Monday 23 April 2012

சென்னை பிரஸ் கிளப்பில் போதை வெறியாட்டம்...! பீர் பாட்டில் வீச்சு..! உயிர்தப்பிய புகைப்படக்காரர்!




சென்னை ஏப்ரல் 24,
சென்னை பிரஸ் கிளப்பில் கடந்த சனிக்கிழமை இரவு நேரத்தில் போதையில் இருந்த டுபாக்கூர் நிருபர் பத்திரிகை புகைப்படக்காரர் ஒருவர் மீது பீர் பாட்டிலை வீசிய சம்பவம்  பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பையும் அசிங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து உண்மையான பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசப்படுவதாவது...
சென்னையின் பரபரப்பான சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் அமைந்துள்ளது பிரஸ் கிளப்.இதில் பத்திரிகையாளர்கள்,மற்றும் பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் கட்டப்பஞ்சாயத்து பேர்வழிகள்,தரகு வேலை பார்ப்பவர்கள்,பிளாக்மெயில் பேர்வழிகள் மற்றும் கார்ப்பரேட் மெம்பர்ஷிப் என்ற பெயரில் பணமுதலைகள் ஆகியோர் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர்.
இந்த அமைப்புக்கு கடந்த 10 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறவில்லை.மேலும் முறையாக பொதுக்குழுவோ,செயற்குழுவோ கூட்டப்படவில்லை.கணக்கு வழக்குகளும் பராமரிக்கப்படவில்லை.மேலும் தற்பொழுது சிலர் பிரஸ் கிளப்பை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து நிர்வாகம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
உழைக்கும் பத்திரிகையாளர்கள் இங்கு வருவது அபூர்வம்.பெரும்பாலும் பிழைக்கும் பத்திரிகையாளர்கள் இங்கு முகாமிட்டுள்ளனர். சென்னை பிரஸ் கிளப்பிற்கு அரசினால் ஒதுக்கப்பட்ட இடத்தில் அரசின் முறைப்படியான   சிஎம்டிஏ அனுமதி பெறாமல் கல்வி வியாபாரி ஒருவரின் துணையுடன் கட்டிடமும் கட்டப்பட்டது.




அவ்வாறு கட்டப்பட்ட கட்டிடத்தில் நிர்வாகம் செய்யும் கும்பலின் ஆசியுடன் தினசரி பகல், இரவு பாராமல் எப்பொழுதும் ஒரு கும்பல் சீட்டாடிக் கொண்டும், கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டும் அக்கப்போர் பேசிக் கொண்டும் மது அருந்திக் கொண்டும் இருப்பது வழக்கம். கடந்த சனிக்கிழமை இரவு 10 மணி அளவில் நடைபெற்ற சமப்வம் தான் இப்பொழுது பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. 
கடந்த சனிக்கிழமை 21-04-2012 அன்று காலை 12 மணியில் இருந்து ஒரு கும்பல் வழக்கம் போல் மது அருந்தியபடி சீட்டாடிக் கொண்டு இருந்திருக்கிறது.இதில் நிலாவேந்தன்,அசதுல்லா,ராஜேந்திரன் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் எந்த ஒரு நிறுவனத்திலும் பணிபுரியாமல்,எந்த ஒரு பத்திரிகைக்கும் செய்தி கொடுக்காமல் தஙக்ளைச் செய்தியாளர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் கும்பலைச் சேர்ந்த இவர்கள்.இவர்கள் பத்திரிகையாளர்களுக்கான அரசு அங்கீகார அடையாள அட்டையும் பெற்றிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
                                                       துகளக் ரமேஷ் 
இதில் காலையில் இருந்து போதையின் உச்சத்தில் இருந்த ராஜேந்திரன் வருபவர்களிடம் எல்லாம் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.துகளக் ரமேஷ் என்பவரிடமும் என்னய்யா உன்ன போட்றவா,நம்ம எதுக்கும் பயப்படாத ஆளு என்று வீரவசனம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.இவரது பேச்சை சட்டை செய்யாத ரமேஷ் அந்த இடத்தைக் காலி செய்தார்.
                        ராஜேந்திரன்
இந்த சூழ்நிலையில் இரவு சுமார் 10 மணியளவில் பத்திரிகை புகைப்படக்காரர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பகுதியில்,ராஜேந்திரன் பீர்பாட்டிலை எடுத்து வீசியுள்ளார்.
இதனால் ஆத்திரமுற்ற அங்கிருந்த புகைப்படக்காரர்கள் ஒன்று சேர்ந்து ராஜேந்திரனை ரவுண்டு கட்டினர்.ஆனால் அசதுல்லா அதனைத் தடுத்து இவர் நம்மாளு தான் பிரச்சனை வேண்டாம் விட்ருங்க என்று சமரசம் செய்துள்ளார்.

                 ராஜேந்திரன்,நிலாவேந்தன்,அசதுல்லா
ஆனாலும் புகைப்படக்காரர்கள் எரிச்சலாகி மவனே நீ எங்க கிட்டயிருந்து தப்பிக்க முடியாது உனக்கு இருக்குடா கச்சேரி என்று ரவுத்திரமாக இருக்கின்றனர்.
அதன்பிறகு மன்னிப்பு சமாதானம் என அடுத்த ரவுண்டு ஆரம்பமாகி நள்ளிரவு வரை தொடர்ந்துள்ளது கச்சேரி.
சென்னை பிரஸ் கிளப்பில் குடிபோதையில் தகராறு-பத்திரிகையாளருக்கு கத்திக்குத்து-பிரஸ் கிளம் இழுத்து மூடப்பட்டது என்று தினத்தந்தியில் எட்டு காலச் செய்தி வருவதற்கு முன் கொஞ்சமேனும் சூடு சொரணையுள்ள  பத்திரிகையாளர்கள் ஒன்று சேர்ந்து மோசடி கும்பல்,கட்டப்பஞ்சாயத்து கும்பல்,வெட்டிக் கும்பலிடமிருந்து கிளப்பை மீட்க வேண்டும்.
                                                                    பெத்தபெருமாள்
இந்தக் கும்பலை வைத்து நிர்வாகம் செய்யும் பெத்தபெருமாள் தான் முடிவு செய்ய வேண்டும்.
பத்திரிகையாளர்களே சிந்திப்பீர் ..!ஞாநி ஓட்டம் என்று அறிக்கை கொடுத்த அடிமுட்டாளை என்ன செய்வது...?
ஞாநி சொன்னதில் தவறு எதும் இருக்கிறதா..?



2 comments:

HOTLINKSIN.com திரட்டி said...

இங்கு மெம்பர்ஷிப் ஆவதற்கு இவர்கள் கொடுக்கிற அலப்பறை இருக்கிறதே... அரசு பத்திரிகையாளர் அடையாள அட்டை வாங்க கூட இவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்காது போலிருக்கிறது...

Anonymous said...

super annaa