Sunday 26 August 2012

சிதறும் குமுதம் டீம்..! ஏழு பேர் ராஜினாமா...!


                                              
குமுதம் ஆசிரியர் குழுவில் நடைபெறும் வெட்டுக் குத்து தொடர்கிறது

லேட்டஸ்ட் பலி குமுதம் ரிப்போர்ட்டரின் இணையாசிரியரான வெங்கட்ராஜினாமா செய்துவிட்டு புதிய தலைமுறையில் சேர்ந்துவிட்டார். 

இதில் என்ன வேடிக்கை என்னவென்றால் வரதராஜன் பொறுக்கி எடுத்த ஆட்களில் இந்த வெங்கட்டும் ஒருவர்இவர் முதலில் குமுதத்தில் வேலைப் பார்த்துவிட்டு விகடன் பக்கம் ஒதுங்கியவர்அங்கே நாணயம் விகடனில் நிம்மதியாய் இருந்தவரை கோசல் ச்சார் மூலம் ரிப்போர்ட்டர் டீமுக்கு அழைத்தார் .போவரதுஇதற்காக ரகசிய சந்திப்புகள் நடந்தன


வெங்கட்


விகடனைவிட இரட்டிப்பு சம்பளம் வழங்குவதாக வாக்களித்தார் .போ. வரது. இதற்கு ஆசைப்பட்ட வெங்கட்டும் சம்மதித்தார். வந்தார். அவருக்கு இணையாசிரியர் பதவி கொடுக்கப்பட்டது.

அவரை அழைத்து வந்ததும்தான் கோசல் ச்சாருக்கு தான் செய்த முட்டாள்த்னம் புரிந்தது. அழைத்து வந்த கோசல் ச்ச்சாரைவிட நீண்ட கால நண்பர் க.பஞ்சா. செய்தி ஆசிரியர் ஜான் வில்கின்ஸிடம்தான் விசுவாசமாய் இருந்தார் வெங்கட். இது கோசல் ச்ச்சாருக்கு பிடிக்கவில்லை

சிறிது சிறிதாக தொல்லைகள் கொடுக்க ஆரம்பித்தார். இதழ் தாமதமாக அச்சுக்குப் போகிறது என்று வெங்கட்டுக்கு மெமோ கொடுத்தார். வெங்கட்டுக்கு நெருக்கமாக இருக்கும் ஆட்களை ஓரங்கட்டத் தொடங்கினார். இதெல்லாம் வெங்கட்டுக்கு டென்ஷனை ஏற்படுத்தின.

.போ.வரது குட்டியை சந்திக்கலாம் என்றால் அவர் நேரம் கொடுக்க மறுத்தார். பொறுத்தது போதும் பொங்கியெழலாம் என்று நினைத்து வேலைக்கு சேர்ந்த ஏழே மாதங்களில் ராஜினாமா கடிதம் கொடுத்து விலகிவிட்டார்.

ப்ரியா தம்பி, மலை மோகன் போன்ற உதவியாசிரியர்கள் குமுதம் ரிப்போர்ட்டரிலிருந்து வெளியேற காரணமாயிருந்தவர் வெங்கட் என்பது குறிப்பிடத்தக்கது

முற்பகல் செய்யின்.....

வெங்கட் வெளியேறியதும் குமுதம் குழும பிரச்சனை சூடு பிடித்திருக்கிறது.

வெங்கட்டைத் தொடர்ந்து லேஅவுட் பொறுப்பாளராக இருந்த ஜேக்கப் ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டார். அவரைத் தொடர்ந்து உதவி ஆசிரியர் தளவாய் சுந்தரமும் நிருபர் ஆனந்த் செல்லையாவும் ராஜினாமா கடிதங்களை கொடுத்திருக்கிறார்கள்

ஜேக்கப் 


தளவாய் சுந்தரம்

ஆனந்த் செல்லையா


இவர்கள் மட்டுமில்லாமல் ஆசிரியர் குழு உதவியாளர் சுரேஷ்ஷும் ராஜினாமா செய்து விட்டார். இவர்தான் குமுதம் கட்டுரைகளுக்கு சன்மானம் அனுப்புபவர். குமுதம் கட்டுரைகளுக்கு ரெம்யுனரேஷன் சரிவர செல்லவில்லை என்ற நீண்டகால புலம்பலை சரி செய்தவர் இவர்தான்.

இனி பழைய மாதிரிதான் சன்மானம் வரும் ஆனால் வராது.

டாக்டர் வசந்த் செந்தில்

குமுதம் ஹெல்த் இதழுக்கு பொறுப்பாசிரியாராக இருந்த டாக்டர் வசந்த் செந்திலும் ராஜினாமா செய்துவிட்டார். இவர்களைத் தவிர .டி துறை எஞ்சினியர் தாமஸ் ராஜினாமா செய்திருக்கிறார்

ஆக இந்த ஆகஸ்ட் மாத ராஜினாமாக்கள் மட்டும் ஏழு.

அடுத்ததாக‌  முக்கிய பதவியில் இருக்கும் இருவர் ராஜினாமா செய்யப் போகிறார்கள் என்றும் அவர்களைத் தொடர்ந்து பலர் எகிறிக் குதித்து ஓடத் தயாராய் இருக்கிறார்கள் என்றும் செய்திகள் கசிந்துக் கொண்டிருக்கிறது.

இப்படித் தொடர்ந்து ஆட்கள் விலகிக் கொண்டிருக்க அது குறித்து கண்டுகொள்ளாமலும் அலுவலகம் வராமலும் வரது இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்ன காரணமாய் இருக்கும்..?
                                        

3 comments:

indrayavanam.blogspot.com said...

குமுதம் அழிவுபாதையில் செல்கிறது. நல்ல பதிவு

Anonymous said...

sir.wishes for your effort to reflect current scenario of media. On Jayatv plus a social worker had openly blamed/accused lyricist vairamuthu as the intermediate between the DMK leader and granite baron PRP for illegal quarrying .Are Media investigating about this in detail. Any reliable news report on this "media stand" from 'those' who value unbiased journalism.

ramasamy said...

நீங்கள் எல்லோரும் சேர்ந்து புதிய மாதம் இருமுறை இதழ முதலில் துவக்குங்கள்.அதற்குமுன் குறைந்தபட்சம் 5000 பேரிடம் வலைத்தளம் மூலம் முகவரியுடன் பதிவு செய்து கொள்ளச் சொல்லுங்கள். share கூட வாங்கலாம். நல்லன செய்க. உங்கள் உழைப்ப்பின் பலன் உங்களுக்கும் மக்களுக்கும் சென்றடையட்டும். விகடனிலிருந்து வெளியேறியவரின் மல்லிகை மகள் ஓர் உதாரணம்.வாழ்த்துக்களுடன்.