Thursday, 16 April 2015

கலாநிதி மாறனின் அல்ஷேசன் நாய்க்கு வெறி..! ஊழியரைக் கடித்துக் குதறியது..!!டந்த 25 ஆண்டுகளில்  மனித உரிமை பற்றிய விழிப்புணர்வு அனைத்து மட்டங்களிலும் ஏற்பட்டு விட்டது. மாதா,குரு என்ற வரிசையில் உள்ளவர்கள் தங்களின் உரிமைக்குத் தீங்கிழைத்தாலும் அதற்கு எதிரான குரல்கள் எழத்தான் செய்கின்றன. ஆசிரியர் மாணவனைப் பிரம்பால் அடித்து நாடு தழுவிய விவாதமாய் எத்தனையோ முறை எழுந்துள்ள‌து. ஊடகங்களும் அத்தகைய குரல்களுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியிடுகின்றன. இதனால் யாரும்  வெளிப்படையாய் தீங்கைச் செய்ய அஞ்சுகின்றார்கள்.

ஆனால் நம் கையில் இந்தியாவின் மிகப்பெரிய ஊடக குழும‌ம் இருக்கிறது,நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்னும் திமிரில்,கொழுப்பில் ஆணவத்தில் அதிகார மமதையில் தனக்கு கீழ் வேலை செய்த ஒரு சாதாரண ஊழியனை அடித்து மிதித்து சித்திரவதை செய்து கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கம் நாளிதழ் ஆசிரியர் மற்றும் நிர்வாக இயக்குனர் மீதான குற்றப் பட்டியல் இது.

தினகரன் நாளிதழ் கே.பி.கே குமரன் தரப்பிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்ட பின்பு அதன் ஆசிரியர் மற்றும் நிர்வாக இயக்குனராய் பொறுப்பேற்றவர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ்.

இவருக்கு ஊடகம் குறித்து என்ன தெரியும்..?

இவர் ஆசிரியர் பொறுப்பேற்ற பொழுது, தனக்கு கீழ் பணியாற்றிய ஊழியர்களிடம் இவரது வார்த்தைகளிலேயே சொல்வதென்றால், "பத்திரிகை குறித்து  எனக்கு எதுவும் தெரியாது."

அப்படியென்றால் இவருக்கு எப்படி இந்தப்பதவி கிடைத்தது ?

கலாநிதிமாறனின் கல்லூரித் தோழர். அது மட்டுமல்ல,அவரது அனைத்து சட்டவிரோத காரியங்களுக்கும் துணை நிற்பவர். இது ஒன்று போதாதா மாறன் சாம்ராஜ்யத்தின் தளபதியாய் பொறுப்பேற்க..?

கலாநிதிமாறன் கோபத்தில் இருந்தால் இவரை 'நாய்' என்றும் மகிழ்ச்சியாய் இருந்தால் 'அல்சேஷன் டாக்' என்றும் அழைப்பார்.(அல்ஷேசன்கள் கலாநிதியை மன்னிக்க வேண்டும்)

இவர் தான் ஒட்டுமொத்த 'தினகரன்' சாம்ராஜ்யத்தின் தளபதி.இவருக்கு விசுவாசமான ஆட்கள் தான் ஆசிரியராகவும் அனைத்து பதிப்புகளிலும் மேலாளர்களாகவும் இருக்கிறார்கள். இவரன்றி 'தினகரன்' நாளிதழில் அணுவும் அசையாது. ஊழியர்களின் சம்பள உயர்விலிருந்து புதிதாய் நியமிக்கப்ப‌டுவது வரை மற்றும் நிர்வாகம் முழுமையும் இவரது அனுமதியின் பெரிலும் தலையசைப்பிலும் நடக்கும். இவருக்கு முகஸ்துதி போட்டு பிழைப்பு நடத்தும் கும்பல் 'தினகரனில்' மிக அதிக அளவில் இருக்கிறது என்பது உபரித்த‌கவல்.

இந்த அறிமுகம் போதும் என நினைக்கிறோம்.

இனி இவர் ஊழியர்களிடம் நடப்பது குறித்து சிறு அறிமுகம்.

யாரையும் இவர் மரியாதையாக நடத்தியது கிடையாது, எவ்வளவு பெரிய அனுபவசாலி,வயதில் முதியவர் என்றாலும் ஒருமையிலும் தரக்குறைவாகவும் தான் வார்த்தை வரும்.

ஆனால் வல்லவன் உண்டல்லவா..?

இவருக்கு சுயமரியாதை பாடம் எடுக்கும் தைரியம் ஒருவருக்கு இருந்த‌து.

அப்பொழுது 'சன் நியூஸ்' ஆங்கில சேனல் ஒளிபரப்பாகி கொண்டு இருந்த‌து. அண்ணா அறிவாலய வளாகத்தில் தான் அலுவலகம்.

ஆர்.எம்.ஆர் எடிட்டோரியலில் நுழைகிறார். அங்கு ஒரு ஊழியரை அழைக்கிறார் எப்படி தெரியுமா..?

"டேய் இங்க வாடா..?"

யாரும் திரும்பவில்லை.திரும்பவும் அருகில் சென்று அழைக்கிறார்.

"டேய் இங்க‌ பாருடா..? உன்னைத் தாண்டா..? காது செவிடா..?"

அந்த ஊழியர் சடாரென்று கோபத்துடன் திரும்புகிறார். அவரது பெயர் நம் ஞாபகத்தில் இல்லை.'பிலிக்ஸ்' என வைத்துக் கொள்வோம்.  திறமையானவர்.

"மிஸ்டர் ஆர்.எம்.ஆர்.,முதலில் மரியாதையாக பேசக் கற்றுக் கொள்ளுங்கள். "

கூழைக்கும்பிடு போடுபவனையும்,அச்சத்துடன் விலகிச்செல்பவனையும்,போலி மரியாதையையும் பார்த்துப் பழகிப்போன ஆர்.எம்.ஆருக்கு  இந்தப் பதிலைக் கேட்டவுடன் முகம் மாறுகிறது. ஆனாலும் சமாளிக்கிறார்.

"என்னப்பா நான் என்ன சொல்லிட்டேன்,நம்ம ரெண்டு பேருக்கும் இருக்கும் பழக்கத்தில் தானே இப்படிக் கூப்பிட்டேன்" என சமாளிக்கிறார்.

நண்பர் விடவில்லை. "நம்ம ரெண்டு பேருக்கும் எவ்வளவு வருட பழக்கம் ?இங்கு வேலைக்கு வந்த பின்னாடித்தான் தெரியும்.அப்புறம் எப்படிக் கூப்பிடலாம்..? சரி நானும் அதே காலப் பழக்கம் தானே..? உங்களை டா போட்டு கூப்பிடலாமா மிஸ்டர்..? "

ஆர்.எம்.ஆர்.வெலவெலத்துப் போகிறார்.

"உங்க கூடத்தான் படிச்சார் கலாநிதி மாறன்,அவரை எல்லோர் முன்னாடியும் டா போட்டுக் கூப்பிட முடியுமா..? முதலில் மரியாதையா நடந்துக்கோங்க‌..நீங்க‌ எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் அது பத்தி எனக்கு கவலையில்லை."

வெளிறிய முகத்துடன் வெளியேறுகிறார்.

னது ஊழியரை இவ்வாறு இழிவாய் நடத்தும் ஆர்.எம்.ஆர் தனது முதலாளியிடம் எப்படி கூழைக் கும்பிடு போடுவார் தெரியுமா..? அதற்கு ஒரு சம்ப‌வம் சொல்கிறோம்.

தயாநிதி மாறன் மத்திய ஜவுளித்துறை கேபினட் அமைச்சராய் பதவியேற்ற சமயம்.

'தினகரன்' அலுவலக ஊழியர்கள், கச்சேரி சாலை அலுவலகத்தில்  சந்தித்து வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

 'தினகரன்' மற்றும் 'தமிழ் முரசு' ஆசிரியர் (பொறுப்பு) வகிக்கும் திரு.கதிர்வேல் தலைமையில் ஒரு பிரிவு செல்கிறது. அவருடன் 'தமிழ் முரசு' நியூஸ் எடிட்டர் மனோஜ் மற்றும் நிருபர் மோகன் ஆகியோரும் உடன் செல்கின்றனர்.

தயாநிதிமாறன் முன்பு இவர்கள் சரிக்குச் சமமாய் அமர, 'தினகரன்' இதழின் அதிகாரபூர்வமான ஆசிரியர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர்.எப்படி நடந்து கொள்கிறார் தெரியுமா..?ஒரு ஓரத்தில் கைகட்டி ஆபிஸ் பையன் மாதிரி நிற்கிறார். இத்தனைக்கும் தயாநிதி மாறனின் உடன்பிற‌ந்த சகோதரன் கலாநிதிமாறனின் கல்லூரித் தோழர் மற்றும் நண்பர் தான் ஆர்.எம்.ஆர். ஆனால் இளைய முதலாளி முன்பு சேரில் அமராமல் கைகட்டி சேவகம் செய்கிறார். இப்படி கூழைக்கும்பிடு போடுபவர் தான் இவர்.

ஆனால் இதே ஆர்.எம்.ஆரோ தனக்கு கீழ் வேலை செய்யும் தொழிலாளியை கொத்தடிமை போல் நடத்துகிரார்.

எஸ்.பி.வீட்டில் ஆர்டர்லி வேலை பார்க்கும் காவலர்,தனனைத் தேடி காவல்நிலையம் வரும் அப்பாவியைத் தூக்கிப் போட்டு மிதிப்பதில்லையா..? அந்த எடுத்துக்காட்டு ஆர்.எம்.ஆருக்கு முற்றிலும் பொருந்தும்.

இனி ஆர்.எம்.ஆரின் ரவுடித் தனத்தைப் பார்ப்போம்.தினகரனில் உதிய உயர்வு இரண்டு ஆண்டுகளாய் மறுக்கப்பட்டு வந்தது.

 இந்த நிலையில், ஏப்ரல் 9 ஆம் நால் ஊதிய உயர்வு சிலருக்கு மட்டும் கண்துடைப்பாய் அளிக்கப்ப‌ட்டது. அதை எதிர்த்து பெரும்பாலோனோர் அமைதி காக்க சுயமரியாதை மிக்க லேஅவுட் ஆர்ட்டிஸ்டுகள் ஏப்ரல் 10 ஆம் தேதி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துகின்றனர்.***

கேஷ் பழைய  தினகரன் ஊழியர்.ஆபிஸ் பாயாக தினகரனில் 5 வருடமும்,அதைத்தொடர்ந்து  லே அவுட் ஆர்ட்டிஸ்டாக 7 வருடமும் வேலை பார்த்தவர்.

இனி நடந்த சம்பவத்தை பாதிக்கப்ப‌ட்ட லேஅவுட் ஆர்ட்டிஸ்டான மகேஷ் வார்த்தைகளிலேயே கேட்போம்.

மகேஷ்


"நான் சென்னை கச்சேரி சாலையில் அமைந்துள்ள 'தினகரன்' நாளிதழ் அலுவலகத்தில் லே அவுட் ஆர்ட்டிஸ்டாக கடந்த 7 ஆண்டு காலமாய்ப் பணிபுரிந்து வருகிறேன். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாய்  எனக்கு ஊதிய உயர்வு கொடுக்கவில்லை.  

அதனால் கடந்த 10.04.2015 அன்று நானும் இன்னும் சில அலுவலக ஊழியர்களும் ஊதிய உயர்வு கோரி தினகரன் அலுவலகத்தினுள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினோம். அப்பொழுது எங்களுடன் தலைமை வடிவமைப்பு நிர்வாகி திரு.வேதராஜன் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினார். 

ஆனால் நாங்கள் ஒப்புக் கொள்ளாததால் ஆசிரியர் பொறுப்பு வகிக்கும் திரு. ராமன்   எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. அதைத்தொடர்ந்து தலைமை நிருபர் திரு.சுரேஷ் வேதநாயகம் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

எங்களின் குறைகளை எழுதித் தருமாறும் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ்  கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு வாங்கித் தருவதாகவும் உறுதி அளித்து எங்களின் கோரிக்கையை எழுதி வாங்கிக் கொண்டார். அதை ஏற்றுக் கொண்டு நான் உட்பட அனைவரும் எமது கோரிக்கையை எழுதி அவரிடம் தனித்தனியாய்க் கொடுத்தோம்.

என்னிடம் கடிதம் வாங்கும் பொழுது திரு சுரேஷ் வேதநாயகம்,நிர்வாகத்துக்கு எதிராய் உனது செயல்பாடு இருக்கிறது, அதற்கான விலையை நீ கண்டிப்பாய் கொடுக்க வேண்டி வரும் என மிரட்டினார்.ஆனால் நாங்கள் அமைதியாக இருந்து விட்டோம்.

அதன் பின் 13-04-2015 தினகரன் அலுவலகத்தில் மதியம் 12.45 மணி அளவில் பணியில் இருந்த பொழுது டெலிபோன் ஆபரேட்டர் வனிதா எனக்கு போன் செய்து மதியம் 2.30 மணிக்கு நிர்வாக இயக்குனர் திரு.ஆர்.எம்.ஆர் ரமேஷைச் சந்திக்க எம்.ஆர்.சி.நகரில் அமைந்துள்ள‌ சன் நெட்வொர்க் தலைமை அலுவலகத்துக்கு செல்லுமாறு கூறினார். 

அதனை ஏற்று நான் உடனடியாக சுமார் 1.30 மணி அளவில் அங்கு சென்றேன். அந்த சமயத்தில் திரு.ஆர்.எம்.ஆர்.ரமேஷ் அங்கு இல்லை,அவரது உதவியாளர் திரு.மணி என்பவர் மட்டும் இருந்தார். அவர் நிர்வாக இயக்குனர் மதிய சாப்பாட்டுக்கு சென்றிருப்பதாகவும் மாலை 3 மணி அளவில் வருமாறும் கூறினார். அதைக்கேட்டு நான் மீண்டும் தினகரன் அலுவலகத்துக்கு பணிக்குச் சென்றேன்.

அதன் பின்  சுமார் 2.15 மணி அளவில் மீண்டும் சன் நெட்வொர்க் அலுவலகத்துக்கு நானும் சக ஊழியர் ராஜூம் கிளம்பிச் சென்றோம், அப்பொழுது சன் நெட்வொர்க் அலுவலகம் அருகில் தினகரன் தலைமை நிருபர் திரு.சுரேஷ் வேதநாயகம்,எங்களை வழிமறித்து,எம்.டி, ஆர்.எம்.ஆரிடம் எதிர்த்து பேச வேண்டாம், நடைபெற்ற போராட்டத்துக்கு வடிவமைப்பு நிர்வாகி திரு.வேதராஜன் தான் காரணம் எனச் சொல்லுங்கள் ,ஆர்.எம்.ஆர்.ரமேஷ் கோபமாக இருந்தால் காலில் விழுந்து விடுங்கள்,அவர் மன்னித்து விடுவார்,இல்லையென்றால் சிக்கல் தான் என எச்சரித்தார்.

அடியாளுக்கு ஆள்காட்டி சுரேஷ்

அதன்பின் நானும் திரு.ராஜூம் சுமார் 2.30 மணி அளவில் சன் நெட்வொர்க் தலைமை அலுவலகம் சென்றோம்.அங்கு நாங்களும் எனது சக லே அவுட் ஆர்ட்டிஸ்டுகள் மதி,அருணாச்சலம்,சுதாகர் ஆகியோர் அவர் அறை அருகில் காத்திருந்தோம்.நாங்கள் அனைவரும் சுமார் 3.15 மணி அளவில் தினகரன் நிர்வாக இயக்குனர் அழைப்பின் பேரில் உள்ளே சந்திக்கச் சென்றோம்.

உள்ளே நுழைந்தவுடன் எங்கள் அனைவரையும் பார்த்த திரு.ஆர்.எம்.ஆர்.ரமேஷ்,"வாங்கடா தேவடியா பசங்களா கொடுக்குறதை வாங்கிட்டு வேலையைப் பாருங்க‌டான்னா ஸ்டிரைக் பண்றீங்களாடா" எவ்வளவு திமிருடா..? என தரக்குறைவான வார்த்தைகளால் எங்களை கடுமையாகத் திட்டியதோடும் இல்லாமல் தனது இருக்கையில் இருந்து எங்களை நோக்கி தாக்கவும் முயன்றார். அதைக் கண்டு அச்சத்துடன் இதர ஊழியர்கள் அனைவரும் அவரது காலில் விழுந்தனர். ஆனால் நான் மட்டும் அமைதியாய் இருந்தேன்.

 இதனால் ஆத்திரமடைந்த ஆர்.எம்.ஆர்.ரமேஷ் என்னை சராமாரியாகத் தாக்கினார்.அப்பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்தேன்,அதைத்தொடர்ந்து என் கழுத்தில் காலை வைத்து,எங்களை எதிர்த்தால் கொலை செய்து விடுவதாய் மிரட்டினார். நான் எதுவும் செய்வதறியாது உயிர் பயத்துடன் அமைதியாய் இருந்தேன்.

அதன் பின் அனைவரையும் மீண்டும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டிய ஆர்.எம்.ஆர்.ரமேஷ், கதிர் இப்படித்தான்,நான் வாங்க மட்டேன்னு நினைச்சு ரிசைனிங் லெட்டர் கொடுத்தாரு. நான் எதுவும் சொல்லாம வாங்கிட்டேன். இப்ப என்ன நிலைன்னு தெரியுமா..? இங்க இருக்கும் வரைக்கும் தான் உங்களுக்குமதிப்பு. என்று சொல்லி மீண்டும் எங்களை கடுமையாகத் திட்டினார். 

என்னுடைய அடையாள அட்டையை மட்டும் பிடுங்கிக் கொண்டு,எல்லோரையும் கிளம்பச் சொன்னார். எல்லோரும் சென்ற பின்பும் நான் அமைதியாய் இருந்தேன்.

 "இப்படியே ஓடிப்போயிரு,இனிமேல் எங்காவது பார்த்தால் உன்னை மட்டுமல்ல உனது குடும்பத்தில் எல்லாரையும் சாவடிச்சுடுவேன்" என்று மிரட்டினார். அதன் பின் அவரது அலுவலக உதவியாளரை அழைத்து என்னைக் கழுத்தைப்பிடீத்து வெளியே தள்ளச் சொன்னார்.அதற்குள்ளாக நானாகவே வெளியே வந்து விட்டேன். "


(இந்த நிலையில் தினகரன் நிர்வாகத்துக்குச் சொந்தமான புதுத்தெருவில் உள்ள இடத்தில் தங்கியிருந்த மகேஷ் அங்கிருந்து வலுக்கட்டாயமாய் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.பாதிக்கப்ப‌ட்டவர் இன்னும் அச்சத்தில் இருப்பதால் புகார் கொடுப்பது குறித்து தயங்குகின்றார்.)திய உயர்வு கோருவதும்,அதற்காய் போராட்டம் நடத்துவதும் தொழிலாளர்களின் அடிப்படை உரிமை.ஆனால் அப்படி நடத்திய தொழிலாளிகளை தரக்குறைவாகப் பேசியும் அச்சுறுத்தியும் காலில் விழ வைத்துப் பணியவைத்திருக்கிறார் அடியாள் ஆர்.எம்.ஆர்.அதற்கு உடன்படாத ஒரு தொழிலாளியை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.இதற்கெல்லாம் காரணம் நம்மிடம் ஊடக பலம் இருக்கிறது,நாம் மாறனின் அடியாள் என்னும் திமிர் தான்.ஜெயலலிதா ஆட்சியிலேயே இந்த ரவுடித்தனம் என்றால் கருணாநிதி ஆட்சியில் இவர்கள் எவ்வளவு கொட்டம் ஆடியிருப்பார்கள் என்று நினைத்துப் பாருங்க‌ள். 

மகேஷை தாக்கிய அதே நாளில் ஊதிய உயர்வு கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் தினகரனில் விரிவாய் வெளிவந்திருக்கிற‌து. ஆனால் இன்னொருபுறமோ தன்னிடம் ஊதிய உயர்வு கோரிய பணியாளனை அத‌ன் நிர்வாக இயக்குனர் எனச் சொல்லிக்கொள்ளும் ரவுடி தாக்கியிருக்கிறார். 

'தினகரன்' நிறுவனத்துக்குள் நீங்கள் நுழையும் முன்பிருந்து அந்த நிறுவன வளர்ச்சிக்குத் தங்களை அர்ப்பணித்தவர்கள் மகேஷ் போன்றவர்கள். ஆனால் நீங்க‌ளோ சுரண்டவும் ஏமாற்ற‌வும் பிழைக்கவும் மட்டுமே இந்த நிறுவனத்துக்குள் நுழைந்தவர். இந்த வழக்கில் நீங்கள் தப்பிக்கலாம்,ஆனால் இது என்றும் நீடிக்காது.

நாம் ஆர்.எம்.ஆருக்குச் சொல்லிக் கொள்வது எல்லாம் ஒன்று தான்.

உலகையே அடக்கி ஆண்ட எத்தனையோ சாம்ராஜ்யங்கள் கடைசியில் மண்ணோடு மண்ணாய்ப் போயிருக்கிற‌து. அதனை ஒப்பிடும்பொழுது மாறன் சாம்ராஜ்யம் தூசுக்குப் பெறாது. அதுவும் நீங்களோ நாட்டைச் சுரண்டிய மாறனை அண்டிப்பிழைத்தும் சுரண்டியும் வாழ்க்கை நடத்துபவர். உங்களின் நிலை மாறவும், வீழவும், தெருவில் திரியவும் காலம் அதிகமில்லை. 

அன்று தெரு நாய் கூட உங்கள் மேல் மூத்திரம் பெய்யும் .


1 comment:

AAR said...

Even when Maran bros are caught in deep trouble, their pet dog is behaving like this.

It shows the arrogancy of the entire Maran family. Hope CBI and ED finishes them off.