Wednesday, 29 May 2013

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் புதிய இம்சை அரசன்..!




புதிய தலைமுறை தொலைக்காட்சியில் புகுத்தப்பட்ட அதிரடி ஆட்டங்கள் இன்னும் அங்கு நின்றபாடில்லை. மீண்டும் அங்கே, ஆட்டம் அரங்கேறியிருக்கிறது. பிரேம் சங்கரால் மட்டும்தான் பிரச்னையை உண்டுபண்ண முடியுமா? ஒழுங்காக வேலைபார்ப்பவனை உளைச்சலுக்கு ஆளாக்கமுடியுமா? அதிகாரம் வந்தால், கொழுப்பும் தானாக வந்துவிடப் போகிறது.

உள்ளடக்கத்தில் பல தரப்பாலும் பாராட்டப்பட்டு, சுயபாராட்டும் வெளிப்பாராட்டுமாக சமூக அக்கறை கொண்ட ஊடகமாக, பு.த. தொலைக்காட்சி கட்டமைக்க‌ப்படுகிற‌து .இந்த ஒளிவட்டத்துக்குப் பின்னால், வெளியில் தெரியாத எத்தனையோ உதவி ஆசிரியர்கள், முகம் காட்டியும் காட்டாமலும் உழைக்கும் செய்தியாளர்களின் உழைப்பு இருக்கிறது என்பது பெரிய அளவுக்குத் தெரிவதில்லை. அதற்குக் காரணம், ஊடக உலகத்தின் நடைமுறைகள்!

காரணத்தோடுதான் இந்தக் கதை....

பிரேம்சங்கர் அன் கோவின் நீக்கத்தை அடுத்து, அதே கோதாவுடன் களம் இறங்கியிருப்பவர், ஷண்முகசுந்தரம், புதிய பிரச்னைகளின் மையம்!

பு.த. தென்மாவட்டங்களின் பொறுப்பாளர் சிறப்புச் செய்தியாளர் ராமானுஜம்.

இவர் இதுவரை கேள்விப்பட்டு இராத அளவுக்கு செயலில் வேலைகளைச் செய்துவருபவர், ஷண்முகசுந்தரங்கள் எட்டிப்பார்க்காத இடங்களில் எல்லாம் சென்று, தானே உழைத்து பல அருமையான செய்திகளைக் கொண்டுவந்தவர்.

இந்த ராமானுஜம். டிஎன்ஏ என்ற வடஇந்திய நாளிதழ், டைம்ஸ் ஆஃப் இண்டியா ஆகியவற்றில் பெங்களூரிலும் பின்னர் சென்னை டைம்ஸ் நாளிதழில் தலைமைச் செயலகத்திலும் இன்றைக்கு அதே நாளிதழில் பணியாற்றும் பலரைவிட சமூகத்துக்குப் பயனுள்ள செய்திகளைக் கொண்டுவந்தவர்.

பிரேம் சங்கரின் அறிமுகத்துடன் பு.த.வில் சேர்ந்தாலும், ராமானுஜம் தன்னுடைய தனித்தன்மையை இழந்ததில்லை. அவரின் செய்திகளிலும் மற்றவர்கள் மூலம் அவர் கொண்டுவந்துள்ள செய்திகளிலும் யாரும் ஆதாரத்துடன் இதைப் பார்க்கமுடியும். 

கதைக்கு வருவோம்.

புதிய தலைமுறை ஷானா சுந்தரம்,மதுரை பகுதிக்கு மட்டுமான செய்தியாளராக ராமானுஜத்தை தொடரச் சொல்லி விட்டு தென் மாவட்டங்களின் பொறுப்பாளர் பதவியை விட்டு விலக்கி இருக்கிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.

 நிர்வாகத்தால் வழங்கப்பட்ட வேலையை மட்டுமே செய்யும் ஒரு பணியாளனை, இம்சை செய்வது, எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஏற்றுக்கொள்ளமுடியாது. நேர்மையாக உழைத்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தால் வாழக்கூடிய ஊடகப் பணியாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கான உதாரணங்களைப், பதிவுசெய்யவேண்டியதும் காலத்தின் தேவையாக இருக்கிறது. 

பிரேம்சங்கருக்கு நெருக்கமானவர் என்ற கோதாவில், மற்றவர்களைப்போல அடுத்தவன் வயிற்றெரிச்சலை வாங்கிக்கொட்டியதாக இதுவரை ராமானுஜத்தின் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை.

உண்மையில் ராமானுஜத்துக்கும் பிரேம் சங்கருக்கும் நட்பா என்று பார்த்தால் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.பிரேம் அந்தப்பதவியில் இருந்ததால் பணியின் பொருட்டு ராமானுஜம் தொடர்பு வைத்திருந்தார்.பிரேம் இடத்தில் ஒரு கழுதையை நிர்வாகம் பதவியில் வைத்திருந்தாலும் அவருடன் தொடர்பு வைத்திருப்பார்.அவ்வளவு தான். அதற்காய் பிரேமுடன் தொடர்பு வைத்திருப்பவர்களை எல்லாம் நீக்க வேண்டும் என்றால் ஷண்முகசுந்தரம்,பிரேமை வேலைக்கு எடுத்த சத்திய நாராயணனைத் தான் முதலில் நீக்க வேண்டும்.

ஏற்கனவே, இம்சை அரசர்களாகவும் குடைச்சல் மன்னர்களாகவும் இருந்ததால்தான், புதிய தலைமுறையில் ஒரு கேங்- கும்பல்தனம் உருவாகி, உருப்படாமல் போனது. ஒருவழியாக அது சரியாகத் தொடங்கியது என அத் தொலைக்காட்சியில் ஒழுங்காகப் பணியாற்றும் பலரும் மூச்சுவிடும்போது, இன்னொரு இம்சை வந்து ஆட்டம் போடத் தொடங்கினால்...?

ஷண்முகசுந்தரம் பிரேமுடன் தொடர்பு கொண்டவர்களையெல்லாம் நீக்குவதற்குப்,பழி வாங்குவதற்குப் பதிலாக திறமையற்ற‌வர்கள்,ஏமாற்றப் பேர்வழிகளை நீக்கட்டும்.அவர்கள் சென்னையில் முக்கிய இடங்களில் இன்னும் புதிய தலைமுறையின் நிருபராய் தொடர்ந்து கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படிபுதுசா வந்த ஐயா ஷானா சுந்தரம் என்னத்த சாதிச்சாருன்னு பட்டியல் போட்டாக்கூடராமானுஜம்தான் முன்னணியில் இருப்பார்!

சரி எப்படிதான் இப்படிப்பட்ட ஆளுங்கள்லாம் சேனல் தலைமைக்கு வரமுடிகிறது எனக் கேட்டீர்கள் என்றால்அது பற்றியும் புது இம்சை பற்றியும் தனி பதிவு அளவுக்கு செய்திகள் இருக்கின்றன. தேவைப்பட்டால் அதை பிறகு பார்ப்போம்.

2 comments:

Anonymous said...

I am now not positive the place you are getting your
information, however good topic. I must spend some time finding out
more or figuring out more. Thank you for excellent
info I used to be on the lookout for this information for my mission.


my blog ... right hotmail support

கி.இராமானுஜம் said...

என் பணியை பாராட்டியமைக்கு நன்றி. அதேநேரத்தில் இதுபோன்ற விமர்சனங்கள் பொதுமேடையில் தேவையில்லை என நான் நினைக்கின்றேன். எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கிறதோ, இல்லையோ, அதனை மூன்றாவது நபர் பொதுமேடையில் இதுபோன்று விமர்சிப்பது தேவையற்ற ஒன்று என கருதுகிறேன். இதுபோன்ற கருத்துக்களை எழுதும்போது என்னிடமோ அல்லது அவரிடமோ கருத்துக்களை கேட்டு இருந்தால் நன்றாக இருக்கும். இப்படிக்கு கி.இராமானுஜம், சிறப்புச்செய்தியாளர்,புதிய தலைமுறை,மதுரை