சென்னை ஆழ்வார்பேட்டை.சி.பி.ராமசாமி சாலையில் கீர்த்திலால் ஜூவல்லர்ஸ் எதிரில் இருக்கும் அபிராமபுரம் பழச்சாறு கடை.
ஊடகவியலாளர்கள் ரவிக்குமார்,பெஞ்சமின்,அன்பரசு,அன்வர் சந்திப்பு.
புதிய தலைமுறை அலுவலகம் தாக்குதலுக்கு நம்ம கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து இன்றைய கூட்டத்தை ஆரம்பிப்போம்,சொல்லியபடியே அன்வர் ஆரம்பித்தார்.
"தினகரனில் ஊதிய உயர்வு போட்டுட்டாங்கன்னும்,வழக்கம் போல் தனிப்பட்ட விருப்பு வெறுப்புடன் அளிக்கப்பட்டிருக்குதுன்னும் தகவல் வருது.எதுக்கும் விசாரித்து விரிவா எழுதுங்க."
" சரி விசாரிப்போம். இன்னும் மஜிதியா கமிட்டி பரிந்துரையை பெயருக்கு கூட அமல்படுத்தலையாமே..? "
"அப்படி ஒரு எண்ணமே துளியும் இல்லைன்னு சொல்றாங்க "ரவிக்குமார் சிரித்தபடியே சொன்னார்.
" மஜிதியா கமிட்டி பரிந்துரையை நிறுவனங்கள் ஒழுங்காக அமல்படுத்துகிறன்றனவா என்று கண்காணிக்க அரசு ஒரு கமிட்டி நியமிச்சிருக்காங்களே..! அது எப்படி செயல்படுது..? " பார்த்தசாரதி
"அந்த கமிட்டியே தகுதி இல்லாத நபர்களால் நியமனம் செய்யபட்டிருக்குது."
"இதில் நியமிக்கப்பட்டிருக்கும் சகாயராஜ் யாருன்னு ஊர் உலகத்துக்குத் தெரியும், சகாயராஜை 'மஜிதியா கமிட்டி' பரிந்துரை தொடர்பான கூட்டத்துக்கு அழைத்தால் பழக்க தோஷத்தில் நான்கு பேர் வந்திருக்கிறோம்,கவர் கொடுங்க என அதிகாரிகளிடமே கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.அப்படிப்பட்ட பேர்வழி. கோபால் ரிட்டயர்ட் ஆகி வீட்டில் இருப்பவர்.
சகாயராஜ் |
அன்பு யோக்கியதை நம் வாசகர்களுக்குத் தெரியும். அன்பழகனின் லெட்டர் பேடு அமைப்பான 'சென்னை யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்' கணக்குகள் தாக்கல் செய்யலைன்னு சங்கப் பதிவையே ரத்து பண்ணிட்டாங்க.
ஆனால் இப்படிப்பட்ட பேர்வழிகள் தான் கமிட்டியில் இருக்காங்க. இப்படியானவர்கள் எப்படி பரிந்துரையை அமல்படுத்த ஊடக நிறுவனங்களிடம் வலியுறுத்துவாங்க. "
அன்வர் கடைசி வரை நம்பிக்கை இன்றியே சொல்லி முடித்தார்.
**
"தந்தி டிவி' ரங்கராஜ் பாண்டே பெயர் திரும்பவும் சர்ச்சைக்குரியதாக இருக்குதே..? " பார்த்தசாரதி அடுத்த பஞ்சாயத்துக்கு தாவினார்.
பாண்டே என்பதே பீகாரில் இருக்கும் பார்ப்பனர் என்றும் சாதி வெறியுடன் அதனைத் தனது பெயருடன் இணைத்திருக்கிறார்,இது மட்டுமல்ல செங்கொடியின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தியவர் தான் இந்தப் பேர்வழி என்பதையும் நாம் ஏற்கனவே பதிவு செய்திருக்கிறோம் "அன்வர்
" அந்த நேர்காணலில் வீரமணியிடம் போதுமான தரவுகள் இல்லை என்பது உண்மை தான். ஆனால் பாண்டே ஒரு ஊடகவியலாளராய் நடந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய விஷயம் "ரவிக்குமார் கோபப்பட்டார்.
"ஆமாம், நேர்காணலில் எந்த ஆதாரத்தையும் குறிப்பிட்டுக் காட்டாத சாதி வெறி பாண்டே நிகழ்ச்சி முடிந்தவுடன் இணைத்திருக்கிறார். இது மிக தவறானது. இது குறித்து ஒரு பாக்ஸ் மேட்டர் இருக்கு கடைசியா சொல்றேன் " பெஞ்சமின் தொடர்ந்தார்.
"சரி,அது மட்டுமல்லாமல் 'வீரமணி' என்று பெயரைச் சொல்லி அழைத்தார். இது உண்மையில் தவறா என்று பார்த்தால் தவறில்லை தான். ஆனால் இதே அணுகுமுறையை அவர் மோடியிடமும் காட்டியிருக்க வேண்டும்,மோடியின் நேர்காணலில் நரேந்திரன் என்று அழைத்திருக்க வேண்டும்,அதை விட்டு விட்டு அங்கு பம்மி விட்டு, வீரமணி எனப் பெயர் சொல்லி அழைப்பது என்ன வகையான திமிர். அது மட்டுமல்ல,இந்த பாண்டே ஒரு காலத்தில் விநாயக சதுர்த்தியை சென்னை பிரஸ் கிளப்பில் நடத்தியவரும் கூடத்தான்."
சென்னை பிரஸ் கிளப்பில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் ரங்கராஜ் பாண்டே,பாரதி தமிழன் |
பார்த்தசாரதி,"ஆமாம், நல்லா ஞாபகம் இருக்குது. சாதி வெறி ரங்கராஜ் அப்ப பிரஸ் கிளப் இணைச் செயலாளர் பாரதி தமிழன் (எ) பெருமாள் கூடச் சேர்ந்து அதற்கான விதையை முதன் முதலில் ஊன்றியவர். இதனால் விமர்சனம் வரும் என்று நினைத்த பிரஸ் கிளப் நிர்வாகிகள் கண் துடைப்பாக இன்னொரு காரியத்தைச் செய்கிறார்கள்.
அதுவரை ரவீந்திரதாஸ் தான் ரம்ஜான் விழாவைத் தனது சங்கம் சார்பாக உரிய வாடகை கொடுத்து பிரஸ் கிளப்பில் நடத்தி வந்தார். விநாயகர் சதுர்த்தி கொண்டாட முடிவெடுத்த பிரஸ் கிளப் நிர்வாகிகள், ரவீந்திர தாசுக்கு ரம்ஜான் விழாவைக் கொண்டாட இடம் கொடுக்காமல்,விநாயகர் சதுர்த்திக்கு இரண்டு நாள் முன்பு ரம்ஜானையும் பெயருக்கு கொண்டடினார்கள்.
தொடர்ந்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி பிரஸ் கிளப்பில் ஆரம்பித்து வைத்தவர்கள் தான் இவர்கள்.இப்படித் திட்டமிட்டு இந்துத்துவ வெறியை வளர்ப்பதில் முனைப்பாய் இருந்த ஒரு நபரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்..?
இன்னும் சொல்லப்போனால் பிரஸ் கிளப்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கூடங்குளம் அணு உலை தொடர்பில் மூத்த பத்திரிகையாளர் ஞாநி தினமலரை விமர்சித்தார் என்பதற்காய் அப்பொழுது அங்கு வந்திருந்த இந்த ரங்கராஜ், ஞாநியையும் அணு உலை எதிர்ப்பாளர்களையும் தரக்குறைவாய் பேசியவர்.
"வேலை செய்யும் சொந்த சாதிக்காரனின் திறமையைச் சுரண்டியும் தமிழ் இன அடையாளத்தோடும் வளர்ந்த தந்தி நிறுவனம் இப்ப எங்கிருந்தோ வந்த பீகார் தற்குறிக்கும்,மலையாளிக்கும் லட்சங்களைக் கொட்டிக் கொடுத்து 'தந்தி டிவி'யில் வேலைக்கு வைத்திருக்கிறது "அன்வர் ஆதங்கப்பட்டார்.
பெஞ்சமின் பாக்ஸ் மேட்டரைச் சொல்ல ஆரம்பித்தார்."இதே மாதிரி தான் சில வருடங்கள் முன்னாடி,வலம்புரி ஜானின் 'தாய்' பத்திரிகையில் ஹேமா ஆனந்த தீர்த்தன் என்னும் எழுத்தாளர் நேர்காணல். நேர்காணல் எந்த பிரச்சனையும் இல்லாமல் முடிந்தது.
ஆனால் அச்சில் வரும் பொழுது அவரது ஒவ்வொரு பதிலுக்கும் பின்பு அடைப்புக்குறியில் நக்கலும் கிண்டலுமான தொனியில் நேர்காணலை எடுத்த உதவி ஆசிரியர் தனது கருத்தை இடைச்செருகலாய்ச் சொல்லியிருந்தார்.
இதைப் படித்த எழுத்தாளர் கொதித்து விட்டார்,வலம்புரிஜானுக்கு நீண்ட கடிதம் எழுதினார்."உங்கள் பத்திரிகையின் உதவி ஆசிரியர்,இந்த கிண்டல் குறிப்பை நேர்காணலின் பொழுதே சொல்லி எனது பதிலை வாங்கியிருக்கலாமே..? அலுவலகம் சென்ற பின் எனது ஒப்புதல் இல்லாமல்அவரது கருத்தை இணைத்தது தவறு "என்று எழுதியிருந்தார்.
இதைப் படித்த வலம்புரிஜான் அடுத்த இதழில் அதற்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.
"வலம்புரிஜானிடம் இருக்கும் நேர்மை தந்தி டிவியிடம் இல்லை என்பது தான் உண்மை "பார்த்தசாரதி குறுக்கிட்டார்.
அது சரி 'தாய்' இதழுக்காய் நேர்காணல் எடுத்தது யார் தெரியுமா..? அவர் இப்ப பிரபல திரைப்பட பாடலாசிரியர்.சில காலத்துக்கு முன்பு உச்சத்தில் இருந்தவர். இப்பவும் முகநூலில் ஆக்டிவ்வா இருக்கார். "பெஞ்சமின் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
**
"தந்தி டிவி குறித்துப் பார்த்தோம்.ஆனால் 'தினத்தந்தி' செய்தி போடவில்லை என்பதனாலே புதுசா ஒரு நாளிதழ் வருது தெரியுமா..? ரவிக்குமார்
அப்படியா..?
ஆமாம். புரட்சிப்புயல் வைகோ தொடங்குகிறார். 'தினத்தந்தி' தனது கட்சியின் செய்தியைப் போடுவது இல்லை என்பதால் வெளிநாட்டில் வாழும் ஈழத்தமிழர் ஒருத்தர் துட்டு கொடுக்க புது நாளிதழ் ஆரம்பிக்க இருக்குறார். 70 கோடி ரூபாய் முதலீடு செய்யத் தயாராய் இருப்பதாய் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் சொல்லிக்கிறாங்க.
புகைப்படம் நன்றி.திரு.சுந்தரராஜன் முகநூல் பக்கம் |
"ம். வேலை செய்யும் பத்திரிகையாளர்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்தால் வைகோ தொடங்கும் நாளிதழ் வளரட்டும் என வாழ்த்துவோம்." பெஞ்சமின்
**
அன்வர் அடுத்த செய்தியை ஆரம்பித்து வைத்தார்.
" வேந்தர் பச்சமுத்து தனது நோக்கத்தை தொடர்ச்சியா வென்றெடுத்துக் கொண்டு வருகிறார் பார்த்தீர்களா..?"
"புரியலை. தெளிவாச் சொல்லுங்க.அவர் காட்டில் எப்பவும் ஜெயம் தான்,அவருக்கென்ன குறைச்சல்..?"
"கல்வியை கடைச் சரக்காக்கி பல்லாயிரம் கோடியை குறுக்கு வழியில் ஈட்டிய பாரிமுத்து அதனை அரசியல்,ஊடகம் உட்பட பல்வேறு துறைகளில் முதலீடு செய்தார். ஊடகம் மூலம் தனது நிறுவனத்துக்கு பலவகை ஆதாயம் கிட்டும் என்பதும் தனக்கு எதிராய் எழும் எதிர்ப்புக்களை முனை மழுங்கச் செய்ய முடியும் என்பதும் அதில் முக்கியக் கணக்கு. 'புதிய தலைமுறை,''புது யுகம்,' 'வேந்தர்' போன்ற தொலைக்காட்சிகள் எல்லாம் மேற்கண்ட சூத்திரத்தின் விளைவு தான்.
தொலைக்காட்சிகள் உருவான பின்பு பச்சமுத்துவின் கல்விக்கொள்ளை,அரசியல் மற்றும் திரைத்துறையில் அவரது ஆதிக்கத்துக்கு எதிரான எதிர்ப்போ, மிரட்டலோ,பிளாக்மெயிலோ தமிழ்நாட்டில் பெரிய அளவில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசியல்வாதிகளிடம் இருந்தோ,பிற இயக்கங்களிடமிருந்தோ இல்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். இன்னும் சொல்லப்போனால் அனைத்துப் பிரிவினரும் அவரிடம் அடங்கியும் பம்மியும் தான் சென்று கொண்டிருக்கிறார்கள்.
"ம். அதுக்குத் தானே ஆரம்பிச்சது, அந்த பட்டியலில் எதும் அப்டேட் இருக்கா..? " ரவிக்குமார் ஆர்வம் காட்டினார்.
சுற்றுச்சூழலைக் காப்பதற்காய் அவதரித்ததாய் கட்டமைக்கப்படுகிற 'பூவுலகின் நண்பர்கள்' என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம்,சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு'பொழுதுகள் ஆறு' நிகழ்ச்சியை பெரிய அளவில் விளம்பரத்துடன் நடத்தியது. அந்த நிகழ்ச்சிக்கு முக்கிய ஸ்பான்சர் வேந்தர் பச்சமுத்து தான்.
என்.ஜி.ஓ.நிகழ்ச்சியில் பிரம்மாண்டமாய் வேந்தர் லோகோ தான் மின்னியது. அனைவரும் அதற்கு முன் நின்று தான் உரை நிகழ்த்தினார்கள்.
"ஒ.அப்படியா..? பச்சமுத்து ஆக்கிரமிப்பு பேர்வழியாச்சே..? அரசு புறம்போக்கு நிலம்,ஏரி என எதையும் விட்டு வைக்க மாட்டாரே..? இன்னும் சொல்லப்போனால் அவரது காட்டாங்கொளத்தூர் சாம்ராஜ்யம் சுற்றுச்சூழல்,வனப்பாதுகாப்பு,தீயணைப்புத்துறை விதிமுறைகள் எல்லாவற்றையும் காலில் மிதித்தும் காற்றில் பறக்க விட்டும் தானே உருவாக்கப்பட்டது. இவ்வளவு ஏன் காட்டாங்கொளத்தூர் ஏரியே இவர்களால் பெரிய அளவில் ஆக்கிரமிக்கப்பட்டதே..? அரசு கூட கண்துடைப்பாக ஒன்றிரண்டு இடங்களில் புறம்போக்கு ஆக்கிரமிப்பையும் அகற்றியுள்ளதே.?
எத்தனையோ மக்கள் திரள் அமைப்புகள் இதற்காக தங்களால் முடிந்த அளவு போராடி வருகின்றார்களே..? அவர்களுடன் அல்லவா இவர்கள் கை கோர்க்க வேண்டும்..?
நிறுத்துங்க...இப்படியே போனா நிற்காது.
"சரி தான். ஏரியையும் சுற்றுச்சூழலையும் காக்க வேண்டிய சூழல் அமைப்பு, ஐந்திணை, முந்நீர் விழவு, ஐம்பூதம் என தமிழ்ச் சூழலியல் பண்பாட்டில் நடைபெறும் சிதைவுகள் குறித்து எச்சரிக்கும் நிகழ்ச்சிக்கு அதற்கு முற்றிலும் எதிரான நபரிடம் கைகட்டி நின்னு உதவி வாங்கியிருக்குது.
இதுக்கு எப்படி பதில் விசுவாசத்தை செலுத்தப் போறாங்கன்னு தெரியலை. இவங்க சூழலைக் காக்கும் லட்சணம் இது தானா..? பச்சமுத்துவிடமே இந்தப் பம்மு பம்முனா இதை விட பல மடங்கு வலிமை வாய்ந்த அரசு அமைப்புகளை எப்படித்தான் எதிர்ப்பார்களோ..? என்ன நிலை என்று தெரியவில்லையே..?"
"எது எப்படியோ, ஊடக அதிபர் வேந்தர் கணக்கு எப்பவும் தப்பாது" ரவிக்குமார் சிரித்தபடியே சொன்னார்.
**
"விகடன் செய்தி எதுவும் இல்லையா..? "அன்வர்
"ஆ.விகடனில் வேலை பார்க்குறவங்க கடுமையான மன அழுத்தத்தில் இருக்காங்களாம் "
"ஏன் என்னாச்சு..? "
"அது ஒண்ணுமில்லை.ஏற்கனவே அங்கு கடுமையான வேலைப்பளு. குமுதத்தில் 20 க்கும் மேற்பட்டவங்க பார்க்குற வேலையை இங்க ஆறு பேரு தலையில் கட்டியிருந்தாங்க. வேலைத் தன்மையும் மிக அதிகம். அதிலும் இப்ப கலீல் ராஜா தப்பிச்சு விளம்பர நிறுவனத்துல சேர்ந்துட்டார். ஆனாலும் நிறுவனமோ புதிதாய் ஆள் எடுக்கும் விஷயத்தில் அரசாங்கம் மாதிரி மெத்தனப்போக்குடன் செயல்படுது. வேலையில் இருப்பவங்க பல்லைக் கடிச்சுக்கிட்டே சமாளிச்சுக்கிட்டிருக்காங்க. இதே நிலை நீடித்தால் விகடனில் வேலை பார்ப்பவங்க மன அழுத்தம் தாங்க முடியாம கஷ்டப்பட வாய்ப்பு இருக்கு " பெஞ்சமின்
ஆசிரியர் ரா.கண்ணன் கவனிப்பாரான்னு பார்ப்போம்.
**
"ஜு.வி.யில் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி ஈஸ்வரன் பேட்டி பார்த்தீர்களா ?" பார்த்தசாரதி
" ஆமாம். எதுவும் சம்பந்தம் இல்லாமல் இருக்குது. "
பார்த்தசாரதி தொடர்ந்தார்."இலங்கை சுற்றுப்பயணம் போய் வந்தது அவர் கட்சியில் ஒரு குழு. அதன் தலைவர் ஈஸ்வரன் இலங்கைக்குச் செல்லவில்லை. இவங்க பேட்டி எடுக்க முடிவு செய்தார்கள் என்றால் இலங்கைக்குச் சென்றஅந்தக் குழுவினரின் நேர்காணலை, திருப்பூர் நிருபரை விட்டு வாங்கிப் போட்டிருக்கலாம். இலங்கைக்குச் செல்லாமல் திருப்பூரில் இருக்கும் அதன் தலைவரிடம் இலங்கை சுற்றுப்பயண அனுபவங்களை நேர்காணல் செய்கிறார் கனிஷ்கா என்ற சூர்யா என்ற பாலகிஷன்,சென்னை அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு இதைச் செய்கிறார்.
"கொடுமையா இருக்குது. படிக்குற வாசகனை எவ்வளவு மடையனா நினைக்கிறாங்க. ஒரு நேர்காணலை யாரிடம் எடுக்கணும்,யார் செய்யணும் என்னும் அரிச்சுவடி கூடத் தெரியாத பாலகிஷன் சிறப்புச் செய்தியாளர் என்பது தான் கொடுமை "அன்வர் முடித்து வைத்தார்.
**
" 'ZEE tamil' தொலைக்காட்சியில் ஏதோ அடிதடின்னு தகவல் என்ன நடந்தது அங்கே..? "
"திரைப்பட சாட்டிலைட் உரிமை தொடர்பா பஞ்சாயத்து. வெள்ளக்காரதுரை என்னும் சிவாஜி பேரன் படத்தை ஹெவியான தொகை கொடுத்து வாங்கினாங்க. பிசினஸ் ஹெட் ஈஸ்வர் என்பவர் தான் டீல் பேசி முடிச்சார். ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன் இடையில் கொஞ்சம் பணமும் கணக்கில் வராமல் தொலைக்காட்சி நிர்வாகிகளுக்கு கை மாறியிருக்குது. படத்தயாரிப்புத் தரப்பில் அன்பான மதுரைக்கார கந்துவட்டி பார்ட்டி தான் டீல் பேசியவர்.
இதை யாரோ டெல்லி ஆபிசுக்கு போட்டுக் கொடுத்துட்டாங்க,உடனே அவங்க இங்க போன் பண்ணி படத்தை வாங்க வேண்டாமுன்னு சொல்லிட்டாங்க. கை நீட்டிக் காசு வாங்கிய பார்ட்டியால பணத்தையும் திருப்பித் தர முடியலை.ஒப்பந்தமும் போட முடியலை"
"அப்புறம் என்னாச்சு..?"
"அன்பானவர் வெகுண்டெழுந்து ஈஸ்வரை அலுவலகம் புகுந்து புரட்டி எடுத்துட்டார்.இப்ப பார்ட்டி ஆஸ்பத்திரிக்கு லட்சக்கணக்கில் செலவழித்தும் இன்னும் ஒத்தடம் தேவைப்படுதாம்."
"ம்ம்."
**
" 'தின இதழ்' பஞ்சாயத்து என்னாச்சு.., சம்பளம் வரலைன்னு எழுதியிருந்தோமே..? சம்பளம் வந்ததா..? இல்லை சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்களா..? " பெஞ்சமின்
"நாம் பதிவு எழுதிய மறுநாள் எல்லோருக்கும் சம்பளம் வந்துடுச்சு. ஆனாலும் வழக்கம் போல தொடர்ந்து சம்பளபாக்கியை வைத்துக்கொண்டு தான் இருக்காங்களாம்"அன்வர்
"தனது கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் நன்கொடையையும் ஒரு வருட கட்டணத்தையும் முன்கூட்டியே வாங்கும் முதலாளி பத்திரிகையில் வேலை செய்தவனுக்கு சமபளம் கொடுக்க மனசு வரல்லை. இவங்க எல்லாம் பத்திரிகை நடத்தலைன்னு யார் அழுதா." ரவிக்குமார்
**
" 'சிகப்பு நாடா' பத்திரிகையில் இப்ப கதிர்வேல் சார் இல்லையாமே..?"
ஆமாம்,அப்படி ஒரு பத்திரிகை வருவதே நிறையப்பேருக்குத் தெரியாது. இப்ப ஏழுமலை சார் தான் அனைத்தையும் பார்த்துக்கொள்கிறார். அது மட்டுமல்லாமல் இதை நக்கல் பண்னி 'தினகரன்' சுரேஷ் முகநூலில் நிலைச்செய்தி எழுதியதையும் பார்த்தேன்.இதுக்காக சுரேஷை மலைமோகன் கலாய்ச்சிருந்தார்.கதிர்வேல் சாரிடம் விமர்சனம் உண்டு.ஆனா அதுக்காக...சுரேஷ் போன்றவர்கள் இப்படிப் பேசுவதை என்ன செய்வது..?
"ஆர்.எம்.ஆர்.அல்லக்கை சுரேஷ் இது மாதிரி எழுதுவது ஆச்சரியம் இல்லை தான்."
**"'தமிழக அரசியல்' வாரமிருமுறை இதழில் மாதக்கணக்கில் சம்பளம் தரல்லைன்னு புகார் வருது.அதையும் விசாரித்து எழுதுங்க"-என்ற அன்வரின் கோரிக்கையோடு அன்றைய சந்திப்பு முடிந்தது.
No comments:
Post a Comment