Tuesday, 16 October 2012

ரியல் எஸ்டேட் புரோக்கர் பத்திரிகையாளர் சங்கத் தலைவராக பதவியேற்பு..!

சதுர அடி என்ன விலை சார்.?லிட்டிகேஷன் இருக்கா..?


தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்(TUJ) நிரந்தரத் தலைவர் ரவீந்திரதாஸ்.

இவரைப்பற்றியும் இவரது செயல்பாடுகள்,பின்னணி பற்றியும் நாம் ஏற்கனவே ஒரு பதிவினை எழுதியுள்ளோம்.இவரைப் பற்றி இன்னும் நிறைய எழுதலாம் தான்.ஆனால் மரணமடைந்த ஒருவரைப் பற்றி எழுதுவது நாகரீகம் ஆகாது என்னும் பொது நியதிப்படி,மரணமடைந்த இவர் குறித்து எழுதுவதை நாமும் தவிர்க்கிறோம்.

நாம் இந்தபதிவில் பார்ப்பது இவர் குறித்தல்ல.இவரது அமைப்பின் புதிய தலைவர் குறித்து.

இவரது அமைப்பில் இருந்தவர்கள் ஒருசிலரைத் தவிர பெரும்பாலானோர்கள் நாம்கேநிவாஸ் பத்திரிகையாளர்களும் புரோக்கர்களும் தான்.உழைக்கும் உண்மையான பத்திரிகையாளர்கள் இவரைக் கண்டால் காத தூரம் ஓடுவார்கள்.

கட்டப் பஞ்சாயத்து,வசூல் என்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தொழிற்சங்கம் அமோகமாக நடந்து கொண்டிருக்கையில் ரவீந்திரதாஸ் எதிர்பாராவிதமாக இறந்து விடுகிறார்.

இவர் இறந்தவுடன் அவரைப்போல் இந்த அமைப்பை வைத்து இதுவரை பிழைப்பு நடத்தி வந்தவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.தனி அமைப்பு நடத்தும் அளவுக்கு அவர்களிடம் ’திறமையும்’ இல்லை.ஆகவே அவர்களிடம் குயுக்தியான எண்ணம் உதிர்க்கிறது.

அது என்னவென்றால் ரவீந்திரதாஸ் அவர்களின் மகன் சுபாஷ் என்பவரையே தலைவராகத் தேர்ந்தெடுக்கும் திட்டம்.

தொழிற்சங்கத்திலுமா வாரிசு அரசியல் என்று நீங்கள் அதிகப்பிரசங்கித் தனமாக கேள்வி கேட்கக் கூடாது.

ஏனென்றால் ரவுடித்தனம்,கட்டப்பஞ்சாயத்து செய்து தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொண்ட எத்தனையோ நபர்களுக்கு கட்சி, சாதி,ரசிகர்மன்றம் போன்றவை முகமூடியாவது போல் இவர்களுக்கு பத்திரிகை யூனியன் முகமூடியாகி உள்ளது.தங்கள் தொழிலைச் செம்மையாகச் செய்ய பத்திரிகையாளர் வேடம் போடுகின்றனர்.

அதிலும் ரவீந்திரதாஸின் மகன் சுபாஷ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர்,அவருக்கும் பத்திரிகைத் துறைக்கும் துளியும் சம்பந்தம் கிடையாது.அவருக்குத் தெரிந்த பத்திரிகை எல்லாம் கல்யாணப் பத்திரிக்கையும் கருமாதிப் பத்திரிக்கையும் தான்.

சிலரது செயல் திட்டத்தின் படி சுபாஷ் புதிய தலைவராக ஆகஸ்டு இறுதியில் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் தலைமைப் பொறுப்புக்கு வந்தது பிடிக்காமல் சிலர் விலகி வேறு அமைப்புக்களில் சேர்ந்து விட்டனர்.சிலர் அவர்களே கூடி புதிய அமைப்பினைத் தோற்றுவித்து விட்டனர்.

ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுபாஷ் தனது பணியைத்(!) தொடங்கி விட்டார்.


வர் தலைவரானதன் பின்னணியில் வேறு ஒரு செய்தியும் பேசப்படுகிறது.அதாவது ரவீந்திரதாஸ் உயிருடன் இருக்கும் பொழுது 2004 ஆம் ஆண்டு கால கட்டத்தில் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் வீட்டு மனை வாங்கித் தருகிறேன் என்ற பெயரில் அனைவரிடமும் ஒரு வசூல் வேட்டையை நடத்தினார்.அப்பொழுதே வசூல் பல லட்சங்கள் தேறியது.அவ்வாறு தேறிய லட்சங்களில் சென்னை படப்பை அருகே சில கிரவுண்டு இடங்களை வாங்கிப் போட்டார்.(சங்கப் பெயரில் அல்ல தனது பெயரில்).

பணம் கொடுத்தவர்கள் சிலரைத் தவிர வேறு யாருக்கும் இடம் கிடைக்கவில்லை.சிலர் போராடிக் கொஞ்சம் பணத்தையும்,சிலர் போராடி ஓய்ந்தும்,சிலர் போராடி இடத்தையும் மீட்டார்கள்.

ஆனால் இன்னும் அவருக்குச் சொந்தமான கணிசமான இடம் அங்கு இருக்கிறது.2004 ஆம் ஆண்டு  லட்சக்கணக்கில் இருந்த மதிப்பு இப்பொழுது கோடிக்கணக்கில் செல்கிறது.கைவசம் இருக்கும் இடம் கோடிகளைத் தொடும் என்கிறார்கள்.

ரவீந்திரதாசின் உடன் இருப்போர் சிலர்  அதனைத் தக்க வைக்க தொடர்ந்து பிரயத்தனப்படுகிறார்கள்.அதன் விளைவு தான் தொடர்ச்சியாய் தலைவர் பதவியை வேறு யாருக்கும் அளிக்காமல் அவரது மகனுக்கே அளித்தது என்கிறார்கள்.ரியல் எஸ்டேட் பார்க்கும் ரவீந்திரதாஸ் மகனும் இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டாராம்.


சிங்க நடை போட்டு வரும் தலயாருங்க இந்த சமூக சேவகி..?
சால்வை,மாலை என கட்சிகளை மிஞ்சும் வரவேற்புகள்.


மாலையிடும் கே.ராஜன்.நீதியின் குரல் நடத்துவதெல்லாம் இருக்கட்டும்..யார் யார் பத்திரிகையாளருன்னு தெரிஞ்சுக்கங்க..!

பிரபல எழுத்தாளர்ன்னு உங்களை நீங்களே சொல்லிக்கிறீங்களே ..?
அது கிலோ கணக்குல மளிகைக்கடையில கிடைக்குதா பாஸ்.. பிரபல எழுத்தாளர் நீங்கன்னு ஒரு வாதத்துக்காய் வச்சுக்கிட்டாலும் எழுத்தாளர் சங்கத்திற்கு தானே தலைவர் ஆகணும்..?
மறைந்த ரவீந்திரதாஸ்

தந்தையின் புகைப்படத்தை வணங்கி தொழிலை ஆரம்பிக்கும் தனயன்.


பதவியேற்பு நிகழ்ச்சியில் சி.எம்.கே.ரெட்டி கலந்து கொண்டார் என்று செய்தி அறிக்கையும் வெளியிட்டிருக்கிறார்கள்.அவர் கலந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது.

ஆனாலும் நம்முன் சில கேள்விகள் எழுகின்றன.
பத்திரிகையாளர் உரிமைக்காய் போராடுவதாய் சொல்லும் சங்கத்திற்கும் மக்களின் அறியாமையை பீதிக்குள்ளாக்கி கொள்ளையடித்து மருத்துவமனை நடத்துபவருக்கும் என்ன தொடர்பு..?
இல்லை சி.எம்.கே.ரெட்டி பத்திரிகையாளர்கள் நலனில் அம்புட்டு ’அக்கறை’ உள்ளவரா..?
 கட்டிங் வாங்குவதற்காகவும்,இன்னபிற காரியங்களையும் தாண்டி அவரை அழைப்பதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா என்ன..?
இதை வைத்தே சங்கத்தையும் அதன் நோக்கத்தையும் அளவிட்டு விடலாம்.பதவியேற்ற ஒரு வாரம் கழித்துசங்கத்தின் புதிய தலைவர்சுபாஷ்மூத்த பத்திரிகையாளர் ஒருவரைச் சந்திக்க தனது பரிவாரங்களுடன் சென்றுள்ளார். மூத்த பத்திரிகையாளரும்விருப்பமில்லாமல் சந்தித்துள்ளார்.

உங்க அப்பாவாவது கொஞ்ச காலம் பேருக்காவது பத்திரிகையாளரா இருந்தார்.நீங்களோ பீல்டுக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாதவர்.நீங்க எப்படி தலைவர் ?என்றிருக்கிறார்.

அதுக்கு ரவீந்திரதாஸோ,அரசியலுக்கு சம்பந்தம் இல்லாத நேரு மகள் தலைவியா வரலாம்,ராஜீவ் மகன் தலைவராகலாம்.கருணாநிதி மகள் வரலாம்.ஆனா நான் மட்டும் வந்தாத் தப்பா?ஊருக்கு ஒரு நியாயம். எனக்கு ஒரு நியாயமா ? என்று சிரித்தபடி பதில் சொல்லியுள்ளார்.

அதைக்கேட்ட மூத்த பத்திரிகையாளர் மனம் வெதும்பி தனது நண்பரிடம் சொன்னது இது.

இவனெல்லாம் நல்லா வருவானப்பா..!


1 comment:

Anonymous said...

this is the worst scenario in journalism field. such type of associations, office bearers should be neglected in public space.