Monday, 3 September 2012

வீழ்வது தமிழ் இனமாக இருப்பினும் வாழ்வது நாமாக இருக்கட்டும்-தாத்தா வழியில் பேரன்கள்..!ஈழத்தில் உள்ள தமிழர்களைத் தொப்புள் கொடி உறவு என்ற சொல்லாடல் மூலம் முதன்முதலில் விளித்தது முரசொலி மாறன்.அதனைத் தான் இன்று அனைவரும் பயன்படுத்துகிறார்கள் என்று பேராசிரியர் க.அன்பழகன் டெசோ மாநாட்டில் சொன்னதாக தி.மு.க.உடன்பிறப்பு ஒருவர் பெருமையுடன் முகநூலில் பகிர்ந்திருந்தார்.

ஆனால் அந்த முரசொலி மாறனின் மகன்கள்,தொப்புள் கொடி உறவுகளின் மயானத்தில் வர்த்தகம் தொடங்க இருக்கும் சிறுமையை இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.

திருவாரூர் வீதியில் 14 வயதில் இந்தி அரக்கியை எதிர்த்து மாமா வுடன் கொடி ஏந்திச் சென்று போராடியதாகச் சொல்லப்பட்ட,சண்முகத்தம்மாள் மகனாகிய மாறன் அடுத்த 30 ஆண்டுகளில் இந்தி ஏகாதிபத்தியத்திற்கு அடிமையாய் கொடி தூக்கிய அவலத்தைக் கண்டவர்களுக்கும்,அதற்குப் பரிசாய் பல நூறு கோடிகளின் சாம்ராஜ்யங்களுக்கு அதிபதியாய் ஆன வரலாறு தெரிந்தவர்களுக்கும் அவரது மகன்களின் செய்கை துளியும் வியப்பளிக்காதது  தான்.

ஆனாலும் நடக்க இருப்பதைப் பகிர வேண்டியது நமது கடமை.


இந்த நூற்றாண்டின் மிக மோசமான இனப்படுகொலை இலங்கையில் நடைபெற்றிருக்கும் நிலையில் அதற்கு உரிய நியாயம் கேட்டு உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும், தமிழர்களும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அவர்களின் குரல்கள் செவிடர் காதில் ஊதிய சங்காக இருக்கிறது.அதே சமயம் தமிழினப் படுகொலைக்குக் காரணமான சிங்கள இனவாதத்துடன் அனைவரும் போட்டி போட்டுக் கை குலுக்கித் தங்கள் வர்த்தக நலன்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர்.தனது கொலைகார முகத்தை மறைப்பதற்காக இதனை சிங்கள இனவாதம் முழுமூச்சுடன் செய்கிறது.

சிங்கள ஏகாதிபத்தியம் அதிலும் தமிழ்நாட்டுத் தமிழன் என்றால் ராஜமரியாதையுடன் சிவப்புக் கம்பளம் விரிக்கிறது.அதிலும் போராட்டக்காரர்களின் குரலை யார் தமிழ்நாட்டில் எதிரொலிப்பார்கள் என்று ”நம்பப் படுகிறதோ”,யார் கையில் ஊடகம் இருக்கிறதோ, அவர்களுக்கு உச்சபட்ச மரியாதையை வழங்க ராஜபக்சே கும்பல்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

புதிய தலைமுறை தொலைக்காட்சி குழுமத்தின் பல்கலைக் கழகம் இலங்கையில் கால் பதித்ததை ஆதாரங்களுடன் ஏற்கனவே வெளியிட்டோம்.அந்த வரிசையில் இப்பொழுது மாறன்களுக்குச் சொந்தமான ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தனது வணிகத்தை கொழும்புவிற்கு வரும் செப்டம்பர் 20 ஆம் தேதியில் இருந்து  மதுரையில் இருந்து தொடங்குகிறது.


தொடர்புடைய இணைப்புக்கள்.

சன் டிவி தொடங்கப்பட்டதற்கும் இன்று அசுர வளர்ச்சி அடைந்ததற்கும் ”திராவிடர்”களின் நலனுக்காகத் தொடங்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட தி.மு.க. எந்த அளவு பின்னணியில் இருந்தது என்று ஊடக அரசியல்,தமிழ்நாட்டு அரசியல் தெரிந்தவர்களுக்குத் தெரியும்.(சன் டிவி குறித்த தெளிவான சித்திரததை இதன் மூலம் அறியலாம்.)

http://savithrikannan.blogspot.in/2007/05/blog-post.html

காலங்கள் மாறிய பின் பதவி வெறிக்காக,இன்று தி.மு.க.,இனப்படுகொலைக்குத் துணை நின்றதைப் போல,வணிக நலன்களுக்காக சன் குழுமம் லட்சக்கணக்கான தமிழர்கள் புதைக்கப்பட்ட மயான பூமியில் வர்த்தகம் தொடங்க இருக்கிறது.

தி.மு.க.விலாவது பெயரளவுக்காவது இன்னும் இனம்,மொழி,என்று இன்னமும் பேசிக் கொண்டு இருக்கின்றனர்.  

ஆனால் சன் தொலைக்காட்சி குழுமங்களிலோ நடுநிலை என்பதும்,இனம்,மொழி என்பதும் என்றும் எப்பொழுதும் பெயரளவுக்குக் கூட கிடையாது. ஒருதலைப்பட்சமான செய்தி,இருட்டடிப்பு போன்றவற்றுக்கு சன் குழுமத் தொலைக்காட்சிகள் தான் அஸ்திவாரம்.இதனால் தான் இந்தியாவில் எங்கும் இல்லாத அளவுக்குத் தமிழ்நாட்டில் தான் ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஆளுக்கொரு தொலைக்காட்சி தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. 

தமிழ்நாட்டில்  ஊடக அறம் என்பதே இன்று கேலிக் கூத்தாகி விட்டது.

2009 இல் நடைபெற்ற இறுதிக் கட்டப்போரின் பொழுது கூட பாதிக்கப்பட்ட தமிழர்கள் சார்பாகச் செய்தி எதனையும் சன் குழும ஊடகங்கள் வெளியிட்வில்லை.இலங்கை ராணுவம் கிளிநொச்சியைப் பிடித்தது,இலங்கை ராணுவம் முன்னேறுகிறது என்று தான் செய்தி வெளியிட்டன.

இந்த லட்சணத்தில் இனி ஈழ விஷயத்திலும்,தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விஷயத்திலும்,தமிழ்நாட்டில் அவர்களுக்கு ஆதரவாய்ப் போராடுபவர்களின் குரல்களை எதிரொலிப்பதிலும் நடுநிலை என்பது சன் குழுமத்தில்

பெயரளவுக்கு அல்ல,மயிரளவுக்கும் இருக்காது என்பது தான் உண்மை. தொடர்பற்ற ஆனால் தொடர்புடைய செய்தி.

சினிமாப் பாட்டுப் பாடும் கலைக் கூத்தாடிகளை எதிர்த்து குரல் எழுப்பியவர்கள்,ஏர்டெல் போன்ற வணிக நிறுவனங்களை எதிர்த்த கட்சியினர் யாரும் இதில் குரல் கொடுக்க மாட்டார்கள் என்று புதிய தலைமுறை விஷயத்தில் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.ஏனென்றால் அவர்களுக்கான இலவச மார்க்கெட்டிங் கை அவர்கள் எப்படிக் கெடுத்துக் கொள்வார்கள்.?நன்றி விசுவாசமும் காரணமாய் இருக்கலாம்.இதுவும் உங்களுக்குத் தெரியும்.

அவர்களாவது அரசியல்வாதிகள்.அவர்கள் அப்படித்தான் என்பது உலகிற்குத் தெரியும்.ஆனால் இதில் அம்பலப்பட்ட அமைப்பும் சில இருக்கின்றன.குறிப்பாய் இனப்படுகொலை நடைபெற்ற நாளை நினைவு கூறும் வகையில் தொடங்கப்பட்ட அமைப்பு புதிய தலைமுறை குழுமம் கொழும்பில் தொழில் தொடங்கும் விஷயத்தில் கள்ள மவுனம் சாதித்தது தான்.இந்த விஷயத்தில் என்ன செய்கிறது என்று பார்ப்போம்.

ஊழலுக்கும் அதிகார வெறிக்கும்,முறைகேட்டிற்கும்,ஜாதி வெறிக்கும் மனிதர்களும் அமைப்புகளும் பலியாவது மட்டும் நம் கண்ணுக்குத் தெரிகிறது.
ஆனால் இலவச பப்ளிசிட்டிக்கு மனிதர்கள் பலியாவது நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. அதையும் கண்டுகொள்ளுங்கள்.

4 comments:

Anonymous said...

வளம் கொழிக்கும் அத்தியாவசிய தொழில்கள் ( டிவி , மீடியா , போக்குவரத்து , தொலை தொடர்பு , ரீடெயில் , ஸ்டார் ஹோட்டல்கள் , மருந்து பொருட்கள், சிமென்ட் , சர்க்கரை, மதுபானம் உற்பத்தி ....இப்படி) எதையும் விட மாட்டார்கள்...பார்ப்போம் ....கிளிநொச்சி, யாழ் பாணம், திரிகோணமலை...ஏன் முள்ளி வாய்க்காலை கூட வளைத்து போட்டிருக்கலாம்...! நாளைய இலங்கையின் சுற்றுலா இவர்கள் கையில் மிதக்கலாம். யார் கண்டது ?

புதிய தலைமுறையின் வளர்ச்சியை தடுப்பதற்காக ஜி டிவியை(GTV SPV) சன் டிவி ஆரம்பித்ததோ என ஒரு சந்தேகம். ஜிடிவி பற்றிய செய்திகள் சேகரித்து வழங்கினால் நலம்.முடியுமா....?

அ. வேல்முருகன் said...

முதலாளிக்கு சுடுகாட்டில் பணம் கிடைக்கிறது என்றால் முதல் ஆளாய் நிற்பான். விதிவிலக்க ஏதும் கிடையாது

Anonymous said...

ஜி டிவி எஸ்பிவி( G TV SPV) யாருடையது என்ற கேள்விக்கு வினவு மூலம் விடை தெரிந்தது. விடுதலை சிறுத்தைகளின் வேட்பாளரான வேலாயுதம் தான் உரிமையாளராம்......!
http://www.vinavu.com/2012/10/04/24x7-truths/

பின் குறிப்பு : வேலாயுதம் யார் ......?

2009 மக்களவை தேர்தலில் ‌தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைக‌ள் க‌ட்‌சிகளுக்கு ‌சித‌ம்பர‌ம், ‌விழு‌ப்புர‌ம் ஆ‌கிய இர‌ண்டு தொகு‌திகளை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி ஒதுக்‌கினா‌ர்.

இ‌ந்த இரண்டு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை இன்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்தார். அத‌ன்படி சிதம்பர‌‌ம் தனி தொகு‌தி‌யி‌ல் தொல்.திருமாவளவனு‌ம், விழுப்புர‌‌ம் தனி தொகு‌தி‌யி‌ல் எஸ்.பி.வேலாயுதமு‌ம் போ‌ட்டி‌யிடு‌கி‌ன்றன‌ர்.

இதை‌த் தொட‌‌ர்‌ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையும் ‌திருமாவளவ‌ன் வெ‌‌ளி‌யி‌ட்டா‌ர். ‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய ‌திருமாவளவ‌ன், 40 தொகு‌தி‌‌க‌ளி‌ல் எ‌‌ங்க‌ள் கூ‌ட்ட‌ணி மாபெரு‌ம் வெ‌ற்‌றி பெறு‌ம் எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், த‌மிழக உ‌ரிமைகளை ‌மீ‌ட்போ‌ம், த‌மி‌‌‌‌ழின ந‌ல‌ன்களை கா‌ப்போ‌ம் எ‌ன்ற கோஷ‌‌த்தை மு‌ன்வை‌த்து தே‌‌ர்த‌ல் ‌பிரசார‌த்த‌ி‌‌ல் ஈடுபடுவோ‌ம் எ‌ன்றா‌ர்.

‌சித‌ம்பர‌‌ம் தொகு‌தி‌யி‌ல் 2 முறை போ‌ட்டி‌யி‌ட்டு தோ‌ல்‌வி அடை‌ந்த ‌திருமாவளவ‌ன் த‌ற்போது 3வது முறையாக போ‌ட்டி‌யிடு‌கிறா‌ர்.

ம‌ற்றொரு வே‌ட்பாளரான வேலாயுத‌ம், செ‌ன்னை மடி‌ப்பா‌க்க‌த்தை சே‌ர்‌ந்த ‌பிரபல தொ‌‌‌ழில‌திப‌ர் ஆவா‌ர்.

விடுதலை சிறுத்தைகள் சார்பாக விழுப்புரம் வேட்பாளர் வேலாயுதம் மீது 171 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கலான வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவாகியிருக்கிறது.

எஸ்.பி.வேலாயுதத்திற்குப் பதிலாக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சாமிதுரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வாழ்க இந்திய ஜனநாயகம்......! வளர்க மீடியா மாபியா.........!

questnaveen said...

its a genuine post and having very good description....
India's No 1 Local Search Engine


QuestDial