Wednesday 6 June 2012

குமுதம் ரிப்போர்ட்டர்- பொய்..! புரட்டு..! ஏமாற்று..!!




இந்த இதழ் குறித்தும் அதன் தரம் குறித்தும் அதில் வரும் செய்திகள் குறித்தும் நாம் நிறைய எழுதியுள்ளோம்.ஆகவே புதிதாய் மீண்டும் எழுதி அனைவரின் நேரத்தையும் வீணடிக்க விரும்ப வில்லை.

சுருக்கமாகச் சொல்லப் போனால் இந்த இதழில் செய்தி வெளிவந்தாலும் அதற்கு காசு,வெளிவராமல் மறைத்தாலும் காசு என்பது தான் இதன் பெரும்பகுதி தாரக மந்திரம்.அது தவிர்த்து வாசகனை முட்டாளாகக் கருதி எதை வேண்டுமானாலும் எழுதி அதனை அச்சிட்ட பக்கங்களில் நிரப்பி விற்பனை செய்வது மிச்சப் பகுதி.

இனி போஸ்ட் மார்ட்டம் பகுதிக்கு வருவோம்.இன்று நாம் எடுத்துக் கொண்டது 10-06-2012 தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டரின்  கவர் ஸ்டோரி.இதனை எழுதியவர் குமுதம் ரிப்போர்ட்டர் நிருபர் ப.ரஜினிகாந்த் என்பவர்.

வாசகனை வழக்கம் போல அடி முட்டாளாகக் கருதி இதனை குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் வெளியிட்டுக் காசு பார்த்துள்ளது.

புலனாய்வு புடலங்காய் ஆய்வு இதழ்கள் செய்ய வேண்டிய பணிகள் நாட்டில் எவ்வளவோ இருக்கின்றன.ஆனால் தமிழ்நாட்டு புடலங்காய் இதழ்களோ அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு எதையாவது கிறுக்கி பக்கங்களை நிரப்பித் தங்கள் வேலையை முடித்து விடுகின்றன.இதற்காக அவர்கள் கொஞ்சம் கூடக் கூச்சமே அடைவதில்லை.அந்த வரிசையில் சேர்ந்தது தான் இந்த வாரக் குமுதம் ரிப்போர்ட்டர் கவர் ஸ்டோரி.இந்த ஸ்டோரியை கூச்ச நாச்சமில்லாமல் அட்டையில் வைத்தது மட்டுமல்லாமல் இதனை ஊரெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டிக் காசு பார்த்துள்ளது.இதனைப் படியுங்கள்..


---

1)இந்தச் செய்தி கவர் ஸ்டோரிக்கான தகுதி எதையாவது சிறிதளவாவது கொண்டுள்ளதா..?சரி விடுங்கள்.செய்தியை ஆராயுங்கள்.

2)தி.மு.க.முக்கியப் புள்ளி ஒருவர் பேசியதாக இந்தச் செய்தி வருகிறது. 
திமுக முக்கியப் புள்ளி சொல்லியதாகச் சொல்லி விட்டு எழுதியது முழுக்க முழுக்க புரசைவாக்கம் குமுதம் ரிப்போர்ட்டர் அலுவலகத்தில் அமர்ந்து நிருபர் ரஜினிகாந்த் எழுதியது தான்.ஆனால் பழியோ ஒரு தி.மு.க.புள்ளி மீது.

தி.மு.க.காங்கிரஸ் உறவு மிகவும் சிக்கலாகியுள்ள நிலையில் அடி மட்டத் தி.மு.க.தொண்டன் கூட இப்படி யதார்த்தம் இல்லாமல் பேச மாட்டான் என்பது அனைவருக்கும் தெரியும்.திமுக தொண்டன் சிந்திக்கத் தெரிந்தவன் என்பதை யாரும் ஒத்துக் கொள்வார்கள்.(தலைவருக்கு எதிராய் மட்டும் சிந்திக்க மாட்டான் என்பது தான் தனி)
நிருபரின் அரசியல் அறிவை(!) இச்செய்திப் பதிவை வாசித்தால் நாம் நன்கு அறிந்து கொள்ளலாம்.

3)பிறந்த நாள் தூபம் என்று உப தலைப்பு இருக்கிறது-இது பிறந்த நாளுக்கு முன்பே யாராலோ கொளுத்திப் போடப்பட்டு அது வதந்தி என்று தி.மு.க. தலைமைக் கழகம் மறுத்து அறிக்கையே வெளியிட்டுள்ளது.இது முடிந்து போன விஷயம்.ஆனால் நிருபரோ தாமதமாய் சுதாரித்து செய்தியாக்கி உள்ளார்.
---
4)


சரத்பவார்,லாலு போன்றவர்களிடம் பேசி இந்தக் கூட்டணியை வலுவாக்கியதும் கலைஞர் தான்.இது உண்மையா என்ற உண்மைத்தன்மையை ஆராயமல் விட்டுவிடுவோம்.

இதனால் தமிழகம்,புதுவையில் 40 இடங்களிலும் வெற்றி பெற்றது தி.மு.க.கூட்டணி.//
சரத்பவாரிடம்,லாலுவிடம் பேசி கூட்டணியை உருவாக்கியதற்கும் அதனால் 40 இடங்களில் தமிழ்நாட்டிலும் புதுவையிலும் தி.மு.க.வெற்றி பெற்றதற்கும் என்னய்யா சம்பந்தம்..?தமிழ்நாட்டில் சரத் பவாருக்கும் லாலுவுக்கும் அம்புட்டு செல்வாக்கா..?
ஒழுங்காக 4 வார்த்தைகள் கோர்வையாக எழுதத் தெரியவில்லை..!
என்னய்யா நிருபர்..?
5)

நம்ம தமிழ்நாட்டுக் காம்ரேடுகளே கருணாநிதி சொன்னால் முரண்டு பிடிப்பார்கள்.அப்படி இருக்கையில் சுர்ஜித் போன்ற பழம் தின்று கொட்டை போட்ட டெல்லி காம்ரேடுகள் கருணாநிதி பேச்சைக் கேட்டு சோனியாவை ஆதரித்தார்களா..?இதைப் படித்தால் தமிழ்நாட்டு காம்ரேடுகள் விழுந்து விழுந்து சிரிக்கப் போறாங்க.
6)

எங்கே சொன்னார்..?எல்லாக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி சொன்னது போல் கருணாநிதிக்கும் நன்றி  சொன்னார்.என்னமோ கருணாநிதி தான் ஜனாதிபதியாக்கியது போல் பிரதீபா பாட்டீல் நன்றி சொன்னாராம்.முடியலை..
7)
 

அணுசக்தி ஒப்பந்தத்தின் பொழுது பணம் வாங்கிக் கொண்டு தான் அனைத்துக் கட்சியினரும்,ஆட்சியைக் காப்பாற்ற ஓட்டுப் போட்டார்கள் என்று தான் பரபரப்பாகப் பேசப்பட்டது. நம்மூரில் போட்டி மதிமுக என்று கொடிபிடித்த எல்.ஜி.,செஞ்சி போன்றவர்களே நன்கு கல்லா கட்டினர் என்று பேசப்பட்டது.அதுவும் சிபுசோரன் பத்தாண்டுகளுக்கு முந்தைய நரசிம்மராவ் ஆட்சியைக் காப்பாற்றவே பணம் கோடிகோடியாக வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட்டார் என்பது ஊரறிந்து வழக்காகி உள்ளது.இந்த லட்சணத்தில் அணுசக்தி ஒப்பந்தத்தை கருணாநிதி சொல் கேட்டு சிபுசோரன் ஆதரித்தாராம்.சிபு சோரன் என்ன கழக உடன்பிறப்பா..?

சிபு சோரன் போன்றவர்களுக்குத் தமிழ் படிக்கத் தெரியாது,அதிலும் கழிசடையான குமுதம் ரிப்போர்ட்டரைப் படிக்க மாட்டார்கள் என்பது எவ்வளவு வசதியாகிப் போனது இவர்களுக்கு..?
8)

எங்கே நெருக்கடி கொடுக்கவில்லை..?எல்லாவித நெருக்கடி கொடுத்தும்,கதறி அழுதும், காலில் விழுந்தும் சோனியா கண்டு கொள்ளவில்லை என்பது தான் உண்மை..!
9)


முன்னாள் தமிழக அமைச்சரும்,மத்திய அமைச்சர் ஒருவரும் பேசினார்களாம்.//அவர்கள் பெயரைச் சொல்வதில் என்ன வந்து விடப் போகிறது..?பொய் சொல்வது என்று முடிவான பின்பு யார் பெயரையாவது கிசுகிசுவாகச் சொல்ல சொல்ல வேண்டியது தானே..?
10)நீங்கள் ஜனாதிபதி வேட்பாளர் என்றால் சோனியாவும் ஒப்புக் கொள்வார்../எழுதிய நிருபருக்கு கட்சிகள் குறித்த அரசியல் அறிவும் இப்பொழுதைய நாட்டு நடப்பும் சுத்தமாக இல்லை என்பதும் சொக்கத்தங்கம் சோனியா கருணாநிதி நல்லுறவு முடிந்து விட்டது என்பதும் துளியும் தெரியவில்லை என்பது மறுபடியும் நிருபிக்கப்பட்டுள்ளது.
11)கரகரத்த குரலில் கருணாநிதி பேசுவார் என்பது உலகத்திற்கே தெரிந்தது.இதை புதிதாக நிருபர் துப்பறிந்து எழுதி விட்ட தொனி தான் இருக்கிறது.என்னத்தச் சொல்றது...?
12)இறுதிப் பத்தி இது தான்.

இதைப் படித்தால் நீங்கள் வாயால் சிரிக்க மாட்டீர்கள்.ஏதோ ஆயிரம் விளக்குப் பகுதி தி.மு.க.இளைஞரணிச் செயலாளர் பதவிக்கு தனக்கு வேண்டிய கட்சிக்காரர் ஒருவரை மு.க.ஸ்டாலின் நியமிப்பது போல நினைத்து ஜனாதிபதி பதவியை எழுதியுள்ளார் நிருபர்.
இவ்வளவு கேவலமாக அரசியல் அறிவு சிறிதளவும் இல்லாமல்,நாட்டு நடப்பு தெரியாமல்,யதார்த்தம் தெரியாமல் ஒரு நிருபரால் இப்படி ஒரு செய்திப் பதிவை எழுதியுள்ளதை நினைத்தால் ஆச்சரியத்தை விட அதிர்ச்சியாக இருக்கிறது.குமுதம் ரிப்போர்ட்டரில் நிருபர் பதவியில் சேருவதற்கு என்னய்யா தகுதி..?
செய்திக்கே தகுதியாக இல்லாத இது எப்படி கவர் ஸ்டோரியாக மாறியது..?
ஆளுங்கட்சியை நாம் விமர்சிக்க முடியாது.விமர்சித்தால் பெண்டிங்கில் இருக்கும் வழக்கு உயிர் பெற்று விடும்.ஆகவே இருக்கவே இருக்கிறார் கருணாநிதி அவரை வைத்து ஒரு செய்தி பண்ணலாம் என்று ரிப்போர்ட்டர் முடிவு செய்திருக்கலாம்.யார் கேட்கப் போகிறார்கள்..?
சரி இந்த இஷ்யூவில் வேறு எந்தச் செய்தியும் கவர் ஸ்டோரியாக வைக்க சரிவரவில்லை.இந்தச் செய்தியை வைக்கலாம்,அதனால் விற்பனையும் கூடும் என்று ஆசிரியர் இலாகா அல்லது குழும ஆசிரியர் முடிவு செய்தார்கள் என்று வாதத்திற்காய் வைத்துக் கொண்டால் கூட நிருபரின் அரசியல் அரைவேக்காட்டுத்தனத்தை,தவறுகளைஅப்படியே உலகம் முழுவதும் தெரியும் படியாக வெளியிடுவார்கள்..?
இதில் உள்ள அபத்தங்களையும் செய்தித் தவறுகளையும் வார்த்தை அமைப்புப் பிழைகளையும் சரி செய்திருக்கலாம். ஜூனியர் விகடன் இதழ் இல்லாத ஒன்றை ஜிம்மிக்ஸ் செய்து புதிதாய்க் கண்டுபிடித்தது போல வெளியிடுமே,அதைப் போல கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம்.
கருணாநிதி ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவார் என்று வதந்தி உருவானது குறித்து சென்ற வாரம் தி.மு.க. தலைமை மறுப்பு அறிக்கை வெளியிட்டதை புதுக் காரணம் சொல்லி இணைத்திருக்கலாம்.ஏதாவது ஒரு தி.மு.க.பிரபல்யத்திடம் கருத்துக் கேட்டு அதனையும் சேர்த்திருக்கலாம்.சக நிருபர் இரா.முருகேசனிடம் சொல்லியிருந்தால் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் கருத்துக் கேட்டு வாங்கித் தந்திருப்பார்.கனிமொழியும் எதையாவது ”ஆக்கபூர்வமான” கருத்தைச் சொல்லியிருப்பார்.நமக்கு அது போதாதா என்ன..?கனிமொழி படத்தைப் போட்டு பக்கத்தை வலுவாக்கியிருக்கலாம்.ஒரு பத்து நிமிடங்கள் யாராவது சின்னதாய் கஷ்டப்பட்டிருந்தால் கட்டுரையின் தொனி மாறியிருக்கும்.பெயரளவுக்கான செய்திப் பதிவாகவாவது உருவாகியிருக்கும்.
நிருபருக்கு மேல் உதவிப் பொறுப்பாசிரியர்,பொறுப்பாசிரியர்,செய்தி ஆசிரியர்,இணை ஆசிரியர்,குழும ஆசிரியர் என எத்தனையோ பேர் செட்டியார் சொத்தில் சம்பளம் வாங்கியும் தண்டமாக எதையுமே செய்யாமல் அரைகுறையாய் பத்திரிகை உலகமே சிரிப்பாய்ச் சிரிக்கும் படி ஒரு கவர்ஸ்டோரி வெளியிட்டிருக்கிறார்கள்.
அதுவும் இணை ஆசிரியராய் விகடன் குழுமத்திலிருந்து வெங்கட் வந்த பின்பு ரிப்போர்ட்டர் எங்கேயோ போயிடுச்சு என்று சொன்னார்களே..!அது இந்த லட்சணம் தானா..?
வாசகன் என்ன நினைப்பான் என்பதை விடுங்கள்.அவன் முட்டாள் என்று நினைத்துத் தானே எழுதுகின்றீர்கள்.சக பத்திரிகைகளில்,ஊடகங்களில் பணிபுரிபவர்கள் படிப்பார்களே.அவர்கள் நம் ”திறமை” குறித்து என்ன நினைப்பார்கள் என்றாவது சிந்தித்து இதனைச் சரி செய்திருக்கலாம்.

தி.மு.க.முக்கிய புள்ளி சொன்னதாய் புளுகிவிட்டுத் தனக்குத் தெரிந்த அரசியலை நிருபர் அலுவலகத்தில் அமர்ந்து எழுதியிருக்கிறார்.அது ஊரே சிரிக்கும் படி இருக்கிறது.
குமுதம் ரிப்போர்ட்டரின் செய்திப் பதிவு பார்த்தவுடன் மறைந்த ஒருவர் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது.
மருத்துவர்கள் தாங்கள் செய்த தவறுகளைப் புதைக்கிறார்கள்,வழக்கறிஞர்கள் தாங்கள் செய்த தவறுகளைத் தூக்கிலிடுகிறார்கள்.பத்திரிகையாளர்கள் தாங்கள் செய்த தவறுகளை முதல் பக்கத்தில் வெளியிடுகிறார்கள்.



ஒரு செய்தியை 4 பேரு படிக்கிற மாதிரி எழுதத் தெரியவில்லை.நிகழ் காலத்தின் குரல் ன்னு பேர் வேற..

நிருபர் ஒருவர் அரைவேக்காட்டுத் தனமாய் இருக்கலாம்.ஆனால் ஒட்டுமொத்தமாய் ஒரு பத்திரிகை அலுவலகமே இப்படி செயலற்று இருப்பதை என்ன சொல்வது..? 
குமுதம் ரிப்போர்ட்டரின் லோகோ வில் துணிவு தெளிவு நேர்மை அப்படின்னு இருக்கு.இதற்குப் பதிலாகப் பொய் புரட்டு ஏமாற்று என்று தலைப்பு வைத்தால் மிக பொருத்தமாக இருக்கும்.

இன்னும் நல்லா வருவீங்க....

2 comments:

Anonymous said...

கலகக்குரல் இணையதளமே மன்னிப்பு கேள்... எங்களின் எழுத்துலக வேங்கை, முத்தமிழ் தந்த வித்தகன் ச.கோசல்ராம் நிர்வகிக்கும் ரிப்போர்ட்டரை நீ எப்படி திட்டலாம்? கோசல்ராம் சார் எழுதும் அளவுக்கு கவித்துவமாகவும், யதார்த்தமாகவும் உங்களால் எழுத முடியுமா? இல்லை, எழுதியதற்குத்தான் பண,ம் வாங்க முடியுமா? இந்த வருட ஞான பீட விருதுக்கு கோசல்ராம் பெயர் சிபாரிசு செய்யப்பட்டிருப்பதாவது உங்களுக்குத் தெரியுமா? கோசல் சார்... நீங்க உங்களோட அழகிய தமிழ் நடையில் ஒரு கட்டுரை எழுதிக் காட்டுங்க சார்...
(கோயில் சொத்து குல நாசம்... ஆச்சி சொத்து ஆயுளுக்கும் நாசம்)

Swapna 2v said...

hii.. Nice Post

Thanks for sharing