Thursday, 6 October 2011

அசதுல்லா உசுரோட இருக்கானா?செத்துட்டானா?காறித்துப்பும் மனைவி


நெஞ்சு பொறுக்குதில்லையே! அத்தியாயம் 4


.
பெயர்-அசு என்ற அசதுல்லா!-வயது சுமார் 50.
இவர் போலீஸ் செய்தி என்ற பத்திரிக்கையில் விழுப்புரம் நிருபராகப் பணியாற்றியவர்.இவர் தனது கையில் அதிமுக கொடியைப் பச்சை குத்தியவர்.இருப்பினும் அதிமுக,திமுக,என எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவர் கோட்டையில் கொடி கட்டிப் பறப்பார்.
திமுக ஆட்சியில் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி,ஐ.பெரியசாமி,எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்,கே.என்.நேரு,எ.வ.வேலு போன்ற அமைச்சர்களை அண்டிப் பிழைத்தவர்.மேற்கண்ட அமைச்சர்களிடம் பேசும் பொழுது ஜெயலலிதாவை எவ்வளவு கேவலமாகத் திட்ட முடியுமோ அவ்வளவு கேவலமாகத் திட்டி அவர்களைச் சந்தோஷப் படுத்துவார்.நான் கையில் பச்சை குத்தியிருப்பது எம்.ஜி.ஆருக்காகத்தான் என்று அதற்கு விளக்கமும் அளிப்பார்.
அதிமுக ஆட்சி அமைந்த பிறகு இவரின் புகலிடம் ஒ.பன்னீர்செல்வம்,செங்கோட்டையன்,நத்தம் விஸ்வநாதன் என பல அமைச்சர்கள்.அதிமுக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் தன்னைக் கட்சிக்காரன் என்று சொல்லி பல்வேறு புரோக்கர் வேலையைச் சாதித்துக் கொள்வார்.இவரது முழு நேரப் பணி புரோக்கர் தொழில் மட்டுமே!
இவர் போலீஸ் செய்தி இதழில் சில காலம்,நெல்லை தினமலரில் ஓரிரு மாதம்,காலைக் கதிர் நிறுவனத்தில் ஓரு சில மாதங்கள் மட்டும் நிருபராகப் பணியாற்றிய பெருமை இவருக்கு உண்டு.பணியாற்றிய அந்தக் காலத்திலும் இவர் அந்தப் பத்திரிக்கையாளர் வேலையைத் தவிர அனைத்து வேலையையும் செய்வது தான் இவருக்குப் பழக்கம்.
மேலும் டிஜிபி தெரியும்,ஐஜி எனக்கு பிரண்டு என்று வரிசையாக அனைவரையும் தெரியும் என்று வரிசை விடுவார்.சில காவல் துறை அதிகாரிகள் பெயரைச் சொல்லி அவர் எனக்கு மாமு,இவர் எனக்கு மச்சி.நேரில் பார்க்கும் பொழுது அப்படித்தான் பேசுவேன்,சரக்கு அடிக்கும் பொழுது உரிமையாக் கூப்பிடுவேன் என லிட்டர் லிட்டராக அளந்து விடுவார்.
யாராவது காவல்துறையில் உதவி கேட்டு இவரைத் தேடி வரும் பொழுது,பிரச்சனையைக்க் கேட்டு விட்டு மிகவும் அலட்சியமாக இவர் தான் இதில் மூத்த அதிகாரி,காலையில் இருந்து என்னை இரண்டு முறை தொலைபேசியில் அழைத்து விட்டார்,பேச ஆரம்பிச்சா அரை மணி நேரம் பேசுவார்.போனை வைக்க முடியாது.கொஞ்சம் பிசியா இருந்ததால நான் தான் பேச முடியலை.இப்ப பேசிடுவோம் என்று சொல்லி விட்டு போனில் தொடர்பு கொள்வதைப் போல பாவ்லா காட்டுவார்.
திர்முனையில் ஆளே இல்லாவிட்டாலும் அவரிடம் பேசுவது போல நடிப்பார்.அதுவும் லேசுபாசாக அல்ல,என்ன மாமு எப்படி இருக்கீங்க?கொஞ்சம் பிசி.அதான் பேச முடியல,தப்பா எடுத்துக்காதீங்க.அப்புறம் நம்ம நண்பர் ஒருத்தர் வந்துருக்கார்,ஒரு சின்ன ஹெல்ப் வேணும் என ஆரம்பிப்பார்.கவுண்டமணி பாணியில்  எதிர்முனையில்  ஆள் இல்லை என்பது உதவி கேட்டு வந்தவருக்குத் தெரியவா போகிறது?
போனை வைத்து விட்டு மாமுட்ட  சொல்லிட்டேன்.இரண்டு நாளில் உன் பிரச்சினை முடிஞ்சிடும் எனச் சொல்லி அவரிடம் ஒரு அமவுண்ட் கறந்து விடுவார்.அதன்பின் காசு கொடுத்தவருக்கு பிரச்சினையும் தீராது,கொடுத்த பணமும் திரும்பக் கிடைக்காது.அவருக்கு இருக்கும் பிரச்சனை போதாது என்று கொடுத்த காசை திரும்பவும் வாங்குவதில் இன்னொரு பிரச்சனை ஆரம்பிக்கும்.
இவரால் இப்படி ஏமாற்றப் பட்டவர்கள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றார்கள். ஏதேனும் பத்திரிக்கையில் இவர் புகைப்படத்தை வைத்து இவரால் ஏமாற்றப் பட்டவர்கள் காவல்துறையில் புகார் செய்யலாம் என அறிவிப்புக் கொடுத்தால் பைனான்ஸ் கம்பெனியில் ஏமாந்தவர்களை விட அதிக நபர்கள் கியூவில் நிற்பார்கள் என்பது நிச்சயம்.



இவரிடம் அப்பாவிகள் மட்டுமல்ல,எம்.எல்.ஏக்கள்,அரசு அதிகாரிகள்,டாக்டர்கள் என பல தரப்பட்டவர்களும் ஏமாந்திருக்கின்றனர்.எடுத்துக்காட்டாக முன்னாள் திமுக எம்.எல்.ஏ.தர்மபுரி மனோகரன் இவரிடம் ஏமாந்தது பிரசித்தம்.
ம்.எல்.ஏ.க்களுக்கே இந்தக்கதி என்றால் மற்றவர்களைப் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை.பத்திரிக்கையாளன் என்ற ஒரே போர்வையை வைத்துக் கொண்டு அந்த எம்.எல்.ஏ.விடம் வாங்கிய பணத்தையும் கொடுக்காமல் மிரட்டி வந்தார் என்பது வேறு கதை.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த முன்னாள் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கண்டமங்கலம் சுப்ரமணியத்தின் அமைச்சர் பதவியே அல்பாயுசில் போனதற்கு இவரின் தில்லு முல்லுகள் தான் காரணம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.விழுப்புரத்தில் இவர் வசித்த பொழுது செய்த ஏமாற்று வேலைகளால் ஏமாந்தவர்கள் வீடு தேடி இவரை உதைக்கச் செல்ல தப்பித்தோம் பிழைத்தோம் என்று சென்னை வந்து சேர்ந்தார்.
அப்பொழுது இவருக்கு அடைக்கலம் கொடுத்தவர் இப்பொழுது தினகரனில் வேலை செய்து கொண்டிருக்கிறார். பிராடுகள் வரம் கொடுத்தவரின் தலையில் கை வைப்பதைப் போல தனக்கு தங்க உதவியவர்  அறையில் இருந்து கொண்டே அவரது அறைக்கு வரும் நபரிடமே இவரின் கை வரிசையைக் காட்டி விட்டார்.இந்த உண்மை தெரிந்த பிறகு அடைக்கலம் கொடுத்த அந்த நபர் இவரது பெட்டி படுக்கைகளை அறைக்கு வெளியே தூக்கி எறிந்து விட்டார்.இதன் பிறகு வேறு ஒரு இடத்தில் தங்கி தனது ஏமாற்று வேலையைத் தொடர்ந்தார்.கொடி கட்டிப் பறந்தார்.
எந்தப் பத்திரிக்கையிலும் வேலை செய்யாத இவருக்கு சென்னையில் இரண்டு வீடுகள் மற்றும்  கார் இருக்கிறதாம்.இவரின் ஒரு நாள் செலவாக மற்றவர்க்ள் சொல்வது ஆயிரத்து ஐந்நூறு ரூபாயாம்.காலையில் வீட்டில் இருந்து புறப்படும் இவர் தலைமைச்செயலக பிரஸ் ரூமுக்கு வருவாராம்.அங்கு தனது புரோக்கர் வேலையை  முடித்து விட்டு மதியச் சாப்பாட்டிற்கு  பிரஸ் கிளப் வருவாராம்.அங்கு அவருக்கு நாயர் மெஸ்ஸில் இருந்து விதம் விதமான வகைகளுடன் சாப்பாடு வாங்கி வரப்படுமாம்.இது முடித்த பின்னர் இவரின் புரோக்கர் காரியங்களுக்காக இவர் வைத்துள்ள ஆட்கள் இவரைச் சந்திக்க பிரஸ் கிளப் வருவார்களாம்.
சில நேரங்களில் பணம் கொடுத்து இவரால் ஏமாந்தவர்களும் இவரை இங்கு உதைக்க வந்தது தனிக்கதை.மாலை 6 மணி ஆனதும் வெளிநாட்டு மதுபானம் ஆப் அடிப்பராம்.அதன் பின்பு பிரஸ் கிளப்பே தன்னுடைய நிர்வாகத்தால்  நட்த்தப்படுவதாகச் சிலரிடம் அதிகாரம் செலுத்தி வசமாக வாங்கிக் கொண்டு வாயடைத்துச் செல்வாராம்.
இவர் எந்த பத்திரிக்கை நிறுவனத்திலும் வேலை செய்யா விட்டாலும் பிடிப்பது 555 சிகரெட, குடிப்பது வெளிநாட்டு மது,உடுத்துவது உயர்ரக ஆடைகள்.அணிவது என்னவோ 5000 மதிப்புடைய ஷூ.செல்வது பல லட்சம் மதிப்புள்ள காரில்.இத்தனை பணமும் பலரின் வயிற்றெரிச்சலைக் கொட்டிய பணத்தில் சம்பாதித்த பணமாம்.பலர் வயிறெரிய இவருக்கு மட்டும் ராஜபோக வாழ்க்கையாம்.இவரிடம் ஏமாந்தவர்கள் பட்டியல் போட்டால் நிதி அமைச்சர் ஓபிஎஸ் முதல் கடைக்கோடி குமரி மாவட்டம் வரை நீளூம்.
அரசியல்வாதிகள் மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வழக்குப் போடுகிறார்கள். வேலையும் இல்லை,கூலியுமில்லை.ஆனால் வீடு வந்தது எப்படி?கார் வந்த்து எப்படி?என்று இவரைப் போன்ற   ஏமாற்றுப் பேர்வழிகள் மீது விசாரணை நடத்தினால் நாட்டுக்கு நல்லது. 
இவர் ஒருமுறை விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தகவலை இவரது மனைவிக்கு ஒருவர் நேரில் சென்று தெரிவித்தாராம்.
உசுரோட இருக்கானா?இல்ல செத்துப் போனானா?இது அவரது மனைவியின் எதிர்வினை.இதைக்கேட்டு தகவல் சொல்லப் போனவர் அதிர்ந்து போனாராம்.மனைவியே இப்படிக் காறித்துப்புகிறார் என்றால் இவரிடம் ஏமாந்தவர்கள் இவரை என்ன செய்ய நினைப்பார்கள்? 

No comments: