Saturday, 13 July 2013

தந்தி டிவியில் நித்தியானந்தா அருள்வாக்கு...?

மீப‌காலமாய் அடங்கியிருந்த‌ நித்தியானந்தா ஏதாவது ஒரு சேனலில் தனது நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பாக வேண்டும்,அதன் ,மூலம் திரும்பவும் பாப்புலாரிட்டியில் திளைக்க வேண்டும் என்று கையில் கரன்சியை வைத்து அலைந்துகொண்டிருந்தான்.காசினைக் கொட்டிக் கொடுக்கத் தயாராய் இருந்தாலும் இந்துத்துவ பின்னணி கொண்ட லோட்டஸ் டிவி மட்டும் தான் அவன் கையில் கிடைத்தது.

ஆனாலும் அதிகப் பார்வையாளர்களை சென்றடையும் தொலைக்காட்சி கிடைத்தால் நல்லது என்ற எண்ண‌த்தில் வலையை வீசிக் காத்திருந்தான்.
சன்,ஜெயா,கலைஞர் போன்ற சேனல்களில் வாய்ப்பில்லை என பலவாறாக கனக்குப் போட்டு இறுதியாக பு.த.தொலைக்காட்சியை அணுக முடிவு செய்தார். புதிய தலைமுறை பச்சமுத்துவை வெளிநாட்டு ‘கருப்பு முதலைகள்’ வழியாக பிடித்து பேசினார். கேவலமா நாடு சிரிச்ச ஒருத்தனை நமது சேனலில் காட்டுவதா என அந்தக் கருப்பு உள்ளமும் நல்லபடியாகச் சிந்தித்ததோ என்னவோ, ‘சேனலுக்கும் எனக்கும் பொறுப்பில்லைபையன்தான் எல்லாமும் பார்த்துக்கொள்கிறார்’ என தூர நின்றார்.(தப்பிக்க நினைக்கும்,தவிர்க்க நினைக்கும் நேர‌ங்களில் எல்லா முதலாளிகளும் சொல்வது தான்)
உடனே மகன் சத்திய நாராயணனுக்கு அடுத்துள்ள சீனிவாசனை வேறு ஒரு தொடர்பில்
பிடித்து பேசியிருக்கிறார்.‘அந்த வேலை இங்க வேண்டாம். நான் இருக்கும் வரை உங்க நிகழ்ச்சி இங்க ஆகாது’ என கறாராகப் பேசியிருக்கிறார். இதற்காக டெல்லியில் உள்ள ஒரு இந்துத்துவா
கோஷ்டிதான் பேசியிருக்கிறது. இது எல்லாம் கருப்பு பண தொடர்பில் இருக்கும்
கும்பல் என்பது வேறு விஷயம். நாம் நித்தியின் விடா முயற்சிக்கு வருவோம்.
கடைசியாக பெருங்குடியில் இருந்து ஒளிபரப்பாகி வரும் தந்தி டி.வி.யிலாவது ஒளிபரப்பலாம். அது குறைவான பார்வையாளர்களை வைத்திருந்தாலும் பரவாயில்லை. அதிகப்படியான விளம்பர பொறுப்பை நாமே ஏற்கலாம் என பலவாறாக யோசித்துப் பதம் பார்க்கஅந்த சேன‌லில் உள்ள ‘இணைந்த கைகளான’ இருவர் குறித்து விசாரித்திருக்கிறார்கள்.

அருள்வாக்கு கூறும் நித்தியானந்தா

ஒருவர் அந்த தொலைக்காட்சியின் ஆல் இன் ஆல் சந்துரு.இன்னொருவர் நிகழ்ச்சித்
தயாரிப்பாளர் ராம்ஜி.ஏற்கனவே நிறையத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரித்துக்
கொண்டிருப்பவர்.
உடனே இருவரையும் பிடித்தார். வாரம் தோறும் ஒரு நிகழ்ச்சி. அல்லது தினமும் என்றாலும்
பரவாயில்லை என்றதும்....அடுத்து சில நாட்களில் இரண்டு பேரும் பெங்களுரு நித்தி
பீடத்திற்கே போய் சரண்டர் ஆனார்கள். (ஆ)சாமியிடம் பேசினார்கள்...பேசினார்கள்....பேசி முடித்தார்கள். நித்தியை கெட்டியாக பிடித்துக்கொண்டால் தனி சேனலையே தொடங்க சொல்லாம் என்ற தனி கணக்கு போட்டார்கள்.இப்போதைக்கு தந்தி தொலைக்காட்சியில் நித்தியின் நிகழ்ச்சியை ஒளிபரப்புவதென்று முடிவெடுத்தார்கள். உறுதி அளித்து முடித்தார்கள்.
எல்லாமும் கணக்கு பார்த்து வாய்நிறைய சிரிப்போடு திரும்பினார்கள். அதன் பிறகு இரண்டு முறை அங்கே சென்றார்கள். இவ்வளவு ஆகும் என்று பட்ஜெட் பட்டியலை நீட்டினார்கள்.
அதெல்லாம் பார்க்ககூடிய ஆளா நித்தி...அது இருக்கட்டும்..நீங்கள் எப்படி செய்கிறீர்களோ
அப்படியே செட்டு போட்டு எடுங்கள் என கூறிவிட்டார். இப்படி எல்லாமும் இறுதியாகி
படப்பிடிப்பு நடக்கும் நாளும் உறுதியாகியிருக்கிறது.
இறுதியில் நித்தியோடு ‘பக்தகேடிகள்‘ கலந்துகொண்டு கேள்விக்கு பதில்
என்னபடியோ, அல்லது சொற்பொழிவில் ஆன்மீகவாதிகளின் கேள்வி என்ற மாதிரியோ
எடுப்பதென‌ உள்ளார்க்ள்.

நித்தியானந்தா,ரஞ்சிதா,பித்த‌லாட்டம்,தந்தி டிவி,லோட்டஸ் டிவி
நித்தியானந்தா

அடுத்த வாரத் தொடக்கத்தில் எடுக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும். கடந்த
வாரத்தில் இருந்தே தொடங்கிவிட்டது. செட்டு போடுபவர்கள், கேமரா யூனிட், லைட்
செட்டிங் உள்ளிட்ட அனைவரையும் அழைத்து பேசிவிட்டார்கள். அனேகமாக ஆகஸ்டு மாதம்
இறுதியில் ஒளிபரப்பும் முடிவில் உள்ளார்கள். படப்பிடிப்பு பெங்களுரு பிடதி
பீடத்திலேயே..
தொலைக்காட்சி அலுவலகத்தில் 'நித்ய தர்மம்' விவாதம் என்று அறிவிப்பு பலகையில் எழுதிப் போட்டு அது குறித்த விவாதமும் நடக்கிறது.(இந்தப் பதிவு எழுதும் இந்தக்கணம்  பெங்களூரில் நித்தியானந்தா ஆசிரமத்தில் குளுமையான  தட்ப வெப்ப சூழ்நிலையில், தீவிர விவாதத்தில் ராம்ஜி ஈடுபட்டிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்)
(அலுவலகத்தில் நித்தியானந்தா நிகழ்ச்சி குறித்து முணுமுணுப்பு வந்ததும் நம்ம எம்.டி.அவரோட டிவோட்டி அவர் தான் பண்ணச் சொன்னார்,எங்களுக்கு ஒன்றும் சம்பந்தம் இல்லை என்று சொல்லி வாயை மூட வைத்திருக்கிறார்கள்.நிகழ்ச்சி ஒளிபரப்பானால் அது பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தும் என்பதும் தந்தி டிவிக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச பார்வையாளர்களையும் ஓட வைத்து விடும் என்பதும் உறுதி. )

சாமியாரோ,போலிச் சாமியாரோ(சாமியார் என்றாலே போலி.இதில் போலிச்சாமியார் என்று
வேறு எழுதணுமா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிற‌து
.)
பக்தர்களிடம் காசு பிடுங்கிக் கொண்டு 'அருள் வாக்கு' கொடுப்பார்கள்.

ஆனால் இங்கோ நித்தியானந்தா சிலருக்கு 'தட்சணை' கொடுத்து, தொலைக்காட்சி பார்க்கும் அப்பாவி பக்தனுக்கு அருள்வாக்கு கொடுக்கிறார்.நித்தியானந்தாவை மடக்கிய இவர்கள் நிச்சயம் அவரை விட விவரமானவர்கள் தான்.பகிரங்கமாய் அம்பலப்பட்ட ஒரு பேர்வழியை வைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்த துணியும் இவர்களின் தில்லு வேறு யாருக்கும் வராது என்பது உறுதி.
இப்படியே போனால் தொலைக்காட்சி ரேட்டிங் ஏறாது.சிலர் வங்கிக் கணக்கு இருப்பு ஏறும் என்பது மட்டும் நிஜம்.

4 comments:

Anonymous said...

சந்துரு,ராம்ஜி இரண்டு பேருக்கும் ஊடக உலகில் மீடியா அமீனாக்கள் என்ற செல்லப் பெயர் உண்டு. எங்க வேலைக்கு போனாலும் உருப்படவிடமாட்டார்கள்.

எந்த டிவிக்கு போனாலும் அங்கே மனசாட்சிக்கு விரோதமாக கமிஷன் அடித்து அந்த டிவியை இழுத்து மூடிவிட்டு அல்லது உருப்படவிடாமல் செய்து விட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள்.

மின்பிம்பங்கள்,கைலாசத்தை கைலாசத்துக்கே அனுப்ப .. அவர் சுதாரித்து புதியதலைமுறையில் ஜீவனம் செய்து கொண்டு இருக்கின்றார். அதன் பிறகு ஜீதமிழ்,பாலிமர்,தற்போது தந்தி...

“டேய் மீடியா அமீனாக்களா...”தந்தி டிவியை உருப்பட விடுங்க...இல்லை செத்து போனா சிவந்தி ஆதித்தன் ஆவி உங்களை சும்மா விடாது.

Anonymous said...

.

Anonymous said...

நித்யானந்தா சாமியார் வேஷத்துல மக்களை ஏமாத்தி மாட்டிக்கிட்ட பொம்பைளை பொறுக்கி.சந்ரு,ராம்ஜி மாட்டிக்காத பொம்பளை பொறிக்கிங்க அவ்வளவுதான் வித்யாசம்.பொம்பளைங்கன்னா இரண்டு பேரும் அப்படி வழிவானுங்க.

Anonymous said...

thiruvannamalai endral punitha nagaram atha kedukka vantha kuppai duste intha nithyanantha...
avan ஒரு பொறம்போக்கு நாய்...திருவண்ணாமலையின் சீர்கேடு ,,,