![]() |
சந்தியா |
புதிய தலைமுறை தொலைக்காட்சி யில் ஊழியர்களிடையே நடக்கும் அதிகாரப்
போட்டியையும் அதன் காரணமாய் ஊழியர்களிடையே நிலவும் குழு மனப்பான்மையையும் நாம் நமது முந்தைய பதிவுகளில் சுட்டிக் காட்டியிருந்தோம்.
அதிகாரப் போட்டியில் சேட்டன் பிரேம்சங்கர் தலைமையிலான அணி அதிக ஆதிக்கம் செலுத்துகிறது,இது அங்கிருக்கும் ஊழியர்களிடையே மிகுந்த மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் சொல்லியிருந்தோம்.
அதிகாரப் போட்டியில் சேட்டன் பிரேம்சங்கர் தலைமையிலான அணி அதிக ஆதிக்கம் செலுத்துகிறது,இது அங்கிருக்கும் ஊழியர்களிடையே மிகுந்த மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் சொல்லியிருந்தோம்.
ஆனால் எதிர்பாராவிதமாக சமீபகாலமாய் திடீர்
திருப்பம்.சேட்டன் அணி கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது என்றும், இந்தப் பின்னடைவில் பிரேமின் மனைவி சந்தியா உட்பட பலருக்கு அதிகப் பாதிப்பு என்றும்
அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதை ஒட்டிய பதிவு தான் இது.ஆனால் செய்திக்குப்
போகும் முன் ஒரு சின்ன முன்னோட்டம்.
புதிதாய்த் தந்தி டிவி வந்த பின்பு இங்கிருந்து
அங்கும்,அங்கிருந்து இங்கும் ஊழியர்களை இழுக்கும் போட்டி இரு தொலைக்காட்சிகளுக்கும்
இடையே நிலவி வந்தது.
அதன் ஒரு கட்டமாய் புதிய தலைமுறை ஊழியரான மதிவாணன்
என்பவருக்கு மிக அதிக ஊதியம் கொடுத்து தந்தி டிவி வேலையில் சேர்த்தது.இதில்
பு.த.உயர் மட்டம் கொஞ்சம் ஜெர்க்.
![]() |
மதிவாணன் |
இந்த நிலையில் தான் புதிய தலைமுறையில் அதிகாரத்தில்
கொடி கட்டிப் பறக்கும் பிரேம்சங்கரின் மனைவி
சந்தியா ஒரு திட்டம் போட்டார். (இவர் தான் இலங்கை சென்று வந்த பின் உண்மையைத் தேடி என்ற பெயரில் இலங்கைக்கு ஆதரவாய் ஒரு சார்பான ஆவணத் தொகுப்பு வீடியோ ஒன்றை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வெளியிட்டார்.)
நிர்வாகத்துடன் கூடுதல் சம்பளம் கேட்டு பேசுவது என்று .அவரின்
நெனப்பு என்னவென்றால் நமது கணவர் புதிய தலைமுறையில் மிக முக்கியப் பொறுப்பிலும்
நல்ல நிலையிலும் இருக்கிறார்,இது போக தந்தி டிவியுடன் ஆள் இழுப்பு போட்டி
நடைபெற்றுக் கொண்டிருப்பதால் நாம் அதிக சம்பளத்துக்கு கோரிக்கை வைத்தால் கண்டிப்பாய் நிர்வாகம்
செவிமடுக்கும் என்பதே.
இருவரின் உரையாடலும் இப்படி அமைந்தது என்று
தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்ன விஷயமா பார்க்க வந்திருக்கீங்க சொல்லுங்க..!
குட் மார்னிங் சார்.எனக்குத் தந்தி டிவியில இருந்து ஆபர்
வந்திருக்கு.அங்க போகலாம்னு நினைக்கிறேன்.சம்பளமும் கொஞ்சம் அதிகம்.என்று சொல்லி
விட்டு சத்திய நாராயனனின் முகம் பார்த்தார்.
சந்தியாவின் நினைப்பு என்னவென்றால்,தந்தி டிவிக்குச் செல்கிறோம் என்று நாம் சொன்னவுடன் எம்.டி.,உடனே பதைபதைத்து அங்க ஏன் போறீங்க ? அந்தச் சம்பளத்தை இங்க வாங்கிக்கோங்க என்று
சொல்வார் என்பது தான்.
அதனால் தான் தந்தி டிவியில் சம்பளமும் அதிகம் என்று
சொல்லிவிட்டு சத்திய நாராயணனின் முகத்தை அர்த்தத்துடன் ஏறிட்டுப் பார்த்தார்.
ஆனால் எதிரில் இருக்கும் சத்திய நாராயணன் என்ன
லேசுப்பட்டவரா..?
![]() |
நாட்டின் விவசாயத்தை மலடாக்கிய சுவாமிநாதனுடன் சத்திய நாராயணன் |
தன் கல்லூரிகளில் படிக்கும் லட்சக்கணக்கான
மாணவர்களிடமிருந்து கட்டணம் என்ற பெயரிலும் நன்கொடை என்ற பெயரிலும் சில லட்சங்களை எப்படி வசூல் செய்வது ?,எப்படி புதிய புதிய கல்லூரிகளைச் சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து
துவக்குவது,அதில் எப்படி மாணவர்களைச் சேர்ப்பது தன்னிடம் இருக்கும் கணக்கு வழக்கற்ற பல்லாயிரம் கோடிகளைக் கொண்டு இன்னும்
புதுப்புதுச் சேனலைத் துவக்கி எப்படிச்
சமூகத்துக்கு அறம் போதிப்பது என்று பல திட்டங்களை இதுவரை உட்கார்ந்த இடத்திலிருந்து
கொண்டே தீட்டி அதில் வெற்றியும் பெற்றவரல்லவா..!
இத்தனை பெரிய சாம்ராஜ்யத்தைக் குறுக்கு வழியில்
நிலைநாட்டிய கூட்டத்தில் ஒருவரான அவர் இதுவரை எத்தனை பேரைத் தன் வாழ்நாளில் சந்தித்து
அவர்களை வெற்றி கொண்டிருப்பார்..?
அவருக்குத் தெரியாதா ..?
எதிரில் நிற்கும் சந்தியாவின் உண்மையான நோக்கம் தந்தி டிவிக்குச்
செல்வதல்ல.தந்தி டிவியின் பெயரைச் சொல்லி நம்மிடம் அதிக ஊதியத்துக்குப் பேரம்
பேசுவது என்று.இரண்டாவது சந்தியா இல்லையென்றாலும் அவரின் பணி இடத்தை நிரப்புவது
சுலபம் என்று.மூன்று சந்தியாவை நீக்குவது மூலம் பிரேமுக்கு செக் வைப்பது என்று.
ஆகவே சந்தியா,தந்தி டிவியில் சம்பளம் அதிகம் சார் என்று
சொல்லிவிட்டு சத்திய நாராயணனின் முகத்தைப் பார்த்தவுடன் பாரிவேந்தரின் இளவரசர் தன்
முகத்தில் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல்,
ஓக்கே.ஆல் த பெஸ்ட்.நீங்க எப்ப ரிசைன் பண்றீங்க ? என்றார்.
ஓக்கே.ஆல் த பெஸ்ட்.நீங்க எப்ப ரிசைன் பண்றீங்க ? என்றார்.
இதைக் கேட்டவுடன் சந்தியாவுக்கு நினைச்சது ஒன்னு
இங்கு நடப்பது ஒன்னு என்று புரிந்து போனது.காலுக்கு கீழே தரை நகர்வது போல்
இருந்தது.ஆனாலும் என்ன சொல்வது என்று தெரியவில்லை.இப்படி நடக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் வேறு வழியில்லாமல் திஸ் மன்த் என்ட்ல ரிசைன்
பண்றேன் சார் எனச் சொல்லி விட்டு இறுக்கத்துடன் வெளியே வந்தார்.
சொன்னபடியே கடந்த மாத இறுதியில் புதிய தலைமுறை
வேலையை ராஜினாமாவும் செய்து விட்டார்.
ஆனால் எந்த டிவியிலும் இன்னும் வேலைக்குச்
சேரவில்லை.
இது பிரேம் சங்கருக்கு மட்டுமல்ல அவரது குழுவில்
உள்ள பலருக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.
இது மட்டுமல்ல இதற்கடுத்து இன்னும் பல அதிரடிகளும் இன்னும் பல உள்ளரசியலும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நிகழ்ந்துள்ளது.
அது அடுத்த பதிவில்...
அது அடுத்த பதிவில்...
8 comments:
எந்த நிறுவனத்தில்தான் சம்பள பிரச்சினைகள் இல்லை.....உலகினில் வேலை பார்க்கும் எல்லோருமே சம்பள உயர்வு எதிர்பார்த்து வேறு நிறுவனத்திற்கு மாறுவது சாதாரண விசயமே, மிக குறுகிய காலத்தில் புதிய தலைமுறை முதலிடத்திற்கு வந்தது நிறைய பேருக்கு பொறுக்க முடியாத விசயமாக இருப்பது தெரிகின்றது...இன்றும் கூட நிறைய பகுதிகளில் புதிய தலைமுறை ஒளி ,ஒலிபரப்பு செய்யவில்லை.காரணம் அவர்களது வளர்ச்சி பலருக்கு பொறாமையை கொடுத்திருக்கின்றது என்பதே உண்மை.....சினிமா, ஆபாசம் என்று எதற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் அரசியல், மருத்துவம் கல்வி வணிகம் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டு வருகின்றது....இன்று தமிழக மக்களை நாடகம் என்ற போர்வையில் கலாச்சார சீர்கேட்டில் கொண்டு சென்று விட்டிருக்கும் நிரூவனங்களை விட இது எவ்வளவோ தேவலை என்றே நான் நம்புகின்றேன்...
பிரேம்சங்கரும் வேலையை விட்டு ஓடிட்டான்
மதிவாணன், சன் டீவியில் ஒருகாலத்தில் ஒரு குறிப்பிட்ட நபருக்கு மாமா வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவ்வாறே அவர் இந்த நிலைக்கு இப்போது வந்திருக்கார்.
தமிழ் ஊடகத்துறையில் சில மதிவாணன்கள் உள்ளனர். விஜய் டிவி மூலம் வந்த ஒரு மதிவாணன்.. பின்னர் அப்படி இப்படி என சுற்றி தற்போது விஜய் டிவியில் இருப்பவர். அப்புறம் சன் நியூஸில் ரிப்போர்ட்டர் கம் நியூஸ் ரீடராக இருந்த மக்கு எம். மதிவாண... அப்புறம்.. தினமணி.. வெப்சைட் என சுற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த மா.ச. மதிவாணன்... இந்த 3வது நபரும் 2வது நபரும் தான் நிஜம் நிகழ்ச்சியை சன் நியுசில் பண்ணியவர்கள்.. ஆனால் 3வது மதிவாணன் சீனில் வராதவர். 2வது ஆள் அந்த 3வது நபர் மதிவாணனின் ஸ்கிரிப்டை சீனில் படித்து தானே அந்த 2வது ஆளும் என்று பிம்பம் போட்டுக் கொண்டு (ஒரே ஒரு ரிப்போர்ட்டிங்கை.. அதை விடுங்க ஸ்கோரோலிங் கொடுக்க சொல்லுங்க) பொய்யா சொல்லி தலைமுறைக்கு தந்திக்கு போய் அங்க ஒரு பொண்ணோட பஞ்சாயத்துல மாட்டி பல்லை பிடுங்கின பாம்பா உட்கார வெச்சுருக்கானுங்க.. இந்த நாதேரிகளை நினைச்சா வெண்ணை பத்திரிகை உலகம்
சந்தியா சத்திய நாரயணன் வரும் வழியில் அடிக்கடி புகைப் பிடித்து கொண்டு இருந்ததாலேயே கட்டம் கட்டப்பட்டதாக சில தகவல்கள் கூறுகின்றன.!
என்ன மாயவரத்துல கூப்பிட்டாக...மன்னார்குடியில கூப்பிட்டாக....என்ற கதையாகவல்லவா இருக்கு?
olindhan malayali prem shankar Drohi.......................
எந்த நிதிக்கு எந்த ராஜாவுக்கு மதிவாணன் மாமா
Post a Comment