Wednesday, 8 February 2012

Schizophrenia (மனச்சிதைவு)நோயின் பிடியில் வரதராஜன்?தமிழின் எந்தப் பத்திரிகைகளிலும் இல்லாத அளவுக்கு குமுதம் குழும இதழ்களில் மட்டும் ஆசிரியர் மற்றும் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் நிலையாக இல்லாமல் அடிக்கடி மாற்றப்படுவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.அதற்கு காரணம் வேறு யாருமல்ல.

நீங்கள் ஊகிப்பது சரிதான்.சாட்சாத் நம்ம ஆளு பா.வரதராஜன் தான்.இதற்கு என்ன காரணம் என்று மருத்துவ ரீதியாகத் தெரிந்து கொள்ளும் முன் நடந்தவற்றை ஒரு கழுகுப் பார்வை பார்ப்போம்.

முதலில் குமுதம் நிலவரம் பற்றி ஒரு சிறு அறிமுகம்.

குமுதம் எஸ்.ஏ.பி.அண்ணாமலை மறைந்த பிறகு தான் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் குமுதம் விஷயங்களில் தலையிடுகிறார்.வருடத்திற்கு மிகச்சில முறை மட்டும் தான் தமிழ்நாடு வருவார்.வரும் பொழுது குமுதம் குழும இதழ்களில் நடப்பவற்றை வரதராஜனிடமும் மற்றவர்களிடமும் கேட்டுத் தெரிந்து கொள்வார்.குமுதம் குழும இதழ்களில் ஆசிரியர் குழுவில் இருப்பவர்களை அழைத்து விவாதித்து அவர்களை ஊக்குவித்துப் பாராட்டியும் செல்வார்.

சில நேரம் நிருபர்களையும் அழைத்து ஊக்கப்படுத்துவதுண்டு.மற்றபடி யாரையும் கடிந்து கொண்டது கூடக் கிடையாது.ஒரு நல்ல நிர்வாகிக்கு இருக்கும்  குணம் அவருக்கு இருக்கும்.குமுதத்தை தனது குடும்பச் சொத்தாகக் கருதி அதன் வளர்ச்சியை அவர் தள்ளி நின்று பார்த்தார்.அதனை விரும்பினார்.அதற்கு தனது தனது அப்பாவின் நணபரின் மகனான வரதராஜன் மிகச் சரியான உறுதுணை என்று நம்பினார்.டாக்டர் ஜவஹர் பழனியப்பன் செய்த ஒரே மற்றும் மாபெரும் தவறு இது மட்டுமே.

இனி மேட்டருக்கு வருவோம்.

வரதராஜன் நிர்வாகத்தில் உயர் நிலைக்கு வந்தபின் குமுதத்தின் ஆசிரியர்கள் யாரும் அதிக நாள் நீடிக்காததன் பின்னணியை இப்பொழுது பார்ப்போம்.

அப்பொழுது குமுதத்திற்கு மங்குனி மாலன் ஆசிரியராக இருந்தார்.இவரை அழைத்து வந்தது நம்மாளு வரதராஜன் தான்.மாலன் பி.வரதராஜனிடமும் அவரது தந்தையாருடனும் மிகுந்த நெருக்கமாக இருந்தார்.ஒரு பிரச்சனையும் இல்லை.இந்த நேரம் பார்த்து டாக்டர் ஜவஹர் பழனியப்பன் அமெரிக்காவில் இருந்து வந்தார்.வந்தவர் போவதற்கு முன் குமுதம் ஆசிரியர் குழாமை அழைத்துப் பேசினார்.மேலும் மங்குனி மாலனை அழைத்து நாலு வார்த்தை பாராட்டி விட்டார்.இது மிக இயல்பாக நடந்தது.இது நிறுவனத்தின் வளர்ச்சியை விரும்பும் ஒரு நிர்வாகியின் குணம்.

ஆனால் வரதராஜன் இதைக் கண்டு பொருமி விட்டார்.தனது கட்டுப்பாட்டில் உள்ள குமுதம் ஆசிரியரை டாக்டர் பாராட்டுவதா?தாங்க முடியவில்லை.

உடனே தன் கைக்கு அடக்கமாக எப்பொழுதும் இருக்கும் மணாவை ஏவினார்.மணா தன் வேலையை ஆரம்பித்தார். மங்குனி மாலனின் மாயக்கோல் மணாவிடம் எடுபடவில்லை.

அப்புறம் என்ன!மாலன் அவுட்.

அடுத்து மங்குனியின் இடத்திற்கு வந்தவர் ராவ்.அழைத்தவரும் அமர வைத்தவரும் வரதராஜன் தான்.வழக்கம் போல் எல்லாம் நன்றாகச் சென்று கொண்டிருந்த்து.அனைத்து அதிகாரத்தையும் அவருக்கு அளித்தார்கள்.

இந்த நேரம் பார்த்து டாக்டர் ஜவஹர் பழனியப்பன் தமிழ்நாடு வந்தார்.வந்தவர் சும்மா போயிருக்கலாம்.போகவில்லை.ராவ் ஐ பாராட்டி விட்டார்.போகும் பொழுது தனது அமெரிக்க தொலைபேசி எண்ணையும் அளித்து விட்டுச் சென்று விட்டார்.

அப்புறம் என்ன ?இரண்டொரு முறை டாக்டர் ஜவஹர் பழனியப்பன் உடன் ராவ் தொலைபேசியில் பேசினார்.இதைக் கண்ட வரதராஜன் வழக்கம் போல் பொருமிவிட்டு தனது ஏவல் படையான மணாவை அனுப்பினார்.அவரும் வரதராஜன் இட்ட உத்தரவை சிரமேற்கொண்டார்.

அப்புறம் என்ன!ராவ் அவுட்.

அடுத்ததாக கிருஷ்ணா டாவின்சிக்கும் இது தான் நடந்தது.ஆசிரியராக அவரை அமர்த்தி அழகு பார்த்தார் வரதராஜன். அவரும் சிறிது காலத்தில் தமிழ்நாடு வந்த டாக்டர் ஜவஹர் பழனியப்பனிடம் பேச ஆரம்பித்தார்.உடனே அவரை மணா மூலம் தொந்தரவு செய்யும் அசைன்மெண்ட் கொடுத்தார்.

அப்புறம் என்ன!டாவின்சி அவுட்.
இப்படிப்பட்ட நீண்ட நெடிய போங்குனி ஆட்டத்தில் ஒரு எதிர்பாராத திருப்பமும் நடந்தது.புதிதாகத் தொடங்கப்பட்ட ரிப்போர்ட்டர் பத்திரிகைக்கு வரதராஜன் யாரையும் நம்பாமல் தனக்கு நெருக்கமான மணாவையே ஆசிரியராக நியமித்தார்.எதுக்கு வெளி ஆளை நம்பணும்?மணாவே நமக்கு நம்பிக்கையாக இருப்பார் என்று நம்பினார்.ஆள் இன் ஆள் மணா தான். ஆனால் எதிர்பாராமல் ஒன்று நடந்தது.

டாக்டர் ஜவஹர் பழனியப்பன் அமெரிக்காவில் இருந்து வந்த சமயத்தில், மணா ஒரு எதிர்பாராத முடிவு ஒன்றை எடுத்தார்.

வரதராஜனை மட்டும் நாம் எவ்வளவு நாள் நம்புவது?எதற்கும் இருக்கட்டும்,என்று டாக்டர் ஜவஹர் பழனியப்பனுக்கு ஒரு வணக்கத்தை மணா போட்டு வைத்தார்.

இதைக் கேள்விப் பட்டவுடன் வரதராஜனுக்கு கடும் ஆத்திரம் வந்தது.இது நம்ம ஆளுன்னு நினைச்சா,யார் எக்கேடு கெட்டா நமக்கென்ன,நாம் எல்லோரிடமும் நட்பாக இருப்போம்ன்னு நினைக்கிற பத்திரிகைக்காரர் புத்தியை நம்ம கிட்டயே மணா காட்டிட்டாரேன்னு ஆத்திரம் தலைக்கேறிடுச்சு.

உடனே வரதராஜன் மணாவுக்கு கல்தா கொடுத்தார்.இதை மணாவே எதிர்பார்க்கவில்லை.அதன்பின் மணா வெளியே சென்று தனக்குத் தெரிந்த அத்தனை அரசியல் தலைவர்களிடமும் நண்பர்களிடமும் வரதராஜன் குறித்து கொஞ்ச காலம் ஒப்பாரி வைத்தார்.

(இப்பொழுது கடந்த 3 ஆண்டுகளாகத் திரும்பவும் வரதராஜன் பக்கம் வந்து விட்டார்.குமுதம் பஞ்சாயத்தில் நிறைய அரசியல் தலைவர்களின் நட்பை வரதுவுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.)

மணா சென்ற பின் இளங்கோவனை ரிப்போர்ட்டர் ஆசிரியராக அழைத்து வந்தார் வரதராஜன்.அவரும் நிர்வாகத்துடன் இணக்கமாக நடந்து கொண்டார்.

வழக்கம் போல் அமெரிக்காவில் இருந்து டாக்டர் ஜவஹர் பழனியப்பன் வந்தார்.அவர் ரிப்போர்ட்டர் குழாம் முழுவதையும் பாராட்டினார்.ரிப்போர்ட்டர் ஆசிரியர் இளங்கோவனுக்கு தனது விசிட்டிங் கார்டில் கையொப்பம் போட்டுக் கொடுத்தார்.எப்பொழுது வேண்டுமானாலும் என்னைத் தொடர்பு கொள்ளலாம் என்று சொல்லி விட்டுச் சென்றார்.

அப்புறம் என்ன?இளங்கோவன் டம்மியாக்கப்பட்டார்.

அதற்காக பாண்டியராஜனை அழைத்து வந்தார். வழக்கம் போல் அமெரிக்காவில் இருந்து டாக்டர் ஜவஹர் பழனியப்பன் வந்தார்.அலுவலகத்திற்கு ஒரு நாள் வந்த பொழுது அவருடன் லிப்டில் ஒன்று போல் பயணிக்கும் சந்தர்ப்பம் பாண்டியராஜனுக்கு எதேச்சையாக அமைந்தது.அப்புறம் என்ன? பாண்டியராஜனுக்கு கல்தா தான் இப்பொழுது கோசல்ராமன் வந்துள்ளார்.

கடையத்தைச் சேர்ந்த கோசல்ராமன் தினகரன் நிருபராக என்ன பண்ணினார்?சென்னை தினகரனுக்கு(பழைய) எதுக்கு வந்தார்?தினகரனில் இருந்து சுதேசமித்திரனுக்கு இவர் எதுக்கு போனார்?என்ன பிரச்சனை...?

அப்புறம் அப்புறம்? இப்படி எதுவும் தெரியாமல் இவருக்கு குழும ஆசிரியர் பதவி கொடுத்துள்ளார்.அல்லது தெரிந்து(நமக்கு ஏத்த ஆளு என்று நினைத்து) கொடுத்துள்ளார்.இவர் எவ்வளவு நாள் தாக்குப் பிடிக்கிறார் என்று நாமும் பார்ப்போம்.

இவர்களின் நீக்கத்திற்கு மாற்றத்திற்கு எல்லாம் டாக்டர் ஜவஹர் பழனியப்பனிடம் ஏதாவது உப்புச் சப்பில்லாத காரணங்களைக் கூறியுள்ளார்.டாக்டரும் இவர் ரொம்ப நல்லவருன்னு அதிகம் நம்பிட்டார்.அது தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்.

இனி நடப்புக்கு வருவோம்.

எந்த ஒரு நிறுவனத்திலும் தனக்கு கீழ் இருப்பவர்கள் தன்னை மீறி வளர்ந்து விடக்கூடாது என்று நினைப்பது இயல்பு.அதுவும் பத்திரிகை நிறுவனத்தில் இது சகஜம்.ஆனால் இங்கோ குமுதத்திலும் ரிப்போர்ட்டரிலும் ஆசிரியராக இருந்தவர்கள் வருடத்திற்கு ஒரு முறை தமிழ்நாடு வரும் குமுதத்தின் உண்மையான முதலாளியாக இருப்பவரிடம் பேசுகிறார்கள்.குமுதம் முதலாளியும் ஒரு நிர்வாகிக்கு உரிய இயல்புடன் அவர்களைப் பாராட்டுகிறார்.

ஆனால் அவ்வாறு டாக்டர் ஜவஹர் பழனியப்பன் பாராட்டிய அனைவரையும் வரதராஜன் கல்தா கொடுக்கிறார்.டம்மி செய்கிறார்.அவர்கள் தனக்கு எதிரானாவர்களோ என்று அதீத சந்தேகமும் பயமும் கொள்கிறார்.இந்த தேவையற்ற பயத்தினால் சிறுசிறு விஷயத்திற்கெல்லாம் சந்தேகமும் அதனால் நீக்கமும் நடக்கிறது.

குறிப்பாகப் பாருங்கள்.

லிப்டில் பயணிக்கும் ரிப்போர்ட்டர் செய்தி ஆசிரியர் உடன் குமுதம் நிறுவனத்தின் முதலாளி பயணிக்கிறார்.இருவரும் முதல் முறையாக அப்பொழுது தான் பேசுகின்றார்கள்.இந்த சந்திப்பு வெறும் 30 விநாடிகள்.லிப்ட் நின்றவுடன் சிரித்த படி அவரவர் வேலைக்குச் சென்று விடுகின்றார்கள்.

70 வருடம் நடந்து கொண்டிருக்கும் ஒரு பிரபல்ய பத்திரிக்கை நிறுவனத்தின் முதலாளி அவரே பேச ஆரம்பிக்கும் பொழுது வேலைக்குச் சேர்ந்து சில மாதங்களே ஆன அவரிடம் சம்பளம் வாங்கும் ஒரு செய்தி ஆசிரியர் பேசாமல் மறுக்க முடியுமா என்ன?முதல் அறிமுகமான இந்த சமயத்தில் 30 நிமிடங்களில் என்ன பேசி விட முடியும்?என்ன சதித் திட்டம் தீட்டி விட முடியும்?ஆனால் சந்திப்புக்குப் பின் செய்தி ஆசிரியருக்குப் பொறுப்புகள் பறிக்கப் படுகிறது.

இது ஒரு மிகச்சிறிய எடுத்துக்காட்டு.இதைப்போல பல சம்பவங்களைக் கூற முடியும்.


எதனால் இது விளைகிறது? முதலாளியைப் பார்த்துச் சிரித்தாலே எதனால் எதிரியாக மாறுகின்றார்கள்?கண்ணில் கண்டவர்களை எல்லாம் ஏன் துரோகம் செய்வதாகக் கருத வேண்டும்? இந்த அதீத பயம் அல்லது மனப்பிரமை எதனால் ஏற்படுகிறது? இதற்கு என்ன காரணம்?

அதைத் தெரிந்து கொள்ளும் முன் வரதராஜனின் குணம் குறித்து கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

வரதராஜன் தன்னை குமுதத்தின் சம்பளம் வாங்கும் பணியாளராக என்றும் கருதியது கிடையாது.தான் மட்டுமே குமுதத்தின் ஒட்டு மொத்த அத்தாரிட்டி என்று எண்ணினார்.அமெரிக்காவில் மிகவும் செல்வந்தராக இருக்கும்,எப்பொழுதாவது தமிழ்நாடு வரும் ஜவஹர் பழனியப்பன் குமுதத்தை தன்னிடம் வேறு வழியின்றி விற்று விடுவார் என்ற தவறான எண்ணம் இதற்குக் காரணமாக இருக்கலாம்.அல்லது சிறு வயதில் இருந்து அவர் வளர்ந்த முறையும் அவரது தந்தையின் வளர்ப்பும்  காரணமாக இருக்கலாம்.

குமுதத்தை காவல் காக்கும்  வாட்ச்மேன் போல் தானும் டாக்டர் ஜவஹரிடம் சம்பளம் வாங்கும் ஒரு ஊழியன் என்பதே அவருக்கு வசதியாக மறந்து போனது.அல்லது முதலாளியாக அவரே நடித்து நடித்து அதாகவே மாறிப்போனார்..

தன்னால் நியமிக்கப்பட்டவர்கள் யாரும் சம்பளம் கொடுக்கும் முதலாளியிடம் பேசினால் கூட எதிர் நிறுவனத்தின் முதலாளியிடம் பேசுவது போல் அச்சம் கொள்கிறார்.அதனால் அவர்களை அலுவலக ரகசியங்களை விற்பது போல் கருதி பணி நீக்கம் செய்கிறார். மேலும் தனக்குப் பிடிக்காதவர்களை சித்திரவதை செய்யும் குணமும் இவருக்கு அதிகம்.


 இது எதனால் நடக்கிறது?எதனால் வேண்டுமானாலும் நடக்கட்டும்.என்ன காரணம் என்றும் கிரிமினாலஜியில் இது எந்த வகை என்றும் அது குறித்தும் விரிவாகப் பிறிதொரு முறை ஆராய்வோம்.

இப்பொழுது மருத்துவ ரீதியாக இதற்கு என்ன காரணம் என்று அறிய முயற்சித்தோம்.
நாடு முழுவதும் உள்ள இப்படிப்பட்டவர்களின் நடத்தையை நாம் தொகுத்து மிகவும் பிரபல்யமான மனநலமருத்துவரிடம் அளித்த பொழுது அவர் இது குறித்து அளித்த ரிப்போர்ட் சுருக்கம் இங்கே!

இந்த நடத்தை மிக மோசமான நோயின் அறிகுறி ஆகும்.

ஸ்கிசோபிரனியா என்று இதற்குப் பெயர். அதைத்தமிழில் மனச்சிதைவு என்று சொல்லுவார்கள்.
ஸ்கிசோபிரெனியா-Schizophrenia எப்படிப்பட்ட நோய்?

ஸ்கிசோப்ரனியா வர என்ன காரணம் என்பதை இன்னும் மருத்துவர்கள் ஆராய்கிறார்கள். பரம்பரைத்தன்மையும் அதிக அளவு காரணமாய் இருக்கிறது.
ஆனால் நோயின் ஆரம்ப அறிகுறி தோன்றும் காலத்தில் கண்டறிந்தால் நாம் குணப்படுத்துவது எளிது.
மனத்தில் எழும் சிந்தனைகள் சாதாரணமான நிஜ உலகில் நியதியிலிருந்து விலகிப்போனவையாக இருக்கும்.விசித்திரமான நம்பிக்கைகள்-Delusionsமனதை ஆக்கிரமிக்கும். அவை கற்பனைகள் அல்ல தானாக எழுபவை.விரும்பி உருவாக்கப்படுபவை அல்ல.கற்பனை என்கிற வார்த்தை இங்கு பொருந்தாது.கற்பனைகள் நாம் உருவாக்குபவை-delusions are believes not imagination) நம்பிக்கை அவரை ஆட்டிப்படைக்கிறது.

அவர் எச்சரிக்கையோடும் ஒரு ரகசியத்தன்மையோடும் எவரையும் சந்தேகக்கண்ணோடும் பார்க்கிற இயல்புகளை கொண்டவராகிவிடுவார்.இது பரனொயிட் டிலூஷன் –Paranoid Delusion எனப்படுகிறது.


இப்படி இவர்கள் எண்ணங்கள் இந்த நம்பிக்கையைச் சார்ந்து ஓடுவதால்  முதலில் இவர்கள் எதிர் நோக்குவது சமுக உறவுச்சிக்கல்களைத்தான். தனித்தவர்களாக,கர்வம் பிடித்தவர்கள் போல,சுயநலம் மிக்கவர்கள் போல, நாசூக்காகவோ நளினமாகவோ நடக்கத் தெரியாதவர்கள் போல தோற்றமளிப்பார்கள்.

மனச்சிதைவின் இன்னுமொரு அறிகுறி காதில் கேட்கும் குரல்கள். மாயத்தோற்றங்கள், மாய உடல் உணர்வுகள்,
இதை Halucinatons –மாய உணர்வுகள்        என்பார்கள்.

மனச்சிதைவில் ஏற்படுவது பெரும்பாலும் காதில்கேட்கும் குரல்கள்
-Auditory Hallucinations தான்.


மேலும் இந்த மனநோய் சிந்திக்கும் திறனை மெல்ல மெல்ல அழித்துக்கொண்டு வரும்.
சிந்திக்கும் தன்மை குழம்பியதாகி, ஞாபகசக்தி குறைவடையும்.மனதின் ஒரு முக ஆற்றல் அற்றுப்போகும்.தங்கள் எண்ணங்களை கோர்வையாக்கி வெளிப்படுத்தும் ஆற்றலை இழப்பார்கள். உணர்வு நடத்தை சிந்தனை ஆகியவை தொடர்பிழந்து ஒரு விசித்திர நிலை தோன்றிவிடும்.(disorganized thinking,slow thinking,difficulty understanding,poor concentration,poor memory,difficulty expressing thoughts,difficulty integrating thoughts, feelings and behavior)

இந்த நோயினால் எவ்வளவு பேர் பாதிக்கப் பட்டுள்ளார்கள்?

இந்த நோயின் பாதிப்போடு 24 மில்லியன் மக்கள் உலகம் எங்கு இருக்கிறார்கள்.இதில் சிகிச்சைபெறாமல் வாழ்பவர்கள் 50%.இவர்களில் 90%  இந்தியா போன்ற வளரும் நாடுகளில்தான் இருக்கிறார்கள். 

மேலும் மனச்சிதைவு ஏற்பட்ட ஒருவர் தன் மனத்தோடுபோராடவேண்டியிருக்கிறது.தன் உறவுகளோடு போராட வேண்டியிருக்கிறது.உலகத்தோடு போராட வேண்டியிருக்கிறது.
அனேகமாக அவர்கள் தோற்றுப்போனவர்களாகிவிடுகிறார்கள்.ஒரு கட்டத்தில் அவர்கள் நிஜ உலகினுடனான தொடர்பை இழந்து விடுவார்கள்.தாம் நோய்வாய்ப்பட்டிருக்கிறோம் என்பது அவர்களுக்கு தெரியாது.உலகம் அவர்களை பைத்தியம் என்று சொல்லிவிடும்.

இதற்கு என்ன தான் தீர்வு?

இன்று மிக நல்ல மருந்துகள் சென்னையிலேயே கிடைக்கின்றன, மருத்துவ சிகிச்சைக்குப்பின்னர் அவர்கள் நிஜ உலகுக்கு மீளத்தான் செய்கிறார்கள். அவர்கள் மீண்டும் சாதாரண வாழ்வைத் தொடர விரும்புவார்கள். ஆனால் சமுகம் அந்த பைத்திய முத்திரையை அகற்றிக்கொள்வதில்லை.அந்தக் கண்ணாடியூடாகவே  அவர்களைப்பார்க்கும். அவர்களைப் புறக்கணிக்கும் பழிக்கும் இழிவுபடுத்தும்.அவர்கள் மனமுடைந்துபோய்விடுவார்கள். மீண்டும் நோய்வாய்ப்படுவார்கள்.

மருத்துவ சிகிச்சை அனைவருக்கும் கிடைக்கிறதா?

மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாமல் இருப்பவர்கள்  அனேகம்.சரியான சிகிச்சையும் சுற்றத்தினரது புரிந்துணர்வும் கிடைத்தால் அவர்கள் சாதாரண வாழ்க்கைக்குத்திரும்பிவிடக்கூடும்.ஸ்கிசோப்ரனியா மனிதர்கள் சமூகத்திலிருந்து விலகித்தான் ஓடுவார்கள். போதாக்குறைக்கு சமூகமும் அவர்களை துரத்தியடிக்கும் மீளச்சேர்ப்பதில்லை.

மனநல மருத்துவர் அனுப்பிய அறிக்கையைப் பார்த்ததும் நமக்கு இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மீது இனம் புரியாத பாசம் ஏற்பட்டது.நம் எதிரிக்குக் கூட இந்த நோய் வரக்கூடாது என்று நினைக்கிறோம்.ஆகவே வரதராஜனுக்கு இந்த நோய் வந்திருக்காது என்று நாமே நம்பிக் கொள்கிறோம்.

என்ன செய்வது?

காலமும் மருந்துகளும் சுற்றமும் தான் இவர்களைக் குணப் படுத்த வேண்டும்.

ஆனால் குமுதம் டாக்டர் ஜவஹர் பழனியப்பனுக்கு நாம் ஒரு சிறு வேண்டுகோள் வைக்கிறோம்.

நீங்கள் மருத்துவராகவும் மிகப்பெரிய மருத்துவ மனையின் அதிபராகவும் இருப்பதால் தாங்கள் தமிழ்நாட்டில் இந்த நோயினால் பாதிக்கப் பட்டவர்கள் நலனுக்காக ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தி அதன் மூலம் அவர்கள் சிகிச்சைக்கும் நிம்மதியான வாழ்வுக்கும் உதவ வேண்டும்.

செய்வீர்களா டாக்டர்?

No comments: