Friday, 23 March 2012

”மதுவோடு மயிலாட”-குமுதம் குழுவினரின் போதை ட்ரிப்...!காறித் துப்பும் கொடைக்கானல் நரிக்குறவர்!

                                                 குமுதம் சினிமா நிருபர் தேவிமணி,ரிப்போர்ட்டர் செய்தி ஆசிரியர் ஜான் வில்கின்ஸ்,குமுதம் பக்தி பொறுப்பாசிரியர் ஜெயப்பிரியன்,மணிவண்ணன்,(ஞாயிறு 18-03-2012 அன்று எடுக்கப்பட்ட புகைப்படம்)


                                                       வெள்ளிக்கிழமை (16-03-2012)கொடைக்கானல் மலையில் பேருந்து செல்லும் பொழுதுஎடுக்கப்பட்ட புகைப்படம்.


சென்ற வார குமுதத்தில் ‘நாங்கலாம் ரூம் போட்டு யோசிக்க கொடைக்கானல் போறோம்ல’ என்ற கமெண்ட்டைப் படித்து ஆஹா குமுதத்தை புத்துணர்வுடன் கொண்டு வர ஆலோசித்திருக்கிறார்கள் போல என்று நினைக்கும் அப்பாவி வாசகர்களுக்கு அங்கே என்ன நடந்தது என்பதைச் சொல்லும் லைவ் ரிப்போர்ட் இது.

“கொடைக்கானல் ட்ரிப்னதும் எல்லோருக்குமே பயமாயிடுச்சு. ஏன்னா இது குமுதம் கம்பெனிய ஆட்டையப் போட்ட வரதராஜன் கூட்டிட்டுப் போற ட்ரிப். மலைப் பிரதேசம் வேற. ஏதாவது ஏடாகூடம் பண்ணிடுவாங்களோனு எல்லோருக்கும் பயம். அது வேற இல்லாம் செய்தி ஆசிரியர் ஜான் சார் (அவர் தாங்க டப்பா சோறு) இங்கதான் கொலை வழக்குல மாட்டுனாரு. இப்படி பீதியைக் கிளப்புற விஷயம் இருந்துதான நிறைய பேரு பேக் அடிச்சாங்க. வராதவங்களுக்கு நாலு நாள் சம்பளம் கட், அப்புறம் அவங்க டாக்டர் ஜவஹர் ஆளுன்னு முத்திரைக் குத்தப்பட்டு குடிக்க தண்ணிகூட ஆபிஸ்ல தர மாட்டோம்னு மிரட்டுனதும் எல்லோரும் கிளம்பியாச்சு.

வெள்ளிக்கிழமை காலைல (16-03-2012)ஆறு மணிக்கு புரசைவாக்கம் குமுதம் ஆபீசுக்கு வரச் சொன்னாங்க. ரெண்டு பஸ்.  அங்கேயே டீமை ரெண்டா பிரிச்சுட்டாங்க. தண்ணியடிக்கிறவங்க ஒரு பஸ், அடிக்காதவங்க இன்னொரு பஸ்னு. குமுதம் பத்திரிகையாளர்கள்தான் நல்ல குடிமகன்களாச்சே, தண்ணியடிக்கிற பஸ் நிரம்பி வழிய, அடுத்த பஸ்ல பண்ணிரெண்டு பேர்தான். அந்த பஸ் சீக்கிரம் கிளம்பிடுச்சு. குடிகார பஸ் சைட் டிஷ்லாம் வாங்கிட்டு கிளம்ப ஏழரை மணியாயிடுச்சு.  ஜான் சார்தான் சரக்கு ஏற்பாடு பண்ணார்னு அவரோட சிஷ்யகோடிகள் எல்லோரிடமும் ஜால்ரா அடித்துக் கொண்டிருந்தார்கள். ( ஆனா உண்மைல கீழப்பாக்க போலீஸ் அதிகாரி ஒருத்தர் உபயமாம் சரக்கு) முதல் பாட்டில் ஒப்பன் பண்ணும் போது காலைல எட்டு மணி. ‘அட குடிகாரப் பசங்களா’னு சொல்றீங்க. கரெக்ட். குடிகாரப் பசங்கதான். பஸ் செங்கல்பட்டு தாண்டுறதுக்குள்ள நாலஞ்சு ஃபுல் ஓடிடுச்சு. வெறும் வயித்துல ஏசி பஸ்ல தண்ணியடிக்க தண்ணியடிக்க எல்லோருக்கும் எல்லா பாஷையும் வர ஆரம்பிச்சுடுச்சு.

செங்கல்பட்டு தாண்டுனதும்தான் அந்த அசிங்கம் நடந்துச்சு. ஒரு லே அவுட் ஆர்டிஸ்ட் தான் சாப்பிட்டதை விளம்பர இலாகா மானேஜர் மீது வாந்தி எடுக்க...சீய்... அவர் என்ன செய்ய என்று அலற... குடிமகன்கள் ‘ அதெல்லாம் ஒண்ணுமில்ல’னு சமாதானம் கூற...இன்னொருவர் குபுக். ஏசி பஸ்ஸில் வாந்தி வாடை தூக்க ஆரம்பித்தது. ஜான் சார் மட்டும் ‘ ஒண்ணுமில்ல, ஒண்ணுமில்ல’னு எல்லோரையும் அமைதிப்படுத்திக் கொண்டிருந்தார்.

அடுத்த பஸ்ஸில் ஏறிவிட வேண்டும் என்று தவியாய் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் இன்னொரு பிரச்சனை. எங்களுக்கு முன்னால் போன பஸ் பஞ்சராகி வழியில் நின்றுக் கொண்டிருந்தது. அதில் கொஞ்ச பேர் ஏறி ரெண்டு பஸ்ஸையும் குடிகார பஸ்ஸாக மாற்றி சமநிலை சமுதாயமாக மாற்றினர். கொடைக்கானல் வரைக்கும் வாந்தி நாத்ததுலதான் பயணம்.

இப்படியே குடியும் கூத்துமாய் பஸ் கொடைக்கானல் சென்று சேர்ந்தது. அங்கு சபரி ஓட்டலில்தான் ரூம். ‘ ஒரு ரூம் ஐயாயிரம் ரூபாய் எல்லாம் நம்ம தலைவர் உங்களுக்காக் ஸ்பெஷலா ஏற்பாடு பண்ணது’ என்று குழும ஆசிரியர் கோசல்ராம் விசுவாசமாய் சொன்னார். ‘கம்பெனிய ஆட்டய போட்ட துட்டுதானே’ போதையில் சொன்ன நிருபரின் வார்த்தைகள் அவர் காதில் விழவில்லை.

                                                 சபரி ஓட்டல்

அறைக்குள் போனதுமே எல்லோர் கையிலும் ஒரு பேப்பர் திணிக்கப்பட்டது. அதில் ஐந்து நிபந்தனைகள். ரூமில் மது அருந்தக் கூடாது, சேர்மன் மீட்டிங்கில் செல்போன் எடுத்து வரக் கூடாது, அறைகளை மாற்றக் கூடாது, ஒட்டல் பொருட்களை உடைத்தால் அபராதம், சண்டை போடக்கூடாது...இப்படி நிபந்தனைகள். தமிழ்நாட்டின் நம்பர் ஒன் பத்திரிகையின் ஆசிரியர் குழுவுக்கு போட்ட இந்த நிபந்தனைகளை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு. பரவாயில்லை. தலைக்கு மேல் வெள்ளம் போகுது.

உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம் எல்லோரும் குடித்தார்களே செய்தி ஆசிரியர் ஜான் சாரும் குழும ஆசிரியர் கோசல் ச்சாரும் ( ச் போட்டு சார் எழுதியிருப்பதால் அது பிழை என்று நினைத்து விடாதீர்கள். கோசல் ச்சார் அப்படிதான் சொல்லுவார்) குடித்தார்களா என்ற சந்தேகம்தான் அது. ஜான் சார் இப்போதெல்லாம் குடி இல்லையாம் ஒன்லி அடியாம். கோசல் ச்சார் பெரியவ அவர் எங்களோடு குடிக்க மாட்டார். அதனால் கொடைக்கான லேக் பக்கத்துல திருநெல்வேலி ஏரியா ரிப்போர்ட்டர் ஜோசப்போட டோயோட்டோ ஈடியோஸ் கார்ல உக்காந்து சரக்கு அடிச்சிருக்கார். ( குமுதம் பத்திரிகையாளர்கள எல்லாம் நல்லா ”மேட்டர் ”(மீட்டர்)பண்றாங்க இல்லாட்டி டோயோட்டோ, ஹுய்ய்ண்டாய், வோல்க்ஸ்வேகன்னு வாங்க முடியுமா?)

றுநாள் சனிக்கிழமை (17-03-2012)காலைல சேர்மன் மேனேஜிங் டைரக்டர் என்று தன்னைத் தானே சொல்லிக் கொண்டிருக்கும் வரதராஜன் சாரோடு மீட்டிங். காலைலேயே தலைவர் பத்து மணிக்கு வரார்னு பீதியை கிளப்ப ஆரம்பிச்சுட்டாங்க மேல் மட்ட குட்டித் தலைவர்கள். பதினோரு மணிக்கு எண்ட்ரி ஆனார் ஆ.போ. வரதராஜன் சார். தலைவ்ருக்கு கைத் தட்டுங்க என்று ஒரு ஜால்ரா சொல்ல ஒரே கைத்தட்டல்.

கோசல் ச்சார் பேச ஆரம்பித்தார். ‘நம்ம நாட்டுல நிறைய தலைவர்கள் இருக்காங்க. அவங்க எல்லாம் பதவி,புகழ், பட்டம், விருது இது பின்னால ஓடுவாங்க. எப்ப கிடைக்கும் எப்படி வாங்கலாம்னு அலைவாங்க. ஆனா நம்ம தலைவர் அப்படி இல்ல. தன்னைத் தேடி விருதும் புகழும் வந்தபோது கூட வேண்டாம்னு சொல்லிட்டார்’ என்று பேச்சை நிறுத்தி ஒரு சஸ்பென்ஸ் விட்டு தொடர்ந்தார்.

                                                   கோசல்ராம் (பேச்சப்பாரு...ஆனா பத்திரிகை தான் விக்க மாட்டிங்குது..)

 ‘சமீபத்துல லயோலா கல்லூரில அவருக்கு சிறந்த நிர்வாகின்னு தேர்ந்தெடுத்து பட்டமும் விருதும் கொடுக்க முன் வந்தாங்க, நம்ம தங்கத் தலைவர் தானைத் தலைவர். அதை வேணாம்னு சொல்லிட்டார்’ என்றதும் இவருக்கு சிறந்த நிர்வாகி விருதா என்ற ஷாக்கில் அரங்கம் அமைதியாகிவிட்டது. உடனே கோசல் ச்சாரே, ‘ அவருக்கு கைத் தட்டுங்க’ என்று கேட்டுக் கொள்ள தண்ணி வாங்கித் தந்த நன்றியுணர்ச்சியுடன் கைத் தட்டினார்கள் ஊழியர்கள்.

அடுத்து பேசத் துவங்கினார் ஆ.போ.வரதராசன் சார். ‘யார் கிட்டயும் செல்போன் இல்லையே’னு கேட்டு முதலில் உஷாரானார். பிறகு, ‘எல்லோரும் நல்லா உற்சாகமா வேலை செய்யனும். எல்லா பிரச்சனையும் சீக்கிரம் தீர்ந்துடும்’னு ஆரம்பிச்சார். உடனே ஏற்கனவே சொல்லி வச்சிருப்பாங்க போல, சேலம் ஏரியா ரிப்போர்ட்டர் கதிரவன் எழுந்தார், ‘ சார், டாக்டர் தரப்புலருந்து பொங்கல் வாழ்த்துலாம் அனுப்புனாங்களே அது என்னது?’னு கேட்டார். அதுக்காகதானே காத்துக்கிட்டிருந்தார் ஆ.போ.வ. ‘ அதையெல்லாம் நம்பாதீங்க. அவங்க சும்மா குழப்பம் பண்றாங்க. நான் என்பத்தஞ்சாம் வருஷத்துலருந்து குமுதத்தை வளர்த்துக்கிட்டு இருக்கேன். அப்போ குமுதத்தை மூடிரலாம்னு இருந்தாங்க. நான் தான் இல்ல, இந்த நிறுவனத்தை மூடக் கூடாது நஷ்டத்துலருந்து நான் மீட்டுத் தரேன்னு சொல்லி நடத்தி இந்த லெவலுக்கு கொண்டு வந்திருக்கேன்’ன்னு சொன்னார்.

( ஊர் திரும்புனதும் பழைய குமுதம் பெருசு கிட்ட கேட்டேன் அப்படியான்னு. அது கெக்கே பிக்கேனு சிரிச்சது. 85ஆம் வருஷம் குமுதம்தான் இந்தியாவுலயே அதிகம் விக்கிற பத்திரிகை கிட்டத்தட்ட ஆறே முக்கால் லட்சம் வித்துச்சு. அப்போ எடிட்டர் எஸ்.ஏ.பி. நல்லா பாத்துக்கிட்டு இருந்தாரு. அது நஷ்டமா? கேக்குறவன் கேனைனு நினைச்சியா?னு டென்ஷன் ஆயிடுச்சு. இப்போ குமுதம் சர்குலேஷன் என்ன தெரியுமா? ரெண்டரை லட்சம். நல்லாதான் வளர்த்திருக்காரு ஆ.போ.வ.)

அப்புறம், ‘கருணாநிதி ஆட்சில என்னை கைது பண்ணாங்க. நாலு மணி நேரம் ஜீப்லயே கூட்டிட்டு சுத்துனானங்க. சிறைல அடைக்க முயற்சி பண்ணாங்க. கடவுள் அனுகிரகத்துல பொழச்சேன்’ன்னு சொல்லி அனுதாப ஓட்டு வாங்க ட்ரை பண்னார். நைட் அடிச்ச் தண்ணியின் நன்றிக்காக சிலர் உச்சு கொட்டினார்கள்.  (  பல கோடி ஆட்டைய போட்டதால அரெஸ்ட் பண்ணாங்க, அப்புறம் ஸ்டாலின் கால்ல வுழுந்து ஜெயில்லருந்து தப்பிச்ச கதையை சொல்ல மறந்துட்டாரு..அதுக்கு விசுவாசமாத் தான் இன்னைக்கு வரைக்கும் ஸ்டாலினுக்கு வாரம் வாரம் சொறிஞ்சு மேட்டர் பண்றாருங்க..!)

கடைசில எடிட்டோரியல நிமிர்ந்து நிக்க வைக்க ஐடியா கேட்டார். (கவர் வாங்காம,யாருக்கும் சொறிஞ்சு விடாம மேட்டர் பண்ணாலே போதும் சார்..)அப்போ போட்டோகிராஃபர் ஞானமணி எழுந்து ஒரு டவுட் கேட்டார். ‘ சார், பத்திரிகை ஆபீஸ்ல பத்திரிகை படிச்சா தப்பா? போட்டோகிராஃபர்லாம் பேப்பர் படிச்சா தலைவருக்கு புடிக்காதுனு புடுங்கிட்டு போய்டுறாங்க. தப்பா சார்?’ அப்பாவியா மூஞ்ச வச்சுக்கிட்டு கேட்டார். அதுக்கு பதில் சொல்லாமல் நழுவினார் வரதராசன். அடுத்து இன்கிரிமெண்ட் பற்றி கேள்வி.   ‘ கோர்ட் கேஸெல்லாம் முடிஞ்சதும் இன்கிரிமெண்ட் உண்டு’ என்றார். இப்படியே பேசிக்கிட்டு இருக்கும்போது சினிமா ரிப்போர்ட்டர் ரவிசங்கருக்கும் வரதாபாயுக்கும் வாக்குவாதம் வந்துருச்சு. அதை ஒரு வழியா சமாளிச்சு அசடு வழிய மத்தியானம் சந்திப்போம்னு கிளம்புனார்.

தங்கியிருந்த சபரி ஓட்டல் ஓனர் ரமணி ஐயர், ஆ.போ.வரதராசனுக்கு ”அந்தரங்க” ஆத்மார்த்த நண்பராம்.. அதனால அவருக்கு மட்டும் ”ஸ்பெஷல் ட்ரீட்” கொடுத்தாராம் தனியறையில்.(இந்த இடத்தில் சென்சார்...) அந்த ட்ரீட் திருப்தியில் ஆ.போ.வ.வால் மதிய மீட்டிங்கில் கலந்துக்கொள்ள இயலவில்லை. சாயங்கலாம் கொடைக்கானல் கீழே தான் வாங்கிப் போட்ட எஸ்டேட்களையும் தோட்டங்களையும் பார்த்துக் கொண்டே ஏர்போர்ட்டுக்கு விரைந்தார் ஆ.போ.வ. அதாவது ஆட்டயைப் போட்ட வரதராசன்.இந்த மலை விழுங்கி மகாதேவன் கிளம்பியதும் கொடைக்கானல் மலையே அப்பாடா தப்பிச்சோம் என்று பெருமூச்சு விட்டது.)

அவர் கிளம்பியதும் மதிய கூட்டத்தை திருவாளர்கள் குழும ஆசிரியர் கோசல் ச்சார், கும்மியடிக்கும் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன், தலையாட்டி ஆசிரியர் மணிகண்டன், கமுக்க ஆசிரியர் (உ)லோகநாயகி, பணக்கார ஆசிரியர் ஜான் வில்கின்ஸ் தலைமையில் நடந்தது. எல்லோரும் வேகவேகமாய் ஐடியாக்களை வீசினார்கள். மாலை தண்ணீர் அவசரம் அவர்களுக்கு.

மீட்டிங் முடிந்ததும் மீண்டும் தண்ணி பார்ட்டி. வாந்தி. கரூர் ஏரியா ரிப்போர்ட்டர் ஏகமாய் அடித்துவிட்டு பார்ப்போர் காலிலெல்லாம் விழுந்து மன்னிப்பு கேட்டார். ( ஆ.போ.வ.வுக்கு ஜால்ரா அடித்து திண்டுக்கல், கரூர் பகுதி அரசு அதிகாரிகளை வளைத்துப் போடும் பாவத்துக்கு பிராயசித்தம் போல). மன்னிப்பு கேட்டும் அடங்கவில்லை. அறைக்குள் இருந்த கண்ணாடி மேசையை தூக்கி இரண்டாம் மாடியில் வீச ஒட்டலே அலறிவிட்டது. குழும ஆசிரியர் கோசல் ச்சார் பார்த்துவிட்டு ‘இதெல்லாம் குடிச்சா சக்ஜம்’ என்றூ தட்டி கொடுத்துவிட்டு போய்விட்டார். காரணம் அவரே முழு போதை.

தலையாட்டி ஆசிரியர் மணிகண்டனுக்கு தண்ணியை ஏராளமாய் ஊற்றி விட்டார் கும்மி ஆசிரிய ப்ரியா கல்யாணராமன். அவர் போதை ஓவராகி பாத்ரூமில் வேலை முடிந்தப் பிறகும் அதே பொசிஷனில் நின்றுக் கொண்டிருந்திருக்கிறார். அப்புறம் சார் இருந்துட்டிங்க வாங்க் என்று கைத் தாங்கலாய் அழைத்து வந்திருக்கிறார்கள்.


ஞாயிறு (18-03-2012)மீண்டும் பாரின் சரக்குகள். ‘ இவ்வள்வு சரக்கா?’ என்று வியந்த நிருபர் ஒருவரிடம் ஜான் வில்கின்ஸ், ‘நீங்க எல்லாம் நல்லா ஒத்துழைப்பு கொடுத்தா தலவை இன்னும் கூட சப்ளை செய்வார்’ என்றார். தண்ணி மட்டும்தான் சப்ளை செய்வாரா இல்லை..அதுவுமா என்று கேட்க தோன்றியது. அடுத்த ட்ரிப்பில் கேட்டுக் கொள்ளலாம்  என்று விட்டுவிட்டேன்.(இன்று இரவு நடைபெற்ற ச்ச்சீ சில விஷயங்களை கலகக்குரலின் தரம் கருதி இங்கு பகிர்ந்து கொள்ள இயலவில்லை...)

                                     ஜான் வில்கின்ஸ்(உச்சத்துல்ல கண்ணு எப்படி சொருகிப்போய்க் கிடக்கு பாருங்க..)

திங்கள் (19-03-2012)காலையில் மீண்டும் பஸ் பிராயணம். யாரு தண்ணியடிக்கக் கூடாது என்று குழும ஆசிரியர் கண்டிஷன் போட, அவன் யார் கண்டிஷன் போட என்று செய்தி ஆசிரியர் ஜான் எகிறி குதித்து எல்லோருக்கும் மது சப்ளை செய்தார். இது அவரது சொந்தக் காசா. அடிவருடிகள் சொன்னது.

மொத்த டூருக்கு பத்து லட்சரூபாய் செலவாச்சாம். அத எங்க எல்லோருக்கும் பங்கு போட்டுக் கொடுத்திருந்தா செல்வுக்காவது ஆகியிருக்கும். இதான் நிறைய பேரோட புலம்பல்.

இதுதான் சார் நாங்க் ரூம் போட்டு யோசிச்சது. ஏப்ரல் புத்தாண்டு மலரை பாருங்க இந்த ஐடியால்லாம் தண்ணியா இஷ்யூவுல கொட்டும்”

கொடைக்கானலை விட்டுக் கிளம்பும் பொழுது தங்கியிருந்த ஓட்டல் வெளியே  நரிக்குறவர் ஒருவர் வாட்ச்மேனிடம் சொன்னது தான் பஞ்ச்..

நாடு என்ன நிலையில் இருக்குது சாமியோவ்.கூடங்குளம்,ஜெனிவா தீர்மானம்,விலைவாசி உயர்வு,மின்வெட்டு,தானே புயல் பாதிப்புன்னு எத்தனை பிரச்சனை நாட்டில் இருக்கு.உண்மையான பத்திரிகைக்காரனுங்கன்னா அதைப் பத்திக் கவலைப்படணும்.


ஆனா அதைப் பத்தித் துளியும் கவலைப்படாம இங்க வந்து குடிச்சுட்டு,கூத்தடிச்சுட்டு,கும்மாளமிட்டுட்டு,அக்கப்போர் பேசிக்கிட்டு அதுவும் அடுத்தவர் காசுல்ல...தூ இது என்ன மானக்கெட்டவங்க பொழப்பு சாமியோவ்... இதுக்குப் பதிலா....

என்று காறித்துப்பியது யார் காதிலும் விழவில்லை.யாரும் நிதானத்தில் இருந்தாத்தானே..!

கனத்த மனதுடன் கிளம்பினேன்.
4 comments:

கவிதை காதலன் said...

என்னய்யா இவங்க கதை காறி துப்புறமாதிரி இருக்கு....


நட்புடன்
கவிதை காதலன்

பரமசிவம் said...

குமுதத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிய வழியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.
உங்கள் பதிவு ஓரளவு என் தவிப்பைக் குறைத்தது.
தயவு செய்து இன்னும் விளக்கமாக எழுதுங்கள்.
இப்போது குமுதம் விற்பனை வெறும் இரண்டரை லட்சமா!?
ஆ.போ வரதராசன் வெகு விரைவில் இதழுக்கு ’மூடுவிழா’நடத்தி விடுவாரோ?
இன்னும் எழுதுங்கள். please..........

Raja said...

இன்றைய தமிழக பத்திரிக்கை உலகம் இப்படி சீரழிந்து கிடக்கிறதா :(

Barari said...

ஆட்டையை போட்ட வரதராஜன் குடிக்க கொடுத்தது மட்டுமல்ல கூட்டியும் கொடுப்பார் ..ஒரு காலத்தில் குமுதம் கையில் இருந்தாலே அவர் மதிப்பு மிக்கவராக பார்க்கப்பட்டார் .ஆனால் இன்று மஞ்சள் பத்திரிக்கை அளவுக்கு தரம் தாழ்த்திய பெருமை ஆ .போ . வரது வையே சாரும்