ஊடக உலகில் எத்தனையோ தொழிலாளர் விரோதிகள் உண்டு. ஆனால் அவர்கள் அத்தனை பேரும் தினகரன் முதலாளிகள் கேடி பிரதர்சிடமும்,அவருக்கு கங்காணி வேலை பார்க்கும் ஆர்.எம்.ஆரிடமும் பிச்சை வாங்க வேண்டும்.
உழைக்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் இதர ஊழியர்களின் ஊதியம் குறித்த 'மஜிதியா கமிட்டி'யின் பரிந்துரைகளை தினமலர்,தினத்தந்தி உட்பட பெரும்பாலான பத்திரிகைகள் ஒரு வருடத்துக்கு முன்பே (பெயரளவிலாவது) அமல் படுத்தி விட்டனர்.
ஆனால் இன்று வரை அதை அமல்படுத்தவும்,அது குறித்து யோசிக்கவும் மறுக்கும் நிர்வாகம் தினகரன் மட்டுமே...!
இது எவ்வளவு பெரிய தொழிலாளர் விரோதப்போக்கு ? மோசடி..? இவர்கள் தான் ஊரில் இருப்பவர்கள் தவறுகளை எல்லாம் சுட்டிக் காட்டிச் செய்தி வெளியிடும் உத்தமர்கள்.
மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாமல் நீதிமன்றத்தில் ஆஜர் ஆவதிலும்,தலைமறைவிலும்,பயத்தில் ஓடி ஒளியும் நிலையிலேயே, தன் கீழ் வேலை பார்க்கும் ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்களின் வயிற்றை அடித்து இவ்வளவு பெரிய மோசடியை பகிரங்கமாய்ச் செய்கிறார்கள் என்றால் ஆட்சியில் இருக்கும் பொழுது இவர்கள் எப்படி நடதிருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள். எச்.ஆர்.சாந்தியிடம் யாரும் இது குறித்துக் கேட்டால் பெரும்பாலான நேரத்தில் மவுனமும் சில நேரத்தில் சிரிப்பு மட்டுமே பதிலாய் வருகிறது. எடிட்டர் ஆர்.எம்.ஆரை அவரால் பலனடையும் விசுவாசிகள் மட்டுமே பார்க்க முடிகிறது.
இது மட்டுமல்ல தினகரனின் சுரண்டலுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு.
ஒவ்வொரு வருடமும் வழங்கும் ஊதிய உயர்வை இரண்டு வருடங்களாக வழங்கவில்லை. ஏப்ரல் 2013 இல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வை ஜூன் 2013 இல் தான் வழங்கினார்கள். (அந்த இரண்டு மாத ஊதிய உயர்வையும் சுரண்டி விட்டார்கள்.) அதன் பின் 2014 ஆம் ஆண்டு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு வழங்கப்படவே இல்லை. இப்பொழுதோ 2015 ஏப்ரல் வந்து விட்டது. இந்த நிலையில் இந்த வருடமும் வழங்கும் எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை.
எந்தவொரு நிறுவனமாவது இப்படி ஒரு தொழிலாளர் விரோதப்போக்குடன் இருக்குமா என்று தெரியவில்லை. இதனை வலியுறுத்தி வீதிக்கு வந்து போராடும் நிலையில் தொழிலாளர்கள் இல்லை. இந்நிலையில் தினகரன் நிர்வாகம் கைமாறும் என்ற பேச்சு நாடு முழுவதும் இருப்பதால் வேலை செய்பவர்களிடையே இயல்பாகவே பதற்றமும்,மன அழுத்தமும் வந்திருக்கிறது.
எப்பொழுது ஊதிய உயர்வு..? எப்பொழுது மஜிதியா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்துவார்கள்..?
எப்பொழுதும் சுரண்டியே ஆசியாவின் பெரிய பணக்காரக் குடும்பம்,குறைந்தபட்சம் தனது கீழ் வேலை பார்க்கும் பத்திரிகையாளர்களைச் சுரண்டி வயிறு வளர்ப்பதை எப்பொழுது நிறுத்தும்..?
2015 ஏப்ரலிலாவது ஊதிய உயர்வும் மஜிதியா கமிட்டி பரிந்துரையும் அமல்படுத்தப்படுமா..?
தொடர்பு செய்தி
பட்டப் பகலில் ஒருத்தன் கிட்டயிருந்து எட்டரை லட்சத்தை வழிப்பறி பண்ணிட்டா எனச் சொல்லிய படியே பீட்டர் மாமா வந்தார்.
அப்படியா என்னன்னா சொல்றேள்,உடம்பை வருத்திக்காதீங்க முதல்ல கொஞ்சம் மோர் குடிங்க
இப்ப சொல்லுங்க.யார் கிட்டயிருந்து வழிப்பறி பண்ணிட்டாள்../போலிசுக்கு போறது தான்ன
நான் சொல்றதைக்கேளு குறுக்க பேசாத,உன்னாலயே எனக்கு பிரஷர் அதிகமாயிடுது.
ம்ம்.எல்லாப் பழியையும் என் மேல போடுங்க..சொல்லுங்க
திருச்சியில் சங்கம் அப்படின்னு ஒரு ஹோட்டல் இருக்குது,அந்த முதலாளி ஒரு பெரிய தப்புப் பண்ணிட்டான்,அது எப்படியோ திருச்சியில் இருக்குற நம்ம பத்திரிகை மேனேஜருக்குத் தெரிஞ்சுடுச்சு. உடனே அவா சங்கம் ஓட்டல் முதலாளிக்கு போன் போட்டார்.
அதானே.. நம்ம ஆளுங்களா கொக்கா..? மறுநாள் அவாளைக் கண்டிச்சு எட்டு காலம் செய்தி போட்டு நாறடிச்சிருப்பாளே..?
செத்த நிப்பாட்டுறியா..? குறுக்க பேசாதன்னு தானே சொன்னேன்.
மாமி அமைதியானார்.
போன் போட்டு பேசின மேனேஜர், நேர்லயே போய்ட்டார்.அங்க போய் அவாளை மிரட்டி எட்டரை லட்சம் வாங்கிட்டு,உனக்கு எதிரா ஒரு செய்தியும் வராது அப்படின்னு சொல்லிக் காபி குடிச்சுட்டு வந்துட்டார்.
அடப்பாவி எட்டரை லட்சம் வழிப்பறியா..?
பொறு.இது எப்படியோ கச்சேரி ரோட்டுல உட்கார்ந்துருக்குற எம்.டி.ரமேஷூக்கு தெரிஞ்சிடுச்சு. உடனே திருச்சி மேனேஜருக்கு போன் போட்டு மறுநாள் கிளம்பி சென்னை ஆபிஸ் வரச் சொன்னார்.
அதானே..? தப்பு பண்றவா ரமேஷ் கிட்டயிருந்து தப்பிக்க முடியாது. பகவான் ரமேஷ் மூலமா திருச்சி மேனேஜரைத் தண்டிப்பார்.
முறைத்துப் பார்த்தார் பீட்டர் மாமா.அமைதியானார் மாமி.
வந்தவுடன் நாக்கைப் பிடுங்குற மாதிரி ரமேஷ் கேள்வி கேட்டார்,எனக்கே தெரியாம பிராடுத்தனமா? நான் எத்தனை பேரு கண்ணுல விரல் விட்டு ஆட்டியிருப்பேன்,உன்னை வேலைக்குச் சேர்த்த என்னையே ஏமாத்துறியா..? என் கிட்ட சொல்லியிருந்தா உனக்கு கொஞ்சம் பங்கு கொடுத்துருப்பேன்.இப்ப ஒரு பைசா கூட உனக்கு கிடையாது. ஒழுங்கா மரியாதையா அந்த எட்டரை லட்சத்தை வச்சிட்டுப் போ,இனிமேலாச்சும் சொல்லிட்டுச் செய் எனச் சொல்லி மொத்த பணத்தையும் வாங்கிக் கொண்டு அனுப்பிட்டார்.
மாமி இப்பொழுது மயக்கமாகி விட்டார்.
No comments:
Post a Comment