ஊடக உலகில் அடுத்தவர் சொத்தினை ஆட்டையப் போடுவதில் எக்ஸ்பர்ட் யாரென்று கேட்டால் கலகக்குரல் படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் தெரியும். (வரதா வரதா..)
அதைப்போல பிற தொலைக்காட்சிகளின் அனைவரும் விரும்பிப் பார்க்கும்,தரமான நிகழ்ச்சிகளை அப்படியே ஈயடிச்சான் காப்பியாக அலேக்காக அள்ளுவதில் சன் டிவிக்கு நிகர் சன் டிவி தான்.
கலக்கப் போவது யாரு? ஜெயிக்கப் போவது யாராக..? மாறியது….இதைப் போல சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்த வரிசையில் இணைந்திருப்பது ஆதித்யா சேனலில் ஒளிபரப்பாகி வரும் சொல்லுங்கண்ணே சொல்லுங்க..இதை நடத்தி வருபவர் இமான் அண்ணாச்சி.இவர் ஏரல்,நெல்லையைச் சேர்ந்தவர்.அங்காடித் தெரு திரைப்படத்தில் அண்ணாச்சி கடைக்கு ஆள் பிடிப்பவராக நடித்தவர்.
இமான் அண்ணாச்சி.
இந்த நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமான ஒன்று.ஆண்கள், பெண்கள், சிறு குழந்தைகள் என அனைவரையும் சிரிக்க வைத்து விடும் இந்நிகழ்ச்சி.
சில தலைவர்களோட அடைமொழி சொல்றேன் அவங்க யாருன்னு கண்டுபிடிங்க” என சொல்லிவிட்டு இமான் கேட்ட கேள்விகளும் பதிலும்.
“புரட்சி கவிஞர்னா யாரும்மா?” – இமான்
” வைரமுத்து “
“எலேய் .. வைரமுத்து புரட்சி கவிஞரா? நல்லா தெரியுமா?”
“ம்ம்”
” சரி. வைக்கம் வீரர்னா யாரு”
“காமராஜர்”
” அவரு வைக்கம் வீரரா?
பாப்பா.. நீ நல்லா வருவே”
இதனை அவர் சொல்லும் விதமும் அதனை எலே என்று ஒருவிதமாய் இழுக்கும் விதமும் மிக அருமையாய் இருக்கும்.
உங்கள் தொலை பேசி எண்ணை வேகமாக சொல்லச் சொல்வார். பெருமையாக வேகமாக சொல்லும் மக்களைப் பாராட்டி விட்டு "அண்ணே அதை அப்படியே தமிழ்ல சொல்லுங்கண்ணே" என்பார். அதிலும் அந்த திருநெல்வேலி நடையும் அவரது முகபாவமும் அருமையாய் இருக்கும்.
இந்த சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சி முதன்முதலாக இதற்கு முன்பு வேறு பெயரில் மக்கள் தொலைக்காட்சியின் கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை என்ற தலைப்பினுள் இதுவும் ஒளிபரப்பாகி வந்தது.அதையும் நடத்தி வந்தவர் இதே இமான் அண்ணாச்சி தான்.அந்த நிகழ்ச்சி மிகவும் வெற்றிகரமாக போனதும் சன் டிவி குழுமத்திற்கு மூக்கில் வியர்த்து விட்டது. அங்காடித் தெருவில் ஆள் பிடித்தவரை இவர்கள் பிடித்து வந்து சொல்லுங்கண்ணே சொல்லுங்க என்று நடத்த விட்டு விட்டார்கள்.
அதிக சம்பளம்,பப்ளிசிட்டியைக் கண்டவுடன் அண்ணாச்சியும் வாய் பிளந்து விட்டார் போலிருக்கிறது.
மக்கள் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி நடத்தும் பொழுது இதைவிடக் கொஞ்சம் அறிவுப் பூர்வமாகவாவது இருந்தது.ஒவ்வொரு கேள்வியைக் கேட்கும் பொழுதும் நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் ஊகிப்பதற்கு வசதியாக கீழே பதிலை ஸ்குரோல் போடுவார்கள்.ஆனால் ஆதித்யாவிலோ அதுவும் கிடையாது.நிகழ்ச்சியின் தரமும் சற்று குறைந்து விட்டது.
ஒரு தொலைக்கட்சி தனது குழுவினைக் கொண்டு கஷ்டப்பட்டு ஒரு புதிய நிகழ்ச்சியை உருவாக்குவதையும் புதியவர்களைத் துணிச்சலுடன் அறிமுகப்படுத்துவதையும்எந்த சூடும் சொரணையும் இல்லாமல் அலுங்காமல் குலுங்காமல் இன்னொரு சேனல் திருடுவது மிகவும் இழிவாக இருக்கிறது. இதனைத் தொடர்ச்சியாக சன் குழுமம் செய்து வருகிறது. அந்த வரிசையில் தான் இந்த நிகழ்ச்சியும்.அடுத்தவர் உழைப்பைத் திருடும் இவர்களை என்ன செய்வது என்றே தெரியவில்லை.
இந்த நிகழ்ச்சித் திருட்டை மக்கள் தொலைக்காட்சியில் பொருமிக் கொண்டிருக்கிறார்களாம்.தொலைக்காட்சி தொடர்புடைய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற பொழுது அதன் தலைவரிடம் இதைச் சொன்னார்களாம்.
"தாத்தா புத்தி தானே பேரன்களுக்கு இருக்கும்" என அவர் கமெண்ட் அடித்தது தான் ஹைலைட்.
3 comments:
yea. i totally agree with you.
அட அப்படியா சேதி...
ரொம்பவே ரசிக்க வைக்கிற நிகழ்ச்சி
ஏன் ராஜராஜராஜனின் தில்லாலங்கடி மேட்டரை எழுதலைங்க தோழர்
Post a Comment