Sunday 21 July 2013

ஆனந்த‌ விகடன் உதவி ஆசிரியருக்கு காமதேனு நாளிதழில் வேலை...!




னந்த விகடனில் இருந்து வலுக்கட்டாயமாய் ராஜினாமா பெறப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட அதன் உதவி ஆசிரியர் ச.சிவசுப்ரமணியன் குறித்து நாம் முந்தைய பதிவில் எழுதியிருந்தோம்.

இந்த நிலையில் ச.சிவசுப்ரமணியனுக்குகு 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழ் குழுமம் துவங்க உத்தேசித்துள்ள 'காமதேனு' நாளிதழில் கடந்த வார இறுதியில் வேலைக்கான உத்தரவு கிடைத்துள்ள‌து.

ஆ.வி.17 ஆண்டுகள் வேலை பார்த்த அவருக்கு சம்பளமாக சுமார் 25 ஆயிரம் இதுவரை கிடைத்தது.இப்பொழுது காமதேனுவில் (நாளிதழின் பெயர் மாற்றம் இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.)இவரது சம்பளம் இப்பொழுதைய ஊதியத்தை விட 80 சதவீதம் அதிகம்.அதே சமயம் தொழிலாளர்களுக்கு நியாயமாய் கிடைக்க வேண்டிய உரிமைகளும் ஆ.விகடனுடன் ஒப்பிடும் பொழுது இங்கு அதிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

இனிமேலாவது விகடன் நிறுவனம் தனது தொழிலாள‌ர்களுக்கு உரிய ஊதியத்தையும் அவர்களுக்கான நியாயமான உரிமைகளையும் கொடுக்க முன் வர வேண்டும்.

ச‌.சிவசுப்ரமணியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...!

13 comments:

Anonymous said...

வாழ்த்துகள் சிவசுப்ரமணியம் சார்.

திண்டுக்கல் தனபாலன் said...

ச‌.சிவசுப்ரமணியன் அவர்களுக்கு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

kumar said...

Very good

Avargal Unmaigal said...

கலக்குரல் உங்களின் குரல் ஹிந்து பத்திரிக்கையின் காதில் விழுந்திருக்கும் என நினைக்கிறேன். அதனால் அவருக்கு அங்கு வேலை கிடைக்க வாய்ப்புகள் ஏற்பட்டு இருக்கலாம். உங்களின் கலக்குரலுக்கும் ஆவி யின் உதவி ஆசிரியருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்

இராய செல்லப்பா said...

ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்திற்கு மாறும் போது பல சோதனைகளைச் சந்தித்துத் தான் ஆகவேண்டி இருக்கிறது. ஐ.ட்டி. துறையில் இருப்பவர்கள் மூன்று வருடத்திற்கு ஒருமுறை மாறிக்கொண்டே இருக்கிறார்கள். கையில் ‘ரிலீவிங்க் ஆர்டர்’ வரும் வரை நிச்சயமில்லை. பத்திரிகைத் துறையிலும் தில்லி, பம்பாயில் இத்தகைய நிறுவன மாற்றங்கள் சகஜமாக நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. எனவே சென்னையிலும் பத்திரிகை ஊழியர்கள் தன்னம்பிக்கையோடு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியது அவசியம். ‘காமதேனு’ வில் விரைந்து முன்னேற ச‌.சிவசுப்ரமணியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...!

Sathya said...

Hi,

Better you should avoid to say the salary of the Mr. Sivasubramanian.

Please mention the % of increment.

Hope you will change the details soon.

Sakthivel V

Unknown said...

very good

Sathya said...

Hi,

Thanks for the update

Anonymous said...

இந்து ராம் இலங்கை ரத்னா விருது பெற்றது நினைவிருக்கிறது! ஈழப்போரின்போது இந்தியத் தமிழர்கள் போராட்டத்தைக் கண்டித்து ராம் எழுதியதும் நினைவிருக்கிறது! இவர்கள் தமிழ்பத்திரிக்கை ஆரம்பிக்கப்போகிறார்களா?

Anonymous said...

ஒரு சிறந்த அடிமை தன்னை விட்டு இன்னொரு நிறுவனத்துக்கு அடிமையாகப் போகிறாரே என்ற ஆதங்கம் ஆ.வி,. நிறுவனத்துக்கு. மற்றவர்கள் வேலையை விட்டுப் போனால் அந்த வேலையைச் செய்ய நிறைய பேர் இருக்கின்றார்கள். இந்த அடிமை வேலையைச் செய்ய யார் இருக்கின்றார்கள். இவ்வளவு ஏன் மாணவ நிருபர்களைத் தேர்ந்தெடுப்பது மாதிரி மாணவ புரூப் ரீடர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியதுதானே இந்த வேலையைச் செய்ய இந்தத் தலைமுறையில் யாரும் தயாராக இல்லை. அட, அவ்வளவு ஏன்? முக்கியமான பதவியாக இது கருதப்பட்டால் ஊதிய உயர்வு அளிக்கின்றார்களா அதுவும் இல்லை. இதில் ஒவ்வொருவரும் அங்கு வேலை பார்ப்பவர்களும் தங்களை ஏதோ அருண்ஷோரி, எம்.ஓ. மத்தாய் போல நினைப்பு வேற...

Anonymous said...

காமதேனுவில் பத்திரிக்கையாளர் சமஸ்சின் ஆட்டம் ரொம்ப ஜாஸ்தியாக இருக்கிறதாம்..ஓவர் பேச்சு...ஓவர் அல்டாப்பு... கவனியுங்கள் அவரை

Anonymous said...

வாழ்த்துகள் சிவசுப்ரமணியம் சார்.....


-NPH

Anonymous said...

தமிழகத்தில் அனைத்து பத்திரிக்கைகளும் தி மு க வின் பினாமிகளால் அல்லது உறவினர்களால் நடத்தப்படுபவை தான். ஏனென்றால் நாடு நிலையாளர்கள் அனைவரும் ஓட ஓட விரட்டப்பட்டு விட்டார்கள். நாம் எங்கே போனாலும் அங்கு நேர்மையை எதிர்பாக்க முடியாது. நாடு நிலையாளர்கள் என்று சொன்னால் அவர்கள் தர்ச்சமயதிர்க்கு நடிக்கிறார்கள் என்று பொருள். அதாவது மார்கெட்டை பிடிக்க நடிப்பார்கள். பின்பு முகத்தை காண்பிப்பார்கள்.