலவச இணைப்பு போல செயல்படுவது அயோக்கியத்தனம்.
நேற்று முளைத்த
கட்சிகள் கூட தனக்கான ஊடகங்களை உருவாக்குவதில் ஆர்வமாய் இருக்கும்போது, வைகோவுக்கு அப்படியொரு ஆர்வமில்லாமல் இருப்பதனால், விகடன் அந்தக்குறையைத் தீர்த்துவைக்கிறது போலும்.
கொள்கையும் இல்லை.லட்சியமும் இல்லை.மக்கள் செல்வாக்கும் இல்லை.ஆனால் வைகோ தான்
அடுத்த முதல்வர் என்ற ரேஞ்சுக்கும்,தமிழகத்தின் மாபெரும் போராளி என்றும் ஜூ.வி. ஊதிப்
பெரிதாக்குகிறது.
கவர் வாங்கிச் செய்தி போடுவது மட்டும் குற்றமல்ல.தொடர்ச்சியாக இல்லாத ஒன்றை ஊதிப்பெரிதாக்குவதும் வாசகனை நம்பவைப்பதும் அதைவிடக் குற்றம்.
கவர் வாங்கிச் செய்தி போடுவது மட்டும் குற்றமல்ல.தொடர்ச்சியாக இல்லாத ஒன்றை ஊதிப்பெரிதாக்குவதும் வாசகனை நம்பவைப்பதும் அதைவிடக் குற்றம்.
நாம் சொல்வதெல்லாம் ஒன்றுதான் உங்கள் விருப்பு வெறுப்புகளை காசு கொடுத்துப் படிக்கும் வாசகனின் மீது திணிக்காதீர்கள்.
தமிழ்நாட்டை யார் ஆள்வது என்று தீர்மானிப்பது மக்கள். சட்டமன்ற உறுப்பினர்களாக
வெற்றிபெற்ற 118 பேர் ஆதரவு பெற்ற ஒருவர்
தான் தமிழ்நாட்டு முதல்வராக வர முடியும்.
அதைவிடுத்து தமிழ்நாட்டு அன்னா ஹசாரே தமிழருவி மணியன் ஜுவியில் கட்டுரை எழுதி
விட்டார் என்பதற்காகவோ,ஜூ.வி.ஆசிரியர்
குழுவின் நப்பாசைக்காகவோ வைகோ வை யாரும் முதல்வராக்க மாட்டார்கள்.
வேண்டுமானால் விகடன் முதலாளி சீனிவாசன் தனது ஜெமினி பிக்சர்ஸ் தயாரிப்பில்
வைகோவை முதல்வர் வேடத்தில் நடிக்க வைத்து படம் தயாரிக்கலாம்.(சீனிவாசனின் அபிமான
சன்.டிவி இந்தப் படத்தை டாப் 10 இல் கடைசி இடத்தில் தான் வைக்கும் என்பது தனித்
தகவல்)
இனி ஜூ.வி.யின் அடுத்த எபிசோடுக்காய் காத்திருப்போம்....!
19 comments:
அபத்தங்களின் ஒட்டுமொத்த உருவமாய் ஒரு கட்டுரை
மிகச்சிறந்த ஆய்வு.
ஜூ.வி. இவ்வாறு எழுதுவதன் பின்னணி என்ன என்று ஆராய்ந்தால் இன்னும் நன்று.
மிகச்சிறந்த ஆய்வு.
ஜூ.வி. இவ்வாறு எழுதுவதன் பின்னணி என்ன என்று ஆராய்ந்தால் இன்னும் நன்று.
//இவ்வளவு ஏன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வைகோவுக்கும் அவரது ம.தி.மு.க.,கட்சிக்கும் அதிகபட்சம் 10 தொகுதிகள் அளிக்கக் கூட ஜெயலலிதா தயாராக இல்லை.இதுதான் அவரது செல்வாக்கின் உண்மை முகம்.//ஜூ.வி.யில் என்ன எழுதினாலும் வைகோவை அந்த அளவுக்கு மேகல் உயர்த்த முடியாது என்பது தான் உண்மை.புரிஞ்சாச் சரி..
தமிழ்நாட்டு அன்னா ஹசாரே தமிழருவி//இதை விட அவரைச் சரியாச் சொல்ல முடியாது.
அபத்தங்களின் ஒட்டுமொத்த உருவமாய் ஒரு கட்டுரை
மிகச் சிறந்த பதிவு..எங்களின் மன ஓட்டம் உங்கள் கட்டுரையில் ஓடையாய் செல்கிறது....வாழ்த்துக்கள்
குல்தீப் நய்யார் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் "என் சாய்ஸ் தமிழகத்தின் மூன்றாம் நபருக்கு. அதனை தேசிய அரசியல் அறிந்த வைகோ போன்றவர்கள் முன்னெடுக்கலாம்" என்று சொன்னதை "வைகோ தான் எனது சாய்ஸ்" என்று திரித்து அட்டைப் படத்தில் வெளியிட்டார்கள். "அவரைப் போன்றவர்கள்" என்பதற்கும் "அவர்தான்" என்பதற்கும் உள்ள வேறுபாட்டை கவனமாக மறைத்துவிட்டார்கள்.
http://arulgreen.blogspot.com/
26.9.2012 ஜூனியர் விகடனில் கீழே உள்ள கருத்தைச் சொன்னவ்ர் தமிழருவி மணியன்
"தமிழகத்தில் 4.59 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் சரிபாதி பெண்கள். ஆண்கள் வாக்குகள் கட்சி சார்ந்து பிரியக்கூடியவை. பெண்கள் ஒரே உணர்வுடன் வாக்களிக்கும் வழக்கம் உள்ளவர்கள். மதுக் கடைகளை மூடினால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட பெண் வாக்காளர்கள் ஒரு தேவதைக்கு வாக்களிக்கும் மகிழ்ச்சியுடன் உங்களுக்கு வாக்களிப்பார்கள்.
...தமிழகத்துப் பெண் மக்கள் அனைவரும் பைரனைப் போல் உங்கள் ஆட்சியை ஆயிரம் குறைகளையும் மீறி நேசிக்கத் தொடங்கி விடுவார்கள். நீங்களும் சூளுரைத்தபடி தகுதிமிக்க தமிழுலகின் இசை மேதைகள் விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருதை எளிதில் பெற்றுத் தரும் அளவுக்குத் தேசிய அரசியலில் செல்வாக்கு செலுத்தும் அசைக்க முடியாத ஆளுமையாக உயர்ந்து விடுவீர்கள்." என்று ஜெயலலிதாவைப் புகழ்கிறார். (தமிழக முதல்வருக்கு தமிழருவி மணியன் மடல்!)
இதையே, ஜூனியர் விகடன் நாடாளுமன்ற தேர்தலில் "ஜெ'வுடன் வைகோ இருப்பார்" என்கிறது.
ஆனால், 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு எதிர்ப்பு அலை இருக்கலாம் என்பதால் - வைகோ சட்டமன்ற தேர்தலில் முன்னிறுத்தப்பட வேண்டும் என்று தமிழருவி மணியன் பேசுகிறார். அதனை ஜூ.வி மகிழ்ச்சியாக வெளியிடுகிறது:
16.9.2012 ஜூனியர் விகடனில் கீழே உள்ள கருத்தைச் சொன்னவரும் தமிழருவி மணியன்தான்.
''வைகோவை அதிகாரத்தில் உட்கார வைக்க, அரசியல் களத்தில் பலரை அப்புறப்படுத்த வேண்டும். முதலாவது, கலைஞர் கருணாநிதி. ஈழத்துக்குச் செய்த துரோகத்தால் அவரை மக்கள் புறக்கணித்து விட்டனர். ஜெயலலிதாவை வீழ்த்துவதற்கு யாரும் கஷ்டப்படத் தேவையே இல்லை. செய்யக்கூடாததைச் செய்து அவரே ஓய்வு பெறுவார்." (ஜெயலலிதா அவராகவே ஓய்வு பெறுவார்!)
பத்தே நாட்கள் இடைவெளியில், "ஜெயலலிதா தேசிய அரசியலில் செல்வாக்கு செலுத்தும் அசைக்க முடியாத ஆளுமையாக உயர்ந்து விடுவார்" என்று புகழ்ந்தும், "ஜெயலலிதா செய்யக்கூடாததைச் செய்து அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார்" என்று இகழ்ந்தும் தமிழருவி மணியனால் இரட்டை நாக்குடன் பேசமுடிகிறது. அதனை ஜூனியர் விகடனும் வெளியிடுகிறது.
http://arulgreen.blogspot.com/
விகடன் நிறுவனத்திலிருந்து புதிதாக வந்திருக்கும் "டைம் பாஸ்" பத்திரிகையின் முதல் இதழிலேயே 2 பக்கத்திற்கு வைகோவின் குளியல் காட்சி வெளியாகி உள்ளது. ஏனிந்த வெட்கக்கேடு? விகடன் திருந்துமா?
vikatan nirubaraga iruntha thevarajan enru oruvar vaikoviru ethiraga nellai tmk lakshmanan enpavaridam petti eduthu katturai veliyittar. athanpin avarai vaiko oru ethiriyagave parthar. madurai press meettil pala reporter munnilaiyil jooviyil enakku ethiraga eluthum ore nabar thevarajanthan enru pagirangamaga sonnavar than vaiko. appruam enna acho theriyavali thevarajan juuviyil illai.naanum anatha press meetil irunthen.
ஜுவி மீதான கோபத்தை விட வைகோ மீதான தனிப்பட்ட கோபமே இந்த கட்டுரை என்பது பல கட்டங்களில் தெளிவாகின்றது ........
இன்று அடித்தட்டு மக்களின் பல போராட்டங்கள் வைகோவால் தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளன ...
நல்லது செய்வோரை அபத்தங்களால் கட்டுரை வரைவது சகஜம் தானே ....
களங்கக் குரலே!
அரசியலில் நேர்மை:
தமிழக அரசியலில் மட்டுமல்ல இந்திய அரசியலில் கூட்டணி சேராத கட்சிகள் எதுவுமில்லை. ஒன்று கூட இல்லை.
ம.தி.மு.க. வும் தனியாகத் தேர்தலைச் சந்தித்திருக்கிறது. கூட்டணியாகவும் தேர்தலைச் சந்தித்திருக்கிறது. மக்கள் நலனுக்காக தேர்தலைப் புறக்கணிக்கவும் செய்திருக்கிறது.
ஆனால் எந்தக் கூட்டணியில் இருந்த போதும் கொள்கையில் சமரசம் செய்து கொண்டதில்லை.. ம.தி.மு.க. போல அரசியலில் நேர்மையான இயக்கம் எதுவுமில்லை.
பொதுவாழவில் தூய்மை:
நான்ன்ன்ன்ன்ன்ன்கு லட்சம் ரூபாய் லஞ்சம்/ ஊழல்.. எந்த நாட்டில் இருக்கிறீர்கள் களங்கக் குரல் அவர்களே..
176000 கோடி அலைவரிசை ஊழல்.. 186000 கோடி நிலக்கரி ஊழல்..
20000 கோடி கிரானைட் ஊழல்.. ஆகியவற்றில் தி.மு.க.வுக்கு நேரடித் தொடர்பு. இந்த கொள்ளைக் கும்பல் இன்னும் வெள்ளையும் சுள்ளையுமாகத்தான் திரிகிறது.
அ.தி.மு.க பிற கட்சிகளின் ஊழல் இன்னும் நீதி மன்றங்களிலும் விசாரணையிலும் இருக்கிறது..
ம.தி.மு.க. வில் நீங்கள் கூறியபடி 4 லட்சம் ரூ. லஞ்ச ஊழல் குற்றம் சாட்டப்பட்ட அந்த உதவியாளருக்கு தரப்பட்ட தண்டனை என்ன தெரியுமா? கட்சியின் துணைப்பொதுச் செயலாளராக இருந்தாலும் தன் உதவியாளரைக் கண்காணிக்கத் தவறிய செஞ்சி ராமச்சந்திரன் கட்டம் கட்டப் பட்ட கதையெல்லாம் வசதியாக மறைக்கிறீர்கள். இதுவே பின்னாளில் செஞ்சி ம.தி.மு.க வை விட்டு விலகி கொள்ளையர் கூடாரமான தி.மு.க.தான் சரியானது என ஓட வழி செய்தது. நாலு லட்சம் ரூ. லஞ்ச ஊழல் புகாருக்கே ஒரு அமைச்சரின் அரசியல் எதிர்காலமே அழிக்கப் பட்டது.
பொதுவாழ்வில் ம.தி.மு.க போல தூய்மையான இயக்கம் எதுவுமில்லை..
லட்சியத்தில் உறுதி:
அடுக்கடுக்கான சோதனைகள் வந்தபோதும், தளராது, தயங்காது கடந்த 19 ஆண்டுகளாக மக்கள் நலனை முன்னிருத்தி வைகோவும் தொண்டர்களும் போராடி வருகின்றனர். தங்கள் வசதிக்கும் மீறிய செலவுகளைச் செய்து, உழைப்பில் பெரும்பங்கை கட்சிக்கும், மக்கள் போராட்டங்களிலும் செலவு செய்து மகத்தான மக்கள் பணியை செவ்வனே செய்து வருகின்ற ஒரே கட்சி ம.தி.மு.க. மட்டுமே.
வைகோ மீது வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்கிற முறையிலேதான், அளவுகடந்த காழ்ப்புணர்ச்சியுடன் எழுதப்பட்ட களங்கக் குரல் கட்டுரையிலேயே பொய்க் குற்றம் சாட்ட முடிகிறது.
தமிழக அரசியலில் வைகோதான் வழிகாட்டியாகவும் கலங்கரை விளக்கமாகவும் இருக்கிறார். அவர் என்ன சொன்னாலும் செய்தாலும் அதில் மக்கள் நலன் இருக்கும்.
தி.மு.க.வை அழிக்க வேண்டும், அ.தி.மு.கவை அழிக்க வேண்டுமென்பதல்ல லட்சியம்.
மக்கள் நலனைக் காப்பதே லட்சியம்.
ம.தி.மு.க போல லட்சியத்தில் உறுதியாக இருக்கும் கட்சி வேறு எதுவுமில்லை..
ஜூவி உள்ளிட்ட தமிழ் ஊடகங்கள் இப்பொது ஏன் வைகோ குறித்து அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதுவது போல உங்களுக்குத் தெரிகிறது?
நீங்கள் பத்திரிக்கைத் துறையில் பணிபுரிவதாகச் சொல்கிறீர்கள். உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
தி.மு.க. ஆட்சியில் ஏறக்குறைய அனைத்துப் பத்திரிக்கைகளும் தணிக்கை செய்யப்பட்டே வெளிவந்தன. தி.மு.க தலைவர் கருணாநிதி எல்லா பத்திரிக்கைகளையும் படிக்கக் கூடியவர். தினமும் செய்திகளைப் படிக்கும் அவர் எங்கேயாவது வைகோ குறித்த செய்திகளையோ, மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களையோ எதேனும் பத்திரிக்கைகள் வெளியிட்டிருப்பதைப் பார்த்துவிட்டால் நேரடியாக பத்திரிக்கை அதிபருக்கு தொலைபேசியில் பேசி “ என்னய்யா அவனோட செய்தியெல்லாம் போட்டு அவனை வளர்த்து விடப் பார்ர்கிறீர்களா? நான் உங்கள் பத்திரிக்கைக்கு அது செய்கிறேன், இது செய்கிறேன், மாதம் இவ்வளவு விளம்பர வியாபாரம் தருகிறேன் அப்படியிருந்தும் எனக்கெதிராக அவன் போராட்டம் நடத்துவதை செய்தி போடுகிறீர்களா?” என அன்பாக மிரட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தார். செய்தி மக்கள் தொடர்பு அமைச்சர் பரிதிக்கும் இதே வேலைதான்.
பத்திரிக்கை அதிபர்களும் இதென்னடா தொல்லை என நினைத்து வைகோ குறித்த செய்திகளை தவிர்த்து வந்தனர்.
ஜெ. ஆட்சியில் அவர் உட்பட அதிகாரத்திலிருப்பவர் யாரும் செய்தி படிப்பதில்லை.. செய்தி மக்கள் தொடர்பு அமைச்சர் மூன்று மாதத்திற்கொருமுறை மாற்றப் பட்டு வருகின்றனர். செந்தமிழன் இருந்தார் இப்ப யாருன்னே தெரியலே..
ஜெ. வைப் பத்தி அவதூறு செய்தி போட்டாலே அதை ரொம்ப லேட்டா படிச்சுட்டு எதாவது கோர்ட்டுல கேசு போடுறாங்க..
அதனால செய்தி நிறுவனங்கள் கொஞ்சம் சுதந்திரமா செய்தி வெளியிடுற மாதிரியிருக்கு.. அது உங்களுக்கு பொறுக்கலை.. வந்து களங்கக் குரல் கொடுக்க வந்துட்டீக..
விகடனில் வேலை பார்க்கும் இரா.சரவணனைப் பற்றி கலகக்குரல் இதுவரை கண்டு கொள்ளாதது ஏன்?
வைகோவின் மக்களுக்கு ஆதரவான போராட்டத்தால் உன்னை போன்ற நாய்களுக்கு சில பாதிப்புகளின் வெளிப்பாடே இந்த களககுரலின் கட்டுரை வரைவதற்கு காரணம் என்று நினைக்கிறன்...கருணாவை மஞ்சள் பத்திரிகையான நக்கீரன் ஆதரிபதிலும்,ஜெயாவை தினமலம் போன்றவை ஆதரிபதிலும் உன்னை போன்ற நாதரிகளுக்கு சரி,ஆனால் வைகோவை ஜுவி உயர்த்தி பிடிப்பதில் உனக்கு ஏன் அவ்வளவு வைதெரிச்சல்????கருணாவை வீரமணி,சுப.வீ போன்றோர் உயர்த்தி போசுவது சரியாக படும் உனக்கு,மணியன் அவர்கள் வைகோவை உயர்த்தி பிடிப்பதில் உனக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு????மணியன் அப்படி என்ன கூறினார்:ஜெயா செய்யும் மக்கள் விரோத நடவடிக்கைகள் காரணமாக அவரே அவருக்கு குழி தோண்டிகொள்வார் என்றும் அதே நேரத்தில் மதுவிலக்கு கொண்டு வந்தால் பெரும்பான்மை மகளிரின் ஆதரவு ஜெயாவுக்கு கிடைக்கும் என்று கூறி இருக்கிறார்!!இதில் என்ன தவறை நீ கண்டாய்????நீ இதை தவறு என்று கூறினாலும் மதுவிலக்கு வந்தால் அது நிச்சயம்!!!உனக்கு எல்லாம் ஒரு கம்ப்யூட்டரும் இணைய வசதியும் கிடைத்தால் என்ன வேண்டும் என்றாலும் எழுதுவாயா????இதில் இவரு முன்பு பத்திரிக்கை துறையில் வேறு வேலை செய்தானாம்!உன்னை போன்று பத்திரிகை துறையில் இருபதனால் தான் இன்று பத்திரிக்கை துறை சீரழிந்து விட்டது!!
பொதிகைச்செல்வன் கருத்துகளை படிக்கும் போது சிரிப்பு தான் வருகிறது. அதிமுக கூட்டணி வைத்தபோது, ஜெயலலிதா ம.தி.மு.க அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அங்கே எழுதப்பட்டிருந்த, " அரசியலில் நேர்மை-பொது வாழ்வில் தூய்மை- லட்சியத்தில் உறுதி" என்ற வாசகங்களை அவசர,அவசரமாக அழித்தவர் வைகோ. ஏன் தெரியுமா? ஊழல் வழக்கில் சிக்கிய ஜெயலலிதா அதைப்பார்த்து கோபப்படக்கூடாது என்பதற்காக.. அப்படிப்பட்டவரை போய் , நேர்மை, தூய்மைன்னு சொல்லிக்கிட்டு... போய் ஆகுற வேலைய பாருங்கப்பா...
வைகோ பிரபாகரனை வேண்டுமானாலும் பகைத்துக் கொள்வார்.ஆனால் ஊடக முதலாளிகளை மட்டும் பகைக்க மாட்டார்.//ஆம் இது அப்பட்டமான உண்மை. தமிழனா?ராஜபக்ஷெவா என்றால் தமிழன் பக்கம் நிற்பார்.தமிழனா,சினிமாக் காரனா என்று பார்த்தால் தமிழன் பக்கம் நிற்பார்.தமிழனா ஊடக முதலாளியா என்று பார்த்தால் வைகோ பாதிக்கப்பட்ட தமிழன் பக்கம் நிற்க மாட்டார்.தினமும் 4 பத்தி செய்தி போடும் ஊடக முதலாளி பக்கம் தான் நிற்பார்.ஏனென்றால் அவரது அரசியலின் ஆணி வேரே தினமும் திரையிலும் எழுத்திலும் வருவதில் தான் நிற்கிறது.மிகச்சரி மிகச்சரி.
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சகோதர நிறுவனம் கொழும்பில் தொழில் துவங்கியதைக் கண்டித்து ஒரு அறிக்கையும் வைகோ வெளியிடவில்லை.//இவர் மட்டுமல்ல சீமான்,நமே 17 இயக்கம் திருமுருகன் ஆகியோரும் இந்த வகையறாக்கள் தான்.பாவம் ஈழத் தமிழன்.
find some one to replace jj...and karuna.....no matter who shud be...and who wud be!don't go after the small party leaders such as vaiko...thirumaa...ramadhas...etc.our goal is to bring down those jj and mk.
Post a Comment