Saturday, 22 September 2012

கவனிக்கிறோமா..? கதை கட்டுகிறோமா..?




"கவனிக்கிறோம்" – என்னும் பெயரில் ஊடக கண்காணிப்பு இணையப் பக்கத்தை சில முற்போக்காளர்களும் அறிவுஜீவிகளும் இணைந்து சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினர்.



முதல் பதிவிலேயே இதன் நோக்கம் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் அதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், மூத்த பத்திரிகையாளரும் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவருமாகிய எழுத்தாளர் ஞாநி சுருக்கமாகப் பதிவு செய்திருந்தார்.அது இதுதான்.




ஆனால் இதன் சில பதிவுகள் இந்த நோக்கத்திற்கு முரண்பட்டு இருப்பதை நாம் அறிய முடியும்.எடுத்துக்காட்டாய் ஒன்றைப் பார்க்கலாம்.


சிங்கள பயணிகள் தமிழ்நாட்டில் அடித்து விரட்டப்பட்டதை எந்த ஊடகமும் ஆதரிக்கவில்லை.செய்தியாக மட்டும் பதிவு செய்திருந்தன.ஆனால் தி ஹிந்து,தினமணி மட்டும் அதற்கு கண்டனம் தெரிவித்தனர்.அவர்களைப் பாராட்டும் பதிவு தான் மேலே சொல்லப்பட்டது. 

இந்த ”அறிவார்ந்த” பதிவை எழுதியவர் மீனா என்பவர்.இவர் திருவண்ணாமலையில் வசிக்கும் பள்ளி ஆசிரியர்.அ.மார்க்ஸ் அவர்களின் சிஷ்யர்.

தி ஹிந்து, தினமணி தெரிவித்துள்ள கண்டனத்திற்கு பின்னான அரசியல் வேறு என்பது அரசியலில் பாலபாடம் கற்ற சிறு குழந்தைக்கும் கூடத் தெரியும்.

உலக அரசியலில் இருந்து உள்ளூர் அரசியல் வரை கரைத்துக் குடித்த அ.மார்க்ஸ் அவர்களுக்கும் அவர்களது சிஷ்யகோடிகளுக்கும் தெரியாததல்ல..!

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=655164&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=)%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1


ஆனாலும் பாராட்டு..!

**** 

அப்படிப்பாராட்டும் அளவுக்கு தினமணி ’சிறப்பாக’ என்ன எழுதியிருக்கிறது தெரியுமா..?

அதில் ஒரு சிறுபத்தியை எடுத்துக் காட்டுகிறோம்.







சுருக்கமாகச் சொன்னால் எப்படியும் தமிழ் மீனவன் செத்துப் போவது உறுதி.அப்படிச் செத்துப் போறவன் இந்தியனிடம் பயிற்சி பெற்ற சிங்களனால் செத்துப் போவது பெருமையல்லவா..! என்று  பெருமை பொங்க எழுதியிருக்கிறது.

நமக்கு இதைக் கண்டால் ஆத்திரம் வருகிறது.

கவனிக்கிறோம் குழுவினருக்கோ பாராட்டத் தோன்றுகிறது.

*****


இந்தப் பாராட்டிற்குப் பின்னான கவனிக்கிறோம் குழுவினரின் அல்லது அதில் ஆதிக்கம் செலுத்துபவர்களின் ’உள்நோக்கம்’ உங்களுக்குத் தெரியாததல்ல.

மேலும் இந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.824 வார்த்தைகள் கொண்ட பதிவில் முதல் 630 வார்த்தைகள் பதிவிற்குத் தொடர்பற்று உள்ளது.

மேலே கூறியுள்ளபடி என்று தொடங்கும் இடத்திலிருந்து தான் கட்டுரையாளரின் பதிவு தலைப்பிற்குத் தொடர்பாக உள்ளது.அதற்கு மேல் உள்ளவை எல்லாம் கட்டுரையாளரின் அரசியல் எண்ணத்தையும் அவரது விருப்பத்தையும் பறை சாற்றுவதாக உள்ளது.தங்கள் தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்பிற்காக எழுத வேண்டுமானால் தனிப்பதிவு எழுதலாமே..!

முதல் பதிவில் ஞாநி சொல்லியிருந்தாரே..!



அதற்கு முற்று முழுதிலும் முரணாக உள்ளது.என்ன நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதை விடுத்து சிலரின் தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புக்களைக் காட்டும் தளமாக மாறிவருவதை அறியமுடிகிறது.

ஞாநி போன்றவர்கள் தான் இதற்கு பதில் அளிக்க வேண்டும்.

இது மட்டுமல்ல அதே பதிவில் இன்னொரு வன்மத்தையும் சுட்டிக் காட்டுகிறோம்.

இதனைப் பாருங்கள்.



தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் போராட்டம் நடத்தியதாக கட்டுரையாளர் எழுதியுள்ளார்.இதனை பிளாக்கை நிர்வகிக்கும் மிகப்பெரிய அறிவாளிகள் குழுவும் அனுமதித்துள்ளது. 

இது கட்டுரையாளரின் வன்மம் இல்லாமல் வேறு என்ன? விடுதலைப்புலிகளை நேர்மையாக விமர்சித்தால் தவறு இல்லை.ஆனால் தமிழ்நாட்டில் தளம் அமைத்து விடுதலைப்புலிகள் செயல்படுவதாகப் பொருள்படும் படி எழுதியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் எங்கு விடுதலைப்புலிகள் இருக்கிறார்கள்..?


இதற்கு மேல் கட்டுரையாளரின் வன்மத்திற்கும் உள்நோக்கத்திற்கும் எடுத்துக்காட்டு வேண்டுமா?


இந்த “ஆகச் சிறந்த” பதிவை எழுதிய மீனா தான் அ.மார்க்ஸ் சில மதிப்பீடுகள் என்ற நுாலையும் தொகுத்தவர். கட்டுரையே இப்படி..?





இப்பொழுது கூட்டிக் கழித்துப் பாருங்கள்.புரியும்.



காமாலைக் காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்கள்.

வனிக்கிறோம் தனது புலிக்காமாலைக்கு மருத்துவம் பார்க்குமா?

கவனிப்போம்...

1 comment:

Anonymous said...

good nice..