Sunday, 22 January 2012

கையில காசு காலையில் நியூசு-ஹிந்து ராமின் ஆத்மார்த்த ஸ்லோகம்

காசுக்குச் செய்தி-ஊழலில் திளைக்கும் ஊடகங்கள்நம் நாட்டில் ஊடகங்கள் தற்பொழுது கொள்ளையர்களின் கைப்பிடியில் சிக்கிக் கொண்டுள்ளது.எந்த அர்ப்பணிப்பும் இல்லாத பத்திரிகைத் துறையைப் பற்றி ஒன்றும் தெரியாத,ஒரு சில பண முதலைகளிடம் மிரட்டிப் பணம் பறிப்பதற்கெனவே தொடங்கப்பட்ட வாரமிருமுறை, வார,மாதமிருமுறை,மாத இதழ்கள் மற்றும் நாளிதழ்கள் புற்றீசலைப் போல் நாடு முழுவதும் பரவிக் கிடக்கிறது.

கள்ளச் சாராயம் காய்ச்சுபவன்,சந்தனக் கடத்தல்,கள்ள நோட்டு அச்சடிப்பவன்,விபச்சாரத்தைத் தொழிலாகக் கொண்டவன்,சுயநிதிக் கல்லூரி நடத்தி நாட்டைச் சுரண்டியவன் எல்லாம் இன்று பத்திரிகையாளனாகவும்,உரிமையாளனாகவும் அவதாரம் எடுத்துள்ளனர்.

இதனால் தியாகம்,அர்ப்பணிப்பு லட்சியம் கொள்கை என்று பத்திரிகைத் தொழில் மட்டுமே வாழ்க்கையாக இருந்து வரும் பத்திரிகையாளர்களின் மதிப்பு மரியாதை முற்றிலுமாய் அழிந்துள்ளது.

அரசியல்வாதி உயர் அதிகாரிகள் அரசு ழியர்கள் செய்யும் ஊழலைப்பற்றி எழுதும் பத்திரிகைகள் மற்றும் அதில் பணியாற்றும் பத்திரிகையார்கள் செய்யும் ஊழலைப்பற்றி எழுதினால் இதற்காகவே ஒரு நாளிதழ்,நாலு வார இருமுறை தழ்களைக் கூட நடத்தலாம்.

ஆரம்ப கால கட்டத்தில் சம்பளத்தைக் கூட கருத்தில் கொள்ளாமல் இன விடுதலைக்காய்,நாட்டு விடுதலைக்காய்ப் போராடிய லட்சியவாதிகளைக் கொண்டே பத்திரிகை நிறுவனங்களும் அதில் பணியாற்றும் ஊழியர்களும் உழைத்து வந்தனர்.

நாளடைவில் த்துறையில் பண முதலைகள் களம் இறங்கினர்.முதலீடு செய்பவன் பத்திரிகையின் ஆசிரியன் என்ற இழிநிலை நாடு விடுதலை அடைந்த பிறகே உருவானது.

இப்பொழுது நிலையே தலைகீழாக மாறிவிட்டது.தற்பொழுது தேசிய அளவில் காசுக்குச் செய்தி வெளியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.இதை ஆங்கிலத்தில் paid news என்று அழைக்கிறார்கள்.காசுக்குச் செய்தி என்னும் கழிசடைக் கலாச்சாரம் முதன் முதலில் தொழில் நிறுவனங்ளின் விம்பரம் பெற்று அந்த நிறுவனங்ளால் உற்பத்தி செய்யும் பொருட்கள் எப்படியிருப்பினும் அது குறித்து உயர்வாக எழுதுவதே என்ற நிலையாக இருந்தது.

இதன்படி பெரும்பாலான் பத்திரிகைகள் விளம்பரம் என்ற பெயரில் காசு பெற்றுக் கொண்டு தரம் குறைந்த பொருட்களை எல்லாம் தரமானவை என்று எழுதி வந்தனர்.இதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக தனிநபர்கள் கொடுக்கும் விம்பரம் பெற்றுக்கொண்டு கொடுத் நபர் சமூக விரோதியாக இருந்தாலும் அவனை வள்ளல்,கொடைவள்ளல்,தர்மசீன் உத்த்ம புத்திரன் உலக ரட்சகன் என்று துதிபாடி எழுதத் தொடங்கினர்.மோசடி நிறுவனங்களிடமிருந்து விளம்பரம் பெற்று அந் நிறுவனங்களை உயர்வாக எழுதினர்.

பத்திரிகைகளில் இப்படிப்பட்ட செய்தியைக் கண்டு ஏமாந்த பொது மக்கள் அந்நிறுவனங்ளில் முதலீடு செய்து ஏமாந்த கதை ஏராளம் ஏராளம்.ஆனால் இதில் ஏமாந்தது அப்பாவி மக்கள் மட்டுமே.மோசடி நிறுவனங்ள் இந்த அப்பாவி மக்களின் பணத்தைச் சுருட்டி ஓடி விடுவதும் அந்த நிறுவனத்தால் கொடுக்கப்பட்ட விம்பரங்களால் கொழுத்த பத்திரிகை நிறுவனங்ள் ஏராளம் இதில் துளியும் பாதிக்கப்படவில்லை..மக்கள் ஏமாறக் காரணமான விளம்பரத்தை வெளியிட்ட பத்திரிகை நிறுவனங்கள் இதுவரை எந்த சட்டத்தாலும் தண்டிக்கப்பட்டதில்லை.வருங்காங்களில் மோசடி நிறுவனங்களால் விளம்பரமாக  கொடுக்கும் தொகையை அந்தந்த  பத்திரிக்கை நிறுவனங்களிடமிருந்து வசூலித்து மாந்தவர்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும்.அப்பொழுது தான் மோசடிப்பேர்வழிகள் கொடுக்கும் விளம்பரங்களைப் போட இந்த நிறுவனங்ள் யோசிக்கும்.அதே போல் ஊழல் அரசியல்வாதிகள் கொடுக்கும் விம்பரங்களுக்கான தொகைகளையும் திரும்பப்பெற சட்டம் கொண்டுவர வேண்டும்.இப்படி ஊழலில் திளைக்கும் ஊடகங்களில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறும் வினோத ஊழல்கள் பலவகைகள்.

ஊடகங்கள் தொடங்கப்பட்ட ஆரம்ப கால கட்டங்களில் அந் நிறுவனங்ளில் வேலை செய்யும் செய்தியாளர்களுக்கு குறைந்த தியம் வழங்கப்பட்டு வந்தது.இதற்குக் காரணம் அந்தக் காலகட்டத்தில் பெரும் முதலீடுகளைச் செய்து யாரும் பத்திரிகை நிறுவனங்ளை ஆரம்பிக்கவில்லை.நாட்டின் விடுதலைககாகவும்,இன விடுதலைக்காகவும்  மாநிலக் கட்சிகள் தங்கள் கட்சியின் வளர்ச்சிக்காகவுமே பத்திரிகைகளை நடத்தி வந்தனர்.இதனால் சேவை மனப்பான்மையில் அன்றைய ஊகவியலாளர்கள் தாங்கள் கொண்ட கொள்கையின் காரணமாகக் குறைந்த ஊதியத்திற்குப் பணியாற்றி வந்தார்கள்.அப்பொழுது அந்த ஊழியர்களுக்கு கொள்கையும் லட்சியமுமே பிரதானமாக இருந்தது.தியம் இரண்டாம் பட்சமாய் இருந்து.

இதனால் அக்கட்சியைச் சார்ந்த முக்கியப் பிரமுகர்கள் கட்சி சார்ந்த ஊடக் நிருபர்களுக்கு செலவுக்கு வைத்துக் கொள் என்று ஏதோ ஒரு தொகையைக் கையில் கொடுப்பார்கள்.நாளடைவில் இதுவே கவர் கலாச்சாரமாக கொஞ்சமாக வளர்ந்து இன்று ஆலவிருட்சம் போல் வளர்ந்துள்ளது. 

இன்றைய முதலாளிகள் கோடிக்கணக்கில் முதலீடு செய்து கொள்ளை லாபம் ஈட்டி வரும் சூழலிலும் கொள்ளையோ லட்சியமோ இல்லாத ஊடகவியலாளர்களுக்கு போதிய  ஊதியம் வழங்கிய போதிலும் இந்த கவர் கலாச்சாரம் எல்லா ஊடகவியலாளர்கள் மத்தியிலும் பற்றிப் படந்துள்ளது.
தமிழக ஊடகத்துறையில் இந்தக் கலாச்சாரத்திற்கு அடிமையாகாதவர்கள் சுமார் 20 சதம் மட்டுமே இருப்பார்கள்.கடந்த சில ஆண்டுகளாக ஊடகத் துறையில் பணியாற்றும் டகவியலாளர்கள் வாங்கும் கவரைப்போல் நிறுவனங்ளும் வாங்க ஆரம்பித்து விட்டது.ஒரு காலத்தில் விளம்பரங்களை மட்டும் வாங்கி வந்த நிறுவனங்கள் வர்த்தக நிறுவனங்ளின் விளம்பரங்களை வெளியிட்டு,சம்பந்தப்பட்ட வர்த்த்க நிறுவங்களின் புகழைப்பாடத் தொடங்கினர்.

இங்கு தான் காசுக்குச் செய்தி என்ற கலாச்சாரம் தொடங்கியது.

இதன் பரிணாம வளர்ச்சியாக தற்பொழுது தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களிடம் மட்டுமின்றி சுயேட்சையாகப் போட்டியிடும் வேட்பாளர் வரை எல்லோரிடமும் ஒரு நாளைக்கு இத்தனை காலம் சென்டிமீட்டர் படமும் அதற்குரிய பிரச்சார செய்தியும் வெளியிடுகிறோம் என்று கூறி ஊடக நிறுவனங்கள் வேட்பாளர்களிடம் பணத்தைப் பெற்று வருகின்றார்கள். விளம்பரம் போட்டு கட்டணம் வாங்குவது எல்லாம் பழசு.

அதற்குப் பதிலாக செய்தியைப் போட்டு அதற்காகக் காசு வாங்கி கல்லா கட்டுவதுதான் புது டிரெண்ட்.

கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தொடங்கிய இந்தக் கலாச்சாரம் நாடாளுமன்றத் தேர்தல் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் வரை வளர்ந்துள்ளது. ஊடக நிறுவனங்களின் இந்த அயோகியத்தனங்கள் இனி ஒவ்வொன்றாக இப்பகுதியில் வெளிவரும்.

எடுத்துக்காட்டாய் தி ஹிந்து ஆங்கில நாளிதழ் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.இப்படி செய்திக்குப் பணம் வாங்குவதைப் பற்றி அண்மைக்காலத்தில் அதிகமாகச் சாடிய து ”தி ஹிந்து’ ஆங்கில நாளிதழாகத்தான் இருக்க வேண்டும்.நேர்மையின் சிகரத்தில் நின்று கொண்டு அந்த நாளிதழ் கருத்துக்களையும் கட்டுரைகளையும்,தலையங்கங்களையும் தொடர்ச்சியாகத் தீட்டித் தள்ளியது.

உதாரணத்துக்கு தி ஹிந்து.காம்.ஒப்பினியன் பகுதியில் அண்மையில்,அக்டோபர் 10,2011 அன்று பி.சாய்நாத்  எழுதிய ஒரு கட்டுரை இடம் பெற்றுள்ளது.


http://www.thehindu.com/opinion/columns/sainath/article2523649.ece


அதன் சாராம்சம் வருமாறு.


”2010 ல் பத்திரிகையாளர் சங்கங்கள் கருத்தரங்கம்மாநாடு போன்றவை நடத்தினார்கள். அதில் வாய் கிழியப் பேசினார்கள்.


அதில் அவர்கள் விவாதித்த விஷயம் பற்றி எந்த நாளிதழிலும்,தொலைக்கட்சியிலும் செய்தி வரவே வராது. ஊழல் பற்றி வாய்கிழிய நிறைய பேசும் இவர்கள் ’பெய்டு நியூஸ்’ என்ற சமாச்சாரத்தைப் பற்றி மட்டும் செய்தி வெளியிட மாட்டார்கள். கவனமாக தணிக்கை செய்து விடுவார்கள்.


மகாராஷ்டிராவில் 2009 சட்டமன்றத்தேர்தலுக்கு சற்றுமுன் அந்த மாநிலத்தைச் சேர்ந்த பெரிய நாளிதழ் குழுமம் ஒன்று புனேயில் ஒரு கூட்டத்தைக் கூட்டி விவாதித்தது.


மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள். குறைந்தது 145 தொகுதிகளில் வெற்றிபெறுபவர்தான் ஆட்சியமைக்க முடியும்.ஒரு தொகுதிக்கு குறைந்தது 5 கோடி செலவு செய்தால் 145 தொகுதிகளுக்கு ரூ.725 கோடி தேவைப்படும். அவ்வளவு பணம் வைத்திருக்கும் கட்சி மட்டும் தான் மகாராஷ்டிராவில் வெற்றிபெற முடியும்.


தேர்தலுக்காக இவ்வளவு பணத்தை அள்ளிவிடப்போகும் இவர்களிடமிருந்து நாம் ஒரு பங்கு வாங்கினால் என்ன?என்று அந்த நாளிதழின் பைனான்ஸ் மேனேஜர்கள் கேட்டார்கள்.


விளம்பரம் போட்டு கட்டணம் வாங்குவதேல்லாம் பழைய விஷயம்.பேசாமல் செய்தி வெளியிட்டுப் போட்டு பணம் வாங்கிக் கொள்ளலாம் என்று அந்தக் கூட்டத்தில் முடிவானது.


அந்த மகாராஷ்டிர நாளிதழ் குழுமம் ரொம்ப லேட்.ஏற்கனவெ அங்குள்ள வேறு சில நாளிதழ்கள் நாடாளுமன்றத் தேர்தலிலேயே இப்படி செய்தி போட்டு பணம் வாங்கும் டிரண்டைத் துவக்கி விட்டன.


பெய்டு நியூஸ்’ களில் போஸ்டு பெய்டு,பிரீ பெய்டு என்று பல ரகங்கள் இருக்கின்றன.பலதரப்பட்ட ’கட்டண விகிதங்களும்’ இருக்கின்றன.டீலக்ஸ் கட்டணவிகிதம் என்பது என்பது கோடிகளில்.சாதாரண கட்டண விகிதம் என்பது லட்சங்களில்.

அதிகாரம் வாய்ந்த மீடியா அமைப்புகள் 2009 தேர்தலில் பணக்காரக் கட்சிகள் பணக்கார வேட்பாளர்களிடம் இப்படி செய்திக்குப் பணம் வாங்கிக் குவித்தன.


இப்படி கட்டுரை வெளியிட்டிருந்தது தி ஹிந்து.

மகராஷ்டிர முதல்வர் அசோக் சவான்2009 சட்டமன்றத் தேர்தலில் ஏற்த்தாழ வெறும் 11000 ரூபாயைத்தான் நாளிதழ் விளம்பரங்களுக்காகச் செல்வழித்திருந்தார்.ஆனால் மகாராஷ்டிர டைம்ஸ்,லோக்மாத் போன்ற பத்திரிகைகள் பணம் பெற்றுக் கொண்டு அவருக்காக மாய்ந்து மாய்ந்து செய்தி வெளியிட்டன என்றும் ஹிந்து கூறியிருந்தது.


ஆக மொத்தத்தில் பெய்டு நியூஸ் வெளியிடுவதை பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா கண்டித்து பெய்டு நியூஸ் என்றால் என்னவென்று வரையறுத்து பெய்டு நியூஸ் தொடர்பான சில பரிந்துரைகள்,புதிய வழிமுறைகளைக் கொண்டு வரவும் செய்தது.


இப்படி மாய்ந்து மாய்ந்து பெய்டு நியூஸ் தொடர்பான கட்டுரைகளை வெளியிட்டு அதற்காக குரல் எழுப்புவதாகக் காட்டிக் கொண்ட தி ஹிந்து நாளிதழே பெய்டு நியூஸ் செய்தி வெளியிட்டிருப்பது வேடிக்கை அல்ல கொடுமையின் உச்சம்.                                   நரசிம்மன் ராம்.


அப்பொழுதைய மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்துள்ளார் என்று நாடு முழுவதும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவரை நியாயப்படுத்தும் வகையில் அவரது நேர்காணலை மே 22,2010 அன்று வெளியிட்டது. அவரது கருத்தினை வெளிப்படுத்தும் வகையில் இந்த நேர்காணல் வெளியிடப்படவில்லை. அதே நாளில் அனைத்துப் பதிப்புகளிலும் பல வண்ணத்தில் தொலை தொடர்புத்துறையின் விளம்பரத்தினையும் வெளியிட்டது.இதற்கான கட்டணம் பல லட்சங்கள்.
அப்பொழுது தி ஹிந்து நாளிதழின் முதன்மை ஆசிரியர்,அச்சிடுபவர்,மற்றும் பதிப்பாளராக இருந்தவர் நரசிம்மன் ராம்.


கல்யாணம்,கடைதிறப்பு நிகழ்ச்சிகளை ரூ. 200கவர் வாங்கி விட்டு செய்தி வெளியிடும் நிருபர்களை கவர் பார்ட்டி என்று சொல்லும் பொழுது பல லட்சங்களை வாங்கி விட்டு செய்தி வெளியிட்ட தி ஹிந்து ராம் ஐ என்ன சொல்லி அழைப்பது?இவர் பெய்டு நியூஸ் பற்றி கட்டுரை வெளியிட எதும் தகுதி உள்ளதா?அரசியலில் நேர்மை பற்றி எதும் தார்மீக உரிமை உள்ளதா? இவர் பத்திரிகை நடத்தவாவது எதும் தகுதி உள்ளதா?


நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!

ஊடக நிறுவங்களில் இபபடி ஊழல் மலிந்து போனநிலையில்  இந்த ஊடக நிறுவங்களுக்கு அரசியல்வாதிகளின் ஊழலைப்பற்றி பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று வாசகர்கள் தான் கூற வேண்டும்.(நரசிம்மன் ராம் தி ஹிந்து ஆங்கில நாளிதழின் முதன்மை ஆசிரியர் பொறுப்பிலிருந்து வெளியேறிய பின் அவரது "சேவையைப்" பாராடும் வண்ணம் இப்பதிவு வெளியிடப்படுகிறது.)


1 comment:

Anand said...

நல்ல பதிவு.