Thursday, 29 March 2012

பதறும் வரதராஜன் -மடியில் கனம்;வழியெல்லாம் பயம்...!


                                             
                                                              வரதராஜன்

கடந்த ஒரு வாரமாக பதட்டமும் பரபரப்புமாக பயந்து நடுங்கியும் இருக்கும் நபர் யாரென்று தெரியுமா?

சாட்சாத் வரதராஜன் தான்.

இதுவரை ஒரு மிகப்பெரிய பத்திரிகை நிறுவனத்தையே தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்து விட்டோம் என்ற இறுமாப்பிலும் திமிரிலும் இருந்து வந்த வரதராஜன் இப்பொழுது கொடைக்கானல் குளிரில் கூட வியர்க்கும் நிலைக்கு வர என்ன காரணம்..?

கடந்த இருவார காலமாக நடைபெற்ற சில நிகழ்வுகள்,சில காய் நகர்த்தல்கள்,சில சமிக்ஞைகள் தான் என பத்திரிகை வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் பேசப்படுகிறது.

முதலில் குமுதம் பிரச்சனையில் வெளியே தெரியாத ஒரு அரசியல் பிளாஷ்பேக்.

கருணாநிதி ஆட்சிக்காலத்தில் ஜவஹர் பழனியப்பன் அளித்த மோசடிக் குற்றச்சாட்டினால் சென்னை மாநகரக் காவல்துறையால் கைது செய்யப்பட்ட வரதராஜன், மு.க.ஸ்டாலின் மனைவியின் வேண்டுகோளின்படி மு.க.ஸ்டாலின் கொடுத்த பிரஷரினாலும், ஜவஹர் பழனியப்பன் கைது வரைக்கும் வேண்டாம் என்று கருணாநிதியிடம் கேட்டுக் கொண்டதாலும் கைதாகி புழல் சிறைக்குள் செல்லாமல் தப்பித்தார்.

அதன்பின் சிறிது காலம் பேச்சுவார்த்தை என்று காலம் இழுத்தடித்த பின் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலும் வந்தது. கருணாநிதியின் ஆட்சியும் முடிந்தது.

அதன் பின் வரதராஜன் சற்று நிம்மதியானார்.அதற்குக் காரணம் ஆள் பிடிக்குற லட்சுமணன் மூலம் ஏற்பட்ட (சசிகலா) நடராஜன் நட்பு தான் இதற்குக் காரணம்.நடராஜனின் நட்பினை லட்சுமணன் என்னும் மணா உருவாக்கித் தந்தார்.அதன் பின் நடராஜனின் பேட்டி,அவரது கருத்து துதிபாடல்கள் என ரிப்போர்ட்டர் பட்டையைக் கிளப்பியது.

                                             
                                      லட்சுமணன் என்ற மணா

ஆட்சியின் லகான் நம் நட்பு வட்டத்தில் வந்து விட்டது.இனி நம்மை யாரும் அசைக்க முடியாது எனக்கருதிய பின் குமுதம் குழுமத்தை முழுவதையும் முரட்டுத் துணிச்சலில் ஆட்டையப்போட்டார்.அதனை எதிர்த்து வழக்கு,தடையாணை,உச்ச ,உயர்நீதிமன்றம் என இழுத்துக் கொண்டே போய் இப்படியே இன்னும் இருபது முப்பது ஆண்டுகள் வழக்கினை இழுத்து விடலாம் எனக் கணக்குப் போட்டார்.

இதனால் கொஞ்ச நாள் கழித்து ஜவஹர் பழனியப்பன் வேறு வழியின்றி சொத்தினை நமக்கே ஒரு செட்டில்மெண்ட் போட்டுக் கொடுத்து விடுவார்.அதன்பின் பத்திரிகை ஜாம்பவான் ஆகி விடலாம் என மனக் கணக்குப் போட்டார்.
ஆனால் அவரது மனக் கணக்கு தப்பாகிப்போனது.நடராஜன் கும்பல் ஒட்டு மொத்தத்தையும் கட்சியை விட்டு ஜெயலலிதா நீக்கினார்.இதனை வரதராஜன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

இதனால் இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுப்பது? திரும்பவும் நடராஜன் குடும்பத்தைக் கட்சியில் சேர்ந்து விடுவார்களா, இல்லையா? நடராஜனை எதிர்த்து எழுதுவதா, வேண்டாமா என்று குழப்பம் அடைந்திருக்கிறார். இந்த ஊசலாட்டம் அந்தக் காலகட்டத்தில் டிசம்பர் இறுதியில் வந்த ரிப்போர்ட்டர் இதழ்களைப் பார்த்தால் நன்றாகவே தெரியும்.

நடராஜனைக் கட்சியை விட்டு விலக்கிய உடன் நாடு முழுவதும் உள்ள ஊடகங்கள் அனைத்தும் அதனை எழுதி விற்றுத் தள்ள, வரதராஜனோ, அதன்பின் வந்த இரண்டு ரிப்பொர்ட்டர் இதழ்களிலும் அமைதி காத்தார். திரும்பவும் சேர்ந்து விட்டால் நல்லதே என சந்தோஷப்பட்டார். ஆனால் இனி தற்பொழுதைக்கு உறவு ஏற்படாது எனத் தெரிந்ததும் தான் துணிந்து நடராஜனை எதிர்த்து எழுதுகிறார்.

நடராஜனே,’’காரியம் நடக்குறதுக்காக என்னவெல்லாம் பண்ணாங்க இப்ப இப்படி எழுதுறாங்களே” என்று தன்னைப் பார்க்கச் சென்றவர்களிடம் சொன்னதும் நடந்தது.
-----

டுத்து, தன்னைக் காத்துக்கொள்ள யாரைப் பிடிப்பது என்று யோசிக்கிறார். அப்பொழுதும் மணா உதவிக்கு வருகிறார். (மணாவுக்கு பத்திரிகை வேலையைத் தவிர்த்து எத்தனை வேலைகள்... மணா ரொம்ப பாவம் இல்ல..!!!)

அதன் தொடர்ச்சியாக, சோ.ராமசாமியின் நேர்காணல் ரிப்போர்ட்டரிலும்,குமுதம் இதழில் வெளிவருகிறது.


சோவின் ‘முகமது பின் துக்ளக்’ நாடகம், குமுதம் ஆஹா எப்.எம்.மில் ஒளிபரப்பாகிறது.
எப்படியாவது யாரையாவது ஆள் பிடித்து தனக்குப் பிரச்சனை வரக்கூடாது என்ற எண்ணத்தில் இத்தனையும் நடக்கின்றன. 


பிறகென்ன.... ’இனி நம்மை யாராலும் எதுவும் செய்ய முடியாது’ என்று மறுபடியும் இறுமாப்புக்கு மாறுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தான், கடந்த ஒரு வார நிகழ்வுகள் மறுபடியும் வரதராஜனின் தூக்கத்தைக் கெடுத்துள்ளன. அதனால்தான் அவரது பதட்டமும் பயமும் குமுதம் இதழில் தெரிகின்றன.

அதற்கு என்ன காரணம் என்று இறுதியில் பார்ப்போம்.

வெளியில் வரது காட்டிக்கொள்ளும் பத்ட்டத்தை பத்திரிகைகளிலும் சாதாரணமாகவே பார்க்க முடிகிறது.
கடந்த ஒரு வருட காலமாக வரதராஜன் தனது கட்டுப்பாட்டில் உள்ள இதழ்களில், ஆளுங்கட்சிக்கு எதிரான செய்திகள் எதையும் வெளியிடுவதில்லை.அதற்கு ஒரே காரணம். எங்கே தன் மீது உள்ள மோசடி வழக்கு மீண்டும் உயிர் பெற்று விடுமோ,  புழல் சிறையில் தங்க வேண்டி வருமோ என்ற பயம் தான். காஞ்சி மடாதிபதிக்கே கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நேர்ந்த கதி வரதுவுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் பத்திரிகை விற்பனை பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று ரொம்பவும் அடக்கி வாசித்தார்.

ஆனால் கடந்த ஒரு வாரமாக வழக்கத்தை விடவும் மிகவும் பம்முகிறார்.

கடந்த 21-03-2012 புதன்கிழமை அன்று சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிவு வெளியாகி அது நாடு முழுவதும் தலைப்புச் செய்தியாகி மக்களும் மறந்து அன்றே அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விடுகிறார்கள்.

23-02-2012 வெள்ளியன்று வெளியாக வேண்டிய ரிப்போர்ட்டர் இதழ் 22-02-2012 மாலை 4 மணிக்கு முடிக்கப்படுகிறது. ஆனால் வெள்ளிக்கிழமை வெளியாகும் குமுதம் ரிப்போர்ட்டரில் சங்கரன்கோவில் வெற்றியை அட்டைப்படமாக வைக்கிறார்கள்.


புலனாய்வு, புடலங்காய் இதழ்களுக்கு எத்தனையோ செய்திகள் காத்திருக்க ஏன் நாடு முழுவதுக்கும் தெரிந்த செய்தியை அட்டையில் வைக்க வேண்டும்..?

இதற்கிடையில் என்ன நடந்தது? பொறுத்திருங்கள்.

மேலும், சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிவு வெளியாகி எட்டு நாள் கழித்து இன்று புதன்கிழமை (29-08-2012)வெளியான (04-04-2012)  தேதியிட்டு வெளியான குமுதம் அட்டையில் கம்பீர வெற்றி என்று சங்கரன்கோவில் வெற்றியை கவர்ஸ்டோரி செய்துள்ளார்கள்.தேர்தல் முடிந்து ஒரு வாரம் முடிந்த பின்னும் இப்படி பம்முகிறாரே வரது, என்று நினைத்தபடி வாங்கினால் உள்ளே முக்கியமாய் நான்கு செய்திகள்.சங்கரன்கோவிலில் வெற்றிபெற்ற முத்துலட்சுமி பேட்டி,வெற்றி குறித்து கவர் ஸ்டோரி,என ரொம்பவும் பம்மியுள்ளார்.இத்தனைக்கும் மேலே குமுதம் ப்ப்ளிகேஷன்ஸ் சேர்மன் கம் நிர்வாக இயக்குனர் என்று சொல்லிக் கொள்ளும் வரதாரஜன் முதல்வருக்கு முதல் பக்கத்திலேயே ஒரு மடலும் எழுதியுள்ளார்.

அது இது தான்.இனி இதில் நமக்கு எழும் சந்தேகம் இது தான்.

1) ஒரு தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்காக பாராட்டி ஒரு பத்திரிகை தலையங்கம் எழுதலாம்.
ஆனால் முதல்வருக்கு கடிதம் எழுத வேண்டிய அவசியம் ஒரு மிகப்பெரிய பத்திரிகை அதிபர் என்று சொல்லிக் கொள்பவருக்கு எதனால் வந்தது?மடியில்  கனமில்லை என்றால் எதற்கு பயம்?

2) உண்மையாய் அப்படி கடிதம் எழுதியவர் என்ன செய்ய வேண்டும்? முதல்வருக்கு கடிதத்தை தபாலில் அனுப்ப வேண்டும் அல்லது நேரில் அளிக்க வேண்டும் அல்லது முதல்வர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆனால் பகிரங்கமாக வாசகர்கள் அனைவருக்கும் தெரியும் வண்ணம் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?

3)அதுவும் கடிதத்தில் உள்ள செய்திக்குத் தொடர்பு இல்லாமல் பதவியேற்ற காலகட்டத்தில் முதல்வருடன் எடுத்த பழைய புகைப்படத்தை, இப்போது வெளியிட வெண்டிய அவசியம் என்ன? தனக்கு முதல்வரிடம் செல்வாக்கு இருப்பதாக ஊருக்குள் காட்டும் உத்தியா இது..?

4)அதிலும் குறிப்பிட்ட வரிகளைக் கவனியுங்கள்..

”சில சுயநலவாதிகள்,ஆட்சி,அதிகாரத்தில் இருப்பவர்களையெல்லாம் துதிபாடி பரிசு பெறும் தருமிகள் போல உங்களை நெருங்க முயன்று கொண்டு இருக்கிறார்கள்.அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கி வைத்து உங்கள் லட்சியத்தை நீங்கள் எட்டிப்பார்க்க வெண்டும்.”

(ஆஹா..என்ன ”அருமையான” வரிகள்..நீங்கள் இதை எழுதும் முன்பு உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கவில்லையா மிஸ்டர் வரதராஜன்..கிரைம் எண் 196/2010)

இதனைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது? நாட்டின் அனைத்து லகானையும் கையில் வத்துள்ள முதலமைச்சரை சுயநலவாதிகள் நெருங்க முயற்சிக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். ஏறக்குறைய அழுதிருக்கிறார். எதனால்.?
இவ்வளவு பம்மும் அளவுக்கு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

ஆதாயம் இல்லாமல் வரது ஆத்தில இறங்குவாரா என்ன?எதனால் இப்பொழுது அளவுக்கு அதிகமாக பம்மல்..?

சங்கரன்கோவில் தேர்தலில் அதிமுகவின் வெற்றிச் செய்தி வெளிவந்த மறுநாள்(22-03-2012)வியாழன் அன்று நமது எம்ஜிஆரில் ஒரு விளம்பரம் வெளிவருகிறது.

அது இது தான்.


குமுதம் நிறுவனத்தின் லோகோவுடன் கோதை ஆச்சியின் விளம்பரத்தை நமது எம்ஜிஆர் நாளிதழ் வெளியிட்டதைக் கண்டு அதிர்ச்சியும் பரபரப்பும் அடைந்த வரதராஜன் குமுதம் நிறுவனத்தின் சேர்மனாக நம்மைத் தமிழக முதல்வர் அங்கீகரிக்க வில்லையோ,நமது கனவு சாம்ராஜ்யம் நம்மை விட்டு விலகி விடுமோ என்று பதைபதைக்கிறார்.அதன் விளைவு தான் வழக்கத்திற்கு மாறாக நன்றியுணர்ச்சியுடன் இருப்பதாகக் காட்டிக் கொள்வது.அதனை மிகவும் பகிரங்கப்படுத்துவது என ஊருக்கெல்லாம் சேதி சொல்கிறார்.

இவை அனைத்தும் வெளியில் தெரிந்த விஷயங்கள்.இது போக வெளியில் தெரியாத ஒரு விஷயமும் குமுதம் ஊழியர்கள் வட்டாரத்தில் கிசுகிசுக்கப் படுகிறது.

வரதராஜன் என்ன தான் முழுக்க முழுக்க ஜெயலலிதாவின் ஆதரவாளராகத் தன்னைக் காட்டிக் கொண்டாலும் தமிழக முதல்வர் முற்றிலும் அவரை நம்பவில்லை.

ஏனென்றால் இதற்கு முன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஸ்டாலின்,கனிமொழி,அதன் பின் மன்னார்குடி குடும்பத்தின் பழக்கம் எனத் தொடர்ந்து செயல்பட்டு வருபவர் இன்று தன் பிரச்சனைகளில் இருந்து மீள்வதற்காக ஆளுந்தரப்பினை அண்டியிருக்கிறார்,அவர் யாருக்கும் நம்பிக்கை இல்லாதவர்,காரியம் முடிந்ததும் தன் துரோகப் புத்தியைக் காட்டுவார் என்றும் கருதுகிறார்கள்.

மேலும் குமுதம் வாசகர்களிடமிருந்து வரதராஜன் திரட்டிய தானே புயல் நிவாரண நிதியையும் நேரில் சந்தித்து தமிழக முதல்வரிடம் அளிக்க வேண்டும் என்ற வரதராஜன் கோரிக்கை இன்று வரைக்கும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை.

இதற்கிடையில், தொடர்பற்ற இன்னொரு செய்தி, குமுதம் பிரச்னையில் உரிமையாளர் ஜவஹர் பழனியப்பனின் வழக்கறிஞர்களில் ஒருவரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.

இதுவும் வரதுவை பயத்திற்கு ஆளாக்கியுள்ளது. இது அனைத்தும் சேர்ந்து தான் குமுதம் இதழ் மூலம் பகிரங்கமாக தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதும் இக்கட்டான நிலையை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது.

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது தானே உலக நியதி..!

ஆனாலும் பொறுத்திருந்து பார்ப்போம்.என்ன நடக்கிறது என்று...!

4 comments:

karuppankaruppan said...

கைதானாலும் கம்பீரம் குறையலை பாருங்க... சீட்டிங் கேசுல விசாரணைக்காக கமிஷனர் ஆபிசுல நடையாய் நடக்கிறாரு...ஆனால் போஸ் பார்த்தால் ஏதோ மன்னர் மாதிரி நடக்குறாரு.கருமம்..பத்திரிகைத்துறைக்கே இழுக்கு..

karuppankaruppan said...

(மணாவுக்கு பத்திரிகை வேலையைத் தவிர்த்து எத்தனை வேலைகள்... மணா ரொம்ப பாவம் இல்ல..!!!)//அரசியல் துறையில இப்படை வேலை பார்ப்பவர்களை புரோக்கர் ந்னு சொல்வாங்க...ஆனா இவரை அப்படிச் சொல்ல முடியாது.சொன்னா புரோக்கர்கள் சண்டைக்கு வந்துடுவாங்க....

முனைவர் பரமசிவம் said...

எங்கள் எதிர்பார்ப்புக்கு மேலேயும் தகவல் தருகிறீர்கள்.
நன்றி.

Anonymous said...

மணா இன்னும் வரதராஜனுக்கு மாமா வேலை பார்ப்பதை நிறுத்தவில்லை.கிருஷ்ணா டாவின்சி இறப்பின் பொழுது அவரது வீட்டுக்கு வரதராஜனின் கூடவே வந்தார்.செல்லும் பொழுதும் அவருடனேயே சென்றார்.
எப்பொழுது திருந்துவார் மணா...?