Monday, 23 January 2012

வரதராஜா சாமியோவ் இம்புட்டு நல்லவரா நீங்க!

குமுதம் குழுமத்தின் சார்பில் தானே புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி செய்ய இருப்பதாகவும் அதற்காக வாசகர்களிடமிருந்து நன்கொடை திரட்டித் தமிழக அரசிடம் அளிக்க இருப்பதாகவும் குமுதம் குழும இதழ்களில் நாமே கொடுப்போம் என்னும் பெயரில் அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறார் பா.வரதராஜன்.

இதுவரை சமூக நலன்சார்ந்த எந்த விஷயங்களிலும் அக்கறை காட்டாத வரதராஜன் இப்பொழுது முதன் முதலாக ’ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டுக்” களத்தில் இறங்கியுள்ளார்.

சோழியன் குடுமி சும்மாவா ஆடும்?

இதன் உள் நோக்கம் இதன் வாயிலாகத் தமிழக முதல்வரைச் சந்தித்து அதனைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு குமுதம் குழும இதழ்களில் வெளியிட்டுத் தனக்குத தமிழக முதல்வரிடத்தில் மிகுந்த செல்வாக்கு இருப்பதைப் போல ஒரு பிம்பத்தை வெளி உலகுக்குக் காட்டுவதுடன் குமுதத்தின் உண்மையான உரிமையாளர் ஜவகர் பழனியப்பனை அச்சுறுத்துவதற்கும் அதனைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளார் குமுதத்தை ஆட்டையப் போட்ட வரதராஜன்.

இதன் மூலம் வாசகர்கள் பணத்தில் வள்ளலாகக் காட்டிக் கொள்ள இன்னொரு மோசடிக்கு அடிப்போட்டுள்ளார்.

ஏற்கனவே சுனாமி பேரழிவு வந்தாலும் வந்தது.அதனால் பாதிக்கப்பட்ட மக்களோ இன்னும் நிர்க்கதியாய் இருக்கிறார்கள்.ஆனால் ஒரு சிலர் அவர்களின் பெயரைச் சொல்லி வசூலித்துக் கார்,பங்களா வங்கியில் டெபாசிட் அப்படின்னு வசதியாய் ஆகிட்டாங்க.

ஆனால் வரதராஜன்,பல கோடி மோசடி செய்தார் என்று சென்னை மாநகரக் காவல் துறையின் மத்தியக் குற்றப் புலனாய்வுப் பிரிவால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டு,இன்னும் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் (குற்ற எண் 196/2010) அந்த வரதராஜன் தானே சீரழிவைக் காரணம் காட்டி இப்பொழுது வசூல் வேட்டையில் இறங்கியுள்ளார்.


                 விசாரணைக்கு காவதுறை ஆணையாளர் அலுவலகம் வரும் வரதராஜன்.
இவரது நல்லெண்ணத்தை நாம் பாராட்டலாம்.சுனாமி பணத்தை சிலர் மோசடி செய்தது போல,குமுதம் முதலாளி எஸ்.ஏ.பி.அண்ணாமலையின் சொத்தினைச் சிலர் மோசடி செய்ததைப் போல அப்பாவி வாசகர்களின் பணத்தை இவர் மோசடி செய்ய மாட்டார் என நாம் நம்புவோம்.

ஆனாலும் எச்சரிக்கையுடன் இருங்கள் வாசகர்களே!

நாமே கொடுப்போம்ன்னு சொல்லியிருக்கார் வரதராஜன்.
குமுதத்தை ஆட்டையப் போட்ட சாமியோவ் எஸ்.ஏ.பி.அண்ணாமலை சொத்தினை அவரது வாரிசுகளுக்கு நாமே கொடுத்துடலாமே சாமி!!
வாசகர்களுக்கு நீ நல்ல விஷயத்தைச் சொல்லியிருக்க சாமி,
இந்த விஷயத்தில் உன்னையும் சேர்த்துக்க சாமி!அடுத்தவங்க சொத்தினை ஆட்டையப் போடுவது இதில் சேராதா சாமியோவ்!விளை நிலங்களைக் காங்கிரீட் வளங்களாக மாற்றினோம் ன்னு நல்லாத் தான் டயலாக் விடுறீங்க சாமியோவ்!ஆனா நீ பண்ற ரியல் எஸ்டேட் பிசினஸ் மட்டும் காங்கிரிட் வனமா இல்லாம விளை நிலமாவா மாறுது சாமி?

சொல்லுக்கும் செயலுக்கும் எந்தச் ச்ம்பந்தமும் இல்லாத நீ நல்லாத் தான் தத்துவம் பேசுற சாமி!

இயற்கையை நாம் வஞ்சித்தோம்.இயற்கை நம்மை வஞ்சிக்கிறது

என்னமோ நல்லாத் தான் சொல்றீங்க சாமி.தமிழ்ல இதை ஒட்டி ஒரு சொலவடை இருக்கு சாமி!தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் அப்படின்னு.

உனக்கு கண்டிப்பா அது பலிக்கும் சாமி!அது வரைக்கும் சந்தோஷமா இருங்க சாமியோவ்.


No comments: