Monday, 4 June 2012

ஜூனியர் விகடன் –வெளக்கமாத்துக்குப் பேரு பட்டுக் குஞ்சமாம்...!
நல்லமாட்டுக்கு ஒரு சூடு...!

நல்ல மனிதனுக்கு ஒரு சொல்...!

இது பழமொழி..அந்தக் காலத்தில் படியாத மாட்டை படிய வைக்க கம்பியை காய்ச்சி சூடு போடும் வழக்கம்  இருந்தது. அப்படி சூடு போட்டால் அந்த மாடு சொந்தக்காரனின் வழிக்கு வந்து விடும்.அது போல நல்ல மனிதர்கள் ஏதாவது தவறு செய்தால்அவர்களை கடுமையான ஒரு சொல் சொன்னாலே அவர்கள் நல் வழிக்கு திரும்பி,திருந்தி விடுவார்கள்.இதனால் தான் நல்ல மனிதனுக்கு ஒரு சொல் என்று வழக்கு இருந்தது.

ஆனால் ஜூவிக்கு ஒரு சொல் போதாது போலும்.ஏனென்றால் தமிழ் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு குறித்தும் விஜயலட்சுமி என்ற பெண்மணி குறித்தும் ஆதாரமற்று எழுதித் தள்ளிக் கொண்டிருந்தார்கள்.நாம் அதனை வரிக்கு வரி ஆதாரப்பூர்வமாய் விமர்சித்து நமது தளத்தில் ஜூவியின் திட்டமிட்ட வன்மத்தை அவதூறை எழுதினோம்.
http://kalakakkural.blogspot.in/2012/05/2.html மேலும் ஜூவியில் தியாகுவை ஒரு நேர்காணல் செய்தும் வெளியிட்டிருந்தார்கள்.அதில் விளக்கம் சொல்லியிருந்தார்.அதன் பின்னராவது ஜூ.வி. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்  என்று நம்பினோம்.

ஆனால் ஜூ.வி. திருந்துவதாக இல்லை.நேர்காணல் வெளியிட்ட பின்பு இந்த நடப்பு இதழில்(6-06-2012 தேதியிட்ட) அப்பா-மகள் உறவைக் கொச்சைப்படுத்தும் தியாகு என்ற தலைப்பில் அடுத்து ஒரு இரு பக்கக் கட்டுரையை வெளியிட்டுள்ளது.இதனைப் பார்த்த பின்பு ஜூவிக்கு ஒரு சொல்லோ சூடோ போதாது என்று நன்கு உணர்ந்து கொண்டோம்.

அந்தக் செய்திப் பதிவு இது தான்.
இந்த இதழில் வெளியிட்ட செய்தியைப் பற்றிப் பார்ப்போம்.முழுக்க முழுக்க தாமரையின் பக்கம் நின்று அவர் சொன்ன செய்தியை வைத்து மீண்டும் 2 பக்கங்களை நிரப்பியது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.


1)தியாகு அமைப்பின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கதிர் நிலவன் என்பவர்  தியாகுவின் மீது குற்றச்சாட்டு முதல் இரண்டு பத்தி வருகிறது.

2)அடுத்த பத்தி கவிஞர் தாமரை இப்பொழுது முதல் முறையாய் வாய் பகிரங்கமாய் திறந்துள்ளாராம்.(நாட்டுக்கு ரொம்ப அவசியம்..)அவர் கருத்து ஒரு பத்தி கொஞ்சம் சமாதானம் போலப் பேசினாலும்,அடுத்த பத்தியில் நிறைய முரண்பாடுகள் இருக்கிறது.

3)அதற்கடுத்த பத்தியைக் கவனியுங்கள்.தாமரைக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசினோம்.//தாமரையோ இயக்கத்தில் இருக்கும் தோழர்களோ ஆதாரம் இல்லாமல் பேச மாட்டார்கள்.//இதைச் சொல்வது யார்..? வேறு யார்..?அவர்களே சொல்லிக் கொள்கிறார்கள்.எழுதியது உதவிப் பொறுப்பாசிரியர் ராஜா திருவேங்கடம்.தாமரையின் சுய தம்பட்டம் படிக்க ஜூவியை இளிச்சவாய வாசகன் காசு கொடுத்து வாங்க வேண்டியதிருக்கிறது.

இயக்கத்தில் இல்லாத தாமரையும்,இயக்கத் தோழர்களும் பொய் பேச மாட்டார்களாம்..ஆனால் இவ்வளவு நாள் இவர்களின் இயக்கத் தலைவராய் இருந்தவரும்,தாமரையுடன் இவ்வளவு நாள் வாழ்ந்த தியாகுவும் பொய் சொல்வாராம்.என்னடா உங்கள் லாஜிக்..?

அது சரி ஜூவி உதவிப் பருப்பாசிரியர் ஏன் தியாகுவின் நெருக்கமான வட்டாரத்தில் பேசவில்லை..? அல்லது தாமரை குறித்து திரைப்பட வட்டாரங்களில் பேசவில்லை...?என்ன ரேட்டுப்பா உங்க இதழியல் தர்மம்...(கவர் வாங்குறது மட்டும் தான் குற்றம்.மற்றதெல்லாம் தப்புல அடங்காதுங்க சார்..பெரிய பட்டியல் இருக்குது)

4)இறுதிப் பகுதியைக் கவனியுங்கள் ஜூவியின் முடிவுறாத வன்மம் புரியும்.

தியாகுவின் மகளும் வழக்குரைஞருமான சுதா காந்தி குறித்து எழுதப் பட்டுள்ளது.சுதா காந்தி சென்னை உயர் நீதிமன்றத்திலும் நிறைய கீழமை நீதிமன்றங்களிலும் வழக்குரைஞராகப் பணிபுரிகிறார் என்று அறிகிறோம்.

நம் கேள்வி இது தான்.வழக்குரைஞர் சுதா காந்தி ஒருவரைக் காதலிக்கிறார்,அந்தச் செய்தி உண்மை என்றே வாதத்திற்காய் வைத்துக் கொள்வோம்.

யாரைக் காதலிக்க வேண்டும்,யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது அவரது தனிப்பட்ட முடிவு.இதில் ஜூவி க்கு என்ன வேலை...?வழக்குரைஞருக்கு முடிவெடுக்கத் தெரியாதா..?

அதில் எதும் சிக்கலோ,பிரச்சனையோ ஏற்பட்டால் அதனைத் தீர்த்து வைக்க அவரது தாய் தந்தை இருக்கிறார்கள். ஒருவரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது..?

வழக்குரைஞர் சுதாகாந்தியின் காதலையும் பிரச்சனையையும் ஜூ.வி. தனது இந்தச் செய்திப் பதிவில் வாசகனுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று என்ன  அவசியம்..?

இது தான் புலனாய்வு புடுங்கிகளின் வேலையா..?அருவருப்பாக இல்லையா உங்களுக்கு..?

நாட்டில் எத்தனை அரசியல் குடும்பங்கள் இருக்கிறது..?அவர்களின் வீட்டில் நடப்பதை எல்லாம் இப்படி பெயர் போட்டு எழுத ஜூ.வி.க்குத் துப்பு இருக்கிறதா..?

ஒரு சாதாரண வக்கீல் நோட்டீஸ் அனுப்பினாலே பயந்து போய் ஒன்னுக்கிருந்து அடுத்த இதழில் ஜூவி மன்னிப்பு வெளியிடுவதை உலகம் அறியும்..

ஆனால் ஜூவி தொடர்ச்சியாக தியாகு,அவரது மகள்,விஜயலட்சுமி என்ற பெண்மணி எனத் திட்டமிட்டு வன்மத்துடன் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது.


தியாகு தலைமையேற்றுள்ள அமைப்பில் எத்தனை நபர்கள் இருப்பார்கள் என்று நினைக்கின்றீர்கள்..?.அது ஒரு மிக மிகச் சிறிய அமைப்பு.தேர்தலில் அந்த அமைப்பு போட்டியிடுவது இல்லை.அந்த அமைப்பில் பணியாற்றுபவர்கள் என்று எடுத்துக் கொண்டால் அதிகபட்சம் 20 நபர்கள் இருப்பதே அதிகம்.பொதுச் செயலாளர் தியாகுவைத் தாண்டி அந்த அமைப்பில் உள்ளவர்கள் யாரையும் ஜூ.வி. வாசகனுக்குத் தெரியாது.அவர் நடத்தும் அமைப்பின் பெயர் கூட ஜூ.வி. வாசகனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பும் இல்லை.ஆனால் அந்த அமைப்பு குறித்துத் தான் லட்சக்கணக்கில்(இப்ப சர்க்குலேஷன் குறைஞ்சிடுச்சு.1-3/4 லட்சம் தான் போகுதாம்..) விற்கும் இதழில் கடந்த மூன்று வாரங்களில் இதுவரை 9-1/2 பக்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏன்..?எதற்கு..? இவ்வாறு தியாகு மீது ஜூ.வி. வன்மத்துடன் கடித்துக் குதறுவதற்கு என்ன அவசியம்..?

இது ஹை-லெவல் பெய்டு மேட்டரா..?இல்லை தாமரை சார்பில் பஞ்சாயத்து பேசும் ஒரு அரசியல் கட்சிப் பொதுச் செயலாளர்(ஜூ.வி.யில் இவரது ஆதிக்கம் மிக அதிகம்.இவர் நினைத்தால் தான் இருமியதைக் கூடச் செய்தியாக்க முடியும்.) ஆசைப்படி இந்தச் செய்தி வெளியிடப்படுகிறதா..?அல்லது தாமரையின் நண்பர்கள் யாரும் ஜூவியில் இருந்து கொண்டு செய்தியைத் திட்டமிட்டு உருவாக்குகிறார்களா..?அல்லது தியாகு காணவில்லை என்று முதலில் வெளியிட்ட தவறான ஒரு பக்கச் செய்தியை நியாயப்படுத்துவதற்காகத் தொடர்ச்சியாய் எதிர்ச் செய்தியாய் வெளியிட்டு தங்கள் தவறினை நியாயப்படுத்த முயல்கிறதா ஜூ.வி..?

இந்த விஷயத்தில் நடப்பது எதுவும் சற்று புரிபடாமல் தான் இருக்கிறது.எதுவாக இருப்பினும் ஜூ.வி.க்கு நாம் சொல்ல ஒன்று இருக்கிறது.

இப்படி விஜயலட்சுமி,தியாகு,சுதா காந்தி போன்றவர்கள் குறித்து அந்த வட்டாரத்தில் பேசினோம்,இந்த வட்டாரத்தில் பேசினோம் என்று அலுவலகத்தில் அமர்ந்து கோடம்பாக்கம் கவிஞர் வீட்டிற்கு தொலைபேசியில் பேசி திட்டமிட்டு அவதூறினைச் செய்தியாக உருமாற்றி வெளியிடுவதற்குப் பதில் இன்னொன்று செய்யலாம்.

ஜுவியில் முதலாளியில் இருந்து கடைக்கோடி நிருபர் வரை அனைவரின் தனிப்பட்ட அந்தரங்க விஷயங்களை எழுதலாம்.சீரியல் நடிகை,ஈசிஆர் ரிசார்ட்,அந்தமான் கும்மாளம்,அலுவலகத்திலேயே அடி வாங்கியது என கிளுகிளுப்பு,சுவாரசியம்,ஏமாற்றம் கலந்து எழுத எழுத பக்கங்கள் காணாது,கன்னித் தீவு கதை போல இடையறாது வெளிவந்து கொண்டிருக்கும்.விற்பனையும் அதிகரிக்கும்.பக்கங்களையும் கஷ்டப்படாமல் நிரப்பலாம்.

செய்யுமா ஜூ.வி..?தமிழ் மக்களின் நாடித் துடிப்பாம்.வெளக்கமாத்துக்குப் பேரு பட்டுக் குஞ்சமாம்...த்தூ......6 comments:

Anonymous said...

இங்கே இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும்.இந்த ஜு.வி.,ஆனந்த விகடன் விளக்கெண்ணெய்கள்,விகடனின் மற்ற சகோதர இதழ்களில் பணி புரிபவர்களை எளக்காரமாக பார்த்துக்கிட்டு தங்களுக்கு மட்டும் கொம்பு முளைச்ச மாதிரிதான் திரிவாய்ங்க.

Anonymous said...

அது சரி ஜூவி உதவிப் பருப்பாசிரியர் ஏன் தியாகுவின் நெருக்கமான வட்டாரத்தில் பேசவில்லை..? //அது தானே..?பத்திரிகையாளன் என்பவன் நடுநிலையாய் இருக்க வேண்டும்.இரு தரப்பாரிடமும் விசாரிக்க வேண்டும்.தாமரை தரப்பில் விசாரித்த நிருபர் தியாகு தரப்பில் ஏன் விசாரிக்க வில்லை..?என்னப்பா இப்படி சந்தி சிரிக்கிற மாதிரி விகடன்ல ஒர்க் பண்றீப்க்க..?

Anonymous said...

தாமரை சார்பில் பஞ்சாயத்து பேசும் ஒரு அரசியல் கட்சிப் பொதுச் செயலாளர்//யார் அது..?மைகோ..?தெளிவாச் சொல்லுங்க...

Anand said...

ஜூவி, நடுநிலை என்ற போர்வையில் வரும் போலிகளில் ஒன்று.

வேலு விநாயகம் said...

இனி தாமரை, தியாகு மேட்டர்களை எழுதுவதில்லை என ராஜா திருவேங்கடம் முடிவெடுத்துவிட்டாராம். சேலத்திலும் சென்னையிலும் அவர் அடிக்கும் லூட்டிகள் வெளியே வந்துவிடும் என்கிற பயத்தில் நண்பர்கள் அனைவரிடம் புலம்பி அழுகிறார். இதுவே நம் கலகக்குரலுக்கு கிடைத்த வெற்றி. அடுத்தவர்களின் கட்டுரைகளில் பெயரை போட்டுக் கொள்ள மாட்டேன் எனவும் சத்தியம் செய்கிறானாம். உங்களின் தயவில் விகடன் நிருபர்கள் அனைவருமே நிம்மதி காண்கிறார்கள். ஜால்ரா தலையனின் அட்டூலியங்களை அடக்கிய கலகக்குரலுக்கு நன்றி...............

VIJAYAN said...

சாரே, ராஜா திருவேங்கடம் எனும் சப்பைபயலை பற்றி இனி எழுதாதீர்கள். எழுதினால் கலககுரலுக்கு தான் கேவலம். நீங்கள் நினைக்கிற அ ளவுக்கு அவன் பெரிய ஆள இல்லை. திலீபன் என்கிற சின்னப் பையனை கூட போட்டியாக நினைத்து அவன் வேலையை காலி செஞ்ச‌வன். போட்டுக் கொடுப்பது மட்டுந்தான் அவனுக்கு தெரிந்த ஒரே வேலை. சென்னை ரிப்போட்டர் ஆனதுக்கு அப்புறமும் இந்த நாய் எதுக்கு சார் சேலம் மேட்டர்களில் தலையிடணும்... அம்மா, அப்பாவையெ அம்போன்னு விட்ட இவனெல்லாம் மனுசனே இல்லை...