(2012 டிசம்பர் பதிவு. எழுத்துப்பிழை சரிசெய்யப்போய் தவறுதலாய் மறுபிரசுரம் ஆகி விட்டது.)
ஊர் உலகத்திற்கெல்லாம் நேர்மை,நியாயம்,அறம் இன்னபிற போதிக்கும் தினமலர் பத்திரிகையின் முதலாளி மருமகன் மீது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவர் மீதும் அவரது சகாக்கள் மீதும் கடையநல்லூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமலர் நிறுவனர் ராமசுப்பையருக்கு வேங்கடபதி,லட்சுமிபிபதி,ராகவன்,கிருஷ்ணமூர்த்தி,சத்தியமூர்த்தி என ஐந்து ஆண் வாரிசுகள் இருக்கின்றனர்.தினமலரின் பத்து பதிப்புக்களும் இவர்களுக்குள் பிரிக்கப்பட்டிருக்கின்றன.ஒவ்வொருவரின் கட்டுப்பாட்டிலும் இரண்டு பதிப்புக்கள் இருக்கின்றன.
மூத்தவரான வேங்கடபதியின் கட்டுப்பாட்டிலும் உரிமையிலும் திருநெல்வேலி,நாகர்கோவில் தினமலர் பதிப்புகள் உள்ளன.அவருக்கு இரண்டு மகள்கள்.அவரின் மூத்த மருமகன் மீது தான் இப்பொழுது மோசடிக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமசுப்பைய்யர் தபால்தலை வெளியிட வருகை தரும் கருணாநிதியை வரவேற்க காத்திருக்கும் தினமலர் முதலாளிகள் |
புகார் மனு |
முதல் தகவல் அறிக்கை |
தினகரன் செய்தி |
இந்தச் செய்தியை நாம் நினைத்தது போல் பொய்மையின் உரைகல்லான தினமலர் வெளியிடவில்லை.
யாரையும் குறை சொல்லவும் குற்றம் காணவும் விமர்சிக்கவும் குறைந்தபட்ச யோக்கியதையும் அருகதையும் தகுதியும் தினமலர் நாளிதழுக்கு இருக்கிறதா என்ன..?
2 comments:
உண்மையை நசுக்கும் பாறாங்கல் !
தர்ம நியாயங்கள் எல்லாம் அடுத்தவர்களுக்கே.
Post a Comment