Wednesday, 13 June 2012

தமிழக அரசியல்-”யோக்கியன் வர்றான்:சொம்பெடுத்து உள்ள வை”...!மேலே காணப்பட்டுள்ள கட்டுரை 13-06-2012 தேதியிட்ட தமிழக அரசியல் வாரமிருமுறை இதழில் வெளிவந்துள்ளது.கார்க்கோடன் என்பவர் எழுதியிருக்கிறார்.ஒவ்வொரு இதழிலும் கார்க்கோடன் இது போன்ற  கட்டுரைகளை கடந்த இரண்டு வருடங்களாக எழுதி வருகிறார் என்பது உபரிச் செய்தி.

இனி செய்திக்கு வருவோம்.

இது சிறப்பான கட்டுரை என்பதில் சந்தேகம் இல்லை.

நாட்டின் அதிகாரவர்க்கம்,அரசியல்வாதிகள் போன்றோர் செய்யும் முறைகேடுகளையும்,லஞ்சலாவண்யத்தையும்,அயோக்கியத்தனங்களையும் சாடியிருக்கிறது.சனநாயகத்தின் நான்காவது தூண் என்ற முறையில் தனது கடமையைச் சரியாகச் செய்ததற்காக தமிழக அரசியல் இதழைப் பாராட்டலாம்.

*இந்தக் கட்டுரையில் உள்ள அவதூறு என்று பார்த்தால் ஒன்று மட்டும் தான்.அது வட்டமிட்டுக் காண்பிக்கப் பட்டுள்ளது.

மதுகோடா ஜார்க்கண்ட் முதல்வராய் இருந்த பொழுது தான் கொள்ளையடித்த பணத்தில், தனக்குத் தொந்தரவு தரக்கூடாது என்பதற்காக மாவோயிஸ்டுகளுக்கு 30 சதவீதம் லஞ்சம் கொடுத்து விடுவாராம். இதுவரை மாவோயிஸ்டுகள் மீது யாருமே சொல்லாத குற்றச்சாட்டு இது.மதுகோடாவிற்கு பணம் வந்து சேர்த்த வழியே நாட்டைத் தாரை வார்த்ததினால் தானே..!

மதுகோடா கொள்ளையடித்ததில் மாவோயிஸ்டுகள் பங்கு வாங்கினார்கள் என்று கார்க்கோடன் சொல்வது உண்மை என்றால் டாடா,ஜிண்டால்,எஸ்ஸார் போன்ற பன்னாட்டு நிறுவனங்களிடமும் கமிஷன் வாங்கி விட்டு அவர்கள் கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதற்கு சம்மதித்து விடுவார்களே..!எதற்குத் தேவையில்லாமல் காட்டில் இருந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்..?

இது ஒன்றே கட்டுரை எழுதியவரின் அரசியல் அறிவையும் அவர் யார் என்பதையும் நமக்குத் தெளிவுபடுத்துகிறது.அது சரி இம்புட்டு நேர்மையும் நாட்டின் மீதும் அக்கறையும் உள்ள உத்தமபுத்திரன் கார்க்கோடன் யார் என்று கேட்கின்றீர்களா..?

அவர் வேறு யாருமில்லை.தமிழக அரசியலின் பதிப்பாளரும் அச்சிடுபவருமான திருவாளர் சுந்தர்ராமன் தான். அவர் தான் கார்க்கோடன் என்னும் புனைப்பெயரில் எழுதிக்குவித்து வருகிறார்.அதெல்லாம் இருக்கட்டும்.ஆள் எப்படி என்கின்றீர்களா..?

சுந்தர்ராமன் என்கிற கார்க்கோடன்
 கார்க்கோடன் என்கிற திரிசக்தி சுந்தர்ராமன் மீது மோசடியாக ஆவணங்களைக் கொடுத்து வங்கிப் பணத்தை மோசடி செய்தார் என்று ஒரு வழக்கு சென்னை மாநகரக் காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவில் ஏற்கனவே நிலுவையில் இருக்கிறது. 
அவர் மீது 10-11-2011 அன்று இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 406,419,420,465,468,471 r/w,மற்றும் 120 (B)ஆகிய பிரிவுகளின் கீழ் வங்கி மோசடிகளை விசாரிக்கும் மத்தியக் குற்றப்புலனாய்வு டீம் 12  வழக்குப் பதிவுசெய்து கைது செய்தது.

பிணையில் தான் அவர் வெளியில் நடமாடுகிறார்.அவரது குற்ற எண். 499/2011
 
இவரைப் பற்றி இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள நமது முந்தைய பதிவைப் படியுங்கள்.அப்புறம்..! வேற என்ன..!

தலைப்பை மீண்டும் ஒரு முறை படியுங்கள்.

1 comment:

Anonymous said...

சுந்தர்ராமனுக்கும் இந்தோனேசியாவில் நிலக்கரி சுரங்கம் உண்டே. யாருடைய பினாமியாக அந்த சுரங்கத்தை இவர் வைத்திருக்கிறார் என்றும் கொஞ்சம் ஆராய்ந்து தகவல்களை கொடுங்கள்.