Tuesday, 25 November 2014

தினத்தந்தி - மாறிய பாலிசி; மாறாத ஜாதிப்பாசம்....!சென்னை அண்ணா சாலை- ஸ்மித் சாலை சந்திப்பு.விகடன் அலுவலக சாலை எதிரே,சற்று தள்ளியிருக்கும் ஈராணி தேநீர்க்கடை.மாலை நேரம்.  ஊடகவியலாளர்கள் பார்த்தசாரதி,பெஞ்சமின்,அன்பரசு சந்திப்பு.

ஆளுக்கொரு தேநீர் சொல்லி விட்டுக் காத்திருந்தனர்.

"எல்லா டீக்கடைக்காரனும் விலை ஏத்திட்டாங்க‌.இங்க‌ இன்னும் ஏத்தலையா..?"

"ஏற்கனவே மத்த கடையை விட ஒரு ரூபாய் அதிகம் தான் இங்க. கொஞ்ச நாளில் கூட்டுவாங்க" என்றபடியே தேநீரை வாங்கிக்கொண்டு பேச்சைத் தொடங்கினர்.

" செய்தி என்ன இருக்குது...?" பெஞ்சமின்

"செய்திக்கா பஞ்சம்..? நமக்குத் தான் சந்திக்க நேரம் இருக்குறதில்ல‌ "பார்த்தசாரதி

kavitha muralitharan,


"அண்ணா சாலையில் இருந்து ஆரம்பிங்க ..? 'விகடன்' செய்தி என்ன இருக்குது.? " பெஞ்சமின்.

விகடனை அப்புறம்  பார்ப்போம். 'தி இந்து' ல என்ன நடக்குது..? அங்க சி.ஓ.பியா இருந்த கவிதா முரளிதரன் விலகிட்டாங்க போல இருக்கு..? என்ன காரணம்..? என அன்பரசு ஆர்வமாய் கேள்வியைத் தொடுத்தார்.

அவங்க திற‌மையான செய்தியாளர் தான்.ஆனால் அங்க அவங்க வகித்த பொறுப்பில் அவங்களால தாக்குப்பிடிக்க முடியலைன்னு சொல்றாங்க..!  பார்த்தசாரதி பதிலைத் தொடங்கினார்.

என்ன விஷயம்..? அன்பரசு ஆர்வத்தைத் தொடர்ந்தார்.

பெஞ்சமின்,"அதாவது சென்னை தவிர்த்த வெளியூர் செய்தியாளர்களை ஒருங்கிணைத்து அவர்கள் தரும் செய்திகளை  வெளியிடுவது தான் அவங்க பார்த்த வேலை.  சில  நாளிதழ்களில் அதனை O.C.(Other centre)அப்படின்னும் சொல்வாங்க."

பார்த்தசாரதி அடுத்து தொடர்ந்தார். "இது கொஞ்சம் கடினமான வேலை தான்.ஏனென்றால் மொத்தம் 30 க்கும் மேலான செய்தியாளர்கள் இருக்காங்க. நாள்தோறும் எண்ணற்ற செய்திகள். அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பதும் அவர்கள் தரும் செய்திகள் குறித்து முடிவெடுப்பதும் சற்று சிரமம் தான்.

மிகவும் டென்ஷனையும் நெருக்கடியையும் சந்திக்கும் வேலை இது. கவிதாவால் இதைச் சமாளிக்க முடியலை. இந்தப்பணியில் முன் அனுபவம் கவிதாவுக்கு  இல்லை. இதுல (V.V.)வெங்கடேஸ்வரன் இடைஞ்சல் வேறு. வெங்கடேஸ்வரன் ஒட்டு மொத்த 'தி இந்து'வும் தனக்கு கீழே வரணுமுன்னு திட்டம் போட்டு வேலை பார்த்துக்கிட்டுருக்காறா..ஏற்கனவே கோலாகல ஸ்ரீனிவாசனை இவர் தான் காலி பண்ணாரு.தொடர்ந்து ஒவ்வொரு ஏரியாவா ஸ்கெட்ச் போட்டுக் காலி பண்ணிக்கிட்டிருக்காரு.""வி.வி.ரொம்பத் திறமையான ஆளா..?" அன்பரசு

"திறமைன்னு சொல்ல முடியாது. யாரை எந்த வேலைக்கு வைத்துக்கலாம்,எந்த வேலையை யார்கிட்ட வாங்கலாம்,எப்படி வாங்கலாம், ஒருத்தரை எப்படி காலி பண்ணலாம், அதுக்கு எப்படி பாலிடிக்ஸ் பண்ணலாமுன்னு ஸ்கெட்ச் போடுவ‌தில் கில்லாடி." பார்த்தசாரதி

"சுருக்கமாச் சொல்லணுமுன்னா மேயத் தெரியாது,மேய்க்கத் தெரியுமுன்னு சொல்லு." பெஞ்சமின்

"ஆமாம்.இப்படி ஆளை நிர்வாகமும் விரும்பும். இவங்களும் அதுக்கு ஏத்த மாதிரி விசுவாசமா இருப்பாங்க.இவரைப்பத்தி ஒரு செய்தி சொல்றேன் கேட்டுக்கோங்க. தினகரனில் இருந்த வரைக்கும் ஆர்.எம்.ஆர்.கிட்ட பம்முவாரு.விசுவாசமா இருந்தாரு.இப்ப அங்கிருந்து விலகி 'தி இந்து' நாளிதழில் இருக்கார்.

அது போதாதுன்னு 'தினகரனில்' இருந்து கொஞ்ச பேரையும் அழைத்திட்டு வந்தார். ஒவ்வொருத்தரா அங்க போறது  ஆர்.எம்.ஆருக்கு கடுப்பு. இதுக்கு காரணமான‌ வி.வி.யை கூப்பிட்டுத் திட்டுவோமுன்னு நினைச்சு,பழைய நினைப்புல போன் பண்ணாரு. இது பத்தி பேசுனாரு.வழக்கமா பம்முற வெங்கடேஸ்வரன் இந்த தடவை அப்படி பேசலை.


(V.V.)வெங்கடேஸ்வரன்

இவர் டோப்பா போட்டு காரியம் சாதிப்பவர் மட்டும் அல்ல. இவர் தலைமுடியும் டோப்பா தான்.


"சார்,கலாநிதி மாறனும் என்.,ராமும் முதலாளிகள் அவங்க இது பத்திப் பேசிக்குவாங்க சார். நம்ம ரெண்டு பேரும் அவங்கட்ட சம்பளம் வாங்குற வேலைக்காரங்க சார். அவங்க சொல்றதைச் செய்றவங்க சார். நாம எதுக்கு இது பத்திப் பேசி சண்டை போடணும் சார்..? வேறு என்ன செய்தி சொல்லுங்க."அப்படின்னு கூலா பேசுனாரு. இதுக்கு மேல ஆர்.எம்.ஆர். பேசுவாரா என்ன..?

தன்னை ரொம்பநாள் ஆட்டிப்படைச்ச ஆர்.எம்.ஆர் மூக்கை   சமயம் பார்த்து உரசி விட்டாரு.

இது தான் வி.வி.சமயம் பார்த்து யாரையும் காலி பண்ணுவார்." நீளமாய்ப் பேசி முடித்தார் பார்த்தசாரதி.

"இன்னொன்னு சொல்லணும்,இலங்கையில் இன அழிப்பு உச்சத்தில் இருந்த பொழுது தமிழ்நாட்டு பத்திரிகையாளர்களை அம்சா தன் வலையில் விழ வைத்து பல காரியம் பண்ணார்.ஒரு சிலரை கொழும்புக்கு ஒரு டூர் அழைத்துட்டும் போனார்.அப்ப நிறையப்பேர் போனாங்க. " அன்பரசு பேச்சினை முடிக்கும் முன்பே,குறுக்கிட்டார் பெஞ்சமின்,"நம்ம அந்த விஷயத்தை இன்னொரு நாள் விரிவாப் பேசுவோம். இப்ப சொன்னா சில மனிதர்கள் பத்தி மட்டும் பேச வேண்டியிருக்கும்.முழுமையாப் பேச முடியாது."

சரி,பாதியில் நிப்பாட்டுன‌ பழைய விஷயத்துக்கு வர்றேன். அலுவலக இடைஞ்சல்,பணிச்சுமை,நெருக்கடியில் இருந்து எப்படி தப்பிப்பதுன்னு பார்த்துக்கிட்டிருந்த கவிதா, தனது பழைய 'இந்தியா டுடே'  நட்புகளையும் தொடர்புகளையும்  வலியுறுத்தி அங்கு வேலைக்குப் போய்ட்டாங்க."ரொம்ப நாளா 'இந்தியா டுடே' வில் எடிட்டர் இல்லைல..? " அன்பரசு

"ஆமாம்.இப்பொழுதைக்கு எடிட்டர் நியமிக்க வேணாம், இன்னும் கொஞ்சநாள் இப்படியே பத்திரிகையை நடத்திடலாமுன்னு இருந்த 'இந்தியா டுடே'  நிர்வாகம்  இப்ப கவிதாவை நியமிச்சிட்டாஙக. பழைய எடிட்டருக்கு கொடுத்ததை விட கவிதாவுக்கு சம்பளம் சற்றுக்குறைவு தான்.ஆனா 'தி இந்து' வில் இருந்த ஊதியத்தை விட அதிகம்." பார்த்தசாரதி தனது பதிலை முடித்தார்.

பெஞ்சமின்,"அத விடுப்பா..இன்னொன்னு தெரியுமா..? 'தி இந்து' வேலைப்பளுவை ஒப்பிட்டா இந்தியா டுடே வேலை ரொம்பக் ரொம்பக் குறைவு. இது போதாதா..? "

பார்த்தசாரதி,"ஆமா,நீ சொன்னது சரிதான். வார இதழான இந்தியா டுடேவில் தமிழ்நாட்டிலிருந்து மிக குறைந்த பக்கங்கள் தான்.அதையும் பார்க்க திறமையானவர்கள் இருக்காங்க. முதன்மைச் செய்தியாளராய் இருக்கும் ராமசுப்ரமணியம் கவிதாவை விட அதிக அனுபவம் வாய்ந்தவர். அதனால நாளிதழை ஒப்பிட்டால் வேலைப்பளு குறைவு. .(அசோசியேட் காப்பி எடிட்டர் கவின்மலர் என்பவர் பார்க்கும் வேலையை மட்டும் கொஞ்சம் கண்காணித்தால்,செம்மைப்படுத்தினால் போதும்.)  "

"ம். நடக்கட்டும். கவிதாவுக்குப் பதிலா 'தி இந்து' ல இப்ப யாரை அந்த இடத்துக்கு நியமிச்சிருக்காங்க..?" அன்பரசு அடுத்த கேள்வியை கேட்டு விட்டு அமைதியாய் வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்.

சண்முகம் தான். தினமலரில் இருந்து 'தி இந்து' வுக்கு வேலைக்கு வந்து சேர்ந்தார்.டெல்லியில் இருந்தவரை இப்ப இங்க நியமிச்சிருக்காங்க. "பெஞ்சமின்

"ம். அமைதியான மனுஷர்.பார்ப்போம் எப்படி பண்றாருன்னு." அன்பரசு முடித்து வைத்தார்.

"நான் ரொம்ப நாளா கேட்கணுமின்னு நினைச்சேன். 'தி இந்து' இணைப்பு பகுதி யார் பார்க்குறாங்க.சில பகுதிகள் மிகச் சிறப்பா இருக்குதுப்பா.?" இது பெஞ்சமின்.
"ம். நானும் படிக்கிறேன்.அரவிந்தன் பார்க்குறார். இதுக்கு முன்னால கடைசியா  மாபா பாண்டியராஜனுக்கு சொந்தமான 'நம்ம சென்னை'  பத்திரிகையில் வேலை பார்த்தார். தான் வாங்குற சம்பளத்துக்கு ஏற்ற உழைப்பைக் கொடுக்குறவரில் அவரும் ஒருத்த‌ர். தனது பொறுப்பில் வரும் பகுதியை மிகுந்த சிரத்தையுடன் கவனிப்பவர். தஞ்சாவூர்க்காரர். " பார்த்தசாரதி பாராட்டுப் பத்திரத்தை  வாசித்தார்.

"தஞ்சாவூரா..?  மாம்பலம் அப்படின்னு சொன்னாங்க.? " அன்பரசு குறுக்கு கேள்வியை எழுப்பினார்.

 "ஒருத்தருக்கு ரெண்டு பூர்வீகம் இருக்கக் கூடாதா என்ன..? " பார்த்தசாரதி சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்.

அப்படியா..? ஆனா என் பங்குக்கு நான் ஒரு விமர்சனம் சொல்றேன்.நீங்க சொல்றதைப் பார்த்தால் அவர் சரி பண்ணுவாருன்னு நினைக்கிறேன். அன்பரசு  பேசத் தொடங்கினார்.

" 'இயக்கும் கரங்கள்' அப்படின்னு ஒரு பகுதி வாராவாரம் வருகிறது. ஆதி.வள்ளியப்பன்  என பைலைன் வருகிறது. அவர் எழுதுறாருன்னு சொல்வது சரியல்ல..தகவல்களைத் திரட்டி அவர் பெயரைப் போட்டுக் கொள்கிறார் என்பதுதான் சரி.

தீபா மேத்தா,ரேவதி போன்றவர்கள் குறித்து அப்பகுதியில் சொல்லப்ப‌ட்டதெல்லாம் அனைவருக்கும் தெரிந்தது தான். இணையத்தில் எளிதாய்க் கிடைக்கிறது. யார் குறித்து சொல்கிறோமோ அவர் படைப்புக‌ள் குறித்து, எழுதுபவர் பார்வை என்ன என்று எழுதணும்.அதை விடுத்து தகவல்களைத் திரட்டி எழுதி, ஆதி தன்னுடைய‌ பெயரைப் போடுவது தவறு. ஒன்று இவர் எழுத்தில் அவர்கள் படைப்பு குறித்து எழுதணும்.அல்லது தகவல் திரட்டு ஆதி அப்படின்னு எழுதணும்.அது தானே சரி ? "  அன்பரசு தனது தொடர்ச்சியான கவனத்தை அங்கு வைத்திருக்கிறார் என்பது தெரிந்தது.

" ஆதி நிறைய மொழிபெயர்ப்பு பண்ணுவார்.அந்தப் பாதிப்பா இருக்குமோ..? " சிரித்துக் கொண்டே பார்த்தசாரதி சொன்னார்.

"ம்.விடுங்க.அரவிந்தன் சரி பண்ணுவாருன்னு எதிர்பார்ப்போம்.' பெஞ்சமின்

"இன்னொன்னு தெரியுமா..? 'தி இந்து'வில் இருந்து வெளிவருவதா இருந்த குழந்தைகள் பத்திரிகை தற்காலிகமாத் தள்ளிப்போடப் பட்டிருக்காம்." அன்பரசு தனக்குத் தெரிந்த தகவலைச் சொன்னார்.

அப்படியா ? இது புதுத் தகவலா இருக்கே..? பெஞ்சமின்

"ஆமாம்.அதுக்காக வேலைக்கு எடுத்திருந்த முருகேஷை இப்ப செய்தியாளரா நியமிச்சுட்டாங்க‌ளாம்."அன்பரசு.

யாரு..? அகநி பதிப்பகம் அப்படின்னு நடத்திக்கிட்டிருந்தவரா..? பெஞ்சமின்

அவரே தான்.கவிஞர் அ.வெண்ணிலா வீட்டுக்காரர்.புதுக்கோட்டைக் காரர்." அன்பரசு.

புதுசா வர்த்தகப் பகுதி 'தி இந்து' வில் ஒன்னு ஆரம்பிக்கப் போறாங்க தெரியுமா..?

ம்.நானும் கேள்விப்பட்டேன்.

"என்னமோ 'தி இந்து' வில் தான் ஒருத்தரை ஒருத்தர் காலி பண்ணுற பாலிடிக்ஸ் நடக்குற மாதிரி சொல்றீங்க.'புதிய தலைமுறை' தொலைக்காட்சியிலும் அதுக்கு குறைவில்லாமல் நடக்குது." அன்பரசு அலுத்துக் கொண்டார்.

அங்க யாரு..?
வேற யாரு..? குணசேகரன் தான். 'நேர்பட பேசு' நிகழ்ச்சி நடத்துவது தொடர்பா குணசேகரன் பண்ணுன பாலிடிக்ஸ் ல வேங்கட பிரகாஷ் அந்த நிகழ்ச்சியை விட்டு தற்காலிகமாக விலகிட்டாருன்னு சொல்றாங்க. கொஞ்சம் விசாரித்துக் கொள்ளுங்கள்.அன்பரசு.

அது சரி. நிகழ்ச்சியில் பேசுற அரசியலை விட‌ அதுக்குப் பின்னாடி நடக்கும் பாலிடிக்ஸ் சுவராசியமா இருக்குதே..?

தலைப்பு என்னவோ "நேர்பட பேசு".ஆனால் பின்னாடி தான் குழி பறிப்பாங்க போல.

***ண்ணாச்சி கம்பெனி செய்தி என்ன..?

"தினத்தந்தி நிர்வாகம் நிலப்பிரபுத்துவ அமைப்பில் இருந்து கார்பரேட் முறைக்கு மாறிடுச்சுன்னு சொல்றாங்க..உண்மை தானா..?"

பார்த்த சாரதி தந்தியை குறித்துப் பேச்சைத் தொடங்கினார்.

"ஆமாம்.சிவந்தி ஆதித்தன் இருந்த வரைக்கும் பழைய முறையில் இருந்தது. இப்ப நீ சொல்லுற மாதிரி ஆகிடுச்சுன்னு தான் சொல்றாங்க."

"எடிட்டோரியலில் வேலை செய்யுற யாரையும் முன்பு வேலையை விட்டு எடுக்குறதுக்கு நிறைய‌ யோசிப்பாங்க. தண்டனையாக‌, கடினமான (கேவலமான) வார்த்தைகளும், துறை மாற்றமும் தான் பெரும்பாலும் இருக்கும். வேலை செய்யுற பெரும்பாலானோரை முதலாளி தெரிந்து வைத்திருப்பவர்  என்பதால் இது சாத்தியப்பட்டது. ஆனா இப்ப அப்படி இல்லையாம். ஒருத்தரை சரி இல்லைன்னு நிர்வாகத்துக்கு அடுத்த நிலையில் இருப்பவங்க முடிவு பண்ணிட்டா அவர் யாராயிருந்தாலும்,எத்தனை வருடம் வேலை பார்த்தாலும் உடனடியா  வேலை காலியாகுதுன்னு சொல்லிடுறாங்க.

இப்ப இருக்குற முதலாளியும் தனக்கு அடுத்து இருப்பவர்கள் சொல்வதை அப்படியே ஆமோதித்து உண்மையா என விசாரிக்காமல், வேலையைக் காலி பண்ணிடுறாராம். அதனால மற்ற நிறுவனங்கள் போல இங்கேயும் ஊழியர்கள் வேலை நிரந்தரம் இல்லைன்னு நினைக்கிறாங்களாம். " அன்பரசு

"பழைய மாதிரி ஊர்க்காரன்,ஜாதிக்காரன்னு,தெரிஞ்சவன்னு நெனப்புல தன் சீட்டு நிரந்தரம் அப்படின்னு இப்ப யாரும் தெனாவட்டா இருக்க முடியாதுன்னு சொல்லுங்க." பெஞ்சமின் சிரித்துக் கொண்டே கேட்டார்.

அப்படித்தான் இருக்குது நிலவரம்.

பெஞ்சமின் சிரித்துக் கொண்டே, "நீங்க சொல்றது எல்லாம் சரி தான். ஆனா இது தொழிலாள‌ர்களுக்குத் தான். நிர்வாகம் வழக்கம் போல ஜாதிப்பாசத்தோட தான் இயங்குது. அதாவது வர்க்கமும் ஜாதியும் கைகூடி இருப்பவர்களுக்கு ஆதரவாய் இயங்குதுன்னு சொன்னேன்."

"அது எப்படி மாறும்..? "என சிரித்துக் கொண்டே எதிர்க்கேள்வி எழுப்பினார் பார்த்த சாரதி.

"வைகுண்டராஜன் முன் ஜாமீன் மனு தள்ளுபடி,கனிமொழிக்கு எதிரா டெல்லி சிறப்பு நீதிமன்றம் வாரண்ட் ஒன்னு பிறப்பிச்சது.கொஞ்ச நேரத்துல ரத்து பண்னிட்டது. இது எல்லாம் மத்த‌ பத்திரிகைகளில் செய்தியா வந்தது. ஆனால் தினத்தந்தி மட்டும் பதிவு பண்ணலை. ஜாதிப்பாசம் தவிர வேறு என்ன..? தினத்தந்தி நிருபர் செய்தியை மிஸ் பண்ணுறது நடக்காத காரியம்.அதனால் நிர்வாகம் தான் இதைத் திட்டமிட்டுத் தவிர்த்திருக்குதுன்னு தெரிஞ்சுக்கிடலாம். " பெஞ்சமின் கடுப்புடன் பேச ஆரம்பித்தார்

தினமலர்
தினமணி


தினத்தந்தி


"வைகுண்டராஜனுக்கும் சிவந்தி ஆதித்தனுக்கும் நிறைய பஞ்சாயத்து இருந்ததே..? ஒரு கட்டத்துல தினத்தந்திக்கு போட்டியா நாளிதழ் துவங்குற ஐடியா கூட விவி மினரல் கம்பெனி வைத்திருந்ததே..? இப்ப எப்படி சமாதானம்..?" பார்த்தசாரதி பழைய பஞ்சாயத்தைக் கிளறினார்.

"ஆமா..திருநெல்வேலியில் இருக்கும் சாதிச் சங்கத்தையும் அதுக்கு இருக்குற பல கோடிச் சொத்துக்களையும் நிர்வாகம் பண்ணுற பஞ்சாயத்து இருந்தது. அதான் ரெண்டு பேருக்கும் ஆகாது.ஆனால் சிவந்தி மறைவுக்குப் பின்னாடி இரு தரப்பும் சமரசமாயிட்டாங்க‌ன்னு சொல்றங்க.அதான் இப்ப எதிர்த்துச் செய்தி போடுற‌து இல்ல."

"முதலாளி மாறியிருக்கலாம்.அவரோட பாலிசி மாறியிருக்கலாம்.ஆனால் நாடார் ஜாதிப் பாசம் மட்டும் மாறலைன்னு சொல்லு. அது எப்பவும் போலத் தொடருது. எத்தனை யுகங்களானாலும் தொடருமுன்னு சொல்லு." பார்த்தசாரதி.

ம்.அதே தான்.

அதே போல ராமச்சந்திர ஆதித்தன் குடும்பத்துக்கும் சிவந்தி ஆதித்தன் குடும்பத்துக்கும் இருந்த சொத்து பிரச்சனைகளும் தற்காலிகமா சமரசத்துக்கு வந்திருக்குன்னு சொல்றாங்க.  

**
"குமுதம் ரிப்போர்ட்டர் முன்ன மாதிரி இல்லாமல்,கொஞ்சம் மாறி இருக்குதே என்ன காரணம்..? " பெஞ்சமின் ஆர்வமுடன் கேட்டார்.

"அங்க கணபதி சார்ஜ் எடுத்துருக்கார்." பார்த்தசாரதி.

யாரு..? 'தமிழ் முரசு' பார்த்துக்கிட்டிருந்த கணபதி சாரா..?

ஆமாம்.அவரே தான்.

அப்ப குடியாத்தம் குபேந்திரன் ..?

"குபேந்திரன் தான் இப்பவும் இணை ஆசிரியர். அவரை அவ்வளவு எளிதில் காலி பண்ன முடியுமா..? பெரிய இடத்து பரிந்துரையில் வேலைக்குச் சேர்ந்தவரு வேற..? "

"பெரிய இடம்ன்னா யார்..?" பெஞ்சமின்

"மன்னர்கள் மட்டுமல்ல குறுக்கு வழியில் பதவியைப்பிடித்தவர்கள்,பணம் படைத்தவர்கள் எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு சாமியார் அல்லது ஜோசியர் சொல்றதைக் கேட்பாங்க. இங்க குபேந்திரனுக்கு ஜோசியர் பரிந்துரையில தான் வரதராஜனிடம் வேலை கிடைச்சது. " அன்பரசு தனது பகுத்தறிவை போகிற போக்கில் பரப்பி விட்டுப் போனார்.

குபேந்திரன்


இதைக்கேட்டவுடன் பெஞ்சமின் அதீத ஆர்வம் காட்டினார்.

"ரொம்ப சுவாரசியமா இருக்கே ..? இவ்வளவு நாளா நீ சொல்லவே இல்லையேப்பா..? ஜோசியர் சொல்லியெல்லாம் வேலை கிடைக்குதா என்ன..? நான் திறமைக்குத் தான் வேலை கிடைக்கும் என்று நம்புற ஆள் இல்லை தான்.ஆனால் இந்த அளவுக்குத் துறை போயிடுச்சுன்னு நினைக்க முடியலை. நம்பவும் முடியலை.நம்பாமல் இருக்கவும் முடியலை. முதலில் விஷயம் சொல்லு."ஷெல்வின்னு ஒரு ஜோசியர். இவரது உண்மையான பெயர் தாமோதரன்.கருணாநிதி மகள் செல்வி,மருமகள் துர்கா,ஸ்டாலின் மருமகன் சபரீசன்,குமுதம் ரிப்போர்ட்டர் வரதராஜன், பிரேமலதா,விஜயகாந்த் மச்சினர் சதீஷ்,இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இது போக அதிகார மட்டத்தில் இருப்பவர்கள் நிறையப்பேருக்கு ஷெல்வி தான் ஜோதிடர்.

 என்னப்பா சொல்ற..? அதிர்ச்சியைத் தொட்டார் பெஞ்சமின்

"இதுல அதிர்ச்சி அடைய என்ன இருக்கு.இன்னும் சொல்றேன் கேட்டுக்கோ. கடந்த பாராளுமன்றத்தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக அதிக இடங்களில் ஜெயிக்கும்,இந்தியா முழுவதும் நரேந்திர மோடி அதிக இடங்களில் வெற்றி பெறுவார் என்று நாட்டு நடப்பை தனது கணிப்பாக்கி இவர் ஜோசியம் சொன்னாரு.

ஆனால் விஜயகாந்த்-பா.ஜ.க.கூட்டணி இவரால தான் பைனலாச்சுன்னா உனக்குத் தெரியுமா..? "

"அப்படியா..? இவரு ஜோசியரா இல்லை..." என சிரித்துக் கொண்டே கேட்டார் பார்த்தசாரதி

" அத விடு.இப்ப மேட்டருக்கு வர்றேன். இவர் குபேந்திரனுக்கு நெருக்கம். தமிழக அரசியலில் இருந்து விலகுன குபேந்திரனுக்கு,ஜோசியர் தான் வரதராஜனிடம் சொல்லி வேலையை வாங்கிக் கொடுத்தாரு. அதுவும் இல்லாமல் குபேந்திரனுக்கு அதிகார மட்டத்துல செல்வாக்கு இருப்பதால் பலவகையிலும் உபயோகப்படுவாருன்னும் சொல்லி சேர்த்தாரு.ஜோதிடருக்கு வரதராஜனிடம் அதிக செல்வாக்கு. அதனால குபேந்திரன் வேலை இப்பொழுதைக்குத் தப்பாது. இப்பவாச்சும்  நான் சொன்னதை நம்புறியா..? " அன்பரசு முடித்தார்

"நம்புறேன். நம்புறேன்.எனக்கு அவர் ஜோசியம் பார்ப்பாரா? " என சிரித்துக் கொண்டே பெஞ்சமின் கேட்டார்.

"உன்ன மாதிரி அன்னக்காவடி, அதிகப்பிரசங்கிக்கெல்லாம் மரத்தடி கிளி ஜோசியர் தான் சரி. இவங்க லெவல் வேறப்பா. இன்னொன்னு எப்படிப் பார்த்தாலும் உனக்குத் தரித்திரம் தான் நிலைக்கும். ஜோசியம்  பார்த்து எனனவாகப் போகுது." என சிரித்துக் கொண்டே அன்பரசு சொன்னார்.

அனைவரும் சிரித்தனர்.

***
மணா(பழைய படம்) 

"து என்னவோ தெரியலைப்பா,நம்ம மணா வரதராஜனை விடாமல் பிடிச்சுக்கிட்டிருக்காரு. "

இருவரில் யார் யாரைப் பிடிச்சுக்கிட்டிருக்காங்கன்னு தெரியலை. குமுதம் பிரச்சனையில அமைதியா இருக்காம,வரதராஜனுக்கு சகலவழியிலும் காபந்து பண்ணாரு. ஏற்கனவே உடல் நிலை சரியில்லாத மணா தொடர்ச்சியா வரதராஜ விசுவாசம் காட்டுறதுக்குப் பதிலா அமைதியா இருக்கலாம். ஆனால் அவரோ ஓய்வுக்குப் பதிலா வரதராஜன் அலுவலகத்துல பதிப்பகம் பொறுப்பெடுத்திருக்கார். விகடன் பிரசுரத்துக்குப் போட்டியா இனி வருமாம்.

"விகடன் பிரசுரம் எங்கே..?குமுதம் வெளியீடு எங்கே..ஏணி வைத்தாலும் எட்டாது. அது சரி குமுதத்தில் வேலை பார்ப்பது தப்பா என்ன..?"

" தப்பில்லை.ஆனால் பத்திரிகை வேலையை மட்டும் பார்க்கணும்.முதலாளியைக் காப்பாத்துற புரோக்கர் வேலையைப் பார்ப்பது தப்பு. அவரவர் மனசாட்சிக்குத் தெரியும் யார் என்ன வேலை பார்க்கோமுன்னு. "
**


 நேரம் அதிகமாக ஆளுக்கொரு தேநீரை மீண்டும் வாங்கினர்.

"மாறன் கம்பெனி செய்தி எதுவும் இருக்காங்க..?"

"இன்னும் மஜிதியா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தவில்லை,ஊதிய உயர்வு இல்லை,ஆட்குறைப்பு அப்படின்னு தொழிலாளர் விரோதப்போக்கு தொடர்ச்சியா நடந்துக்கிட்டுத் தான் இருக்குது. யாரும் கண்டுக்க மாட்டிக்கிறாங்க." பார்த்தசாரதி சலிப்புடன் சொன்னார்.

"ம். பதவியில் இல்லாதப்பவே இப்படின்னா,இவனுங்க பதவியில் இருந்திருந்தால் ருத்ரதாண்டவம் ஆடியிருப்பாங்கன்னு சொல்லுங்க." பார்த்த சாரதி கடுப்புக் காட்டினார்.

ஆமாம். இன்னொன்னு.அங்க தொழிலாளர் விரோதப்போக்கு மட்டும் இல்ல.சீனியர் ஜூனியர் மரியாதை கூட இல்லை..." அன்பரசு

"பீல்டு முழுவதும் அப்படித்தான் இருக்குது.இதுல 'தினகரன்' மட்டும் விதிவிலக்கா என்ன..?என்ன சங்கதி? "பார்த்தசாரதி

நியூஸ் எடிட்டரா இருக்குற ஆர்.சி.,மனோஜ்,தமிழ் முரசு குணசேகரன் எல்லாம் அங்க சீப் ரிப்போர்ட்டரா இருக்குற சுரேஷைப் பார்த்தா பம்முறாஙக.-பெஞ்சமின்

"என்னங்க சொல்றீங்க‌..? சீப் ரிப்போர்ட்டரைப் பார்த்தால் நியூஸ் எடிட்டர் பயப்படுறாருன்னு சொல்ற.. நீ சொல்றதைப் பார்த்தா டிஜிபி வீட்டுல எடுபிடி வேலை பார்க்குற சாதாரண ஆர்டர்லியைப் பார்த்து டி.எஸ்.பி.பயப்படுற மாதிரி இல்ல இருக்கு."இது அன்பரசு

"அதே..அதே.இருக்குற சுரேஷ் இருக்கும் இடம் அப்படி."

"சரியாச் சொன்னீங்க,ஆர்டர்லி பார்க்குற வேலையும் நம்ம சுரேஷ் பார்க்குறதும் ஒரே தன்மையிலான வேலை தானே. ?

ஆர்.எம்.ஆர். எது சொன்னாலும் அதை தட்ட மாட்டாமலும் முகம் சுளிக்காமலும் செய்வாரு சுரேஷ்.பழைய செய்தி சொல்றேன்.கேட்டுக்கோங்க.

சீப் ரிப்போர்ட்டர் பதவி சார்ஜ் எடுத்துக்கிட்ட கொஞ்ச நேரத்துல ஆர்.எம்.ஆர்.ஒரு வேலை சொல்றாரு.உடனே அதைச் செய்தாரு."அன்பரசு

என்ன வேலை.? எதும் முக்கிய அசைன்மெண்ட்டா..? பெஞ்சமின் ஆர்வமுடன் கேட்டார்.

சிரித்துக்கொண்டே "அசைன்மெண்ட்டா? ஆர்.எம்.ஆர்.தன்னோட பிள்ளைகளை அப்ப சேப்பாக்கம் ஸ்டேடியம் ல நடந்த கிரிக்கெட் மேட்ச் பார்க்க கூப்பிட்டுப் போய்ட்டு வரச் சொன்னாரு.உடனே யாரையோ பிடிச்சு ஓசி பாஸ் வாங்கிட்டுப் போய் சொன்ன வேலையைச் செய்தாரு.இது ஒரு உதாரண‌ம் தான். இது மாதிரி என்ன வேலை என்றாலும் முகம் சுளிக்காமல் செய்வாரு. அதையும் சிற‌ப்பாச் செய்வாரு. "

"பிறகு எப்படி நியூஸ் எடிட்டர், சீப் ரிப்போர்ட்டரைப் பார்த்துப் பயப்படாமல் இருப்பாங்க சொல்லுங்க."

***

நியூஸ் செவன் வைகுண்டராஜன் தொலைக்காட்சி எப்படி இருக்குது. ?

இதுவரைக்கும் பெரும்பாலும் குறைந்த வயதில் இருப்பவர்களைத் தான் வேலையில் எடுத்திருக்காங்க. பெரும்பாலோனோர் பெரிய அளவில் அனுபவம் இல்லாமல் இருப்பவர்கள். அது போக உயர் பதவியில் இருப்பவர்கள் யாரும் இங்குள்ள சூழல் முழுக்க பரிச்சயம் இல்லாதவர்கள். இன்னும் சொல்லப்போனால் தமிழில் நடக்கும் நியூஸ் செவன் தொலைக்காட்சிக்கு வேற்று மொழியில் சிந்திப்பவர்கள். சுருக்கமாச் சொன்னா எந்த நிகழ்ச்சியும் உருப்படுற மாதிரி இல்ல.தொலைக்காட்சி தொடர்பா வர்ற விளம்பரங்கள் கூட உருப்படியா இல்லைன்னா பாருங்க.

ம்ம்.வழக்கம் போல மல்லுக்கள் இங்கேயும் உயர் இடத்தைக் கைப்பற்றி விட்டார்கள் போல.

ஆமாம். நம்ம வாசகர்களுக்குப் பரிச்சயமான பிரேம்சங்கரும் வந்துட்டாருன்னு சொல்றாங்க.

ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் சேனலே குப்பைன்னு சொல்லு.

***

விகடன் செய்தி எதுவுமே இல்லையா..?

'டாக்டர் விகடனுக்கு' பிரியா நாயர்  பொறுப்பாசிரியரா..இல்ல ஆசிரியரா..?

பொறுப்பாசிரியர் தான். ஏன்..?தினகரனில் வேலை பார்க்குற  சிவராமன், பிரியாநாயர் ஆசிரியர் ஆகிட்டாங்க‌ன்னு மகிழ்ச்சியில், முகநூலில் ஆனந்தக்கூத்தாடியிருக்காரே ?அதான்  ஒருவேளை ரா.கண்ணனை ஆசிரியர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் பண்ணிட்டாங்கன்னு நினைச்சேன். பொறுப்பாசிரியர் பிரியா நாயரை  'ஆசிரியர்' அப்படின்னு எழுதி தகுதிக்கு மீறிப்பொறுப்பு கொடுத்த ரா.கண்ணனை, ஏன சிவராமன் துச்சமா எழுதுனாருன்னு தெரியலை. தினகரனில் ஆர்.எம்.ஆர் பெயருக்குத் தான் எடிட்டரா இருக்காரு.அவருக்கும் செய்திக்கும் சம்பந்தம் இல்லை.அதுக்காக தினகரன் எடிட்டர் ஆர்.எம்.ஆர் இல்லைன்னு சொல்லிட்டு வேறு யாரையும் சிவராமன் பகிரங்கமாக எழுதுவாரா என்ன..?

இல்லைன்னா ஆர்.எம்.ஆர். எம்.டி. இல்லைன்னு சொல்லிட்டு வேறு யாரையும் எழுதுவாரா என்ன..?

அதிலெல்லாம் நாங்க எச்சரிக்கையா இருப்போம்ல. அது சரி கே.என்.சிவராமன் தயாரித்த& பெருமையுடன் விளம்பரப்ப‌டுத்திய‌ தினகரன் இலவச இணைப்பில் இடம் பெற்ற ஒரு பதிவு தொடர்பா வினவு இணைய தளத்தில் ஒரு பதிவு வந்திருந்தது பார்த்தீங்களா..?

சிரித்துக் கொண்டே அன்பரசு பதில் சொன்னார்."ஆமாம்.பார்த்தேன். ஆனால் இதழ் தயாரித்த‌ சிவராமன்  பெயரைக் குறிப்பிட மறந்து  'தினகரனது இலவச இதழ் தயாரிப்பாளர்கள்' அப்படின்னு சொல்லியிருந்தாங்க‌."

"அவங்க சொல்லலைன்னா என்ன,நாம் இப்ப சொல்லிட்டோமே"

ம்ம்ம்ம்.

vikatan awards,


'விகடன் விருதுகள்' தயாராகிட்டிருக்குப்பா..

 இது ஒரு செய்தியா..?

யாருக்கு விருது கொடுப்பாங்கன்னு ஊருக்குத் தெரிந்த விஷயம் தான.? விஜய் டிவிக்கு ரெண்டு,அதுல்ல ஒன்னு கோட்டு கோபிக்கு, இது போக‌ விகடன் சீரியலுக்கு ஒன்னு.இது போக விகடன் ரிப்போர்ட்டர்களுக்குத் தெரிந்த நாலு பிரபலம், ஆசிரியருக்குப் பிடிச்ச சினிமாக்காரர்கள், (பாலா எதும் படம் எடுக்கலைன்னு நினைக்கிறேன்.அந்த வரைக்கும் தப்பித்தோம்.)

இது போக சிற‌ந்த இரு சக்கர வாகனம் அப்படின்னு ஒரு விருது கொடுப்பாங்க பாரு.

சான்சே இல்ல. அவங்க சொல்ற வண்டி எப்படியும் சில லட்சங்கள் இருக்கும். அதை நம்ம நாட்டுல பெரும்பாலானோருக்குச் சுத்தமாத் தெரியாது. இவ்வளவு ஏன் விகடனில் ஒருத்தரும் ஓட்டுறதும் கிடையாது. ஆனா ரொம்பச் சரியா அவ்வளவு காஸ்ட்லி வண்டிக்குத் தான் கொடுப்பாங்க.

இதுக்கு நடுவுல உண்மையிலேயே திறமையான நாலு பேருக்கு கொடுப்பாங்க‌. ஆகமொத்தம் எல்லோரும் திறமையானவங்கன்னு ஒரு இமேஜ் வந்துடும்.

அடப்போங்க‌..?  பில்லை கொடுத்துட்டு வாங்க.இவங்களைப் பத்திப் பேசிக்கொண்டிருந்தால் நம்ம வேலை பார்க்க முடியாது.கிளம்புவோம்.


1 comment:

-தோழன் மபா, தமிழன் வீதி said...

"என்னமோ போங்க....உங்களோட சேர்ந்து நானும் ரெண்டு டீ குடிச்சா மாதிரி இருந்தது!."